அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் இரண்டு ஆண்டுக்கு பின்னர் சென்ற வார விடுமுறையில் (14,15 மே 2022) மதுரையில் நம் தள ஆன்மிக யாத்திரை 15 அன்பர்களுடன் நடைபெற்றது. சிறப்பான அருள் தரிசனம், அன்னசேவை, மலை யாத்திரை என ஒவ்வொரு ஆலய தரிசனமும் முத்தாய்ப்பாக அமைந்தது. இங்கே அனைவரும் அறிய வேண்டி குறிப்பாக அவற்றை தொகுத்து தருகின்றோம்.
1. மதுரை பசுமலை குருநாதர் ஸ்ரீ அகத்தியர் தரிசனம் - முதலில் குருநாதர் வழிபாடு
2. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு - முதல் படைவீடு தரிசனம்
3. பகவான் சோமப்பர் தரிசனம்
4. புஜண்டரிஷி மலை யாத்திரையாக ஸ்ரீ முருகப் பெருமான் தரிசனம்
5. சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் தரிசனம்
6. அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தமாடல்
7. அழகர்மலை ராக்காயி அம்மன் தரிசனம்
8. பழமுதிர்ச்சோலை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு
9. அழகர்கோயில் ஸ்ரீ கள்ளழகர் வழிபாடு
10.ஸ்ரீமத் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் பிருந்தாவனத் திருக்கோயில்
( அனைத்து கோயில்களிலும் பூ மாலை சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்தோம். பழைய துணிகளை அங்கே இருந்த அன்பர்களுக்கு கொடுத்தோம். இனி நம் தளம் சார்பில் ஆடை தானம் செய்ய குருவிடம் வேண்டுகின்றோம். மேலும் சில கோயில்களில் அன்னசேவைக்கு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டோம்.)
11. குட்லாடம்பட்டி ஸ்ரீ ரமணகிரி சுவாமிகள் கோயில் வழிபாடு
12. சித்தாலங்குடி ஸ்ரீ குழந்தையானந்தர் சுவாமிகள் தரிசனம்
13. மதுரை இறையருள் மன்றம் அன்னசேவையாக புதுப்பட்டி காப்பகம் சென்றோம். என்றும் மதுரை பரமசிவன் ஐயாவின் தாள் பணிகின்றோம்.
14. கிண்ணிமங்கலம் குருகுலம் வழிபாடு
15. ஆலவாய் அரசியின் தரிசனம்
என்று மதுரை திருத்தல யாத்திரை அமைந்தது. இது நம்மால் நடந்த செயல் அன்று. குருநாதர் ஸ்ரீ அகத்தியப்பெருமான் அவர்கள் முன்னின்று நம்மை வழிநடத்தினார் என்பது கண்கூடு. விரைவில் தனிப்பதிவில் தரிசனம் காண்போம். இன்றைய பதிவில் புதுவை சித்தர் பீடங்கள் - தரிசன வழிகாட்டியாக குருவருளால் தர உள்ளோம்.
பல சித்தர்கள் தோன்றிய புண்ணிய தலம் இன்றைக்கு புதுச்சேரி, புதுவை, பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் "வேதபுரி" என்ற தலமும் ஒன்று. ஐம்பதிற்கும் மேற்பட்ட சித்த புருஷர்கள் இந்த கடற்கரை தலமான வேதபுரியில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறு, செய்திட்ட அருட்திறங்கள், முக்தி பெற்ற முறை போன்ற செய்திகளை கேட்கும் பொழுதே நமது உடம்பெல்லாம் மயிர்க்கூச்செரிந்தது சிந்தையினை சிவத்தில் மூழ்கச்செய்கின்றது.
கூகிள் மேப் வழிகாட்டி கீழே உள்ள இணைப்பில் கொடுத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் தரிசனம் செய்ய இந்த பதிவு வழிகாட்டியாக அமையும் என்று நாம் விரும்புகின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment