அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் நாளை (31.05.2022) நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீ மூட்டைச் சுவாமிகள் 72 ஆம் ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ் பகிர விரும்புகின்றோம்.
நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022, குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை, ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 , அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா குரு பூஜை அழைப்பிதழ், மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை - 01.04.2022 அழைப்பிதழ், சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 , ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022, எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 93ஆவது மஹா குருபூஜை , ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழா - 28.05.2022 என சித்தர்களின் தரிசனம், நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீ மூட்டைச் சுவாமிகள் 72 ஆம் ஆண்டு குருபூஜை விழா பற்றி அறிய உள்ளோம்.
சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது.
பாரதம் என்று சொல்வதற்கே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதிலும் தென்னாடுடைய சிவ பூமியான தமிழ்நாடு சென்று சொல்வதற்கும், இங்கே பிறப்பதற்கும் புண்ணியத்திலும் புண்ணியம் வேண்டும். ஏனென்றால் எத்தனை அருளாளர்கள் பிறப்பெடுத்த பூமி இது? நாம் தான் இந்த மகத்துவம் தெரியாமல் வீண் பேச்சு பேசி, தேடி சோறு நிதம் தின்று வீணாக பொழுதை போக்கி வருகின்றோம். பொழுதை போக்காமல், பொழுதை ஆக்க வேண்டும். இது தான் இன்று நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி ஆகும். சித்தர்கள் வழிபாடு பொழுதை ஆக்கும் வழிபாடு ஆகும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் சித்தர்களின் அருள் நிறைந்துள்ளது. சென்னை, பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருநெல்வேலி என ஒவ்வொரு ஊரிலும் சித்தர்களின் அருளாட்சி, பாடல் பெற்ற தலங்கள், இறையாசி கிடைக்கும் மலைகள் என ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும்.
இங்கே உணர்வின் நெகிழ்ச்சி அன்பாக வெளிப்படுகின்றது. நாம் சென்ற நேரம் யாரிடமும் சுவாமிகள் பற்றி கேட்க முடியவில்லை. அடுத்த . முறை சந்திப்பில் இன்னும் விபரங்கள் தர விரும்புகின்றோம். சித்தர்கள், மகான்கள் தமது பெயர், புகழ் சொல்வதை விரும்பமாட்டார்கள்.இவை அனைத்தும் நமக்காக தான். நாம் அழைக்கின்ற நேரத்தில் அவர்கள் வரமாட்டார்கள். அவர்கள் அழைக்கும் நேரத்தில் தான் நாம் அங்கே செல்ல முடியும். அது போன்ற ஒரு சக்தி களமாக திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீ மூட்டைச் சுவாமிகள் மடாலயம் விளங்குகின்றது.
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html
No comments:
Post a Comment