"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, June 4, 2025

சித்தன் அருள் -1865 - அன்புடன் அகத்தியர் - கோரக்கர் சித்தர் ஈசன் பார்வதி தேவியார் அகத்திய பெருமான் காகபுஜண்டர் வாக்கு!

                                                        இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து சித்தன் அருள் -1865 - அன்புடன் அகத்தியர் - கோரக்கர் சித்தர் ஈசன் பார்வதி தேவியார் அகத்திய பெருமான் காகபுஜண்டர் வாக்கு! பற்றி அறிய உள்ளோம். குருவின் அருள் இருந்தால் தான் இது போன்ற அருள் நிறை பதிவை கண்ணால் கண்டு ,  படிக்க முடியும், மாணிக்கவாசகர் பெருமான் கூறியது போல் புல்லாகி , பூடாகி ,  புழுவாகி ,  மரமாகி என்ற பிறவி சூழலில் இன்று மனிதப் பிறவி எடுத்து ,  குருவருளால் இது போன்ற வழிகாட்டலை பெற்று வருகின்றோம் .  இதற்கு நம் பெற்றோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றோம் . 

பதிவின் உள் செல்லும் முன்பாக, குருவருளால் நம் தளத்தின் சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது .  ஒவ்வொரு நாளும் நம்மை நம் குருநாதர் வழிநடத்தி வருவதை பார்க்கும் போது,இறைவா! அனைத்தும் நீயே! தெய்வமே! குருநாதா!! என்று மனதுள் அவ்வப்போது வேண்டி வருகின்றோம். இதனை எப்போதும் வேண்ட நம் மனதில் இருத்த முயற்சித்து வருகின்றோம்.



8/5/2025 அன்று கோரக்கர் சித்தர் ஈசன் பார்வதி தேவியார் அகத்திய பெருமான் காகபுஜண்டர்... ஜீவநாடியில் வந்து உரையாடிய வாக்கு.

உரையாடிய ஸ்தலம். பீமா சங்கர் ஜோதிர்லிங்கம். பீமா நதிக்கரை டாங்கினி மலை. அம்பேகாவ்ன். புனே மகாராஷ்டிரா. 

அனைத்துலகும் காக்கும் எம் ஐயனே!!!! உன்னை பணிந்தே!! உன்னை பணிந்தே!! செப்புகின்றேனே!!செப்புகின்றேனே!!

அறிந்தும்.. அறியாமலும் நின்றாலும்... மனிதனை!!... புத்திகளை!... மாற்றி அமைத்திடும் கருணை படைத்தவரே!!! கருணை படைத்தவரே வாரும்!!!

வந்து நலன்களை அருள் கூர்ந்து கவனித்து... பல வழிகளிலும் கூட.. நின்று நின்று பின் அனைத்து உலகத்தையும் காக்கும் பின் ஈசா!!!!... வருக!!! வருக!!

வருக!!!.. வருக!!! நின் தாளே பணிந்தேனே!!! பணிந்தேனே!!! என்றென்றும்...

உமக்கே யான்!!!...உடம்பும் உயிரும் மூச்சும் பின் நின்றேனே!!

அனைத்துலகும் காப்பாய்!! அழிப்பாய்!! அருள் தருவாய்!!!.... என்று நால்வரின் பேச்சுக்களே!!! பின் உயிர் மூச்சுக்களாக நின்றேனே!!!!!

நின்றேனே!!  உன் தாள் பணிந்தேனே!!!

பணிந்து பணிந்து வரவேற்று வரவேற்று பல யுகங்களாக யுகங்களாக.. உன்னிடத்தில் வந்து வந்து வந்து வரங்கள் பெற்று பெற்று நின்றேனே!!!

அவ் நின்றதற்கு எந்தனுக்கு உன்னிடத்திலே பணிகள் கொடுத்தாயே!!

பணிகள் கொடுத்தாயே பின் ரிஷப வாகனத்திலே!!!

அறிந்தும் இதை என்றும் புரியாது நின்றாலும்.. அதனைக் கூட பின் நின்று அருள் பாலிக்கும் எம் ஈசா!!!... பின் அடிபணிகின்றேனே!!

அடி பணிந்து பல மக்களை பின் காப்பாற்றியே நின்று பின் பல வழிகளிலும் கூட அவதரித்து பல பல பின்... அறிந்தும் எவ்?எவ்? பின் நிலைமையில் பின் எதற்கு? பின் அவதாரம் எடுக்க வேண்டும்? என்று உணர்ந்து பின் அவ்வாறாகவே வந்து கருணை படைத்த ஈசா!!! உம்மை பின் வணங்குகின்றேனே!!!

எப்பொழுதும் நின் தாள் வணங்குகின்றேனே!!! வணங்கி வணங்கி நின்று நின்று மனிதனை காக்க பின் எப்பொழுதும் ஓடிக்கொண்டு.. அறிந்தும் இவையன்றி பின்.. மனிதன் தவறு செய்தாலும் நிச்சயம் தன்னில்  இவை உணர்ந்து செய்யாத பின் அன்பே..!! அரவணைப்பே!!

நிச்சயம் அருள் கூர்ந்து நிச்சயம் எவை? ஏன்? உண்மைதனை புரிய வைக்க.... வா!!!... வா!!!

நிச்சயம் அறிந்தும் இதற்கடுத்து.... நிச்சயம் இங்கும் அங்கும்.. கூட பின் யானே இங்கே தவங்கள் பின் மேற்கொண்டேனே!! மேற்கொண்டேனே!!

இதனால் பின் மனித குலத்தை.. காப்பதற்கே நிச்சயம் பின் உணர்ந்து பின் தவங்கள் பின் செய்யச் சொன்னாயே!! செய்ய சொன்னாயே!!!

ஈசனே!! மனதில் நின்ற ஈசனே!!!
உன் அருளை பின் பெற்றவர்.. இவ்வுலகத்தில் எவர்???
உன்னை உணர்ந்தவர்  எவர்???

எவரும் இல்லை!!!

ஆனால் நிச்சயம் பின் யான்... உணர்ந்தேன் உணர்ந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே!!!....

எப்படி நியாயமாகும்???

பின் ஆனாலும்... உனை உணர்ந்தவர்... இவ்வுலகத்தில் உண்டோ?????!!!!......

நிச்சயம் இல்லை!!!!

யானே நிச்சயம் எங்கெங்கு?? பின் அறிந்தும் பின்... உணர்ந்தும் பின் இங்கு தவங்கள் பல யுகங்கள் நிச்சயம் பின் அறிந்திருந்தும்... உன்னை இங்கேயே பார்த்தேனே!!!!
அவதாரமாக அறிந்தும் பின்... பார்வதி தேவியுடனே!!!!!

ஈசனே எம் மனதில் நின்ற அழகாகவே அறிந்தும் இதன் உண்மையை புரிந்து கொள்ள எவர் ???????
உனை புரிந்து கொள்ள எவர்???????

நிச்சயம் பின் தேவியை !!... பார்வதி தேவியை பின் என் மனதில் அழகாக இருக்கும் அம்மையை புரிந்து கொள்ளுபவர் எவர்?????

சித்தர்களை புரிந்து கொள்ளுபவர் எவர்???

இவ்வுலகத்தில் இல்லையே!!! இவ்வுலகத்தில் இல்லையே!!!

பின் நிச்சயம் பின் புரிந்து கொண்டு புரிந்து கொண்டதைப் போல் நடிக்கின்றார்களே!!! நடிக்கின்றார்களே!!!

பின் அனைத்தும் பின் நிச்சயம் வா!!!! 

நிச்சயம் ஈசனே பின் நேசனே!! அறிந்தும் அனைத்து உலகத்தையும் காக்கும் நேசனே!!!

பின் கருணை பாசத்தோடு...வா!!!
அன்பாகவே அழைக்கின்றேனே!!! கோரக்கனே!!!...(கோரக்கர் சித்தர் ஈசனுக்கு அழைப்பு) 

அறிந்தும் பின் உண்மைதனை உரைத்திட வா !! வா!!

ஈசனார்!!!

அழகாக!!!! அழகாகவே!! பின் பாடி துதித்த!! கோரக்கனே!!!... நிச்சயம் வந்து அருள்வோம்!!!

என்னதான்??? பின் உன்னுடைய வினா???
நீயும் கேள்!!!... அறிந்தும்!!


கோரக்கர் சித்தர். 

அறிந்தும் அறிந்தும் சொல்கின்றேன்... நிச்சயம் அறிந்தும் பின் அதாவது அழகாகவே.. நிற்கின்ற ஆடுகின்ற.. அனைத்து கலைகளையும் கூட அறிந்து நிற்கின்ற... எம் மனதில் நின்ற ஈசா!!!!

நிச்சயம் இவ்வுலகத்திற்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா?????

பல யுகத்திலும் கூட உன்னை கண்டேன்!!!
மக்கள் நலன் பெறவே வாழ!!!
வாழ  !! வாழ !! நிச்சயம் பின் வகுத்து நின்று!!!

ஆனாலும் இக்கலி யுகத்தில்... மக்கள் ஏனோ புத்திகளை... மனதில் நிச்சயம் ஏனோ?! மனம் மாறி பைத்தியக்காரர்களாகவே திரிகின்றார்களே!!

ஈசனார்.

நிச்சயம் கோரக்கனே நில்லும்!!!!...

கலியுகத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பவையெல்லாம்  விதியாக நிச்சயம் பின் இருந்தாலும் அவையெல்லாம்...யான்!! மாற்றிட!!! அழகாக பின் அனைத்தும் கூட பின் அதாவது பிறப்பிலிருந்தே!!!!... இப்படித்தான் இருக்க வேண்டும்!!.. என்று அனுப்புகின்றேன்! 

ஆனால் பின் அறிந்தும் போகப் போக பின் மாய வித்தைகளை கூட!!!
இதனைத் தொடர்ந்து நிச்சயம் பின் அதனை மறுப்பதற்கு... இன்னும் கூட!!!

ஆனாலும் ஒவ்வொரு நிச்சயம் தன்னில் கூட பின்... கெடுத்து விடாதே!! பின் கெடுத்து விடாதே !!என்று!!....

 வயது ஆக வயது ஆக... நிச்சயம் பின் யாரோ... ஒருவர் மூலம் யான் உணர்த்தியும் பின் சொல்லி நிச்சயம் பின்... சொல் சொல்லே கேட்பதில்லையே!!.. கோரக்கனே!!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் வளர வளர... சில புத்திகளும் மாறுகின்ற பொழுது... நிச்சயம் மனிதனை உருவாக்கி.. அதாவது நல் மனிதர்களை பின்...யானே!!.. உருவாக்கி பின்... அவனிடத்தில் பேசச் சொல்லி!!!... பின் இப்படி இருந்தால் தான் வாழ்க்கை மாறும்!!! இப்படி இருந்தால் தான் புண்ணியம்!!
இப்படி இருந்தால் தான் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!!!
நிச்சயம் பின் தவறான வழியில் செல்லக்கூடாது... என்பவை எல்லாம் நிச்சயம் அவந்தனுக்கு புரிய வைத்தும்!!!!!!....

ஏன் மாறவில்லை???? கோரக்கனே!!! அறிந்தும் ஒவ்வொரு படியிலும் கூட மனிதனுக்கு ஏதோ ஒரு மூலத்தில்... மனிதனால் மனிதனை மனிதன் பின்.. நோக்கி உள் அமர்த்தி பின் செப்பி!!! அவனவனுக்குரியதை!!

ஆனாலும் சொல்வதும் கேட்கவில்லையே!!!!

இவை மட்டும் இல்லாமல் நிச்சயம் பின் மனித குலத்திற்காக பின்.. பல ஞானியர்களும் கூட பிறக்க!!!..

ஆனால் அவர்கள் சொல்களைக் கூட பின்... நிச்சயம் பின் இக்கலி யுகத்தில் கேட்பதிலேயே ஏன்???

நிச்சயம் தாய் தந்தையரை பின் மதிக்க சொன்னேன்.

பின் அவ்வாறு மதித்தால்தான் நிச்சயம் என் அருகிலே வர முடியும் என்று!!!

இப்பொழுது யாராவது? மதிக்கின்றார்களா? என்ன !???

குருவையும் பின் அடிபணிய.. செய்தேன்.(சொன்னேன்)
 அதாவது பின் யாராவது... குருவானவனை நிச்சயம் பின்.. அறிந்தும் போற்றுகின்றானா???? என்ன!!!

மனதில் நிச்சயம் குருவானவனை நினைத்து பின் காசுகள்.. அவை இவை தா !! என்றே!!!

ஆனாலும் அவையெல்லாம் பின் நிச்சயம் ஆகாதே!!!!!

அதன் பிறகே நிச்சயம் வேண்டாம்... தர்மத்தோடு தர்ம சிந்தனையோடு வாழுங்கள் என்று சொன்னேனே!!!

ஆனாலும் அவையை கூட.. கடைப்பிடிப்பதில்லையே!!!

ஏன்???...

மனிதனாக பின்... வாழ்ந்தால் போதும் என்றெல்லாம்!!!

அறிந்தும் பின் நிச்சயம்... கோரக்கனே அறிந்தும்... அனைத்தும் யான் மனிதனிடத்தில் கொடுத்து தான் அனுப்புகின்றேனே..

ஆனால் ஏன்?????? நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட!!!

அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும்... அவை தன் கூட ஆனாலும் நிச்சயம்!!!......



பார்வதி தேவியார்

பின் நில்லுங்கள்!! தேவாதி தேவனே!!!!

அறிந்தும் இதன் தத்துவத்தைக் கூட... நில்லும்!! நில்லும்!!... நிச்சயம் தன்னில் கூட.... இதே போலத்தான் செப்புகின்றீர்கள்.. அழகாகவே...

 அனைத்தும் கொடுத்து தான் அனுப்புகின்றேன் அல்லவா...... என்று !!!....

ஆனால் பின் அனுப்புகின்றேன் என்று நீங்கள் சொன்னீர்களே!!!!

பின் எப்பொழுதும் இதைத்தான் நீங்கள் செப்பிக் கொண்டிருக்கின்றீர்கள்!!!

ஆனால் அறிந்தும் பின் அவனவன் நிச்சயம் தன்னில் கூட ஏன் ?

இதற்கு நிச்சயம் இப்பொழுது பதில் பின் நீங்கள் உரைத்தாக வேண்டும்!!!

ஈசனார்:

தேவியே !!! நில்லும்!!!...

அழகாகத்தான் ஒரு மனிதனுக்கு.. என்ன தேவை??? என்பதை உணர்ந்து தான் யான் கொடுத்து அனுப்புகின்றேன். 

சிறுவயதிலே கல்வி தேவை!!

அக் கல்வியை அழகாகவே கொடுக்கின்றேன். 

நிச்சயம் ஆனாலும் பின்... அவனுக்கும் நிச்சயம் பின் (திரு)மணங்கள் வேண்டும் என்றே!!

ஆனாலும் அதனையும் யான் கொடுக்கின்றேன். 
கொடுக்கின்றேன்.

 ஆனாலும் தொழில் வேண்டும் என்று. 

நிச்சயம் அதனையும் கொடுக்கின்றேன். 

கொடுத்து கொடுத்து அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட!!

ஆனாலும் பின் கொடுத்தாலும் அதனை தவறாக பின் மாற்றுகின்றான் மனிதன்!!

பின் எப்படி??? தேவியே!!!



பார்வதி தேவியார்: 

நில்லும் !! நில்லும்!! தேவாதி தேவனே!!

யான் ஒத்துக் கொள்ளப் போவதில்லை!!!

நிச்சயம் படைத்தாய் அல்லவா!!!

நிச்சயம் பின் அறிந்தும்... உண்மைதனை எடுத்துரைக்க....

இப்படி மனிதன் மாறுகின்றான் என்று தெரியும் அல்லவா !?!?!?!?!?

பின் நிச்சயம் அப்பொழுதே ஏதாவது பின் அதற்கு முட்டுக்கட்டையை பின் வைக்கலாம் அல்லவா!!!!!


ஈசனார்: 

நிச்சயம் நிச்சயம் தேவியே பின் சரியாக தான் நீயும் கேட்கின்றாய்...

இதற்காகத்தான் நிச்சயம்... அவனவன் செய்கின்ற பின் நிச்சயம்... அவை தன் அதாவது... செல்லும் பாதையில் நிச்சயம் தவறான வழியில் பின் சென்றாலும்... அதை தடுக்க நிச்சயம்.... யாரோ ஒருவனை பின் ஏற்படுத்தி பின் நிச்சயம்... பின் செப்புகின்றேன்.. பின். கெட்டுவிடாதே என்று!!!

பின் நீ யார்?? சொல்வதற்கு???? என்று கூட!!!

அவை மட்டும் இல்லாமல்... இப்படி எல்லாம் செய்யாதே!! என்றெல்லாம் பின் நிச்சயம் மனிதனை பின் ஏற்படுத்தி பின் ஏதோ ஒரு மூலமாக.. நிச்சயம் பின் அறிந்தும்... என் சீடர்களும் பின் மனதில் இறங்கி... நிச்சயம் சொல்வதோடு.....

ஆனால் நிச்சயம் அதையும் ஏற்பதில்லை!!!

ஆனால் இப்படி இருக்க!!!!...... எப்படி??????

தண்டனைகள் நிச்சயம் பின் அறிந்தும் அறியாவிடிலும் கூட நிச்சயம் தேவியே... பின்பு இதை எல்லாம் கொடுத்திட்டு!! கொடுத்திட்டு!!

நிச்சயம் தேவியே நீ கேட்பது சரிதான்!!!!


நிச்சயம் அழகாகவே பின் அதாவது சிறுவயதில்... விளையாட்டுக்கள் நிச்சயம் ஈடுபாடு...

 அதில் கூட யான் கொடுக்கின்றேன்

பின் கல்விகள் வேண்டுமென்று கேட்கின்றான்...

 பின் கொடுக்கின்றேன்.

பின் அதாவது இன்னும் திருமணம் வேண்டும் என்று பின் கேட்கின்றான். 

நிச்சயம் கொடுக்கின்றேன்!! நிச்சயம் கொடுக்கின்றேன்! 

நிச்சயம் பின் அதாவது பணிகள் கூட நிச்சயம் வேண்டும் என்று...

நிச்சயம் கொடுக்கின்றேன்!!

குழந்தை வரம் வேண்டும் என்று!!!

நிச்சயம் கொடுக்கின்றேன்!!!


நிச்சயம் இன்னும் என்னதான்??? மனிதனுக்கு கொடுக்க வேண்டியது???


பார்வதி தேவியார்: 

பின் தேவாதி தேவனே... நிச்சயம் அறிந்தும் ...இவையே!!!..... நீங்கள் செப்பிக் கொண்டு செப்பிக்கொண்டு இருந்தால்... மக்கள் நிச்சயம் பின் அதாவது... தாழ்வானதை நோக்கித்தான்.. தாழ்வு மனதோடு தான்.. வாழ்வார்கள். 

நிச்சயம் பின் நீங்கள் அனுப்புகின்றீர்களே!!!!

ஏன்??? எதற்காக??

இப்படி எல்லாம் நடக்கின்றது என்பது அனைத்தும் பின் நீங்கள் உணர்வீர்கள்...

பின் ஏன் ? அப்படி இருக்க???... நிச்சயம் பின் அறிந்தும்.. அறிந்தும் பின் படைக்கின்றீர்கள்?? மனிதர்களை!!!

இதனால்... அங்கேயே நிறுத்தி விடலாமே!!!.... என்ன!!.....


ஈசனார்:

நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும்... தேவியே நில்லும்!!!!

இப்படியே நீ பேசிக் கொண்டிருக்காதே!!!

அறிந்தும் ஆனாலும் பின் நிச்சயம் யான் அதாவது.....  யானா???? நீ செல் !!! என்று!!......

அதாவது சொல்கின்றேனா??

 நிச்சயம் பின் அதாவது அவ் ஆன்மா பந்த  பாசங்களோடு இணைந்து அழுது புலம்பி என்னிடத்தில் வருகின்றது...

 நிச்சயம் பின் பார்த்திட்டு வருகின்றேன்.. என் சொந்த பந்தங்களை எல்லாம் என்று!!

அப்படி இருக்க!!!... நிச்சயம் பின் எப்படி தேவியே?????

நீயே கூறு!!!!


பார்வதி தேவியார்: 

தேவாதி தேவனே!!! அன்பு கருணை படைத்தவன் தான் நீ!!!

ஆனாலும் பின் வேண்டாம்.... மீண்டும் சென்றால் இப்படித்தான்... கஷ்டங்கள் பட வேண்டும் என்று... நிச்சயம் பின் அவர்களிடத்தில் சொல்லலாமே அறிந்தும் கூட!!!


ஈசனார்: 

நிச்சயம் தேவியே நில்லும்... பின் அறிந்தும் நிச்சயம்... அவ்வாறு யான் செப்பினாலும் அவ் ஆன்மா... கேட்பதே இல்லை!!!

நிச்சயம் யான் புறப்படுகின்றேன்.. புறப்படுகின்றேன் என்று!!!

சரி !!!

நிச்சயம் தன்னில் கூட...அவ் அவசரத்தில் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் உண்மையைக் கூட நிச்சயம்... பந்த பாசங்களோடு வாழத்தான் போகின்றேன் என்று!!

 நிச்சயம் பின் அனுப்பி விடுகின்றேனே!!!!

நிச்சயம் அறிந்தும் இதனால் பின் இதுவும் கூட அவந்தனக்கு கொடுக்கின்றேன் அல்லவா!!!!


பார்வதி தேவியார்: 

பின் தேவாதி தேவனே!!! அனைத்தும் கூட நிச்சயம் ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள்!!!

இதனை நிச்சயம் அவ் ஆன்மாவை தடுக்க உங்களால் முடியுமா???


ஈசனார்:

நிச்சயம் பின் தேவியே.. நிச்சயம் என்னால் முடியும். நிச்சயம் ஆனாலும் பின் பந்த பாசங்களால் இணைத்து இணைத்து!!!


பார்வதி தேவியார்: 

பின் தேவாதி தேவனே!!! மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்!!! நிச்சயம் அறிந்தும் கூட! 

பின் யான் ஒன்றை கேட்கின்றேன்!!!

ஏன்? மனிதனுக்கு கஷ்டத்தை அள்ளித் தந்து கொண்டே இருக்கின்றாய்???


ஈசனார்: 

தேவியே ! கேள்!! நன்றாக தெரிவிக்கின்றேன் உந்தனுக்கு இப்பொழுது!!!

நிச்சயம் அறிந்தும் அதாவது அவ் ஆன்மா பந்த பாசங்களோடு அழுது கொண்டே பின் என்னிடத்தில் வருகின்றது. 

நிச்சயம் அனைத்தும் கொடுக்கட்டுமா? என்று நிச்சயம் அறிந்தும்....யான் கேட்டாலும்!!!
நிச்சயம் பின் அதாவது பின் எதை என்று புரிய!!!

அனைத்தும் கொடுங்கள்!! அனைத்தும் கொடுங்கள்!!! என்று நிச்சயம் அறிந்தும் கூட!!


ஆனாலும் யான் கொடுத்து தான் அனுப்புகின்றேன்!!!

ஆனாலும் இதை தன் உணர... நிச்சயம் ஒவ்வொரு ஆன்மாவும் என்னிடத்தில் கேட்கும். நிச்சயம் கலியுகத்தில் நிச்சயம் அறிந்தும்... இதன் உண்மையை புரிந்து கொள்ள... பூலோகத்திற்கு சென்றால் நிச்சயம்... பின் அழகாக பின்... திருமணமும் வேண்டும் கல்விகளும் வேண்டும்.. பணமும் வேண்டும்...
இவ்வாறுதான் ஆன்மாக்கள் கேட்கின்றது!!

மீண்டும் யோசிக்க யோசிக்க பின் போதுமா?? என்று!!

ஆனாலும் பின் ஒரு ஆன்மாவும் கூட நிச்சயம்... கேட்பதில்லையே அறிந்தும்!!... யான் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்று... நிச்சயம் கேட்பதில்லையே தேவியே!!!

அதற்காகத்தான் நிச்சயம் இப்பிறப்பில் மனிதன் பிறந்தாலும் நிச்சயம் கஷ்டங்களை ஏற்படுத்தி... அடித்து நொறுக்கி..... போதுமடா சாமி!!!.... நிச்சயம் பின் போதும் பிறவி!!.. என்ற நிலைமைக்கு யான் அடித்து நொறுக்குகின்றேன்!!!

இது தவறா?????

அறிந்தும் நிச்சயம் பின் அவ்வாறு அடித்து நொறுக்கினாலும்... மீண்டும் பின் ஆசையில்... ஆசையை வைத்து மீண்டும் என்னிடத்தில்!!

நிச்சயம் பின் அனைத்தும் கொடுத்து!!!

பின் யான் ஆசைப்படுவதெல்லாம் கொடு!!! என்று!!

 ஆனாலும் ஒன்றை மட்டும் நிச்சயம்... அறிந்தும் பின் கேட்பதில்லையே!!!

கஷ்டங்கள் இல்லாமல் வாழ்!!!

பிறவிகள் இருந்தாலும் கஷ்டங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்று பின்... எவரும் கேட்பதில்லையே!!!

இதனால் தேவியே பின் நல்லதாகத்தான்!!!..... அதாவது தந்தையானவன்... தாயும் நிச்சயம் அறிந்தும் நிச்சயம் தன் பிள்ளைகளுக்கு... பின் இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம்... கற்றுக்கொண்டே!!! கற்றுக் கொண்டே!!.. கற்றுக் கொடுத்தே!!! கற்றுக் கொடுத்தே!!!
அனுப்புகின்றேன் அழகாகவே!!!

ஆனாலும் நிச்சயம் பின் செய்கைகளால் தான் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட. 

இதனால்தான் சித்தர்கள் எல்லாம் பின் வாக்குகள் செப்புகின்றனர். 

ஆனாலும் அதையும் ஏற்ப்பதில்லை!!

அதையும் மீறி தாண்டி... எதை எதையோ பின் செய்து கொண்டு செய்து கொண்டு பின்னாலே... சென்று நிச்சயம் தேவியே... அழிந்து விடுகின்றார்கள். 

நிச்சயம் பின்பு!!.. பின் இத்தனை திருத்தலங்கள் இருக்கின்றது... இறைவன் இருக்கின்றார்கள்!!!

என்ன செய்தார்கள்?????

என்று மனிதனின் பேச்சுக்கள்!!!

இதனால்தான்... மனிதனின் நிச்சயம் கீழான எண்ணங்களே... கீழ்நோக்கி தான் நிச்சயம் இழுத்துச் செல்லும். 

நிச்சயம் அறிந்தும் பின் உண்மைதனை கூட... நிச்சயம் பின் தேவியே கேளும்!!!

"""""எனை !!!..... . யான்... வணங்கச் சொல்வதும் இல்லை!!!!!!

ஒரு காலமும் இல்லை!!!!


பின் ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின்... எதை என்று புரிய நிச்சயம்... அதாவது பின் அதாவது... தந்தைக்குத் தெரியும் பின் பாசத்தோடு எப்படி எல்லாம்? வளர்க்க வேண்டும் என்று!!!

நிச்சயம் அவ்வாறாகவே நிச்சயம் பாசத்தை காட்டித்தான் அனுப்புகின்றேனே!!!

நிச்சயம் மீண்டும் பின்... அவையெல்லாம் இழந்து மீண்டும்... என்னிடமே வருகின்றான். 


பார்வதி தேவியார்: 

பின் சரி!!!.... தேவாதி தேவனே!!! நீர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்கின்றேன்!!

ஆனாலும் மனித பிறப்பு தேவையில்லை!!!

மனிதப் பிறப்பு என்று ஒன்று இருந்தால் தானே!!!!... கஷ்டங்களும் வருகின்றது!!!... நிச்சயம் அறிந்தும் எதை என்று... நிச்சயம் இதற்கு பதிலாக.. தான் வேண்டும் நிச்சயம்... மனிதப் பிறப்பை அடியோடு அழித்திட வேண்டியதுதானே!!

நிச்சயம் ஏன்?? இப்படி பிறக்கின்றார்கள்!!! நிச்சயம் பின் வளர்கின்றார்கள்!!! கஷ்டங்களோடு இறக்கின்றார்கள்... மீண்டும் மனிதன் பிறந்து கொண்டே!!
 பிறந்து கொண்டே!!

ஈசனார்: 

தேவியே இப்படி கேட்டால்... யான் என்ன செப்புவது????

நிச்சயம் பின் அனுபவத்திற்காகவே!!!

நிச்சயம் இவை தன் கூட.... அகத்தியன் வந்து உரைக்கும் பொழுது தான்... நிச்சயம் புரியும் தேவியே!!!


குருநாதர் அகத்தியர் பெருமானின் வருகை குருநாதர் உரையாடிய விவாதங்கள் பாகம் இரண்டில் தொடரும்



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 5 - https://tut-temples.blogspot.com/2025/04/5.html

 அகத்தியர் வேதம் - குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு சுருக்கம்! - 2 - https://tut-temples.blogspot.com/2025/05/2.html

அகத்தியர் வேதம் - குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு சுருக்கம்! - https://tut-temples.blogspot.com/2025/04/blog-post.html

உங்கள் விதியை மாற்றும் சித்திரை மாத சித்த ரகசியங்கள் - சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/04/1116.html

சித்திரை மாதத்தில் புண்ணியம் செய்யுங்கள் - சித்தன் அருள் - 1593 - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593_23.html

சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html


குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1616.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1612.html

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!! - https://tut-temples.blogspot.com/2025/03/1751_11.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - கலியுகம் துவங்கும் நேரம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1751.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1609.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/03/1751-11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html


சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html


சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment