இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளால் ஒவ்வொரு நாளும் நாம் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . திருமூலர் பெருமான் அருளிய வழியில் தெளிவு பெற வேண்டும் . எப்படி தெளிவு பெறுவது என்றால் குருவின் திருமேனி கண்டு , குருவின் திருநாமம் செப்பி , குருவின் திருவார்த்தை கேட்டு , குருவின் திரு உரு சிந்தித்து என்று கூறுகின்றார் . இதில் நாம் குருவின் திருவார்த்தை கேட்டு என்ற நிலையில் ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகின்றோம். சித்தன் அருள் வலைத்தளத்தில் இருந்து அகத்தியர் வேதமாக அன்புடன் அகத்தியர் தொகுப்பின் சுருக்கத்தை இங்கே காண உள்ளோம் . இது பழத்தை உண்பதை விட பழச்சாறு உண்பது போலாகும் . இன்றைய சூழ்நிலையில் அனைவரும் பழச்சாறு உண்ண விரும்புகின்றோம் . அதே போன்று இன்றைய பதிவும் அமைத்துள்ளது .
அப்பனே, இங்குள்ளவருக்கும், ஒவ்வொருவருக்கும் நான் பார்த்து ஆசிர்வதித்துவிட்டேன் என்பேன், அவரவர் வழியில் செல்ல. அப்பனே, ஆனாலும் துன்பங்கள் நீங்காது, ஏன் என்றால் இது கலியுகம். அகத்தியன் என்று சொன்னாலே மோட்சம்தான். ஆனாலும் சில சில வினைகளால், கட்டங்கள் வரும், அதையும் நான் தீர்த்து வைத்துவிட்டால், பின் மனித பிறப்பிற்கு சரித்திரமே இல்லாமல் போய்விடும். இதனால் நன்கு உணர்ந்து எதனை செய்வது என்றும், எதனை செய்யக்கூடாது என்பதும் எந்தனுக்கு தெரியும். பின்பு சிறிது கட்டங்கள் வந்தாலும், அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள். ஆனாலும் இன்பமே வந்துவிட்டாலும், மோக்ஷ கதியை அடைய முடியாது. அப்பனே, அகத்தியனை வணங்குபவர்கள்,நிச்சயமாய் மோக்ஷகதியை அடைவார்கள்.
அகத்தியன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிடுங்கள். அனைவருக்கும், ஆசிகளாக, எந்தனுக்கு அகத்தியன் இருக்கின்றான் என்று சொல்லிவிடுங்கள்.
அதை செய்தால், இது நடக்கும், இதை செய்தால் அது நடக்கும் என்று கூட பணத்துக்காக வருவார்கள். அப்பனே! இன்றே உரைக்கின்றேன், சூட்சுமமாக. யாரையும் நம்பிவிடாதீர்கள். அப்பனே என்னை நம்பிவிட்டீர்களா, என்னையே நம்பி விடுங்கள். அப்பனே, வழியை நல்ல வழியாக யாம் காண்பிக்கிறேன். அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.
அதை செய்தால், இது நடக்கும், இதை செய்தால் அது நடக்கும் என்று கூட பணத்துக்காக வருவார்கள். அப்பனே! இன்றே உரைக்கின்றேன், சூட்சுமமாக. யாரையும் நம்பிவிடாதீர்கள். அப்பனே என்னை நம்பிவிட்டீர்களா, என்னையே நம்பி விடுங்கள். அப்பனே, வழியை நல்ல வழியாக யாம் காண்பிக்கிறேன். அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.
என் மக்களே! இப்பொழுது கூட சொல்லிவிடுங்கள் "அகத்தியன் இருக்கின்றான்" என. பின்பு, உங்கள் வேலையை பார்க்கத் தொடங்குங்கள்.
அன்பு மட்டும்தான் இந்த மாய உலகில் சிறந்தது. ஆகவே அன்பை செலுத்துங்கள், போதுமானது.
மீண்டும் ஒருமுறை உரைக்கின்றேன். அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் இருக்கின்றது. நீங்களே பக்திமான்களாகலாம். அதை விட்டுவிட்டு, எதை எதையோ சென்று அடைந்தால், மீண்டும் தோல்விகள்தான் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், என் மக்களே. அனைவருக்கும் ஆசீர்வாதங்களை கொடுத்து அனுப்புகின்றேன், இப்பொழுது.
இதனால்தான் யான் கூறுகிறேன், அகத்தியனை நம்பினால், பின் அகத்தியனை மட்டும் வணங்கு என்று. பின், அகத்தியன் என்னும் பெயரை சொல்லி ஏமாற்றுவார்கள். பின்னர் பலப்பல வித்தைகளையும் மனிதர்கள் காண்பிப்பார்கள். பின், இனியும் வருவார்கள் மனிதர்கள். யாரையும் நம்பிவிடக்கூடாது.
மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமா, நீயே போய் செய்துவிடு, என்பேன்.
ஒழுங்காக வாழக் கற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல், யாங்களே, சித்தர்களே அழித்து விடுவோம். ஏனென்றால், நீ ஒழுங்காக இறைவனை வழிபட்டால், ஒழுங்காக வழிபட்டு சென்றுவிடு. மற்றவையெல்லாம் ஏன்? நீ என்ன இறைவனா? உன்னால் என்ன செய்ய முடிகின்றது? மனிதா! என் கோபத்திற்கு ஆளாகாதே! நிச்சயமாய் அழித்துவிடுவேன். இப்பொழுது கட்டளை இடுகின்றேன், அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று பொய் பித்தலாட்டம் ஆடுகின்றீர்களே, ஆனால் நிச்சயம் யானே அழித்து விடுவேன். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள், இனிமேலும் எந்தனுக்கு கோபம் வந்தால், அனைத்தையும் அழித்துவிட்டு போவேன். ஈசனைவிட எந்தனுக்கும் திறமைகள் அதிகமாக இருக்கின்றது. மானிடா, சொல்லுவதை மட்டும் கேளுங்கள். மானிடா, உங்களால் என்ன செய்ய முடியும். யங்கள் தான் உங்களையே காப்பாற்றுகின்றோம்.
இப்பவுர்ணமியில் சில சித்தர்கள் அண்ணாமலையில் வலம் வருவார்கள். மலை பகுதிகளிலும் இதுபோல்தான், ஓர் சித்தன் தவம் செய்வான். இப்படி பல இடங்களிலும் சித்தர்கள் தவம் செய்வார்கள். எந்தெந்த விளைவுகள், இவ்வுலகில் மாற்றம் அடையச் செய்கிறது என்று கூட ஒரு வாக்கு இருக்கிறது. இதனால்தான், எத்தனையோ பரிகாரங்கள் உரைக்கினும், இப்பவுர்ணமியில் அதை செய்தாலும், பலனளிக்காது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்தாலும், அவர்கள் தலை எழுத்தை சித்தர் வழியில் செல்ல மாற்றுவார்கள். ஏன் என்றால், இது "சித்தர்களுக்கான பௌர்ணமி" என்று கூறப்படுகிறது.
பரிகாரங்களை இங்கு(கோடகநல்லூர்) வந்து செய்கிற பொழுது, ராகு காலத்தில் வந்து செய்கிற பரிகாரங்கள் பலனளிக்கும் என்பேன். நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நல்முறையாய் ராகு கேதுக்களை கட்டுப்படுத்த இன்னொரு முறையையும் யான் சொல்கின்றேன். பிறை என்று சொல்கிறார்களே "மூன்றாம் பிறை" அதை தொடர்ந்து நவமாதங்கள் பார்த்துவிட்டால் ராகு, கேதுக்கள் நன்மை செய்துவிடும். இதை யார் உணர்வார்கள். ஏன் என்றால், எதனையும் நீக்குவதற்கும், அடிக்கடி பெருமாள் இங்கு வந்து அமர்ந்து விடுவார், யான் பார்த்தேன். யானும் வேங்கடவன் மலையில் தங்கி இருக்கும் பொழுது, இவன்தனை இழுத்து, இழுத்து வரவேண்டியுள்ளது. அதனால்தான் இப்பொழுது இங்கு வந்தேன் என்பேன்.
நல்முறையாய் வரும் காலங்கள் மக்களுக்கு சரியானதாய் இல்லை என்றாலும், அகத்தியனை நம்பி, பின் அவர்பின் தொடர்பவர்களுக்கு, பின் குறை இல்லாத வாழ்வே அகத்தியன் அளிப்பான், என்று நல்வாக்கு, பலிக்கும்.
இவ்வுலகில் நலமாக வாழ மூலாதாரமாக இருப்பது இறை சக்தி ஒன்றுதான். இறை சக்தி இருந்தால், பின் நல் முறையாய் அனைத்தும் தேடி வந்துவிடும். உங்கள் அனைவருக்கும் நல்முறையாய் இறை அருளை பெற்று தருவதற்கு, மூலகாரணமே அகத்தியன் என்பேன்.
திருந்துவதாக மனிதன் ஒரு பொழுதும் ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனாலும் பிறரை சரி செய்வான். அப்பனே! அதர்மம் ஒரு பொழுதும் நிலைக்காது என்பேன். அதனால்தான் தர்மமும் சிறிது ஓங்கட்டும். ஆனாலும் இப்புவியில் யான் இருந்து என்மக்களை காத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஆனாலும், அவர்களுக்கே கூட சில சமயங்களில், தீமைகள் நடந்து விடுகின்றது.
மனிதர்களின் கஷ்டத்திற்கு மனிதர்களே காரணம். யோசித்துப்பார் மனிதனே அகத்தியர் நல்முறையாக வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும் அதற்கு போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.
அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
- கீழாநெல்லி
- அக்கரகாரம்
- மாசிக்காய்
- ஜாதிபத்திரி
இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.
- மலை நெருஞ்சி இலை
- முருங்கை இலை
- துளசி இலை
- புதினா இலை
- கறிவேப்பிலை
- காட்டுக் கொடித்தோடை
- குப்பைமேனி இலை
- கண்டங்கத்திரி இலை
- வில்வ இலை
இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.
வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.
இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும் அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான்.
பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.
இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து உபதேசம் செய்வேன்.
இப்பொழுது குரு மந்திரம் கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.
இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.
மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.
இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம்
ஓம் குரு மொழியே வேதம் வேதம்
ஓம் குரு விழியே தீபம் தீபம்
ஓம் குரு பதமே காப்பு காப்பு
உங்கள் விதியை மாற்றும் சித்திரை மாத சித்த ரகசியங்கள் - சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/04/1116.html
சித்திரை மாதத்தில் புண்ணியம் செய்யுங்கள் - சித்தன் அருள் - 1593 - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593_23.html
குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html
குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment