இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம்.
(முருகனின் அருளைக் கொண்டு மட்டுமே அவனை அறிய முடியும்)
.. முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.
......... பதவுரை .........
உரு அன்று ... உருவப் பொருளும் அன்று,
அரு அன்று ... அருவப் பொருளும் அன்று,
உளது அன்று ... உள்ள பொருளும் அன்று,
இனது அன்று ... இல்லாத பொருளும் அன்று,
இருள் அன்று ... இருளும் அன்று,
ஒளி அன்று ... ஒளியாகிய பொருளும் அன்று,
என நின்ற அதுவே ... என்று சொல்லும் தன்மையில் உள்ள
அப் பரம் பொருளே,
முருகன் ... முருகப் பெருமான் என்றும்,
தனி வேல் முனி ... ஒப்பற்ற வேலேந்திய முனிவன் என்றும்,
நம் குரு என்று ... நமது பரம குரு என்றும்,
அருள் கொண்டு அறியார் ... அப்பரமனது திருவருளைக்
கொண்டு அறியாமல்,
அறியும் தரமோ? ... மற்ற வழிகளில் அறிய முடியுமோ? முடியாது.
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment