"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, July 20, 2021

பொதிகாச்சலம்...அருணாச்சலம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழு சார்பில் குருவருளால் மலை யாத்திரை சென்று வருவது வழக்கம். முதல் யாத்திரையாக பருவத மலை யாத்திரை அமைந்தது. அடுத்து வெள்ளியங்கிரி யாத்திரை, சதுரகிரி, அத்திரி மலை, ஓதி மலை, நம்பி மலை, திருஅண்ணாமலை என தரிசனம் பெற்று வந்துள்ளோம். இது நம் குழு அன்பர்களோடு அமைந்த யாத்திரை ஆகும். 

1. பர்வத மலை
2. ஓதி மலை
3. சதுரகிரி
4. அத்திரி மலை
5 .வெள்ளியங்கிரி
6. வள்ளிமலை
7. திருஅண்ணாமலை
8. நம்பி மலை
9. சபரி மலை
10. பொதிகை மலை
11. தேனி சண்முகநாதன் மலை
12. தேவதானப்பட்டி மிருகண்ட மகரிஷி மலை
13. கோவில்பட்டி அருகே குருமலை
14. சதாசிவ கோனா மலை
15.தோரண மலை
16. மருத மலை
17. மங்கலதேவி கண்ணகி கோவில்

என  பல யாத்திரைகள் சென்று வந்துள்ளோம். இதில் பருவத மலை யாத்திரை 4 முறையும், சதுரகிரி 2 முறையும், சபரி மலை 5 முறையும், வள்ளிமலை 4 முறையும், வெள்ளியங்கிரி 3 முறையும் சென்று வந்துள்ளோம். எண்ணைக்கையில் என்ன இருக்கின்றது ? எண்ணத்தில் தான் அத்தனையும் இருக்கின்றது.

இந்த பெருந்தொற்று காலத்தில் ஆன்மிக யாத்திரை, உழவாரப்பணி போன்ற சேவைகளை நம்மால் தொடர இயலவில்லை. வருடமொருமுறை மலை யாத்திரை என்பது நம் குறிக்கோள் ஆகும். 2020 ஆம் ஆண்டில் இது சாத்தியப்படவில்லை. 2021 ஆம் ஆண்டில் இரண்டு மலை யாத்திரை நம் குழு அன்பர்களோடு குருவருளால் சிறப்பாக அமைந்தது. இத்துடன் 2020 ஆம் ஆண்டில் திருஅண்ணாமலை  தரிசனம் டிசம்பர் மாதம் 25,26,27 அமையப்பெற்றது. ஆனால் நாம் தனிப்பட்ட முறையில் 2019 ஆம் ஆண்டில் அதே டிசம்பர் மாதம் 25,26,27 பொதிகை மலை யாத்திரை சென்று வந்தோம்.
 
இதோ. 2021 ஆம் ஆண்டில் குருவருளால் சதுரகிரி தரிசனமும், பொதிகை மலை யாத்திரையும் நம் குழு அன்பர்களோடு பெற்று வந்தோம். இரண்டு யாத்திரையும் இன்னும் நம்மை குருவருள் நோக்கி ஈர்க்கின்றது. பொதிகாசலமும்,  அருணாச்சலமும் நம்மை ஆட்கொண்டு வருவதை உணர்ந்து வருகின்றோம். இந்த அனுபவங்களை தரிசனப் பதிவாக தர குருவிடம் விண்ணப்பம் செய்கின்றோம்.

ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில். 

இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. 

இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். 

இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும்.

இங்கே நாம் மகிழ மரம் தல விருட்சம் கண்டு , இங்கே இருந்து 9 கோபுரங்களை தரிசனம் செய்யலாம்.

மீண்டும் கோபுர தரிசனம் காண இருக்கின்றோம்.

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-  மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

 திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_29.html

தமிழ்நாட்டு திருவிழாக்கள் தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_48.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_98.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_70.html

 தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் (1)  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_21.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_11.html

அறம் செய்ய விரும்பு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_57.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

Tuesday, July 13, 2021

வேண்டத் தக்க தறிவோய்நீ

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்றைய தின மாணிக்கவாசகர் குரு பூசை அனைத்து தலங்களிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதனையொட்டிய பதிவாக வேண்டத்தக்கது அறிந்த இறை பற்றி சில துளிகளை இங்கே காண உள்ளோம். நம் அருளாளர்கள் வழங்கிய முத்துக்களை தினசரி பாராயணம் செய்வதை நம் கடமையாக கொள்ள வேண்டும். பதிகங்கள் அனைத்தும் அருளாளர்கள் வழங்கியவை என்று சொல்வதை விட இறையே அருளாளர்களால் வழங்கியது என்று தெளிவாக புரிகின்றது. அதுவும் இந்த பெருந்தொற்றுக்காலத்தில் தினசரி பதிகங்கள் படிக்கும்படி நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்குரைத்து உள்ளார் திருநீலகண்ட பதிகம், கோளறு பதிகம் போன்ற பதிகங்கள், திருப்புகழ், கந்த ஷஷ்டி கவசம் போன்றவற்றை தினமும் பாராயணம் செய்வது நமக்கு எந்நாளும் நன்மையே தரும்.

அந்த வகையில் நம்மை ஈர்த்த திருவாசகம் - சிவபுராணம் குழைத்த பத்தில் இருந்து ஒரு பாடல் 

வேண்டத் தக்க தறிவோய்நீ

    வேண்ட முழுதுந் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ

    வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள்செய்தாய்

    யானும் அதுவே வேண்டின்அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்

    அதுவும் உன்றன் விருப்பன்றே.

பாடலை ஒரு அல்ல..பல முறை படித்து பாருங்கள். உங்களுக்குளாகவே அன்பு பிறக்கும்.நாம் வேண்டத்தக்கது அறிந்த, வேண்டியவற்றை தருகின்ற இறைவனே..உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?

ஆம். இந்த அன்பே தான் அகத்தியமும்,சத்தியமும் ஆகும். இதனை அடைவது தான் இந்த பிறவியின் நோக்கமும் ஆகும்.  நம் தளம் சார்பில் நேற்று காலை திருநின்றவூரில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மாணிக்கவாசகருக்கு வழிபாடு செய்ய விரும்பினோம். நேற்று காலை கோயிலில் தொடர்கொண்டு நம் விருப்பத்தை தெரிவித்தோம். இதோ. நம் அனைவரின் விருப்பம் நிறைவேறி இங்கே தரிசனம் காண இருக்கின்றோம்.

அடடா..என்ன ஒரு தரிசனம். காண கண்கள் போதவில்லை. 

அழுதால் உன்னை பெறலாமே என்று மனம் எங்கும் தரிசனம்.

யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே

இங்கே மாணிக்கவாசகர் கூறுவதை கவனித்து பார்க்கும் போது  மாணிக்க வாசகரின் அன்பு பொய் என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ! என்று எண்ண தோன்றுகின்றது. பொய்யான நம்முள் இருந்து அழுது,அழுது தினமும் தொழுது,தொழுது மெய்யைக் காண மாணிக்கவாசகரிடம் வேண்டுவோம். 

நம் தளம் சார்பில் சிவபுராணம் அச்சிட்டு தருவது வழக்கம்,  இனிமேல் தரிசனம் செய்யும் கோயில்களில் சிவபுராணம் அச்சிட்டு தர உள்ளோம். நீங்களும் படித்து அருள் பெறுங்கள்.

மேலும் நாம் தற்போது வரை தரிசனம் செய்த சில கோயில்களில் இலுப்பெண்ணெய் தந்துளோம். நம்முடன் இணைந்து உறுதுணையாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி கூறி பதிவை முழுமை செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

அகத்தீசனே... சரண் சரணம் - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post.html

குரு உபதேசம் - ஓம் அகத்தீசாய நம! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post_14.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

Monday, July 12, 2021

அகத்தீசனே... சரண் சரணம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஆனி மாத ஆயில்ய நட்சத்திரம். போற்றினால் உமது வினை அகலுமப்பா என்ற நம் குருநாதர்    ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்கிற்கிணங்க நாம் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய தரிசனம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பெற்று வருகின்றோம். எண்ணிக்கையில் என்ன இருக்கின்றது? எண்ணங்களில் தான் அனைத்தும் இருக்கின்றது..ஆம். எண்ணமே வாழ்க்கை. ஒவ்வொரு முறை ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனையில் நாம் மெய் உருகி வருகின்றோம் என்பதே உண்மை. ஆடி மாத பௌர்ணமி முதல் நம் வழிபாட்டில் மீண்டும் ஒரு சிறப்பு உள்ளது. குரு பூர்ணிமா அன்று அந்த வழிபாடு தொடர உள்ளோம். இதற்கு வழக்கம் போல் நம் குருநாதர் அகத்திய பெருமான் ஆசி அளித்து உள்ளார்.விரைவில் அந்த வழிபாடு பற்றி அறிவிப்பு செய்ய குருவின் தாள் பணிகின்றோம். பதிவின் இறுதியில் இன்றைய பிரார்த்தனை ஒன்றை குருவிடம் சமர்பித்துள்ளோம். நீங்களும் படித்து பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகின்றோம்.

நெஞ்சார மனதில் நினைத்து வழிபட்டு வரும் அடியார்களுக்கு நிழல் போன்று இருக்கும் நம் குருநாதரின் அருளை இன்றைய பூசையில் யாம் பெற்றோம். மிக நீண்ட நாள் கழித்து 24 நிமிட சித்தர்கள் பூஜை தொகுப்பை படித்து அக மகிழ்ந்து குருவிடம் ஆசி பெற்றோம். மீண்டும் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெற உங்களை அழைக்கின்றோம்.

வழக்கம் போல் பூஜைக்கு தேவையான பொருட்களை சேர்த்து, ஒவ்வொன்றாக சரி செய்து வைத்தோம். 
ஆயில்ய ஆராதனைக்கு முன்பு நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருட்காட்சி பெற்றோம்.

இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அபிஷேகம் இனிதே ஆரம்பம்.

 மூலிகை பொடி அபிஷேகம் தொடர்ந்தது.

அடுத்து பஞ்சாமிர்த அபிஷேகத்திற்கு அனைவரும் தயாராகுங்கள்.

பால் அபிஷேகமும் தயிர் அபிஷேகமும் இங்கே கண்டோம்.

அடுத்து சந்தன அபிஷேகத்திற்கு தயாரானோம்.

அடுத்து விபூதி அலங்காரம் காண உள்ளோம்.

சந்தன அபிஷேகம் மற்றும் விபூதி அலங்காரத்தில் நம் குருநாதரின் தரிசனத்தை காண முடிகின்றது. மேலும் ஒருமுறை மேலே சென்று மீண்டும் தரிசனம் பெற்றுக்கொள்ளுங்கள். அடுத்து அலங்காரம் நோக்கி நம் மனது சென்றது.

அடுத்து 24 நிமிட சித்தர்கள் போற்றி தொகுப்பை படித்தோம். 

அடுத்து குருக்கள் பதிகம் பாடி லோக ஷேமத்திற்கு பிரார்த்தனை செய்தார். இதோ தீப தரிசனம் காண உள்ளோம்.

இந்த ஜோதி தரிசனம் நம்முள் உள்ள அகத்தின் ஈசனை காட்ட வேண்டி பிரார்த்தனை செய்தோம். மீண்டும் தீப தரிசனம் பெற்றோம். இப்போது நாம் பெறுவது ஒரு முக ஜோதி தரிசனம் ஆகும்.

இப்போது மீண்டும் நாம் பஞ்ச முக தீப தரிசனம் பெற உள்ளோம்.

நம் அகத்துள் உள்ள ஈசனாம் அகத்தீசனை ஜோதி கொண்டு விழிப்படைய செய்வோம். இது தான் அருட்பெருஞ்ஜோதியுடனான ஸ்ரீ அகத்தியர் தரிசனம் ஆகும். அருட்பெருஞ்ஜோதியை கொண்டும் நம் குருநாதரின் அருட்பார்வையை பற்றி விடலாம். இதன் மூலம் இறையை நாம் நம் உள்ளத்தில் தரிசிக்கலாம். குருநாதர் கூறுவது போல் இறையை அன்பால் நம் உள்ளத்தில் தரிக்க, தரிக்க..அந்த இறை சிக்கலாம். ஆக மொத்தத்தில் இறையை "தரி"சிக்கலாம்.

அடுத்து பிரசாதம் விநியோகம் செய்து நாமும் பெற்றுக்கொண்டோம்.

இன்றைய பூசை சங்கல்பம்

அப்பனே அகத்திய பெருமானே! ஆதி மகாலட்சுமி அருளால் சன்மார்க்கத்தில் நிற்கும் அன்பர்களுக்கு அருட் செல்வம்,பொருட் செல்வம் கிட்ட ஆசி புரிய வேண்டுகிறோம்.

ஆதி பராசக்தியே,உமையொரு பாகனாக நின்ற எங்கள் அன்னையே திருமணத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கு மனமொத்த மங்கை / மணாளன் அமைய வேண்டுகிறோம்.

இகபர சுகமளிக்கும் ஈசனே,குழந்தை வரம் வேண்டி ஏங்கி நிற்கும் அன்பர்களுக்கு சித்தர்கள்,ஞானியர்,சன்மார்க்கத்தை விரும்பும் குழந்தைகள் பிறக்க வேண்டுகிறோம்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் பல்கி பெருக மழைக் கடவுளான இந்திராணி சமேத இந்திரரையும்,வாருணி சமேத வருணரையும் வேண்டுகிறோம்.

எட்டா கனி போல் இருக்கும் சித்தர்களின் மாமறை மீண்டும் வெளிப்பட வேண்டுகிறோம்.

ஏழாம் பாவத்தால்,மன சஞ்சலத்தில் இருக்கும் சன்மார்க அன்பர்களின் மனக்குறை தீர வேண்டும்.

ஐவகை நிலங்களில் இயற்கை வளங்கள் அன்னை பூமாதேவி  மற்றும் ஆதிசேசன் அருளால் பெருக வேண்டும்.

ஒப்பற்ற மெய்ஞானம் உலகெங்கும் பரவ வேண்டும்.

ஓங்கார சொருபமான ஞான ஸ்கந்தரின் அருளால் சன்மார்க அன்பர்களுக்கு நாதம் பெருக வேண்டும்.

ஔஷதங்கள் சித்தர்களின் கருணையால் மீண்டும் பொலிவு பெற வேண்டுகிறோம்.