"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, January 2, 2024

அசைவம் தவிர்! இதை அனைவருக்கும் பகிர்!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

"அன்பு" வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளோம். இப்போது பதிவின் தலைப்பை படித்து பாருங்கள். கால மாற்றத்தில் நமக்கான உணவை விடுத்து ஏதேதோ சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிலும் உச்சகட்டமாக பிற உயிரை கொன்று சாப்பிடுவது எப்படி நியாயம்? உயிர் படும் வலி, வேதனை காண வேண்டாமா? இப்படி இருந்தால் எப்படி நன்மை நமக்கு கிடைக்கும்? அசைவ உணவு சாப்பிடுபவர்கள் நம்மை விட நன்றாக இருக்கின்றார்களே என்றெல்லாம் நீங்கள் கேட்பது நமக்கு தெரிகின்றது. இதில் நாம் வீண் வாதம் செய்ய வேண்டாம். சைவமா? அசைவமா? என்ற கேள்வியே வேண்டவே வேண்டாம். சைவம் ஒன்றே ஜீவகாருண்யத்தின் அடிநாதம் என்று உணர்ந்து கொண்டு, அனைவருக்கும் பகிர்ந்து அனைவரும் குருநாதர் கூறும் வழியைப்  பின்பற்றுங்கள்.

குருநாதர் கூறிய அருளுரைகளை அதுவும் குறிப்பாக அசைவம் உண்பதால் ஏற்படும் தீமைகளை இந்தப் பதிவில் அனைவரும் அறியத் தருகின்றோம்.



“இறைவா!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

23/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை  பர்கூர். 

அப்பனே இறைவன் அருள் அப்பனே அவைதன் கூட விஷ்ணுவின் அருள் நிச்சயம், அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே!!!!!

பிற உயிர் கொல்லாமை அப்பனே  யார் ஒருவன் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் படைத்ததை அப்பனே எதை என்றும் அறியாமல் கூட தின்னுகின்றானோ அவந்தனுக்கு அருள்கள் கிட்டாதப்பா!!!.

 சொல்லி விட்டேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் சில மனிதர்கள் அதை உட்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!

அதற்குத் தீர்வு நோய்கள்தானப்பா!!!. 

அப்பனே அவர்களையே கேட்டுப்பார்!!!

அப்பனே. (யார் அசைவம்) உட்கொள்கின்றார்களோ அவர்களை எதை என்றும் அறிந்தும் அறியாமலும் கூட எவ்வளவு நோய்கள்?????? இல்லத்தில் எவ்வளவு பிரச்சினைகள்???????  என்றெல்லாம் கேட்டுப் பாரத்தால் புரிந்துவிடும் அப்பனே!!!. 

இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே

முதலில் அப்பனே இறைவனை வணங்க தகுதி ஆனவர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே """"""" புலால் உண்ணாமையே !!!!! என்பேன் அப்பனே. 

இதை உண்ணாமலே இருந்தாலே  அப்பனே மற்றவை எல்லாம் தானாகவே வந்து விடும்.அப்பனே  எதை என்று கூற உயர் புத்திகள், உயர் எண்ணங்கள் இன்னும், இன்னும் அப்பனே. 

இவை உண்டுகொண்டே வந்தால் அப்பனே மனிதனின் கிளர்ச்சிக்கள் சில சில  அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் உள்ளதப்பா. 

இவைதன்  எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அறிந்தும் கூட பின் மற்ற உயிர்களும் செல்லுமானால்  அவ் கிளர்ச்சி மீண்டும் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே

இதனால் இன்னும் இன்னும் அப்பனே எதை என்றும் அறிய முடிகிறது காமம் எதை என்று கூட மூளைக்கு ஏறி  அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கர்மத்தை சம்பாதித்து, இன்னும் போட்டி,. எதை என்று அறிய அறிய பொறாமை , கோபங்கள் இவை எல்லாம் அப்பனே  சேர்ந்து மனிதன் அழிவு நிலைக்கே சென்று சென்று!!!

இதனால் அப்பனே அவன் மட்டும் அழியவில்லை. அவன் பிள்ளைகளும், இன்னும்  எதை என்று அறிய அறிய, இன்னும் அப்பனே அவனைச் சார்ந்து உள்ளவர்களையும் கூட அழித்து இவந்தனையும் அழித்துக் கொண்டு மீண்டும்  அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவ் ஆன்மா எவை என்று அறிய அறிய பிறவி எடுத்து விடுகின்றது என்பேன். 

இதனால் என்ன லாபம்? 

லாபங்கள் இல்லையப்பா.

இதனால் அப்பனே (பிறவிப்) பெருங்கடலைக் கடந்திட வேண்டும். பெருங் கடல் என்பது இங்கு யான் சொல்வேன் அப்பனே. எதை என்று அறிய அறிய

மனிதன் எவை என்று புரிய புரிய அதனால் புரிந்து கொண்டு வாழுங்கள்!!!.

புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!. 

புரியாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவன் ஆசிகளும் கிட்டாது என்பேன் அப்பனே.

=======================================

( சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு வாக்குரைத்த ஸ்தலம். திரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம். நாசிக். )

அப்பனே உயிரைக் கொன்று உட்கொண்டு தான் இருக்கின்றார்கள்!!! அப்பனே மனிதர்கள் கூட அப்பனே.

அப்பனே மனிதனை  அப்பனே ஒரு உயிரைக் கொன்று நீ உட்கொள்வது அப்பனே மனிதனை விட  அப்பனே ஒரு மனிதனை கொல்வதை விட அதைவிட பன்மடங்கு அதாவது வாயில்லா ஜீவராசிகளை கொல்வது அப்பனே பாவமப்பா!!!! பாவம்!!!!

அப்பனே பின் தெரிந்தும் தவறுகள் செய்தால் அப்பனே இறைவனிடத்தில் நிச்சயம் மன்னிப்புகள் இல்லை!!!!

(குருநாதர் முன் வாக்குகளில் ஏற்கனவே கூறியிருந்தது!!!! ஒவ்வொரு உயிரையும் இறைவன் படைக்கின்றார் அதன் மரணத்தையும் இறைவன் தான் எழுதுகின்றார் எப்பொழுது பிறக்க வேண்டும் எப்பொழுது இறக்க வேண்டும் என்று அதனால் மனிதனுக்கு ஒரு உயிரை கொள்வதற்கு அனுமதி இல்லை உரிமையும் இல்லை அனைத்து உயிரினங்களும் இறைவனுடைய பிள்ளைகள் இறைவனுக்கு தெரியும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் எப்பொழுது எந்த உயிர் பிரிய வேண்டும் என்று ஆனால் மனிதன் தன் சுயநலத்திற்காக ஒவ்வொரு ஜீவராசிகளை கொன்று தின்றால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்தே தீர வேண்டும்)

சொல்லிவிட்டேன் கஷ்டங்கள் அப்பனே அனுபவித்தே ஆக வேண்டும்!!!

யார் அனுமதி ???

(பிற ஜீவராசிகளை கொன்று குவிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் மனிதர்களுக்கு)

அப்பனே இறைவன் படைப்புக்களில் அப்பனே..... இறைவனே அனைவரையும் படைக்கின்றான்  அதனால்  இறைவன் படைப்பதை மற்றொருவன் கொன்றால்????

சொல்லிவிட்டேன் அப்பனே எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே

எவ்வாறு நன்மைகள் செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் யோசித்து செய்து கொண்டே இருங்கள் அப்பனே உங்களால் முடிந்தவரை !!!!அப்பனே இவ்உலகத்திற்கு !!!எதை என்று அறிய அறிய!!!

ஒரு உயிரை கொல்லாதீர்கள்!!! கொல்லாதீர்கள்!!! அப்பனே

தெரிந்தும் தவறுகள் செய்யாதீர்கள்!!! அப்பனே

தெரியாமல் எதை என்று அறிய அறிய

இன்னும் ஒருவன் இதை பார்த்து கேள்விகள் கேட்பான் அப்பனே

இன்னும் எதை என்று அறிய அறிய திடீர் திடீரென்று மாண்டு விடுகின்றானே!!!! என்று

(மனிதர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்கள்)

அப்பனே இவ்வாறு இயற்கையாக அவை மட்டும் இல்லை அப்பனே திடீரென்று ஆனாலும் அப்பனே மரணம் ஏற்படுவது அதுதான் யான் ஏற்கனவே  உரைத்து விட்டேன் அப்பனே.

(பிற ஜீவராசிகளை கொன்று தின்றால் மனிதர்களுக்கும் திடீர் திடீரென மரணம் ஏற்படும் ஏற்கனவே குருநாதர் கூறியிருந்த வாக்குகள் தான் இதை தற்பொழுது குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்)

ஆனாலும் அப்பனே தெரிந்து கூட பின் கொலை செய்ய கூடாதப்பா!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதாவது பிற உயிர்களை கூட அப்பனே அதாவது பேசுகின்ற உந்தனுக்கு தெரியுதப்பா!!! ஆனால் பேசாத ஜீவராசிகள் யாரிடத்தில் சொல்லுமப்பா!!!

அப்பனே  இதை நிச்சயமாய் பயன்படுத்திக் கொள்பவர்கள் அப்பனே நன்று!!!!

அப்படி இல்லையென்றால் அப்பனே நிச்சயம் சொல்லி விடுகின்றேன் இங்கிருந்தே!!!!

(குருநாதர் திடீரென்று வாக்குகளில் சினத்துடன் ஆரம்பித்தார் சுவடி ஓதும் மைந்தன் குரலும் உச்சத்தில் உயர்ந்தது!! முக பாவனைகளும் மாறியது !!!கிட்டத்தட்ட உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு சாபம்)


ஈசன் இடத்திலிருந்தே சொல்கின்றேன் அப்பனே !!!

நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய கை கால்களில் நோய் வரும் அப்பனே!!!!

தொண்டையிலும் நோய் வரும் அப்பனே!!

பின் மூளையிலும் நோய் வரும் அப்பனே என்பேன் அப்பனே

கண்களில் கூட நோய் வரும் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே இன்னும் சில மனிதர்கள் அனைத்தும் செய்து விட்டு கடைசியில் பின் அனைத்தும் யான் விட்டுவிட்டேன்!!!! இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விட்டோம் என்று வருபவர்களும் உண்டு என்பேன் அப்பனே!!!

அவர்களுக்குத்தான் தண்டனை!!!!

அப்பனே அனைத்தும் செய்துவிட்டு அப்பனே இறைவனிடத்தில் வந்தால்!!!

இறைவன் என்ன ஆசிகள் கொடுத்து விடுவானா ???? என்ன ??????

அப்பனே நிச்சயம் இல்லை!!!!

மனிதனின் குணங்கள் சரியில்லையப்பா!!!! அவ்வாறு சரியில்லாத குணங்களை பின் சூரியனே வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பல வழிகளிலும் கூட அப்பனே நோய்களை ஏற்படுத்தி விடுவான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!

ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

அதனால் அப்பனே நீங்கள் விதைத்ததை நீங்கள் தான் அப்பனே அறுவடை செய்ய வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே.

===================================


19-12-2023 அன்று கந்தப்பெருமான் அழகன் முருகப்பெருமான் உரைத்த வாக்கு. 


அன்பின் எல்லையாக விளங்கும் என் தாயையும், என் தந்தையையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் குமரனவனே. 

உலகத்தின் அழிவுகள் மிஞ்சி காணப்படும் வருங்காலங்களில். 

அதனைக்கூட அதாவது என் தந்தையே அழிவுகள் ஏற்பட… ஏன் அழிவுகள்???? 

ஏன் அழிவுகள்??????????

என் தந்தையே அனைத்து உயிர்களையும் படைத்திருக்கும் போது, அவ் உயிரினத்தை எல்லாம் கொன்று குவித்து….

ஆனாலும் (ஆதி ஈசன் ) என் தந்தைக்குக் கோபங்கள். ஆனாலும் அதை நிறுத்த அகத்தியனும் கூட பொறுப்பாய், பொறுப்பாய் அப்பா என்றெல்லாம் என் தந்தையிடம் கூட …

அதனால்தான் யான் வந்து உந்தனுக்கு இப்போது செப்பிக் கொள்ள..

அதனால்தான் சித்தர்கள் இன்னும் வந்து வந்து அதனால் சித்தனுக்கே பிடிக்கவில்லை மனிதன் வாழ்வது எப்படி என்பதைக் கூட. 

( அசைவ உணவு தொடர்பாக பின் வரும் இந்த வாக்கு மிக மிக முக்கிய வாக்கு - உலகின் மீது ஆதி ஈசனின் கோபம் ஏன் என்ற வாக்கு) 


ஆனால் இப்பொழுது கூட அழிவுகள், அழிவுகள் என்றெல்லாம் கலியுகத்தில் ஏன் எதற்காக என்று மனிதன் சிறிதாவது சிந்தித்ததுண்டா???????

இல்லை. மனிதன் தான் காரணம் என்று அப்பொழுது எங்கு போய் விட்டது புத்திகள்????????

ஆனால் தன் படைத்த அதாவது என் தந்தை படைத்ததை…….

(பரிதாபமான வாய் பேச முடியாத , ஏதும் அறியாத அப்பாவி ஜீவராசிகள் - எத்தனை ஆடுகள் , கோடிக்கணக்கான கோழிகள், நல்லதை மட்டுமே செய்யும் பசுக்கள், நாட்டு மாடுகள், கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள், நண்டுகள், இன்னும் எத்தனை எத்தனையோ அப்பாவி ஜீவராசிகள். ஆதி ஈசனின் அன்பு செல்லக் குழந்தைகள் ஆன ஜீவராசிகளைக் கொன்று குவித்து, உண்டு….) 


மனிதன் எவை என்றும் அறியாது இது ஈசனுடைய சொத்து என்றெல்லாம் தெரியாமல் கொன்று குவித்திருக்கின்றானே…..

ஆனால் அதுவும் இவையும் இப்படி உணர்ந்து உணர்ந்து நிச்சயம் மனிதனுக்கு கொடுத்தாய் என்றால் நிச்சயம் இப்படித் திரிந்து விடுவான் என்று எண்ணலாமே. ஆனால் எண்ணுவதில்லையே…..

ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்பதெல்லாம் சித்தர்கள் எடுத்துரைத்து, எடுத்துரைத்து ஆனாலும் அவ் உயிர்கூட என் தந்தைக்குத்தான் சொந்தம் என்று தெரியவில்லையே. 

பரவாயில்லை என்று போய் விடுகின்றான். 

ஆனால்…பரவாயில்லை என்று பின் சொல்லிவிடுகின்றானே , ( 19, December 2023ல படித்த வாக்கு) இப்பொழுது ( பரவாயில்லை என்று ) சொல்லச் சொல் பார்ப்போம் அழிவதற்குப்பின் பரவாயில்லை என்று. 

அப்பனே புரிந்து கொள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வினைகள் உண்டு என்பதைக் கூட. அதையும் சமநிலைப் படுத்த வேண்டும். 

இப்பொழுது கூட என் தந்தை ( ஈசன் ) மிகுந்த கோபத்தில் தான் உள்ளான் அழித்து விடவேண்டும் என்று கூறி. 

அதனால்தான் இன்னும் கூட தரம் தாழ்த்திச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன்.

மனிதனுக்குக் கொடுத்தாலும் அதை அழிவுக்குத்தான் பயன்படுத்துகின்றான் என்பதைக்கூட. ஏன் தெரியவில்லை. 

ஆனால் ஓர் அழிவு வந்தால்தான் நிச்சயம் பின் தேடித்தேடி.. அழிவுகள்..கஷ்டங்கள்…வந்து கொண்டே இருக்கும் !!!!!!!.


இன்னும் திருத்தலங்கள் நிரம்பி வழியுமப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

அப்பொழுது புரியும் யார் எங்கிருந்து செயல் படுகின்றார்கள் என்பதைக் கூட. 

ஆனாலும் புத்திகள்..புத்திகள் இன்னும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லையே.

எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் எப்படியப்பா யாங்கள் திருத்துவது?

ஆனாலும் இன்னும் மிதிக்கத்தான் போகின்றார்கள் பின் சித்தர்கள் கூட. 

அதனால்தான் பின் சித்தர்கள் யார் என்பதைக்கூடத் தெரியவில்லை. 

அதனால் புரிந்து புரிந்து உண்மைகள் பல வகையும் கூட அறிந்தும் கூட இதனால் நிச்சயமாய் நீ இருக்கும் இடத்தையும் கூட ( அசைவ உணவு அதிகம் உள்ள இடம்) என் தந்தை அழிவுக்கு இவ்தேசத்தை தாவி ஆனாலும் அழிக்க வேண்டும் என்று. 

ஆனாலும் அகத்தியனும்,  (ஈசா, தந்தையே) பொறும், பொறும் என்னால் முடியும் , முடியும் என்றெல்லாம். 

எம்முடைய ஆசிகள். (கந்தன் வாக்கு முற்றே!!!) 


=========================================================================


அகத்தியர்_வாக்கு  - முட்டை சைவமா.! அசைவமா.?


மகான்களிடம் இஃகுதப்ப வினாவை வினவும்பொழுது யாம் மகான்கள் நிலையிலிருந்துதானப்பா கூற முடியும்.! பலமுறை இதுகுறித்து விளக்கி விட்டோம். இது தீண்டத்தகாத பொருள், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள். அஃகுதொடு மட்டுமல்லாமல் பாவத்தையும் சேர்க்கும். இதை விட்டுவிடுவது சிறப்பு. அதற்காக இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும்போது அதை அனுசரித்துக் கொள்ள வேண்டியது அவனவன் கடமையாகும்.

சித்தர்கள் வழியில் வரவேண்டுமென்றால் கட்டாயம்

"ஜீவ காருண்யம்தான்" அடிப்படையாகும். இதற்காக விதண்டாவாதங்களில் இறங்கக் கூடாது. ஏனென்றால் ஒருவன் ஜீவ காருண்யமாக இருந்துவிட்டு வார்த்தைகளால் பிறரை காயப்படுத்திக் கொண்டிருந்தால் அதுவும் பலனில்லாமல் போய்விடும். எனவே யாராக இருந்தாலும் ஜீவகாருண்யம் அடிப்படையில் தேவை.


அசைவம் சாப்பிடுபவர்களில் பலர் ஜீவ காருண்யத்தோடு நடக்கிறார்கள். அவர்களுக்கு புண்ணிய பலன்கள் சேருமா.?


அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் தனித்தனியாக கணக்கீடு செய்துதான் இறைவன் பலனைத் தருவார். எனவே செய்கின்ற புண்ணியத்திற்கு தகுந்த பலன் உண்டு. செய்கின்ற பாவத்திற்கும் தகுந்த பலன் உண்டு. சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒருவன் பெற்ற குழந்தைகளில் ஒன்று ஊமையாக இருந்தால், அதை பிறர் இடர் செய்தால் தாயும், தந்தையும் பொறுத்துக் கொள்வார்களா.? அஃகுதப்பத்தானே இறைவனின் படைப்பிலே மனிதனைப்போல் ஆற்றலோ, சிந்தனைகளோ இல்லாமல் படைக்கப்பட்ட எளிய உயிர்களை வாய் ருசிக்காகவும், பழக்கத்திற்காகவும், ஒரு மனிதன் சித்ரவதை செய்து கொன்று தின்றால் இறைவன் அருள் எப்படிக் கிட்டும்.? எனவே கூடுமானவரை எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும்கூட இஃகுதப்ப ஜீவகாருண்யத்தையும் சேர்த்து ஒரு மனிதன் கடைபிடித்தால் பரிபூரணமான இறைவன் அருள் கிடைக்கும். தாவரங்களை உண்பதே பாவம்தான், தெரியுமா..? இருந்தாலும் மனிதன் உயிர் வாழ்வதற்காக தவிர்க்க முடியாமல் உண்பதால், அந்த பாவத்தை இறைவன் அனுமதித்திருக்கிறார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். தாவரங்களின் மலர்களை, காய்களை, கனிகளை பறிக்கும்போதெல்லாம் மானசீகமாக அதனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, இறைவனிடமும் நன்றி சொல்லிவிட்டு,

"இந்த தாவரத்தின் வாழ்க்கையில் நாங்கள் எங்கள் சுயநலத்திற்காக குறுக்கிட்டு இவற்றை பயன்படுத்திக் கொள்கிறோம். இறைவா.!

எங்களை மன்னித்துவிடு,

விருக்ஷமே.!

என்னை மன்னித்துவிடு.!" என்று கூறிவிட்டு அதை பயன்படுத்துவதுதான் முறையாகும்.


 நன்றி சித்தர் அருட் குடில் .....


 ஓம் அகத்தீசாய நம


=========================================================================


அகத்தியர் வாக்கு:

சைவம் என்ற ஒன்று கிடையாது என்று தாங்களே கூறியிருக்கிறீர்கள்.! இதற்கு என்ன பொருள்.? 


இறை வணங்கி கூறுகிறோம் அப்பா சில விருந்துகளில் அசைவம் என்றால்தான் 

 (மனிதர்கள்) அசைவோம் என்கிறார்கள். இல்லையென்றால் அசையமாட்டேன் என்கிறார்கள்.

இஃகுதப்ப கூறுவது என்னவென்றால் ஜீவகாருண்யம் தான். உயிர்க்கொலை மாபாதக செயல். ஒரு சிசு தாயின் பாலை அருந்துகிறது.

அது அசைவமில்லையா.? என்பதற்காகத்தான் அவ்வாறு கூறினோம். என்றாலும்கூட தெரிந்தே ஒரு உயிரை சுயலாபத்திற்காக சித்ரவதை செய்து கொன்று உண்பது மகாபாவம்.

இன்னொன்று தெரியுமா.? உயிர்க்கொலை செய்வதைவிட மகாபாவம், சிலர் சைவம் என்று கூறிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் இல்லங்களில் பசு மாடுகளை வளர்ப்பார்கள். கன்றுக்கு பாலையே ஊட்ட விடமாட்டார்கள். எத்தனை பெரிய பாவம் தெரியுமா அது.? கன்றை விருப்பம்போல் பால் குடிக்க விடுவதுதான் மிகப்பெரிய புண்ணியம். அதை செய்யாமல், தொடர்ந்து நாங்கள் சைவம், சைவம் என்று கூறிக்கொண்டிருந்தால், அவர்களை சைவமாக இறை ஏற்றுக்கொள்வதில்லை.?


இறையை வணங்குவதோ, சிவபஞ்சாக்ஷரம் கூறுவதோ, நெற்றி நிறைய திருநீறு அணிவதோ, பிரதோஷம் தோறும் ஆலயம் சென்று வழிபாடு செய்வதோ, சிவபுராணம், தேவார, திருவாசகம் ஓதுவதோ மட்டுமல்ல சைவம்.!

சைவம் என்றால் எண்ணத்தில் சைவம் வேண்டும், வாக்கில் சைவம்  வேண்டும், நடத்தையில் சைவம் வேண்டும், பேச்சிலே சைவம் வேண்டும், ஒவ்வொரு செயலிலும் சைவம் வேண்டும். சகலமும் சிவம் என்ற அர்த்தம்தான் சைவம். சகலமும் சிவம் என்றால் அனைத்தும் இறை. அனைத்தும் இறை என்றால் அந்த இறைக்கு யாரேனும் ஊறு செய்வார்களா.? செய்ய துணிவு வருமா.? அப்படித்தான் சகல ஜீவராசிகளையும் இறையாகப் பார்த்து அனைவரையும் மதித்து வணங்கவேண்டும். அவன்தான் சைவ(ம்)ன் .

அப்படியே கீழே உள்ள செய்திகளையும் படித்துப் பாருங்கள். 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கல்பதரு தினம் - கேளுங்கள், நீங்கள் பெறுவீர்கள் - 01.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/01012024.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 3 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-3.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 2 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-2.html

 ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023.html

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html


Monday, January 1, 2024

கல்பதரு தினம் - கேளுங்கள், நீங்கள் பெறுவீர்கள் - 01.01.2024

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். காலையிலே இந்தப் பதிவை அளிக்க விரும்பினோம். காலம் தாழ்த்தி வந்தாலும் குருவை நினைத்து உருகி, நீங்கள் கேளுங்கள். கேட்டது கிடைக்கும். இன்றைய நன்னாளில் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் கண்டோம். இன்றும் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் கூடுவாஞ்சேரியில் சந்தனக் காப்பில் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றார். கடந்த 30 ஆம் தேதி (30.12.2023) மார்கழி ஆயில்யம் அன்று சந்தனக் காப்பில் குருபூஜையில் தரிசனம் செய்தோம். குருவருளால் அன்றைய தினம் தீபமேற்றி வழிபாடு செய்தோம். கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்தோம். நாம் இன்றைய நாளின் மேலும் சிறப்பாக கல்பதரு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை பற்றி நமக்கு நம் அன்பர் சரணவன ராஜ் நமக்கு கூறியிருந்தார்கள். அவருக்கு நன்றி கூறி, கல்பதரு தினம் பற்றி அறிந்து கொள்வோம்.



கல்பதரு தினம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசி- அதன் சிறப்பு என்ன? அது நமக்கு வழங்கும் மேலான நிலை என்ன?

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நம்முள் பலரும் வாழ்த்துகளை 'சோஷியல் மீடியா' மூலமாகப் பரிமாறிக் கொள்வர். இப்படிப்பட்ட வாழ்த்துகளில் பொதுவாக 99% ஃபார்வேர்ட் செய்யப்படுவதுதான், அதுவும் எந்திர கதியில். 

அவை போன்ற வாழ்த்துகளில் அவசரம் இருக்கும். உணர்வு இருக்குமா? நமது வாழ்த்துகளுக்கு சக்தி இருக்குமா என்பது கேள்விக்குறியே. அதோடு, அந்த வாழ்த்துகளில் எத்தனை, நமக்கு உண்மையில் உதவும் என்பதும் சந்தேகமே? இன்று இவை எல்லாம் ஒரு சமுதாயச் சடங்காகி மாறி வருகிறது.

ஆனால் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களோ ஜனவரி 1-ல் குருதேவரின் கருணையில் உணர்வு ரீதியாக உயர்நிலையில் திளைப்பார்கள். காரணம் என்னவென்றால்,  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தத் தினத்தில்தான் தான் ஒரு தொடர் கல்பதரு என்பதை நிரூபித்துக் காட்டினார். 

குருதேவரின் ஆசியைப் பெறத்தான் அல்லது சிறிதளவாவது பெற்றுள்ளதால் தான் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் ஜனவரி 1 - இல் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்.

சரி, கடவுள் எவ்வாறு கல்பதரு ஆகிறார்? 

திரேதா யுகத்தில் ஸ்ரீராமர் என்ற கல்பதரு

இறைவன் ராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் தோன்றி எண்ணற்ற பக்தர்களுக்கு அபயம் அளித்தான்.

உலகியலிலும், உடல் இச்சையிலும் மூழ்கியிருந்து பிறகு ஸ்ரீராமரின் அருள் பெற்றவர் துளசிதாசர். அப்படிப்பட்டவர் ஸ்ரீமத்  ராமாயணத்தையே ஒரு கல்பதரு என்கிறார். 

பணப்பிரச்னை, திருமணம் தடைப்படுதல், குடும்ப அங்கத்தினர்களிடையே ஏற்படும் ego clash- அகங்காரப் பிரச்னைகள் என்று பலவற்றுக்கும் ராமாயண பாராயணமே சிறந்த தீர்வு தரும் என்கிறார்.

ஒரு காவியமே கல்பதருவாக இருந்து நல்லவற்றையும், பயனுடையதையும் நமக்கு வழங்கினால், அதன் காவிய நாயகன் ஸ்ரீராமர் எப்படிப்பட்டவராக இருப்பார்! 

ஸ்ரீராம, ராவண யுத்தம் நடக்கப் போகிறது. ராவணனின் தம்பியான விபீஷணன் தனது நான்கு அமைச்சர்களுடன் ஸ்ரீராமரைச் சரணடைய வந்து நின்றான். அப்போது சுக்ரீவன் முதலானோர் விபீஷணனைப் பற்றி ‘அவன் நம் எதிரியான ராவணனின் உளவாளியாகத் தோன்றுகிறது. இவனை நம்மோடு சேர்த்துக் கொள்ளக் கூடாது’ என்று குறை கூறி ஒதுக்க முயன்றனர்.

ஸ்ரீராமர் அனைவரையும் பேச அனுமதித்தார். அவர்கள் கூறியதை எல்லாம் கவனமாகக் கேட்டுவிட்டு, தலைமைப் பண்புமிக்க அவர் மிகக் கருணையுடன் கம்பீரமாகக் கூறினார்:

‘ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம’

"யார் ஒருவன், 'ராமா! நான் உன் தாசன்; நான் உனது உடைமை. என்னைக் காப்பது உன் பொறுப்பு’ என்று கூறி என்னிடம் அடைக்கலம் புகுகிறானோ, அவனை எல்லா உயிர்களிடமிருந்தும் காப்பது என் விரதம்".

இது ராமாயண சரம சுலோகம். ‘சரணடைந்தவர்களைக் காப்பது என் விரதம்’ என்றபோது ஸ்ரீராமர் கல்பதருவாகவே விளங்கினார். அணில், அரக்கர், வானரங்கள், மனிதர், ரிஷிகள் என்று பக்தியுடன் சரணடைந்த எல்லோருக்கும் அவர் அடைக்கலம் அளித்தார்.

துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் என்ற கல்பதரு

ஸ்ரீகிருஷ்ணர் கீதோபதேசத்தில் கர்ம, ஞான, பக்தி யோகங்களை விரிவாக உபதேசித்தார்.  கடைசியில் ‘சரணாகதி’ எனும் எளிய வழியைக் கல்பதருவாகக் கருணையுடன் காட்டினார்.

'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ!

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச!! '

-‘பக்தனே, நீயாகப் புரிந்து கொண்டுள்ள எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னை மட்டுமே சரணடை. நான் எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பேன். பயப்படாதே’. இது கீதையின் சரம ஸ்லோகம். 

இதன் சாரம்: ‘மார்க்கங்களைக் கடந்து மாதவனைப் பற்று’ என்பதாகும்.

வைணவ ஆசார்யர்கள், இச்சுலோகத்தின் அஹம்,  மாம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குச் சிறப்பாகப் பொருள் கூறுவர். உலகத்தையும் மக்களையும் ரக்ஷிப்பவனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்களான மேன்மையையும் கருணையையும் அஹம், மாம் என்ற இரு பதங்களும் காட்டுகின்றன.

‘கிருஷ்ணனாகிய நான் ஞானம், சக்தி ஆகிய இரண்டு குணங்களை உடையவன்’ என்பதை அஹம் என்ற பதம் காட்டுகிறது. அவரது ஞானமானது நம் அறியாமையை வேரோடு நீக்கும்; சக்தியானது நமது எல்லாப் பாவங்களையும் போக்கும்.

மாம் என்ற பதம் கிருஷ்ணருடைய சௌலப்யம், வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம் ஆகிய குணங்களைக் குறிக்கிறது. தான் விரும்புபவர்களிடம் உள்ள குறைகளை அன்பால் மறைக்கும் தன்மையை உடையது வாத்ஸல்யம். 

தாய் தன் குழந்தையிடம் காட்டும் அளவற்ற அன்பு வாத்ஸல்யம். பசு கன்றை ஈன்றதும், அதன் மீதிருக்கும் துர்நாற்றமடிக்கும் கழிவான வழும்பைத் தன் நாக்கால் நீக்கிக் கன்றைச் சுத்தப்படுத்தும்.

நம்மிடம் பாவம், பொறாமை, கோபம், மோகம், பேராசை, அகங்காரம் என்று கணக்கற்ற குறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குன்றளவு இருந்தாலும் அவற்றில் பகவான் தன் பார்வையைச் செலுத்த மாட்டானாம். அப்படியே செலுத்தினாலும், ‘என் பக்தனது தவறுதானே, பரவாயில்லை’ என்று கூறி அவற்றையெல்லாம் குணமாகக் கொள்வானாம்.

ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் ‘அவிஜ்ஞாதா’ (குறைகளை அறியாதவன்), ‘ஸஹஸ்ராம்ஸு’ (அனைத்தும் அறிந்தவன்) என்று இரண்டு திருநாமங்கள் பகவானுக்கு உள்ளன.

அனைத்தும் அறிந்த இறைவன், குறைகளை அறியாதவனாக ஆக முடியுமா? தன்னைச் சரணடைந்தோரின் குறைகளை அறிந்தும், அதைக் கருத்தில் கொள்ளாது, தன் வாத்ஸல்யத்தால் அவற்றைக் குணமாகக் கொள்கிறான் என்பதையே இது காட்டுகிறது. இதனால்தான் ‘குன்றனைய குற்றம் செய்யினும் குணமாகக் கொள்ளும்’ என்று பொய்கையாழ்வார் பாடினார்.

இப்படி அவதாரங்கள் அபயமளிக்கும் வாக்குறுதிகளை அருளியிருந்தாலும், தற்கால மனிதன் சென்றதையே எண்ணிச் சோகம் பிடித்துத் திரிகிறான். இருக்கும் சொர்க்கத்தை நழுவ விட்டுவிட்டு இவனாகவே நரகத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

ஜென் குரு ஒருவர் வாழத் தெரியாத மனிதர்களின் நிலை  பற்றிக் கூறுகையில், ‘எப்போதும் யாரிடமாவது தனது குறைகளைக் கூறி அழுவதில் பெரும் திருப்தி காண்பவன் மனிதன்’ என்கிறார். தான் அழுவதைப் பிறர் கேட்க அவன் பணம்கூடத் தருவானாம். பலர் மனோதத்துவ நிபுணர்களிடம் செல்வது இது போலத்தானோ?

மகாகவி பாரதியார் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் பாவி என்று அழைக்கிறார். 'எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி' என்று சரியாக வரையறுக்கிறார்.

சம்சார பந்தம், பலவீனம், சோகம், மோகம் என்று ஏதோ சில பிரச்னைகள் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்யும். இவற்றை எதிர்கொள்ள, நிரந்தரத் தீர்வு தர முடியாத வேறொரு சாதாரண மனிதனிடம் செல்வது சரியான பயனளிக்குமா?

மாறாக, அருளாளர்களிடம் மற்றும் அவதாரபுருஷர்களிடம் பக்தி கொண்டால் அவர்கள் நம் சோகங்களை மட்டுமன்றி, அவற்றின் மூல காரணங்களையும் நீக்கி நம்மை உயர் வாழ்க்கை வாழ வைக்கின்றனர். இந்த நோக்குடன் நாம் கல்பதரு தினத்தைக் கொண்டாடுவோம்.

கலியுகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதரு

ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணரே ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்து மேன்மை மற்றும் கருணையுடன் நமக்கு அபயமளிக்கிறார்கள்.

கல்பதரு தன்னிடம் வந்து யாசிப்பவனுக்கு அவன் கேட்பது எதுவாயினும் தந்துவிடும்; அது கேட்டவனுக்கு நன்மை தருமா, தீமை தருமா என ஆராய்வதில்லை. 

ஸ்ரீ ராமகிருஷ்ணரே  கூறிய கதை ஒன்று உண்டு.

கல்பதரு என்று தெரியாமலேயே அதனடியில் சென்று ஒருவன் படுத்தான். அவனுக்குப் பசித்தது. உடனே அறுசுவை உணவு வந்தது. மெல்ல தூக்கம் வந்தது. வேகமாக படுக்கை வந்தது. உடம்பு பிடித்துவிட இளம் பெண்கள் வந்தால்…, ஓடோடி வந்தனர்.

'அட, நினைத்ததெல்லாம் நடக்கிறது. இது காடு ஆயிற்றே, ஒருவேளை புலி வந்தால்….,' வந்தது புலி, அவன் காலி.

ஆனால் கலியுக கல்பதருவான குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரோ, நமக்கு நன்மை தரக்கூடியதை மட்டுமே அருள்வார். நமக்கு எது நல்லது, எது நீடித்த பலனைத் தருவது என்பது நம்மைவிட ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கே ஆழமாகவும் அருமையாகவும் தெரியும்.

ஆண்டவனை ‘அர்தி கல்பன்’ என்பர் வைணவப் பெரியோர். ‘வேண்டுபவனுக்கு (அர்தி) வேண்டுவதைத் தரும் கல்பதரு’ என்பது இதன் நேர்ப்பொருள்.

இதைவிட ஓர் உயர்ந்த பொருளையும் பெரியோர் காட்டியுள்ளனர். ‘அர்தி ச அசௌ கல்பச் ச’ என்று பிரித்துக் காட்டி, அதை விளக்கியும் உள்ளனர்.

அதாவது, இறைவன் கல்பதரு போல தன்னிடம் வருபவனுக்கு மட்டும் வழங்குவதில்லையாம். தானே பக்தர்களிடம் சென்று ‘வேண்டுபவை அனைத்தும் தரும் என்னிடம் யாசியுங்கள்’ என்று தன்னிடம் அவர்களை வரவழைக்கிறான். அர்திகளுக்கு (கேட்பவர்களுக்கு) வழங்க, இறைவன் அர்தியாகவும்  கல்பதருவாகவும் தானே ஆகிறான். தன்னிடம் வந்து உயர்கதியைப் பெற மனிதனுக்கு விருப்பத்தையும் நம்பிக்கையையும் தருகிறான்.

இதனால்தான் நம்மாழ்வார் ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்கிறார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற ‘அர்தி கல்பன்’ 1.1.1886 அன்று தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்டு பக்தர்களுக்கு அபயம் தந்ததால் அவரை கல்பதரு என்கிறோம்.

ஆஹா, அந்த நிகழ்ச்சிதான் எவ்வளவு அற்புதமானது!

மேற்கு வங்காளத்தில் உள்ள காசிப்பூர் தோட்ட வீட்டில் தொண்டைப் புண் சிகிச்சைக்காகத் தங்கியிருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அன்று  உற்சாகத்துடன் இருந்தார். பிற்பகல் 3 மணி. தோட்டத்தில் சற்று உலாவி வர வெளியே வந்தார். நீண்ட நாட்களாக வெளியே வராதவர் அப்படி வந்ததும், ஆங்காங்கிருந்த பக்தர்கள் ஓடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டு வணங்கினர்.

பிரபல நாடக ஆசிரியரான கிரீஷ்பாபுவைப் பார்த்து ஸ்ரீராமகிருஷ்ணர், "ஆமாம் கிரீஷ் , நீ என்னைப் பற்றி எல்லோரிடமும் 'நான் ஓர் அவதார புருஷர்' என்றெல்லாம் கூறி வருகிறாயே, அப்படி என்ன அதிசயத்தை என்னிடம் கண்டுவிட்டாய்?" என்று கேட்டார்.

கிஷ்ரீபாபு பல பாவங்களைச் செய்து பகவானிடம் அடைக்கலம் புகுந்தவர். அப்படிப்பட்ட கிரீஷ்பாபு குருதேவரின் திருமுன்பு மண்டியிட்டுக் கரம் கூப்பி, "டாகுர், நான் என்ன கூறுவேன்? வால்மீகியும் வியாசருமே யாருடைய பெருமையைக் கூற வார்த்தைகள் அற்றுப் போனார்களோ, அப்படிப்பட்டவரைப் பற்றி நான் என்ன கூற முடியும்?" என்றார்.

மிகுந்த உணர்ச்சியுடன் கூறப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் குருதேவர், "நான் இன்னும் கூற என்ன உள்ளது? உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன்; நீங்கள் எல்லோரும் ஆன்மிக விழிப்பு பெறுங்கள்" என்று ஆசீர்வதித்தார்.

பரவச நிலையில் இருந்தவாறு ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய இந்தப் புனிதமான வார்த்தைகளைக் கேட்டு, பக்தர்கள் ஆனந்தப் பெருக்குடன் உணர்ச்சி மேலிட்டவர்களாய் அவர் முன் வீழ்ந்து வணங்கினார்கள்; ஒவ்வொருவரையும் குருதேவர் தொட்டு ஆசீர்வதித்தார். 

குருதேவரது தெய்வீக ஸ்பரிசத்தால் அன்று பக்தர்களின் மனங்களிலிருந்த குழப்பங்கள் நீங்கின. சிலருக்குத் தங்களின் இஷ்டதெய்வ தரிசனங்கள் கிடைத்தன. இறைவன் மட்டுமே சத்தியம் என்று ஒவ்வொருவருக்கும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. இனி எதைச் செய்தாலும் இறைவனோடு இணங்கி இருந்தே செய்வது என்று அவர்கள் நிச்சய புத்தி பெற்றனர்.

 மங்கல வாக்கியம் அல்ல, மந்திர வாக்கியம்

130 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் ஒவ்வொரு புத்தாண்டிலும் கோடிக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதருவை தியானித்துப் புது நம்பிக்கை பெறுகிறார்கள். 

இவ்வளவு பக்தர்கள் குறிப்பாக, இன்றைய தினத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் ஈர்க்கப்படுவதற்குக் காரணம் என்ன? 

'நீங்கள் தெய்வீக நிலையைப் பெறுங்கள்' என்று ஸ்ரீராமகிருஷ்ணர் எப்படிப்பட்ட உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து உரைத்தார்?

ஸ்ரீராமனாக விபீஷண சரணாகதியின்போதும், ஸ்ரீகிருஷ்ணனாக அர்ஜுனனிடம் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்ற உபதேசம் செய்தபோதும் இருந்தது போன்ற ஆன்மிகப் பெருநிலையில் நிலைத்திருந்துதான் ஸ்ரீராமகிருஷ்ணர் ‘ஆன்மிக விழிப்பு பெறுங்கள்’ என அன்று ஆசீர்வதித்தார்! 

ஸ்ரீராமரைப் பற்றி எழுதிய வால்மீகி பற்றியும், ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளைத் தொகுத்த வியாசரைப் பற்றியும் கிரீஷ் பாபு கூறியதும் ஸ்ரீராமகிருஷ்ணர் பரவசநிலை அடைந்தார். 

'யார் ஸ்ரீராமராகவும் ஸ்ரீகிருஷ்ண ராகவும் அவதரித்தாரோ, அவரே இப்போது ராமகிருஷ்ணராக வந்திருக்கிறார்' என்று ஸ்ரீராமகிருஷ்ணரே கூறியுள்ளார். 

அந்த அவதார நினைவூட்டலைத்  தூண்டும் வகையில் கிரீஷ் பாபுவின் பக்தி அமைந்திருந்தது. அதனால்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் முந்தைய அவதாரத்தில் எவ்வாறு கல்பதருவாக விளங்கி அருளாசி வழங்கினாரோ, அவ்வாறே ராமகிருஷ்ண அவதாரத்திலும் கல்பதருவாக மாறி அருள்புரிந்தாரோ!

குருதேவர் கல்பதரு ஆசியாக அன்று கூறியது, பக்தர்களின் நன்மைக்கான மங்கள வாக்கியம் மட்டுமல்ல, அது உலகம் முழுவதிலும் உள்ள எல்லா சமயத்தின் பக்தர்கள் அனைவரும் நினைந்து நினைந்து உருக வேண்டிய மந்திர வாக்கியமும் ஆகும்.

நீங்கள் நன்றாக இருங்கள், பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள், வாழ்க வளமுடன் என்றெல்லாம் பலரும் உங்களையும் வாழ்த்தி இருப்பார்கள். அந்த வாழ்த்துச் செய்திகள் எல்லாம் உங்களுக்கு நன்கு புரிகின்றன.

ஆனால் 'நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெறுங்கள்' என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றால் என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் வருகிறது. குருதேவரின் இந்த ஆசீர்வாதத்தை அனுபவத்தில் புரிந்து கொண்டாலோ அல்லது உணர்வுரீதியான அனுபவம் பெற்றாலோ, குறைந்தபட்சம் நேர்மையாக, எளிமையாக நம்பினால்கூட பெரும் பயன் கிடைக்கும்.

இந்த உலகம் நமக்குக் கற்றுத் தருவதெல்லாம், நாமே உடல், நாமே மனம் என்று நம்ப வைத்து நம்மைக் குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விடுகிறது. 

நமது உண்மையான இயல்பு தெய்வீகமானது; நாம் ஆன்ம சொரூபீகள். இந்த நமது இயல்பை தெய்வீக புருஷர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். 

இந்த ஞானமும் போதமும் நமக்குக் கிடைக்கும்போது நாம் நமது மேலான நிலையை அடைகின்றோம். எங்கோ காட்டில் சுற்றிக் கொண்டிருந்தவன், தான் இளவரசன் என்பதைப் புரிந்து கொண்டு ஆட்சியைப் பிடித்த  கதைதான் நமக்குள் நடக்கிறது.

அந்த தெய்வீக நினைவூட்டலைப் புனிதமான சக்தியுடன் நமக்கு அருளியவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

'நாம் தெய்வீகமானவர்கள்' என்பதை உணரும்போது தூங்கிக் கொண்டிருக்கின்ற நமது ஆன்மா விழித்தெழும். அதன் பின் என்ன நடக்கும் என்பதை சுவாமி விவேகானந்தருடைய வார்த்தைகளில் கவனியுங்கள்:

"….அளவுக்கதிகமான சோம்பல், அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் -இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது. படிந்த வண்ணமே உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள்.

"ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மையான இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும்; பெருமை வரும்; நன்மை வரும்; தூய்மை வரும்; எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்."

-சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் ஆற்றிய உரையிலிருந்து.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசியானது உங்களுக்கு ஏதோ ஓரிரு பலன்களைத் தரக்கூடியது அல்ல; உலகிலுள்ள அனைத்து நன்மைகளும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசியின் சாரம்.

குருதேவரின் இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகள் பல. அவற்றுள் ஒன்று இதோ:

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருமுறை தம்மைப் பற்றி, ‘அமி கர்மநாசா, ஃபராஸ்டாங்கா’ என்றார்.

‘அமி கர்மநாசா’ என்றால் வங்கமொழியில் ‘என்னைச் சரண் புகுகிறவர்களின் கர்மவினைகளைப் போக்கி விடுவேன்’ என்று பொருள்.

‘ஃபராஸ்டாங்கா’ என்பது ஆங்கிலேய ஆட்சியில்லாத பிரெஞ்சுப் பகுதியைக் குறிக்கும். இதன் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ன கூறுகிறார்?

"நான் (நமது நாட்டின் விடுதலைக்கு முன் இருந்த) பிரெஞ்சுப் பகுதி போன்றவன். ஆங்கில ஆட்சியில் அவர்களுக்கு எதிராகக்  குற்றமிழைத்தவர்கள், பிரெஞ்சுப் பகுதியான சந்தன் நகர் சென்று தப்பித்துக் கொள்வார்கள். அதுபோல் யார் என்ன செய்திருந்தாலும் என்னிடம் சரணாகதி அடைந்தால் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை" என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரை 'கபால மோசனர்' - ‘தலையெழுத்தையே மாற்றி எழுத வல்லவர்’ என்று கூறுகிறார்.

பொதுவாக, தம்மை இறைவனின் பக்தனாக, தாசனாகக் கருதிய ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் தம்மைப் பற்றிப் பிறர் கூறும் குரு, பாபா, கர்த்தா ஆகிய வார்த்தைகள் பிடிப்பதில்லை.

என்றாலும் அவர் தாமே ‘அமி கர்மநாசா’ என்று கூறியது ‘ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ - ‘பக்தனே! உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும்  விடுவிக்கிறேன்’ என்ற ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தைகளின் வங்க மொழியாக்கம் போலுள்ளது.

சாரமாக, ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்கு அளிக்கும் அபய வார்த்தை "மனிதா! நீ உன் கர்மவினைகளைப் பார்க்காதே. என் கருணையைப் பார்" என்பதுதான்.

குருதேவரின் இந்த அருளில் திட நம்பிக்கை கொள்ளாது, பலரும் தங்கள் பாவங்களையும் பலவீனங்களையும் பற்றி மட்டுமே எண்ணி மருகுகின்றனர். தாயினும் சாலப் பரிந்தூட்டும் குருதேவரின் அருளிருக்க, நிம்மதியைத் தேடி அங்குமிங்கும் அலைய வேண்டாம்.

தூசி தீயில் விழுந்தால் பொசுங்கும்; அதை நாமே மெனக்கெட்டுக் கண்ணில் விழும்படி போட்டுக்கொண்டால் கலங்கடிக்கும். அதுபோல பாவச்சுமையை மனதில் நாமாகவே தக்கவைத்துக் கொண்டால் பெரும் துன்பம் தரும்.

பாவ சுமைகளையும், பாவ நினைவுகளையும், வறுமையையும், பலவீனங்களையும், எவையெல்லாம் உங்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறதோ, அவற்றை எல்லாம் இந்த கல்பதரு நன்னாளில் பகவானின் திருவடியில் இறக்கி வைத்து விடுங்கள்.

இறைவனின் கருணை முன்பு நம் குற்றங்கள் அனைத்தும், ஆண்டாளம்மா கூறுவது போல ‘தீயினில் தூசு’ ஆகிவிடும்; மகாகவி பாரதி கூறுவது போல ‘பரிதி முன் பனித்துளி’ ஆகிவிடும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் இன்றும் நம்மிடையே நமக்குத் தம்மையே தரும் கற்பகமாக விளங்குகிறார். அவரது கல்பதரு வாக்குறுதியைப் பக்தி மற்றும் தொண்டின் மூலம் நாம் விரைவில் உணரலாம்.

'ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற நித்திய கல்பதருவின் அடியில் இளைப்பாற எனக்கும் ஓர் இடத்தை அவரே எனக்குத் தந்துள்ளார்' என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஸ்ரீராமகிருஷ்ண பக்தரும் உறுதியுடன் நிற்க வேண்டும்.

'தெய்வம் நமக்குத் துணை பாப்பா -

ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா' என்பதே நமக்கு இந்தப் புத்தாண்டுச் செய்தியாக அமையட்டும்.

'உங்கள் அனைவருக்கும் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படட்டும்' என்று அன்றைய பக்தர்களிடம் கூறிய ஸ்ரீராமகிருஷ்ணர், இன்று நம்மிடமும் அதையே கூறி நம்மை ஆசீர்வதிக்க மாட்டாரா என்று ஏங்குவோம்! 

அந்த ஏக்கம் ஜென்ம ஜென்மாந்திர மாகத் தூங்கிக்கொண்டிருக்கும் நம் ஆன்மாவைத் தட்டி எழுப்பும். அந்த இறை ஏக்கம் நமக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது ஊக்கத்தைப் பெருக்கும். அந்த ஏக்கமே நமது தொடர் பிரார்த்தனையாக இருக்கட்டும். இந்த ஆண்டு முழுவதும் அந்தப் பயிற்சியிலேயே நம் வாழ்க்கை செம்மை ஆகட்டும்.

ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா 

சுவாமி விமூர்த்தானந்தர்



தெய்வமே ! குருநாதா!! என்று போற்றி, போற்றி மகிழ்வோமாக!

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 3 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-3.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 2 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-2.html

 ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023.html

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html