அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 10
வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
01.சித்தன் அருள் - 1903 - பகுதி 1
02.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
03.சித்தன் அருள் - 1911 - பகுதி 3
04.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
05.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
06.சித்தன் அருள் - 1916 - பகுதி 6
07.சித்தன் அருள் - 1917 - பகுதி 7
08.சித்தன் அருள் - 1918 - பகுதி 8
09.சித்தன் அருள் - 1923 - பகுதி 9 )
அடியவர் :- ஐயா கால் வலி இருக்கு. நடக்க முடியல.
குருநாதர் :- தாயே அதை சரியாக்க முடியாது. இதைக் கேட்டு விடாதே.
அடியவர் :- ( ஆசி கேட்ட போது )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் அனைவருக்குமே என்னுடைய ஆசிகள். நிச்சயம் அப்பனே எம்முடைய ஆசிகளோடு அனைத்தும் நடக்கும் அப்பா.
அடியவர்
:- திருவாசகம் பொருள் உணர்ந்து படிக்க கேள்வி கேட்டார். இவ்அடியவரை ஆறுபடை
வீடுகளுக்கு சென்று வரச் சொன்னார்கள் முந்தைய வாக்கில் உரைத்தார். அதன்
பின் கேள்வி கேட்ட போது.
குருநாதர் :- அப்பனே ராமேஸ்வரம் சென்றடைந்து, கேள்.
(சில உரையாடல்கள்)
யான் சொல்லியதை அனைவரும் கேட்க நன்று.
அடியவர் :- (திருப்பரங்குன்றம் அருகில் ஓர் ஆலயம் தொடர்பாக ஆசி கேட்ட போது..)
குருநாதர் :- அப்பனே சித்தர்கள் யாங்கள் நிற்க, வராக தேவியும் அங்கே நிற்க அதி விரைவிலே நடைபெறும் என்பேன் அப்பனே.
அடியவர் :- எப்போது கும்பாபிஷேகம் செய்யலாம் ஐயா?
குருநாதர் :- அப்பனே மனம் போலே ஆகட்டும் அப்பனே.
அடியவர்
2 :- தந்தைக்கு வணக்கம். என்னுடைய கேள்வி. அகிலாண்டேஸ்வரி , அகத்தீஸ்வரர்
திருக்கோயில், மற்றும் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் தள்ளிக்கொண்டே
போகின்றது. அதை விரைவாக சிறப்பாக முடித்திட உத்தரவு.
குருநாதர்
:- அப்பனே நிச்சயம் பிள்ளையான்பட்டி சென்று, (பிள்ளையார்பட்டி
கற்பகவிநாயகர் ஆலயம்) அங்கிருக்கும் (குளத்து) நீரை எடுத்து வந்து ,
(கும்பாபிஷேகம் நடக்க உள்ள ஆலயம்) அங்கு வை அப்பனே. அதிவிரைவிலேயே
நடைபெறும் என்பேன் அப்பனே.
அடியவர் 3 :- (ஒரு வழக்கின் விவரங்களைக் குறிப்பிட்டு , சாதகமாக தீர்ப்பு வர ஆசி கேட்ட போது….)
குருநாதர்
:- அப்பனே, இதற்கு பொறுத்தாக வேண்டும். யான் சொல்லியதெல்லாம் (நவகிரக
தீபம், கூட்டுப் பிரார்த்தனை) செய்து கொண்டே வா அப்பனே. நிச்சயம் அடுத்த
முறை விவரமாக விவரிக்கின்றேன் இதைப் பற்றி.
அடியவர் 4 :- பொதுமக்களுக்கு பயன்படுகின்ற மாதிரி வகுப்புகளை எடுக்கலாமா?
குருநாதர்:- தாயே, கால் வலி என்கின்றாய். கைவலி என்கின்றாய். எப்படி? ஏது? எவை என்றும் புரிய.
அடியவர் :- ஐயா, அன்னை கண்ணகிக்கு மதுரையில் ஒரு கோயில் கட்டனும் என்று உணர்த்தப்பட்டிருக்கு.
(
தனது கணவன் கோவலன் நீதியின்றி கொல்லப்பட்டதால், பாண்டிய மன்னன்
நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டு வாதாடி, அவனது குற்றத்தை நிரூபித்து, மதுரை
நகரையே
தன் மகிமை புகழ் கற்பு
தர்மத்தின் வலிமையால் மதுரை மாநகரை எரித்த கற்புக்கரசி கண்ணகி
அம்மையாருக்கு, மதுரையில் ஆலயம் கட்ட குருநாதரிடம் ஆசி கேட்டபோது)
குருநாதர்
:- தாயே அதிக முயற்சிக்கள் எடுத்துத்தான் கட்ட வேண்டும். இதனைச் சுலபமாக
செய்ய இயலாது. நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் யான் துனையிருப்பேன்.
அடியவர் :- (தனது குடும்பத்தினருக்கு வேலை பார்க்கும் இடங்களில் பல தொல்லைகள் நீங்க கருணைக்கடல் இறைவனிடம் கேட்ட போது)
குருநாதர்
:- தாயே, பின் இராமேஸ்வரத்தில் ஏறி நிச்சயம் பின், முன்னோர் சாபத்தை
நீக்குங்கள். அவை மட்டும் இல்லாமல், இறந்தவர் இன்னும் பின், ஆன்மா முழுமை
பெறவில்லை. ஏங்கிக்கொண்டே (இருக்கின்றனர்). இதனால் மனக்குழப்பங்கள்
தொடர்ந்து கொண்டே (இருக்கின்றது உங்களுக்கு). இதனால் அவ்ஆன்மாவை நிச்சயம்
சமநிலைப்படுத்த , நிச்சயம் அதாவது கயாவுக்கு சென்று வருவது சிறப்பு.
உயர்
பொது நல எண்ணங்கள் உடைய ஒரு குழந்தை அடியவர் :- ( யாருமே எதிர்பார்க்காத
நிலையில் ஓர் குழந்தை அடியவர், அங்கு உலகின் மிகப்பெரும் கேள்வியை கருணைக்
கடல் முன் வைத்த நிகழ்வு)
ஐயா
இப்போது விமான விபத்து நடந்தது இல்லையா? (12 June 2025 ஆம் தேதி நடந்த
மிகவும் சோகமான விமான விபத்து ) இந்த மாதிரி , இது இயற்கையாக நடந்ததா? இந்த
மாதிரி பாதிப்பு நடக்காமல் எப்படி நம்ம தடுக்கிறது?
குருநாதர்
:- தாயே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன். இதற்கு ஏற்றவாறே நிச்சயம்
தன்னில் பின் ஏற்கனவே சொல்லி மனிதனுக்கு. ஆனாலும் மனிதன் சரியாகவே
பின்பற்றவில்லை.
சுவடி
ஓதும் மைந்தன் :- ( உலக நன்மைக்காக நம் குருநாதர் நவகிரக தீபம் ஏற்றச்
சொல்லியும், பலர் அதனை ஏற்றவில்லை. அது குறித்த நல் விளக்கங்கள்
அளித்தார்கள் இங்கு.)
அடியவர் :- (குழந்தை பாக்கியம்)
குருநாதர் :- அப்பனே நிச்சயம் உண்டு.
(பொது வாக்கு ஆரம்பம் ஆனது)
குருநாதர்
:- அப்பனே, அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். வாக்குகள் உண்டு
அனைவருக்குமே. இப்பொழுது நிச்சயம் ஏதோ ஒரு (சுய) நன்மைக்காகவே
கேட்டுக்கொண்டே. இதனால் வாழ்க்கை பற்றி அனைத்தும் யான் சொல்வேன்.
பொறுத்திருந்தால், அதாவது உங்களுக்கு சில தீர்வுகளை ஏற்படுத்த நிச்சயம்
வாக்குகளாக
ஈய்ந்துவிட்டேன். ( உலக நன்மைக்காக நவகிரக தீபம், நவகிரக தீபம் ஏற்ற
பிறரைத் தூண்டுதல், சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை செய்தல்) இதை அதாவது
சரியாகவே செய்திட்டு வந்தால், உங்கள் வாழ்க்கை பற்றி யான் சொல்வேன்.
உங்கள் குறைகள் அனைத்தும் யானே நீக்குவேன். ஆனால் அனைத்தும் முன்பே
தெரிவித்து விட்டேன். மீண்டும் (சுயநலக் கேள்விகள்) அதைத்தான்
கேட்டுக்கொண்டிருக்க, யான் என்ற சொல்ல????
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா (எடுத்து) சொல்லுங்க.
குருநாதர்
வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் மதுரை அடியவர் :- ( அழகாக அனைத்து
வாக்குகளை சுருக்மாக எடுத்து உரைத்தார் அங்குள்ள அனைவருக்கும். சுயநலமாக
கேட்க வேண்டாம் என்று உரைத்தார்)
(இப்போது
அகத்திய மாமுனிவர் அளித்த 2023ஆம் ஆண்டு மதுரை சத்சங்க வாக்கு புத்தகம்
அனைவருக்கும் ஒரு அடியவர் முற்றிலும் இலவசமாக , உயர் சேவை நோக்கில்
அச்சிட்டு, 100 புத்தகங்கள் எடுத்து வந்திருந்தார். அதனை அனைவருக்கும்
அளிக்க ஆரம்பித்தார் அங்கு. நம் குருநாதர் ஆசியால் இவ் வாக்குகளை முதல்
முதலில் புத்தக வடிவில் அருமையாக வெளியிட்டுள்ளார் அவ் அடியவர். அந்த
புத்தகத்தில் நம் குருநாதர் பெயர் தவிர எந்த ஒரு பெயரும் இடம் பெறவில்லை -
பதிப்பகத்தார் பெயர் உள்பட என்று அடியவர்கள் அறியத் தருகின்றோம். தன்னை
மறைத்து செய்யும் சேவைகளே உயர் புண்ணியம் பெற்றுத்தரும்)
குருநாதர்
:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவருக்குமே ஒன்றைத் தெரிவிக்கின்றேன்
அப்பனே. இக்கலியுகத்தில் நிம்மதியாக வாழ முடியாத காலம் அப்பா. அப்பனே பின்
சண்டையும் , சச்சரவுகளும், நோய்களும் அப்பனே பெருக்கெடுத்து வரும் அப்பா.
அவை மட்டும் இல்லாமல் மனக்குழப்பங்கள். அப்பனே இதனால் மனிதன் தன்னைத்தானே
அழித்து , இல்லத்திலே பல சண்டைகள் அப்பனே. இதனால் நிம்மதி , உறக்கங்கள்
இவையெல்லாம் தொலையும் அப்பா. ஏனென்றால் வருங்காலங்கள் 5, 6 அல்லது 7
மாதங்கள் அப்பனே பெருத்த அழிவுகள் பலமாக இருக்கின்றதப்பா. அதனால்
அனைவரையுமே யாங்கள் காத்திட வேண்டும். அதனால்தான் உங்களுக்குச் சொன்னேன்
அப்பனே. (யான் உரைத்த நவகிரக தீபம், சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனைகள்
அனைத்தும் ) பொது நலமாக அப்பனே நீங்கள் செய்தால் , உங்களை நீங்களே
சரிகட்டிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. நிச்சயம் செய்வீர்களாக அப்பா.
___________________
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :-
Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
—————————————-
(
நம் குருநாதர், அகத்திய மாமுனிவர் அருளால் 22,23 June 2025 ஆம் ஆண்டு ,
மதுரை மாநகரில், சுவடி ஓதும் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில்
உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்... )
No comments:
Post a Comment