சர்வம் சிவார்ப்பணம்...
30/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்.
முன்பே அறுபடைவீடுகள் உண்டு என்பேன் அறுபடைவீடுகள் எதற்காக
வணங்குகின்றான் என்பதை கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்
மனிதர்கள்.
எதனையும் என்று கூற பின் அறுபடை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்
அறுபடை வீடுகளும் தரிசித்து இரு மண்டலம் பின் அவந்தனக்கும்(முருகன்) அங்கே
கந்த சஷ்டிக் கவசத்தையும் இன்னும் பல அருணகிரிநாதர் எழுதிய பல
புத்தகங்களையும் பின் எவ்வாறு திருவாசகத்தையும் பின் ஒவ்வொரு தலத்திலும்
நல முறையாக இரு மண்டலம் ஜெபித்து பின் இதனையுமன்றி கூறி பின் ஒவ்வொரு
தலமாக அறுபடை வீடுகளை தரிசித்து பின் வந்தால் அவந்தனக்கு ஏழாவது என்னும்
அறிவு பிறந்து விடும்.
ஏழாவது அறிவு தான் அதைத்தான் சூட்சுமமாக வைத்துக் கொண்டுள்ளேன் .
அதனையும் பிற்பகுதிகளில் பிற் ஆசிகளில் உரைத்து விடுகின்றேன்.
எதனை என்றும் அதனை கூட உணராத மனிதன் அங்கு சென்றால் அவை நடக்கும் இவைதன் நடக்கும் .
இங்கு
சென்றால் அவைதன் நடக்கும் இவ்வாறு கிரகங்களால் ஏற்படும் .இதனையும் என்று
கூற பொய் கூறி புறம் கூறி கொண்டிருக்கிறார்கள் அறியாத முட்டாள் மனிதர்கள்.
எதனையும்
என்றும் வீணே!! என்பதைக்கூட இதனையும் கூட இவ் ஆறுபடை வீடுகளையும்
கடந்துவிட்டால் ஏழாவது படை வீடு ஒன்று உண்டு அதனையும் சிந்தியுங்கள்.
அதனையும் யானே சொல்லிவிட்டால் எவை எவை என்று கூட நீங்களும் அலைவீர்கள் என்பேன்.
எதனையும் என்று கூற அவ் ஏழாவது தலம் தான் அறிவு பின் அனைத்தும் முருகன் உங்களிடத்திலே கொடுத்துவிடுவான் வாழ்வதற்குத் தகுதியானவைகள்.
ஆனாலும் இதனையும் ஏராளமான அரசர்களும் பல புலவர்களும் இதனை நன்கு உணர்ந்திருந்து பல வெற்றிகளைக் கண்டார்கள் என்பேன்.
ஆனாலும்
இப்பொழுது இருக்கும் மனிதர்கள் அவைத் முட்டாளாகவே நிராகரித்து எதற்காக
வந்தோம் எதற்காக வணங்கினோம் என்பதைக்கூட தெரியாமல் இறைவனை வணங்கிட்டு
வணங்கிட்டு சென்று கொண்டிருக்கின்றான் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை .
இறைவன்
எங்கு அமர்ந்து எப்படி? எல்லாம் இருப்பான்? என்பதை கூட ஆனாலும் ஒரு சில
தலங்களுக்கு வரும் பொழுது யான் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன்.
பக்தியோடு
சிரத்தைதோடு அனைவருக்கும் நல் உதவியை செய்து பல அன்னதானங்கள் இட்டு பல
அன்னதானங்கள் இட்டு அன்னை தந்தையரை மதித்து சேவைகள் செய்து வந்து
திருத்தலம் வந்தால் கூட இறைவன் நிச்சயமாய் நிற்ப்பான் என்பேன்.
அங்கே ஆசிகள் தருவான் என்பேன்
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று
வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக :-
சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! -
https://tut-
No comments:
Post a Comment