"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 12, 2025

நவகிரக தீபம் குறித்து அகத்திய மாமஹரிஷி அருளிய வாக்கு

                                                          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


























இது குறித்த குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய வாக்குகள்

  1. இப்படியே அனுதினமும் செய்ய வேண்டும்.
  2. இதெல்லாம் உங்கள் அனைவருக்கும் யான் வைக்கும் தேர்வு!!!
  3. இதை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும்.
  4. அப்பனே அம்மையே இதனை நிச்சயம் செய்து கொண்டே வாருங்கள் தை! மாசி! மாதங்கள் வரை!!!(இந்த மாதத்தில் இருந்து தொடங்கி அதாவது ஐப்பசி நடந்து கொண்டிருக்கின்றது கார்த்திகை மார்கழி தை மாசி மாதம் வரை ஆங்கில மாதம் மார்ச் வரை செய்து வர வேண்டும்)
  5. அப்பனே நிச்சயம் அப்பனே ஒவ்வொரு நாளுக்கும் இதே போல தினமும் செய்து வர வேண்டும்!!!
  6. இதனால் என்ன பலன்? என்று கேட்கக் கூடாது
  7. நவகிரகத்திற்கு என ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறத்தில் துணிகள் இருக்கின்றது அதை பயன்படுத்தலாமா என்று குருநாதரிடம் கேட்டதற்கு - பட்டுத்துணியை மஞ்சளில் நனைத்து பயன்படுத்துங்கள் கிரகங்கள் சம்பந்தப்பட்ட நிறத்துணியை உங்கள் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குருநாதர் கூறினார்
  8. அதேபோல் ஏற்றும் விளக்கில் இரட்டை திரியை ஒன்றாக திரித்து இணைத்து ஒரே தீபமாக ஏற்ற வேண்டும்.
  9. இதற்கு மண் அகல் விளக்கை தான் பயன்படுத்த வேண்டும் என்று குருநாதர் கூறினார்.
  10. எந்த நேரத்தில் விளக்கை ஏற்ற வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு... சித்தர்களுக்கு நாள் ஏது? கோள் ஏது? இரவு ஏது? பகல் ஏது? எங்களுக்கு அனைத்தும் ஒன்றுதான் அன்பிற்காக நினைத்து நீங்கள் செய்யுங்கள் என்று குருநாதர் கூறினார். அதனால் காலை அல்லது மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கை ஏற்றி இந்த வழிபாடு செய்யலாம்.
  11. பெண்கள் எல்லா நாளும் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கின்றது என்று கேட்டதற்கு - வீட்டில் உள்ள யாராவது ஒருவரை அந்த நாட்களில் விளக்கேற்ற சொல்லுங்கள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்.
  12. தானியங்களை அனுதினமும் மாற்றி விட வேண்டுமா என்று கேட்டதற்கு - இதுவும் உங்கள் இஷ்டமே என்று குருநாதர் கூறினார்.
  13. ஒன்பது நவகிரகங்களுக்கும் 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று சொன்னால் கிட்டத்தட்ட 972 முறை காயத்ரி மந்திர உச்சாடனம் செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு - நிச்சயம் இப்படியே செய்ய வேண்டும் என்று குருநாதர் கூறினார்.
  14. அப்பனே அம்மையே இதனைப் பற்றி உங்களுக்கு போக போக புரியும் ஆனால் பின் அதாவது இதன் மூலம் பலன்களை எதிர்பார்க்கக் கூடாது.
  15. இந்த நேரத்தில் வேறு எந்த ஞாபகம் இருக்கக் கூடாது அதாவது விளக்கை ஏற்றி காயத்ரி மந்திரத்தை செப்பும் பொழுது வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.
  16. இதெல்லாம் எதற்கு என்பதையெல்லாம் யான் வருங்காலத்தில் விவரிப்பேன்
  17. மீண்டும் மீண்டும் பின் நிச்சயம் இதற்கான பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது.
  18. அப்பனே அம்மையே போகப்போக புரிந்து கொள்ளுவீர்கள் நீங்களே இதனை பற்றி.
  19. அம்மையே அப்பன்களே இதை யாரும் பரிகாரமாக எண்ண கூடாது. தேர்வு என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
  20. இது ஏன் எதற்கு என்பதை ஒரு சதவீதத்தை மட்டும் யான் சொல்கின்றேன் - யான் உங்கள் இல்லத்திற்கு வருவேன்!!!
  21. ஏன் எதற்கு என்ற இரண்டாவது சதவீதத்தையும் யான் சொல்கின்றேன். - நிச்சயம் பின் நீங்கள் சோம்பேறிகளா இல்லையா என்று யான் பார்ப்பேன்!!
  22. அறிந்தும் கூட அப்பனே 100 சதவீதத்தையும் இதனைப் பற்றி சொல்லி விடுகின்றேன்- அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட ஒரு ஆசிரியன் தன் மாணவரிடம் ஒன்றை செய்து வரச் சொன்னால் அதை செய்து விட்டு வந்தால் அந்த ஆசிரியன் சந்தோஷப்படுவான்.
  23. ஏன் எதற்கு என்று மூன்றாவது சதவீதத்தையும் சொல்லி விடுகின்றேன் - நிச்சயம் கிரகங்கள் தன் சுற்று வட்டப்பாதையில் இருந்து மாறப்போகின்றது... இதனால் பல மக்களுக்கும் கூட தொல்லைகள் வரப் போகின்றது. பின் நிச்சயம் அதாவது வளிமண்டலத்தில் பின் நேர்கோட்டில் தான் கிரகங்கள் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் அனைத்தும் நன்றாக நடக்கும். ஆனால் அதிலிருந்து கிரகங்கள் நேர்பாதையிலிருந்து பிரியப் போகின்றது..
  24. ஆனாலும் இதனால் என்ன பயன்? என்று நீங்கள் கேட்கக் கூடாது!!பின் உரைப்பேன் இதனைப் பற்றி!!!
  25. அறிந்தும் கூட இது உங்களுக்காக மட்டுமல்ல. சூரியனின் ஈர்க்கும் சக்தி நிச்சயம் இத் தீபத்திற்கும் பல பல சக்திகளும் உண்டு. ஆனால் யாரும் இதை அறிவதே இல்லை... தீபத்தை யாரும் ஏதோ ஏற்றுகின்றோம் என்று சாதாரணமாக நினைத்து ஏற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
  26. தீபத்தை நல் முறையாக எதைப் பற்றியும் நினைக்காமல் ஏற்றுங்கள்.
  27. இதனால் உங்களுக்கும் புண்ணியங்கள்.
  28. இன்னும் இன்னும் நிச்சயம் அம்மையே அப்பனே நிச்சயம் பின் அதாவது இவ்வுலகத்தையே யாங்கள் காக்க வேண்டும்.
  29. ஆனாலும் இன்னும் நிச்சயம் எங்களுக்கு வாக்குகள் இல்லையே பின் எதை என்று புரிய புரிய ஆனாலும் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு மட்டும் வாக்குகள் இல்லை. அங்கு மட்டும் வாக்குகள் படிக்கின்றார்கள் என்றெல்லாம். பின் ஏன் எதற்கு என்றால் அத்தகுதிகள் அவர்களிடத்தில் இல்லை!!... செய்யவும் மாட்டார்கள்.
  30. அறிந்தும் கூட நிச்சயம் பின் இதை பின்பற்றுவார்கள் நிச்சயம் யானே பின்பற்ற வைக்கின்றேன் பல மக்களை.
  31. அம்மையே அப்பனே நிச்சயம் முன்னோர்கள் எல்லாம் நிச்சயம் பின் இப்படி எல்லாம் தீபத்தில் பின் எவை என்று எரிய விட்டு நன்றாக வாழ்ந்தார்கள்.
  32. ஆனால் இன்று மின்சாரம் வந்தது!! இப்போது என்ன வாழ்ந்தார்கள் ? மின்சார விளக்குகள் எரியும் அல்லவா அதில் கூட நிச்சயம் வேதியல் தன்மை இருக்கின்றது.. அதுவும் கூட நிச்சயம் மனிதனின் யோகத்தை நிச்சயம் ஈர்த்துக் கொள்கின்றது.
  33. ஆனால் விளக்கு தீபம் இருக்கின்றதல்லவா அது மனிதனின் யோகத்தை ஈர்த்துக் கொள்வதில்லை.மாறாக தீபம் சக்திகளை ஈர்த்து மனிதர்களுக்கு யோகத்தை கொடுக்கும். இதனால் தான் அறிந்தும் கூட இறைவனும் தெரியாமல் இருக்கின்றான் மின்சாரமும் தெரியாமல் இருக்கின்றது.
  34. இதனால் தான் அப்பனே என் பக்தர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றே உங்களை அழைத்தேன் யான்.
  35. அம்மையே அப்பனே எதை என்று அறிய அறிய என் வாக்குகளை கேட்டாலே நிச்சயம் பின் பாவங்கள் போகும் பறந்து என்று வாக்குகள் கூறியிருக்கின்றார் அனைவரும் கடைப்பிடித்து வர வேண்டும்
  36. இதெல்லாம் உங்கள் அனைவருக்கும் யான் வைக்கும் தேர்வு!!
  37. இதை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும்.
  38. அப்பனே அம்மையே இதனை நிச்சயம் செய்து கொண்டே வாருங்கள் தை! மாசி! மாதங்கள் வரை!!!(இந்த மாதத்தில் இருந்து தொடங்கி அதாவது ஐப்பசி நடந்து கொண்டிருக்கின்றது கார்த்திகை மார்கழி தை மாசி மாதம் வரை ஆங்கில மாதம் மார்ச் வரை செய்து வர வேண்டும்)

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அன்புடன் அகத்திய மாமுனிவர் - நவகிரக தீபம் எப்படி ஏற்றுவது ? என்ற விளக்க பதிவு - https://tut-temples.blogspot.com/2025/09/blog-post.html

அன்புடன் அகத்திய மாமுனிவர் - பெங்களூரு சத்சங்க உத்தரவு! - நவகிரக தீபம் - https://tut-temples.blogspot.com/2024/12/blog-post_24.html

சித்தன் அருள் - 1726 - பெங்களூரு சத்சங்க உத்தரவு! - நவகிரக தீபம் எப்படி ஏற்றுவது ? என்ற விளக்க பதிவு - https://tut-temples.blogspot.com/2024/12/1726.html

 அன்புடன் அகத்தியர் மாமுனிவர் அனைவருக்கும் வைக்கும் தேர்வு - https://tut-temples.blogspot.com/2024/11/blog-post_26.html

 சித்தன் அருள் - 1726 - அன்புடன் அகத்தியர் - பெங்களூரு சத்சங்க உத்தரவு!  - https://tut-temples.blogspot.com/2024/11/1726.html


No comments:

Post a Comment