இவ்வாறு தான் அப்பனே அவை மட்டுமில்லாமல் சில தோஷங்கள் பின் ராகு கேது
எவை என்று அறிய அறிய பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட...
ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் கூட தானாகவே இங்கு விலகிப் போகுமப்பா.
இன்னும் அப்பனே பின் வரிசையாகவே அப்பனே அதாவது அப்பனே.. ஒன்றிலிருந்து ஆரம்பமாகி முடிக்க வேண்டும் அப்பனே.. அது மட்டுமில்லாமல்
அதாவது... கதிர் காமத்தில் இருந்து இங்கு...
அப்பனே இங்கிருந்து கதிர்காமம்... மீண்டும் அப்பனே சென்றடைய வேண்டும்!!!
(மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தரிசனம் முடித்து கதிர்காமம் தரிசனம்
மீண்டும் கதிர்காமத்தில் இருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி தரிசனம்)
இதே போலத்தான் அப்பனே அறுபடை வீடுகளையும்... செந்தூரில் தொடங்கி அப்பனே பின் எவை என்று அறிய அறிய திருத்தணிகையில் முடிக்க வேண்டும்.
இல்லையென்றால் எதை என்று கூற இப்படியும் முடிக்க வேண்டும்.. அப்பனே மாற்றலாம் அப்பனே!!!
அதாவது திருத்தணிகையில் இருந்து தொடங்கி அப்பனே.. திருச்செந்தூரில் முடித்திடலாம்!!
அப்பனே
நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!! ஆனாலும் அங்கு முடித்து அப்பனே எதை என்று
புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் அதாவது கடல் நீரை அப்பனே
இல்லத்தில் வைத்து அப்பனே பின் முருகனாகவே பாவித்து பூஜைகள் செய்யலாம்!!
(திருத்தணி
மலையில் இருந்து அறுபடை வீடுகள் பயணம் மேற்கொண்டு திருச்செந்தூரில்
முடித்து திருச்செந்தூரில் இருந்து கடல் நீரை கொண்டு வந்து அதை ஒரு கலசம்
அல்லது கும்பம் போன்ற குடத்தில் ஊற்றி வைத்து அதை முருகனாக நினைத்து
பூஜைகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்)
அதேபோல்
பக்தர்கள் திருச்செந்தூரில் இருந்து யாத்திரையை தொடங்கினால் அறுபடை வீடுகளை
தரிசனம் செய்துவிட்டு திருத்தணிகை மலைக்கு வந்து கோயிலுக்கு செல்லும்
வழியில் கிடைக்கும் அல்லது சுத்தமான பசும் சாண விபூதியை வாங்கி முருகனுக்கு
அபிஷேகம் செய்துவிட்டு அல்லது சமர்ப்பணம் செய்துவிட்டு அதை கொண்டு ஒரு
கலசத்தில் அல்லது ஒரு குடுவையில் பூஜை அறையில் வைத்து முருகனாக பாவித்து
பூஜைகள் செய்து வர வேண்டும்.
மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக தொடங்கலாம் இரண்டும் சமமே என்று குருநாதர் கூறியிருக்கின்றார்.
வட
தமிழ்நாட்டில் வசிக்கும் பக்தர்கள் திருத்தணிகை மலையில் இருந்து
தொடங்கலாம் தென் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் திருச்செந்தூரில் இருந்து
தொடங்கலாம் இது அவரவர் இஷ்டமே)
அதேபோலத்தான்
அப்பனே திருத்தணிகையில் நிச்சயம் தன்னில் முடித்தால்... அங்கு அப்பனே எதை
என்று அறிய அறிய அப்பனே.. வழிகளில் கூட விபூதிகள்.
அப்பனே
பின் அதாவது விபூதிகளை முருகனுக்கு பின் சமர்ப்பித்து.. அப்பனே பின் அவ்
விபூதியை முருகனாகவே பாவித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட வழிபட்டாலே
போதுமானதப்பா!!!
சில சில தரித்திரங்கள் நீங்கும் அப்பனே!!
இன்னும் அப்பனே பல பல உண்மைகள் விசித்திரமான உண்மைகளை எல்லாம் நிச்சயம் சித்தர்கள் சொல்வார்களப்பா!!!
அதை
ஏற்றுக்கொண்டு நடந்தாலே போதுமானதப்பா.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே
கஷ்டங்கள் வராதப்பா அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... இறைவனே
இப்புவி தன்னில்..!!!!!
இறைவன். விளையாடிய பூமி.. எதை என்று அறிய அறிய அப்பனே இப் பூமியை அவனே பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே.
No comments:
Post a Comment