சர்வம் சிவார்ப்பணம்...

கேள்வி: அறுபடை வீட்டை எப்படி தரிசிக்க வேண்டும்?
குருநாதர்:
"அப்பனே! எதை என்று அறிந்து, அறிந்து. இதன் விளக்கம் யான் முன்பே
உரைத்துவிட்டேன், அப்பனே. ஆனாலும் இப்பொழுது தேவை இல்லை என்பேன் அப்பனே!
யான் முருகனிடம் கேட்டிட்டு, வந்து உரைக்கின்றேன், அல்லது முருகனே வந்து
உரைப்பான்.
கேள்வி: "முருகரை வழிபாடு செய்கிற முறையை பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?"
குருநாதர்: "அப்பனே! முருகா என்று அழைத்தால், அவன்தானே சொல்லிக் கொடுப்பான், அப்பனே!.
கேள்வி: உத்தரகோசமங்கை தலத்தின் சிறிதளவுக்கான புராணம் உரைக்க முடியுமா?
குருநாதர்:
"அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! எவற்றின் தன்மைகளை புரிந்து!
புரிந்து! அப்பனே! யான் என்ன செப்புவது? ஆனாலும், ஓர் மங்கை, எதை என்று
அறிந்து அறிந்து, அதாவது, அத்தலத்தில் இருந்து, எது என்று அறியாமலே, பல
மனிதர்களுக்கு உதவிகள், பல தான தர்மங்கள் (செய்து வந்தாள்). ஆனாலும், பல
வழிகளிலும் இன்னல்கள். ஆனாலும், ஈசனை நோக்கி நோக்கியே. ஆனாலும், அங்கே
உருவெடுத்தான் அப்பனே! ஈசனே! ஈசனும் உருவெடுத்து, கூடவே பார்வதி தேவியும்
வந்திட, ஈசனின் சொத்துக்கள் ஆபரணங்கள், பொக்கிஷங்கள் எல்லாம் அங்கே தான்
கிடக்கின்றது அப்பனே! இதை நீ புரிந்து கொள்வாயா? சிறிதளவே சொன்னேன்.
இன்னும் ஏராளமாக சொல்லிவிட்டால், மனிதனே திருத்தலத்தையும் அழித்து
விடுவான்.
"சரி! இதுவே போதும் அய்யா!"
கேள்வி:"சிவபுராண சூட்ச்சுமத்தை விளக்க முடியுமா?
குருநாதர்:
"அப்பனே! எது என்று அறிய! அப்பனே! அதாவது, நாயைவிட யான் கேவலமானவன், என்று
ஒருவன் எப்பொழுது நினைக்கிறானோ, அவந்தனுக்கு முக்தி.
அடியேன்:
"உங்கள் பதில் மிக சரியாகத்தான் உள்ளது. இந்த கேள்வியை அடியேனிடம்
கேட்டவர், எப்பொழுதும் நாய்க்கும் அடியேன்! என்றுதான் கூறுவார்!"
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று
வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக :-
சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! -
https://tut-
No comments:
Post a Comment