"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 20, 2025

சித்தன் அருள் - 1920 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் வாக்கு!

                                                     இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. 

அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும்  மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார் இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! செய்ய குருநாதர் அகத்தியர் பெருமான் உத்தரவு தந்துள்ளார். இதன் பொருட்டு 27.07.2025 அன்று நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் மாபெரும் சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது .  

27.07.2025  அன்று குருநாதர் அகத்தியர் பெருமான், இடைக்காடர் ,  போக மகரிஷி ,  முருகப் பெருமானை என அனைவரும் ஜீவநாடியில் வாக்குரைத்து நம்மை வழிநடத்தினார்கள். இவ்வாறாக அன்றைய தினம் திரு . ஜானகி ராமன் ஐயா அவர்கள் ஆறு முறை சுவடி படித்து நமக்கு இறைஆசி வழங்கினார்கள் .  அன்றைய பாபநாச வாக்கினில் கூட்டுப்பிரார்தனை பற்றிய  வாக்கினை இங்கே நாம் உணர உள்ளோம் . 
















அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு -  கூட்டுப் பிரார்த்தனை ரகசியங்கள்  ( 27 July 2025 )

வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மருதுபாண்டியர் மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

( இவ் தொடர் வாக்கு பல வாக்குகள் அடங்கியது. அதன் ஒரு பகுதி வாக்கு

1. சித்தன் அருள் - 1912 ) 


அகிலமெல்லாம் ஆளக்கூடிய இறைவா போற்றியே!! போற்றியே!! பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா. 

ஏன்? எதற்காக அப்பனே இவ் கூட்டுப் பிரார்த்தனையைச் செய்யச் சொன்னேன் என்றால் அப்பனே நிச்சயம் ஒருவர் கேட்பது வேறு. அப்பனே பல பேர் கூடிக் கேட்பது வேறப்பா. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல பேர் கேட்டுப் பெற்றால் வரங்கள் , அப்பனே அழியாதப்பா. 

இதனால் அப்பனே ஒருவர் கேட்டால் அப்பனே வரங்கள் (இறைவன்) பின் கொடுத்துவிடுவான். ஆனாலும் இப்படியே பின் கொடுத்துக் கொடுத்து ஈசனும் ஏமாந்தானப்பா!!!

இதனால் அப்பனே ஒருவர் கேட்டால், மன்றாடினால் கொடுக்க மாட்டானப்பா ஈசன். 

“””””இதனால் அப்பனே அனைவரும் சேர்ந்து பின் கேட்டால்,  தொலையட்டும் என்று வரங்கள் கொடுத்து விடுவானப்பா. “””””

இன்னும் அப்பனே நிச்சயம் தீமைக்கு மக்கள்தான் காரணம் என்பேன் அப்பனே. அதனால்தான் உங்களை வைத்தே உங்கள் கர்மாக்களை நீங்களே நீக்குங்கள் என்று இவ் கூட்டுப் பிரார்த்தனை வரச்சொன்னோம் அப்பனே. 

இறைவன் அழகாகப் புண்ணியத்தை அப்பனே புகுத்தி , புகுத்தி அனுப்புகின்றான் அப்பனே. ஆனாலும் அப்புண்ணியத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, நிச்சயம் நாடி நாடி எங்கெல்லாம் சென்று வந்தாலும் அப்பனே ஒன்றும் (நடக்கப்போவது இல்லை). அப்பனே மீண்டும் பின் கவலைதான். துன்பம்தான் தொற்றுக் கொண்டு, தொற்றுக் கொண்டு. நோய்கள்தான் தொற்றுக் கொண்டு, தொற்றுக் கொண்டு. 

அப்பனே இவ்வாறாகவே இருந்தால் அப்பனே, வயதும் ஆகி, அப்பனே இறந்து, மீண்டும் வந்து, அப்பனே அவ்வவாறுத்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே. அப்புண்ணியத்தை எப்படி நீங்கள் நிச்சயம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லையப்பா. 

இதனால் நிச்சயம் அப்பனே ஒருவன் சொன்னால் கேட்க மாட்டான் அப்பனே. 

****இதனால்தான் அப்பனே நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை மூலம் அனைவரும் ஒன்றாக இருந்தால் பாவம் ஒழிந்துவிடும் என்பேன் அப்பனே.****

இதனால் அனைத்திற்கும் காரணம் நீங்களே என்பேன் அப்பனே. இதனால்தான் உங்களை வைத்தே அதாவது பாவப்பட்ட ஜென்மங்களப்பா !!!!!!

அவ்பாவத்தை எப்படிப் போக்குவது????

அப்பனே யாங்கள் வழிகாட்டுவோம் அப்பனே. ஏனென்றால் பாவத்தை நிச்சயம் பின் பாவத்தினால் பல வழிகளிலும் கூட துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் இவ்ஆன்மா  நிச்சயம் தன்னில் கூட அதாவது ஈசனுடைய கட்டளை. 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அவ்பாவத்தை அனுபவித்தே தீரவேண்டும். எங்கு சென்றாலும் பின் ஒன்றும் அவ்பாவத்தைக் கழிக்க முடியாது நிச்சயம். ஆனாலும் நிச்சயம் எப்படிக் கழிக்க முடியும் என்பதையெல்லாம் சித்தர்கள் யாங்கள் அறிவோம். இதனால் அப்பனே பின் ஈசனே ஆயினும் சில அனுபவங்கள் தேவை என்பதை எல்லாம் உணர்ந்து , 

“””””அப்பனே இதனால்தான் அப்பனே (சித்தர்கள் யாங்கள்) நிச்சயம் ஒரு முடிவு எடுத்தோம் நிச்சயம் அப்பனே.”””””

இதனால் எங்கு சென்றாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. எவ்வளவு மந்திரங்கள் ஜெபித்தாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. அங்கும் இங்கும் அலைந்தாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. ஆனால் சாவை நிச்சயம் பின் யாரும் தடுக்க முடியாது. 

** ஆனாலும் அப்பனே பாவத்தைத் தடுத்து விட்டால் நிச்சயம் பலவகையான நன்மைகள் பெறமுடியும் அப்பா கலியுகத்தில் அப்பனே.  **

இதனால் அப்பனே நிச்சயம் ஒரு பழமொழியும் உண்டு. அதாவது ,  

*தான் என்ன நிலைமையில் இருக்கின்றோமோ அதற்கு நிச்சயம் தான் தான் காரணம் *** என்று. 

இதனால் அப்பனே பாவத்தோடுதான் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  

அப்பனே ஒருவொருவருக்குச் சக்திகள் அதிகமாக இருக்கும் அப்பா.  ஒருவருக்குச் சக்திகள் குறைவாக இருக்கும் அப்பா. இவை ஒன்று அனைவரையும் சேர்த்தால்,  அதிகம் உள்ளவர்களிடம் இருந்து அவ்சக்தி வருகின்ற பொழுது, குறைவாக இருக்கின்ற சக்தியைக் கூட அவை தாக்குகின்ற பொழுது , அப்பனே சம அளவு பெரும் அப்பா. ஆனாலும் அப்பனே (சக்தி) அதிக அளவு இருப்பவர்கள் உடனே குறைகின்ற பொழுது மீண்டும் அவ்சக்தி தெளிவடைந்துவுடும். அதிகமாகிவிடும். குறைந்து விடாது என்பேன் அப்பனே. இல்லாதவருக்கு அது நிச்சயம் அப்படியே சமமாகப் பங்கிடப்படும் என்பேன் அப்பனே.

 இப்பொழுதுதான் அப்பனே, இப்படி இருந்தால் மட்டுமே (கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும்) பாவத்தைத் தொலைக்க முடியும் என்பேன் அப்பனே. 


———————————-
(வணக்கம் அடியவர்களே, கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் பாவங்கள் விலகும் இந்த சக்தி பரிமாற்றத்தால். இறைவன் அருளால் அனைவருக்குமே மிக எளிதாக பாவ விலக்கம் நிகழும் கூட்டுப் பிரார்த்தனையில். எனவே அடியவர்களே , இயன்றவரை முழு வேகத்தில் பலரையும் மிக அதிக அளவில் ஒருங்கிணைக்கவும் - ஒவ்வொரு  கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யும் பொழுது. இதுவே மாபெரும் புண்ணியச் செயல். பிறருக்குப் புரியாமல் இருந்தாலும் அவர்களை கூட்டுப் பிரார்த்தனையில் இனைத்து, இவ் வாக்குகளை எடுத்துச் சொல்லிச் செயல்பட ப‌‌‌ல நன்மைகள் உலகிற்கு உண்டாகும். மக்கள் பலரின் பாவங்கள் விலகட்டும் உங்கள் சேவையால்.) 
————————————

குருநாதர்:- அப்படி இல்லை என்றால் அப்பனே நீங்கள் அலைந்து திரிந்து, அப்பனே நிச்சயம் ஒன்று ஆகவில்லையே என்றெல்லாம். பின் நிச்சயம் அலைந்தோமே… அங்கு சென்றோமே… இங்கு சென்றோமே என்றெல்லாம் (வருத்தங்கள்) அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை செய்தால் அப்பனே, அனைவரிடத்திலும் கூட அதாவது நீங்கள் அனைவருமே கைகளில் அப்பனே பின் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள் (Mobile / அலைப்பேசி) ஒன்றை வைத்து. நிச்சயம் அதில் மின்கலம் (Mobile battery) தீர்ந்துவிட்டால் ஒன்றும் செய்ய இயலாதப்பா. மீண்டும் அப்பனே எங்கேயாவது மின்சாரம் இருக்கின்றதா என்று தேடி அப்பனே மீண்டும் வலுப்படுத்துவீர்கள் (Mobile charging) என்பேன் அப்பனே. 

அப்படித்தானப்பா….

*** கூட்டுப் பிரார்த்தனை செய்தால் மட்டுமே அப்பனே உங்கள் , நிச்சயம் சக்திகள்  கூட்டப்படும் அப்பா. ***

இல்லையென்றால் அப்பனே நிச்சயம் அங்கும் இங்கும் திரிந்தாலும் , அப்பனே ஆனாலும் அப்பனே 10, 20 சதவிகிதம் மட்டுமே நிச்சயம் ஏறும் அப்பா. மீதியெல்லாம் ஏறாதப்பா. இதனால் அப்பனே நிச்சயம் பின் 100 சதவீதம் ( 100 % battery charge ) ஏறவேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் இறைவன் எங்கிருக்கின்றான்? இறைவனை எப்படிக் காணலாம்? இறைவனை எப்படி அழைத்தால் வருவான் என்பவையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!!! அப்பனே. உங்களை நீங்கள் அறிந்து கொள்ளாவிடில் அப்பனே, உங்களைச் சுலபமாக மற்றொருவன் ஏமாற்றி, அவன் கர்மாவை எல்லாம் உந்தனுக்குக் கொடுத்து, நீங்களும் அனுபவிக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, உண்மை தெரியாமல் இறைவனை வணங்கக் கூடாது என்பேன் அப்பனே. அதே போல் அப்பனே உண்மை தெரிந்தவனும் அப்பனே இறைவனை வணங்கப் போவதில்லை. ஏன் ? எதற்கு ? நிச்சயம் இறைவனைக் கண்டுவிட்டால் , இறைவனை ஒன்றும் கேட்கப் போவதில்லை அப்பனே. 

************

“”””” இதனால் அப்பனே கூட்டுப் பிரார்த்தனைக்கு இருக்கும் நிச்சயம் சக்தி வேறு எதற்கும் இல்லை அப்பா“””””

************

“”””””””” அதனால்தான் அப்பனே வரும் காலத்தில் இன்னும் அப்பனே இவ்வாறு பிரார்த்தனைகள் பின் நிச்சயம் கூட்டிக் கொண்டே சென்றால் அப்பனே தொல்லைகள் அகலும் அப்பா.  “””””””

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இவ்வாறாக அனைவரும் ஒன்று சேர்ந்து , அப்பனே நிச்சயம் உருகி, மனம் உருகி அழைத்தால் அப்பனே பிரம்மாவும் * அடடா !!!! இப்படியா*** என்றெல்லாம் அப்பனே மனம் இறங்குவானப்பா. விதியும் அப்பனே நிச்சயம் எங்களால் எளிதாக மாற்ற முடியும் அப்பா. 

நிச்சயம் ஒருவன் அதாவது எங்களுக்கு மட்டும் நன்றாக இருக்க வேண்டும், எங்கள் பிள்ளைகள் பின்  நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினால், ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன் அப்பனே. மீண்டும் மீண்டும் இதைத்தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். 

ஆனாலும் அதுவும் நடக்கும். தொல்லைகள் ஏற்பட்டுவிடும் அப்பா. 

இதனால் அப்பனே, நிச்சயம் அனைவரும் சேர்ந்து , ஒன்றாக இனைந்து பிரார்த்தனையை செய்தால், அப்பனே பிரம்மனும் பார்பானப்பா. 

சரி. நிச்சயம் அவரவர் இவ்வாறாக ஒற்றுமையாக இருக்கின்றார்களே!!! பின் நிச்சயம் விதியை மாற்றுவோம் என்று அப்பனே. ஏன் என்றால்  கலியுகத்தில் அப்பனே ஒவ்வொருவருக்கும் சண்டைகள், சச்சரவுகள், இன்னும் ஏராளமான மனக்குழப்பங்கள் , இன்னும் அப்பனே கூறிக்கொண்டே இருக்கிறேன் அப்பனே. 

அதாவது கலியுகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் பாவம் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே.  இதனால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாது அப்பா. நிச்சயம் இதனால்தான் அப்பனே, ( இப்பொழுது பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் ) இங்கு சம அளவு (சக்திகள்) எதை என்று (நீங்கள்)  உணராமல் இருந்தாலும் , அப்பனே அதாவது சூரியன் இடத்திலிருந்து , அப்பனே அதாவது வளிமண்டலத்திலிருந்து அதற்கு மேலேயும் அப்பனே ஒரு படலம் உண்டு என்பேன் அப்பனே. அறிந்தும் கூட அவை யாருக்கும் தெரியாதப்பா. 

( இவை மனிதர்களின் விஞ்ஞான கருவிகளால் , அறிவால் என்றுமே கண்டுபிடிக்க இயலாத மண்டலங்கள்.) 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட (மனிதர்களின் விஞ்ஞான கண்களுக்குத் தெரியாத சூரியனின் கதிர்கள்) அவ்வாறாக நேரடியாக விழுகின்ற இடம் இவ்பாபநாசம்தானப்பா. 

அதனால் ஈசன் இருக்கின்றானே, அவந்தன் அங்கு இருக்கின்றானே அழகாகவே (பாபநாசர் ஆலயம்) , பின் ஏதோ ஒன்று நினைத்து விடாதீர்கள் அப்பனே. அவ்சக்தி அங்குதான் விழுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அவ்சக்தியானது வளிமண்டலத்திலிருந்தே இவ்ஆன்மா துகள்கள் பிரியும் என்பேன் அப்பனே. அதாவது நன்முறைகளாக நீங்கள் பிறக்கின்ற பொழுது நிச்சயம் அவ்வளிமண்டத்தில் உள்ள (கிரகங்களின்) துகள்கள் நிச்சயம் (மனிதர்களின்) மூளை பின் பக்கத்தில் நின்று விடும் என்பேன் அப்பனே. ஆனாலும் அவை வளர வளர , அப்பனே ஆனாலும் உடம்பும் வளரும். அவைதன் நிச்சயம் சில சில வகைகளிலும் கூட அழித்திட வேண்டும். அதாவது நிச்சயம் மீண்டும் அவைதன் வளிமண்டலத்திற்கே அனுப்பிட வேண்டும். 

அப்பனே ஈசன் இருக்கின்றானே இங்கு , அது நிச்சயம் ஒரு மணி நேரத்திற்குச் சரியாக ஓர் முறை பல கோடி வேகத்தில் , சம அளவில் திடீரென்று வரும். திடீரென்று போகும் அப்பா. 

அப்பனே அவ்வாறாக 5 மைல் தொலைவில் அவைதன் இருக்கவே , அப்பனே வளிமண்டலத்திற்கு (திரும்பி) மீண்டும் போகின்ற பொழுது , உங்களிடத்தில்  உள்ள , அதாவது மூளையின் பக்கத்தில் இருக்கின்றதே அதை மீண்டும் எடுத்துச் செல்லக் கூடும் என்பேன் அப்பனே. 

“””” இங்கு இதனால்தான் இவ்வளவு வலிமைகள் இன்னும் அப்பனே. “””””

எங்கெங்கு சில (கதிர்கள் விழுகின்றதோ) அதாவது அன்றே (அங்கெல்லாம் ஆலயம்) அமைத்தார்கள் ஞானிகள் அப்பனே. 

இவை சுற்றிப் பல வழிகளில் கூட நவகிரகங்கள்,  ஒவ்வொரு இடத்திலும்  சரியாகவே விழுந்து, மீண்டும் எழுந்து, அவ்வாறு பிரதிபலிப்பினால் நிச்சயம் பல வகை உண்டு அப்பா. 

(* பாவங்கள் நீங்கும் பாபநாச விஞ்ஞான ரகசியங்கள் *) 


இதனால் ஓடுகின்ற நதியிலே நிச்சயம் அவைதன் விழுந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. அவை விழுகின்ற பொழுது உங்கள் கண்களுக்குத் தெரியாதப்பா. பைரவர் கண்களுக்குத் தெரியும் அப்பா. அப்பனே விளக்கு போல் மிளிரும் அப்பா. அவ்வாறு அவ்விடத்தில் நிச்சயம் நீங்கள் நீராடினால் மட்டுமே பாவங்கள் தொலையும். 

ஆனாலும் அப்பனே பாவங்கள் நீங்கள் கொண்டு வரலாம் எந்நேரத்திலும் அப்பனே நிச்சயம் நீராடலாம் என்பேன் அப்பனே. ஆனால் (உங்கள் பாவங்கள்) அது நீங்காதப்பா. 

** சரியான நேரத்தில் எப்பொழுது விழுகின்றது என்பது யாங்கள் அறிவோம் அப்பா. **

அவைதன் நிச்சயம் வருங்காலத்தில்  இவ்வாறாக கூட்டுப் பிரார்த்தனையில் யாங்கள் சொல்வோம் அப்பனே. 


———————————————---------------------------------------------------------------------------
( சித்தன் அருள் - 163 - பாபநாசம்! - “இந்த இடத்தில், அவர்கள் சார்பாக, நீராடினால் 33.1/33 விழுக்காடு புண்ணியம் அவர்களுக்கு போய் சேரும்."
———————————————---------------------------------------------------------------------------


“”””” ஒவ்வொரு ரகசியம் செப்புகின்ற பொழுது நீங்களே உங்களை வெல்லலாம் என்பேன் அப்பனே. “””””

அழகாக இடைக்காடன் சென்னானே , அதைச் செய்தாலே உங்களுக்கு மாற்றம் ஏற்படும் என்பேன் அப்பனே. 

———————————————-------------------------------------------------------------------------
 (சித்தன் அருள் - 1912 - இடைக்காடர் சித்தர் அருளிய , உலகத்தில் யாரும் அறியாத,  ராகு கேது துகள்களை உங்கள் இதயத்தில் இருந்து நிரந்தரமாக அழிக்கும்  அதி ரகசிய பூசை முறை)
———————————————-------------------------------------------------------------------------

பின் எனக்கு நோய், அறிந்தும் இவ்வாறாகப் பணம் வரவில்லை, இன்னும் எதை எதையோ சண்டை சச்சரவுகள், நிச்சயம் பின்  கடனாளியாகி விட்டோமோ என்றெல்லாம் அப்பனே அனைவருக்கும் ஒவ்வொரு குறையப்பா!!!!!

** அப்பனே ஏதாவது ஒரு குறை இருந்தால்தான் இறைவனையும் நாடி வருகின்றான் மனிதன். இறைவன் குறை வைக்கவில்லை என்றால் நிச்சயம் ஒன்றும் தெரியாதப்பா. **

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. இது நரகம் என்பேன் அப்பனே. இவ்நரகத்தில் வாழ்வது மிகவும் கடினம்தான் அப்பா. அவ்வாறாக இல்லாமல் இன்னும் நிச்சயம் மனிதர்களுக்கு நல்லதையே சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே. ஏனென்றால் அனைத்தும் மாற்றும் சக்தி மனிதனிடத்தில் இருக்கின்றதப்பா. இதனால் அப்பனே யாங்களே உங்களுக்கு கொடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே நீங்கள் சோம்பேறி ஆகிவிடுவீர்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே இவ்வாறு உருவாக்கினால்,  நிச்சயம் பக்தி உள்ளவர்களைக் கூட அப்பனே மேலான பதவிகளில் யாங்கள் அமரவைத்து அனைத்தும் பக்திமயமாக்குவோம் என்போம் அப்பனே. 

ஆனாலும் நிச்சயம் அதேபோல் எனக்கு நன்றாக இருக்க வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணினால் நீங்கள் நிச்சயம் அப்படியே இருக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

(தனியாக இறை பாடல்களை ஓதும்  அனைத்து அடியார்கள் கவனத்திற்கு) 

** இதனால் நிச்சயம் பல அடியார்கள், ஈசனுடைய அடியார்கள்,  இன்னும் பல பக்தர்கள் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றார்கள் ஏன் இந்த நிலைமை என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. ****

** இப்பனே இவ் நிலை மாறவேண்டும் என்றால் ஒன்றே, கூட்டுப் பிரார்த்தனை  மட்டுமே என்பேன் அப்பனே. **

**** அப்பனே எங்கெங்கு ஒளி விழுகின்றது என்பதெல்லாம் வருங்காலத்தில் யான் எடுத்துரைக்கும் பொழுது, அங்கெல்லாம் சென்றால் அப்பனே உங்கள் பாவங்கள் தொலையும் அப்பா. பல கண்டங்கள் அப்பனே நீங்கும் அப்பா. பல தோஷங்கள் நீக்கும் அப்பா. பல நோய்கள் நீங்கும் அப்பா. ****

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். இறைவன் படைக்கும் பொழுதே நீ பாதுகாத்துக் கொள் என்று நிச்சயம் தன்னில் கூட ஒரு கருவியை வைத்திருக்கின்றானப்பா முதுகின் பின்னாலே!!!!!!. 

அப்பனே முதுகின் பின்னாலே வைத்திருக்கின்றானப்பா. அவைதன் கழுத்தை வரை ஏறவேண்டும் என்பேன் அப்பனே. அப்படி ஏறினால் மட்டுமே உங்களுக்கு அனைத்தும் தெரியும் அப்பா. அப்படி ஏறாவிடில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும் பிறந்து, திருத்தலங்களுக்குச் சென்று,  கஷ்டங்கள் பட்டுப் பட்டு, தானும் அழிந்து , தன்னைச் சார்ந்தோரையும்  (அழித்து) … ஒன்றும் லாபமில்லை அப்பனே. 

அக்கருவி உன் முதுகின் பின்னே நிச்சயம் உள்ளதப்பா. அவைதன் இயக்க வேண்டும். எப்படி இயக்குவீர்கள்? என்பேன் அப்பனே. அதாவது சொன்னேனே முன்னே, 

“””””” நலன்களாக  இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை நிச்சயம் சொல்கின்ற பொழுது, அப்பனே அனைவரிடத்திலும் ஒவ்வொரு சக்தியும் வெளிப்படும் என்பேன் அப்பனே.  “”””””””

இவ்வாறாக அவைதன் நிச்சயம் அதாவது ஒருவன் தட்டினால் அப்பனே நிச்சயம் ஒளி ஓரிடத்தில் மட்டும் போகும் என்பேன் அப்பனே. ஆனால் அனைத்தும் சேர்ந்து தட்டினால் எங்கோ சென்றுவிடும் என்பேன் அப்பனே. 

நீங்கள் அப்பனே பாடுகின்றீர்களே… அப்பனே ஏன் பாடுகின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா அப்பனே ? 

“”””” நிச்சயம் சக்திகள் வாய்தான் அப்பனே….. “””””

(உங்களிடம் இருந்து வாய் வழியாக ) வருகின்ற பொழுது அப்பனே உங்களுக்குத் தெரியாதப்பா. அவைதன் அப்பனே பிம்பத்தின் மூலம் காணலாம். அவ் பிம்பம் கூட அப்படியே கண்டுபிடித்து அப்படியே வைத்திருக்கின்றார்கள் ஓரிடத்தில். அதையும் யான் தெரிவிப்பேன் அப்பனே. 

** அவைதன் நிச்சயம் இவ்வாறு ஒளி அலைகளாக மாறுகின்ற பொழுது , நன்முறைகளாகவே நிச்சயம் பின்னே இருக்கின்றதே அவ் கருவியை இயக்கப் பயன்படுகின்றது என்பேன் அப்பனே.  ** 
இவ்வாறாக அக்கருவி சிறிது சிறிதாக மேல் எழும்பும் என்பேன் அப்பனே. இதனால் அனைத்தும் உங்களுக்கே தெரியவரும் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன். 

உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி வாழுங்கள். இப்படி இருந்தால் நல்லது நடக்கும் என்று சொல்லிவிட்டால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே. 

** அதேபோல்தான் அப்பனே, நிச்சயம் நீங்கள் எங்கள் பிள்ளைகளப்பா!!!!!   ***

** இப்படி இருந்தால் நிச்சயம் வாழ்ந்து விடுவீர்கள் என்று யாங்கள் கற்றுக் கொடுக்கின்றோம் அப்பனே.  **

ஏனென்றால் அனைத்தும் யாங்கள் செய்கின்றோம். பின் இறைவன் செய்வான் என்று நிச்சயம் நீங்கள் வந்து கொண்டே இருந்தால் பின் உங்களுக்கும் தெரியாமல் போய்விடும். உங்களுடைய வாரிசுகளுக்கும் தெரியாமல் போயிற்று , கஷ்டங்களும் பின் அள்ளி அள்ளி வருமப்பா. 

இதனால் அப்பனே கவலைகள் வேண்டாம். இன்னும் வாக்குகளில் எப்படி வாழ வேண்டும்? எப்படி இன்னும் பின் தாந்திரீகம் என்ன? பின் மாந்திரீகம் என்ன? அப்பனே உங்களிடத்திலேயே இருக்கின்றது அப்பனே!!!! அவையெல்லாம் எப்படி இயக்க வேண்டும் என்று உங்களுக்கே யாங்கள் சொல்லித்தருவோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அதே போலத்தான் அப்பனே நிச்சயம் சிறு வயதிலிருந்தே ஒழுக்கமாக எப்படி வாழ்ந்தால் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்கள் அல்லவா? 

அதே போலத்தான் அப்பனே. 

** யானும் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே. அதை யார் ஒருவன் சரியாகப் பயன்படுத்துகின்றானோ அவன் வெற்றியாளனாக இருப்பான் அப்பனே.  **

சரியாகப் பயன்படுத்தாதவன் மீண்டும் பாவத்தில் நுழைந்து பல கஷ்டங்கள் பட்டு மீண்டும் ஓடோடி வருவானப்பா. 

“”””” உலகத்தில் இறைவனைக் காண முடியாதப்பா. ஆனால் அப்பனே யான் சொல்வதைக் கேட்டால் நிச்சயம். “”””””

அப்பனே நிச்சயம் ஏன் எதற்கு உங்களை எல்லாம் பிரித்து விட்டார்கள்.  கூட்டுப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் அனைவரும் பிழைத்துக் கொள்வார்கள் என்று சரியாக எழுதப்பட்டதை எல்லாம் மாற்றி அமைத்து , இவ்வாறாக (கூட்டுப் பிரார்த்தனைகள் )  செய்யக் கூடாது என்று என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள் என்பேன் அப்பனே. அவ்வாறாக, இவர்களும் கூட  பக்தர்கள்தான் என்பேன் அப்பனே.  இவ்வாறு செய்துவிட்டார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே. 

** ஏனென்றால் பின் சித்தர்களை நம்பி நம்பி ஓடோடி வருகின்றீர்கள் நீங்கள் அப்பனே.  இதனால் அப்பனே உங்களுக்கு யாங்கள் நன்மையே செய்வோம் அப்பனே!!!! **

(கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைத்து அடியவர்களுக்கும் பின் வரும் வாக்கு மகத்தான வரப்பிரசாதம். அந்த ஒருவர் நீங்களாக இருக்கலாம்…) 

“””””” இன்னும் அப்பனே இவ்வாறாகச் செய்து கொண்டிருந்தால் அப்பனே உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து,  ஓர் உயர் பதவியில் வகித்து (அளித்து) , பின் உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை எல்லாம் அப்பனே அவன் மூலம் யாங்கள் கொடுக்க வைப்போம் அப்பனே. “”””” 

“””” இதனால் அதி விரைவிலேயே அனைத்தும் நடக்கும் அப்பா. “”””””


“””””” அப்பனே மனம் இறங்கினார்கள் பின் ஈசனும் பார்வதி தேவியும் கூட அனைவரையும் ஆசிர்வதித்தார்கள் என்பேன் அப்பனே !! “””””

இன்னும் அப்பனே அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதங்கள் உண்டு என்பேன் அப்பனே !!!!!! 

இன்னும் அப்பனே ஹோமங்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்று எல்லாம் ரிஷிகள் வந்து சொல்வார்களப்பா. அதை நீங்கள் பயன் படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது அனைத்தும் கிடைக்கும் அப்பா. 

அப்பனே ஓரே நேரத்தில் சொல்லிவிட்டால் அப்பனே மதிப்பிருக்காதப்பா. அப்பனே நீங்கள் அனைவருமே இப்பொழுது ஒன்றாம் வகுப்பில் தான் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  

இன்னும் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி  பெற வேண்டும். மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் உயர் கல்வியில் எவ்வாறு தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றும் வகுப்பிற்குச் சொல்லிக் கொடுத்தால் முடியாதப்பா. அதனால் அப்பனே தள்ளிக்கொண்டே வருகின்றேன். 

பாவத்தைத் தள்ளியே வைப்பேன் அப்பனே. 

ஆசிகள் !!!! ஆசிகள் !!!!!


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1916 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/08/1916-22-23-june-2025-6.html

கூட்டுப் பிரார்த்தனை அவசியம் ஏன்? திருவண்ணாமலையில் கூட்டு பிரார்த்தனை ஏன்? என அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post.html

சித்தன் அருள் - 1915 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2025/08/1915-22-23-june-2025-5.html

அனைவருக்கும் பகிருங்கள் - திருவண்ணாமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை! - 31.08.2025 - https://tut-temples.blogspot.com/2025/08/31082025_7.html


சித்தன் அருள் - 1382 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பீமேஷ்வரலிங்கம் திருக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/07/1382.html

அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - முழு தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2025/07/april-2024.html

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html


அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html


குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1616.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1612.html

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!! - https://tut-temples.blogspot.com/2025/03/1751_11.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - கலியுகம் துவங்கும் நேரம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1751.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1609.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/03/1751-11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html


சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment