"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 11, 2025

கூட்டுப் பிரார்த்தனை அவசியம் ஏன்? திருவண்ணாமலையில் கூட்டு பிரார்த்தனை ஏன்? என அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு

                                                   இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. 

அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும்  மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார் இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! செய்ய குருநாதர் அகத்தியர் பெருமான் உத்தரவு தந்துள்ளார், அந்த வாக்கின் சாரமாக பகுதி 5 இன்று பகிர்கின்றோம் .  ஏன் திருவண்ணாமலையில் சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது இந்தப் பதிவின் மூலம் நமக்கு தெளிவாக உணர்த்தப்படுகின்றது .  


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 5 ( சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை ரகசியங்கள் ) 

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1 
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911  - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4)

குருநாதர் :- இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே, இறைவன் கேட்டால் தருவானா? தரமாட்டானா? 

அடியவர்கள் :- கண்டிப்பாகத் தருவார் ஐயா. 

குருநாதர் :- அப்பொழுது பின் நீங்கள் கேட்டுத்தான் தரவேண்டுமா என்ன? 

அடியவர் :- கேட்கவே வேண்டியதில்லை.

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கின்றது அப்பனே. பின் அழிவு நிலைக்குத்தான் சென்று கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. பின் அவ்அழிவு நிலையிலிருந்து உங்களால் காப்பாற்ற முடியுமப்பா. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட நவகோள்களும் அதாவது புவியின் விசையும் கூட சமமாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே.  அப்படி நிச்சயம் சமமாக இல்லையென்றால் நிச்சயம் பல வேகத்தில் வந்து அதாவது கிரகங்களில் இருந்து  ஒளிகள் வேகமாக வந்து ( பூமி மீது மோதி , இடித்து ) புவியில் இடிக்கும் பொழுது பின் அழிவுகள் திடீர் திடீரென்று ( உண்டாகும் ) அப்பனே. 
பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே ராகு , புவியை நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்பேன் அப்பனே. இதனால் நிச்சயம் அழிவுகள்தாப்பா அதிகம்.  

அப்பனே அவை மட்டும் இல்லாமல் சண்டைகள் அப்பனே. அவை மட்டும் இல்லாமல் மனது தீய வழியில் செல்லும் அப்பா. 

அறிந்தும் அதை நிறுத்துவது எவ்வாறு என்று உங்களுக்குத் தெரியுமா என்ன?  நிச்சயம் தாயே தெரியாது. இதனால்தான் இவற்றுக்கெல்லாம் ஏன் எதற்கு அதாவது நரகத்தில் இருக்கின்றானே மனிதன் அவர்களை மீட்டெடுக்க யாங்கள் சித்தர்கள் வந்திருக்கின்றோம். 

அறிந்தும் ( ராகுவானவன் ) நிச்சயம் பின் நெருங்கிவிட்டால் அதாவது  ஒரு விசை அதிலிருந்து வரும். நிச்சயம் அவ்விசையானது புகை வடிவிலிருந்து , பின் அனைவரும் , அதாவது கண்களுக்குத் தெரியாது. நிச்சயம் மனிதனை நெருங்க, மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான். 

அப்பனே, அம்மையே பின் அதை யாங்கள் காக்க வேண்டுமா? பின் உங்கள் சுயநலத்திற்காக காக்க வேண்டுமா? சொல்லுங்கள்?

அடியவர்கள் :- (அனைவரும் ஒரு மித்த குரலில்) எல்லோரையும் (காப்பாற்ற வேண்டும் ஐயா). 

குருநாதர் :- அப்பனே இவ்வாறாக நீங்கள் வேண்டிக்கொண்டாலே, இவ்வாறாக மனம் வந்து விட்டாலே யான் உங்களைக் காப்பாற்றி விடுவேன் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- நாம் வாழ வேண்டும் என்ற மனது எப்போதும் வைக்காமல், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அது எனக்கு திருப்தியப்பா என்று சொல்கின்றார். 
அம்மா புரியுதுங்களா? 

அடியவர் :- அதைக் காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?

குருநாதர் :- அப்பப்பா உலகத்தில் இல்லையப்பா மனிதன். ( உலகைக் காக்கும் தகுதி மனிதர்கள் எவரிடத்திலும் இல்லை) 

அப்பனே இவ்வாறாகவே பல ஞானங்கள் உண்டு அப்பனே. இதனால் அப்பனே மனிதன் அதாவது இறைவன் அழகாக மனிதனை அனுப்பினான் என்பேன் அப்பனே உலகிற்கு. ஆனால் மனிதனாலே உலகம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டே இருக்கின்றது. 

அப்பனே தன் பிள்ளைகள் செல்லப் பிள்ளைகள், செல்லப் பிள்ளைகள் என்று இறைவன் விட்டுவிட்டானப்பா. அவ்வளவுதான். 
ஆனால் இறைவனை எதிர்த்து நிற்கின்றான் மனிதன் அவ்வளவுதான் அப்பா கலியுகத்தில். 

அப்பனே இதனால் நிச்சயம் அதாவது நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்றால், அனைவருமே நிச்சயம் ஒரு பிறப்பில் எனை சந்தித்தவர்கள்தான். 

(இவ்சத்சங்கத்தில் கலந்து கொண்ட அனைவரும், முற்பிறப்பில் சித்தர்கள் வழியில் தொடர்பு உள்ளவர்கள். நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவரை முற்பிறவியில் நேரில் சந்தித்தவர்கள். ) 

இதனால் அப்பனே நீ சொன்னாயே ( உலகைக் காப்பது எப்படி என்று கேட்ட அடியவர்) , இதனால்தான் அப்பனே நவ தீபத்தை, நவகிரக தீபத்தை ஏற்றச் சொன்னேன் மற்றவர்களுக்காக. 

அடியவர் :- இனி கண்டிப்பாக தொடருவேன் ஐயா. 

குருநாதர் :- அப்பனே ஆனாலும் யாரும் அதைப் பின் பற்றவில்லையப்பா. சுய நலத்திற்காக பின் பற்றினார்கள் என்பேன். அப்பொழுது மனிதனின் அழுக்குகள் எவ்வளவு நிறைந்திருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். 

அடியவர் :- Main Taskகே இதுதான். 

(நவகிரக தீப வழிபாடு என்பது தனக்காக, தன் குடும்பத்திற்காக ஏற்றாமல், பிறருக்காக பொது நலத்திற்காக ஏற்ற வேண்டும். சுயநலமாக நவகிரக தீபம் ஏற்றினால் கஷ்டத்தை அள்ளித் தந்துவிடும் என்று பொருள் கொள்க.) 

குருநாதர் :- அப்பப்பா, இன்னும் அழிவுகள்தான் அதிகம் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே நிச்சயம் பின் யாங்கள் அனைவரையுமே காக்க வேண்டும். 

நிச்சயம் தன்னில் கூட அனைவரும் நிச்சயம் சேர்ந்து நிச்சயம் சிவபுராணத்தைப் பாடுதல் வேண்டும். 

( பூமியைத் தாக்க வந்து கொண்டிருக்கும் ராகு கிரகத்தைத் தடுத்து நிறுத்த, இவ் உலகைக் காக்க நம் அன்பு குருநாதர் காட்டிய வழியில் அடியவர்கள் ஒருமித்த குரலில் கூட்டுப் பிரார்த்தனையாக முதல் முதலாக ஓங்கி ஒலித்தது சிவபுராணம் பாடல் அங்கு. இவ்ஆலயம் பல நூறு வருடங்களுக்கு முன்பு அன்னை லோபாமுத்ரா உடன் குருநாதரால் திருவாசகம் மற்றும் பல ஞான உபதேங்கள் போதிக்கப்பட்ட மகத்தான குருகுலம் என்று அடியவர்கள் அறியத் தருகின்றோம்.  அதனாலே குருநாதர் இங்கு எழுந்தருளுகின்றார். மகத்தான ஆலயம். அவ்புண்ணிய குருகுலத்தில்,  அடியவர்கள் ஒருமித்து சிவபுராணம் பாடலை மிக அழகாப் பாடி முடித்தனர். )

குருநாதர் :- அழகாகவே எதை என்றும் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே அனைவரும் நிச்சயம் பக்தர்கள் சேர்ந்து,  அனைவருமே சந்தோசம் நிரம்பி நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாகவே நிச்சயம் அனைத்தும் நடக்கும். 

தாயே!! தந்தையே!! இதன் ரகசியத்தை உணர்ந்து , இதனால் ராகுவானவனைக் கட்டுப்படுத்த ஒரே வழி நிச்சயம் ( சிவபுராணம் ) இவ்பாடலே என்பேன்.

இதைத்தன் அதாவது உடம்பில் பல துகள்கள்,  நுண்ணிய உயிர்கள் நிச்சயம் தன்னில் கூட அங்கங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனை இவ்வாறாகக் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டால் , நிச்சயம் அவைதன் வாயிலிருந்து வெளிப்பட்டு , நிச்சயம் பின் மேல் சோக்கிச் சென்று,  நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட, நல் உள்ளங்களாக அதாவது எண்ணங்கள் எப்படி இருக்கின்றதோ அவ்வாறாகவே அத்துகள்கள் நிச்சயம் தன்னில் கூட ஆடி அசைந்து (மேல் நோக்கி) நிச்சயம் செல்லும். செல்கின்ற பொழுது நிச்சயம் நேரடியாகக் கிரகங்களை பின் இவ்அலைகள் தாக்குகின்ற பொழுது, அப்படியே பின் நிச்சயம் தன்னில் கூட அதற்கு பின் சக்திகள் எவ்வளவுக்கு பலம். இவ்சக்திகள் தாக்குகின்ற பொழுது பின் சில தண்டனைகள் அதாவது சில பேரழிவுகள்  நிற்கும் ஐயா. 

நிச்சயம் அனைவரும் ஒன்றாக இப்படி இனைந்து நிச்சயம் பின் தியானங்கள் செய்தால் , அனைவரிடத்திலும் இருந்து நிச்சயம்  அதாவது மேல் நோக்கிச் செல்லும். மேல் நோக்கிச் செல்கின்ற பொழுது ( கிரகங்களிடம் இருந்து வரும்) அவ்காந்த அலைகள் கீழ் நோக்கி வருகின்ற பொழுது , அதாவது அறிந்தும் கூட இன்னும் கீழ் நோக்கி வராமல் அப்படியே இவ்சக்திகள் கூட சமமாக நிற்கின்ற பொழுது , நிச்சயம் பின் பேரழிவுகள் தவிர்க்கப்படும். 

( கூட்டுப் பிரார்த்தனை என்பது அதி உச்ச முதல் வகைப் புண்ணியங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்பவர்களுக்கு உண்டாக்கும் உன்னத,  மகத்தான , மகிமை புகழ் வழிபாடு. ஏனெனில் இங்கு உலகமே பேரழிவுகளிலிருந்து காக்கப்படுகின்றது.  ) 




திருவண்ணாமலையில் கூட்டு பிரார்த்தனை ஏன் ?

🌸 அப்பனே நல் முறையாக, நல் முறைகள் ஆகவே இவ்விடத்தில் பலப்பல புண்ணியங்கள். நல்முறைகள் ஆகவே செய்தவன் தான் அண்ணாமலையை கிரிவலம் வர முடியும் நல் முறைகளாக.

நல் முறைகள் ஆகவே அண்ணாமலை வலம் வருவது அதி சிறப்பு என்பேன் என்பேன் இதனையும் எவை எங்கு என்றும் கூறாமல் நல் முறைகளாக இறைவனை வணங்காவிடினும் நல் முறையாக வலம்வந்து வணங்கி வந்தால் பல பல சித்தர்கள் பல பல எண்ணிலடங்கா கோடி பின் ஞானிகளும் வலம் வருவார்கள் என்பேன். அப்பொழுது நல் முறைகள் ஆகவே வலம் வரும் பொழுது அவர்கள் தம் உராய்வின் போது (அருரூபமாக உரசி செல்வார்கள்)

🌸திருவண்ணாமலையே உலகத்தின் உச்ச பகுதி என்பேன் அப்பனே

🌸 நவகிரகங்கள் மண்டியிடும் இடமும் திருவண்ணாமலையே என்பேன் அப்பனே

🌸 இங்கு வருவோருக்கு ஈசன் வெகு விரைவில் கர்மாக்களை கழித்து கொண்டு இருக்கிறார்

🌸 இங்கு வரும் அன்பர்களுக்கு சித்தர்களும் ஈசனமும் அருளை வாரி வழங்கி கொண்டே இருக்கிறார்கள்

🌸நல் முறை களாகவே வலம் வந்தாலே போதும் கர்மாக்கள் தொலையும்.

🌸கர்மாக்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் புண்ணியங்கள் பெருகும் பொழுது அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

🌸 நல் முறையாக நல்லெண்ணத்தோடு மந்திரமும் ஜபத்தால் தான் அதன் பலன் பலம் பல மடங்கு ஆகும் என்பேன்.

🌸 புரிந்துகொள்ளுங்கள் நல்லெண்ணத்தோடு பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எண்ணினாலே போதுமானது. இறைவன் தனக்கு செய்வான்



அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

பாபநாசம் கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நிறைவு செய்து அடுத்து திருவண்ணாமலை என திட்டமிட்டு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியாக அடியவர்கள் தலைமை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து ஒருங்கிணைத்துக் கொண்டு வருகின்றார்கள் . அவர்களை தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம் மேலும் விபரங்கள் அறிந்து கொள்ளலாம். 

நிகழ்ச்சி நிரல். 

உலக நன்மைக்காக  கூட்டுப் பிரார்த்தனை 

நாள் - 31. 08.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - காலை 8மணி முதல் மாலை 6மணி வரை

இடம் -  ராஜா ராணி திருமண மஹால், அவலூர்பேட்டை பை பாஸ் அருகில் ,  திருவண்ணாமலை 

நோக்கம்..

உலக நன்மைக்காக அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள்
மற்றும் பொதுமக்கள் இணைந்து நவகிரக வழிபாடு மற்றும் கோளறு பதிகம் சிவபுராணம் பாடுதல்

நிகழ்ச்சி நிரல்

காலை 8 மணிக்கு குருநாதர் ஜீவநாடியில் அருளிய உறுதிமொழி பின் கூட்டுப் பிரார்த்தனையின் நோக்கம் மற்றும் பலன்கள் பற்றிய ஜீவநாடி வாக்கு சிறு விளக்கம் .

காலை 8 15 முதல் கூட்டு பிரார்த்தனை தொடக்கம்

1)அனைத்து உயர் தெய்வங்கள் பற்றிய துதி
2)விநாயகர் அகவல் உரைத்தல்
3) திருநாவுக்கரசு பெருமான் அருளிய போற்றித் திருத்தாண்டகம் உரைத்தல்
4) நவகிரக காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றையும் 108 முறை உரைத்தல்
5) கோளறு பதிகம் உரைத்தல்
6) சிவபுராணம் உரைத்தல் (காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக உரைத்தல்)
7) மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை முடிவு..

குறிப்பு.

தேனீர் காலை 10 மணி முதல் 12 மணி வரை 

மாலை 3 மணி முதல் 5 மணி வரை.

உணவு இடைவேளை மதியம் 12.30 முதல் 2.30மணி வரை

போக்குவரத்து அடியார்கள் பொறுப்பு. அனைவரும் முதல் நாள் மாலை திருவண்ணாமலைக்கு வந்து சேர வேண்டும்.

காலை 8 மணிக்கு பிரார்த்தனை ஆரம்பிப்பதால் அடியார்கள் சனிக்கிழமை மாலை வருவது மிகவும் நன்று..

வரவிரும்பும் அடியார்கள் பக்தர்கள் கூகுள் பார்ம் பூர்த்தி செய்து அனுப்பவும்..

google ஃபார்ம் லிங்க் மேலே இணைக்கப்பட்டுள்ளது

பார்ம் பூர்த்தி செய்ய கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.. 

பிரார்த்தனை கூட்டத்திற்கு தன்னார்வலத் தொண்டர்கள் வேண்டும் என்பதால் தன்னார்வல தொண்டு விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்கள் குழுவில் தன்னார்வலர்கள் சேர்க்கை பற்றி தெரிவிக்கப்படும் விருப்பம் உள்ளவர்கள் சேரலாம்..

இது ஒரு பெரும் நிகழ்வு குருநாதர் நமக்கு வைக்கும் ஒரு பரிட்சையாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே குருநாதர் வைத்த நவகிரக தீப பரிட்சையில் சரிவர அனைவரும் செய்யவில்லை குருநாதர் மீண்டும் நமக்கு தந்த வாய்ப்பு இது. 

அதனால் அனைவரும் இதில் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். 

விதிமுறைகள் 

கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒரே மனதோடு ஒற்றுமையாக இருந்து குழு தலைமை பொறுப்பாளர்கள் சொல்வதை அனுசரித்து செயல்பட வேண்டும். 

சிலர் அங்கு செல்லலாம் இந்த செல்லலாம் என்று தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்... அதெல்லாம் தங்களுடைய தனிப்பட்ட பயணத்தில் வைத்துக் கொள்ளலாம். 

நமது நோக்கம் கூட்டு பிராத்தனை அதை சரிவர செய்துவிட்டு அனைவரும் தங்களுடைய சொந்த இடத்திற்கு பாதுகாப்பாக அவரவர்கள் திரும்ப வேண்டும். 

அசைவ உணவை தவிர்த்தவர்கள் கலந்து கொள்வது நலம். 

உலகமும் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விடக்கூடாது அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற குருநாதருடைய எண்ணத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற உள்ளது. 

கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் அடியவர்கள் ஜீவகாருண்ய முறையை கடைப்பிடித்து கலந்து கொள்வது நலம்.

ஒவ்வொரு பகுதியாக வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது அந்த குழுவிலும் இணைந்து கொண்டு நிகழ்ச்சிகளை பற்றிய முன் தகவல்களை அறியலாம். 

இது குருநாதருடைய பக்தர்கள் சிவனடியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர் இழுக்கும் முயற்சி... ஆக இந்த கூட்டு பிரார்த்தனை... இந்த கூட்டுப் பிரார்த்தனையை அனைவரும் ஒருமித்த குரலில் ஒன்றாக இணைந்து செய்து உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு உலக அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு குருநாதர் நம்மிடம் சொன்னதை நாம் சரிவர செய்வோம்.

நம் அனைவரின் மனதிலும் குருநாதர் அகத்தியர் பெருமான் இருக்கின்றார். 

அவருடைய மனதில் இடம் பிடிப்பதற்கு அவர் சொன்னதை செய்வோம்
 குருநாதருடைய மனதில் இடம் பிடிப்போம்..

13/7/2025 அன்று ஒரு சிறு முயற்சியாக ஈரோடு நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் அகத்தியர் பக்தர்கள் சிறிய அளவிலான ஒன்று சேர்ந்து பதிகங்கள் பாடி கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். குருநாதரே அந்த நிகழ்ச்சியை பக்திப்பூர்வமாக வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார். 

இந்த நிகழ்வு அடியவர்களை பக்தர்களை ஒருங்கிணைக்கும் ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாகவும் பக்தி பூர்வமாகவும் மனம் வேண்டி கூட்டுப் பிரார்த்தனையாகவும் நடந்தது குருநாதருடைய பேரருளால் அடியவர்களின் முயற்சியால் நட்டாற்றீஸ்வரர் ஆலய கூட்டு பிரார்த்தனை நல் முறையில் நடந்ததால் பாபநாசத்தில் பெரிய அளவில் நடத்துவதற்கு ஒரு புதிய சக்தியை குருநாதர் கொடுத்திருக்கின்றார்.

இப்படி ஆங்காங்கு சிறிய அளவிலும் நதிக்கரையோரங்களில் கடல் ஓரங்களில் நடத்திக் கொள்ளலாம். 

ஆனால் குருநாதர் அதிகம் பேர் திரண்டு திருவண்ணாமலையில் கூட்டுப் பிரார்த்தனை செய்ய சொல்லி இருக்கின்றார்

கூட்டு பிரார்த்தனை குறித்து தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். 

மதுரை பரமசிவம் ஐயா 
9842170513

தூத்துக்குடி பிரபு ஐயா 
9965044034

கலந்து கொள்ள நினைக்கும் அகத்தியர் அடியவர்கள் சிவனடியார்கள் தொண்டர்கள் இவர்களை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். 

கூகுள் ஃபார்ம் லிங்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.ll


ஏற்கனவே whatsapp குழுவில் google பார்ம் கிடைக்கப் பெற்றவர்கள் இதில் பதிவு செய்ய வேண்டாம் ஏனென்றால் இரண்டு முறை செய்வது போல ஆகிவிடும்.

இந்த நிகழ்ச்சியை அடியவர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பில் இணைந்து கொள்ளலாம்.

நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பக்தர்கள் அனைத்து சிவனடியார்கள் அனைத்து அகத்தியர் பக்தர்கள் ஈசன் தொண்டர்கள் உழவாரப்பணி செய்யும் குழுக்கள் திருவாசகம் முற்றோதல் செய்யும் குழுக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனையை ஒற்றுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்.


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1915 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2025/08/1915-22-23-june-2025-5.html

அனைவருக்கும் பகிருங்கள் - திருவண்ணாமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை! - 31.08.2025 - https://tut-temples.blogspot.com/2025/08/31082025_7.html


சித்தன் அருள் - 1382 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பீமேஷ்வரலிங்கம் திருக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/07/1382.html

அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - முழு தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2025/07/april-2024.html

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html


அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html


குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1616.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1612.html

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!! - https://tut-temples.blogspot.com/2025/03/1751_11.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - கலியுகம் துவங்கும் நேரம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1751.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1609.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/03/1751-11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html


சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html



No comments:

Post a Comment