"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 2, 2025

அந்த நாள் இந்த வருடம் வழிபாட்டில் அனைவரும் இணைந்து சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் - 04,05,06.08.2025

 

                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆடி மாதம் என்றாலே அம்மனின் அருள் தான். தினம் தினம் கொண்டாட்டமாக இந்த ஆடி மாதம் இருக்கின்றது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம் என்று சொல்லலாம். ஆடிப்பூரம் அன்று மிக இயல்பாக இரண்டு ஆலய தரிசனங்கள் அமைந்தது.  இன்று ஆடி மாதம் 18 ஆம் நாள். அதாவது இன்று ஆடிப் பெருக்கு என்று கொண்டாடுவார்கள். இன்றைய நாளில் அனைவருக்கும் அருளும், பொருளும் பெருகட்டும் என்று குருமார்களிடம் வேண்டி பணிகின்றோம்.

இன்றைய ஆடி பெருக்கு நன்னாளில் நாம் அனைவரும் இணைந்து உலக நன்மைக்காக சிவபுராண கூட்டுப் பிரார்த்தனையை முன்னெடுப்போம் .  அத்துடன் வருகின்ற 04, 05 மற்றும் 06.08.2025 ஆகிய மூன்று நாட்களும் அனைவருக்கும் அந்த நாள் இந்த வருடம் வருகின்ற மிக முக்கிய மூன்று நாட்களாய் அமைகின்றது .  இந்த மூன்று நாட்களில் முறையே 

04.08.2025 - நம்பிமலை
05.08.2025 - 
பாபநாசம்
06.08.2025 - திருச்செந்தூர் 

செல்லும் அடியார்கள் ஒன்றிணைந்து குழுவாக இயங்கி , உலக நன்மைக்காக சிவபுராணம் , கோளறு பதிகம் ,  நவகிரக தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வேண்டி பணிகின்றோம் . 



04/08/2025 - ஆடி மாதம் - திங்கட் கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம்

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)


05/08/2025 - ஆடி மாதம் -  செவ்வாய்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி/துவாதசி திதி - கேட்டை நட்சத்திரம்.


பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)



06/08/2025 - ஆடி மாதம் -  புதன்கிழமை- சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.

திருச்செந்தூர்:- (முருகர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்)



மேல்குறிப்பிட்ட நாட்களை குறித்து வைத்துக் கொண்டு ,  நேரில் செல்ல இயலாத அன்பர்கள் இல்லத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்யும்படி வேண்டுகின்றோம் . 


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

 சித்தன் அருள் - 1601 - அந்த நாள் >> இந்த வருடம் - ஸ்ரீ விஸ்வாவஸு வருஷம் - 2025-26! https://tut-temples.blogspot.com/2025/05/1601-2025-26.html

அந்த நாள் >> இந்த வருடம் (க்ரோதி வருடம்) 2024-2025! - https://tut-temples.blogspot.com/2024/05/2024-2025.html

அந்தநாள் >> இந்த வருடம் - சுபகிருது வருஷம் - 2022-23 - https://tut-temples.blogspot.com/2022/04/2022-23_30.html

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

 ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

No comments:

Post a Comment