"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, January 27, 2022

குரு தரிசனம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்றைய நாளில் நாம் இரண்டு அருளாளர்களின் குரு பூஜை பற்றி நம் தலத்தில் பேசி இருந்தோம். திருநீலகண்ட நாயனார், ஸ்ரீ தாயுமான சுவாமி குருபூஜை பற்றி இதற்கு முந்தைய பதிவுகளில் கண்டோம். மேலும் பல குருமார்களின் குருபூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. அவற்றையும் ,இன்றைய குருபூஜை அருள்நிலையையும் இங்கே குரு தரிசனமாக இன்றைய குருநாளில் சமர்ப்பிக்கின்றோம். அட..இன்னொரு ஆச்சரியமான செய்தி..இன்றைய கூட்டுப் பிரார்த்தனையில் சிவபுராணம், கோளறு பதிகத்தோடு, 108 குருமார்கள்/மகான்களின் காயத்ரி மந்திரம் கூறும் பேறு பெற்று, உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். மேலும் இன்று திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் அஷ்டோத்ரம் கூறி நல்லதே நடக்க வேண்டினோம். இது தான் குருவருள் நம்மை வழிநடத்தும் அருள்நிலை ஆகும். சரியாக குருநாளில் இவை அனைத்தும் நடக்கின்றது என்றால் குருவின் அருளாலே குருவின் தான் என்றும் பணிகின்றோம்.

குருவே பிரம்மா, விஷ்ணு, சிவனும் ஆவார் .பரபிரம்மத்தின் அவதாரமே " குரு".அவர் பிரம்மாவைப் போல நம்மைப் புதிதாகப் படைக்கிறார்.சிவனைப் போல நம் வாசனைகளை அழிக்கிறார்.எல்லா வழியிலும் விஷ்ணுவைப் போன்று நம்மை காக்கிறார்.ஆகவே அவர் ( குருவே ) மும்மூர்த்தியும் ஆகிறார் .

1. ஸ்ரீ மத் கள்ளியடி குருநாதர் பிர்மம் - 81 ஆவது குரு பூஜை 

















மதுரை அழகர் கோவிலுக்கு அருகேயுள்ள 'பில்லிச்சேரி' எனும் கிராமிய மண்ணில் 1874ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஆடி 28 ஆம் நாள் அழகிய சிங்கருக்கும் ராமாயி அம்மாளுக்கும் 'சபாபதி' என்னும் திருநாமத்துடன் மதுரையம்பதி மண்ணின் மைந்தராய் அவதரித்தார்.
தனது 16ஆம் அகவையில் சபாபதி வீட்டிலிருந்து வெளியேறி நாற்பது மைல் தொலைவில் உள்ள வட மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள்.
குள்ளமான உருவம் உடைய சுவாமிகள் முழங்காலுக்கு மேலே வேட்டி மட்டும் உடுத்திக் கொண்டு கையில் தடி ஒன்றை வைத்தபடி மிக எளிமையான தோற்றமுடன்  ஒருவேளை உணவு மட்டும் உண்பவராகவும் இருந்து வந்தார்கள்.

குரு தேடல்:-

பின்னர் சுவாமிகள் அங்கிருந்து காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பம் என்னும் இடத்தில் இருந்து வந்த ஸ்ரீலஸ்ரீ ஞானதேசிகரின் சீடராக சேவை புரிந்து வந்து பின் மீண்டும் வடமதுரைக்கே வந்து சேர்ந்தார்கள்.

கள்ளியினடி தவம்:-

சுவாமிகள் கள்ளி மரத்தின் அடியில் பத்மாசனமிட்டு அமர்ந்து தவமியற்றி வந்தனர். ஒப்பற்ற மகானின் தவநிலையை அறிந்திராத  அப்பகுதியில் இருந்த குழந்தைகள் சுவாமிகள் மீது கல்லெறிந்து கேலிசெய்து விளையாடி மகிழ்ந்தனர். அதுகுறித்து சற்றும் கவலை இல்லாதவராக சுவாமிகள் கள்ளிப்புதரில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி வந்தார். ஒரு நாள் மிகவும் பலத்த பெருமழை பொழிந்து ஊரெங்கும் வெள்ளக்காடாக மாறிய போதும் சுவாமிகள் மீதும் சுவாமிகள் அமர்ந்து தவம் இயற்றிய கள்ளிப்புதரினைச் சுற்றிலும் ஒரு சொட்டு  மழைத் துளி கூட பொழியாதது கண்டு வியந்து சுவாமிகளின் தவ ஆற்றலைக் கண்ட மக்கள் அதுமுதல் சுவாமிகளைக் "கள்ளியடி சுவாமிகள்" என்று அழைக்க ஆரம்பித்தனர்.
 
ஸ்ரீலஸ்ரீ கள்ளியடி பிரம்மம் சுவாமிகள் கும்பகோணம் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகளின் பெருமை மிக்க சீடர்களுள் ஒருவராக கள்ளியடி பிரம்மம் சுவாமிகளும் சில காலம் தொண்டாற்றி வந்தார்கள்.

சூட்சுமக் காட்சி:-

சுவாமிகளைப் புகைப்படம் எடுக்க அவரது தொண்டர்கள் விரும்பி புகைப்படம் எடுத்தபோது அதில் தனது ஸ்தூல உடலோடு சூட்சும தேகத்தையும் பக்தர்களுக்குக் காட்டியருளி அற்புதம் புரிந்த மகான் ஆவார்.

குருவிற்கு பூஜை:-

சுவாமிகள் தனது குருவான ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகருக்கு வருடந்தோறும் குருபூஜை நடத்திப் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்ததோடு வறியோர்களின் பசிப்பிணியைப் போக்கி ஜீவகாருண்யத்தைக் கடைபிடித்து வந்தார்கள்.

தண்ணீர் ஊற்று:-

ஒருமுறை புதுப்பட்டியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு குடிநீருக்குக் கூட மக்கள் அல்லல்பட நேர்ந்தபோது சுவாமிகள் அவ்வூரில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு கிணறு வெட்ட சுவாமிகளின் அருளால் கிணற்றில் நல்ல தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகியது.சுற்றுப்புற கிராம மக்களும் அந்நீரின் சுவையை அனுபவித்துப் பேரானந்தம் அடைந்து பயன்பெறத் துவங்கினர்.
  
இது போல் சுவாமிகள் சென்று தங்கும் ஊர்களில் முதலில் ஒரு விநாயகர் கோவிலும் அதன் அருகில் 'தர்மக் கிணறு' என்னும் பெயரில் ஒரு கிணறும் அமைப்பார்கள்.இவ்விதம் சுவாமிகள் சிலுவத்தூர்,வடமதுரை,எரியோடு முதலான ஏழு ஊர்களில் விநாயகர் கோவிலும், குடிதண்ணீர்க் கிணறும் மக்கள் பயன்பெறும் வகையில் சுவாமிகள் அமைத்துள்ளார்கள்.

சமாதிக் கோவில்:-

சுவாமிகள் தான் முக்தியடையும் நாளை முன்கூட்டியே பக்தர்களுக்கு அறிவித்ததோடு சமாதிக் கோவிலையும் தானேயே கற்களால் கட்டிக் கொண்டு அதனுள் அமரும் முன் தனது சீடர்களிடம் சில குறிப்புகள் சொல்லியபின் அன்ன ஆகாரமின்றி 15 நாட்கள் தொடர்ந்து தவமியற்றி வந்தவர் 'விக்ரம ஆண்டு தை 8ம் நாள் விசாகம் நட்சத்திரத்தில் இரவு 7.31க்கு தாம் முன் குறிப்பிட்டபடியே ஜீவ முக்தி அடைந்தார்கள்.

ஜீவ முக்தி:-

சுவாமிகளின் ஜீவ முக்தித் திருநாளான தை விசாகத்தன்று மக்களிடமிருந்து பெறப்படும்  அரிசியினை ஒன்று சேர்த்து சமைத்து குருவிற்குப் படைத்து அதனைப் பிரசாதமாகப் பூஜைக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமாக வழங்குவார்கள்.

மகா அன்னதானம்:-

சுவாமிகளின்  குருபூஜை நாளன்று அருகிலுள்ள பற்பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். கடும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக அமர்ந்து மகா அன்னதானப் பிரசாதத்தினைப் பக்தி பரவசமுடன் உண்டு செல்வர்.

குருபூஜை:-

ஸ்ரீலஸ்ரீ கள்ளியடி பிரம்மம் சுவாமிகளின் 81வது குருபூஜை  26.01.2022 புதன்கிழமையன்று புதுப்பட்டியில் நடைபெற்றது.

அமைவிடம்:-

திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் 18 கிலோ மீட்டரில் உள்ள வடமதுரையிலிருந்து நத்தம் சாலையில் ஐந்து கிலோமீட்டரில் உள்ளது புதுப்பட்டி கிராமம் உள்ளது.

2. பகவான் ஸ்ரீ ராமசாமி சித்தர் 35 ஆவது மஹா குருபூஜை 






சிவத் தேடலும்,சித்தர் தேடலும் ஆன்மத் தேடல்கள் உள்ளோர்க்கு சொல்ல ஒண்ணா மனப்பரபரப்புக்கு உள்ள தேடல்கள் ஆகும். தமது அற்புதசக்திகளை வெளியில் காட்டிக் கொள்ளாது இன்றும் நம்மோடு கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சித்த சக்திமிக்கோர் பலர். அவர்களது அறிய சக்திகளை நாம் உணர்ந்து கொள்ளும் தருணத்தில் நம்மை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றிருப்பார்கள்.அப்படிப்பட்ட ஜீவ முக்தர்களுள் ஒருவரே ஒட்டன்சத்திரம் இராமசாமி சித்தர் ஆவார்.

இராமசாமி சித்தர் அவர்கள் ஒட்டன்சத்திரத்தில் ஒரு பாத்திரக் கடை வாசலில் வெகுகாலமாக வசித்து வந்திருக்கிறார்கள். அக்கடைக்கு அருகே இருந்த ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவருக்கு டீயும்,பிரியாணிப் பொட்டலமும் அன்றாடம் வந்துவிடுமாம்.

பிரியாணியில் வந்த கோழி:-
   
சித்தர்கள் அசைவ உணவை உண்பார்களா? என்று நாம் சிந்திப்போம். ஆனால் சுவாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதற்கு அவர்களையே பிரியாணிப் பொட்டலம் வாங்கி வரச் செய்து அதனை உண்பது போல பாவனை செய்து காட்டி அவர்களின் பிணிகளையும்,கர்ம வினைகளையும் அறுத்தெறிந்து இருக்கிறார்கள்.

   ஒருமுறை ராமசாமி சித்தர் அவர்கள் கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்ததும் அதே கோழியை சுவாமிகள் சாப்பிட்ட தட்டில் உயிரோடு வரவழைத்து  அக்கோழியைத் துரத்தி அனுப்பினார்கள்.
   சுவாமிகளின் பெயரும் அவரது ஊரும் அறியாமல் இருந்த போது அப்பகுதி மக்கள் அவரை சித்தர் ஐயா என்றும் சாமி என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.அவரது பெயர் ராமசாமி என்று  அறியப்பட்டது எப்படி என அறிந்து கொள்வோம்.

சாது சொன்ன பெயர்:-
 
உள்ளூரைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர் ஒருவரது தலைமையில் சிலர் வடதேச யாத்திரைக்குப் புறப்பட்டனர்.அவர்கள் ரிஷிகேஷை அடைந்ததும்  சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல், "ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன் எல்லாம் இங்கே வாங்கடா!"என்று அதிகாரமாகக் கூப்பிட்டது. குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க அங்கு ஒற்றைக்காலில் நின்றபடி தவக்கோலத்தில் சாது ஒருவர் இருந்தார். "உங்களை எல்லாம் நான் தான் கூப்பிட்டேன். ராமசாமி சித்தர் எப்படி இருக்கான்?" என்று  அந்த சாது விசாரிக்க, "அப்படி யாரும் எங்க ஊரில் இல்லையே" என்று ஊர்க்காரர்கள் சொல்ல, "பாத்திரக்கடை வாசலில் எந்நேரமும் உட்கார்ந்து இருப்பானே அவன் தான் ராமசாமி சித்தர். அவனுக்கு வயசு 550 ஊருக்குப் போனதும் அவனிடம் ரிஷிகேஷில் நடராஜ சாமி ரொம்ப விசாரிச்சான் என்று சொல்லுங்க"என்றார் என்று சொல்லிவிட்டு சாது மீண்டும் தவத்தில் மூழ்கி விட்டார்.இராமசாமி சித்தரதே வயதைக் கேட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த அவர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் திரும்பினார்கள். தாங்கள் புறப்பட்ட இடத்திலேயே யாத்திரையை முடித்தவர்கள் தங்கள் இல்லம் திரும்ப முற்பட்டபோது "ரிஷிகேஷ் போனவன் எல்லாம் இங்கே வாங்கடா" என்று பாத்திரக் கடை வாசலில் இருந்து ராமசாமி சித்தர் ஓங்கி குரல் கொடுத்தார். அப்போதுதான் அவர்களுக்கு ரிஷிகேஷில் நடராஜ சாமி சொன்ன தகவல்கள் நினைவுக்கு வந்தவர்களாய்ச் சித்தர் முன்பு சித்தரின் மகிமையை உணர்ந்தவாறு பயபக்தியுடன் நின்றனர்.

   "ரிஷிகேஷில் ஒற்றைக்காலில் தவம் செய்யும் நடராஜ சாமி என்னை விசாரித்ததை ஏண்டா என்கிட்ட சொல்லாம போறீங்க?"என்று ராமசாமி சித்தர் கோபமாகக் கேட்டதும் கூட்டத்தினரின் தலைமையான சோமசுந்தரம் பிள்ளை, "அவசரத்தில் மறந்து விட்டோம்" என்று சொல்ல ராமசாமி சித்தர்  சிரித்தபடியே அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.

சர்க்கரைப் பொங்கலான பிரியாணி:-

மற்றுமொருமுறை  ஆச்சாரமான அந்தணர் குடும்பத்துப் பெண்ணான ராஜம்மாள் என்பவர்  இறைவழிபாட்டிலும், மகான்களின் தரிசனத்தையும்,மகான்களின் அதிர்ஷ்டானங்களையும் தேடித் தேடி தரிசிப்பவர்.பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சித்தர்களைப் பற்றி கேள்விப்பட்டு பாத்திரக்கடை அருகில் வந்து நின்ற ராஜம்மாள் ராமசாமி சித்தரைப் பணிந்து வணங்கினாள். அவளிடம் ராமசாமி சித்தர் "பக்கத்து ஓட்டலில் பிரியாணி பொட்டலம் ஒன்று வாங்கி வா"என்றார். தயங்கியவாறே சென்ற அப்பெண்மணி பிரியாணிப் பொட்டலத்தை வாங்கி வந்து சித்தரிடம்  வைத்து விட்டுச் சற்றுத் தள்ளி நின்று கொண்டவளை ராமசாமி சித்தர் தன் அருகே அழைத்து, "பொட்டலத்தைத் திறந்து கையில் எடுத்துக் கொடு" என்றார். மிகுந்த தயக்கமுடன் கண்களை மூடியவாறு பொட்டலத்தைப் பிரித்து சித்தர் இருக்கும் திசையை நோக்கி நீட்டினார் அப்பெண்மணி. "நீயே கண்களைத் திறந்து பாரம்மா. உன் கையிலிருக்கும் பொட்டலம் என்னவென்று" என்றார் சித்தர்.அதன் பிறகு கண்களைத் திறந்து பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் உண்டானது. காரணம், பொட்டலத்தில் இப்போது இருப்பது பிரியாணி அன்று. நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல். கோவில் பிரசாதம் போல நெய் மணக்கும் பொங்கலை நம்ப முடியாது சுவாமிகளையும், சர்க்கரைப் பொங்கலையும் மாறி மாறிப் பார்த்த ராஜம்மாளிடம், "எடுத்து சாப்பிடு. அய்யர் வீட்டுப் பொம்பளைக்கு பிரியாணி தருவேனா அம்மா"என்ற சித்தர், உன் கையால் ஒரு கவளம் சர்க்கரை பொங்கல் கொடு" என்று கேட்டு வாங்கி சாப்பிட்டு அப்பெண்மணியை ஆசீர்வதித்து அனுப்பினார்.

  இராமசாமி சித்தர் தான் ஜீவசமாதி அடையும் நாளை முன்கூட்டியே அறிந்தவராய் தன்னை வழக்கமாக வந்து தரிசிக்கும் ஒரு அன்பரிடம் "பாதையை மறைக்காத; குழிக்குள் இறங்கு" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். இதன் காரணத்தை அறியாத அன்பரும் குழப்பத்துடன் இருக்க, சரியாக ஒரு வாரத்திலேயே ராமசாமி சித்தர் சமாதி ஆகிவிட்டதைக் கேள்விப்பட்ட உடனேயே சித்தரின் உடலை ஜீவசமாதி வைக்கும் இடத்திற்கு சென்றார்.அன்று சித்தர் சொன்ன வார்த்தையில் அர்த்தம் புரிந்தவராய் தான் கொண்டு சென்ற ஒரு சிகப்புத் துண்டை அவரது மேல் உடம்பில் போர்த்தி சித்த புருஷனை அடக்கம் செய்த பேறு தனக்குக் கிட்டியதை நினைத்தவாறு ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்குப் பேருந்தில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார். ஒரு நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருப்பாச்சி மேடு என்னும் இடம் வந்ததும் சாலையின் இடது புறம் ராமசாமி சித்தர் அவர்கள் நடந்து சாலையில் நடந்து போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்.அவரது மேல் உடம்பில் அன்பர் தான் போர்த்திய சிகப்புத் துண்டைப் போர்வை போல் போர்த்திய நிலையில் நடந்து சென்று கொண்டிருந்ததைக் கண்டார். மறுநாள் அவரது சமாதிக்கு சென்று பார்த்தபோது அங்கு சுவாமிகளை சமாதி செய்வித்த இடத்தில் அவரது தலை பகுதிக்கு நேராக அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு ஒன்று காணப்பட்டது. சுவாமிகள் தனது அருள் ஆற்றலை மட்டும் அங்கேயே வைத்துவிட்டு சரீரத்துடன் வேறு பிரதேசத்திற்குச் சென்று விட்டதை உணர்ந்தார். 'சித்தர்களுக்குச் சமாதி நிலை என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. அவர்கள் என்றென்றும் அழிவின்றி வேறு வேறு இடத்தில் உலவிக் கொண்டு இருப்பார்கள்' என்பதை உணர்ந்து கொண்டார்.அதன்படி சுமார் இரண்டு மாதங்கள் கழித்து கேரளாவில் ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டறிந்தார். ராமசாமி சித்தர்  முஸ்லிம் அன்பர் ஒருவர் அன்போடு கொடுத்த குல்லாய் ஒன்றை எப்போதும் தலையில் அணிந்திருப்பார்கள். அந்த நிழற்படம் சுவாமிகளின் சமாதி பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சித்திரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரம்மாண்டமான ஆலமரம் உள்ளது. அதன் அடியிலேயே  சுவாமிகளின் சமாதிக் கோவிலை அழகுற அமைத்து சமாதி பீடத்தின் மீது சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வைத்து சிறப்புற ஒட்டன்சத்திரத்து மக்கள் இன்றளவும் பக்தியோடு  பூஜித்து வருகின்றனர்.

   ஸ்ரீலஸ்ரீ இராமசாமி சித்தர் பீடம் மிகுந்த அருளாற்றலுடன் திகழ்ந்து வருவதை அங்கு நேரில் சென்று அனுபவத்தால் உணரலாம்

குருபூஜை:-

நேற்று  தை மாதம் 13ம் நாள் 26.01.2022 புதன் கிழமை அன்று சுவாமிகளின் 35ம் ஆண்டு குருபூஜை சிறப்பாக நடைபெற்றது.

அமைவிடம்:-

ஸ்ரீலஸ்ரீ இராமசாமி சித்தர் கோவில்,நாகனம்பாடி பைபாஸ் சாலை, தீயணைப்பு நிலையம் அருகில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.


3. ஸ்ரீ பவழங்குடி சித்தரின் 215 வது குருபூஜை விழா 





4. தவத்திரு, விபூதி வள்ளல் எ. தனபால் சுவாமிகளின் நேற்று  (26.01.2022. புதன்கிழமை)  நடைபெற்ற 40- ஆம் ஆண்டு குருபூஜை விழா



 ஸ்ரீ உண்ணாமலை அம்மன் உடனாகிய ஸ்ரீ அண்ணாமலையார் அருள்பாலித்து வரும் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், எ.தனபால் சுவாமிகள் அவதாரம் செய்து நல்ல ஞான  ஆசிரியரிடம் ஞானகல்வி பயின்று அதனை கிராமங்கள், நகரங்கள், கோயில்கள், மடங்கள், தோறும் இடைவிடாது பக்தி சொற்பொழிவு, நாடகம் நடத்தி அருட்பிரகாச வள்ளல் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க. நெறியில் நின்று  இணைந்து பக்தர்களுக்கும் நல்வழிகாட்டி பக்திக்கு  உகந்த விபூதி வழங்கி விபூதி வள்ளல் என பெயர் பெற்றார். தனபால் சுவாமிகள் பூண்டி மகான், கிருபானந்த வாரியார், கருமாரப்பட்டி வெள்ளையானந்த சுவாமிகள், ஆகிய மகான்கள் காலத்தில் வாழ்ந்து  அவர்களிடம்  நெருங்கி பழகியவர்.
 
சமாதிக் கோயில் அமைந்துள்ள இடம்:  நமத்தோடு  கிராமம், (தெள்ளராம்பட்டு) சேத்துப்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.                               

5. ஓம் ஸ்ரீலஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மா

இன்று  (27.01.2022) வியாழக்கிழமை  22-ஆம் ஆண்டு குருபூஜை விழா காணும்  மஹா சித்து  புருஷனி ஓம் ஸ்ரீலஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மா.  
                         



அம்மாவின் மகிமைகள்:

சென்னை-1,  தம்பு செட்டி தெரு, எண்.330, மெட்ராஸ் ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸ் திண்ணையில் அழுக்கு மூட்டைகளுடன் கைகள் நிறைய வளையல்கள், வாட்ச், கழுத்தில் நிறைய மணி மாலைகளுடன் முகம் முழுவதும் விபூதி குங்குமத்தை பூசி கொண்டு சாட்ஷாத் தம்பி செட்டி காளிகாம்பாள் அவதாரமாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி தீராத வினைகள் எல்லாம் தீர்த்து வைத்து தினம் வரும் குறைந்தது நூறு போ்களுக்காவது அன்னதானமும், டீ,  மோர், குளிர்பானம், முதலியவைகளை  வாங்கி கொடுத்து ஏழை முதல் தன வந்தவர்கள் வரை அனைவரையும் ஒரே சீராய் அன்பளித்து வந்த அம்மா அவர்கள் தம்பு செட்டி தெருவில் கிட்டத்தட்ட 30 வருடமாய் சாதனைகள் பல செய்து வந்தார்கள் கடைசியில் அம்மா ஜீவ முக்தி அடையும் நேரத்தில் 42 கோடி மக்கள் பாவத்தை செய்யிராங்க என்னால் தாங்க முடியவில்லை நான் உடனே போய் என் மக்களை காப்பாற்ற போகிறேன் என் கூறிக்கொண்டே உணவு அருந்தும் வேளையில் 30.01.2000 ஞாயிற்றுக்கிழமை, அன்று தை மாத அனுஷ நட்சத்திரத்தில் ஜீவ முக்தி அடைந்தார்கள். அம்மா 30 வருடம் வாழ்ந்த தம்பு செட்டி தெருவில்  ஆலயம் எழுப்பபட்டுள்ளது.    

அம்மாவின் சமாதி அமைந்துள்ள இடம் :

சென்னை- செங்குன்றம் சாலையில் உள்ள புழல் சிறைச்சாலை அருகே காவாங்கரை மயானத்தில் சமாதி உள்ளது. (காவாங்கரை கண்ணப்பர் ஜீவசமாதி ஆலயம் அருகில்) அம்மாவின் குருபூஜை விழா தை மாத அனுஷ நட்சத்திரப்படி காவாங்கரை  சமாதியில்   குருபூஜை இன்று நடைபெற்றது.

இன்றைய குருநாளில் ஒரே பதிவில் பல குருநாதர்களின் தரிசனம் நாம் அனைவரும் இங்கே பெற்று இருக்கின்றோம் என்றால் குருவின் அருளிற்கு எல்லையேது! பதிவின் தலைப்பிற்கு ஏற்றாற்போல குரு தரிசனம் நமக்கு திரு தரிசனமும் தருவதை உணர முடிகின்றது.


ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

இன்று தை விசாகம் - ஸ்ரீ தாயுமான சுவாமி குருபூஜை - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022.html

 ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 100 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 20.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/100-20012022.html

ஸ்ரீலஸ்ரீ செல்லப்ப சுவாமிகள் 121 ஆவது குரு பூஜை - 31.12.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/61-20122020.html

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

 பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_24.html


கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html



Tuesday, January 25, 2022

திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

நாளை தை மாத  விசாக நட்சத்திரம். நாளை சனிக்கிழமை 26.01.2022  காலை 8  மணி முதல் 27.01.2022 வரை தை மாத விசாகம் நட்சத்திரம் உள்ளது. இன்றைய நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை கூறி மகிழ்கின்றோம்.மேலும் இந்த நன்னாளில் இரு குருமார்களின் குருபூஜை கொண்டாட உள்ளோம். அதில் ஒருவர்  பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி என போற்றப்படும் ஸ்ரீ தாயுமான சுவாமி ஆவார். இவரைப் பற்றி ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவில் கண்டோம். 

அடுத்து இந்த  நன்னாளில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார். அதுபோல் இன்று நாம் திருநீலகண்ட நாயனார் பற்றி அறிய உள்ளோம்.





திருநீலகண்ட நாயனார், இறைவனின் பெயர் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத், தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்தவர். அவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரின் வாழ்வில் சிவபெருமான் நிகழ்த்திய லீலையை  இப்போது பார்ப்போம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். குயவர் என்பவர் மண்ணிலிருந்து பானை, சட்டி போன்ற உபயோகப் பொருட்களைத் தயார் செய்பவர். அவருடைய பெயர் திருநீலகண்டர் என்பதாகும். அவர் சிதம்பரத்தில் உள்ள சிவனிடத்தில் (பொன்னம்பலவாணர்) பேரன்பும், பக்தியும் கொண்டிருந்தார்.

சிதம்பரம் பூலோகக் கையிலாயம் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. அது தில்லை மரங்கள் நிறைந்த பகுதியாக விளங்கியதால் தில்லை வனம் என்றும் கூறப்படுகிறது.

திருநீலகண்ட நாயனார் சிவடியார்களுக்கு மண்ணிலிருந்து ஓடுகள் செய்து கொடுப்பதைத் தொண்டாகச் செய்து வந்தார். ஏனெனில் அடியர்களுக்கு செய்யும் சேவை சிவனுக்கு செய்வதைப் போன்றது அல்லவா? ஆதலால் அத்தொண்டை மிகுந்த விருப்பத்துடன் செய்து வந்தார்.அவர் எப்போதும் சிவனின் நீலநிறத் தொண்டையை நினைத்து ‘திருநீலகண்டம் திருநீலகண்டம்’ என்று உருகிக் கூறியபடியே இருப்பார். இதனால் அவரை எல்லோரும் திருநீலகண்டர் என்றே அழைத்தனர்.

அவர் ஏன் சிவபெருமானின் நீலநிறக் கண்டத்தை நினைத்து உருகினார்? சிவபெருமானின் நீலகண்டமே பாற்கடலில் தோன்றிய கொடிய நச்சிலிருந்து (விசத்திலிருந்து) உலக உயிர்களைப் பாதுகாத்தது.

ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் அமுதத்தினைப் பெற, மந்தார மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் என்றும் இறவாமல் வாழும் சிரஞ்சீவி தன்மையைக் கொடுக்க வல்லது.அப்போது வாசுகிப் பாம்பு வலி தாங்காமல் உலக உயிர்களைக் கொல்லும் கொடிய ஆலகால விசத்தினைக் கக்கியது. உலக உயிர்களைக் காக்க சிவபெருமான் அவ்விசத்தினை விழுங்கி தன்னுடைய தொண்டையில் (கண்டம்) இருத்தினார்.

விசத்தால் சிவனின் கண்டம் நீலநிறமாக மாறியது. அன்றிலிருந்து இறைவனார் திருநீலகண்டனார் ஆனார்.மக்களைக் காக்கும் மகேஸ்வரனை மனதில் வைத்து, திருஞான சம்பந்தர் திருநீலகண்ட பதிகம் என்னும் பத்துப் பாடல்களைப் பாடினார்.

நாம் நோயுற்ற காலம், இறைவனை வழிபட்டு நோய் நீங்கி சுகமாக வாழ, திருநீலகண்ட பதிகம் பாடல்களைப் பாடலாம்.

திருநீலகண்டரின் மனைவியும் சிவனிடத்தும், அடியவர்களிடத்தும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். கணவனும், மனைவியும் அடியவர்களுக்கு தொண்டு செய்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர்.அப்போது ஒருநாள் முற்பிறவி பாவத்தின் பயனாக திருநீலகண்டர் பரத்தையரிடம் சென்று வந்தார். இதனை அறிந்த அவருடைய மனைவி திருநீலகண்டரிடம் பேசுவதை நிறுத்தினார். எனினும் இல்லாளின் பணிகளைச் செய்து வந்தார். திருநீலகண்டரைத் தீண்டுவதைத் தவிர்த்தார்.

ஒருநாள் திருநீலகண்டர் தன்னுடைய மனைவியைத் தொட‌ முற்பட்டபோது “நீங்கள் என்னைத் தொட்டால் உயிரோடு இருக்க மாட்டேன். திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்று அவர் மனைவி கூறினார்.திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், இனி மனைவியை மட்டுமல்லாமல் எப்பெண்ணையும் மனதாலும் தொட மாட்டேன் என்று திருநீலகண்டர் சபதம் ஏற்றார்.

அப்போதிருந்து அவர் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தார். அவர்கள் இருவரும் சிறிய வீட்டில் இருந்தும் உடல் தொடர்பின்றி இருந்தனர். ஆண்டுகள் பல ஓடின. தம்பதியர் இருவரும் முதுமைப் பருவம் எய்தினர்.திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், திருநீலகண்டரும் அவருடைய மனைவியும் கொண்ட மனஉறுதியினை உலகுக்கு எடுத்துக்காட்டி, அவர்களுக்கு அருள் செய்ய இறைவனார் திருவுள்ளம் கொண்டார்.

இறைவனார் வயது முதிர்ந்த சிவனடியாராக வேடம் பூண்டு, திருநீலகண்டரின் இல்லத்திற்கு வந்தார். திருநீலகண்டரும் அவருடைய மனைவியும் சிவனடியாரை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

சிவனடியார் திருநீலகண்டரிடம் திருவோடு ஒன்றினை கொடுத்து “இந்த ஒடு மிகவும் புனிதமானது. இதற்கு ஈடுஇணை ஏதும் இவ்வுலகத்தில் இல்லை. இதனைப் பத்திரமாக வைத்திருங்கள். நான் தக்க சமயம் வரும்போது உங்களிடத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்கிறேன்.” என்று கூறினார்.திருநீலகண்டரும் அதனைத் தன்னுடைய பாக்கியம் என்று கூறி பெற்றுக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தார்.

நாட்கள் பல உருண்டோடின. சிவனடியார் ஒருநாள் திருநீலகண்டரின் வீட்டிற்கு வந்து தன்னுடைய திருவோட்டினைத் திருப்பித் தருமாறு கூறினார்.திருநீலகண்டரும் திருவோட்டினை பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் சென்று தேடினார். அங்கு திருவோடு இருக்கவில்லை. சிவனருளால் ஏற்கனவே அது மறைந்திருந்தது.

மனம் பதைத்து திருநீலகண்ட நாயனார் சிவனடியாரிடம் திருவோட்டினைக் காணவில்லை என்பதைத் தெரிவித்தார். அதனைக் கேட்ட சிவனடியார் மிகவும் கோபம் கொண்டார்.அதனைக் கண்ட திருநீலகண்டர் “ஐயா, உங்களுக்கு வேறு ஒரு நல்ல திருவோட்டினை செய்து தருகிறேன். என்னுடைய பிழையை பொறுத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.

“என்னுடைய திருவோட்டின் பெருமைகளை அறிந்து கொண்டதால், நீ அதனை உன் வசம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறாய். என்னுடைய ஒப்பற்ற திருவோட்டினை இப்போதே என்னிடம் ஒப்படைத்துவிடு” என்று கத்தினார் சிவனடியார்.

திருநீலகண்டரின் மனைவியார் நடந்தவைகளைப் பார்த்து கண்ணீர் மல்க நின்றார்.

“ஐயா, உங்களுடையதை எனதாக்கிக் கொள்ளும் எண்ணம் ஏதும் எனக்கில்லை.” என்றார் திருநீலகண்ட நாயனார்.“உன்னுடைய மகனின் கரம் பற்றி குளத்தில் மூழ்கி, உன்னுடைய நிலை பற்றி எனக்கு சத்தியம் செய்து கொடு” என்றார் சிவனடியார்.

“எனக்கு குழந்தைகள் ஏதும் இல்லை” என்றவாறு விழித்தார் திருநீலகண்டர்.

“அப்படியானால் உன்னுடைய மனைவியின் கரம் பற்றி குளத்தில் மூழ்கி சத்தியத்தைச் செய்” என்றார் சிவனடியார்.

தனக்கும் மனைவிக்கும் இடையே உள்ள பிணக்கால் தன்னால் மனைவியின் கரம் பற்றி சத்தியம் செய்ய இயலாது என்பதை திருநீலகண்டர் தெரிவித்தார்.

“அப்படியானால், நீதான் என்னுடைய திருவோட்டினை மறைத்து வைத்துக் கொண்டுள்ளாய் என்பது தெளிவாகிறது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆதலால் வா, இப்போதே நாம் வழக்காடு மன்றம் செல்வோம்.” என்று கூறினார்.

திருநீலகண்டரும் அதற்கு சம்மதித்தார். இருவரும் தில்லை வாழ் அந்தணர்கள் இருந்த வழக்காடு மன்றத்திற்கு வந்தனர். சிவனடியார் நடந்தவைகளைக் கூறி, தனக்கு நியாயம் வேண்டும் என்ற கோரிக்கையை வழக்காடு மன்றத்தில் வைத்தார்.அவையோரும் திருநீலகண்டரிடம் “சிவனடியாரின் திருவோடு தங்களிடம் இல்லை எனில், மனைவியின் கரம் பிடித்து குளத்தில் மூழ்கி எழுந்து சத்தியம் செய்து தரவேண்டும்.” என்றனர்.

இதனைக் கேட்டதும் கலங்கிய திருநீலகண்டர் மனைவிக்கும் தனக்கும் பிணக்கு உள்ளதால், அவரின் கரம் பற்றி சத்தியம் செய்ய இயலாத நிலையை வெளியே கூற முடியாமல் மூழ்கித் தருகிறேன் என்று மட்டும் கூறினார். அவையோரும் சம்மதித்தனர்.

திருநீலகண்டர் தம் மனைவியுடன் திருப்புலீச்சுரத்து அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்திற்கு வந்தார். அவையோர் உள்ளிட்ட எல்லோரும் அங்கியிருந்தனர்.மூங்கில் கம்பு கொண்டு வந்த திருநீலகண்டர் ஒருபக்கத்தை பிடித்துக் கொண்டு மறுபக்கத்தை மனைவியைப் பிடிக்கச் சொன்னார்.



அதனைக் கண்ட சிவனடியார் மனைவியின் கரம் பற்றியே குளத்தில் மூழ்க வேண்டும் நிபந்தனை விதித்தார்.மீண்டும் சங்கடத்திற்கு ஆளான திருநீலகண்டர், மனைவியார் தன் மீது ஊடல் கொண்ட காரணத்தை அவையோரிடம் கூறினார். பின்னர் அவையோரின் சம்மதத்தை எதிர்பார்க்காமல், இருவரும் மூங்கில் கம்பினைப் பிடித்தவாறு குளத்தில் மூழ்கினர்.

இருவரும் குளத்தை விட்டு எழும்போது, இறையருளால் முதுமை நீங்கி இளமைப் பொலிவுடன் எழுந்தனர். அங்கியிருந்த அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். சிவனடியாரைத் தேடிய‌ போது அவரைக் காணவில்லை.அப்போது சிவபெருமான் உமையம்மையுடன் காளை வாகனத்தில் காட்சியளித்தார். “புலனை வென்றோர்களே, இளமைப் பொலிவுடன் எம்மை நீங்காதிருப்பீர்களாக” என்று வாழ்த்தினார்.

திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியாரும், பலகாலம் இப்புவியில் சிவத்தொண்டு புரிந்து, இறுதியில் சிவனடியைச் சேர்ந்தனர்.இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த, திருநீலகண்ட நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

திருநீலகண்ட நாயனார் குருபூஜை நாள் தை விசாகம் ஆகும்.




இவரையே திருநீலகண்டத்துக் குயவனாருக்கும் அடியேன் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

இன்று தை விசாகம் - ஸ்ரீ தாயுமான சுவாமி குருபூஜை - 26.01.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாளை சனிக்கிழமை 26.01.2022  காலை 8  மணி முதல் 27.01.2022 வரை தை மாத விசாகம் நட்சத்திரம் உள்ளது. இன்றைய நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை கூறி மகிழ்கின்றோம்.மேலும் இந்த நன்னாளில் இரு குருமார்களின் குருபூஜை கொண்டாட உள்ளோம். அதில் ஒருவர்  பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி என போற்றப்படும் ஸ்ரீ தாயுமான சுவாமி ஆவார். இவர் போன்ற மகான்களின் வரலாற்றை நாம் படித்தும், கேட்டும் வருவது நாம் செய்த புண்ணியமே. இனி ஸ்ரீ தாயுமான சுவாமி தரிசனம் பெற்று, அவரது புண்ணிய சரிதம் அறிய  உள்ளோம்.


தாயுமானவர் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்:கேடிலியப்ப பிள்ளை, தாயார்: கெஜவல்லி அம்மாள். இவர்வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.

தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு.பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.

தாயுமானவர் செய்த ஆக்கங்கள்
தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய "பராபரக் கண்ணி" மிகவும் புகழுடையது. பராபரக்கண்ணியில்,

"அண்டகோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே!"

என்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736-ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். இவர் பாடல்கள் "தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு" என வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும் இதில் 56 பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் மிகுந்துள்ளன.

"சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம் அடங்கக் கல்லார்க்கு "வாயேன்" பராபரமே"
(இருபொருள்: வாய்க்க மாட்டேன், வாய் ஏன்)

"எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே"

என்னும் இவருடைய வரிகள் புகழ் பெற்றவை.

தாயுமானவரின் பணி
கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியிலும்,அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.

துறவு வாழ்க்கை
மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார்.பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார்.திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும் ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார்.அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தின் ஒரு பகுதியுள்ள இலட்சுமிபுரமாகும் .

சரி. இனி நாம் நேரே இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் சென்று தாயுமான சுவாமிகள் தரிசனம் பெற இருக்கின்றோம். 


இதோ ஸ்ரீ தாயுமான சுவாமி தபோவனம் வந்து விட்டோம்.



உள்ளே செல்ல இருக்கின்றோம்.


உள்ளே சென்றதும் ஸ்ரீ தாயுமானசுவாமி பற்றிய செய்தி இருந்தது. உங்கள் அனைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.


இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த ஜீவ ஆலயம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை உணர முடிகின்றது. இதோ. உள்ளே ஒவ்வொருவராக சென்று கொண்டு இருக்கின்றார்கள்.



இதோ. நாமும் உள்ளே சென்று விட்டோம். மாயையின் பிடியில் இருந்து தப்பித்து உள்ளே சென்றது போன்ற உணர்வு. வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தின் மரபில் சில மகான்களை கண்டோம். நீங்களும் கண்டு உணருங்கள்.






இந்த தரிசனத்தை தனித்தனியே தந்திருக்கலாம் என்று தற்போது நினைக்கின்றோம்.


இதோ. அடுத்து தாயாய் விளங்கும் பரமான தாயுமான சுவாமி தரிசனம் பெற இருக்கின்றோம். நம் மனதில் பல கூச்சல், சப்தம், ஆட்டம், ஓட்டம் என இருந்தது. வெற்று ஆரவாரம் எதுவும் இங்கில்லை. பேரமைதி இருந்தது. இது நம்மை ஈர்த்தது. நம் ஊன் எப்போது உருகும் என்று காத்திருந்தோம்.


உள்ளொளி பெருக்கும் தரிசனம். அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவின் இந்த இடத்தில் நமக்கு மூலத்தின் ஆதாரத்தில் சிறிய உணர்வாக அழுத்தம் பெற முடிகின்றது. இங்கேயே இப்படி ஒரு அனுபவம் என்றால் நேரில் சென்று மீண்டும் மனதில் தரித்து பரத்தில் சிக்க , தரிசிக்க மனம் விரும்புகின்றது.




தாயுமானவரே போற்றி 
தந்தையுமானவரே போற்றி 
எந்தையே போற்றி 
பரமே போற்றி 
சிவமே போற்றி 







‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!”
நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய் ! பராபரமே!
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே !
தாயுமானப் பெம்மான் தன்அடியை ஏத்துதற்குக்
காயும் வினைஅகலும் காண்.

என்று மீண்டும் மீண்டும் பாடி தாயுமானவர் பதம் போற்றுவோம்.

அன்பைப் பெருக்கி ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
கன்றினுக்குச் சேதா கனிந்து இரங்கல் போல் எனக்கு
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே !
சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கு
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே !
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே !
சீர் ஆரும் தெய்வத் திரு அருள்ஆம் பூமிமுதல்
பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே !

வித்து இன்றி யாதும் விளைவது உண்டோ?
நின்அருளாம்
சித்து அன்றி யாங்கள் உண்டோ? செப்பாய் பராபரமே!
சின்மயானந்த குருவே !                 
அங்கை கொடுமலர் தூவி அங்கமது புளகிப்ப
அன்பினால் உருகி விழிநீர்
ஆறாக, ஆராத முக்தியினது ஆவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர ! சுயம்புவே ! சம்புவே ! எனவும் மொழி
தழுதழுத்திட வணங்கும்
சன்மார்க்க நெறி இலாத் துன்மார்க்கனேனையும்
தண் அருள் கொடுத்து ஆள்வையோ?
துங்கமிகு பக்குவச் சனகன் முதல் முனிவோர்கள்
தொழுது அருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே
சொரூப அநுபூதி காட்டிச்
செங்கமல பீடம் மேல் கல்ஆல் அடிக்குள் வளர்
சித்தாந்த முக்தி முதலே !
சிரகிரி விளங்கவரு தட்சிணாமூர்த்தியே !
சின்மயானந்த குருவே !

நாளை நடைபெற உள்ள குருபூஜை அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.


வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும்,திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

 பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_24.html