"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, June 9, 2022

குருவடி போற்றி! திருவடி போற்றி!! - ஸ்ரீமத் போகர் ஜெயந்தி வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய குரு நாளில் வைகாசி பரணி நட்சத்திரம் அன்று நமக்கு அருள் வழங்கிய ஸ்ரீமத் போகர் ஜெயந்தி வழிபாடு தரிசனம் காண இருக்கின்றோம். ஏற்கனவே நாம் தனிப்பதிவில்  ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழா - 28.05.2022 பற்றி கூறி இருந்தோம். பழனியில் உள்ள ஸ்ரீமத் போகர் உயிர்நிலைக்கோயிலில் அன்று காலை விழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. அன்று  மாலையில் குரு போகர் அலங்கார ரதம் பழனி கிரிவல வீதியில் கைலாய வாத்தியத்துடன் வலம் வந்தது. தினம் தினம் நாம் ஸ்ரீ போகர் பெருமானை துதிப்போம்.



இன்றைய நன்னாளில் ஸ்ரீ போகர் திருவடிகள் பணிந்து ஸ்ரீ போகர் துதியை இங்கே பகிர்கின்றோம். அன்பர்கள் தங்கள் நித்திய வழிபாட்டில் இதனை சேர்த்துக் கொள்ள வேண்டுகின்றோம்.



அடுத்து நமக்கு குருவருளால் ஸ்ரீமத் போகர் ஜெயந்தி அன்று ஸ்ரீ போகர் தரிசனம் கிடைத்தது. அதனை இங்கே பகிர விரும்புகின்றோம். நம் குழு சார்பில் அன்றைய  அன்னசேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்றது, மேலும் அன்று  காலை பழனியில் நடைபெற்ற  ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழாவிற்கு நம் தளம் சார்பில் சிறு தொகை குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். மேலும் அன்று  மாலை  5 மணி அளவில் திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டியில் உள்ள சாய்பாபா கோயிலில் உள்ள சித்தர்கள் பீடத்தில் இன்று போக மகரிஷிக்கு வழிபாடு நம் தளம் சார்பில் நடைபெற்றது. அதனை இனி காண உள்ளோம்.


செட்டியபட்டியில் உள்ள சாய்பாபா கோயிலில் உள்ள ஸ்ரீ போகர் 


முதலில் அன்று மாலை கோயிலுக்கு மாலை 5:30 மணி அளவில் சென்றோம். அன்று அனைத்து சித்தர் பெருமக்களுக்கும் பூ வைத்து வழிபட ஆசை ஏற்பட, பூச்சரங்கள் வாங்கி அங்கே கொடுத்தோம். இங்கிருந்து பார்க்கும் போது சித்தர் பெருமக்களை ஒரு சேர தரிசிக்கலாம். ஒவ்வொரு நட்சத்திரம் அன்று அன்றைய சித்தரை தரிசிக்க ஆசை கொண்டு இங்கே அதனை இன்றைய நாளில் சமர்ப்பிக்கின்றோம். குருவருள் நம்மை தொடர்ந்து வழி நடத்தட்டும்.



எண்ணெய் காப்பு சாற்றி ஸ்ரீ போகர் 






மஞ்சள் அபிஷேகம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.



தீப தரிசனம் கண்டோம்.




இப்படி தான் ஓளி ரூபமாக சித்தர்கள் காட்சி கொடுப்பார்கள் என்று நம்புகின்றோம். அடுத்து பால் அபிஷேகம் நடைபெறுகின்றது.





ஸ்ரீ போகர் சித்தரின் சில குறிப்புகள் இங்கே பகிர்கின்றோம்.



அடுத்து அலங்கார தரிசனம் காண உள்ளோம். 


ஓம் ஆம் ஊம் ஸ்ரீ போகர் சித்தரே போற்றி  என்று போற்றிக் கொண்டே இருந்தோம்.





அலங்கார தரிசனத்தில் தீப தரிசனம் பெற்றோம்.



ஓம் ஆம் ஊம் ஸ்ரீ போகர் சித்தரே போற்றி 








அன்றைய தினம் நம் தளம் சார்பில் மாலை வாங்கி ஸ்ரீ போகர் பெருமானுக்கு சாற்றினோம்.


ஸ்ரீ போகர் திருவடிகள் சரணம்!

ஸ்ரீ போகர் திருவடிகள் சரணம்!!

ஸ்ரீ போகர் திருவடிகள் சரணம்!!!



இங்கு ஒரு விசேஷமான முறையில் வழிபாடு செய்வது கண்டும், நம் சித்தர் பெருமக்களின் ஞானம் கண்டு மெய் சிலிர்த்தோம். அது என்ன என்று கீழே உள்ள ஸ்ரீ போக மகரிஷி அருளில் பாருங்கள். இதைப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் சிந்திப்போம். அன்று கொண்டாடிய ஸ்ரீ போகர் ஜெயந்தி விழா பற்றியும் இனிவரும் பதிவில் காண்போம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

சித்தர் காப்பு - சித்தர்கள் திருவடி போற்றி! போற்றி!! -  https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_2.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_23.html

 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

 சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 திரும்பிப் பார்க்கின்றோம்: அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - புரட்டாசி -2017 - https://tut-temples.blogspot.com/2019/08/2017.html

 கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

 இன்றைய குரு பூஜையில் நால்வரின் பதம் பணிவோமாக! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post_13.html

 சித்தர்கள் அறிவோம்! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_13.html

Saturday, June 4, 2022

கூடுவாஞ்சேரி குருநாதர் ஸ்ரீ அகத்தியர் & ஸ்ரீ குகன் அருள் பெற வாருங்கள் - 05.06.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

இன்றைய தினம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய  பூசை வழிபாட்டிற்கு அழைக்க வேண்டி இன்றைய பதிவை தொடர்கின்றோம். இத்துடன் மேலும் இன்று கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ தெய்வானை,ஸ்ரீ வள்ளி- ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழும் பகிர விரும்புகின்றோம். இன்றைய தினம் கூடுவாஞ்சேரியில் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல் அமைந்து உள்ளது. 

இன்றைய ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாணம் அழைப்பிதழை இனி பகிர்கின்றோம். இந்த திருக்கல்யாண அழைப்பிதழ் கண்டு நாம் மகிழ்ச்சியுற்றோம். ஏன் என்று பின்வரும் பதிவுகளின் மூலம் அறிய தருகின்றோம்.




 உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்; 

பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக் 

கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும் 

வேலப்பா! செந்தி வாழ்வே! 


அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்; 

வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில் 

ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும் 

'முருகா!' என்று ஓதுவார் முன். 


முருகனே! செந்தி முதல்வனே! மாயோன் 

மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன் 

தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் 

நம்பியே கைதொழுவேன், நான். 

திருக்கல்யாணம் பார்ப்பது, அதில் பங்கு கொள்வது திருமணத் தடை விலக்கும் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டதுண்டு. நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் இதனை பலமுறை தன் அருள்வாக்கில் கூறி உள்ளார்கள். எனவே திருமணத் தடை உள்ள அன்பர்கள் இன்றைய திருக்கல்யாண வழிபாட்டில் கலந்து கொண்டு அருள் பெற வேண்டுகின்றோம்.

அடுத்து நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வழிபாடு பற்றி சில வரிகள்.

குருவருளால் மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திர வழிபாடு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பலமுறை நாம் நம் குருநாதர் தரிசனம் பெற்றாலும் இன்னும் இன்னும் என நம்மை ஏங்க வைப்பது இன்னும் உண்மையே. ஒவ்வொரு முறை தரிசனத்தில் நமக்கு ஒவ்வொன்றை உணர்த்துவார். இன்றைய ஆயில்ய நட்சத்திர வழிபாடு திருமணத் தடை உள்ள அன்பர்களுக்கு பிரார்த்தனை செய்ய உள்ளோம். இன்றைய ஆயில்ய வழிபாட்டில் திருஅண்ணாமலையில் அன்னசேவை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றோம். 

சித்திரை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய நட்சத்திர தரிசனம் இங்கே நாம் பெற உள்ளோம்.




இன்று 05.06.2022  காலை 8:30 மணிக்கு கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் ஐயாவுக்கு ஆயில்யம் வழிபாடு நடைபெற உள்ளது அனைவரும் வருக!

சென்னையில் வசிக்கும் அன்பர்களுக்கு குருநாதர் தரிசனம் பெற நல்லதொரு வாய்ப்பாக  இன்று  - ஞாயிற்றுக்கிழமை உள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம். ஓம் அகத்தீசாய நமஹ 

இன்று காலை குருநாதர் தரிசனம்.

பின்பு முருகப்பெருமான் திருக்கல்யாணம் 

இரண்டு வைபவங்களும் 

ஒரே நாளில் 
ஒரே ஊரில் 

ஆம்!  கூடுவாஞ்சேரியில்

வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற வேண்டி அழைக்கின்றோம்.

 வழக்கம் போல், அகத்தியர் ஆயில்ய பூசைக்கு பொருளுதவி மற்றும் இன்னபிற வழிகளில் உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நம் தளம்  சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குருவருள் பரிபூரணம் - ஓம் அகத்தின் ஈசனே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/03/blog-post_15.html

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 29.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/29102021.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ குருவே! சரணம்! - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியரே! சரணம் !! - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post.html

ஓம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!! - ஆவணி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 05.09.2021 - https://tut-temples.blogspot.com/2021/09/05092021.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Thursday, June 2, 2022

சித்தர் காப்பு - சித்தர்கள் திருவடி போற்றி! போற்றி!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருபக்தியே கோடி நன்மை தரும். குரு பக்தியை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? குருவின் வழியை,மொழியை பின்பற்ற வேண்டும். இதற்கு அடித்தளமாக இருப்பது போற்றுதல் தானே! இதைத்தான் மாணிக்கவாசகரும் சிவபுராணத்தில் முதலில் தொடங்கும் போது நமச்சிவாய வாழ்க! என்று வாழ்த்தி தொடங்குகின்றார். இது போல் தான் போற்றி..போற்றி நாம் நம் வினைகளை களைய வேண்டும். குருவின் கடைக்கண் பார்வை விழ நாம் ஏங்க வேண்டும். இதற்கு நாம் சித்தர்கள்,ஞானிகள், மகான்கள் திருவடிகளை போற்ற வேண்டும். இதன் பொருட்டு நாம் ஏற்கனவே நம் தளத்தில் சித்தர் காப்பு பாடலை குருவருளால் பகிர்ந்துள்ளோம். எம் குரு யோகிராஜ் வேதாத்திரி  மகரிஷி அவர்களும் அருட்காப்பு,சங்கல்பம் என இரு கண்களை கொடுத்துள்ளார்கள். இந்த நோக்கில் நாம் இங்கே சித்தர் காப்பு பற்றியும், அண்மையில் நாம் பெற்ற சித்தர்கள் அருள்நிலைகளையும் இங்கே குருவருள் துணை கொண்டு பகிர உள்ளோம்.



சித்தர் காப்பு பகிர்விற்கான எண்ணம் நமக்கு திண்டுக்கல் செட்டியபட்டியில் உள்ள சாய்பாபா கோயில் தரிசனத்தில் கிடைத்தது. அங்கே சித்தர் காப்பு பாடல் கண்டு படித்தோம்.இந்தக் கோயில் தரிசனம் பற்றி தனிப்பதிவில் காண்போம். இந்தக் கோயிலில் பிரதானமாக ஸ்ரீ சாய்பாபாவும், கோயில் வெளிப்புறத்தில் 27 நட்சத்திரத்திற்கு என 27 சித்தர்களும் உள்ளார்கள். இங்கே ஒவ்வொரு நாளின் நட்சத்திரத்திற்கு ஏற்ப அன்றைய தினம் சித்தருக்கு அபிஷேகம் செய்து, வழிபாடு செய்து வருவது சிறப்பாகும். எத்தனை நாள் ஏக்கம் இங்கே நமக்கு இன்று நிறைவேறி உள்ளது. ஒரே இடத்தில 27 சித்தர்கள் தரிசனம் நமக்கு கிடைத்தது மிக மிக ஆனந்தமாக இருந்தது. எப்போது 27 சித்தர்களுக்கும் மாலை சூடி நாம் தரிசனம் செய்ய போகின்றோம் என்ற ஏக்கமும் இருந்தது. இதுவும் வைகாசி அமாவாசை அன்று குருவருளால் நம் தளம் சார்பில் இனிப்பு,பூக்கள் கொடுத்து வழிபாடு செய்ய வாய்ப்பாக அமைந்தது. அன்றைய தரிசன அருள்நிலைகளையும் பதிவின் இறுதியில் தருகின்றோம். 

இதோ. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சித்தர் காப்பு இங்கே பகிர்கின்றோம்.

1. முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை
2. முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ;
3. வெத்தி கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ;
4. வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங்காப்பு ;
5. அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ;
6. அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ;
7. பரம கயிலாய குரு போகர் பாதங்காப்பு ;
8. கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு;
9. சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர் பாதங்காப்பு ;
10. இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங்காப்பு ;
11. வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர் பாதங்காப்பு ;
12. மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங்காப்பு ;
13. முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி கமலர் பாதங்காப்பு ;
14. காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங்காப்பு ;
15. பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங்காப்பு ;
16. மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங்காப்பு ;
17. தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங்காப்பு ;
18. காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங்காப்பு ;
19. வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங்காப்பு ;
20. கொல் குணம் போக்கும் கோரக்கர் பாதங்காப்பு ;
21. பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங்காப்பு ;
22. தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர் பாதங்காப்பு ;
23. வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங்காப்பு;
24. போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர் பாதங்காப்பு;
25. நல்ஞானஜோதியை நலமாய் உரைத்திட்ட நற்குதம்பை பாதங்காப்பு;
26. அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு;
27. பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு;
28. காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு;
29. கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு;
30. காப்பான கருவூரார், போகநாதர், கருணையுள்ள அகத்தீசர் பாதங்காப்பு;
31. சட்டைநாதர், மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர் பாதங்காப்பு;
32. முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர், கோப்பான கோரக்கர் பாதங்காப்பு;
33. பதஞ்சலியார், கூர்மையுள்ள இடைக்காடர், சண்டிகேசர் பாதங்காப்பு;
34. வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே". 










காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.

-மகான் ரோமரிஷி

இந்த 14 ஞானிகள் அடங்கிய பாடலை காலையிலும் மாலையிலும் படித்து பாராயணம் செய்தும், பூசை செய்தும் வந்தால் ஞானிகளின் அருள் நிச்சயம் கிடைக்கும். இது போன்ற சித்தர் காப்பு பாடலை தினசரி காலையிலும், மாலையிலு ஓதுவது மிகவும் நன்று. போற்றினால் தானே நம் வினை அகலும்.


அடுத்து திண்டுக்கல் செட்டியபட்டியில் உள்ள சாய்பாபா கோயில் தரிசனத்தில் 27 சித்தர்களின் அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.





























இங்கு ஒரு விசேஷமான முறையில் வழிபாடு செய்வது கண்டும், நம் சித்தர் பெருமக்களின் ஞானம் கண்டு மெய் சிலிர்த்தோம். அது என்ன என்று கீழே உள்ள ஸ்ரீ போக மகரிஷி அருளில் பாருங்கள். இதைப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் சிந்திப்போம். அன்று கொண்டாடிய ஸ்ரீ போகர் ஜெயந்தி விழா பற்றியும் இனிவரும் பதிவில் காண்போம்.

 ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழா - 28.05.2022  அன்று ஸ்ரீ போகரின் அருள் தரிசனம்




அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_23.html

 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

 சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 திரும்பிப் பார்க்கின்றோம்: அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - புரட்டாசி -2017 - https://tut-temples.blogspot.com/2019/08/2017.html

 கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

 இன்றைய குரு பூஜையில் நால்வரின் பதம் பணிவோமாக! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post_13.html

 சித்தர்கள் அறிவோம்! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_13.html

Wednesday, June 1, 2022

தானமும் தவமும் தான்செயல் அரிது

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் அரியது, பெரியது, இனியது, கொடியது என நம் ஒளவைப் பாட்டி அருளிய பாடல்களை படிக்க இருக்கின்றோம். இவை தான் நம்முடைய சொத்து. இவற்றை நாம் உணர்வதோடு மட்டுமின்றி நம் அடுத்த தலைமுறைக்கும் உணர்த்த வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட. இது தான் மிகப் பெரிய ஞானமும் ஆகும். இவற்றையெல்லாம் விடுத்து நாம் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கின்றோம். 

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!

என்ற மருதகாசியின் பாடல் வரிகள் விவசாயத்திற்கு மட்டும் அல்ல. நம் தமிழுக்கும் பொருந்தும். தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பொருந்தும்.

ஔவையார் - அரியது, பெரியது, இனியது, கொடியது

அரியது:

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.

பெரியது:

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.

இனியது:

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே

கொடியது:

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே

இன்று நாம் ஒளவைப் பாட்டி கூறும் அரியது பற்றி இங்கு சிந்திக்க இருக்கின்றோம். பாடலைப் படித்து பார்த்தாலே மிக எளிதாக புரியும். இந்த உலகில் அரிதிலும் அரிதான ஒன்று..அதாவது கிடைத்தற்கரிய பேறு மானிடராக பிறத்தல். இதைத் தான் மாணிக்கவாசகரும் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்  என்று கூறியுள்ளார். எனவே மனிதராகப் பிறத்தல் அரிது ஆகும் என்று நன்றாக இங்கே புரிகின்றது. இவ்வாறு நாம் மனிதராக பிறக்க நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை.

அடுத்த வரிகளில் அவ்வாறு மனிதனாக பிறத்தலிலும் அரிதாக கூன்,குருடு,செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று கூறுகின்றார்.மனிதராக பிறத்தல் அரிது என்றால் கூன்,குருடு,செவிடு, பேடு நீங்கி மனிதராக பிறத்தல் அரிதினும் அரிது. இதுவும் தாயின் கருவறையில் தீர்மானிக்கப்பட்டு நாம் பிறந்து உள்ளோம். இறையின் கருணையால் குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து உள்ளோம்.

இன்னும் அடுத்த வரிகளில்  ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது என்று கூறுகின்றார். இங்கு நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று கொள்ள வேண்டும். அதாவது ஞானமும் கல்வியும் பெறுதல் அடைதல் அரிது என்று கூறவில்லை. மாறாக ஞானமும் கல்வியும் கண்டு மகிழ்ந்து, இன்புற்று, பாராட்டி, சிறப்பிக்க வேண்டும். அப்படியென்றால் கல்வி கற்கும்போது விரும்பி,மகிழ்ந்து கற்க வேண்டும். கல்வி என்பது புறத்தில் நாம் கற்பது. ஞானம் என்பது அகத்தில் நாம் கற்பது. கல்வி வெளியில் இருந்து உள்ளே செல்லும். ஞானம் உள்ளிருந்து வெளியே வருவது என அறியலாம்.

ஒளவையார் அடுத்த வரிகளில் மிக மிக ஆழ்ந்த செய்தியை கூறுகின்றார்.  தானமும் தவமும் தான்செயல் அரிது என்று கூறுவது தான் வாழ்வின் நோக்கத்திற்கு அடிப்படை ஆகும். தானம் செய்வது மிக எளிதா என்ன? பணம் இருக்கும் அனைவராலும் தான,தர்ம அறப்பணிகள் செய்ய முடியுமா? பணம் ஒரு பொருட்டல்ல. மனமே முக்கியம். இதைத்தான் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்ல கேட்டிருக்கின்றோம். அடுத்து தவம் செய்ய வேண்டும். தவம்? தவம் செய்வதும் எளிதான செயலா? தவம் செய்வது என்றால் காட்டுக்கு போய் மரத்தடியில் அன்ன ஆகாரமின்றி தனிமையில் இல்லறம் துறந்து செய்வது அல்ல. தவம் செய்வது என்பது தம் கருமம் செய்வது என்று வள்ளுவப் பெருந்தகையும் கூறுகின்றார். தியானம் செய்ய செய்ய தவம் பழக்கப்படும். 

இந்த தானமும் தவமும் நாம் செய்யும் போது வானவர் நாடு என்று சொல்லப்படும் சொர்க்கத்தின்  வழி திறக்குமாம். 

இப்போது பாடலின் பின்னிருந்து முன்னே செல்வோம்.

சொர்க்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?

ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.

தானமும் தவமும் எப்போது செய்ய முடியும்?

ஞானத்தையும், கல்வியையும் விரும்பினால் ( நயத்தால்) வரும்.

ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.

உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே? அதிலும் நாம் மனிதனாக பிறந்து உள்ளோம். அப்படியென்றால் தானமும் தவமும் செய்து வானவர் நாடு வழி திறக்க செய்வோம்.


மிக மிக எளிமையாக வாழ்வின் நோக்கத்தை நமக்கு நம் ஒளவைப் பாட்டி அருளியுள்ளார். இது தான் இன்றைய தேவையும் கூட.இது இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தேவை ஆகும்.

நம் தேடல் உள்ள தேனீக்கள் குழுவும் தானம்,தர்மம் போன்ற அர்ப்பணிகளில் நாள் தோறும் அன்பர்களின் பொருளுதவி,அருளுதவியால் செய்து வருகின்றது. தவத்தை தினமும் தோறும் கூட்டுப்பிரார்த்தனையில் தொட்டு வருகின்றோம். இம்மாத அறப்பணிகளை தங்கள் பார்க்கவைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் 

2. திருஅண்ணாமலை அன்னதானம் 

3. எத்திராஜ் சுவாமிகள் முதியோர் இல்ல அன்னசேவை 

4. தர்ம சிறகுகள் குழு சிறு காணிக்கை 

5. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை 

6. எண்ணெய் - 1 டின் உபயம் 

7. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை 

8. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு 

9. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை 

10. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை 

இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி, திருமண உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.

இது தவிர மேலும்  மதுரை TUT யாத்திரையில்  அன்னசேவைக்கு சிறு காணிக்கை குருவருளால் கொடுக்கப் பணிக்கப்பட்டோம்.

மதுரை பசுமலை ஸ்ரீ அகத்தியர் கோயில் அன்னசேவை 

ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் அன்னசேவை 

ஸ்ரீ நடனகோபாலநாயகி பிருந்தாவனம் கும்பாபிஷேகம் 

கிண்ணிமங்கலம் பிரதோஷ & குருபூஜை உபயம் 

இவ்வாறு நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றோம். அடுத்து தவத்தை மேற்கொள்ளும் பொருட்டு தினமும் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம். இந்த நித்திய கூட்டுப் பிரார்த்தனை ஜூம் செயலி மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற்று வருகின்றது. கூட்டுப் பிரார்த்தனை 184 ஆவது நாளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. இந்த கூட்டுப் பிரார்த்தனையில் திருவாசகம், சிவ பதிகங்கள், குரு மந்திரங்கள், அகவல் பாராயணம் என செய்து வருகின்றோம். இதன் மூலம் தவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்பது உண்மை 

குருவருளால் தானத்தையும், தவத்தையும் தேடல் உள்ள தேனீக்கள் தினமும் தொட்டு வருகின்றது. இவற்றிற்கு பொருளுதவி, அருளுதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றி கூறி இப்பதிவை முழுமை செய்கின்றோம்.

இறைவா அனைத்தும் நீயே..அனைத்தும் உன் செயலே..அனைத்திற்கும் நன்றி 

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

 குருவருள் பரிபூரணமாகுக! - https://tut-temples.blogspot.com/2022/05/blog-post_11.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html