"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 24, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 26.12.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் நம்மை நம் குருநாதர் வழிநடத்தி வருவதை பார்க்கும் போது,இறைவா! அனைத்தும் நீயே! தெய்வமே! குருநாதா!! என்று மனதுள் அவ்வப்போது வேண்டி வருகின்றோம். இதனை எப்போதும் வேண்ட நம் மனதில் இருத்த முயற்சித்து வருகின்றோம். குருநாதரின் உத்தரவாக இன்றைய பதிவை தொடர் விரும்புகின்றோம். கடந்த செப்டம்பர் மாதம் முதல் நமக்கு நம் குருநாதர் பல உத்தரவுகளை கொடுத்து, ஆலய தரிசனம் மேற்கொள்ள செய்து, நம் கர்ம வினைகளை நீக்கி வருகின்றார். இது கண்கூடாக நன்கு நமக்கு உணர்த்தப்பட்டு வருகின்றது. குருபிரான் நமக்கு கொடுத்த உத்தரவுகளை சுருக்கமாக கண்டு தெளிவோமாக!

1.  தெய்வத் தீவு ( இராமேஸ்வரம்) செல்வதின் முக்கியத்துவம்!

2.  புரட்டாசி சனிக்கிழமை - பசுமலை சக்திமாரியம்மன் கோயில் பெருமாள் வழிபாடு 

3. மகாளய பட்ச வழிபாடு - அன்னசேவை 

4. நவராத்திரி வழிபாடு 

5. ஐப்பசி - காவிரி, தாமிரபரணி நீராடல், நவ கயிலாயம், நவ திருப்பதி தரிசனம் 

6. கார்த்திகை - ஷஷ்டி விரத வழிபாடு, கார்த்திகை தீப தரிசனம், இம்மாதம் முழுதும் முருகப் பெருமான் வழிபாடு 

7. மார்கழி - சதயம் - பசுமலை  லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள் வழிபாடு 

8. மார்கழி - ஆயில்யம் - குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் திரு நட்சத்திர வழிபாடு 

9. மார்கழி மாதம் - தாமிரபரணி நீராடல் 

10. மார்கழி திருவாதிரை - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு

என கூறலாம். இவை அனைத்தும் அன்பர்கள் குறித்து வைத்துக் கொண்டு, 2024 ஆண்டில் சரியாக வழிபாடு மேற்கோண்டு இறையருள் பெற வேண்டி பணிகின்றோம். இதில் குறிப்பிட்டுள்ள மார்கழி திருவாதிரை - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு பற்றி இந்தப் பதிவில் தொடர இருக்கின்றோம்.

சிதம்பர ரகசியம் - திருச்சிற்றம்பல தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு-மதுரை

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்

எவை என்று கூற இதிலும் சூட்சமங்கள் அடங்கியுள்ளது என்பேன் நல்ல முறையாக அமைப்பது எல்லாம் சிறிதாயினும் மூர்த்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது அப்பனே பெரிய அளவில் வருகின்றது மாயை என்பேன் இவ்வுலகத்தில் மாயை பின் மனிதனை அழிக்க.

ஆனாலும் இதனை எல்லாம் சொல்கின்றேன் சூட்சுமங்களை எல்லாம் சொல்லி அப்பனே நல் முறையாக திருத்துங்கள் மனிதனை என்பேன் மனிதன் திருந்தாவிட்டால் அப்பனே பின் இயற்கையும் திருந்தாது என்பேன்.

அப்பனே எவை வேண்டும் என்றுகூட கேட்டாலும் அப்பனே தன் சுயநலத்திற்காக வே இறைவனை வேண்டுகிறார்கள் அதை நாங்கள் ஏற்பதில்லை மகன்களே எப்பொழுதும் கூட.

அப்பனே எல்லோருக்கும் ஒன்றை தெரிவியுங்கள் அப்பனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வணங்க வேண்டும் இதனை தெரிவித்து விட்டால் இறைவனுக்குத் தெரியும் அப்பனே இவையன்றி கூட இன்னும் பல சூட்சமங்கள் இவ்வுலகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.

அப்பனே இவை மட்டுமன்றி அப்பனே மீண்டும் ஈசன் திருத்தலங்கள் கூட எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைக்கூட என்பதை பார்த்தால் அதுவும் ஒரு ஆச்சர்யமே என்பேன். வரும் காலங்களில்.

அப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்றுகூட சிதம்பர ரகசியம் என்கிறார்களே அவ் ரகசியத்தை ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை.

அப்பனே அத்திருத்தலத்தை ஈசனே அமைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை . அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.

அதை அங்கு அவன் வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.

அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான் நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.

இவையன்றி கூற அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில்.

பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன் அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன்.

அப்பனே எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு நல் முறையாக வருடத்தில் ஒரு நாள்  அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்) நடக்கும் என்பேன்.

அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.

அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான்.

ஆனாலும் அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான் அனைவரும் காத்திருப்பார்கள் ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பான்.

அவ்விடத்தில் நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.

அப்பனே இன்னொரு சூட்சுமத்தை சொல்கின்றேன் இப்பொழுது அப்பனே இந்த ஊரிலேயே மீனாட்சி தாய் இருக்கின்றாளே  எப்படி என்று எவை என்று கூற நினைக்கும் பொழுது ஈசனே சிதம்பர ரகசியத்தை ஏற்படுத்தி விட்டான் அதையும் யான் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் பார்வதிதேவி கோபம் கொண்டு  நீ அமைத்தாயா?  யானும் அமைக்கின்றேன் என்று போட்டியில் தனக்கென திருத்தலம் அமைத்துக்கொண்டாள். இப்பொழுது கூட மீனாட்சி திருத்தலம் என்று அழைக்கப்படுகின்றது என்பேன். அத்திருத்தலமே மீனாட்சி கோயில்.

அப்பனே இவையன்றி கூற இன்னும் பல ரகசியங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன் அப்பனே ஒரு ரகசியத்தை சொல்லி விட்டேன்.

இனி ரகசியங்களை ஒன்றொன்றாக சொல்கின்றேன் அப்பனே.

ஆனாலும் இவையன்றி கூற ஓர்நாள் அப்பனே நல் முறைகளாக உள்ளே தங்கி சென்றால் அப்பனே அங்கு எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது ஈசன் உடுக்கை யால் நல் முறைகள் ஆகவே ஓர் நிமிடம் பின் உடுக்கையை ஆட்டி பின் நல் முறைகளாக நடனம் ஆடுவான் என்பேன் .

அங்கு தங்கினால் இச் சத்தமும் கேட்கும் என்பேன் ஆனால் காலப்போக்கில் பல மனிதர்கள் பின் அங்கு சென்று அவனுடைய சத்தம் மனிதன் கேட்டால் மனிதன் பெரும் புகழும் பெரும் செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவார்கள் என்று அதையும் கேடு கெட்ட மனிதர்கள் கெடுத்து விட்டனர்.

அப்பனே இப்பொழுதும் கூட அங்கே ஞானியர்கள் நல் முறைகளாக ஈசனின் உடுக்கை சத்தத்தை கேட்க வருவார்கள் என்பேன்.

ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பாருங்கள் அப்பனே உங்களுக்கே தெரியும் அவையெல்லாம் அப்பனே ஒவ்வொரு சித்தனும் வாழ்ந்த இடம் என்பேன்.

இவை அன்றும் இன்னும் பல பல உண்மைகள் உண்டு என்பேன் இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்து உரைக்கின்றேன் அப்பனே.

அப்பனே அனைவருக்கும் நல்லாசிகள் அப்பனே நலமாக நலமாக அனைத்தும் சொல்லிவிட்டேன் மறு வாக்கும் அதி விரைவிலேயே உரைக்கின்றேன் சூட்சமத்தோடு அப்பனே அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

கேள்வி: உத்தரகோசமங்கை தலத்தின் சிறிதளவுக்கான புராணம் உரைக்க முடியுமா?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! எவற்றின் தன்மைகளை புரிந்து! புரிந்து! அப்பனே! யான் என்ன செப்புவது? ஆனாலும், ஓர் மங்கை, எதை என்று அறிந்து அறிந்து, அதாவது, அத்தலத்தில் இருந்து, எது என்று அறியாமலே, பல மனிதர்களுக்கு உதவிகள், பல தான தர்மங்கள் (செய்து வந்தாள்). ஆனாலும், பல வழிகளிலும் இன்னல்கள். ஆனாலும், ஈசனை நோக்கி நோக்கியே. ஆனாலும், அங்கே உருவெடுத்தான் அப்பனே! ஈசனே!  ஈசனும் உருவெடுத்து, கூடவே பார்வதி தேவியும் வந்திட, ஈசனின் சொத்துக்கள் ஆபரணங்கள், பொக்கிஷங்கள் எல்லாம் அங்கே தான் கிடக்கின்றது அப்பனே! இதை நீ புரிந்து கொள்வாயா? சிறிதளவே சொன்னேன். இன்னும் ஏராளமாக சொல்லிவிட்டால், மனிதனே திருத்தலத்தையும் அழித்து விடுவான்.

"சரி! இதுவே போதும் அய்யா!"

அடுத்து நாம் உத்திரகோச மங்கை தரிசனம் நம் குருநாதர் கூறியபடி காண இருக்கின்றோம். இது நாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பெற்ற தரிசனப் பதிவாகும்.

அன்றைய தினம் குருநாதர் கூறிய ஸ்தல விருட்சத்தில் இரவு 10 மணி முதல் அமர்ந்தோம். தீபமேற்றி, அகத்திய அடியார் ஒருவர் சங்கு நாதம் ஒலிக்க அன்பில் திளைத்தோம். பின்னர் சிவபுராணம் படித்தோம். நேரம் செல்ல செல்ல கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தோம். திருநீற்றுப் பதிகம் படித்தோம். அடியார் பெருமக்கள் அங்கே சூழ, உத்தரகோச மங்கை பதிகங்கள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கே மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது, நாம் ஸ்தல விருட்சத்தில் அமர்ந்து மனதுள் சில மந்திரங்களை மனம் திறம் பட கூறிக் கொண்டே இருந்தோம் அகத்திய அடியார்கள் அங்கே முழுதும் மரத்தை சூழ்ந்து அமர்ந்து இருந்தார்கள்.பின்னர் அதிகாலை 3 மணி அளவில் இறை நமஸ்காரம் செய்து விட்டு , இல்லம் நோக்கி திரும்பினோம். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனின் தரிசனம் எப்படி இருந்தது என குருவின் மொழியில் கேட்டோம்.

உத்திரகோச மங்கை ஈசன் தரிசனம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பின்வாக்கு .

ஆருத்ரா தரிசனம் அன்று  

உத்தரகோசமங்கையில் கூட ஈசனார் பின் பார்வதி தேவியுடன் வந்தானப்பா வந்தானப்பா அப்பனே சுற்றி அப்பனே வளைத்து கொண்டீர்கள் நீங்களும் அப்பனே இவை என்று கூற சோதித்தான் ஈசன் யார் இதை கூட தெரிவித்துவிட்டது என்பதைக்கூட  பின் நெற்றிக் கண்ணில் பார்க்கும் பொழுது இவையோ

என்று கூற அப்பனே இவ் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது என்பேன் நினைத்தாலே அப்பனே முக்தி தருவது இறைவனுடைய கருணை ஈசனே என்பேன் அதனால் அப்பனே வர இயலாதவர்களுக்கும் அங்கு செல்லவில்லையே என்று யார் யோசித்து இருந்தார்களோ அவர்களுக்கும் அப்பனே நிச்சயமாய் அங்கிருந்தே ஆசீர்வதித்தான் அப்பனே அப்பனே நல்விதமாக ஒவ்வொருவருக்கும் அப்பனே எதனை என்று கூற சில சில வழிகளிலும்  கொடுத்தனுப்பினான் ஆசிகள் .
இதனால் கவலைகள் இல்லை.

மறு வாக்கும் செப்புகின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

Saturday, December 23, 2023

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். மார்கழி மாதம் என்றால் திருப்பாவையும், திருவெம்பாவையும் சேர்ந்து நம்மை அன்னையின் வழிபாட்டில் நம்மை ஈர்க்கும். அது போன்று நம்மை அன்னையின் அருள்மழையில் நனைய இன்றைய பதிவில் லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள் தரிசனப் பதிவை காண உள்ளோம். முதலில் லோபாமுத்திரா அம்மாவின் சதய நட்சத்திர நாள் தரிசனத்தை அனைவரும் பெறுவோம்.

சித்தனருள் வலைதளத்தில் இருந்து அன்றைய தரிசனத்தை அப்படியே பகிர்கின்றோம்.
நம் லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திர நாள், அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில், மதுரை சக்தி மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமானின் சன்னதியில் 18/12/2023 திங்கள் கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு அபிஷேக பூஜைகளுடன் சிறப்பாக நடந்தேறியது.

சிலநாட்களுக்கு முன் குருநாதரிடம் இந்த முறை, இருவருக்கும் உள்ள  அபிஷேக பூஜைகளை எங்கு நடத்தலாம் என்று கேட்ட பொழுது, மதுரையில் எம் கோவிலில் வந்து நடத்து என்று உத்தரவிட்டார். ஆகவே கோவில் நிர்வாகத்திடமும், மதுரையில் உள்ள அகத்தியர் இறையருள் அன்ன சேவை மன்றம் குழு நண்பர்களிடமும் பேசி அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திவிடலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் அகத்தியப்பெருமான் சோதனைகளை வைத்துக்கொண்டு காத்திருந்தார் என்று பிறகுதான் புரிந்தது.

16/12 சனிக்கிழமை அன்று கிளம்பி மதுரை சென்று விடலாம் என்று முன்னரே தீர்மானித்திருந்தாலும், அன்று வீட்டை விட்டு கிளம்ப முடியவில்லை. சரி! 17/12 என்று மாற்றி வைத்தேன் பயணத்தை. 17/12 அன்று பூசையில் இருந்த பொழுது, "இன்று கிளம்பினால் உன்னால் போய் சேரமுடியும்!" என்றார் அகத்தியப்பெருமான். இப்படி குருநாதர் தகவல் தந்தால், நிச்சயம் ஏதோ ஒரு விஷயம் இருக்கும், எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவோம் என்று தீர்மானித்தேன்.

அன்று தான் புயலால், மிக பலமாக மழை, எல்லா இடத்தையும் தாக்கிக் கொண்டிருந்தது. ஆறு மணிநேர யாத்திரைக்குப்பின் மதுரையை அடைந்த உடன் நன்றாக மழையில் நனைந்து (ரயிலுக்குள் அவ்வளவு மழை வெள்ளம்) வந்து சேர்ந்தேன். மழை பெய்து கொண்டே இருந்தது.

சரி! நாளை தானே அபிஷேக பூஜை! அகத்தியர் அடியவர்கள் எப்படி வந்து பூஜையில் சேர்வார்கள்? மழை மேகம் விலகுவதாக தெரியவில்லையே! குருநாதர்தான் ஏதேனும் வழி காட்டவேண்டும் என மனதுள் நினைத்துக் கொண்டேன்.

மறுநாள், திங்கட்கிழமை, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

மதியம் 12 மணி ஆகியும் மழை நிற்காததால், அகத்தியப் பெருமானை வேண்ட, "வேண்டுதலை வை! எல்லாவற்றையும் நன்றாக நடத்தி தருகிறேன்" என்று வாக்கு வந்தது. விறு விறுவென மாடிக்கு சென்று அகத்தியப்பெருமான் திருவடியை நினைத்து, ஆகாயத்தை பார்த்தேன். நல்ல மழை மேகம்!

கைகூப்பி மனதுள் வேண்டிக்கொண்டேன். "போதும்! நீங்கள் எல்லோரும் கொண்டாடியது போதும். இனி நாங்கள் கொண்டாட வேண்டும்! விலகி செல்லுங்கள்! கலைந்து செல்லுங்கள்! " என்று வேண்டுதலை வைத்துவிட்டு கீழே வந்துவிட்டேன். 

இப்படி முன் காலங்களில் பலமுறை செய்த பொழுது, சூழ்நிலை சாதகமாக மாறுவதை கண்டு, இயற்கையை பல புண்ணிய காரியங்களுக்கும் உபயோகப்படுத்தியுள்ளேன். பின்னர் ஒரு பெரியவர் "இப்படி எல்லாம் இயற்கைக்கு எதிராக செய்யக்கூடாது! அது மிக பாபம்!" என்று திட்டியவுடன் நிறுத்திக் கொண்டுவிட்டேன். அது முதல், நடக்கிறபடி நடக்கட்டும் என்பதே அடியேன் மனநிலை ஆகிப்போனது.

அடுத்த 30 நிமிடங்களில் மழை நின்றது, மேகம் கலையத் தொடங்கியது. வெளிச்சம் பரவத்தொடங்கியது.

இன்று என்ன கேட்டாலும் கொடுப்பார் போலிருக்கிறது. சரி! அடுத்த வேண்டுதலை வைப்போம் என்று தீர்மானித்து, "அய்யனே! இன்று வந்து பூஜையில் பங்கெடுக்கும் அனைவரையும் பெற்றோர் நீங்கள் இருவரும் வந்திருந்து ஆசீர்வதித்து அவர்கள் மனோபீஷ்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்" என வேண்டிக்கொண்டேன்.

இருந்தாலும், மனது என்னவோ, "இந்த மழைக்கு, அதுவும் புயல் காற்றில் யார் தூரத்தில் இருந்தெல்லாம் வரப்போகிறார்கள்?" என்று நினைத்தது. நீ என்னடா நினைப்பது? என்று அகத்தியப்பெருமான், அடியவர்களை, வேலூர், கோவை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், சென்னை, ஈரோடு என பல இடங்களிலிருந்து அழைத்து வந்திருந்தார்.

வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஒவ்வொரு உழவாரப்பணியாக செய்தனர். ஒரு பக்கம் அபிஷேகத்துக்கு பஞ்சாமிர்த பழங்கள் தயாரானது. மறுபக்கம் பூக்கள், துளசி போன்றவை அர்ச்சனைக்கு ஆய்ந்து/ஆராய்ந்து வைக்கப்பட்டது.சன்னதியை சுற்றி சுத்தப்படுத்திய ஒருவர், வித விதமான அபிஷேக சாமான்களை வாளிகளில் கரைத்து சன்னதி முன் வைத்தனர்.

இப்படிப்பட்ட மழையிலும் வந்து, என் சேய்கள் பூசைக்காக இவ்வளவு செய்கிறார்களே என்று நினைத்தோ என்னவோ, அபிஷேகம் தொடங்குவதற்கு முன்னரே, அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா இருவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தேங்கி நின்றது. ஒரு நிமிடத்தில், அபிஷேகம் தொடங்கியவுடன் அது நீருடன் கலந்து சென்று விட்டது.

ஒரு மணிக்கூருக்கும் மேல், விதவிதமான அபிஷேகங்கள். முதலில் எண்ணெய் காப்பு போடப்பட்டு, பால், தயிர், மஞ்சள்பொடி, மூலிகைகள் பொடி, சந்தனப்பொடி, வாசனாதி திரவியங்கள், அரிசி மாவு, தேன், நெய், பஞ்சாமிர்தம், கடைசியாக விபூதி அபிஷேகம் நடைபெற்றது.  ஒவ்வொரு அபிஷேகத்தையும், மிகுந்த சந்தோஷத்துடன், ஆர்வத்துடன் அம்மையப்பன் ஏற்றுக் கொண்டனர். கடைசியில், சுத்த நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்காக திரை போடப்பட்டது, கதவு சார்த்தப்பட்டது.

அலங்காரத்துக்கு, இருவருக்கும் நிறைய வஸ்த்திரங்களும், ஆபரணங்களும், பூக்களும், மாலைகளும், அடியவர்கள் கொண்டு வந்திருந்தனர். யாருக்கு திரு நட்சத்திரம் என்று கேட்கின்ற அளவுக்கு அலங்காரத்துடன், அகத்தியப்பெருமான் நின்றிருந்தார். அம்மாவுக்கும் அலங்காரம், மிக சிறப்பாக அமைந்தது. அடியவர்கள் கொண்டு வந்த நான்கு புடவைகள் சார்த்தப்பட்டு, நிறைய தாமரை, மல்லிகை, போன்ற பலவிதமான பூக்கள் அலங்காரத்துடன் அருள் பாலித்தார்கள்.

நிமிர்ந்து பார்க்க, சந்திரனே மேகத்தை கலைத்து வந்து எட்டிப்பார்த்தார். 

பல அகத்தியர் அடியவர்களிடம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருவரும், அகத்தியப்பெருமான், லோபாமுத்திராவிடம் எத்தனை அன்பு பூண்டுள்ளார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. அனைவரிடமும் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திர பூசைக்கு (30/12/2023), இங்கு வந்து இயன்ற உழவார பணியை செய்யுங்கள் என வேண்டிக் கொண்டேன். 

அகத்தியர் இறையருள் மன்ற அடியவர்களிடம் பேசிய பொழுது, எல்லா வியாழனன்றும், இங்கு குருவருளால், இரவு அடியவர்கள் பங்கு பெற்று, அன்னதானம் சிறப்பாக நடக்கின்றது என தெரிய வந்தது. அவர்களே ஏற்பாடு செய்திருந்த விதவிதமான அன்னமும், கனி வகைகளும் சன்னதிக்குள் நிவேதனத்துக்காக அனுப்பப்பட்டது. மன்றம் சார்பாக திருவாசகம் முற்றோதல் நடந்தது. வந்திருந்த அடியவர்கள் பங்குபெற்றனர். 

சற்று நேரத்தில், அலங்காரம் முடிந்து மஹா ஆரத்தி எடுக்கப்பட்டது. உடல் முழுவதும் மாலைகளால் மறைக்கப்பட்டு, அம்மா தலையில் தாழம்பூ கிரீடம் வைக்கப்பட்டு, அய்யன் பட்டு கிரீடம் சுமந்து அனைவருக்கும் ஆசீர்வதித்தார்கள். அம்மை அப்பனுக்கு அனைத்தும் செய்துவிட்ட திருப்தியில், அனைவரும் அவர்கள் அருள் பெற்று நின்றனர். எல்லாம் நிறைவாக நடந்தது, மன அமைதியை தந்தது.

வந்திருந்த அனைவருக்கும், பூஜாரி, அம்மையப்பன் சார்பாக, பிரசாதம் வழங்கினார். அகத்தியர் இறையருள் மன்றத்தினர், விதவிதமான உணவு பிரசாதத்தை (தக்காளி சாதம், புளிஹோரை சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல்) விநியோகித்தனர். அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா தாயார் சார்பாக வந்திருந்த அனைவருக்கும், அகத்தியப்பெருமானின் படம் பதித்த ஐந்து ரூபாய் நாணயம், பூசையில் வைத்து கொடுக்கப்பட்டது.

அம்மாவிடம் நேரடியாக, அனைத்தும் திருப்திதானே என்று வினவிட, சற்றுநேரத்தில், லேசாக மழை தூறல் போட்டு ஆம்! என்றது. ஆச்சரியம் என்னவெனில், பின்னர் மழை கடைசிவரை பெய்யவே இல்லை. எல்லாம் அவர் அருள். 

அம்மாவின் திரு நட்சத்திர பூசை அடியவர்கள் பங்குபெற்று மிக சிறப்பாக நிறைவு பெற்றது. மேலும் வருகிற 30/12/2023 (சனிக்கிழமை)  அன்று அகத்தியப்பெருமானின் ஆயில்ய நட்சத்திரம் பூசை நடை பெற உள்ளது, என்பதை தெரிவித்து, அனைவரும் வருக என அழைத்து இந்த பதிவை முழுமை செய்கின்றோம்.

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

Thursday, December 21, 2023

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து , திரு உத்தரகோசமங்கை திருத்தலம் பற்றி இன்றைய பதிவில் நாம் அறிய உள்ளோம். இறைவா! அனைத்தும் நீயே! என்ற சரணாகதி அடைய வேண்டுவதை தவிர வேறொன்று நாம் அறியோம் பராபரமே!! என்று ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து வருகின்றோம். சென்னை புயல் பாதிப்பில் இப்போது தான் மீண்டு வந்து கொண்டிருக்கும் போது, தென் மாவட்டங்களில் மழையின் பாதிப்பு மிக மிக அதிக அளவில் உள்ளது.  நம் தளம் சார்பில் சென்னை மற்றும் தென்மாவட்ட சேவையில் அணில் போன்று சிறு தொகையை குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். இந்த நிலையில் இது போன்ற அவசர கால கட்டங்களில் பல்வேறு வகைகளில் உதவி வரும் அனைத்து அன்பர்களுக்கும் இங்கே நன்றி கூறுகின்றோம்.இதோ! 2023 ஆம் ஆண்டில் இறுதியில் நிற்கின்றோம். ஒவ்வொரு நாளும் கடந்து கடந்து எளிதாக சென்று விடுகின்றது. நாம் இன்னும் ஒன்றுமே செய்யவில்லை என்று தோன்றுகின்றது. சரி.. திரு உத்தரகோசமங்கை திருத்தலம் பற்றிய சிறப்புகளை இன்றைய பதிவில் அறிய தருகின்றோம்.

உத்தரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.

இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.

இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.

இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு.

ஆருத்திரா தரிசனம் இவ்வூரின் சிறப்பாகும். மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளது. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.

உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.

இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.

இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே, சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு. 

ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார்.

மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுருக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான்.

இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சி தந்தார். அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். வண்டோதரி, "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால், குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

மார்கழித் திருவாதிரையில் மரகத நடராஜருக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது?

சஹஸ்ரலிங்கம் இறைவன் முதன் முதலாக உருவாக்கிய இடம். 

பொதுவாக, தாழம்பூவை சிவ பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்!

மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!

அடுத்து குருநாதர் அருளிய வாக்கினை இங்கே அறிய தருகின்றோம்.

கேள்வி: உத்தரகோசமங்கை தலத்தின் சிறிதளவுக்கான புராணம் உரைக்க முடியுமா?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! எவற்றின் தன்மைகளை புரிந்து! புரிந்து! அப்பனே! யான் என்ன செப்புவது? ஆனாலும், ஓர் மங்கை, எதை என்று அறிந்து அறிந்து, அதாவது, அத்தலத்தில் இருந்து, எது என்று அறியாமலே, பல மனிதர்களுக்கு உதவிகள், பல தான தர்மங்கள் (செய்து வந்தாள்). ஆனாலும், பல வழிகளிலும் இன்னல்கள். ஆனாலும், ஈசனை நோக்கி நோக்கியே. ஆனாலும், அங்கே உருவெடுத்தான் அப்பனே! ஈசனே!  ஈசனும் உருவெடுத்து, கூடவே பார்வதி தேவியும் வந்திட, ஈசனின் சொத்துக்கள் ஆபரணங்கள், பொக்கிஷங்கள் எல்லாம் அங்கே தான் கிடக்கின்றது அப்பனே! இதை நீ புரிந்து கொள்வாயா? சிறிதளவே சொன்னேன். இன்னும் ஏராளமாக சொல்லிவிட்டால், மனிதனே திருத்தலத்தையும் அழித்து விடுவான்.

"சரி! இதுவே போதும் அய்யா!"

இனி மேலும் இத்திருத்தல சிறப்புகளை அறிவோம்.

1. உத்தரகோச மங்கை எனும் தலம், சிதம்பரத்துக்கு அடுத்து நடராஜர் திருத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

2. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்தரகோசமங்கை எனும் புண்ணிய திருத்தலம். இந்த மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் முதலான முக்கியமான தலங்களில் இந்தத் தலமும் குறிப்பிடத் தக்கது!

3. புராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த அற்புதமான இந்தத் தலம் குறித்து ஏராளமான தகவல்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

4. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

5. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஏராளமான நிலங்களும் ஆடுகளும் மன்னர் வழங்கி திருப்பணிகள் செய்தார் எனக் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன!

6. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று பெருமையுடன் சொல்கிறது புராணம். மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவனார் ஏராளமான திருவிளையாடல் புராணங்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இந்தத் தலத்தில்தான் நடந்தது என்று வரலாற்று ஆய்வாளும் தெரிவிக்கின்றனர்.

 7. உத்தரகோச மங்கை கோயிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

 8. இந்த தலம் சிவபுரம், தட்சிண கயிலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா க்ஷேத்திரம் பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பத்ரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு உள்ளது என்றும் அதற்கான கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் இந்தப் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றன என்றும் சொல்கிறார்கள்.

 9. மூலவருக்கு மங்களநாதர் எனும் திருநாமம். மங்களேஸ்வரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள், மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி என அழைக்கப்படுகிறாள்.

 10. ஸ்ரீமங்களேஸ்வரியைப் போற்றும் வகையில் வ.த. சுப்ரமணியம்  பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901&-ம் ஆண்டு வெளியான அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

11. ஸ்ரீராமர் வழிபட்ட ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் உள்ளது. ராவணனைக் கொன்ற தோஷத்தில் இருந்தும் பாவத்தில் இருந்தும் விமோசனம் பெறுவதற்காக, ராமேஸ்வரத்தில் வழிபட்டார் என்கிறது அந்த ஆலயத்தின் தல புராணம். இங்கே, உத்தரகோசமங்கையில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தத் தலம் ராமாயண காலத்தைய கல்வெட்டு என கருதப்படுகிறது.

12. இந்தத் தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

13. சிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமான்தான் விசேஷம். இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். இந்த விக்கிரகத் திருமேனியையும் கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கும் போது, நடராஜர் சிலையும் தொன்மையானது எனப் புலப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

14.  கோயில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர் என்பது வித்தியாசமான அமைப்பாக விளங்குகிறது. அதேபோல், முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம்’ எனும் புராதனமான நூல் விவரிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்!

15.  சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் ‘இலவந்திகைப் பள்ளி’  என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது அற்புதம்!

16. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்பு கொண்ட தலம் எனும் பெருமையும் உத்தரகோசமங்கைக்கு உண்டு. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று சிவனார் போற்றப்படுகிறார் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

17.  இந்தத் தலத்தில் சுவாமியை அம்பாள் அனுதினமும் பூஜை செய்வதாக ஐதீகம்! சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரைக்கு வந்ததாக மதுரைப் புராணம் தெரிவிக்கிறது.

18 குறிப்பிட்ட காலம் வரை, இந்தத் தலம் ஆதிசைவர்கள் வசமிருந்ததாம்! பிறகு  ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருவதே இதற்குச் சாட்சி!

19. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாளிகள் கொள்ளை அழகு. சிற்ப நுட்பத்துக்கு சாட்சி. அதில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும். சிற்பிகளின் ரசனையே ரசனை!

20. இத்தலத்து கோயில் குளத்தில் வாழும் மீன்கள் கடல்நீரில் வாழும் மீன்கள் என்பதும் வியப்பு சேர்க்கிறது.

 21. பொதுவாக, தாழம்பூவை பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்!

 22. இங்கு ஆதிகாலத்து வராகி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் வராஹியை வழிபட்டால், தீராத பிரச்னைகள், திருமண்த்தடை போன்றவை விலகும்! ஆக, அந்தக் காலத்திலேயே வராஹி வழிபாடு இங்கே இருந்திருக்கிறது எனப் புலப்படுகிறது!

23.  டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதக்கல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

 24.  காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இங்கு ஞான உபதேசம் பெற்றனர் என்கிறார்கள்.

25.  இங்கே, ஸ்ரீமங்களநாதர் சன்னதி, மங்களேஸ்வரி சன்னதி, மரகதக்கல் நடராஜர் சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே மிக நேர்த்தியான கட்டுமானத்துடனும் சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது!

26.  காரைக்கால் அம்மையாரும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார். உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள்.

27. இங்கே வருடந்தோறும் சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்ஸவம், ஆனி மாதம் பத்துநாள் விழா, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி  திருவாதிரை விழா மாசி மகாசிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள். இந்த விழாக்காள் குறைவின்றி நிகழவேண்டும் என அந்தக் காலத்தில் நிவந்தங்களும் நிதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

28.  மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!

29. 11 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சிவனாரை பிராகாரமாகச் சுற்றி வரும் போது மகாலட்சுமியை வழிபடலாம்.  ராஜகோபுரத்தில் சரபேஸ்வரர் சிலை என அற்புதங்களும் ஆச்சரியங்களும் கொண்ட திருத்தலம் இது!

அப்பப்பா..எத்தனை சிறப்புகள் கொண்ட திருத்தலம். வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று தரிசனம் செய்யும் படி வேண்டுகின்றோம்.