"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 2, 2025

அந்த நாள் இந்த வருடம் வழிபாட்டில் அனைவரும் இணைந்து சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் - 04,05,06.08.2025

 

                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆடி மாதம் என்றாலே அம்மனின் அருள் தான். தினம் தினம் கொண்டாட்டமாக இந்த ஆடி மாதம் இருக்கின்றது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம் என்று சொல்லலாம். ஆடிப்பூரம் அன்று மிக இயல்பாக இரண்டு ஆலய தரிசனங்கள் அமைந்தது.  இன்று ஆடி மாதம் 18 ஆம் நாள். அதாவது இன்று ஆடிப் பெருக்கு என்று கொண்டாடுவார்கள். இன்றைய நாளில் அனைவருக்கும் அருளும், பொருளும் பெருகட்டும் என்று குருமார்களிடம் வேண்டி பணிகின்றோம்.

இன்றைய ஆடி பெருக்கு நன்னாளில் நாம் அனைவரும் இணைந்து உலக நன்மைக்காக சிவபுராண கூட்டுப் பிரார்த்தனையை முன்னெடுப்போம் .  அத்துடன் வருகின்ற 04, 05 மற்றும் 06.08.2025 ஆகிய மூன்று நாட்களும் அனைவருக்கும் அந்த நாள் இந்த வருடம் வருகின்ற மிக முக்கிய மூன்று நாட்களாய் அமைகின்றது .  இந்த மூன்று நாட்களில் முறையே 

04.08.2025 - நம்பிமலை
05.08.2025 - 
பாபநாசம்
06.08.2025 - திருச்செந்தூர் 

செல்லும் அடியார்கள் ஒன்றிணைந்து குழுவாக இயங்கி , உலக நன்மைக்காக சிவபுராணம் , கோளறு பதிகம் ,  நவகிரக தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வேண்டி பணிகின்றோம் . 



04/08/2025 - ஆடி மாதம் - திங்கட் கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம்

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)