"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, December 21, 2023

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து , திரு உத்தரகோசமங்கை திருத்தலம் பற்றி இன்றைய பதிவில் நாம் அறிய உள்ளோம். இறைவா! அனைத்தும் நீயே! என்ற சரணாகதி அடைய வேண்டுவதை தவிர வேறொன்று நாம் அறியோம் பராபரமே!! என்று ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து வருகின்றோம். சென்னை புயல் பாதிப்பில் இப்போது தான் மீண்டு வந்து கொண்டிருக்கும் போது, தென் மாவட்டங்களில் மழையின் பாதிப்பு மிக மிக அதிக அளவில் உள்ளது.  நம் தளம் சார்பில் சென்னை மற்றும் தென்மாவட்ட சேவையில் அணில் போன்று சிறு தொகையை குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். இந்த நிலையில் இது போன்ற அவசர கால கட்டங்களில் பல்வேறு வகைகளில் உதவி வரும் அனைத்து அன்பர்களுக்கும் இங்கே நன்றி கூறுகின்றோம்.இதோ! 2023 ஆம் ஆண்டில் இறுதியில் நிற்கின்றோம். ஒவ்வொரு நாளும் கடந்து கடந்து எளிதாக சென்று விடுகின்றது. நாம் இன்னும் ஒன்றுமே செய்யவில்லை என்று தோன்றுகின்றது. சரி.. திரு உத்தரகோசமங்கை திருத்தலம் பற்றிய சிறப்புகளை இன்றைய பதிவில் அறிய தருகின்றோம்.


உத்தரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.

இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.

இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.

இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு.

ஆருத்திரா தரிசனம் இவ்வூரின் சிறப்பாகும். மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளது. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.

உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.

இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.

இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே, சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு. 

ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார்.

மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுருக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான்.

இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சி தந்தார். அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். வண்டோதரி, "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால், குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

மார்கழித் திருவாதிரையில் மரகத நடராஜருக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.

சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது?

சஹஸ்ரலிங்கம் இறைவன் முதன் முதலாக உருவாக்கிய இடம். 

பொதுவாக, தாழம்பூவை சிவ பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்!

மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!



அடுத்து குருநாதர் அருளிய வாக்கினை இங்கே அறிய தருகின்றோம்.

கேள்வி: உத்தரகோசமங்கை தலத்தின் சிறிதளவுக்கான புராணம் உரைக்க முடியுமா?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! எவற்றின் தன்மைகளை புரிந்து! புரிந்து! அப்பனே! யான் என்ன செப்புவது? ஆனாலும், ஓர் மங்கை, எதை என்று அறிந்து அறிந்து, அதாவது, அத்தலத்தில் இருந்து, எது என்று அறியாமலே, பல மனிதர்களுக்கு உதவிகள், பல தான தர்மங்கள் (செய்து வந்தாள்). ஆனாலும், பல வழிகளிலும் இன்னல்கள். ஆனாலும், ஈசனை நோக்கி நோக்கியே. ஆனாலும், அங்கே உருவெடுத்தான் அப்பனே! ஈசனே!  ஈசனும் உருவெடுத்து, கூடவே பார்வதி தேவியும் வந்திட, ஈசனின் சொத்துக்கள் ஆபரணங்கள், பொக்கிஷங்கள் எல்லாம் அங்கே தான் கிடக்கின்றது அப்பனே! இதை நீ புரிந்து கொள்வாயா? சிறிதளவே சொன்னேன். இன்னும் ஏராளமாக சொல்லிவிட்டால், மனிதனே திருத்தலத்தையும் அழித்து விடுவான்.

"சரி! இதுவே போதும் அய்யா!"

இனி மேலும் இத்திருத்தல சிறப்புகளை அறிவோம்.

1. உத்தரகோச மங்கை எனும் தலம், சிதம்பரத்துக்கு அடுத்து நடராஜர் திருத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

2. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்தரகோசமங்கை எனும் புண்ணிய திருத்தலம். இந்த மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் முதலான முக்கியமான தலங்களில் இந்தத் தலமும் குறிப்பிடத் தக்கது!

3. புராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த அற்புதமான இந்தத் தலம் குறித்து ஏராளமான தகவல்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

4. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

5. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஏராளமான நிலங்களும் ஆடுகளும் மன்னர் வழங்கி திருப்பணிகள் செய்தார் எனக் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன!

6. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று பெருமையுடன் சொல்கிறது புராணம். மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவனார் ஏராளமான திருவிளையாடல் புராணங்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இந்தத் தலத்தில்தான் நடந்தது என்று வரலாற்று ஆய்வாளும் தெரிவிக்கின்றனர்.

 7. உத்தரகோச மங்கை கோயிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

 8. இந்த தலம் சிவபுரம், தட்சிண கயிலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா க்ஷேத்திரம் பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பத்ரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு உள்ளது என்றும் அதற்கான கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் இந்தப் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றன என்றும் சொல்கிறார்கள்.

 9. மூலவருக்கு மங்களநாதர் எனும் திருநாமம். மங்களேஸ்வரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள், மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி என அழைக்கப்படுகிறாள்.

 10. ஸ்ரீமங்களேஸ்வரியைப் போற்றும் வகையில் வ.த. சுப்ரமணியம்  பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901&-ம் ஆண்டு வெளியான அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

11. ஸ்ரீராமர் வழிபட்ட ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் உள்ளது. ராவணனைக் கொன்ற தோஷத்தில் இருந்தும் பாவத்தில் இருந்தும் விமோசனம் பெறுவதற்காக, ராமேஸ்வரத்தில் வழிபட்டார் என்கிறது அந்த ஆலயத்தின் தல புராணம். இங்கே, உத்தரகோசமங்கையில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தத் தலம் ராமாயண காலத்தைய கல்வெட்டு என கருதப்படுகிறது.

12. இந்தத் தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

13. சிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமான்தான் விசேஷம். இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். இந்த விக்கிரகத் திருமேனியையும் கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கும் போது, நடராஜர் சிலையும் தொன்மையானது எனப் புலப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

14.  கோயில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர் என்பது வித்தியாசமான அமைப்பாக விளங்குகிறது. அதேபோல், முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம்’ எனும் புராதனமான நூல் விவரிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்!

15.  சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் ‘இலவந்திகைப் பள்ளி’  என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது அற்புதம்!

16. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்பு கொண்ட தலம் எனும் பெருமையும் உத்தரகோசமங்கைக்கு உண்டு. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று சிவனார் போற்றப்படுகிறார் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

17.  இந்தத் தலத்தில் சுவாமியை அம்பாள் அனுதினமும் பூஜை செய்வதாக ஐதீகம்! சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரைக்கு வந்ததாக மதுரைப் புராணம் தெரிவிக்கிறது.

18 குறிப்பிட்ட காலம் வரை, இந்தத் தலம் ஆதிசைவர்கள் வசமிருந்ததாம்! பிறகு  ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருவதே இதற்குச் சாட்சி!

19. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாளிகள் கொள்ளை அழகு. சிற்ப நுட்பத்துக்கு சாட்சி. அதில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும். சிற்பிகளின் ரசனையே ரசனை!

20. இத்தலத்து கோயில் குளத்தில் வாழும் மீன்கள் கடல்நீரில் வாழும் மீன்கள் என்பதும் வியப்பு சேர்க்கிறது.

 21. பொதுவாக, தாழம்பூவை பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்!

 22. இங்கு ஆதிகாலத்து வராகி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் வராஹியை வழிபட்டால், தீராத பிரச்னைகள், திருமண்த்தடை போன்றவை விலகும்! ஆக, அந்தக் காலத்திலேயே வராஹி வழிபாடு இங்கே இருந்திருக்கிறது எனப் புலப்படுகிறது!

23.  டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதக்கல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

 24.  காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இங்கு ஞான உபதேசம் பெற்றனர் என்கிறார்கள்.

25.  இங்கே, ஸ்ரீமங்களநாதர் சன்னதி, மங்களேஸ்வரி சன்னதி, மரகதக்கல் நடராஜர் சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே மிக நேர்த்தியான கட்டுமானத்துடனும் சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது!

26.  காரைக்கால் அம்மையாரும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார். உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள்.

27. இங்கே வருடந்தோறும் சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்ஸவம், ஆனி மாதம் பத்துநாள் விழா, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி  திருவாதிரை விழா மாசி மகாசிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள். இந்த விழாக்காள் குறைவின்றி நிகழவேண்டும் என அந்தக் காலத்தில் நிவந்தங்களும் நிதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

28.  மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!

29. 11 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சிவனாரை பிராகாரமாகச் சுற்றி வரும் போது மகாலட்சுமியை வழிபடலாம்.  ராஜகோபுரத்தில் சரபேஸ்வரர் சிலை என அற்புதங்களும் ஆச்சரியங்களும் கொண்ட திருத்தலம் இது!

அப்பப்பா..எத்தனை சிறப்புகள் கொண்ட திருத்தலம். வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று தரிசனம் செய்யும் படி வேண்டுகின்றோம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 9

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

           ஓம் குரு மொழியே வேதம் வேதம்

 ஓம் குரு விழியே தீபம் தீபம்

                                                                ஓம் குரு பதமே காப்பு காப்பு 





இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் உள்ளது 


(இந்த வாக்கின் முந்தைய பதிவுகளை  மீள்பதிவு பதிவுகளில் பார்க்கவும்)

(பகுதி 9 - வாக்கு ஆரம்பம் ) 

குருநாதர்:- அதனால் இப்படித்தான் பக்குவங்கள் பட வேண்டும். பக்குவங்கள் பட்டுவிட்டால் உன் விதியைக் கூட யான் சொல்வேன் அப்பனே. அதை மாற்றும் சக்திகள் கூட என்னிடத்திலே இருக்கின்றது அப்பனே. பிரம்மாவிடம் எடுத்துச் செல்வேன் அப்பனே. புரிகின்றதா?

அடியவர்:- புரிகின்றது.

குருநாதர்:- அப்பனே, புரிகின்றது என்று சொல்லிவிட்டாய் என்ன புரிகின்றது? கூறு.

அடியவர்:- பக்குவ நிலையை அடைவதற்கு துன்பம்தான் இறைவன் கொடுத்த வழி. துன்பத்தை ஏற்றுக் கொண்டு இறைவன்பால் மனதை…(இதை சொல்லி முடிக்கும் முன்னர் )

குருநாதர்:- அப்பனே இனிமேல் என்னை ஏதாவது கேட்பாயா என்ன?

அடியவர்:- ஆசிர்வாதம் வேண்டும்.

குருநாதர்:- அப்பனே, என்னுடைய ஆசிர்வாதம் இல்லாமலா இங்கு வந்திருக்கிறாய் நீ சொல்?

அடியவர்:- சரிங்கய்யா. உண்மைதான்.

குருநாதர்:- அப்பனே, சரி என்று எதற்கு கூறினாய்?

அடியவர்:- நீங்க இல்லன்னா இங்கு வரமுடியாது. தெரியும்.

குருநாதர்:- அப்பனே இதை முதலிலேயே சொல்லலாம் அல்லவா?

அடியவர்:- புரிஞ்சுதுங்கய்யா. மன்னித்துகொள்ளுங்கள்.

குருநாதர்:- அப்பனே, பின் அப்பொழுது நீயே புரிந்து கொண்டாயா? நீ தவறு செய்தாயா? தவறு செய்தவன்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்பனே. அதுதான் அப்பனே உன் வாயில் இருந்தே. அப்பனே தவறு செய்தவன் அப்பனே நிச்சயம் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும். தவறு செய்தவனுக்குத்தான் அப்பனே அப்பொழுது நீ தவறு செய்தவனா?

அடியவர்:- ஆமாங்க

குருநாதர்:- அப்பனே, யான் இல்லை என்று சொல்கின்றேன்.

அடியவர்:- தெரியல அய்யா.

குருநாதர்:- அப்பனே தெரியவில்லை என்றால் என்ன?

அடியவர்:- (மௌனம்)

குருநாதர்:- அப்பனே இப்படியே தெரியாது, தெரியாது என்று சொல்லிக் கொண்டே இரு அப்பனே. அனைத்தும் தெரிந்துவிடும். யான் இருக்கின்றேன் அப்பனே.

அடியவர்:- ( அமைதி )

குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கு ஒரு மந்திரம் சொல்லட்டுமா? (அந்த மந்திரம்) அப்பனே “தெரியாது”.

அடியவர்:- (நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் அடியவருக்கு விளக்கம் தருகின்றார்.அதன் பின்..)

குருநாதர்:- அப்பனே எதை தெரியாது என்று கூற வேண்டும்?

அடியவர்:- இறைவன் கூட…

குருநாதர்:- அப்பனே, இப்பொழுது புரிகின்றதா? அப்பனே கடன் எதற்காக? என்பதைக்கூட இதுவும் கூட தெரியாதப்பா. அதனால் அமைதியாக இரு. சிறிது சிறிதாக மாறும் என்பேன்.

அடியவர்:- (அமைதி)

குருநாதர்:- அப்பனே நல்முறையாக சில விசயங்கள், கேள் அப்பனே.
…………………………………..

அடியவர்:- (தனிப்பட்ட 5 முதல் 6 கேள்வி பதில் இங்கு நீக்கப்பட்டது)

……………………………………

குருநாதர்:- அப்பனே அப்படி இருக்க, அப்பனே அனைத்தும் செய்வது மனிதனப்பனே. அதை திருத்துவது யான். ஆனாலும் அப்பனே சில துன்பங்களை கொடுத்துத்தான் திருத்தி விடுகின்றேன். இது தவறா?

(அடியவர்கள் இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். துன்பங்கள் அகத்தின் ஈசன் மூலம் நமது அனைவரின் கர்மம் நீக்கும் நன்மைக்காக வழங்கப்பட்டு, நமது கர்மங்கள் ஆணிவேரோடு முற்றிலும் களை எடுக்கப்படுகின்றது. அதன்மூலம் நல்வாழ்வு கிட்டுகின்றது.)

அடியவர்:- சரிதான்

குருநாதர்:- அப்பனே இப்பொழுது சொல் உந்தனுக்கு துன்பம் கொடுத்தது நல்லதா? கெட்டதா?

அடியவர்:- நல்லதுதான்

குருநாதர்:- அப்பனே இதனால் சில கர்மங்களையும் தொலைத்துவிட்டாய் அப்பனே. அதனால்தான் அப்பனே துனபம் கொடுத்தால் அதன்மூலமே யான் கர்மத்தை துடைப்பேன் (நீக்குவேன்). உந்தனுக்கும் அதுபோலத்தான். உன் பக்கத்தில் இருப்பவனுக்கும் அதுபோலத்தான். யாரை நம்ப வேண்டும் முதலில்?

அடியவர் 1:- இறைவனை

அடியவர் 2:- குருநாதரை

குருநாதர்:- அப்பனே முதலில் அப்பனே உன்னை நம்புங்கள் முதலில். அப்பனே எப்படி என்னை (எங்களை நாங்கள்/அடியவர்களை அடியவர்கள்) நம்புவது என்று நீங்கள் கூறுவீர்கள் அப்பனே. முதலில் யோசித்து செய்யவேண்டும் ஒரு விசயத்தை அப்பனே. இதை செய்தால் நல்லவையா? கெட்டவையா? நிற்கின்றாயே,  பின் கடன் என்று சொல்லிவிட்டேன் அப்பனே. அதை முதலிலே யோசித்திருந்தால் பின் தெரிந்திருக்கும் அப்பனே இதனால் என்ன துன்பம் என்று. அதனால்தான் முதலில் உன்னை உணர் என்று. இது தவறா?

அடியவர்:- தவறில்லை

குருநாதர்:- அப்பனே இதை புரியாமல் சுற்றி திரிந்து அப்பனே வலங்கள் (இறைவனை / குருநாதரை சுற்றி) வந்து வந்து ஒன்றும் நடக்கவில்லை என்றால் எப்படியப்பா? உன் விதியில் இருப்பதுதான் நடக்கும். ஆனாலும் உயர்ந்த பக்தியும் உயர்ந்த புண்ணியங்களும் செய்து கொண்டிருந்தால் அப்பனே யானே மாற்றி அமைப்பேன் இப்புண்ணியங்களை பிரம்மாவிடத்தில் கூறி.

அடியவர்:- அதுக்கும் நீங்கதான் வழி சொல்லணும்

குருநாதர்:- அப்பனே இதனால் பல கர்மாக்கள் உந்தன் விதியில் கூட. யான் பலமுறை பிரம்மாவிடம் சென்று விட்டேன். ஆனால் பின் அகத்திய மாமுனிவரே துன்பங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் இவன் என்று சொல்லிவிட்டான். அதே போலத்தான் உன் பக்கத்தில் உள்ளவனுக்கும் சொல்லிவிட்டான் அப்பனே ஆனால் யாங்கள் உங்களை விட வில்லை.

அடியவர்:- ( மௌனம் )

குருநாதர்:- அப்பனே நீ கேட்கலாம். அறிவுள்ளவன்தானே. அகத்தியனே பின் அனைவருக்கும் நன்மை செய்கின்றீர்களே. என் விதியை மாற்றலாமே என்று. அப்பனே அனைத்திற்கும் மூலப்பொருள் (ஆதி ஈசன்) இருக்கின்றது. அவ்மூலப்பொருளை அடைந்து உந்தனுக்காக யான் விதியை மாற்றி விடுகின்றேன். பின் நாளை என்னைப் பார்த்து பிரம்மன் முறைத்துக் கொள்வான் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எப்பொழுது பின் எவ்மனிதனுக்கு தகுதி பின் எவ்விடத்தில் இருக்கின்றதோ அதை பார்த்துத்தான் யான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன். இதனால்தான் சில கர்மாக்களை உங்களை கஷ்டத்தை உள் அடக்கி மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்றேன். அனைத்தும் மாறும் அப்பா கவலையை விடுங்கள். அப்பனே இதை இருவருக்கும் மட்டும் சொல்லவில்லை. (உலகத்தில் உள்ள) அனைவருக்கும் சொல்கின்றேன்.

அடியவர்:- ( அமைதி )

குருநாதர்:- அதனால் மனிதன் என்றால் கஷ்டம்தான். அப்பனே கடலில் நீந்த வேண்டும். கடலில் நீந்துவது எவ்வளவு கஷ்டம் என்று அனைவரும் உணர்ந்ததே என்பேன். அதில் என்னென்ன ஜீவராசிகள் இருக்கும். உங்களை துரத்தும். மீண்டும் பிறவிகள் தேவையா? அப்பனே. அதனால் சித்தர்களை நம்பினோர்க்கு நிச்சயம் மறுபிறவி இல்லையப்பா சொல்லிவிட்டேன். அதனால் கஷ்டங்களை இப்போதே தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் உங்களை யான் விடமாட்டேன் சொல்லிவிட்டேன். அப்பனே சித்தனை வணங்குவதற்கும், சித்தன் நாமத்தை உச்சரிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டுமப்பா. அத்தகுதி இல்லாவிடில் நிச்சயம் எங்களை வந்தடையவும் முடியாது. எங்கள் பெயரை உச்சரிக்கவும் முடியாது என்பேன் அப்பனே. அப்பொழுது நீங்கள் எல்லாம் புண்ணியவாதிகளே.

அடியவர்:- (இந்த அமுத வாக்கை கேட்ட அடியவர்கள் பல துன்பங்களில் இருந்தாலும் மிக்க மனம் மகிழந்தனர்.) மிக்க நன்றி ஐயா.

குருநாதர்:- அதனால் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள். முதலில் இவ்வாறு வாழந்தாலே உன் விதியின் ரகசியத்தையே யான் சொல்லி அப்பனே ஏனைய சித்தர்களும் சொல்வார்களப்பா. அதில் இருந்து நீ எதற்காக வந்தாய் என்பதை கூட சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் போராடினாலும் உன் விதியை யாராலும் சொல்ல முடியாதப்பா. பணங்கள் பின் ஏமாந்து ஏமாந்து கர்மத்தையும் சேகரித்து சேகரித்து மீண்டும் மீண்டும் பிறவிக்குள் நுழைந்து கஷ்டங்கள்தான் பட வேண்டும். சொல்லிவிட்டேன் அப்பனே. அப்பனே அகத்தியன் வாக்குகள் கேட்பதற்கும் தகுதி இருக்க வேண்டும். அப்படி தகுதி இல்லாவிடில் அப்பனே நிச்சயம் அவன் என்ன செய்தாலும் பிரயோஜனம் இல்லையப்பா. பிரயோஜனம் இல்லை. அப்பனே நீங்கள் அனைவருமே கஷ்டங்களுக்குள் நுழைந்து நுழைந்து வந்து கொண்டுதான் (இருக்கின்றீர்கள்). அதனால்தான் இவ்வாக்குகள் உங்களுக்கு சேரட்டும் என்று அப்பனே இன்னும் (உலகெங்கும் உள்ள) என் பக்தர்களுக்கு சேரட்டும் என்று (இந்த வாக்கை) சொல்லி இருக்கின்றேன் அப்பனே.

(இந்த மதுரை வாக்கின் அனைத்து பகுதிகள் அனைத்தும் மிக மிக அதி மிக அடியவர்கள் அனைவருக்கும் இந்த வாக்கு உங்களுக்கு என்று நன்கு உணர்ந்து இந்த வாக்குகளில் குருநாதர் சொல்லிய அறிவுரைகளை அன்புடன் ஏற்று, அதன்படி செயல்பட்டு, உங்கள் உயர் முதல் தர புண்ணிய பலங்கள் அதிகரித்து, உங்கள் கர்மங்கள் வினைகள் நீக்கப்பட்டு, அருள் நல்வாழ்வை அடைந்து, பிறருக்கு சேவை செய்து மாமனிதனாக வாழுங்கள்.)

அதனால் வாழ்க்கையில் உயர்ந்தவராக வேண்டும். இறைவன் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பனே நண்மைகளே பின் மனிதனுக்கு ஆகவேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் துன்பத்தில் மிதக்க வேண்டும் அப்பனே. அவ்துன்பத்தில் மிதந்தால்தான் அப்பனே வெற்றிகளும் உண்டு. அப்பனே இன்பமும் உண்டு. பின் இறைவன் பக்கத்தில் பின் இருக்கும் வாய்ப்பும் கிட்டும்.




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-8.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

Saturday, December 16, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - மதுரை பசுமலை லோபாமுத்திரா தாயார் குரு பூசை - மார்கழி - சதயம் - 18.12.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய மார்கழி முதலாம் நாளில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். மார்கழி மாதம் என்றால் திருப்பாவையும், திருவெம்பாவையும் சேர்ந்து நம்மை அன்னையின் வழிபாட்டில் நம்மை ஈர்க்கும். அது போன்று நம்மை அன்னையின் அருள்மழையில் நனைக்க நம் குருநாதர் கொடுத்த உத்தரவை இங்கே அனைவரும் அறியத் தருகின்றோம்.

அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, ஒவ்வொரும் மாதமும் கூடுவாஞ்சேரியில் குருநாதருக்கு ஆயில்ய வழிபாடு செய்து வருகின்றோம். இந்த வழிபாட்டின் மூலம் சித்தர் பெருமக்களின் அருளை பெற்று வருகின்றோம். குருநாதர் அகத்தியருக்கு ஆயில்ய வழிபாடு என்று கூறும் போது, லோபாமுத்ரா தாயாருக்கு எந்த நட்சத்திரத்தில் வழிபாடு செய்வது என்பது நமக்குள்ளும், அகத்தியர அடியார்களுக்கும் இருக்கின்ற பெரிய கேள்வியாக இருந்தது. இதற்கு நம் குருநாதரிடம் கேட்ட பொழுது அவர் உரைத்த உத்தரவை அப்படியே தருகின்றோம்.

வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று வழிபாடு செய்யுங்கள். குறைந்த பட்சம் அருகில் உள்ள அகத்தியர் பெருமான் ஆலயங்களுக்கு சென்று மனதார அப்பனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இல்லையென்றால் வீட்டில் நித்திய வழிபாட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றி, குருநாதர் போற்றி, லோபாமுத்திரா தாயார் போற்றி செய்து வழிபாடு செய்யுங்கள். நாமும் குருவருளால் நம் தளம் சார்பில் கூடுவாஞ்சேரியில் மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் குருநாதரிடம் நேரில் சென்று வழிபாடு செய்ய வேண்டுகின்றோம். அன்னையின் அஷ்டோத்திர சத நாமாவளியை இன்றைய பதிவில்  பகிர்கின்றோம்.

இதன் மூலம் நமக்கு நாளை லோபாமுத்திரா தாயார் வழிபாடு செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. முதலில் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்ட மனநிலையில் மார்கழி ஆயில்யம் அமைந்து வந்தது. இந்த ஆண்டு முதல் நமக்கு இரண்டு நாள் கொண்டாட்டமாக மார்கழி சதய வழிபாடும் சேர்ந்து உள்ளது. 


லோபாமுத்திரா அம்மா, அகத்தியப்பெருமான் ஆகியோரது திருநட்சத்திரங்கள் இந்த மார்கழி மாதம் கீழ் கண்ட தினங்களில் வருகிறது.

  • டிசம்பர் - 18/12/2023 திங்கட்கிழமை அன்று லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திரம் - சதயம்!
  • டிசம்பர் - 30/12/2023 சனிக்கிழமை அன்று அகத்தியப்பெருமானின் திருநட்சத்திரம் - ஆயில்யம்!

நம் குருநாதரிடம் அந்த நாட்களில் அபிஷேக பூஜைகளுக்காக உத்தரவு கேட்ட பொழுது,

"மதுரையில் எம் ஆலயத்தில் இரு தினங்களும் வந்து செய்யவும்!" என உரைத்தார்.

கோவில் நிர்வாகத்தினரிடம், பூஜாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பூசைக்கான அனுமதி அளித்துள்ளனர். பூசாரியும், அந்த இரு தினங்களிலும், மாலை 5 அல்லது 6 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தர ஒப்புக்கொண்டுள்ளார்.

அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூ வாசகர்கள், அடியவர்கள் இயன்றவரை வந்து பங்கு பெறலாம். இங்கு வர முடியாதவர்கள், இரு நாட்களையும் குறித்து வைத்துக் கொண்டு தங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள அகத்தியப்பெருமான் கோவிலுக்கு சென்று பூசைகளில் ஈடுபட்டு அகத்தியப்பெருமான் & லோபாமுத்திரையின் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை அகத்திய மகரிஷி ஆலயம் முகவரி

https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
 
அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம்,
தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004
தமிழ் நாடு, இந்தியா.

திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில்.

மதுரை To திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு Thiagarajar Engineering Collegeக்கு முந்தின ஸ்டாப்.

Bus Route No: 5 A, B, C, D, E,   9A   14 A, B    22,    48 A, B, C, D

Shri Arulmigu Sakthi Mariamman Temple,
Thiagarajar Colony,
Pasumalai, 625004, Madurai, Tamil Nadu State, India

https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

இதனையொட்டி நம் குருநாதர் அருளிய வாக்கினை இனி காண உள்ளோம்.

சமீபத்தில், அகத்தியப்பெருமானின் உத்தரவால், அவரது ஜீவநாடி, அகத்தியர் ராஜ்ஜியம் என்கிற பாலராமபுரம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. காகபுசுண்டர் சித்தர் வந்து வாக்குரைத்தார். அதன் பின்னர் அகத்தியப்பெருமான் வந்தமர்ந்து பொது கேள்விக்கான வாக்குகளை அளித்தார். பல கட்டங்களாக உரைக்கப்பட்ட அருள் வாக்குகளில், மிக முக்கியமான ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் அடியேனை மிக உற்சாகம் அடையச் செய்தது. அதை உங்கள் அனைவரிடமும் உடனேயே தெரிவிக்க நினைத்து இந்த ஒரு தொகுப்பு. கவனிக்க! இந்த வாக்கின் அடிப்படையில், அகத்தியர் அடியவர்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், அதிக நேரம் இல்லை. ஆகவே, அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு, இதை மட்டும் கூறுகிறேன்.

நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்வி:-

"உங்களுடைய திருநட்சத்திர ஜெயந்தி ஜனவரி 09ம் தேதி வருகிறது. உங்களுடைய குழந்தைகளாக இருக்கிற நாங்கள் எல்லோரும், மிக சிறப்பாக உங்களுக்கு அபிஷேக பூஜை செய்யவேண்டும் என விருப்பப்படுகிறோம். அதற்க்கு நீங்கள் அனுமதி/ஆசிர்வாதம் அளித்துவிட்டீர்கள். நீங்கள்தான் நடத்திக்கொள்ளப் போவதாகவும் சொல்லிவிட்டீர்கள். அது தொடர்பான ஒரு விஷயம் என்னவென்றால், இரண்டு செய்திகளை கூறுங்கள்.

லோபாமுத்திரா தாயார் பிறந்த தமிழ் மாதமும், நட்சத்திரமும் சொல்லிக் கொடுங்கள். அந்த தினத்திலும், உங்கள் சேய்கள், தாயாருக்கும் சிறப்பாக அபிஷேக பூஜை வருடத்தில் ஒரு நாளேனும் செய்ய விருப்பப்படுகிறார்கள். அதற்காகத்தான் கேட்கிறோம்."

அகத்தியப்பொருமானின் பதில் வாக்கு:-

"எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே. ஆனால், ஒன்றை மட்டும் யான் உறுதிப்படுத்துவேன். சித்தர்களுக்கும் எது என்று அறிய, நாள் இல்லை, நட்சத்திரம் இல்லை, ராசிகள் இல்லை. ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து செய்கின்றார்களோ, அதையும், யான் ஏற்றுக்கொள்வேன் அப்பனே.

ஆனாலும், எதை என்று அறிய, கூறுகிறேன், இவ் மார்கழி திங்களில், கும்பம் (ராசி), சதயம் (நட்சத்திரம்)." (அடியேன் விரிவான வாக்கினை பின்னர் தெரிவிக்கிறேன்).

உடனேயே, சதயம் நட்சத்திரம் என்று வருகிறது என பார்க்க, பஞ்சாங்கத்தை புரட்டினால் 28/12/2022, புதன் கிழமை அன்று வருகிறது. இது ஒரு மிகப்பெரிய தகவல். உடனேயே, பாலராமபுரம் கோவில் பூஜாரியிடம் பேசி அன்றைய தினம் மிக சிறப்பாக லோபாமுத்திரா தாயாருக்கு அபிஷேக பூஜைகளை செய்ய வேண்டும் என வேண்டினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

அடியவர்களே! உங்களால் இயன்றவரை அன்றைய தினம் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அகத்தியர் கோவிலில், இருவருக்கும் அபிஷேக பூஜைகளை செய்து, அம்மாவுக்கு சிறப்பான தினமாக மாற்ற வேண்டுகிறேன். எண்ணம் இருந்தும், அருகில் அகத்தியர் கோவில் இல்லை என்றால், பாலராமபுரம் கோவிலில் தொடர்பு கொள்ளுங்கள். பாலராமபுரம் கோவில் தொடர்பு விவரங்கள் "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வலை தளத்தில் வலதுபக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.












அன்னையின் அஷ்டோத்திர சத நாமாவளியை இங்கே பகிர்கின்றோம்.

ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா அஷ்டோத்தர சத நாமாவளி:

1. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா மாத்ரே நம:
2. ஓம் ஸ்ரீ அகஸ்த்யேஸ்வரியே நம:
3. ஓம் ஸ்ரீ ப்ரஹ்மஸ்வரூபிண்யே நம:
4. ஓம் ஸ்ரீ சக்திமாயாயை நம:
5. ஓம் ஸ்ரீ தேவிரூபாயை நம:
6. ஓம் ஸ்ரீ பிராணசைதந்யாயை நம:
7. ஓம் ஸ்ரீ ரக்ஷாபாலாயை நம:
8. ஓம் ஸ்ரீ கர்மகாரிணை நம:
9. ஓம் ஸ்ரீ மனோசைதந்யாயே நம:
10. ஓம் ஸ்ரீ வாக்சைதந்யாயே நம:

11. ஓம் ஸ்ரீ ரக்ஷாரூபிண்யே நம:
12. ஓம் ஸ்ரீ தீபாரூடாயே நம:
13. ஓம் ஸ்ரீ சப்தாரூடாயே நம:
14. ஓம் ஸ்ரீ வாயுரூபிண்யே நம:
15. ஓம் ஸ்ரீ ப்ரித்வீஸ்வர்யை நம:
16. ஓம் ஸ்ரீ தேவோபசகாயை நம:
17. ஓம் ஸ்ரீ ரிஷிபத்னியை நம:
18. ஓம் ஸ்ரீ ரிஷிரூபிண்யை நம:
19. ஓம் ஸ்ரீ நக்ஷத்திரரூபிண்யை நம:
20. ஓம் ஸ்ரீ ஆசாரக்ஷேஸ்வர்யை நம:

21. ஓம் ஸ்ரீ நவ நவகர்மண்யே நம:
22. ஓம் ஸ்ரீ நவரசப்ரியாயை நம:
23. ஓம் ஸ்ரீ ஸப்தசாகரரூபிண்யே நம:
24. ஓம் ஸ்ரீ அந்டகடாஹதீப்தியே நம:
25. ஓம் ஸ்ரீ பிரபஞ்ச சப்தப்ரதாயின்யே நம:
26. ஓம் ஸ்ரீ மனோஅலங்காராதேவியே நம:
27. ஓம் ஸ்ரீ பக்தஜன ரக்ஷகாயை நம:
28. ஓம் ஸ்ரீ சிவசக்திரூபிண்யே நம:
29. ஓம் ஸ்ரீ பரம்ஜ்யோதியே நம:
30. ஓம் ஸ்ரீ அலங்காரப்ரியாயே நம:

31. ஓம் ஸ்ரீ தீபசைதன்யாயே நம:
32. ஓம் ஸ்ரீ வாஸ்துசில்பினே நம:
33. ஓம் ஸ்ரீ ரூபலாவண்யாயே நம:
34. ஓம் ஸ்ரீ சாந்திஸ்வரூபிண்யே நம:
35. ஓம் ஸ்ரீ ரிஷீஸ்வர்யே நம:
36. ஓம் ஸ்ரீ த்ரிலோக சாந்திதாயின்யே நம:
37. ஓம் ஸ்ரீ சிவபூஜநிராதாயை நம:
38. ஓம் ஸ்ரீ சக்திபூஜநிராதாயை நம:
39. ஓம் ஸ்ரீ கனேசபூஜநிராதாயை நம:
40. ஓம் ஸ்ரீ சண்முகபூஜநிராதாயை நம:

41. ஓம் ஸ்ரீ போதஸ்வரூபிண்யே நம:
42. ஓம் ஸ்ரீ ரக்ஷாகாரணசக்தியை நம:
43. ஓம் ஸ்ரீ சிக்ஷாகாரணசக்தியை நம:
44. ஓம் ஸ்ரீ மஹாஉபதேசிகாயை நம:
45. ஓம் ஸ்ரீ சக்திவரேண்யாயை நம:
46. ஓம் ஸ்ரீ ஐம் ஸ்வரூபசக்தியை நம:
47. ஓம் ஸ்ரீ த்ரிலோக கர்மராக்ஷாதேவியை நம:
48. ஓம் ஸ்ரீ ஸௌந்தர்யஸ்வரூபாயை நம:
49. ஓம் ஸ்ரீ காரியகாரணபோதினை நம:
50. ஓம் ஸ்ரீ நவகீர்த்திசக்தியை நம:

51. ஓம் ஸ்ரீ காவேரி மாத்ரே நம:
52. ஓம் ஸ்ரீ பிரம்மாண்டசக்தியை நம:
53. ஓம் ஸ்ரீ பிராமணப்ரியாயை நம:
54. ஓம் ஸ்ரீ சத்யதர்மஸ்வரூபிண்யை நம:
55. ஓம் ஸ்ரீ சாதுரக்ஷ மாத்ரே நம:
56. ஓம் ஸ்ரீ சத்ருசம்ஹாரசக்தியை நம:
57. ஓம் ஸ்ரீ யந்திரபல மாத்ரே நம:
58. ஓம் ஸ்ரீ தந்திரபல மாத்ரே நம:
59. ஓம் ஸ்ரீ ரத்னஸ்வரூபிண்யே நம:
60. ஓம் ஸ்ரீ வ்ருக்ஷப்ரியாயை நம:

61. ஓம் ஸ்ரீ அன்னரக்ஷா மாத்ரே நம:
62. ஓம் ஸ்ரீ ப்ராணரக்ஷா மாத்ரே நம:
63. ஓம் ஸ்ரீ குடும்ப ஐக்யப்ரதாயின்யை நம:
64. ஓம் ஸ்ரீ சந்தானரக்ஷாகாரிண்யை நம:
65. ஓம் ஸ்ரீ புவனேஸ்வர்யே நம:
66. ஓம் ஸ்ரீ பிரபஞ்சசக்தியை நம:
67. ஓம் ஸ்ரீ வித்யாரக்ஷகாயை நம:
68. ஓம் ஸ்ரீ ஜீவரக்ஷகாயை நம:
69. ஓம் ஸ்ரீ வாராதிப சேவாதல்பராயை நம:
70. ஓம் ஸ்ரீ மாஸாதிப ஸேவாநிரதாயை நம:

71. ஓம் ஸ்ரீ திதிசக்திதேவ்யை நம:
72. ஓம் ஸ்ரீ நக்ஷத்ரசக்திதேவ்யை நம:
73. ஓம் ஸ்ரீ தெய்வபக்தி அநுக்ரஹதாயின்யை நம:
74. ஓம் ஸ்ரீ மானவரக்ஷாதாயின்யை நம:
75. ஓம் ஸ்ரீ சஹரிஷிசாந்தியை நம:
76. ஓம் ஸ்ரீ ஸஹாமாதாரக்ஷகாயை நம:
77. ஓம் ஸ்ரீ சாயிசாந்திரூபிண்யை நம:
78. ஓம் ஸ்ரீ அம்ருதானந்தரூபிண்யை நம:
79. ஓம் ஸ்ரீ வானரக்ஷா மாத்ரே நம:
80. ஓம் ஸ்ரீ வனரக்ஷா மாத்ரே நம:

81. ஓம் ஸ்ரீ பாவனரக்ஷாமாத்ரே நம:
82. ஓம் ஸ்ரீ பார்யாபர்த்ரு சுகதாயின்யை நம:
83. ஓம் ஸ்ரீ வாத்யகலாவித்யா ரக்ஷகாயை நம:
84. ஓம் ஸ்ரீ மநோசக்திரூபிண்யை நம:
85. ஓம் ஸ்ரீ கர்மசக்திமாத்ரே நம:
86. ஓம் ஸ்ரீ ஞானதீபமாத்ரே நம:
87. ஓம் ஸ்ரீ ஸஹதேவத்யானமாத்ரே நம:
88. ஓம் ஸ்ரீ ஓஷத ஸ்வரூபிண்யை நம:
89. ஓம் ஸ்ரீ ராஜ்யமாத்ருகாமாத்ரே நம:
90. ஓம் ஸ்ரீ சத்யகர்மதேவ்யை நம:

91. ஓம் ஸ்ரீ மானஸகர்ம சுத்திப்ரதாயினை நம:
92. ஓம் ஸ்ரீ வாச்சா கர்ம ரக்ஷகாரிண்யை நம:
93. ஓம் ஸ்ரீ ஜீவஜ்யோத்யை நம:
94. ஓம் ஸ்ரீ பஞ்சப்ராணேஸ்வர்யை நம:
95.  ஓம் ஸ்ரீ தசப்ரணேஸ்வர்யை நம:
96. ஓம் ஸ்ரீ அஷ்டாங்கவித்யாரூபிண்யை நம:
97. ஓம் ஸ்ரீ ஹடயோக விசாரதாயை நம:
98. ஓம் ஸ்ரீ ஔஷத சக்த்யை நம:
99. ஓம் ஸ்ரீ ஜீவசைதன்ய மாத்ரே நம:
100. ஓம் ஸ்ரீ பரமசத்ய ப்ரதீபாயை நம:

101. ஓம் ஸ்ரீ காமப்ரதாயன்யை நம:
102. ஓம் ஸ்ரீ ஆனந்தப்ரதாயின்யை நம:
103. ஓம் ஸ்ரீ மோக்ஷதாயின்யை நம:
104. ஓம் ஸ்ரீ ப்ரத்யக்ஷதேவ்யை நம:
105. ஓம் ஸ்ரீ சங்கீதப்ரியாயை நம:
106. ஓம் ஸ்ரீ ஓம்காரஸ்வரூபாயை நம:
107. ஓம் ஸ்ரீ சிவசக்தியைக்ய ஸ்வரூபிண்யை நம:
108. ஓம் ஸ்ரீ அகஸ்த்ய தர்மபத்ன்யை நம:

ll இதி ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம் ll



அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

Wednesday, December 13, 2023

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

           ஓம் குரு மொழியே வேதம் வேதம்

 ஓம் குரு விழியே தீபம் தீபம்

                                                                ஓம் குரு பதமே காப்பு காப்பு 





இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


(பகுதி 8 - வாக்கு ஆரம்பம் ) 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

குருநாதர்:- அப்பனே அதாவது கடனுக்காக என்று (அகத்தியனிடம் கேட்கின்றீர்கள்) அனைவருமே. கடனை அடைப்பதற்காகத்தான் பிறவியே எடுத்து வந்திருக்கின்றீர்கள். அவ்கடன் (பிறவிக்கடன்) எப்படியப்பா அடைபடும். நீ (பணமாக) கடன் வாங்கியது அடைந்துவிடும். ஆனாலும் அப்பனே, அனைவருமே ஒரு கடனை பின் அடைக்க உலகத்திற்கு வந்திருக்கின்றார்கள் அப்பனே. அவ்கடன் எப்போதுதான் அடைக்கப் போகின்றீர்கள்? அவ்கடனை அடைத்தால்தான் மோட்சம். இல்லை என்றால் இல்லையப்பா.

அடியவர்:- சரிங்கய்யா

குருநாதர்:- ஆனால் அவ்கடன் மிகப் பெரியதப்பா. வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் ஒவ்வொருவருக்கும் எப்படி அடைக்க வேண்டும் என்பதைக்கூட. அதை விட்டு விட்டு பணத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. முட்டாள் மனிதர்களே.

அடியவர்:- (மௌனம்)

குருநாதர்:- அப்பனே, அவ்கர்மா கடனை அடைத்து விட்டால் துன்பங்கள் என்பதே நெருங்காதப்பா. ஆனாலும் அதற்கு பக்குவங்கள் பட வேண்டும். பல பல வழிகளிலும் கூட துன்பங்கள் பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், அப்பனே கடன்கள் அடைக்க வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் நீங்கள் இவ்வுலகத்திற்கு நீங்கள் கடனுடனே வந்திருக்கின்றீர்கள் அனைவருமே. அவ்கடனை அடைக்க வேண்டும் என்றால் அதற்கு  சரியான தீர்வு துன்பம்தானப்பா. அப்பொழுது நீங்கள், இதிலிருந்து என்ன உந்தனுக்கு பின் தெளிந்தது கூறு?

அடியவர்:- துன்பத்தை அனுபவித்து கடைனை தீர்க்கணும்.

குருநாதர்:- அப்பனே இதனால் தீபங்கள் அப்பனே ஏற்றுகின்றாயே, அப்பனே ஆனாலும் ஏற்றிவிட்டால் மட்டும் அப்பனே நன்மைகள்  ஆகிவிடுமா என்ன? அப்பனே. இவை எல்லாம் (மதுரையில் உரைத்த வாக்குகள் அனைத்தும்) நீ சொல்ல வேண்டும். அப்பனே புண்ணியங்களும் செய்ய வேண்டும். இவை எல்லாம் அங்கு அங்கு செப்ப வேண்டும் மனிதர்களுக்கு அப்பொழுதுதான் புண்ணியம் மிகுந்து காணப்படும் அப்பா. இல்லை என்றால் அப்படியேதான் அப்பனே. மண்ணை கையில் எடுத்துக் கொண்டேதான் (பிரயோஜனம் ஏதும் இல்லாமல்) செல்ல வேண்டும் சொல்லிவிட்டேன்.
————————————————
(அகத்திய பிரம்ம ரிஷிகள் மிக உயர்ந்த புண்ணியம் எது என்ற வாக்கில் உரைத்த வாக்கினை இங்கு கீழே தருகின்றோம். இந்த வாக்கின் முழு பதிவு சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு! என்ற பதிவில் படிக்கவும். இந்த பதிவு உங்கள் பார்வைக்கு

https://siththanarul.blogspot.com/2022/03/1097.html

இந்த பதிவில் உள்ள உயர் புண்ணியம் தொடர்பான வாக்குகளை பாரப்போம்:-

அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலை வகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே. 

அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்துச் சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட அப்பனே இவையன்றி கூற இப்படிச் செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றி இறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக் கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால் அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள்.

அனைவரும் அன்னத்தையும் இவையன்றி கூற யான் எதனை என்றும் குறிப்பிட இல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூற (அன்னதானம் முதலிய) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின் மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே. 

அப்பனே பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலைமைகள் மாறும். மாறும் என்பேன்

எனவே அடியவர்கள் அன்னதானம், தீபங்கள் ஏற்றும்போது அவர்களுக்கு நல் வழி சொல்லி அவர்களை கடைபிடிக்கச் செய்யுங்கள். ஏதும் தெரியாத மனிதர்களுக்கு குருநாதர் காட்டிய நல் வழிகளை எடுத்து கூறுங்கள். அவர்கள் அதை பின்பற்றினால் அதுவே உங்களுக்கு முதல் மிக உயர் புண்ணியத்திற்கு வழி வகுக்கும்.)
———————————————

அடியவர்:- ( அடியவருக்கு நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் எடுத்து உரைத்தார் பின் வருமாறு:- ஐயா தீபம் ஏற்றும் போது  எப்படி வாழணும் , எப்படி செய்யணும்  அப்படீன்னு சொல்லுங்க. அப்பதான் கஷ்டம் நீங்கும்)

குருநாதர்:- அப்பனே, இதை தொடங்கி வைத்தானே ,

(அகத்திய பிரம்ம ரிஷி தனது நாடி வாக்கில் பல முறை தனது மைந்தன் என்று அழைக்கப்பட்ட அகத்தியர் திருவடி சேர்ந்த உயர்திரு. அகத்தியர் திருமகன், அகத்தியர் அதிஷ்ட தீபக்குழு நிறுவனர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் சிவபெருமான் , முருக பெருமான் , அகத்தியர் பெருமான் இவர்களின் ஆசி பெற்ற உயர் ஆன்மா ஆவார். ஐயா அவர்கள் அகத்திய பிரம்ம ரிஷி நாடி அருளாளர் திரு. ஹனுமன் தாசன் அய்யா அவர்கள் மூலமாகவும், அகத்தியர் ஜீவநாடி தஞ்சாவூர் கணேசன் ஐயா அவர்களின் ஜீவநாடி மூலமாகவும் ஆசி பெற்று அதன் மூலமாக உள்ளுணர்வு தூண்டப் பெற்று அகத்தியர் அதிர்ஷ்ட தீபக் குழுவை அமைத்தார்கள். தஞ்சை அகத்தியர் நாடியில் திரிசூலம் மாமுனிவர்களாகிய அருள்மிகு அகத்தியர் மஹரிஷி, வசிஷ்ட மகரிஷி மற்றும் விஷ்வாமித்திர மகரிஷி ஆகியோர் ஆசி கொடுத்து மனித பிறவியை உருவாக்கி , அவர் மூலம் இந்த பூலோகத்தில் தீபங்கள் மூலம் அருள் வளம் பெற வாழ்ந்த ஒரு மாமனிதர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் பிருங்கி மகரிஷி மற்றும் பிருகு மகரிஷி ஆன்மா தொடர்பு உடையவர் என்பதை அடியவர்கள் அறியத் தருகின்றோம். நாடி வாக்கு தொடர்கின்றது.….. )

பல பேருக்கும் நன்மை செய்தான் ஆனாலும் அப்பனே அவர்களுக்கெல்லாம் கஷ்டங்கள்தான். ஏன் வந்தது? ஆனாலும் வாழத்தெரியவில்லையப்பா. இவன்தனும் கற்றுக்கொள்ள அதாவது பின் சொல்லிக் கொடுக்கவில்லையே அப்பா. அதனால்தான் துன்பங்களாக போய்விட்டது அனைவருக்குமே. அதை நீ செய்து விடாதே வரும் காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே.

அடியவர்:- ஐயா வழி நடத்துங்க ஐயா. என்ன செய்யனும்னு. ( மற்ற அடியவர்கள் :- சொல்லனும் எப்படி வாழணும்னு . துன்பத்தை அடைஞ்சு அடைஞ்சுதான் கர்மா போகும். அப்படீன்னு தீபம் ஏற்றும் பொழுது  சொல்லணும்)

குருநாதர்:- அப்பனே பின் தீபம் ஏன் ஏற்றுகின்றீர்கள்? கூறுங்கள்.

அடியவர்:- (மறுபடி கேள்வி பதில் ஆரம்பித்ததால் அடியவர்கள் மகிழச்சி, சிரிப்பு) ஜோதி வழியாக இறைவனை தரிசனம் செய்ய.

குருநாதர்:- அப்பனே அப்படி இல்லையப்பா. அப்பனே இவ்தீபம் இப்படி எரிகின்றதே (பிரகாசமாக அனைவருக்கும் ஒளி கொடுத்து) அதே போலத்தான் தன் வாழ்க்கையும் எரிய வேண்டும் என்பதற்கே தீபங்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்படியே எரிந்திருக்க அப்பனே அதற்கு என்ன தேவை என்று பின் அனைத்தும் தெரியும் என்பேன். அது போலத்தான் நீங்கள் அழகாக பின் ஒளிர்வதற்கு அப்பனே புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. அப்படி புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே தானாக தீபமும் அணைந்துவிடும். நீங்களும் அணைந்து விடுவீர்கள். அவ்வளவுதான் வாழ்க்கை அப்பனே.

அடியவர்:- (அமைதி)

குருநாதர்:- அப்பனே பின் நீ சேவைக்காகவே வந்தவன் அப்பனே. ஒவ்வொன்றாக எடுத்து கூற வேண்டும். சொல்லிவிட்டேன். அப்படி எடுத்துக் கூறவில்லை என்றால் பல பல சுவடிகள் ஓதிக்கொண்டு இருப்பவர்கள் கூட எப்படி வாழ வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள அதாவது சொல்லித் தரவில்லை அப்பா மனிதர்களுக்கு. இதனால்தான் சுவடிகளை படிப்பவர்களுக்கு எல்லாம் கஷ்டங்கள் வந்து கடைசியில் அப்பனே பாதாள லோகத்திற்கு சென்று விடுகின்றார்கள் அப்பனே. ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா. தன்னைத்தானே அழித்து மற்றவர்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் உண்மை நிலை அப்பனே யாங்களே மனிதனை திட்டித் தீர்க்கவில்லை என்றால் அப்பனே வரும் காலங்களில் பின் சித்தர்களே பொய். சித்தர்களே இல்லை என்று ஒரு வாரத்தையில் சொல்லிவிட்டு போயிருப்பான் அப்பா. அதனால்தான் மனிதர்களுக்கு முதலில் பக்குவங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி பின் வாக்குகள் ஒவ்வொரு சித்தனாக உரைப்பான் அப்பனே. (சித்தர் பெருமான்) போகன் அறியாததா நீங்கள் அறிந்திருக்கப் போகின்றீர்கள்? அப்பனே. அப்பனே உப்பை சிறிது நீரில் இட்டு அருந்தினாலே அப்பனே போகனை நினைத்து போகனே வந்து சில நோயை குணப்படுத்துவானப்பா. அப்பனே தெள்ளத் தெளிவாக இருங்கள். தெளிவாக இல்லை என்றால் மற்றவர்கள் உன்னை சுலபமாக ஏமாற்றிவிட்டு சென்றிருப்பார்கள் அப்பனே சொல்லிவிட்டேன். இறைவன் ஒருபோதும் உன்னை ஏமாற்ற மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே. துன்பங்கள் கொடுப்பானே தவிர அப்பனே ஏமாற்றமாட்டான் அப்பனே சொல்லிவிட்டேன். சொல்லிவிட்டேன். அப்பனே ஏன் பழத்தை இறைவனுக்கு வைக்கின்றார்கள்?

அடியவர்:- நிவேத்தியம்

குருநாதர்:- அப்பனே துன்பங்கள் பட்டு பட்டு பல வகைகளிலும்கூட இன்னல்கள் பட்டு பட்டு அப்பனே கடைசியில் அப்படி பட்டால்த்தான் கடைசியில் அதுவே இறைவனிடத்தில் வருகின்றது. அதனால்
நீங்கள் சுலபமாக இறைவனிடத்தில் வந்து விடுவீர்களா என்ன? அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு பன்மடங்கு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு வாக்கிலும் சொல்லுகின்றேன்.

அடியவர்:- புரியுதிங்கய்யா

குருநாதர்:- அப்பனே, கற்பூரம் கற்பூரம் என்று கூறுகின்றார்களே, எதற்காக அதை ஏற்றுகின்றார்கள் இறைவனுக்கு?

அடியவர்:- கற்பூரம் ஒளிவிட்டு தன்னைத்தானே எரிச்சிக்குது.

குருநாதர்:- அப்பனே இதிலிருந்தே புரியவில்லையா? அதாவது எப்படி உருகி உருகி நிற்கின்றதோ அதுபோலத்தான் பிறர்நலன் நீங்கள் காணவேண்டும் அப்பனே. அப்படி இருந்தால்தான் இறைவனுக்கு அப்பனே இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவசியம் என்பேன் அப்பனே. தான் கெட்டுவிட்டாலும் மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ அவன்தன் பக்கத்தில்  இறைவன் இருப்பான் அப்பனே. அது புறத்திலே உள்ளதப்பா. ஏன் பின் இறைவனுக்கு புஷ்பத்தை வைத்துக் கொண்டு வணங்குகின்றீர்கள்?

அடியவர்:- மலர் தனக்குன்னு ஏதும் வச்சுக்கிரது இல்ல. வாசத்த கூட பிறருக்குத்தான் கொடுக்குது.

குருநாதர்:- அப்பனே இன்று பூ. நாளை அது உதவாதப்பா. இவ்வளவுதான் வாழ்க்கையப்பா. இதுதான் மனிதனப்பா. அதாவது உதவாத உடம்பை வைத்துக்கொண்டு பின் ஏதாவது செய்யுங்கள் என்பதே இதனுடைய அர்த்தம் சொல்லிவிட்டேன். இதன் பின் அர்த்தத்தையும் இன்னும் இன்னும் சொல்கின்றேன். புரிகின்றதா அப்பனே? இன்று மனிதன் நாளை எங்கேயோ அப்பனே.

அடியவர்:- புரியுது.

குருநாதர்:- அப்பனே இறைவனுக்கு தெரிந்துதான் அனைவருமே செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் உங்களுக்குத்தான் தெரியவில்லை என்பேன் அப்பனே. அதை எல்லாம் கேட்காதீர்கள் அப்பனே. துன்பம் வந்துவிட்டது , எதற்காக இவ்வாறு சண்டைகள்? கடன் தொல்லைகள் என்றெல்லாம் தெரிந்து வாழுங்கள் அப்பனே. என்னை நம்பி பின் (ஏதும் வாழ்க்கையை பற்றி) தெரியாமலே வாழ்ந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா அகத்தியனை வணங்கிக்கூட.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html