"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 14, 2021

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கோடகநல்லூர் ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு, இரண்டாவது அபிஷேக பூஜையை நம் நம் குருநாதர்  ஸ்ரீ அகத்திய பெருமான் அவர் எண்ணப்படியே நடத்தி எடுத்துக்கொண்டார். இவ்வுலகில் அதர்மம் வளர்ந்துபோய், காலத்தில் கலியின் விளையாட்டால், விஷம் ஏறிப்போய், மிக ஆபத்தான "கிரகநிலைக்குள்" பூமி அகப்பட்டுக்கொண்டு, காலசர்ப்ப தோஷமும், "தூமகேதுவின்" வரவுக்குள் மனிதம் மிகவே சிரமங்களை அனுபவிக்கும் என்றறிந்து, காலசர்ப்ப தோஷத்தை நிர்வீர்யமாக்க, பெருமாளின் அருள் தேடி, நம்மை ஒன்று சேர வைத்து, அவரை அபிஷேக பூசை செய்து குளிரவைத்தார். இதுதான் நடந்த உண்மை. ஒருமுறை கூட நிதானமாக படித்துப்பார்த்தால், எத்தனை பெரிய விஷயத்துக்கு, நம்மை எல்லாம் அகத்தியப்பெருமான் ஒன்று சேர்த்து, லோகஷேமத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டார் என்பது விளங்கும்.

பூசை முடிந்து, கோவிலை சுற்றி மட்டும் பெய்த மழையே, பெருமாள் நம் பிரார்த்தனையை, மனமகிழ்ந்து, அபிஷேக பூசையுடன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு ஒரு நற்சான்று.

இந்த வருடத்தின் மற்றொரு நிகழ்ச்சியாக, அனைத்து அடியவர்களும் மனம் மகிழ்ந்து பங்கு கொள்ளும் "நம் குருநாதரின் மார்கழி-ஆயில்ய திருநட்சத்திரம்" வருகிற 23.12.2021 வியாழக்கிழமை அன்று வருகிறது. நம்மை பொறுத்தவரை அந்தநாள் மிக முக்கியமான தினம். ஆம்! அவரது இரண்டாவது முறை வருகிற நட்சத்திர நாள். 2022இல் மார்கழி-ஆயில்யம் வருவதில்லை. 2023இல் ஜனவரி 09ம் தியதி மறுபடியும் வரும். ஆனால் அதை கொண்டாட நாம் ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை குருநாதர் நமக்கு கொடுத்ததை சரியான முறையில் அவர் பாதம் பணிந்து அன்றைய தினம் ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமானின் சன்னதியில், அபிஷேக பூசையுடன் சிறப்பாக அமைத்துக்கொள்ளுங்கள்.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற எண்ணத்தில், எப்போதும் போல், நம் தலத்தில் இன்று முதல் அகத்தியர் அவதார பெருவிழா அழைப்பிதழ்களை ஒவ்வொன்றாக பகிர உள்ளோம்.

இன்றைய பதிவிலும் அகத்தியம் தான்..அன்பு தான்..ஆனந்தம் தான். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் அவதார பெருவிழா  என்று நமக்கு அழைப்பிதழ் கிடைத்தது. அழைப்பிதழ் பார்த்ததும் என்னே அகத்தியரின் அருள் என்று தான் உணர்ந்தோம். நாம் அளித்துள்ள அனைத்து அகத்தியர் சார்ந்த பதிவிலும் அகக்தியர் தனியாக இருப்பார், இல்லையென்றால் வேறு சிலரோடு  இருப்பார். ஆனால் கூடுவாஞ்சேரி அகத்தியரும், அரும்பாக்கம் அகத்தியரும் நமக்கு ஒரே அருள்நிலையில் இருப்பதாக உணர்கின்றோம். இருவரும் இருப்பது விநாயகர் கோயிலில். அதாவது கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அகத்தியர் நமக்கு அருள் செய்து வருகின்றார். அதே போன்று இந்த அழைப்பிதழில் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பூசை நடைபெற உள்ளது. என்ன ஒரு ஒற்றுமை... 

இந்த அழைப்பிதழ் கண்டதும் நமக்கு கூடுவாஞ்சேரி அகத்தியர் தான் நினைவுக்கு வருகின்றார். இப்போது தான் நமக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது. அதுவும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் நமக்கு இந்த அழைப்பிதழ் கிடைத்தது. வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சென்று வழிபட்டு வந்து மீண்டும் இங்கே பேசுவோம். 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெறவும். இதில் நம் குருநாதரின் ஆசியும் உள்ளது. பதிவின் இறுதியில் காணலாம்.



மேலும் இதற்கு முன்னர் இங்கே நடைபெற்ற விழாக்களின் காட்சிகளை இங்கே பதிவிடுகின்றோம். பார்க்கும் போதே ஏக்கம் பிறக்கின்றது. தவமாய் தவமிருந்து குருவினைக் காண வேண்டி நிற்கின்றோம்.








நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!





இது போதுமா? என்றால் போதாது என்றே சொல்ல தோன்றுகின்றது அல்லவா? மீண்டும் குருவின் தரிசனம் இங்கே அனைவரும் பெறலாமா? ஆம்..8 ஆம் ஆண்டு ஸ்ரீ அகத்தியர் அவதார பெருவிழா காட்சிகளை அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.



























கும்பமுனி குருவே சரணம் சரணம் என்று வேண்டி விரைவில் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் தரிசனம் செய்ய வேண்டுகின்றோம். பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல், நாம் பல கோயில்களில் சேவை செய்து வருகின்றோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அகத்தியர் அவதார பெருவிழா முதல் அழைப்பிதழ் நமக்கு பகிரப்பட்டு வருகின்றது என்றால் குருவின் அருளிற்கு எல்லையேது!





ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

Sunday, December 12, 2021

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய கார்த்திகை மாத உத்திரட்டாதி வழிபாடான கோடகநல்லூர் இரண்டாம் வழிபாடு நேற்று 12.12.2021 அன்று மிக மிக சிறப்பாக நடைபெற்றது. இன்னும் நம் மனம் கோடகநல்லூர் திருத்தலத்தில் தான் இருக்கின்றது. நேற்றைய தரிசனத்தில் ஸ்ரீ பெரியபிரான் தரிசனம் கண்டு மனம்,மொழி, மெய்யால் உருகினோம். இவற்றை தனிப்பதிவில் விரைவில் காண குருவிடம் வேண்டி, இன்றைய பதிவில் கோடகநல்லூர் இரண்டாம் அபிஷேக பூசை! நடைபெற்ற நிகழ்வுகளை இங்கே அறிய தருகின்றோம்.

அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை சிறப்பாக நடைபெற பொருளுதவி செய்த அணைவருக்கும், அருளுதவியாக பூஜை சாமான்கள் ஏற்பாடு, அபிஷேகத்தில் உதவுதல், பிரசாதம் வழங்குதல் போன்ற அனைத்து நிகழ்விலும் உடலுழைப்பை நல்கிய அனைவருக்கும் , நம் தளம்( தேடல் உள்ள தேனீக்கள் - TUT குழு) சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகு வழிபாட்டை நமக்கு அருளி, வழிகாட்டிய சித்தன் அருள் வலைத்தளத்திற்கு, திரு. அக்னிலிங்கம் ஐயா அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம். அனைத்து அகத்தியர் அடியார்களின் பாதம் பணிந்து நன்றி கூறுகின்றோம்.


நேற்று 12.12.2021 (ஞாயிற்று கிழமை), உத்திரட்டாதி நட்சத்திரம், நவமி திதி அன்று நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, லோகஷேமத்துக்காக, அகத்தியப்பெருமான் ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதாவப் பெருமாளுக்கு, அபிஷேக ஆராதனைகளை செய்கிற நாள்.


இன்றைய பூசையை மூன்றாக பிரித்து அகத்தியர் அடியவர்கள் குழு நடத்துகிறது.

1. உழவாரப்பணி 
2. தாமிரபரணி தாய்க்கு மரியாதை செய்வித்தல் 
3. பெருமாளுக்கும் தாயாருக்கும் அகத்தியப்பெருமான் செய்கிற அபிஷேக பூஜை.

இதில் அகத்தியரை பொறுத்தவரை, உழவாரப்பணி மிக முக்கியமானஒன்று. சுத்தம் கோவிலை அடைந்தால், சித்தம் அங்கே கொள்வான் என்று ஒரு சித்தர் மொழி உண்டு. அதற்கேற்ப, அங்கே வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள், மிக சிறப்பாக உழவாரப்பணியை செய்துள்ளனர். அனைவருக்கும், அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றியும் உரித்தாகுக.




தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பித்தல்.




அனைத்து அன்பர்களுக்கும் பிரசாதம் குருவருளால் வழங்கப்பட்டது



அபிஷேக பூஜையை பெருமாள் ஏற்றுக்கொண்டதற்கு சாட்சியாக நல்ல மழை பெய்தது. எல்லாம் அகத்தியர் அருள்.



அபிஷேக பூஜைக்குப்பின் உழவாரப்பணி செய்து சுத்தமாக்கப்பட்ட கோவிலின் உட்புறமும், வெளிப்பிரகாரமும்!






ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


Friday, December 10, 2021

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய கார்த்திகை மாத ஷஷ்டி வழிபாடான ஸ்ரீ ஓதியப்பர் வழிபாடு நேற்று 09.12.2021 அன்று மிக மிக சிறப்பாக நடைபெற்றது. இன்னும் நம் மனம் ஓதிமலையில் தான் இருக்கின்றது. நேற்றைய தரிசனத்தில் பேசும் முருகன் ஓதியப்பர் தரிசனம் கண்டு மனம்,மொழி, மெய்யால் உருகினோம். இவற்றை தனிப்பதிவில் விரைவில் காண குருவிடம் வேண்டி, இன்றைய பதிவில் கோடகநல்லூர் வழிபாடு அறிவிப்பு மீண்டும் காண இருக்கின்றோம்.


குருநாதர் அருளால் கோடகநல்லூர் இரண்டாம் பூஜைக்கு தயாராகி வருகின்றோம். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாம் இறையருள் பெற்று வருகின்றோம்.  இதில் சில முக்கிய அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.

கோடகநல்லூர் வழிபாடு என்று நமக்கு உத்திரவு கிடைத்த உடன் நாம் இம்மாத அமாவாசை அன்று மாலை சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு வேறொரு சங்கல்பம் செய்ய சென்றோம். அப்பொழுதான் தான் கோடகநல்லூர் வழிபாடு பற்றி உணர்த்தப்பட்டு சின்னாளப்பட்டி ஆஞ்சநேயருக்கு ஒரு சுற்று அளவில் துளசி மாலை சாற்றி கோடகநல்லூர் வழிபாட்டிற்கு சங்கல்பம் செய்தோம்.

அடுத்து, சின்னாளப்பட்டி ஸ்ரீ சதுர்முக பெருமான் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தோம். வள்ளி தெய்வானை சமேத  ஸ்ரீ முருகப்பெருமானிற்கு மாலை சாற்றி ,கோடகநல்லூர் வழிபாட்டிற்கு சங்கல்பம் செய்தோம். இங்கே கவனிக்க வேண்டிய செய்தி நாம் இப்படி சங்கல்பம் செய்ய வேண்டும் என்று முன்கூட்டி திட்டம் தீட்டவில்லை. ஆனால் இவை குருவருளால் இயல்பாக நடைபெற்றது.

முதல் சங்கல்பம் ஸ்ரீ அஞ்சலி வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆவார். இதனை மீண்டும் உணர்த்தும் பொருட்டு, மீண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டில் நாம் செல்ல நம்மை குருவருள் பணித்தார்கள். அதனை இனிவரும் பதிவில் காண்போம்.

அடுத்து இன்று காலை கோடகநல்லூர் வழிபாட்டிற்கு தேவையான சில அபிஷேகப் பொருட்களை நாம் வாங்கலாம் என்று திட்டம் போட்டோம். நாம் திட்டம் தீட்டினால் சரியாகி விடுமா ? குருவின் திட்டம் வேறாக அல்லவா அமைந்தது.ஆம். கார்த்திகை மாத திருவோண நட்சத்திர நாளில் 08.12.2021 அன்று கோடகநல்லூர் வழிபாட்டிற்கு தேவையான சில அபிஷேகப் பொருட்களை இங்கேயே சின்னாளபட்டியில் வாங்கி உள்ளோம். இதிலும் குருவின் திருவிளையாடல் நன்கு தெரிகின்றது அல்லவா! தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.





இப்படி தான் ஒவ்வொரு நிகழ்விலும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் நம்மை வழிநடத்தி வருகின்றார். இந்த நிகழ்வுகளில் மூலம் நமக்கு பெருமாளின் அனுகிரமும் கிடைத்து வருவதை கண்கூடாக பார்த்து வருகின்றோம். இப்படி அருள்நிலைகளை நமக்கு அருளி வரும் நம் குருநாதர் பாதம் பணிவதை தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?



















வணக்கம்! அடியவர்களே!

கோடக நல்லூர் பிரஹன் மாதவ சுவாமிக்கு அகத்தியர் பெருமான் செய்கிற இரண்டாவது அபிஷேக பூஜை இந்த மாதம் 12ம் தியதி, ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு  நடை பெறுகிறது.

என் அனைத்து சேய்களும் பங்கு பெறும் விதமாக அமய வேண்டும் என அவர் விருப்பம்.

திரு.ராகேஷ், தேடல் உள்ள தேனீக்கள் குழு அடியவர் முன் நின்று இந்த பூசையை நடத்துகிறார். அவர் தொடர்பு எண்ணை கீழே தருகிறேன்.
+917904612352

அனைவரும் தொடர்பு கொண்டு பங்கு பெற்று குருவருள் பெற்றுக் கொள்ளுங்கள்.

மற்றவை பின்னர் பார்ப்போம்.


இங்கு நாம் ஒரு செய்தியை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இங்கு நம்மால் ஆவது ஒன்றும் இல்லை. அனைத்தும் குருநாதர் அருளால் தான் நடைபெற உள்ளது. TUT குழு என்று அல்லாது அனைத்து அகத்திய அடியார்களும் இணைந்து இந்த இரண்டாம் பூஜையை நடத்த வேண்டும் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டியது ஆகும். இது நம் குழுவிற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வழிபாடு ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே பயண ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மேலும் ஏதேனும் தேவை என்றால் நம்மைத் தொடர்பு கொள்ளவும். இந்த வழிபாடு சிறப்பாக நடைபெற்று லோக ஷேமத்திற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

நம் குருதாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான்  அருளின்படி, இம்மாதம் நம் தளம் சார்பில் நடைபெற உள்ள வழிபாடுகள் கீழே தொகுத்து தந்துள்ளோம். 


1. கோடகநல்லூர் - 12.12.2021 - ஞாயிறு

2. உத்தரகோசமங்கை - மார்கழி திருவாதிரை

3. ஶ்ரீ அகஸ்தியர் ஜெயந்தி - 23.12.2021 - வியாழன் - கூடுவாஞ்சேரி மற்றும் அனைத்து ஶ்ரீ அகத்தியர் கோவில்கள்

4. பாபநாச ஸ்நானம் - 16/12/2021 முதல் 13/01/2022க்குள் வருகிறது. 

இங்கு குறிப்பிட்ட நாள்களை பார்த்து கிடைத்தற்கரிய இந்த வழிபாட்டில் இணைந்து குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம். 

இந்த வழிபாட்டில் உதவி செய்ய விரும்பினால், நம்மைத் தொடர்பு கொள்ளவும்

நன்றி
வணக்கம்
ஓம் அகத்தீஸ்வராய நமஹ.



ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.




மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Tuesday, December 7, 2021

தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) - ஸ்ரீ ஓதியப்பர் வழிபாடு - 09.12.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு வழிபாடும் நம்மை இறை நோக்கி ஈர்க்கும். இதில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளும் வழிபாடு நம்மை ஈர்த்து ஆட்கொள்ளும் விதத்தில் அமைந்து வருகின்றது. இதனை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். நம் குருநாதர் இம்மாதம் முழுதும் சில வழிபாடுகளை லோக ஷேமத்திற்காக செய்யும் படி உத்தரவு தந்துள்ளார். இதற்கு முந்தைய பதிவில் கோடகநல்லூர் வழிபாடு பற்றி ஏற்கனவே கூறி இருந்தோம். இன்றைய பதிவில் மேலும் சில வழிபாடுகள் பற்றி குருவருளால் இங்கே கூறுகின்றோம்.

குருதாதர் அருளின்படி, இம்மாதம் நம் தளம் சார்பில் நடைபெற உள்ள வழிபாடுகள்.

1. ஓதிமலை - 09.12.2021 - வியாழன்

2. கோடகநல்லூர் - 12.12.2021 - ஞாயிறு

3. உத்தரகோசமங்கை - மார்கழி திருவாதிரை

4. ஶ்ரீ அகஸ்தியர் ஜெயந்தி - 23.12.2021 - வியாழன் - கூடுவாஞ்சேரி மற்றும் அனைத்து ஶ்ரீ அகத்தியர் கோவில்கள்

5. பாபநாச ஸ்நானம் - 16.12.2021 முதல் 13.01.2022க்குள் வருகிறது. 

இங்கு குறிப்பிட்ட நாள்களை பார்த்து கிடைத்தற்கரிய இந்த வழிபாட்டில் இணைந்து குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம். 

 

 மலைக்கு மேலே செல்ல சுமார் 1,880 படிக்கட்டுக்கள். வாகனங்கள் மேலே செல்ல வசதி இல்லை. எனவே, வாகனங்களைக் கீழே நிறுத்தி விட்டு, படியேறிச் சென்றே முருகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும். வழியில் விநாயகரைக் கடந்து, கோயிலை நெருங்குவதற்கு முன்பு வரை சற்றே செங்குத்தாக உள்ளது. மற்றபடி, சுலபமான பயணம்தான். மலையில் தண்ணீர் வசதி கிடையாது; கடைகளும் இல்லை.

மிகப் பழைமையான ஆலயம். சுமார் 1,800 வருடங்களுக்கு முற்பட்டதாம். சேரமான் பெருமாள், மனுநீதிச் சோழன், வஜ்ரங்கபாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் காலத்தில் ஆலயத்தின் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றதாம்! அப்போது புண்ணிய நதிகள் பலவற்றிலும் இருந்து கலசத்தில் நீர் சேகரித்து வந்து, குடமுழுக்கு வைபவம் நடந்ததாம். இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஓலைச் சுவடிகளில் இருக்கின்றவாம். செங்கற்களால் ஆன இந்த ஆலயம், 1932-ல் கருங்கல் ஆலயமாக திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேக வைபவம் அரங்கேறியதாம்.

சிறிய கோயில். ஆலயத்தில் ஸ்ரீவிநாயகர், நாகர், இடும்பன், விஸ்வநாதர், விசாலாட்சி, ராஜராஜேஸ்வரி, சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதி உண்டு. இதை அடுத்து, ஸ்ரீகுமார சுப்ரமண்யரைத் தரிசிக்கிறோம். 28 சிவாகமங்கள் மற்றும் குமார தந்திரம் ஆகியவற்றில் விளக்கப்படாத திருமேனி இது. ஐந்து திருமுகங்கள் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமானின் பின்புறம் மயில் வாகனம். சூர சம்ஹாரத்துக்கு முன்பு அமைந்த தலம் என்பதால், இந்திரனே இங்கு மயிலாக அமர்ந்துள்ளானாம்.

குழந்தை முகம்... அலட்சியம் செய்த பிரம்மனை மிரட்டியதால் முகத்தில் அதிகார தோரணை தென்படுகிறது. ஒரு காலைச் சற்று முன்னே எடுத்து வைத்துக் காணப்படுகின்ற தோற்றம் (இதைச் சற்று கூர்ந்து கவனித்தால்தான் தெரியும்)... அதாவது, 'எதையும் நான் சாதிப்பேன்... உங்களுக்கு உதவுவதற்காக புறப்பட்டு வருகிறேன்' என்பது போல் பக்தர்களுக்கு உதவ முன் வரும் வடிவம்! வலக் கரங்களில் ஒன்று அபய முத்திரையில் இருக்க... மற்ற மூன்று கரங்களில் கத்தி, அம்பு, வஜ்ஜிரம் ஆகியவையும், இடக் கைகளில் ஒன்று வரத முத்திரையில் இருக்க... மற்ற மூன்று கரங்களில் கேடயம், வில், பாசம் ஆகியவையும் காணப்படுகின்றன. அலங்கார சொரூபனை உளமார தரிசிக்கிறோம்.


பிற ஆலயங்களில் இருப்பது போல், பெரிய பீடம் இல்லை. இங்கு திருகு பீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகுமார சுப்ரமண்யர். தரையோடு தரையாக இருக்கும் பீடம் இது!
சிவபெருமானுக்கு ஓம்காரத்தின் பொருளை விளக்கிய நிகழ்வு, மூன்று யுகங்களுக்கு முன்பு  நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பல தலங்களில் தரிசித்திருந்தாலும் ஓதிமலையில் முருகப்பெருமானை தரிசித்து திரும்பும்போது ஏற்படும் பரவச அனுபவம், ஆனந்தமானது; அனுபவித்துப் பாருங்கள், புரியும்!


ஸ்ரீகுமார சுப்ரமண்யரிடம் பூ வைத்து வரம் கேட்டல் எனும் பிரார்த்தனை இங்கு விசேஷம். இல்லறம், திருமணம், தொழில், விவசாயம், வெளிநாட்டு உத்தியோகம் ஆகியவை குறித்து முருகப் பெருமானிடம் உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துகின்றனர், இந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள்.வெள்ளை மற்றும் செவ்வரளிப் பூவை, முருகப் பெருமானின் சிரசின் மேல் மேல் ஆலய அர்ச்சகர் வைப்பார். அப்போது அந்தப் பூ, முருகப் பெருமானின் வலது பக்கத்தில் விழுந்தால், அவர் உத்தரவு கொடுத்து விட்டதாக எடுத்துக் கொள்கின்றனர். இடப் பக்கத்தில் விழுந்தால், சிறிது காலம் காத்திருக்க வேண்டுமாம். பூ வைத்து உத்தரவு கேட்பதற்காகவே விசேஷ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.




ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை. 

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகிறேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக இப்பொழுதும் கூட கந்தன் அங்கு சுற்றித் திரிகிறான் என்பேன் நல் முறையாக அமர்கிறான் என்பேன் அவனுக்குப் பிடித்த இடம் அங்கே இருக்கின்றது அங்கே சென்று அவன் அமர்ந்த இடத்தில் அமர உங்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கும் என்பேன். அடுத்த வாக்கில் அந்த இடத்தைப் பற்றி கூறுகின்றேன் அப்பனே நல் முறைகளாக யானே சொல்வேன் பொறுத்திருக. 

ஓதி மலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன்  நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன் கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன் அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள் அப்பனே அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட .

அப்பனை இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால் பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும் பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு. 

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே அப்பனே அம்மாவாசை திதியில் இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வாறு நல் முறைகள் ஆக பல பெரிய பெரிய அரசர்களும் இவ்வாறு செய்து பல சித்துக்கள் பெற்று விளையாடினார்கள் என்பேன்.

இதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் நல்லோருக்கு நான் எப்பொழுதும் உதவிகரமாக இருப்பேன் என்பேன் இச் சூட்சுமத்தை இப்போது யான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு.

அப்பனே எவை என்று கூற அப்பனே நல் முறைகளாக இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே ஓதியப்பனே அங்கிருந்து (ஓதிமலை) நடைபயணமாக பழனிக்கு வருவான் என்பேன் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட இதனை சாந்தி தானம் என்பார்கள் அது ஒரு நாள் மட்டும் நடக்கும் அங்கு எப்பொழுது நடக்கும் என்று கூட யான் சொல்லி விடுகின்றேன் அப்பொழுது நடைபாதையில் நீங்களும் மேலிருந்து கீழே இறங்கினால் அவன் தன் பார்வையில் நீங்கள் பட்டுவிட்டால் அற்புதம் மகன்களே.

அப்பனே ஏன் எதற்கு இதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே போகன் கர்ம நிலையில் பாதிக்கப்பட்டிருந்த பொழுது அப்பனே அங்கு வந்து அமர்ந்து விட்டான் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் என்ன செய்வது என்பது கூட தெரியாமல் போய் விட்டது போகனுக்கு.

அதனால் முருகனே வந்து பின் போகனே நீ இவ்வாறு அமர்ந்து இருக்கின்றாயே உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க

போகன் அப்பனே முருகா எந்தனுக்கு ஒன்றுமே தெரியவில்லை இவ்வுலகத்தில். 

எதை எதையோ சாதிக்க நினைத்தேன் பின் எதையும் அனுபவிக்காமல் போய்விட்டேன் உலகத்தை ஆளும் என் தாயவள் புவனேஸ்வரி  அவளும் என்னை கைவிட்டு விட்டாள் என்றெல்லாம் போகன் சொல்ல.

அப்பனே போகா என் தாய் உன்னை கைவிடவில்லை என்று முருகனும் கூற உந்தனக்கு என்ன தேவை என்பது எந்தனுக்கு தெரியும் .

இங்கிருந்து போ அதோ அங்கே ஒரு மலை தென்படுகின்றது அவ் மலைக்கு சென்று வா அங்கே என்னுடைய ஸ்தலத்தை அமைத்துக் கொள் யானும் அதற்கு உதவிகரமாக நிற்பேன் என்று நல் முறையாக முருகனும் வாக்கு உரைத்துவிட்டான். 

ஆனாலும் போகனுக்கு புரியவில்லை எந்தனுக்கு ஏதும் தெரியவில்லை முருகா எங்கு அவ் மலை இருக்கின்றது.

ஆனாலும் முருகன் பின் சொன்னான் அப்பனே என் தந்தையும் நல் விதமாக ஆசிர்வாதம் கொடுத்துவிட்டான் என் தாய் அவளையும் நீ நேசித்து நேசித்து வணங்கி வந்தாய் பின் அவளே என்னிடத்தில் அனுப்பி விட்டாள். 

அதனால் யான் முன்னே செல்கின்றேன் நீ பின்னே வா என்று சொல்ல பின் அன்றைய நாள் மட்டும் இங்கிருந்து நல் முறைகளாக முருகன் பழனிக்கு செல்வான் நடைபயணமாக நடைபாதையில் அப்பொழுது போகனும் கூடவே செல்வான் அந்நாளை யானும் சொல்கின்றேன் எந்த தேதி என்றும்கூட தைப்பூசம் என்கின்றார்களே அதன் முந்தைய தினம் தானப்பா. அதையும் இப்போதே சொல்லிவிட்டேன்.

அப்பனே இவை என்று கூற நல் முறைகளாக ஆனாலும் இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல்ல முறையாக விதிகள் மாறும் என்பேன்.

முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன்.

இரண்டாவதாக பழனி.

மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே போகன் குழந்தை வேலப்பரை  இங்கு (பூம்பாறை)  செய்து முடித்தான்.

ஆனாலும் இது இருக்க முருகனும் போகனிடம் ஒரு சூட்சுமத்தை கூறிவிட்டான் அப்பனே போகா நீ இங்கு அமைத்தாய் அமைத்தும் விட்டாய் ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூற இங்கே வருவார்கள் ஆனாலும் அப்பனே இதிலிருந்து நேர் திசையாக (பழனி) சென்று பின் அப்பனே அங்கே ஒருமுறை அமை.

அங்கு அமைத்தால் அப்பனே அவ்மலையைச் சுற்றி பல பல அற்புத தேவர்கள் தேவயானிகள் அப்பனே பறந்து சுற்றி செல்வார்கள் அப்பொழுது அங்கு சென்று மனிதன் அங்கு செல்ல அப்பனே தேவர்களும் தேவதைகளும் ஆசீர்வதித்து விடுவார்கள் அப்படி அங்கு சென்று செய்ய அனைத்து கர்மங்களும் விலகியே நிற்கும்

ஆனாலும் அப்பனே கர்மாக்களில் நூறில் ஐம்பதாவது கழித்து விடலாம் என்பேன்.

அப்பனே ஆனாலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பனே போகன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஒரு யுகத்தில் பழனியிலும் சமாதி அடைந்து விட்டான். பின் மறு யுகத்திலும் கூட குழந்தை வேலப்பன் முருகன் அடியிலேயே அவன் இருக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் இதுவரை யாரும் உணர்ந்ததில்லை.

அப்பனே அங்கு செல்ல நல் முறையாக முருகனை வணங்க முருகன் வடிவிலேயே போகனையும் வணங்கலாம் என்பேன்.

அப்பனே இது எதனால் வந்தது என்று நீங்கள் கேள்வியும் கேட்கலாம் என்பேன்

இவைதனை உணர அப்பனே பின் நல் முறைகள் ஆகவே  அப்பனே முருகனும் கூறிவிட்டது என்னவென்றால்

யானும் வந்துவிட்டேன் நலன்களாக   செய்துவிட்டேன். மீண்டும் உந்தனக்கு என்ன வேண்டும் போகா என்று கேட்க

பின் நல் முறைகள் ஆகவே போகனும் முருகனிடத்தில் எப்பொழுதும் உன் காலடியிலேயே இருக்க வேண்டும் என்று பணிந்து நின்றான் அதனால் தான் முருகன் தேர்ந்தெடுத்தான் என் காலடியிலேயே இரு அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இரு என்று.

இங்கு வருபவர்கள் அனைத்து நோய்களையும் சீர் படுத்திக் கொள்வார்கள் என்பேன் அப்படி சீர்படுத்தி முடியாவிட்டாலும் சில மூலிகைகள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன். அவ் மூலிகைகளை  பயன்படுத்திக்கொண்டு வாழுங்கள் அப்பனே.

அப்பனே பலமுறை உரைத்தது உண்டு அப்பனே இதுதானப்பா எவ்வாறு என்பதையும் கூட

பழனியப்பன் அப்பனே முறையாய் ஓதியப்பன் பின் வேலப்பன் இதனையெல்லாம் கூர்ந்து பார்த்தால் ஓர் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் இதன் திறமையை.

அப்பனே கூர்ந்து நோக்கினால் பழனி லிருந்து தொடங்கினால் ஒரு வளையம் போல் வரும் இதில்தான் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே! இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் கூர்ந்து கவனித்தால் பக்கத்தில் இருக்கும் திருத்தலங்கள் கூட ஓம் என்று சொல்கின்றார்களே அந்த ஓம் வடிவத்தில் இருக்கும் என்பேன்.

இதனையும் பார்த்து அப்பனே இப்பொழுதும் கூட சொல்கின்றேன் புதிதாக குக்கே சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர் அவ்விடத்திலிருந்து கவனித்தால் அப்பனே தெரியும் வேல் வடிவமாக.

அப்பனே நல் முறைகளாக பல சூட்சமங்கள் உண்டு என்பேன்.

அப்பனே நல்லாசிகள் அனைவரும் ஆறாவது அறிவிற்கு நல் முறையாக வாருங்கள் அனைவருக்கும் நல் முறையாக ஆசிகள் இதன்  சூட்சுமத்தை அடுத்த வாக்கில் சொல்கின்றேன் பலமாக அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

ஓதும் கிரி அது ஓதிய கிரி - ஓம் ஓதிமலை ஆண்டவரே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_16.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

Saturday, December 4, 2021

அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இதற்கு முந்தைய பதிவில்  அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் - 18.10.2021 தொகுப்பு பற்றி கண்டோம். அன்றைய தினம் யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்றே உணர்த்தப்பட்டோம். இவை வெறும் வார்த்தைகள் அன்று, இவற்றை நம் வாழ்க்கையில் கொணர வேண்டும். இதனை தான் அகத்தியம் பேசி வருகின்றது. இன்றைய பதிவின் தலைப்பை பார்க்கும் போது, உங்கள் அனைவருக்கும் நம் சொல்ல வரும் செய்தி புரிந்து இருக்கும்.





பதிவின் உள்ளே செல்லும் முன்னர் அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் - 18.10.2021 அன்று சில செய்திகளை பகிர்கின்றோம். ஏற்கனவே சித்தன் அருள் வலைப்பதிவில் நடந்த நிகழ்ச்சிகளை பார்த்தாயிற்று. இது நம்முடைய பார்வையில் கிடைத்த நிகழ்வின் சாராம்சம் ஆகும்.

1. தாமிரபரணி தாய்க்கு மலர் தூவி, தீபமேற்றி வழிபாடு செய்தோம்

2. தாமிரபரணியில்  அன்றைய தினம்  ஸ்நானம் செய்ய வாய்ப்பு கிட்டியது.

3. கோடகநல்லூர் பெருமாள் தரிசனம் - சொல்லில் அடங்கா அருள்நிலை

4. இனிப்புடன் கூடிய தயிர் சாதம் அன்னதானத்தில் இணைத்தோம். நமக்கு வழிகாட்டி ஒரு நாள் முன்னர் ஏற்பாடு செய்து கொடுத்த சின்னாளப்பட்டி ஶ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலுக்கு  நன்றிகள்

5. சித்தனருள் வலைத்தளம் மூலம் ஶ்ரீ அகத்தியர் வழிபாட்டில் குருவாக நம்மை வழிநடத்தும் திரு. அக்னிலிங்கம் ஐயா சந்திப்பு, ஆசி

6. சித்தனருள் திரு. அக்னிலிங்கம் ஐயாவிடம் பெற்ற அருள் பிரசாதம் ( 3 ஆண்டு வழிபாட்டில் நேற்று தான் பெற்றோம்)

7. பாண்டிச்சேரி ஶ்ரீ அகத்தியர் ஞான இல்லம் மூலம் ஶ்ரீ அகத்தியர் வழிபாட்டில் குருவாக நம்மை வழிநடத்தும் திரு. சுவாமிநாதன் ஐயாவுடன் சந்திப்பு & அருளாசி 

8. நம் தளம் சார்பில் பூஜை பொருட்கள் (பச்சைக் கற்பூரம்,மஞ்சள், வஸ்திரம்) கொடுத்தோம்.கூடுவாஞ்சேரியில் பூஜைப் பொருட்கள் வாங்கி கொடுத்த திரு.சத்யராஜ் அவர்களுக்கும், பூஜை பொருட்களை பெற்று அன்றைய தினம் கோயிலில் சேர்த்த திரு.சரவணன் ஐயா அவர்களுக்கும் நன்றி 

9. அகஸ்தியர் அதிர்ஷ்டதீபக் குழு மூலம் சக்திகள பூஜை நேரில் காணும் வாய்ப்பு.

10. மதுரை இறையருள் மன்றம் மூலம்  ஶ்ரீ அகத்தியர் வழிபாட்டில்  குருவாக நம்மை வழிநடத்தும் திரு பரமசிவம் ஐயாவுடன் சந்திப்பு & ஆசி

11. நம் குழு அன்பர்கள் திரு.சரவணன் ஐயா, திரு பாலகிருஷ்ணன்  ஐயா என நேரில் சந்தித்தோம்

12. அகத்தியர் அடியார்கள் , சாதுக்கள் சந்திப்பு என அன்றைய தினம் அருளாசி பெற்ற தினமாக அமைந்தது.

இந்த பூஜையை மிக சிறப்பாக செய்ய உதவிய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், குருநாதர் உத்தரவின் பேரில் முன் நின்று நடத்திய திருமதி.லக்ஷ்மி குழுவினருக்கும், கோவில் நிவாகத்திற்கும், லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கும், நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவருக்கும் நன்றிகளையும், வணக்கங்களையும் நம் தேடல் உள்ள தேனீக்கள் குழுவின் மூலம் இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

சென்ற பதிவில் சித்தன் அருள் தளத்தில் சிறு குறிப்பு ஒன்று இருந்தது. அதிலிருந்து அப்படியே தருகின்றோம்.

ஒரு சிறு குறிப்பு:-

"ஏன் அய்யா! உங்களுக்கு மட்டும் இந்த வருடம் இரண்டு பிறந்தநாள் பூசையா? அதன் விசேஷம் என்ன? என வினவியதற்கு, பெருமாளுக்கும் இரண்டாவது பூசையை செய்யச் சொல்கிறார். இதில் என்னவோ ஒரு சூட்சுமம் உள்ளது. அதை பற்றி மேலும் அகத்தியப்பெருமானிடம் கேட்டுள்ளேன். பதில் வந்ததும் தெரிவிக்கிறேன். 

இதோ அதற்கான பதிலும் கீழே தருகின்றோம்.

https://siththanarul.blogspot.com/2021/12/1048-kodaganallur.html

வணக்கம்! அடியவர்களே!

கோடக நல்லூர் பிரஹன் மாதவ சுவாமிக்கு அகத்தியர் பெருமான் செய்கிற இரண்டாவது அபிஷேக பூஜை இந்த மாதம் 12ம் தியதி, ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு  நடை பெறுகிறது.

என் அனைத்து சேய்களும் பங்கு பெறும் விதமாக அமய வேண்டும் என அவர் விருப்பம்.

திரு.ராகேஷ், தேடல் உள்ள தேனீக்கள் குழு அடியவர் முன் நின்று இந்த பூசையை நடத்துகிறார். அவர் தொடர்பு எண்ணை கீழே தருகிறேன்.
+917904612352

அனைவரும் தொடர்பு கொண்டு பங்கு பெற்று குருவருள் பெற்றுக் கொள்ளுங்கள்.

மற்றவை பின்னர் பார்ப்போம்.


இங்கு நாம் ஒரு செய்தியை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இங்கு நம்மால் ஆவது ஒன்றும் இல்லை. அனைத்தும் குருநாதர் அருளால் தான் நடைபெற உள்ளது. TUT குழு என்று அல்லாது அனைத்து அகத்திய அடியார்களும் இணைந்து இந்த இரண்டாம் பூஜையை நடத்த வேண்டும் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டியது ஆகும். இது நம் குழுவிற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வழிபாடு ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே பயண ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மேலும் ஏதேனும் தேவை என்றால் நம்மைத் தொடர்பு கொள்ளவும். இந்த வழிபாடு சிறப்பாக நடைபெற்று லோக ஷேமத்திற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

நம் குருதாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான்  அருளின்படி, இம்மாதம் நம் தளம் சார்பில் நடைபெற உள்ள வழிபாடுகள் கீழே தொகுத்து தந்துள்ளோம். 

1. ஓதிமலை - 09.12.2021 - வியாழன்

2. கோடகநல்லூர் - 12.12.2021 - ஞாயிறு

3. உத்தரகோசமங்கை - மார்கழி திருவாதிரை

4. ஶ்ரீ அகஸ்தியர் ஜெயந்தி - 23.12.2021 - வியாழன் - கூடுவாஞ்சேரி மற்றும் அனைத்து ஶ்ரீ அகத்தியர் கோவில்கள்

5. பாபநாச ஸ்நானம் - 16/12/2021 முதல் 13/01/2022க்குள் வருகிறது. 

இங்கு குறிப்பிட்ட நாள்களை பார்த்து கிடைத்தற்கரிய இந்த வழிபாட்டில் இணைந்து குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம். 

இந்த வழிபாட்டில் உதவி செய்ய விரும்பினால், நம்மைத் தொடர்பு கொள்ளவும்

நன்றி
வணக்கம்
ஓம் அகத்தீஸ்வராய நமஹ.



ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Wednesday, December 1, 2021

அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் - 18.10.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய குரு நாளில் வழக்கம் போல் அன்னசேவை சிறப்பாக நம் தளம் சார்பில் நடைபெற்றது.மேலும் இம்மாத சேவைகளுக்கு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுத்துள்ளோம்.தங்களின் பார்வைக்கு கீழே சமர்ப்பிக்கின்றோம் 

1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் 

2. திருஅண்ணாமலை அன்னதானம் 

3. எத்திராஜ் சுவாமிகள் முதியோர் இல்ல அன்னசேவை 

4. தர்ம சிறகுகள் குழு சிறு காணிக்கை 

5. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை 

6. எண்ணெய் - 1 டின் உபயம் 

7. ட்ரீ பேங்க் முல்லைவனம் 

8. கிளி சேகர் 

இம்மாதம் ஓதிமலை வழிபாடு 09.12.2021, குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் ஜெயந்தி 23.12.2021( குறைந்தது சுமார் 5 அகத்தியர் ஆலயங்களுக்கு நம் தளம் சார்பில் சிறு காணிக்கை கொடுப்பது வழக்கம் ) அன்று கொண்டாடபட உள்ளது. இந்த வழிபாட்டிற்கு பொருளுதவி செய்ய வேண்டுகின்றோம்.பொருளுதவி செய்கின்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.இன்று நாம் 18.10.2021 அன்று நடைபெற்ற அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் தரிசனம் பற்றி காண உள்ளோம். சித்தன் அருள் வலைப்பதிவில் இருந்து அப்படியே பகிர்கின்றோம். 


இம்முறை அனைவருக்கும் கோடகநல்லூர் தரிசனத்தில் கிடைத்த அருள் பிரசாதம் மேலே நீங்கள் காணலாம். இதை விட வேறு என்ன வேண்டும்? 

நடந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சென்ற தொகுப்பில் அடியேன் கூறிய "என் இயலாமையை புரிந்து கொண்ட அகத்தியர்............ மறுபடியும் முதலிலிருந்தா, மானசீகமாக என்னால் அது முடியாது என கூறிவிட்டேன், குருநாதரிடம்" என்பதை பல அகத்தியர் அடியவர்களும், தவறாக நிதிநிலைமையுடன் தொடர்புபடுத்தி, உடனேயே அடியேனுக்கு நாங்களும் நிதி தருகிறோம், வழி சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். இது முற்றிலும் தவறு. அடியேனின் உடல் நிலை காரணமாக அதிகமாக உடலால் உழைக்க முடியவில்லை. உழவாரப்பணிக்குத்தான் உதவி தேவை. நிதியால் அல்ல. பூஜையில் பங்கு பெற்று, அருள் பெற்றுக் கொள்ளுங்கள், அது போதும்! எல்லா வருடமும் அகத்தியர் அடியவர்கள் உழவாரப்பணி செய்து பூசையை நிறைவு செய்வதுபோல், இந்த இரண்டாவது பூசையும் நடக்க வேண்டும் என்று ஒரு சிறிய அவா!

பூஜை தினத்துக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளையும் கூறுகிறேன்.

  பாலராமபுரம் அகத்தியப்பெருமான் கோவிலை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒருநாள் அகத்தியப் பெருமானிடம் ஒரு எளிய வேண்டுதலை வைத்தேன்.

    "இந்த வருட பூசை மிக சிறப்பாக நடக்க வேண்டும். வரும் அனைவருக்கும் தாங்கள் அருள வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பி, பூசையில் கலந்து கொண்டு மறுபடியும் வீடு சென்று சேரும் வரை தாங்கள் கூட இருந்து காத்தருள வேண்டும்" என்றேன்.

    அன்றைய தினம் இரவு பூசையின் பொழுது, அங்கிருக்கும் பூசாரி திரு.சுமேஷ் அவர்களுக்கு நம் குருநாதர் ஒரு உத்தரவை கொடுத்தார்.

    "நீ போய் பூசையில் கலந்து கொண்டு, எல்லோருக்கும் கனகத்தை எம் சார்பாக அளித்துவிடு" என்றார். எந்த பூசை?  கனகம் என்றால் "தங்கம்" ஆயிற்றே! எதை பற்றி கூறுகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அடியேன் அவரை தொடர்பு கொண்டேன். காசை, சித்தர்கள் கானகம் என்றும் கூறுவார்கள். பூசை 18/10/2021 அன்று நடக்கிறது. நிறைய காசை அவரிடம் வைத்து பூசை செய்து கொண்டு வந்து கொடுங்கள்" என்றேன்.



எப்படியெல்லாம் குருநாதர் நம்மை சூழ்ந்து நின்று காக்கிறார் என்பதற்கு, இதுவும் ஒரு உதாரணம்.

அகத்தியர் உத்தரவால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பூசை நாள் வந்தது. இனி நடந்ததை பார்ப்போம்.

 அகத்தியப்பெருமானின் அருளால், அன்றைய தினம் ஒரு அர்ச்சகர், திரு.குமார் என்பவர் பூஜைக்கு வந்து சேர்ந்தார். வழியே இல்லை என்று நாம் நினைத்தாலும், நம் குருநாதர் நினைத்தால் எதுவும் நடத்தி தருவார் என்பதில் சந்தேகமில்லை.

  ஒரு வாரத்திற்கு முன் தாமிரபரணியை கண்டா போகுது, ஓரளவுக்கு ஓடிய நீர், மேலும் வற்ற தொடங்கியது. பெருமாளிடம், அகத்தியரிடம், தாமிரபரணி தாயிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்தேன். அந்தநாள் அன்று நீருக்கு குறைவிருக்கக்கூடாது, என்பதே வேண்டுகோள். முதல் நாள் கூட வற்றிய நிலையில் ஓடிய நதி, அன்றைய தினம் சுழித்துக்கொண்டு ஓடியது. கால் கவனமாக பாதிக்கவில்லை என்றால், கொண்டு போய்விடுவேன் என்கிற வேகம். கண்டதும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.

    நிறைய அடியவர்கள், தாமிரபரணி தாய்க்கு விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அனைத்து தாம்பூலமும் நீரை எதிர்த்து ஒரு இடம் வரை சென்றுவிட்டு, திரும்பி நீர் ஓட்டத்தில் சேர்ந்து சென்றது. இதை கண்டவுடன், தாமிரபரணி தாயே, தாம்பூலத்தை வாங்கி, தன இருப்பிடத்திற்கு கொண்டு செல்வதுபோல் இருந்தது. அந்த காட்ச்சியை காணவே இரு கண்கள் போதாது. தன கையினால் தாம்பூலம் கொடுத்தவர்கள், மிக மிக புண்ணியம் செய்தவர்கள், என தோன்றியது.

    கோவிலில் நிறைந்த அகத்தியர் அடியவர் கூட்டம். அர்ச்சகர் அபிஷேக பூஜையை மூலவருக்கு முன் நடத்துவதாக தீர்மானம் செய்தார். உள்ளே இடவசதி குறைவாக இருந்ததால் நிறைய அடியவர்கள் வெளியே எப்போதும் அபிஷேகம் நடக்கும் மண்டபத்தில் அமர வேண்டி வந்தது.

    நவகும்ப தீர்த்தம் வைத்து ஜெபத்துடன் பூசை தொடங்கியது.

    பெருமாளுக்கு தைல காப்பு சார்த்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த எண்ணையை வாங்கிக் கொண்டவர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள். ஏன் என்றால், பாலராமபுரம் அகத்தியப்பெருமான் கோயில் பூஜாரி திரு.சுமேஷ் தன கையால் அனைவருக்கும் கொடுத்தார். அகத்தியர் லோபாமுத்திரையை தொட்டு பூசை செய்கிற கைகள். நம் மீது அவர் விரல் பட்டாலே அகத்தியரை தொட்டு, அவர் சேமித்த அருள், நம் உடலில் பாயும்.

    தைலக்காப்புக்குப்பின், அபிஷேகம் தொடங்கியது. பால், தயிர், வாசனாதி தைலப்பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், தேன், இளநீர், பச்சைக்கற்பூரம், என அபிஷேக விதங்கள் நீண்டு சென்றது. உற்ச்சவ மூர்த்தியை கண்டவுடன், அடியேனுக்கு தோன்றியது என்ன வென்றால், ஒரு சின்ன குழந்தையை தலையில் நீர்விட்டு குளிப்பாட்டும்பொழுது, மூச்சு முட்டி கைகளால், முகத்தில் வழியும் நீரை துடைத்துவிட்டு, இன்னும் தலையில் நீர் விட வேண்டும் என சிரித்தபடி பார்க்குமே, அந்த உணர்வுதான் அடியேனுக்கு வந்தது. அத்தனை அழகு.

    அபிஷேகம் முடிந்து, அடியவர்கள் கொண்டு வந்த பூக்கள். மாலைகளால் பெருமாளையும், தாயார்களையும், அர்ச்சகர் மிக அழகாக அலங்கரித்தார்.

    நான்குவித நிவேதனம் பெருமாளுக்கும், தாயாருக்கும், கொடுக்கப்பட்டு, தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெற்றது.

    அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், தீர்த்தம், சடாரி, அபிஷேக மஞ்சள் வழங்கப்பட்டது.

    பாலராமபுரம் அகத்தியர் கோவில் சார்பாக, அனைத்து அடியவர்களுக்கும் பூஜாரி திரு.சுமேஷ், "அகத்தியர் படம் பதித்த ஒரு ரூபாய் காசும்", பாலராமபுரம் அகத்தியர் லோபாமுத்திரை படமும், வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக கொடுக்கப்பட்டது.

    அனைவருக்கும், அகத்தியப்பெருமான், பெருமாள் சார்பாக, 786,108,354 எங்கள் கொண்ட ரூபாய் வழங்கப்பட்டது.

    கூடவே, அகத்தியர் அடியவர்கள் கொண்டுவந்த இனிப்பு பண்டங்களும், ப்ரசாதத்துடன் கொடுக்கப்பட்டது.

    பூசையை பற்றி நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்டபொழுது, அவரே அங்கிருந்ததாகவும், அடியவர்கள் ஏற்பாடு செய்த பூசையை பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதியாக வந்திருந்து மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டதாகவும், கூறியுள்ளார். அனைவரையும், ஆசிர்வதித்ததாகவும் உரைத்துள்ளார்.

    இந்த பூஜையை மிக சிறப்பாக செய்ய உதவிய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், குருநாதர் உத்தரவின் பேரில் முன் நின்று நடத்திய திருமதி.லக்ஷ்மி குழுவினருக்கும், கோவில் நிவாகத்திற்கும், லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கும், நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    இரண்டாவது அபிஷேக பூசையை பற்றி குருநாதரிடம், நாடியில் ஒரு சில விஷயங்களை கேட்டுள்ளோம். அவர் கண் அசைவுப்படி, விஷயங்கள் நடக்கும். உரிய நேரத்தில் அனைவருக்கு தெரிவிக்கிறோம்.

ஒரு சிறு குறிப்பு:-

"ஏன் அய்யா! உங்களுக்கு மட்டும் இந்த வருடம் இரண்டு பிறந்தநாள் பூசையா? அதன் விசேஷம் என்ன? என வினவியதற்கு, பெருமாளுக்கும் இரண்டாவது பூசையை செய்யச் சொல்கிறார். இதில் என்னவோ ஒரு சூட்சுமம் உள்ளது. அதை பற்றி மேலும் அகத்தியப்பெருமானிடம் கேட்டுள்ளேன். பதில் வந்ததும் தெரிவிக்கிறேன். அகத்தியப்பெருமானின் திருநட்சத்திரம் டிசம்பர் 23, 2021 அன்று வருகிறது. கொண்டாட விரும்புகிறவர்கள், தயாராகலாம்.

நம்முடைய அனுபவங்களை இனிவரும் பதிவுகளில் தொடர குருவிடம் வேண்டுகின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html