அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டில் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி, பல தடைகளோடு அன்றாட வாழ்க்கையில் இருந்து வருகின்றோம். இப்படி ஒரு அசாதாரண சூழலை நாம் சந்திக்க போகின்றோம் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில் லோக க்ஷேமம் வேண்டி தினசரி பிரார்த்தனை செய்து கோளறு பதிகம் ஓதி, குருவிடம் சரணாகதி அடையுங்கள். குருவின் அருள் பேசும் ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.
இந்த அந்தநாள்
>> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம்,
அகத்தியர் மார்கழி குரு பூசை, நம்பி மலை, கோடகநல்லூர் என சென்று
வருகின்றோம்.இந்த ஆண்டு அந்தநாள் இந்த வருடம் தொகுப்பை கீழே தருகின்றோம். தற்போது நிலவி வரும் சூழலில் நேரில் சென்று விரைவில் நாம் தரிசனம் செய்ய வேண்டி அனைத்து குருமார்களிடம் பிரார்த்தனை செய்வோம்.
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2020ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.
நம் அனைவருக்குமே, "அந்த நாள் இந்த வருடம்", எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து இறைவன்/பெரியவர்களின் அருள், ஆசிர்வாதம், நிம்மதியான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.
ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:-
07/06/2021 - திங்கள்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம்.
நம்பிமலை:-
(இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)
20/07/2021 - ஆடி மாதம் - செவ்வாய்க்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம்
பாபநாசம்:-
(நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)
21/07/2021 - ஆடி மாதம் - புதன்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி திதி - கேட்டை நட்சத்திரம்.
திருச்செந்தூர்:-
(ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)
22/07/2021 - ஆடி மாதம் - வியாழக்கிழமை - சுக்லபக்ஷ திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம்.
ஓதியப்பர் பிறந்த நாள்:-
போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.
04/09/2021 -ஆவணி மாதம் - சனிக்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்
கோடகநல்லூர்:-
எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
18/10/2021 - திங்கள் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - பூரட்டாதி/உத்திரட்டாதி நட்சத்திரம்.
பாபநாச ஸ்நானம்:-
தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்தியப் பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து, நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2021 முதல் 13/01/2022க்குள் வருகிறது.
அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-
23/12/2021 - வியாழக்கிழமை - மார்கழி மாதம், சதுர்த்தி திதி - ஆயில்யம் நட்சத்திரம்.
இனி நாம் கடந்த வருடங்களில் பெற்ற தரிசனங்களை கீழே தருகின்றோம்.
ஓதிமலை தரிசனம்:-
பாபநாசம் தரிசனம்:-
அந்த யாத்திரையை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.
தமிழ்
நாட்டைப் பொறுத்தவரை தமிழகத்தை உருவாக்கியவர் நம் குருநாதர் எனலாம்.
தமிழகத்தின் இரண்டு முக்கிய ஆறுகளான காவிரி, தாமிரபரணி இரண்டும்
அகத்தியரின் அருளால் கிடைக்கப்பெற்றவை. இந்த ஆற்றின் நதிக்கரையில்
வாழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்று நாம் நதிக்கரை விட்டு நரக வாழ்க்கை
வாழ்ந்து வருகின்றோம். இருந்தாலும் நம்மை நம் குருநாதர் பல்வேறு வழிகளில்
வழிநடத்தி வருகின்றார். நம் குருவின் பாதம் பட்ட மண்ணில் நாம் வாழ்கின்றோம்
என்பதே பெரும் பேறு. அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் நம் குருநாதரின்
வாக்கை மீண்டும் மீண்டும் கேட்டு ,அதன் வழி நடந்திட வேண்டும். இன்றைய
பதிவில் நாம் இந்திரகீழ ஷேத்திர இறைவனை காண இருக்கின்றோம். இந்திரகீழ
ஷேத்திரம் எங்குள்ளது என்று கேட்கின்றீர்களா?
திருநெல்வேலியிலிருந்து
சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம். இந்த கோயில் இந்திரகீழ
ஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. திராவிடக் கட்டிடக்கலையில்
கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர்.
கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக்
கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால்
கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும்
நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக்
கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.
கோபுர
தரிசனம் கோடி புண்ணியம் பாபநாசநாதர் கோயில் கோபுரம் பார்க்கும் போது
தோன்றுகின்றது. இன்னும் சற்று தொலைவில் இருந்து தரிசிப்போமா?
பொதிகை
மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு
அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி
நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.
வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின்
கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில்
நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
மேலே நீங்கள் காண்பது பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லம் அகத்தியர்
ஜெயந்தி விழா காட்சிகள் ஆகும். அடுத்து நம் கூடுவாஞ்சேரி குருநாதருக்கு
நடைபெற்ற அகத்தியர் பூசையின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
உலக நன்மை வேண்டி 108 தீபம் ஏற்றிய காட்சி
அன்றைய தினம் வடை பாயசத்தோடு அனைவருக்கும் உணவு வழங்கினோம்.
கூடுவாஞ்சேரி கோயிலில் உள்ள குருக்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் வேட்டி ,துண்டு, சேலை என புத்தாடை வழங்கினோம்.
இது
போல் ஒவ்வொரு வழிபாட்டின் நிகழ்விலும் நாம் சில துளிகளை தான் இங்கே சொல்ல
முடிகின்றது. நேரில் வந்து அருள் பெற்று செல்பவர்கள் ஏராளம். அனைத்தும்
ஜீவநாடி அற்புதத்தாலே தான் இது போன்ற தரிசனம் நாம் பெற முடிகின்றது.
அகத்தியர்
அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு
தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று
நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html
Thanks for your informatiton. we will get back if any needs
ReplyDeleteR.Rakesh
TUT - tut-temples.blogspot.com