"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, November 28, 2021

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 51 ஆம் ஆண்டு குருபூஜை - 29.11.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் பற்றியும், சித்தர்களின் குரு பூஜை பற்றியும் பேசி வருகின்றோம்.சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. இன்றைய பதிவில் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனமும், குருபூஜை தகவலும் தர உள்ளோம்.

சென்ற ஆண்டில் நடைபெற்ற 50 ஆம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னப்பிரசாதம் தாத்தா வீட்டில் சாப்பிட்டோம். இதெல்லாம் எளிதாக கிடைக்குமா? அனைத்தும் குருவருளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது.


நாம் கூடுவாஞ்சேரி அருகில் உள்ள சித்தர்கள் தேடலில் இருந்த போது ஊரப்பாக்கம் அருகில் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனம் பெறலாம் என்று கேள்விப்பட்டோம். இது பல ஆண்டுகளாக நம் தேடலில் இருந்தது.பின்னர் இந்த ஆண்டு மார்ச் மாதம் தீடீரென நமக்கு தரிசனம் கிடைத்தது.முதலில் ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து காரனை புதுச்சேரி செல்லும் வழியில் இந்தக் கோயில் இருந்தது கண்டு சென்றோம்.

                                                                                                                                                                                                 

சுமார் 3 கி.மீ தொலைவில் நம்மை வரவேற்கும் பதாகை கண்டு அங்கிருந்து உள்ளே சென்றோம்.





இதோ கோயிலை அடைந்து விட்டோம்.


இது தான் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் ஜீவ சமாதி கோயிலாகும். கோயில் நடை சாற்றி இருந்தது. பின்னர் அவருடைய பேரன் திரு ராஜ் அவர்கள் வந்து கோயிலை திறந்து நமக்கு தரிசனம் பெற உதவினார். அன்றைய தின தரிசன காட்சிகளை நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.










இன்றைய குருபூஜை நன்னாளில் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனம் பெறுகின்றோம் என்றால் காரணமின்றி காரியமில்லை என்பது தெளிவாக புரிகின்றது அல்லவா?







உலகப் பற்றுக்களைத் துறந்து மனத்துள்ளே மாயையை நீக்கி உலகத்துக்குப் பணி செய்து, 'மக்கள் பணியே மகேசன் பணி' எனக் கொண்டு.. தொண்டு புரிந்தவரே  ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள் ஆவார்.

ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ்  சுவாமிகள் 06.12.1882 ஆம் ஆண்டு  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ரங்கசாமி - மயிலம்மாள்  தம்பதிகளுக்குப் பிறந்த ஆறு மக்களுள் மூத்த மகனாய்ப் பிறந்தார்.

முத்தமிழ் கலைஞர்:-

   அக்கால திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்து வரும்போதே தமிழ் மொழியில் அதிக ஆர்வம் கொண்டு  ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டும், பக்திப் பாடல்கள் பாடுவது, ஆன்மீக நாடகங்களில் நடிப்பது என கலை, இலக்கியம்,நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்து இயல், இசை,நாடகம் என்னும் முத்தமிழிழும் அதீத புலமை பெற்றவராகவே விளங்கி வந்தார்.
   பக்தி பாடல்களைக் கீர்த்தனைகளாகப் பாடியும்,ஸ்ரீ ரேணுகாதேவி, ஸ்ரீ கங்கை அம்மன் வரலாறுகளைத் தெருக்கூத்து நாடகங்களாகவும் அரங்கேற்றி, மக்கள் மனதில் ஆன்மீக விதைகளை விதைத்து வந்தார்.
   மதுரை தமிழ் சங்கத்தில் ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகளுக்குக் "கவிபாடும் சாற்று மன்னன்"  என்று முத்தமிழ் சங்கத்தினரால் சுவாமிகளைப் பாராட்டிப் பட்டம் வழங்கப்பட்டது.

கலைகளில் ஞானம்:-

   ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ஸ்வாமிகள் தம் 16வது வயதில் சித்தர்கள் பலரை அணுகி அவர்களுக்குத் தொண்டுகள் பல புரிந்து ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம் என அனைத்துவித கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
   இந்தியா முழுவதும் உள்ள ஊர்களுக்குச் சென்று நோயுற்ற மக்களுக்கு மூலிகை வைத்தியங்கள் செய்து அவர்களை குணப்படுத்தி  வந்தார்.

ஸ்ரீ குகை நமச்சிவாயர்:-

   சுவாமிகள் தனது 33-ம் வயதில் பல ஞானியர்களிடம் ஞான உபதேசம் பெற்று, காசி வாசி சிவானந்த குருவையும், திருவண்ணாமலை குகை நமசிவாயரையும் குருவாக ஏற்ற சுவாமிகள், இல்லறத்தைத் துறந்து துறவு பூணும் எண்ணத்துடன் அருணையில் ஞான ஜோதி ஏற்றும் திருஅண்ணாமலை குகையினுள்  தவம் மேற்கொண்டிருந்த  குகைநமச்சிவாயரை சந்தித்தே ஆகவேண்டும் என்னும் உறுதியோடு குகையினுள் சென்று அங்கேயே இரவு முழுவதும் தங்கியிருந்தார்.
 குகையினுள் இருந்த குகை நமச்சிவாயர் கண்விழித்து இவருக்கு ஆசி வழங்கி, "உனக்குத் துறவறம் ஏற்க துறவு ஞானம் இல்லை;  இல்லறவாசியாக இருந்து.. இல்லறஞானம் ஏற்று வேண்டுவோர்க்கு வேண்டுவன செய்து அவர்களை வழி நடத்துவாயாக" என்று சுவாமிகளை அவரது இல்லற தர்மத்தைக் கடைபிடித்து ஒழுகும்படி அறிவுறுத்தினார்.



குருவின் ஆணை:-

    சுவாமிகளும் தம் குருவின் ஆஞ்ஞைப்படி தம் சொந்த ஊரான காரணைப் புதுச்சேரி வந்து சேர்ந்து மணமுடித்து இல்வாழ்வினூடே மக்களுக்குச் சித்த வைத்தியம் செய்தும்,ஆன்மீகத் தொண்டாற்றியும், மூலிகை ரகசியங்களைக் கற்றுத் தந்தும், ஞான மார்க்கத்தை உபதேசித்தும் 87 சீடர்களைப் பெற்றார். ஸ்ரீ பெரும்பூதூர் அருகே சுமந்திரமேடு  என்னுமிடத்தில் 32 சென்ட் விளைநிலத்தை ஒரு சீடர் குருதட்சணையாக சுவாமிகளுக்கு வழங்கினார். மற்றுமொருவர் இரண்டு சென்ட் நிலத்தை குருதட்சணையாக வழங்கினார். அவற்றையெல்லாம் சுவாமிகள் அவ்வூரார் நலம் பெற வேண்டி அவ்வூர் மக்களுக்கே அவற்றைத் தானமாக வழங்கி விட்டார்.



ஜீவ முக்தி:-

   ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள் தமது 87 சீடர்களிடம் தாம் ஜீவமுக்தி அடையும் நாளை முன்னதாகவே அறிவித்தார்.அதன்படி 1970-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவ முக்தி அடைந்தார்.  சுவாமிகள் குறிப்பிட்டபடி முக்தி அடைந்ததும் அவரது சீடர்கள் சுவாமிகளைக் காரணைப் புதுச்சேரியில் சுவாமிகளுக்குச் சொந்தமான இடத்தில் மாமரத்தின் கீழ் சமாதி செய்வித்தனர். சுவாமிகளின் கூற்றுப்படி சமாதி செய்வித்தபின்  ஒரு வருடம் கழித்துத் தம் சமாதியைத் திறந்து  பார்க்கும் படியும், அச்சமயம் தனது சரீரம் கெடாமல், உயிரோட்டமாய் இருப்பின் அதனை அபிஷேகித்து, பூஜித்து வழிபட வேண்டும் என்றும் தம் சீடர்களிடம் கூறியிருந்தார்கள்.
  
 அதன்படியே 87 சீடர்களும் ஓராண்டுக்குப் பின் வந்து சமாதியைத் திறந்து பார்த்த போது சுவாமிகளின் தேகம் சிதையாது,அழியாதுஅப்படியே இருந்தது.சீடர்கள் சுவாமிகளுக்கு 108 அபிஷேகங்கள் செய்வித்து,ஆராதனை செய்து வழிபட்டுப் பின் சுவாமிகளின் குடும்பத்தினரிடம் சுவாமிகளைத் தொடர்ந்து பூஜித்து வருமாறு சொல்லிச் சென்றனர் .



பின்னர் மீண்டும் ஒரு முறை பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனம் பெற்றோம். அப்போது நம் தளம் சார்பில் விளக்கேற்ற இலுப்பெண்ணை டின் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளோம்.









சமாதி பீடம்:-

ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகளின் சமாதி பீடத்தில் பஞ்சலோக சிலாரூபமும், சிவலிங்கமும் அமைக்கப்பட்டு பூஜித்து வருகின்றனர். 

பூஜைகள்:-

 ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி வம்சாவளியினர் தொடர்ந்து சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த நட்சத்திரமான கார்த்திகை உத்திரம் நட்சத்திர நாளில் சிறப்பாக குருபூஜை நடத்தியும்,சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேகமும்,அன்னதானமும் செய்து வருகின்றனர். 

பிரார்த்தனை:-

ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள், தம்மை நம்பி கோரிக்கைகளுடன் வருபவர்கள் தனது ஜீவசமாதி பீடத்தை ஒன்பது முறை சுற்றி வந்து தலத்திலிருந்து பிடி மண் எடுத்துச் சென்று வழிபட்டு வர பிரார்த்தனை நிறைவேறும் என்று திருவாக்கும் உரைத்துள்ளார்கள். சுவாமிகளின் சமாதி பீடத்தை மூன்று தலைமுறையினர் தொடர்ந்து வழிபாடுகள் செய்து வருகின்றனர்.தற்சமயம் சுவாமிகளின் கொள்ளுப்பேரன் ஜீவசமாதி பீடத்தை பூஜித்துத் தொண்டாற்றி வருகின்றார்.


அமைவிடம்:-

சென்னை தாம்பரத்திற்கு அண்மையில் ஊரப்பாக்கம் அருகில் உள்ள காரணைப் புதுச்சேரியில் சுவாமிகளின் ஜீவபீடம் அமைந்துள்ளது.

அனைவருக்கும் குருவருளும் திருவருளும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Saturday, November 27, 2021

ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி - இன்று கால பைரவ ஜெயந்தி - 27.11.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

இன்றைய கால பைரவ ஜெயந்தி நன்னாளில் பைரவர் தரிசனம் இங்கே பெற உள்ளோம். சித்தர் வழிபாட்டில் விநாயகர், ஆஞ்சநேயர், பைரவர், பாலாம்பிகை வழிபாடு மிக மிக முக்கியமான வழிபாடு ஆகும். சித்தர் மார்க்க வழிபாட்டில் நாம் சொன்ன வழிபாட்டை கண்டிப்பாக நீங்கள் தொட்டு இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.


ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

ஸ்வர்ணாக ர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.


அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

  12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

இனி பல்வேறு திருத்தலங்களில் இருந்து பைரவர் தரிசனம் பெற இருக்கின்றோம்.

இன்றைய தினம் காலை மகாதேவ பைரவாஷ்டமி வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
ஹோம,அபிஷேக,அலங்கார தீபாரதனைகள் சிறப்பாக நடைபெற்றன.அவற்றின் காட்சிகள் இங்கே.











இன்று மாலை பைரவருக்கு சந்தனக் காப்பு மற்றும் வடைமாலை அலங்காரம்.




கார்த்திகை மாத கால பைரவாஷ்டமி திருவிழா 

நிறைவு நாள் ஒன்பதாம் நாள் விழா

நவகிரக ஹோமம் ருத்ர ஹோமம் கால பைரவ ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் இனிதே நடைபெற்றது
















நவபைரவர், சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :-

சொர்ணாகர்ஷண பைரவர் பைரவி சூரியனின் பிராண தேவதை

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ : சொர்ணபைரவ ப்ரசோதயாத்.

ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தன்னோ : பைரவி ப்ரசோதயாத்.

காலபைரவர் இந்திராணி
சந்திரனின் பிராண தேவதை

ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தன்னோ : கபால பைரவ ப்ரசோதயாத்.

ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : இந்திராணி ப்ரசோதயாத்.

சண்டபைரவர் கௌமாரி செவ்வாயின் பிராண தேவதை

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தன்னோ : சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : கௌமாரி ப்ரசோதயாத்.

உன்மத்த பைரவர்  ஸ்ரீ வராஹி
புதனின் பிராண தேவதை

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தன்னோ : உன்மத்தபைரவ ப்ரசோதயாத்.

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : வராஹி ப்ரசோதயாத்.

அசிதாங்க பைரவர் பிராம்ஹி
குருவின் பிராண தேவதை


ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தன்னோ : அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.

ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : பிராம்ஹி ப்ரசோதயாத்.

ருரு பைரவர் மஹேஸ்வரி
சுக்கிரன் பிராண தேவதை

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தன்னோ : ருருபைரவ ப்ரசோதயாத்.

ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : ரௌத்ரி ப்ரசோதயாத்.

குரோதன பைரவர் வைஷ்ணவி 
சனியின் பிராண தேவதை

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தன்னோ : குரோதன பைரவ ப்ரசோதயாத்.

ஓம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : வைஷ்ணவி ப்ரசோதயாத்.

சம்ஹார பைரவர் சண்டீ 
ராகுவின் பிராண தேவதை

ஓம் மங்ளேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தன்னோ :ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்.

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தன்னோ :சண்டி ப்ரசோதயாத்.

பீஷண பைரவர் சாமுண்டி
கேதுவின் பிராண தேவதை

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸ்வானுக்ராய தீமஹி
தன்னோ : பீஷணபைரவ ப்ரசோதயாத்.

ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ :காளி ப்ரசோதயாத்.

குறிப்பு : அந்தந்த கிழமைகளில் அந்தந்த பைரவருக்கு உரிய காயத்திரி மந்திரங்களை படிப்பது மிகவும் நன்மை அளிக்கும். இவற்றுள் ராகு, கேது மட்டும் அந்தந்த கிழமைகளில் ராகு காலம் மற்றும் கேது காலங்களில் பாராயணம் செய்ய நன்மைகள் கிடைக்கும்.

இனி மீண்டும் தரிசனம் தொடர்வோம். 

பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர் அஷ்டமி சந்தனக்காப்பு அலங்காரம்



அடுத்து நாம் சோழபுரம் ஸ்ரீ பைரவேஸ்வரர் தரிசனம் காண உள்ளோம்.



இன்னும் கூடுவாஞ்சேரி பைரவர்  பெற காத்திருக்கின்றோம். அதனை தனி பதிவாக அளிக்க குருவிடம் வேண்டுகின்றோம். இன்றைய நன்னாளில் இந்தப் பதிவினை காணும் அனைவருக்கும் 64 பைரவர் ஆற்றல் அனைவரையும் காக்க வேண்டி, பிரார்த்தனை செய்து மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


ஓம் ஸ்ரீ குருவே சரணம்
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமோ நமஹா
ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ பேரண்டமே போற்றி போற்றி

ஓம் ஶ்ரீகாலபைரவாய நமோ நமஹ
ஓம் ஶ்ரீ பிரபஞ்ச  ராஜ்ஜியமே போற்றி போற்றி

மீள்பதிவாக:-

இன்று கால பைரவ ஜெயந்தி - 07.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/07122020.html

இன்றைய தேய்பிறை அஷ்டமி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_13.html

இன்றைய தேய்பிறை அஷ்டமியில் குரு அரிச்சந்திர பைரவர் திருக்கோயில் தரிசிக்கலாமே ! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_14.html

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்! - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_61.html

 சிவகணங்கள் புடைசூழ செய்யூர் ஸ்ரீ கந்தஸ்வாமியார் திருக்கோயில் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_10.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (6) - https://tut-temples.blogspot.com/2020/05/tut-6.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html


தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html