அகத்தியா
அகத்தியா என்று பக்தி காட்டி வணங்கினால் பிரம்மதேவன் மனமிரங்கி அருளுவார்.
ஏனென்றால் பிரம்மதேவனுக்கு அகத்தியன் நான் பல சமயங்களில் உதவி செய்து
இருக்கின்றேன்.
அதுபோலத்தான் அப்பனே சித்திரகுப்தன் அவனுக்கும் பல நேரங்களில் நான் உதவி இருக்கின்றேன் பரிகாரங்கள் கூறி இருக்கின்றேன்.
மனிதர்களின் தலையெழுத்து விதியை பிரம்ம தேவனிடம் சித்ரகுப்தன் இடம் சொல்லி மாற்ற முடியும் என்னால். ஆனால் அது தவறாகிவிடும்.
அப்பனே
மனிதர்களுக்கு மேன்மையான எண்ணம் வேண்டும்! மேன்மையான எண்ணம் எவ்வளவு
இருக்கிறதோ, அவர்களே முன்னேறி செல்வார்கள். அப்பனே மேன்மையான எண்ணம் இல்லை
எனில், இறைவனை எவ்வளவு தேடினாலும், இறைவன் கிடைக்க மாட்டான். மேன்மையான
எண்ணங்களும் சிந்தனைகளும் தர்ம காரியங்களும் ஈடுபடுவதும் இறைவனைக் காண வழி
செய்யும் அப்பனே!
யாருக்கும்
தீங்கு செய்யாத குணமும், யார் மீதும் பொறாமை இல்லாத குணமும், இருந்தால்
வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றமும் கிட்டும் அப்பனே!
அறம்
செய்ய விரும்பு தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்றால் அறம்
அப்பனே! அறம் என்றால் தர்மம் நல்வழிகளில் யார் தர்மம் செய்து வருகிறார்களோ
அவர்களுக்கு இறைவன் நிச்சயம் காட்சி தருவான்! அது வேண்டும் இது வேண்டும்
என்று பலனை எதிர்பாராமல் எவரொருவர் தர்ம காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம்
நல் முறையாக செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் இறை தரிசனம் உண்டு
அப்பனே!
அப்பனே
அகத்தியா நீயே பார்த்துக்கொள் என்று வணங்கி விட்டால் போதும் நான்
பார்த்துக்கொள்வேன்! என்னிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று
கேட்கக்கூடாது! அகத்தியா அகத்தியா என்று அன்பால் வணங்கினால் போதுமானது
எனக்கு தெரியும் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அப்பனே!
நல்
முறையாக இப்போதே சொல்லி விடுகிறேன் அப்பனே! பிரம்மதேவனுக்கு எந்த
மாதிரியான மனிதர்களை பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறேன் அப்பனே! பொறாமை
குணங்கள் இருக்கக்கூடாது. சாந்தமான மனதாய் இருக்க வேண்டும். தியானங்கள்
செய்ய வேண்டும். தன்னைப்போல் பிறரை எண்ண வேண்டும். இவை போன்ற எண்ணங்கள்
இருக்கும் மனிதர்களை பிரம்மதேவன் விரும்புவான், அவனும் பிரியப்பட்டு
தலையெழுத்தை மாற்றி தருவான் அப்பனே!
ஆணவம்
அகங்காரம் தீய குணங்கள் இருந்தால் பிரம்மதேவன் மேலும் தட்டி வைத்து கீழே
விழச் செய்து விடுவான். கிரகங்களுக்கு கட்டளையிடுவான். மனிதர்கள் நிச்சயமாக
அவர்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அப்பனே மனிதர்கள் சரியான வழியில்
சென்றால் பிரம்மனே அவர்கள் தலையெழுத்தை மாற்றி விடுவான்
மனிதர்கள் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் பல மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே.
மனிதர்கள்
புண்ணிய காரியம் செய்து விட்டு நான் அதைச் செய்வேன் இதைச் செய்தேன் அந்தப்
புண்ணிய காரியத்தை செய்தேன் இந்த புண்ணிய செயலைச் செய்தேன் என்று
கூறிக்கொண்ட நடந்தால் அவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் அவர்களுக்கு
கிடைக்காது அப்பனே. நான் அவ்வளவு புண்ணிய காரியம் செய்து இருக்கிறேன்
இதையெல்லாம் செய்து இருக்கின்றேன் எனக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்றும்
கூறக்கூடாது அப்பனே. நீங்கள் செய்யும் புண்ணிய செயல்கள் இறைவனுக்கும்
எங்களுக்கும் தெரிந்தால் மட்டும் போதுமானது நிறைய மனிதர்களை நாங்கள்
பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே. அவர்கள் புண்ணியச் செயல்கள்
செய்தாலும் கஷ்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏன் அவர்களுக்கு
கஷ்டம் வருகிறது? ஏனென்றால் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று
கூறிக் கொண்டு திரிகின்றார்கள். இதனால் தான் அவர்களுக்கு புண்ணிய பலன்
கிடைக்காமல் கஷ்டம் வருகிறது மனிதர்கள் அவர்கள் செய்யும் புண்ணியச்
செயல்களை இறைவா உன்னருளால் அனைத்தும் நன்றாக நடக்கட்டும் என்று கூறி
எவரொருவர் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலனுண்டு அப்பனே.
மனிதர்கள்,
குலதெய்வம் விஷயங்களில், மனிதன் தவறு செய்கின்றான் அப்பனே பெண்களுக்கு
இரண்டு குல தெய்வம் அவர்கள் பிறந்த வீட்டில் வழிபடும் குலதெய்வம்
திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்றால் கணவன் வழி குலதெய்வம் அதுவும் குல
தெய்வமாகி விடுகிறது. அதனால் பெண்களுக்கு இரண்டு குல தெய்வங்கள் இரு குல
தெய்வங்களையும் வணங்கி வர அவர்கள் வாழ்க்கையில் சிறப்பைத் தரும் அப்பனே.
மனிதர்கள்
இறைவனை தேடும்பொழுது கஷ்டத்தை தான் முதலில் சந்திக்க வேண்டும் அப்பனே.
கஷ்டங்களெல்லாம் அனுபவங்கள் ஆகிவிடும் கடைசியில் இறைவனே மெய் என்று
உணர்வார்கள் மனிதர்கள் அனைவரும். மாயையின் பிடியிலேயே சிக்கிக்
கொண்டிருக்கிறார்கள் அப்பனே. மாயைவழியே சென்று கொண்டிருக்கின்றார்கள்
அப்பனே. இறைவனை வணங்குவதற்கு கஷ்டமாக நினைப்பார்கள். கஷ்டங்கள் வரும்.
கஷ்டத்திலும் நிலையாக நின்று இறைவனை நினைத்து இறைவா நீயே என் கதி என்று
நினைத்தால் அந்த இறைவனே வந்து அழைத்துச் செல்வான் அப்பனே. ஆகையால்
நல்முறையாக அப்பனே நேர்வழியில் செல்லுங்கள். யாருக்கும் துரோகங்கள்
செய்யாதீர்கள். வஞ்சகம் ஏமாற்றுதல் போன்றவை செய்துகொண்டு
இருந்தால், நீங்களே ஏமாந்து போவீர்கள் அப்பனே. வாழ்க்கையில் ஒன்றும் செய்ய
இயலாது. நாங்கள் காட்டிய வழிகளில் வாருங்கள். இறைவனை நிச்சயம் நாங்கள்
காண்பிப்போம். வரும் காலகட்டங்களில் கூட உண்மை மறைந்துவிடும். ஆனால் எவர்
ஒருவர் நேர்மையை கடைப்பிடித்து தர்ம சிந்தனையுடன் கூடிய பக்தியை
காட்டுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு. அதனால் அப்பனே நல்ல
முறையில் நடந்துகொள்ளுங்கள்.
ஆனாலும் நல் முறையாக தாய் தந்தை நீயே அனைத்தும் நீயே என்று வேண்டிக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன்!
என்பேன் இனிமேலும்,
நல் முறையாக அப்பனே எவை எவை கூறும் அளவிற்கு கூட தகுதியான மனிதர்களை மட்டும் தான் இங்கே அழைப்பான் முருகன்.
நல் முறையாக அனைவரையும் முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இவனுக்கு பலம் அதிகம் என்பேன்.
அதனால் ஆனாலும் சோதனைகள் அதிகம் என்பேன்
மீண்டும் வர மீண்டும் வர சுபிக்ஷங்கள் ஏற்படும் என்பேன், நல் முறையாக எவை எவை என்று கூற!
முருகன்
நினைத்தால் அனைத்தையும் நடத்தி வைப்பான். அதனால்தான் அப்பனே எவ்வாறு
என்பதை உணர்ந்து நல் முறையாக அவனை வணங்கி கொண்டே சென்றுவிடுங்கள். நல்
முறைகள் ஆகவே பின் பின் எவ்வாறு என்பதை உணர்ந்து மாற்றங்கள் ஏற்படுவது
உறுதி என்பேன்.
எண்ணங்கள் மேன்மையாகவே இருக்கட்டும் அப்பனே!
அப்பனே
முருகனுடைய ராசிக்காரர்கள் முருகனைப் பாடி பாடி அனுதினமும் வணங்கி வந்தால்
நலமாகும். இவ் ராசிக்காரர்கள் கந்தரனுபூதி தினமும் பாடி தொழுது வந்தால்
மேன்மை மேலோங்கும் என்பேன். நல் முறையாக கடக்கும் அளவிற்கு கூட மேன்மையான
பலன்கள் உண்டு என்பேன்.
நல் முறையாக இன்றளவும் கூட இவ் ஓதிமலையில்
இருந்து முருகன் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்துவிட்டான் இனிமேலும்
எவ்வாறு என்பதையும் கூட நீங்கள்தான்.
ஒன்றை உரைக்கின்றேன்! பின்
பின் யோக காலங்கள் வருவதாலும் வாழ்க்கை எவ்வாறு என்பதை நீந்தி வருவதற்கு
முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள், தன் வாழ்க்கை தன் கையில் என்று உண்மையாகவே
எவ்வாறு என்பதையும் கூட மேன்மையான எண்ணங்களே நல் முறைகளாக உயர்த்திக்
கொண்டே சென்றால் அப்பனே அனைத்து தெய்வங்களும் உதவி புரியும் என்பேன்.
இதற்கு
பரிகாரங்கள் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்கள் தவறு செய்துவிட்டு
பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று அலைகின்றானே இதுவும் நியாயமா?
நல் முறைகளாக அப்பனே எவை எவை என்றுகூட, அன்பே தெய்வம் என்று மூலன் (திருமூலர்) கூட சொல்லிவிட்டான். அப்பனே இதுதான் உண்மை
அன்பாக இறைவனை வணங்கினால் அவன் தானே இறைவனே முழுமைப்படுத்தி அவன்பால் ஈர்த்து அனைத்தும் செய்து விடுவான்.
ஆனாலும்
அப்பனே இவ்வுலகத்தில் பின் மனிதர்கள் எவை எவை என்று கூட எதனை எதனையோ
நோக்கி அழிவை நோக்கி மாயையில் விழுந்து அழிந்து அழிந்து இனிமேலும்
செல்வார்கள் என்பேன் கலியுகத்தில் அப்பனே.
அப்பனே நல்ல முறையாக
கலியுகத்தில் இறைவன் எவ்வாறு என்பதை கூட தேடிய வேட்டைக்கு, முருகா என்று
அழைத்தாலே போதுமானது அன்போடு. நல்லெண்ணங்களை கொண்டு, நிச்சயம் வருவான்
என்பேன்.
அப்பனே இவையன்றி பின் நல் யோககாலங்கள் யோக காலங்கள் ஆனாலும் இயற்கை இயற்கை என்கின்றார்களே இதுதான் இறைவன் என்று யான் சொல்வேன்.
நல்
முறைகளாக ஒன்றை ஒன்றை எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலைகளை அனைவருக்கும்
தெரிவிக்கின்றேன் அப்பனை நல் முறைகளாக இறைவனையே நினைத்து இறைவனே கதி
என்றால் அப்பனே நிச்சயம் எவ்வாறு என்பதையும்கூட இறைவன் நல்லதே செய்வார்
என்பேன்
அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உண்மைக்கு புறம்பாக எவ்வாறு என்பதைக்கூட உண்மை நிலையை கூறி அப்பனே எடுத்துரைக்கின்றேன் இப்பொழுது.
அப்பனே
அனைத்தும் நீயே அனைத்தும் நீயே கதி! உந்தனுக்கு தெரியும் எவை
கொடுக்கவேண்டும் என்று பின் நல் முறைகளாக வணங்கி செல்லுங்கள் இறைவன்
அனைத்தும் கொடுப்பான் மகிழ்ச்சியான வாழ்வையும் கொடுப்பான்.
இதைத்தவிர எதையெதையோ கேட்டுக்கொண்டிருந்தால், அப்பனே அதனாலேயே அழிவுகள் ஏற்படும் என்பேன்
அப்பனை
மக்கள் எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே உணரும்
அளவிற்கு கூட பக்குவங்கள் வேண்டும் அப்பனே முருகா, முருகா அப்பனே எவ்வாறு
என்பதையும் கூட சிவசிவா என்று, அப்பனே கடந்து சென்று விடுங்கள், போதுமானது
அப்பனே!
அதேபோல்
அப்பனே சிறுபிள்ளையாக எவ்வாறு வந்தாயோ அதேபோல் கடை நாள் வரை
இருந்துவிட்டால் அனைத்தையும் நல்குவான் என்பேன் ஆனால் மனிதர்கள் இவ்வாறு
இருப்பதில்லை.
நல்
முறைகளாக அப்பனே எவை என்றும் அனைத்தும் நல் முறைகள் ஆகவே மனிதனுக்கு
அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி இறைவன் அனைத்தும்
இலவசமாக தான் கொடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும் மனிதன் அதனையும் கூட
சற்று செயற்கையாக மாற்றிக் கொள்ளும் தகுதி படைத்துவிட்டான். தகுதி
படைத்துவிட்டான் என்பதற்கு இணங்க இனிமேலும் கலியுகத்தில் அப்பனே கலியுகக்
கடவுளான முருகனே ஒவ்வொருவரையும் திருத்துவான் என்பேன்.
அப்பனே
இனிவரும் காலங்களில் அப்பனே எவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட ஏமாற்றங்கள்
அதிகம் ஆனாலும் இவற்றை விட ஏமாறுபவர்கள் அதிகம். இவ்வாறு இன்றி அப்பனே நல்
முறையாக இறைவனை சரணாகதி அடைந்துவிட்டால் தான் கலியவன் (கலிபுருஷன்)
நன்றாகவே செய்வான் என்பேன். கலியவனும் எவ்வாறு என்பதையும் கூட
இறைவனிடத்தில் அப்பனே சில மனிதர்களையும் நல்நோக்கி சிலபக்தி உள்ளவர்களையும்
சில கஷ்டங்களுக்கு உள்ளாக்குவான் என்பேன்.
சனியவன்
எவ்வாறு என்பதையும் கூட மனமகிழ்ந்து பின் நல்லவைகளாக நல்லதையே
செய்துகொண்டு இருந்தால் சனி அவனும் மேன்மையான பலன்களை கொடுப்பான் என்பேன்
அதற்கிணங்க மாறுபாடாக செய்து கொண்டு வருபவர்களை நிச்சயம் தண்டிப்பான்
என்பேன்.
ஆனாலும்
சனி கொடுத்தால் எவ்வாறு என்பதையும் கூட நலன்களே ஏற்படும் என்பேன். அப்பனே
ஆனாலும் அனுபவத்தைத் தான் கொடுக்கின்றான் என்பேன். ஆனாலும் அவை அனுபவம்
எப்படி இருக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அப்பனே நலமாக நலமாக எண்ணிய எண்ணங்கள் நல் முறையாகவே ஈடேறட்டும் எனது ஆசிகள் அப்பனை நல் முறையாக.
நல் முறையாக எவ்வாறு என்பதையும் கூட வரும் காலங்களில் அப்பனை நல் முறையாக இயற்கையான உணவுகளை உட்கொள்ளுங்கள் அப்பனே அதிகமாக.
அப்பனே
நல் முறையாக நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நல் முறையாக எங்கள்
மூலிகையான கடுக்காயை நிச்சயம் மறக்காதீர்கள் அப்பனே. ஒரு மாதத்திற்கு ஐந்து
முறையாவது உட்கொள்ளுங்கள்
அப்பனே நல் முறையாக அடிக்கடி கிராம்பையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் அப்பனே.
அப்பனை
நல் முறையாக இதனைத்தான் யான் சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன்
நல்ல முறையாக திரிபலா திரிகடுகம் மூலிகைகளை மறக்காமல் நிச்சயம் எடுத்து
வாருங்கள். இவற்றில் உள்ளவை எதையும் உங்களை தாக்க விடாது என்பேன்.
நல்
முறைகளாக எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலை பெற்று இவற்றையும் கூட
முருங்கை எனும் நல் மூலிகையை நிமித்தம் காட்டி நல் மூலிகைகளான
பொன்னாங்கண்ணி மூலிகை மணத்தக்காளி எனும் மூலிகையையும் பின் பின் எவ்வாறு
என்பதையும் கூட ஆவாரம்பூ நல் முறைகளாக எடுத்துக்கொள்ள அது விரைவிலேயே
மாற்றங்கள் வரும் என்பேன்.
வரும் என்பேன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி எவ்வாறு என்பதையும் கூட நலங்கள் எழுவதற்கு சொல்கின்றேன் அப்பனே.
இவ்வாறு
என்பதையும் கூட நல் முறைகளாக நின்ற பொழுதே முருகனையும் வணங்கி செல்லுங்கள்
எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே கலியுக தெய்வம் முருகன் நிச்சயம்
காப்பாற்றுவான் என்பேன்.
கலியவனும்
முருகனிடத்தில் சில சண்டைகள் இடுவான் என்பேன். ஆனாலும் நல் முறைகள் ஆகவே
முருகன் நிச்சயமாய் கலியுகதெய்வமாக கலியவனை வெற்றி கொள்வான்.
அருளாசிகள் ஆக தெரிவித்துக் கொள்ளும் அளவிற்கு இதனடியில் (ஓதிமலை) பல பல சித்தர்களும் தவங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்
அப்பனே இதனை உணர்வதற்கு அதனால்தான் அப்பனே நல் முறையாக இங்கு வந்து சென்றவர்களும் சில மன மாற்றங்கள் நிச்சயம் உருவாகும் என்பேன்.
நல்
முறைகளாக அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உண்மை என்றும் கூட விளங்கும்
அளவிற்கு இவன்தனும்(ஓதிமலை முருகன்) நிச்சயமாய் நல்ல முறைகள் ஆகவே நடந்து
வலம்வந்து கொண்டுதான் இருக்கின்றான்
அப்பனே
நல் மாற்றங்கள் எவ்வாறு என்பதைக்கூட இப்புவியில் நல் மாற்றங்கள் நிச்சயம்
நடைபெற செய்வான் முருகன் நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட
வெவ்வேறு பாதைகள் நல் முறைகள் ஆகவே இனிமேலும் சித்தர்களின் ரகசியங்கள்
பலப்பல உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்டு அப்பனே நல் முறைகள் ஆக்கும் என்பேன்.
அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே திருத்தல முருகனை நல் முறையாகவே வணங்கி வணங்கி சென்றுகொண்டே இருந்தாலே போதும் .
கர்மாக்கள் பல அழியும் என்பேன். ஆனாலும் அப்பனே முருகன் அதிவிரைவில் விடமாட்டான் என்பேன்.
அப்பனே
நல் முறைகளாக உருவாக்குவதற்கு சமமான கர்மாக்களை போகன்(போகர் சித்தர் பழனி
நவபாஷண சிலை உருவாக்குவதற்கு முன் ஓதிமலைக்கு வந்து சிலகர்மாக்களை கழித்து
விட்டு சென்றதை குரு அகத்தியர் குறிப்பிடுகிறார்) இங்கு வந்துதான்
கழித்தான் என்பேன்!
அப்பனே எவ்வாறு என்பதையும் கூற பல சித்தர்களும் இங்கு நல் முறையாகவே இங்கு தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
பல சித்தர்கள் இங்கு இருந்து தவழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இப்போதும் கூட.
அப்பனே ரகசியமாக எவை என்று கூற! இரவில் தங்கி செல்கின்றார்கள் என்பேன்.
இப்பதிவை
குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும்
பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும்.
அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை
பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை
கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம்
காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று
வருகின்றோம்
ஓம் குரு வழியே ஆதி ஆதி
ஓம் குரு மொழியே வேதம் வேதம்
ஓம் குரு விழியே தீபம் தீபம்
ஓம் குரு பதமே காப்பு காப்பு

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக :-
No comments:
Post a Comment