"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, May 28, 2021

ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் பற்றி பேசுவதற்கு எப்போதுமே நமக்கு இனிக்கத் தான் செய்யும். அது போல் தான் சித்தர்கள் கொடுக்கும் அருள்நிலையும் என்று தோன்றுகின்றது. சித்தர்களின் வழிபாட்டை நாம் சிறந்த வழிபாடு என்றும் சொல்லலாம். நம் தளத்தில் சித்தர்களைப் பற்றி தொட்டு காட்டி வருகின்றோம்.

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ்,நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள்  குரு பூசை,சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், பூந்தமல்லி பைரவ சித்தர் என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்த வரிசையில் இன்றும் மற்றொரு சித்தர் பற்றி உணர உள்ளோம். ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் பாதம் பற்ற உள்ளோம். வழக்கம் போல் இன்று சுவாமிகளின் 184 ஆம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது வருகின்றது, இன்றைய நன்னாளில் சுவாமிகள் பற்றி பேசுவது, படிப்பது நமக்கு கிடைத்துள்ள பாக்கியம் ஆகும்.


ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.சித்துகள் செய்வதிலேயே ஆனந்தம் கண்டவர் என்பதால்தான் அவருக்கு அத்தகைய பெயர் வழங்கப்பட்டு வந்தது.அவரது வாழ்வு பல அபூர்வ சம்பவங்களை உள்ளடக்கியது.புதுச்சேரியில் முத்தியால்பேட்டையை
அடுத்துள்ள கருவடிக் குப்பத்தில் சுவாமிகளின் சமாதித் திருக்கோவில் உள்ளது.

 விளையாட்டாக சித்தானந்த சுவாமிகள் எது சொன்னாலும் அது உண்மையே ஆயிற்று. அவர் எங்கு நின்றாலும், எதைத் தொட்டாலும் அங்கே பொன் விளைந்தது. மக்கள் அவரை ஒருமுறை தரிசனம் செய்தால் அவர்கள் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்வு கண்டன.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் வாழ்ந்து வந்தார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை. அவரது மனைவிக்குத் தீராத வயிற்றுவலி. யாரோ சொன்னார்கள்- சித்தானந்தர் வீட்டுக்குள் வந்தால் வயிற்றுவலி உடனே சரியாகிவிடும் என்று.

நம்பிக்கையோடு சித்தானந்தரைத் தேடி கடலூர் வந்தார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை. விஷயத்தைச் சொல்லிலி அவரைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
சித்தானந்தர், "அதற்கென்ன புறப்படுவோம்' என உடன் கிளம்பினார். அவர் புதுச்சேரியில் பிள்ளை வீட்டுக்குள் நுழைந்த மறுகணம் பளிச் என்று வயிற்றுவலிலி முற்றிலுமாக நீங்கி எழுந்து உட்கார்ந்தாள் பிள்ளையின் மனைவி.

அதுவரை வயிற்றுவலிலியால் துடித்துக் கொண்டிருந்த அவள் அளவற்ற நிம்மதி அடைந்தாள். தெய்வம் அல்லவா மனித வடிவில் வந்திருக்கிறது!

சற்று யோசித்த அவள் சித்தானந்தரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள். "சாமீ! நீங்கள் எங்கள் வீட்டிலேயே சிலகாலம் தங்கலாகாதா?' என்பதே அந்த எளிய பெண்மணியின் வேண்டுகோள்.
இதற்கான காரணங்கள் இரண்டு. சுவாமிகள் தன் இல்லத்தில் தங்க வேண்டும் என உண்மையிலேயே பக்திப்பூர்வமாக அவள் விரும்பினாள் என்பது ஒன்று. சுவாமிகள் தன் வீட்டை விட்டுச் சென்றால் தன் கொடும் வயிற்றுவலிலி எங்கே மறுபடி வந்துவிடுமோ என அஞ்சினாள் என்பது இன்னொன்று.
அவள் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சுவாமிகள் நகைத்தார். ""மகளே! உன் வயிற்றுவலிலி மீண்டும் உன்னைத் துன்புறுத்தாது. அதற்குக் காரணமான தீய சக்திகள் வீட்டை விட்டு விலகி ஓடிவிட்டன. உனக்கு மறுபடி வயிற்றுவலிலி வருமோ என்ற அச்சம் தோன்றும்போதெல் லாம் பிறவிப்பிணி உள்பட எல்லாப் பிணிகளையும் போக்கக் கூடிய நமசிவாய மந்திரத்தை ஜெபிப்பாயாக. என்றாலும் உன் வேண்டுகோளுக்கு நான் உடன்படு கிறேன். உன் வீட்டிலேயே தங்குகிறேன்!'' என்றார் சுவாமிகள்.
முத்துகுமாரசாமிப் பிள்ளையும் அவர் மனைவி அன்னம்மாளும் அடைந்த ஆனந்தத்திற்கு ஓர் அளவு உண்டா என்ன? மாபெரும் சித்தராய் உலகோரால் கொண்டாடப்படும் ஒரு மகான் தங்கள் வீட்டிலேயே கொஞ்ச காலம் தங்கப் போகிறார்! பக்திப் பரவசத்தில் அவர்கள் தழுதழுத்தார்கள். தினமும் அந்த வீட்டில் நடந்தது ஆன்மிகச் சந்தைதான். நூற்றுக்கணக்கான மக்கள் சுவாமிகளைத் தேடி வந்தார்கள். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவகை பிரச்சினை.

சுவாமிகளின் அருளுரையைக் கேட்டும், அவர் நிகழ்த்தும் அற்புதங்களைக் கண்டும் அவர்கள் மெய் சிலிர்த்தார்கள். எல்லாரிடமும் ஆசைகளைக் குறைத்துக் கொண்டு நேர்மையான வழியில் வாழுமாறு வலிலியுறுத்தினார் சுவாமிகள். தீய பழக்கங்களைத் தொலைத்துவிட்டு தூய வாழ்வுக்குத் திரும்பு மாறு கூறினார். அவரது அருளுரைகளுக்கு வசப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல நல்ல நெறிகளை அனுசரித்து வாழத் தலைப் பட்டார்கள். சுவாமிகளின் புகழ் மேலும் மேலும் பரவியது.

சித்தானந்தர் பற்பல உடல் பிணி களுக்கு மருத்துவம் செய்தார். அவருக்கு உடல்நோய்களைத் தீர்க்கும் மருத்துவம் தெரிந்திருந்தது. தமது அற்புத சக்தியினா லும் பலரது பிணிகளைக் குணப்படுத் தினார்.
எங்குசென்றாலும் அன்னம்மாளுக் கும் முத்துக்குமாரசாமிப் பிள்ளைக்கும் கொடுத்த வாக்குறுதிப்படி இரவு அவர்கள் வீட்டிற்குத் திரும்பிவிடுவார். சுவாமிகள்மேல் மட்டற்ற அன்பு செலுத் திய அந்த அபூர்வத் தம்பதிகள் அவரைத் தங்கள் பிள்ளைபோல் பார்த்துக் கொண்டார்கள். முத்துக்குமாரசாமிப் பிள்ளைக்கு சுவாமிகள் பிள்ளை ஆனார்! அன்னம்மாளின் வயிற்றில் பிறந்த பிள்ளை அல்ல என்றாலும் வயிற்றுவலிலி நீக்கிய பிள்ளை அல்லவா!

சித்தானந்தரின் மகிமைகளால் கவரப்பட்டு முத்தையா முதலியார் என்ப வர் அவரது தீவிர அன்பரானார். சித்தானந்தர் நினைவிலேயே தோய்ந்து அவரையே பக்திசெய்து வாழ்ந்து வந்தார்.



முதலிலியாரின் மனைவிக்குத் திடீரென்று கடும் பிரசவ வலி எடுத்தது. அப்போது அவள் பட்ட வேதனையையும் அந்த வலியால் அவள் அலறிய அலறலையும் காணவும் கேட்கவும் சகிக்காத முதலியார் மருத்துவரைத் தேடிப் போவதற்கும் முன்பாக சுவாமிகளைத் தேடிவந்தார். ""என்ன செய்வேன். இப்படித் துடிக்கி றாளே அவள்! மருத்துவரைப் பார்ப்பதற் கும்முன் தங்கள் ஆசிகளைப் பெறவந் தேன்'' என்று மனம்குமுறிப் பதறினார்.

அமைதியாக முதலியாரைப் பார்த்த சுவாமிகள், ""ஆனந்தன் என்று பெயர் வை!'' என்றார். முதலிலியாருக்கு ஒன்றும் புரியவில்லை. ""என்ன சொல்கிறீர்கள் சுவாமி?'' என்று கேட்டார் அவர்.
""உன் மனைவியின் பிரசவ வலிலி நின்று விட்டது. அவள் இப் போது மிகுந்த மகிழ்ச்சியோடு உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். சுகப் பிரசவம் ஆகி யிருக்கிறது. ஆண்குழந்தை பிறந்திருக் கிறது. இனி நீ ஆனந்தமாக இருக்கப் போகிறாய். அதனால்தான் அந்தக் குழந்தைக்கு ஆனந்தன் என்று பெயர் வை என்றேன். இனி மருத்துவர் எதற்கு? நேரே வீட்டுக்குப் போ! மனைவியைக் கவனி!'' என்று திருநீறு கொடுத்து அனுப்பினார் சுவாமிகள்.

வீட்டுக்கு ஓடிய முதலிலியாருக்கு உண்மை யிலேயே ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. பக்கத்தில் கொழுகொழுவென்று ஓர் ஆண் குழந்தை சிரித்துக் கொண்டிருக்க, மனைவி வாயெல்லாம் பல்லாக அவரை வரவேற்றாள். தம் ஞானக் கண்ணால் அனைத்தையும் உணர்ந்துசொல்லும் சுவாமிகளின் ஆற்றல்
முதலியாரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவர் சுவாமிகள்மேல் கொண்ட பக்தி மேலும் வலிலிமைப்பட்டது.

ஒருநாள் சுவாமிகள் குயவர்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வழியிலிலிருந்த சாராயக் கடை ஒன்றின் வாசலிலில் ஒரு குடிகாரன் அவரை வழிமறித்தான்.

""சாமீ! ஆன்மிகமெல்லாம் பேசறீங்களாமே? கொஞ்சம் சாராயம் குடிச்சுப் பாருங்க. நல்லா ஆன்மிகம் பேச வரும்!'' என்று அவரைக் கிண்டல் செய்தான். அவனைத் தவிர்த்துவிட்டுப் போக முனைந்தார் அவர். ஆனால் அவனோ மறுபடி மறுபடி வழிமறித்து சாராயம் குடிக்கு மாறு வற்புறுத்தினான்.
கெடுதலைத் தனக்குத்தானே வரவழைத்துக் கொள்வதென அவன் முடிவு செய்திருக்கிறபோது அதை யார்தான் தடுக்க முடியும்? சுவாமிகள் ""சரி, சாராயம் கொடு!'' என்றார். நிகழவிருக்கும் விபரீதத்தை உணராமல், சாராயக் கடைக்காரரிடம் ""சாமிக்கு வேண்டும் மட்டும் சாராயம் கொடு!'' என்றான் அவன்.
சுவாமிகள் மெல்லிலிய முறுவலுடன் சாராயம் குடிக்கலானார். திரும்பத் திரும்ப சாராயத்தை வாங்கிக் குடித்துக் கொண்டே இருந்தார். ஒரு பீப்பாய் சாராயம் காலிலியாயிற்று!
கடைக்காரன் வெலவெலத்துப் போனான். சுவாமிகளைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த அவன் முகத்தில் அச்சம் பரவியது.

ஆனால் சுவாமிகளிடம் எந்தத் தள் ளாட்டமும் இல்லை. ஏதோ பசித்த குழந்தை பாலைக் குடிப்பது மாதிரி குடித்துக் கொண்டே இருந்தார்.

ஆனால் அவர் குடித்த சாராயத்தின் போதையெல்லாம் குடிகாரன் உடலிலில் ஏறிக் கொண்டிருந்தது. தன் போதையைக் கட்டுப் படுத்த இயலாத அவன் தள்ளாடினான்; தடுமாறினான்; வாய்குழறினான்; மயக்கம் போட்டுக் கீழே சரிந்தான். அளவற்ற போதை காரணமாக அவன் நாடித் துடிப்பு மெல்ல மெல்லக் குறைந்துகொண்டிருந்தது.

கடைக்காரன் சுவாமிகளின் காலிலில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். ""என்னை ஏதும் சபித்துவிடாதீர்கள். நான் பிள்ளை குட்டிக் காரன்!'' என்று அழுதான். ""நீ என்னப்பா செய்வாய்? அவன் சொன்னபடி நீ செய்தாய். அவ்வளவுதானே?'' என்ற சுவாமிகள் தன்னை வம்புசெய்த குடிகாரனை ஒரு பார்வை பார்த்து விட்டு, வேகமாக முத்துக்குமாரசாமிப் பிள்ளை இல்லத்தை நோக்கி நடையைக் கட்டினார்.

திகிலடைந்த கடைக்காரன் உடனே ஓடிப் போய் அந்தக் குடிகாரனின் உறவினர்களுக்குத் தகவல் சொன்னான். அவர்கள் வந்து பார்ப் பதற்குள் நிலைமை மோசமாகியிருந்தது.
அளவற்ற போதை தலைக்கேற அவன் பிழைப் பதே சிரமம் என்பதை உறவினர்கள் உணர்ந் தார்கள்.
மருத்துவரிடம் போகலாம் என்று ஒருவர் சொன்னதைக் கேட்டு, அந்தப் பைத்தியக்காரத் தனத்தைச் செய்யவேண்டாம் என்று கண்டித் தாள் அந்தக் குடிகாரனின் மனைவி. தன் கண வனை அள்ளித் தோள்மேல் சுமந்துகொண்டு சுவாமிகளைத் தேடி ஓடினாள் அவள். கூட்டம் அவளைப் பின்தொடர்ந்தது.
சுவாமிகளிடம், ""ஐயா, எனக்கு நீங்கள்தான் மாங்கல்யப் பிச்சை தரவேண்டும்!'' எனத் தன் கணவனை அவர் காலிலில் கிடத்தித் தானும் விழுந்து வணங்கினாள்.

மக்கள் வெள்ளம் என்ன நடக்கப் போகிறதோ என அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. சுவாமிகளின் கருணை மனம் உருகியது.

""டேய். போதையில் கிடந்தது போதும்; எழுந்திரு.'' என்று ஆணையிட்டார் அவர்.
அடுத்த கணம் வாரிச்சுருட்டிக் கொண்டு அவன் எழுந்து நின்றான்.

""சாமி... என்னை மன்னிச்சுடுங்க சாமி!'' என மறுபடி அவர் காலிலில் விழுந்து பணிந் தான். இனிமேல் சாராயம் குடிப்ப தில்லை என்று மனைவிக்கு சத்தியம் செய்து தரச்சொன்னார் சுவாமிகள். அவன்
அப்படியே சத்தியம் செய்துகொடுத்தான். மனைவி கண்ணீர் மல்க சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றாள்.

சித்தர்களின் உணவைப் பற்றி என்ன சொல்வது? அவர்களில் சிலர் பல மாதங்கள் சாப்பிடாமலே இருப்பதுண்டு. சிலர் பசி வந்தால் கல்லைக் கடித்துச் சாப்பிட்டுப் பசி ஆறுவதுண்டு! சித்தானந்த சுவாமிகள் எப்போது சாப்பிடுகிறார்- எதைச் சாப்பிடு கிறார் என்றெல்லாம் அதிகம் பேர் எதுவும் அறியவில்லை. அவர் சாப்பிடுவதுண்டா, காற்றையே உணவாய்க் கொள்கிறாரா என்றுகூட சிலர் சந்தேகம் கொண்டதுண்டு.

ஆனால் முத்தையா முதலிலியாரின் மனைவி அவர்மேல் தன் பிள்ளைபோல் பாசம் வைத்தி ருந்தாள். ""உடலைப் பராமரிக்காமல் என்ன தியானம் வேண்டிக் கிடக்கிறது? கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் பிறகு இந்த தியானத்தை எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாதா?'' என்று அடிக்கடி அவள் அங்கலாய்ப்பாள். தன் வயிற்று வலிலியை நீக்கியவரின் வயிற்றுப் பசியை நீக்குவதைத் தன் கடமைபோல் மேற்கொண்டிருந்தவள் ஆயிற்றே!

சுவாமிகள் எப்போதாவது அவளிடம் வசமாக மாட்டிக் கொள்வார். அவளது தாயன் பைப் பார்த்துச் சிரித்துக்கொள்வார். சாப்பிட்டு விட்டுப் போகும்படி அவள் வற்புறுத்தும்போது சிலநேரம் சரி என்று சாப்பிட உட்கார்வார்.

முத்தையா முதலிலியார் வீட்டில் ஒரு கருங்கல் உண்டு. அம்மிக்கல் மாதிரி சற்று சமதளமாக உள்ள கருங்கல் அது. அதில் இலை எதுவும் போடாமல் கழுவிவிட்டு உணவு பரிமாறச் சொல்வார்.
சுவாமிகள் ஏன் இப்படியெல்லாம் சொல்கி றார் என்ற விசித்திரங்களை யார்தான் அறிய முடியும்? சுவாமிகள் கல்லிலில் சாப்பிடுவதை எண்ணி அந்தப் பெறாத தாயின் மனம் உருகும். ஆனால் என்ன செய்வது? கருங்கல்லிலில் பரிமாற மறுத்தால், அவர் சாப்பிடா மலே போய்விட்டால் அது இன்னும் சங்கடமல்லவா?

உளுந்து வடை, சுண்டல் போன்றவைதான் அவருக்கு விருப்பமான உணவு வகை. அவற்றை ஏதோ சாப்பிட்டேன் என்று கொறித்துவிட்டு எழுந்துவிடுவார்.அவர் தனக்காகச் சாப்பிடாமல் வேறு யாருக்காகவோ சாப்பிடுவதாகத் தோன்றும். சாப்பிட்ட நாட்களிலும் சரி; சாப்பிடாத நாட்களிலும் சரி- உடல் ஆரோக்கியத்திலோ சுறுசுறுப்பான நடையிலோ சுவாமிகளிடம் எந்த வித்தியாசத்தையும் காணமுடியாது.

அவர் மற்ற எல்லாரையும்போல அல்ல; மற்ற எல்லாரையும்விட அதிக ஆரோக்கியத்தோடு இருந்தார்.
'சாப்பிடும்போது வேறு யாருக்கோ சாப்பிடுவது மாதிரி சாப்பிடுகிறார். அது மாதிரி அவர் சாப்பிடாத காலங்களில் அவருக் காக வேறு யாரோ சாப்பிடுகிறார்களோ என்னவோ!' என்று நினைத்து வியந்து கொள்வாள் முதலிலியாரின் மனைவி.

சுவாமிகள் சாப்பிடப் பயன்படுத்திய அந்தக் கருங்கல்லுக்கு ஒரு தனி மகிமை வந்தது. பிரசவ வலிலியால் அவதிப்படுபவர்கள் அந்தக் கல்லிலில் சற்று நேரம் உட்கார்ந்தால் போதும். வலிலி விரைவில் நீங்கி சுகப் பிரசவம் நடந்தது! பிரசவத்திற்குக் காத்திருக்கும் பெண்களெல்லாம் முதலியார் மனைவியின் அனுமதியைப் பெற்று, அந்தக் கல்லில் சற்றுநேரம் பிரார்த்தனையோடு அமர்ந்து விட்டுச் செல்வார்கள்.
ராமாயண காலத்தில் ராமன் கால்பட்ட கல்லிலிலிலிருந்து அகலிலிகை உயிர்த்தெழுந்தாள். இக்கலிகாலத்தில் சுவாமிகளின் கைபட்ட கல் பல உயிர்கள் வலிலியின்றிப் புவியில் எழ உதவியது.
சுவாமிகள்மேல் ஒரு குயவனுக்கு மிகுந்த அன்பு. அவர் பெருமையை உணர்ந்திருந்த அவன் அடிக்கடி அவரைத் தேடிவருவான்.

அவரது அருளுரைகளில் மனம் ஈடுபட்டு கேட்டுக் கொண்டிருப்பான். தன் வீட்டாரிடம் சுவாமிகளின் மகிமைகள் பற்றி ஓயாமல் சொல்லிலிக் கொண்டிருப்பான்.அவனுக்கு வாழ்நாளில் ஒரே ஒரு ஆசை. சுவாமிகள் என்றாவது ஒரு நாள் தன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்பதுதான் அது. ராமன் சாப்பிடப் போகும் விருந்துக்காக சபரி காத்திருந்த மாதிரி அவனும் பிரார்த்தனை செய்துகொண்டு காத்திருந்தான்.

சுவாமிகள் எங்கு போனாலும் அங்கே போய் அவரது அருள்பொலிலியும் திருமுகத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டான் அவன். சுவாமிகள் உபதேசம் செய்யும் நேரங்களில் ஐயப்ப சாமி மாதிரி குத்துக் காலிலிட்டு அமர்வதை யும் நன்கு கவனித்துப் பார்த்துக் கொண்டான்.
அவனிடம் ஒரு கலை குடியிருந்தது. மண்ணால் பொம்மை செய்யும் கலை. அச்சு அசல் சுவாமிகளைப்போலவே ஒரு பொம்மையை உருவாக்கினான். நெற்றியில் குங்குமம். முகத்தில் தாடி. கழுத்தில் ருத்திராட்ச மாலை.

அவன் கலைத்திறனோடு உருவாக்கிய சிலை மட்டுமல்ல அது; பக்திப் பெருக்கோடு உரு வாக்கியதும்கூட. அவனது பக்தியை மெச்சி சுவாமிகளே அந்த மண்பொம்மையில் ஊடுருவி அமர்ந்துகொண்டார் என்றுதான் பார்த்தவர் களுக்குத் தோன்றியது. சுவாமிகளைச் சிறிய வடிவில் நேரில் பார்ப்பதைப்போல் பார்த்தவர் கள் மயங்கினார்கள். அந்தச் சிலையைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.

சுவாமிகளிடம் ஒருநாள் தன் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று விண்ணப் பித்தான். அவர் அவன் முதுகில் தட்டிக் கொடுத் தார். ஜாதி மத வேறுபாடுகளை ஒருபோதும் அவர் பாராட்டியதில்லை. நாளையே வருகி றேன் என்றார்.அந்தக் குயவன் அளவற்ற ஆனந்தம் அடைந்தான். மறுநாள் விருந்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யலானான்.அந்த வீடே விழாக்கோலம் பூண்டது.

மறுநாள் காலை சுவாமிகள் வருகை தந்த போது, வாயிலிலில் முழங்காலிலிட்டு அமர்ந்து சுவாமிகளைப் பார்த்தவாறே கண்ணீர் பெருக்கினான் அவன். அந்த எளிய குயவனின் உள்ளார்ந்த பக்தியைக் கண்டு சுற்று வட்டாரமே வியந்தது. குயவன் வீட்டில் ஊர் முழுவதும் குழுமி விட்டது. சுவாமிகள் ஆஞ்சனேயரை ராமபிரான் தழுவிக் கொண்ட மாதிரி அவனை அள்ளித் தழுவிக் கொண்டார்.

""அன்பனே, உள்ளே வா'' என அவனோடு வீட்டுக்குள் நடந்தார்.

அன்றுதான் சுவாமிகள் அத்தனை சாப்பாடு சாப்பிட்டதை எல்லாரும் பார்த்தார்கள். சுவாமிகள் அவன் தந்த உணவையா உண்டு கொண்டிருந்தார்? அவனது தூய பக்தியை அல்லவா மனமாரப் பருகிக் கொண்டிருந்தார்!விருந்து முடிந்ததும் சுவாமிகளை விழுந்து வணங்கி அவன் தான் உருவாக்கிய சிலையை அவர் கைகளில் கொடுத்தான். அச்சு அசலாக சுவாமிகளைப்போலவே அமைந்திருந்த அந்தச் சிலையைப் பார்த்து கூட்டம் கைதட்டி ஆர்ப் பரித்தது.

சிலையை மறுபடி மறுபடி பார்த்த சுவாமி கள் அருட்புன்னகை புரிந்தார். ""தோலால் மூடப்பட்ட கூடு, மண்ணால் செய்யப்பட்ட கூடு!'' எனத் தம்மையும் அந்தச் சிலையை யும் காட்டிக் காட்டி குறிப்பிட்டார். ""சிலையை நானாக எண்ணிக் கொள்ளுங்கள்!'' என்றார். விரைவில் தான் உலகை விட்டு மறையப் போகிறோம் என்பதை அவர் சூசகமாக உணர்த்தினார். அப்படியும் அவரது குறிப்பை யாரும் புரிந்துகொள்ளவில்லை. 

ஒருநாள் முத்துக்குமாரசாமிப் பிள்ளையை அழைத்தார் சுவாமிகள். ""வரும் வெள்ளிக் கிழமை எனக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது. நம் அன்பர்கள் எல்லாரையும் முத்தியால்பேட்டையில் உள்ள சிங்காரத் தோட்டத்திற்கு வரச் சொல்லி விடுங்கள்!'' என்று உத்தரவிட்டார்.பிள்ளைக்கு ஏதோ புரிந்தது; புரியாதது போலவும் இருந்தது. புரிந்துகொண்ட உண்மை யைப் புரிந்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தார் அவர். விழிநீரைத் துடைத்துக் கொண்டு அன்பர்கள் அனைவருக்கும் செய்தி சொல்லி அனுப்பினார்.

அந்த நாளும் வந்தது. எல்லாருமே நடக்கப் போவதை உணர்ந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தனர். ஆராதனைக்குரிய மங்கலப் பொருட்கள் வந்து குவிந்திருந்தன. கூட்டம் வெள்ளம்போல் கூடியிருந்தது. விறுவிறு வென்று நடந்து தோட்டத்திற்குள் வந்த சுவாமிகள், தம் அன்பரான சொக்கலிலிங்கம் பிள்ளை என்பவரை அழைத்தார். தாம் பயன் படுத்திய கைக்கடிகாரத்தையும் தம்முடைய பாதுகைகளையும் அவரிடம் கொடுத் தார்.
""நீ வைத்துக்கொள். எனக்கு கைக் கடிகாரம் தேவைப்படாது. நான் காலத் தைக் கடக்கப் போகிறேன். பாதுகை களும் தேவைப்படாது. மண்ணில் நடக்கத்தான் பாதுகை தேவை. ஆகாயத்தில் நடக்கப் பாதுகைகள் எதற்கு?''

அவர் சொன்னதைக் கேட்டு கூட்டம் விம்மியது. மங்கல காலங்களில் அழுவது சரியல்ல என்று கூட்டத்தினருக்கு உணர்த்திய அவர், தாம் உடலை உகுத்தாலும் சூட்சும ரூபமாக அவர்களுக்கு என்றும் வழிகாட்டுவோம் என்று உறுதியளித்தார்.கூட்டம் ஒருவாறு தன் துயரத்தைக் குறைத் துக்கொண்டது. அபிஷேக ஆராதனைகளை எந்தெந்த வகையில் செய்யவேண்டும் என்று விரிவாக உணர்த்திய அவர், பத்மாசனத்தில்

அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.

ஆராதனைகள் தொடங்கின. கற்பூர ஆரத்தி காட்டும்போது சுவாமிகளின் ஆன்மா அவரது உடல் கூட்டிலிலிருந்து விடுதலை பெற்றிருந்தது. செய்தி கேட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் குழுமத் தொடங்கினார்கள்.

சுவாமிகளின் திருமேனியைச் சமாதிக்கு எடுத்துச் செல்ல யத்தனிக்கையில் ஓர் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது. சுவாமிகள் மறுபடி உயிர்த் தெழுந்தார்! அவரைச் சுற்றி ஒரு புனித ஒளி கண்ணைக் கூசவைக்கும் வகையில் படர்ந்திருந்தது. ""ஆராதனைகளைச் செய்யும்போது இன்னின்ன செயல்களை
அவசரத்தில் செய்யாமல் விட்டுவிட்டீர்கள்.அவற்றையும் பொறுமையாகச் செய்து உடலைச் சமாதி செய்வியுங்கள்!'' என்று அறிவுறுத்திய சுவாமிகள், மீண்டும் தன் உயிரை உகுத்தார்!

திகைப்படைந்த மக்கள் மறுபடி ஆராதனைகளை முறைப்படி செய்து, அவரது திரு மேனியை அவர் சொன்னவாறே முத்துக் குமாரசாமிப் பிள்ளை தோட்டத்திற்கு ஊர்வல மாக எடுத்துச் சென்றார்கள். அங்கே அவரது உடலை மண்ணில் வைத்து மூடி சமாதி எழுப்பினார்கள்.அந்தச் சமாதியில் இருந்தும், தன்னை பக்தியுடன் எண்ணுபவர்கள் நெஞ்சங்களில் இருந்தும் வேண்டியவர்க்கு வேண்டி யதை வழங்கியவாறு தொடர்ந்து அருளாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் சுவாமிகள்!

ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா அழைப்பிதழ் காண உள்ளோம்.


                                                                             
                                                     

                                                      
                                                       




மூன்றாவது இணைப்பில் சுவாமிகள் பற்றியும், சுவாமிகள் பற்றி மகா கவியின் பாடலும் உள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது தென்னாட்டின் சிறப்பு நம்மை சிலிர்க்க வைக்கின்றது.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html


நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை 13 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் - 28.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/13-28022021.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html

சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html


களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Thursday, May 27, 2021

கருணைக் கடலே கந்தா போற்றி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

வைகாசி விசாகம் அன்று காப்பாய் கந்தா என்ற தலைப்பில் அனைவரையும் சந்தித்தோம். இன்று மீண்டும் கருணைக்கடலாம் கந்தன் பாதம் பற்ற உள்ளோம். பற்றினால் போதுமா? போற்றவும் உள்ளோம். தற்போது உள்ள இந்த சூழ்நிலையில் லோக க்ஷேமம் வேண்டி தினசரி பிரார்த்தனை செய்து கோளறு பதிகம், திருநீலகண்ட பதிகம் போன்ற பதிகங்கள் ஓதி, குருவிடம் சரணாகதி அடையுங்கள். சித்தன் அருள் வலைத்தளத்தில் நம் குருநாதரின் அருள் வாக்குகள் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து சில முக்கிய செய்திகளை உங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

அன்பர்களே..மீண்டும் மீண்டும் முருகப்பெருமானின் தரிசனம் இந்தப் பதிவின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த தொற்றுக்கிருமி போராட்டத்தில் நாம் வாழ என்ன காரணம்? இதனை குரு வாக்காக நாம் இங்கே பகிர்கின்றோம். அன்றைய தினம் இந்த பெருந்தொற்று நோய்க்கான தீர்வும் கிடைத்தது. பதிவின் இறுதியில் அறிய தருகின்றோம்.

புண்ணியம் செய்வதை நம் வேலையாக கொள்ள வேண்டும். நித்தமும் தானம், தர்மம் செய்யாமல் இருக்க மாட்டோம் என்று மனதில் நிறுத்துங்கள். இதற்கு பொருள் வேண்டுமல்லவா? இப்படி நீங்கள் நினைத்தால் இது மிகப் பெரும் தவறு. பொருள் உள்ளவர்கள் பொருள் கொண்டு புண்ணியம் செய்யுங்கள். பொருள் இல்லாதவர்கள் உங்களிடம் உள்ள அருள் கொண்டு புண்ணியம் செய்யுங்கள். லோக க்ஷேமம் வேண்டி தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம் செய்து இன்றைய பதிவில் சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் நடைபெற்ற வைகாசி விசாக வழிபாட்டின் தரிசனம் பெற இருக்கின்றோம்.

வழக்கம் போல் வைகாசி விசாக சேவை எங்கே செய்வது என்று யோசித்த போது, கூடுவாஞ்சேரி ஸ்ரீ வேலி அம்மன் கோயில் நம் நினைவில் வர உடனே குருக்களை தொடர்பு கொண்டோம்.

                                     


குருக்களும் வைகாசி விசாக பூஜைக்கு சரி என்று கூறினார்கள். அன்றைய தினம் ஜூன் மாதம் 4 ஆம் தேதி காலை சுமார் 9 மணி அளவில் கோயிலுக்கு சென்றோம். நம் தளம் சார்பில் விளக்கேற்ற தீப எண்ணெய் கொடுத்தோம்.







பால், தயிர், சந்தானம்,விபூதி, பன்னீர், இளநீர், பூக்கள் என பூஜை பொருட்கள் தயாராக இருந்தது. பார்ப்பதற்கு சிறு அளவில் இருப்பது போல் தெரிந்தது. ஆனால் இந்த காலத்தில் இது போன்று ஏற்பாடு செய்து இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது. வழக்கம் போல் ஒவ்வொரு அபிஷேகமாக கண்டு களித்தோம்.


அபிஷேகம் முடிந்து அலங்கார தரிசனம் பெற்றோம். கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அலங்காரம் போன்றவற்றை படித்தோம்.

  நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.






அடுத்து தீப தரிசனம் பெற்றோம். லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டோம்.





கருணைக் கடலாம் கந்தனின் தரிசனம் பெற்றோம். எம்மில் உள்ள பஞ்சமாபாதங்களை அழித்து விடு முருகா என்று வேண்டினோம்.




  சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன் மயில் வாகனனைச்
சந்திக் கிலேன் பொய்யை நிந்திக் கிலேனுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே.  


  பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத்
தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.



  விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.



  சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.



   குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே

    

  சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.

அடுத்து அங்கே ஒரு சிவன் அடியார் வந்து நம்மிடம் பதிகம் உள்ள நகல் ஒன்றை கொடுத்தார். அதில் தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுத் திருப்பதிகம் இருந்தது. முருகப்பெருமான் சந்நிதியில் வைகாசி விசாகம் அன்று நமக்கு கிடைத்தது. இதனை நாம் அன்றாடம் படித்து 




பதிகம் படிப்பதால் என்ன பலன்? இது போன்ற திருமுறைகளை நாம் தினமும் நம்பிக்கை கொண்டு படித்து வந்தால் கேட்பது கிடைக்கும். திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.

இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார். வளைந்த முதுகு தண்டை சரி செய்து நிமிர செய்தது திருநீற்றுப் பதிகமம், திருநீறும் ஆகும்.

இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது. ஆம். திருநீற்றுப் பதிகம் பாடி இந்தப் பெருந்தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

திருநீற்றுப் பதிகம்

பாடல் – 1
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

பொருள்:
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

பாடல் – 2
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொருள்:
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

பாடல் – 3
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொருள்:
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

பாடல் – 4
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொருள்:
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.

பாடல் – 5
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.

பொருள்:
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

பாடல் – 6
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொருள்:
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.

பாடல் – 7
எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.

பொருள்:
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.

பாடல் – 8
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

பொருள்:
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

பாடல் – 9
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.

பொருள்:
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.

பாடல் – 10
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.

பொருள்:
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை (கமண்டலத்தை) ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளை அடைந்தவரும் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

பாடல் – 11
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

பொருள்:
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

Monday, May 24, 2021

இன்று வைகாசி விசாகம் - காப்பாய் கந்தா!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தமிழ் நாட்காட்டி உபயோகப்படுத்திய பின்னர் தான் நமக்கு நம் முன்னோர்களின் ஒவ்வொரு செய்தியும் அதற்கான காரணமும் புரிந்து வருகின்றது. எந்த ஒரு மொழியிலும் பக்திக்கு என்று இத்தனை புராணங்கள், வரலாறுகள், பண்டிகைகள், இலக்கியங்கள் இருக்குமா என்றால் அது சந்தேகமே. ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிலும் நிச்சயமாக ஒரு பண்டிகை இருக்கும். அதற்கும் இடம்,பொருள்,வாழ்வியல் சூழல்  கொண்டு காரணம் இருக்கும். நாம் காரணத்தையும் அறியவில்லை, காரியத்தையும் அறியவில்லை. ஆனால் நம் முன்னோர்களை ஏளனம் செய்ய மட்டும் கற்றுக் கொண்டோம். வேண்டாம் இந்த விபரீதம். மேற்கத்திய கலாச்சாரத்தை மொத்தமாக கை கழுவாது, வேண்டும் இடங்களில் உபயோகிக்க கற்றுக் கொள்வோம். நம் தமிழ் கலாச்சாரத்திற்கு வாருங்கள்.

வைகாசி விசாகம் சிறப்பு பதிவாக இன்றைய பதிவு வழங்கப்படுகின்றது.  

இன்று நரசிம்ம ஜெயந்தி மற்றும் முருகப்பெருமானின் அவதார தினமாக போற்றப்படும் வைகாசி விசாகமும் ஒருசேர வருகின்றது.

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியும், வைகாசி விசாகமும் இணைந்து வருவதால் பெருந்தொற்று  விரட்ட சிறந்த நாளாக கருதப்படுகிறது.

முருகப்பெருமானும் நரசிம்மரும் நவக்கிரகங்களில் செவ்வாயின் அம்சம் கொண்டவர்கள் ஆவர். செவ்வாய் கிரகத்திற்கு காரகர் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உருவாகி கொரோனா வைரஸ் விரட்ட அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

அன்றைய தினம் காலையில் ஸ்ரீநரசிம்ம வழிபாடு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட ஏற்ற நேரமாக உள்ளது இந்த நேரத்தில் வீடு முழுவதும் வெண் கடுகு கலந்து சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவ விட வேண்டும். 

 அன்றைய தினமே மாலை நேரத்தில் 6 மணிக்கு, முருகனின் வெற்றி தரும் மந்திரம்

 ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் முழுவதுமாகப் பாராயணம் செய்ய வேண்டும், அவ்வாறு பராயணம் செய்ய இயலாதவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வரி முருக மந்திரம் பாராயணம் செய்து சொல்லலாம்.

 காக்க காக்க கனகவேல் காக்க
 நோக்க நோக்க நொடியில் நோக்க

மாலை நேரத்திலும் சாம்பிராணியில் வெண்கடுகு கலந்து வீடு முழுக்க சாம்பிராணி புகை காட்ட வேண்டும்.

 எதுவுமே தனித்து செயல்பட்டால் பலம் இல்லை, எதுவும் நடக்கப் போவதில்லை,, அனைவரும் ஒன்று பட்டு இந்த நல்ல நாளை பயன்படுத்திஇருக்கும் உயிர்களை யாவது காப்பாற்றுவோம். 

 கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் நரசிம்மரும், வெற்றியையே மாலையாக சூடிக்கொண்ட முருகனும் இவர்கள் இருவரையும் ஒருசேர ஒரே கணத்தில் வழிபட  பெருந்தொற்று  இந்த உலகை விட்டு ஒழியும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. 

 தயவுசெய்து அனைவரும் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரும் கூட்டு பிரார்த்தனை செய்து பெருந்தொற்றை  விரட்டுவோம்



முருகப்பெருமானுக்கு, வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் முருகப்பெருமான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.

ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறை யிட்டனர். சிவபெருமான், அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை காத்தருள விரும்பினார். அதன்படி தமது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவை தேவர்களால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கையிலே கொண்டுபோய் சேர்த்தது.

சரவணப்பொய்கையில் சேர்ந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. இதுவே ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அது ஒரு வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர தினமாகும். எனவே தான் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு முருகன், சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். பகை விலகும். பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால், குலம் தழைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

அன்றைய தினம் அதிகாலையில் விநாயகப்பெருமானை வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கு வைத்து, அதில் ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த நன்னாளில் முருகப் பெருமானை நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்லன யாவும் நடை பெறும். பசும் பாலால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால், பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால், இனிய சந்ததிகள் பிறக்கும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், எம பயம் நீங்கும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால், மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், தித்திக்கும் சங்கீதம் விருத்தி யாகும்.

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முருகா!

மு’ என்றால் ” முகுந்தன்

‘ரு’ என்றால் ” ருத்ரன் ”

‘கா’ என்றால் ” பிரம்மா ”

இதனால் “முருகா ” என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.

இது மட்டுமல்ல.

” முகுந்தன் ” தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.

” ருத்ரன் ” எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.

 ” பிரம்மா ” தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.

இதனால் ” முருகா ” என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.

இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

நாளெல்லாம் நின் புகழை பாட போதுமா?

2018 ஆம் ஆண்டில்  நமக்கு கிடைத்த வைகாசி விசாக  கொண்டாட்டங்களை ஒரு சேர இங்கே தொகுத்து தருகின்றோம்.





அமெரிக்காவில் உள்ள மிட்சிகன் மாகாணத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாக காட்சிகள் மேலே 

கூடுவாஞ்சேரி வேலி அம்மன் திருக்கோயிலில் நாம் பெற்ற தரிசனம்.




 வைகாசி விசாகம் அன்று பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரம், ‘ஓம் சரவணபவாய நம’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.

திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம். முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோவிலுக்கு குழுவாகச் செல்லலாம். முருகன் கோவில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இன்றைய  வைகாசி விசாகம் ஸத்குரு ஸ்வாமிகள் மற்றும் ஸ்வாமிநாத ஸ்வாமி அபிஷேகம் வீபூதி காப்பு அலங்காரம் இதோ...



கொளத்தூர் திருப்பதி நகரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் முருகப் பெருமானுக்கு இன்றைய வைகாசி விசாக தினத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் விரதமிருந்து பால் குடம் தூக்கினார்கள். பின்னர் பக்தர்கள் கையாலேயே வேலிற்கு பால் அபிஷேகம் செய்தார்கள்.









அனைவருக்கும் நம் தளம் சார்பில் வைகாசி விசாக திருநாள் வாழ்த்துக்கள். 



இன்று வைகாசி விசாகம்.முருகப் பெருமானுக்கு விசேஷமான பொன்னான நாள் இன்று.அனைவரும் வீட்டில் முருகப் பெருமான் வழிபாடு செய்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து முருகப் பெருமானின் அருளால் சகல நலன்களும் வளங்களும் பெற பிரார்த்திக்கின்றோம்.

நன்றி

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

மீள் பதிவாக :-

வைகாசி விசாகத்தை வரவேற்போம் - 04.06.2020 - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post.html

வைகாசி விசாகத்தை வரவேற்போம்  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_51.html

வைகாசி விசாக பெருந்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_15.html

Saturday, May 22, 2021

விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவை தொடர விரும்பி இங்கே வந்தோம். ஆனால் குருவருளால் இன்று குருவின் தரிசனம் இன்றைய பதிவில் பெற உள்ளோம். இது தான்..இப்படித் தான் என்று நாம் எதையுமே தீர்மானிப்பது இல்லை. நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அருளாலே என்று உணர்த்தப்பட்டு வருகின்றோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டில் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி, பல தடைகளோடு அன்றாட வாழ்க்கையில் இருந்து வருகின்றோம். இப்படி ஒரு அசாதாரண சூழலை நாம் சந்திக்க போகின்றோம் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில் லோக க்ஷேமம் வேண்டி தினசரி பிரார்த்தனை செய்து கோளறு பதிகம் ஓதி, குருவிடம் சரணாகதி அடையுங்கள். இன்றைய பதிவிலும் குருவின் அருள் பேச உள்ளோம். விரைவில் ஜீவ நாடி அற்புதங்கள் தொடர்பதிவு தொடர உள்ளோம். 

குரு என்பவர் சுயநலம் இல்லாதவர்,தன்னலம் இல்லாதவர்,பிறர் நலம் காண்பவர்,உண்மையை அறிந்தவர் ,உலகில் நமக்காக வாழ்பவர்,நம் குறைகளை தீர்ப்பவர்,ஊழ்வினை அகற்றுபவர்,கர்மாக்களை வாங்குபவர், நான் எனது என்ற சொல் சொல்லாதவர்,நல்வழியை காட்டுபவர்

பொய் இல்லாத நிலையை அடைந்தவர்,வாழ்க்கையில் வழி காட்டுபவர், உன்னை உனக்கு நீ யார் என அறிமுகப்படுத்துபவர்,நான் யார் என காட்டியவர்,எல்லாம் அவரே என்று சொல்லக்கூடியவர், அது தான் என் கடைசி நிலையையும் காண்பிக்க கூடியவர்,அர்த்தமுள்ள அழுகை எது எனக்காட்டியவர்,அர்த்தமுள்ள அழுகையும் அர்த்தமற்ற சிரிப்பையும் தனக்குள் காட்டுபவர்

எந்நிலையிலும் தன்நிலை இழக்காதவர்,எந்நிலையில் இருந்தாலும் நமக்காக தன் நிலை இறங்கி வரக்கூடியவர்,வாழ்க்கை இதுதான் என காட்டியவர்,சிந்தையில் நாடிவரும் குழந்தைகளையே கவனிக்க கூடியவர், இருளைப்போக்கி ஒளியை காட்டியவர்,நிரந்தரமானது எது என உணர்த்தக்கூடியவர்,எல்லாம் ஒன்றே என்று உணர்த்தியவர், தனிமையில் இருக்கக்கூடியவர்,தனிமையிலும் இனிமையான பரம்பொருளே அவர்தான் என வாழ்பவர்,எதையும் (நல்வழிப்படுத்த) நமக்காக செய்யக்கூடியவர்

தன்னை நினைக்கும் உண்மையாகப்பற்றிய எந்த குழந்தைகளையும் கீழே தள்ளாதவர், நம் சுகதுக்கத்தை பகிர்ந்து கொள்பவர்

இன்னும்  சொல்லலாம் …. !அவர் சொல் கேட்டே நடக்கப் பழகுங்கள்.அவரிடம் உரிமையுடனும்,அன்புடனும்,பணிவுடனும் அமைதியாக நடந்து கொள்வீர். 

ஆம். நாம் எப்போதும் நம் குருநாதரின் சொற்படியே நடந்து வருகின்றோம். இந்த தொற்றுக்கிருமி காலத்தில் அனைவரும் தங்கள் குருவைப் பற்றுங்கள். குருவைப் போற்றுங்கள்.

வழக்கமான நமது சேவைகளாக கூடுவாஞ்சேரி கோயிலில் குருநாதர் வழிபாடு, நீர் தானம், அன்னதானம் அனைத்தும் குருவருளால் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த பெருந்தொற்று காலத்தில் அன்னசேவைக்கு பொருளுதவி  செய்துள்ளோம்.

1. சேலம் சபரி ஐயா 

2. மதுரை ரேவதி அறக்கட்டளை 

3. மதுரை இறையருள் மன்றம் 

4. ஆதி சிவன் ட்ரஸ்ட்

5. பானு அன்னூர் 

6. திருஅண்ணாமலை அன்னதானம் 

அட்சய திருதியை சேவையாக திரு,முல்லைவனம் ஐயா, திரு.சேகர் ஐயா ( கிளி சேகர் ), தயவு சித்தாஸ்ரமம் என நம் சேவையை தொடர்ந்து வருகின்றோம். அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்று வருகின்றது. இது ஒருபுறமிருக்க, இந்த தொற்றுக்கிருமி காலத்தில் நம்மை வழிநடத்தி வருகின்றார். இதனை இனிவரும் பதிவில் அறிய தருகின்றோம்.

இனி கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் தரிசனம் காண இருக்கின்றோம். கடந்த இரண்டு மாதங்களில் சித்திரை, வைகாசி மாத ஆயில்ய தரிசனம் காண இருக்கின்றோம். 










மதியேது வ விதியேது கதியுந்தன் பொற்பாதமே என்று போற்றிக் கொண்டே இருந்தோம்.














குருவின் பாதம் பற்றுவதை வேறென்ன நமக்கு வேண்டும்? இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? குருவின் சரணம் சொல்வது நமது முதல் கடமையாக கொண்டு, குருவிடம் சரணாகதி பெற நாம் முயற்சி செய்வோம்.





சித்திரை அமாவாசை அன்று லோக க்ஷேமம் வேண்டி குருவிடம் பிரார்த்தனை செய்தோம்.

அன்பர்களே..மீண்டும் மீண்டும் குருவின் தரிசனம் இந்தப் பதிவின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த தொற்றுக்கிருமி போராட்டத்தில் நாம் வாழ என்ன காரணம்? இதனை குரு வாக்காக நாம் இங்கே பகிர்கின்றோம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html