"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, February 3, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஜீவ நாடி அற்புதங்களை தொடர்பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி அருளிய வாக்கின் படி மதுரையில் அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் அமைய உள்ளது. வருகின்ற 7.02.2020 அன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்விற்கான செய்திகளை நாம் இங்கே தர விரும்புகின்றோம்.

அதற்கு முன்பான  மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது. மதுரை மாநகரின் கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல்,மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் பிரசித்தம். இது நமக்கு தெரிந்த செய்திதான். முருகனின் ஆறு  படை வீடுகளில் இரண்டு மதுரையில் தான் உள்ளது. ஒன்று திருப்பரங்குன்றம் மற்றொன்று பழமுதிர்ச்சோலை. அட..இப்போது இதனை சொல்லும் போது எம் மனத்தில் தோன்றிய மற்றொரு செய்தி . இரண்டு படை வீட்டிலும் சித்தர்களின் அருளாசி தான்.திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி சித்தரும், பழமுதிர்ச்சோலை தாண்டி நூபுர கங்கை மேலே நாம் ராமதேவரின் அருளும் பெறலாம். இது போன்ற அறுபடை வீட்டில் சித்தர்களின் அருளில் சில இடங்களில் தான் உள்ளது. இம்மையில் நன்மை தருவார் கோயில் மதுரையிலே உள்ளது. இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார். மதுரையில் பஞ்ச பூதத் தலங்கள் உள்ளது.

1) நீர் ஸ்தலம் - மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில்
2) ஆகாய ஸ்தலம் - சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில்
3) நில ஸ்தலம் -இம்மையில் நன்மை தருவார் கோயில்
4) நெருப்பு ஸ்தலம் - தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில்
5) காற்று ஸ்தலம் - தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் ஆகியவை மதுரையிலேயே உள்ள பஞ்சபூத ஸ்தலங்கள் ஆகும்.

இது மட்டுமா? நம் சொக்கநாதர் 64 திருவிளையாடல்களை மதுரையிலே தான் நடத்தி உள்ளார்.இதில் இருந்து மதுரையின் பெருமை நமக்கு புரிகின்றது.இத்தகு மதுரையிலே நம் குருநாதரின் தரிசனம் இந்த வாரம் முதல் பெற இருக்கின்றோம். இதற்கு நம் முருகப்பெருமான் அருளாசி கொடுத்துள்ளார் என்றால் இது ஜீவ நாடி அற்புதங்கள் என்று தானே நாம் சொல்ல முடியும். இதோ முருகப்பெருமானின் அருள் வாக்கை இங்கே மீண்டும் பகிர்கின்றோம்.

மதுரை பசுமலையில் பிப்ரவரி7ஆம் தேதி 2020ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா காண உள்ள அகத்திய மஹரிஷி ஆலயம் குறித்த முருகப்பெருமான் நாடியில் அருளிய வாக்கு

வல்லான வகையான முறையான அமைப்பில் வந்ததொரு பாண்டிமாநகர நாடும் சீர்புகழும் நலமதுவும் உண்டு நண்மை கண்டனன்.அகத்தியன் ஆலயம் அரும்ப குடமுழுக்கு செய்தி அது கந்தன் மகிழ்ந்தேன்.சீருண்டு முறையாக கந்தசீடனது தனக்கும் அகத்தியனுக்கும் சிறப்புறவே ஓர் ஆலயம் அமைவது தொண்டர்கள் அனைவருக்கும் பரிபூரன ஆசிர்வாதம் உண்டு உண்டு. நலமாக கந்த சீடன் தனக்கு ஓர் ஆலயம் அமைப்பதில் கந்தனுக்கு மகிழ்ச்சியே தான்.

சிறப்புண்டு நலமாக இதை அமைக்கும் குழுமம் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்விதன்னை அது தொடுத்ததால் லாபம் ஆகும். நலமுண்டு கிருத்திகை நன்நாள் இன்றும் உறைகின்ற நேரத்தில் மகிழ்ந்து உரைக்கும் நிலை அதுவும் கண்டனன் லாபம் லாபம். சீருண்டு முறையாக லாபம் மார்கழி  ஆயில்யம் முதல்ஆகவே நண்மை முன்னர் அனுகூலம் கன்டனன் குருவின் பூசை அனுகூலம் ஆனபடி கண்டேன் ஆதலால் நட்ப்பாக கண்டதொரு வேளை முடித்தது விட்டிடலாம்.

குடமுழுக்கு கண்ட பின்னே ஒவ்வொரு ஆயில்யம் வரும் நேரம் முறையாக நண்மை நிலை அகத்தியன் ஜென்மம் நட்சத்திரம் தன்னில் முழுத்திருமஞ்சனத்தோடு அன்னதான தருமங்கள் செய்வதே இந்த குழுவிற்க்கு பணியது என்பேன்.ஓர் வருடம் அப்படியே செய்து வரலாம்.

இவ்வாலயத்தில் நடக்க உள்ள அற்புத மகிமை திருவிளையாடல்கள் எல்லாம் பின்வருமாறு கந்தன் உரைத்துள்ளார். நன்கு படித்து மகிழ்க.

பிள்ளை இல்லாதோர் பிள்ளை பெறுதல், கணவன் மனைவி சந்தோஷப்படுதல், மணம் ஆகாதோர் மணம் அமைக்கப்பெறுதல், பணி இல்லாதோர் பணி அமைக்கப்பெறுதல், பணம் இல்லாதோர் பணம் கிடைக்கப்பெறுதல், அருள் பெறுவோர் அருள் கிடைக்கப்பெறுதல், பொருள் கேட்ப்போர் பொருள் கிடைக்க பெறுதல், அவர் அவர் இச்சை எப்படியோ அப்படி அகத்தியன் படி அளப்பான். அனுகூலம் இது எல்லாம் திருவாதிரை மண்டலத்தில் பதிந்து சித்தர்கள் மண்டலத்தில் பதிந்து இருக்கும் செய்தி. முறையாக ஈசன் அருளும் பரிபூரணமாக கிட்டும்.

செய்யும் தானம் அன்னதானம் பூசை முறையாக நல்லதாம் அடியார்களை ஒன்று கூட்டி சிறப்புறவே நல்லதோர் அகத்தியன் புகழ்பாடி சீராக அவ்வாலயம் தன்னில் எல்லோரும் செல்ல முடியாவிட்டாலும் அவர் அவர் உரிய நிதி திரட்டி முறையாக அவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஆயில்ய பூசை தனை அமர்த்த வேணும் செய்ய வேணும் என்பதே இந்நேர கட்டளை என்பேன் கேட்டு நட என்று கந்தன் பகர்ந்தார்.

 கந்த நாடி முற்றே - 

அஉம் ஶ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்குக

அஉம் அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

ஆலயம் குறித்த கந்த நாடி வாக்கு

சிறப்பாகவே நல்லதாம் திருக்கயிலாய காட்சி அதுபோலும் கல்யான கோலம் பூர்வ ஜென்மத்திலே கண்ட இடமதாகும். ( *ஏற்கனவே அகத்தியருக்கும் அந்த கோயிலுக்கும் தொடர்பு உண்டு
கோயிலில் சிவபெருமானின் அம்பிகை பார்வதி கல்யான காட்சியை முருகனோடு வைக்கவும். முருகனின் அலங்காரங்களை விதவிதமாக அங்கு வைக்கனும்னு சொல்லபட்டிருக்குது) 

முறை உண்டு செய்யலாம் ஆதலால் செய்கின்ற அனைவரும் சீர் புகழாய் சீர்த்தி ( பெரும் புகழ்) பெருவர். சிறப்பு பெருவர். உரிய காரியம் நடக்க பெருவர். இறை அருளும் சித்தர்கள் திருவிளையாடல்கள் காணப்பெருவர்.

பூர்வ ஜென்மத்தில் அகத்தியன் தொடர்புடையவர்கள் தான் வந்து அங்கு ஆலயம் அமைக்க வழி புரிவர். 

கந்த வடிவேலன் புகழ் ஓங்குக

அகத்தியம் நோக்கிய நம் பயணத்தில் லிகித ஜெபம் பற்றி நாம் கேட்டுக் கொண்டே இருந்தோம். அப்போது சித்தன் அருள் தலத்தில் மதுரையில் உள்ள சக்தி மாரியம்மன் கோயில் வளாகத்தில் அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் அமைக்க லிகித ஜெபம் வேண்டி கேட்டிருந்தார்கள். உடனே நாம் அதனை நம் தலத்தில் வெளியிட்டோம். அடுத்து கோயில் நிர்வாக குழுவில் பேசினோம். கும்பாபிஷேக பணிகளும் நடை பெற்று வருகின்ற செய்தி கேட்டு நாம் மகிழ்வுற்றோம்.

இதோ நாட்கள் நெருங்கி விட்டது. இதோ இந்த ஆலயம் சிறப்பாக அமைய லிகித ஜெபம் அனுப்பிய அன்பர்களின் பதிவுகளை இங்கே தருகின்றோம். லிகித ஜெபம் எழுதி அனுப்பிய அனைவருக்கும் இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் வாழ்வில் குருவின் அருள் பரிபூரணமாக நிறைந்திட வேண்டுகின்றோம்.

அடுத்து மதுரையில் இருந்து நமக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்து, நம்மை கும்பாபிஷேகம் வரும்படி உத்திரவு கொடுத்துள்ளார்கள்.

இதோ. நமக்கு கிடைத்த அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம். அடுத்து நாம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஷஷ்டி பூசையில் முருகப்பெருமான் பாதத்தில் அழைப்பிதழை சமர்பித்தோம்.

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலய முருகனிடம் அழைப்பிதழ் வைத்து ஆசி பெற்றோம். அப்படியே அங்கே அருளலைகளை பரப்பி வரும் நம் குருநாதரரிடமும் சமர்பித்தோம்.

இதோ மதுரையில் இருந்து நமக்கு கிடைத்த பதிவுகள் ஒவ்வொன்றாக தருகின்றோம்.

இந்த காட்சிகளை பார்க்கும் போதே நம் மனம் ஏங்குகின்றது. எப்போது நம்மை அழைத்து தரிசனம் தர நம் குருநாதர்  வழிகாட்ட இருக்கின்றார் என்பது நம் அப்பனுக்கே தெரியும். 

மீண்டும் மேலே அழைப்பிதழ் இணைத்துள்ளோம். அன்பர்கள் கண்டு, வழிபாட்டில் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம். இனி மதுரை செல்லும் போது நம் குருவை இங்கே சென்று தரிசிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Sunday, February 2, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு

அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

இன்றைய பதிவில் ஜீவ நாடி அற்புதங்கள் பற்றி தொடர விரும்புகின்றோம். தற்போது வரை தனிப்பட்ட அன்பர்களுக்கு கிடைத்த ஜீவ நாடி அற்புதங்கள் பார்த்தோம். சென்னை ஆவடி அருகில் உள்ள பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முருகப் பெருமானிடம் உத்தரவு கேட்டு அதற்கான பரிகாரங்கள் செய்யப்பட்டு ஆலய திருப்பணி தற்போது நடைபெற்று வருகின்றது. அதே போன்று மேலும் ஒரு ஆலயத்தின் கும்பாபிஷேக அழைப்பிதழும், ஸ்ரீ  ஞான ஸ்கந்தர் அருளிய வாக்கும் இங்கே பதிவிட விழைகின்றோம்.

சித்த அடியார் பெருமக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று தான்.ஆம்..அது தான் ஜீவ நாடி, ஓலைச்சுவடி, ஏடு பார்த்தல் போன்றவை ஆகும். இன்றும் பல மாந்தர்களுக்கு இக்கட்டில் இருந்து உணர்த்த இக் கட்டு (ஜீவ நாடி) உதவி வருகின்றது.

நாடியை பற்றி தெரிந்தவர்கள் நிறைய பேர். தமிழ்நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் உண்டு!  அதில் ஒன்று தான் நாடி. இது நமது எதிர்காலத்தை அல்லது கடந்தகாலத்தை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள சித்தர்களால், நமக்காக எழுதிவைக்கபட்டவை.  இது மிகவும் அற்புதமானது. நாடியிலிருந்து வரும் விளக்கங்களை, பரிகாரங்களை செய்து தங்கள் வாழ்க்கையை சரி செய்து கொண்டவர்கள், ஆரோக்கியயத்தை, அமைதியை வாழ்வில் திருப்பி பெற்று கொண்டவர்கள் ஏராளம். சரி! சித்தர்கள் யார்?

முக்காலத்தையும் அறிந்தவர்கள். ஞானிகள்.  ஒரு கம்பெனி தலைவருக்கு செக்ரட்டரி போல, இறைவனுக்கு தூதுவர்கள். இறைவனை பிரார்த்தனை செய்தும் நற்காரியம் எதுவும் பெறாத பக்தர்கள் பலர், இவர்களை நாடி வந்து, இவர்கள் மூலம் நன்மை பெற்றவர்கள் ஏராளம்.  இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் நடப்பதாக தெரியவில்லை.

ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்."

இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார். அடுத்த வினாடியே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஓலை சுவடி மூலம் பாவத்தை தீர்க்க, கஷ்டங்களை போக்க, வியாதி கொடுமைகளை போக்க, குடும்பத்தில் காணப்படும் பிரமஹத்தி தோஷம் போக்க வழிமுறைகளை செந்தமிழ் பாட்டில் எழுதி வைத்து விட்டார்கள்.  இப்படி அவர்கள் எழுதி வைத்த ஓலை சுவடிக்கு பெயர் தான் "நாடி". நம் பிரச்சனைகளை தீர்க்க நாம்தான் சித்தர்களை தேடி போகவேண்டும்.  அவர்களாக வரமாட்டார்கள்.

 ‘ஜீவன்’ என்றால் உயிர் . அப்படி உயிரோட்டமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த ஓலையிலே, வருகின்ற அன்பர்களின் தன்மைக்கு ஏற்ப சித்தர் பெருமக்கள் உயிரோட்டமாக வந்து அந்தத் தருணத்தில்  ஓலை வாசிப்பவர்  கண்களுக்கு எழுத்து வடிவமாகவும், சில சமயம் உள் உணர்வாகவும் அருள்வாக்கை கூறுகிறார்கள்.இது தொடர்பான  ஓலைக்கு ‘ஜீவ நாடி’ என்று பெயர்.குறிப்பாக இந்த சுவடியிலே சித்தர்கள் கூறுகின்ற அருள்வாக்கின் தன்மைக்கு,சித்தர்களே இட்ட பெயர்தான் ‘ஜீவ  நாடி’ என்பது.

மதுரை பசுமலையில் பிப்ரவரி7ஆம் தேதி 2020ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா காண உள்ள அகத்திய மஹரிஷி ஆலயம் குறித்த முருகப்பெருமான் நாடியில் அருளிய வாக்கு

வல்லான வகையான முறையான அமைப்பில் வந்ததொரு பாண்டிமாநகர நாடும் சீர்புகழும் நலமதுவும் உண்டு நண்மை கண்டனன்.அகத்தியன் ஆலயம் அரும்ப குடமுழுக்கு செய்தி அது கந்தன் மகிழ்ந்தேன்.சீருண்டு முறையாக கந்தசீடனது தனக்கும் அகத்தியனுக்கும் சிறப்புறவே ஓர் ஆலயம் அமைவது தொண்டர்கள் அனைவருக்கும் பரிபூரன ஆசிர்வாதம் உண்டு உண்டு. நலமாக கந்த சீடன் தனக்கு ஓர் ஆலயம் அமைப்பதில் கந்தனுக்கு மகிழ்ச்சியே தான்.

சிறப்புண்டு நலமாக இதை அமைக்கும் குழுமம் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்விதன்னை அது தொடுத்ததால் லாபம் ஆகும். நலமுண்டு கிருத்திகை நன்நாள் இன்றும் உறைகின்ற நேரத்தில் மகிழ்ந்து உரைக்கும் நிலை அதுவும் கண்டனன் லாபம் லாபம். சீருண்டு முறையாக லாபம் மார்கழி  ஆயில்யம் முதல்ஆகவே நண்மை முன்னர் அனுகூலம் கன்டனன் குருவின் பூசை அனுகூலம் ஆனபடி கண்டேன் ஆதலால் நட்ப்பாக கண்டதொரு வேளை முடித்தது விட்டிடலாம்.

குடமுழுக்கு கண்ட பின்னே ஒவ்வொரு ஆயில்யம் வரும் நேரம் முறையாக நண்மை நிலை அகத்தியன் ஜென்மம் நட்சத்திரம் தன்னில் முழுத்திருமஞ்சனத்தோடு அன்னதான தருமங்கள் செய்வதே இந்த குழுவிற்க்கு பணியது என்பேன்.ஓர் வருடம் அப்படியே செய்து வரலாம்.

இவ்வாலயத்தில் நடக்க உள்ள அற்புத மகிமை திருவிளையாடல்கள் எல்லாம் பின்வருமாறு கந்தன் உரைத்துள்ளார். நன்கு படித்து மகிழ்க.

பிள்ளை இல்லாதோர் பிள்ளை பெறுதல், கணவன் மனைவி சந்தோஷப்படுதல், மணம் ஆகாதோர் மணம் அமைக்கப்பெறுதல், பணி இல்லாதோர் பணி அமைக்கப்பெறுதல், பணம் இல்லாதோர் பணம் கிடைக்கப்பெறுதல், அருள் பெறுவோர் அருள் கிடைக்கப்பெறுதல், பொருள் கேட்ப்போர் பொருள் கிடைக்க பெறுதல், அவர் அவர் இச்சை எப்படியோ அப்படி அகத்தியன் படி அளப்பான். அனுகூலம் இது எல்லாம் திருவாதிரை மண்டலத்தில் பதிந்து சித்தர்கள் மண்டலத்தில் பதிந்து இருக்கும் செய்தி. முறையாக ஈசன் அருளும் பரிபூரணமாக கிட்டும்.

செய்யும் தானம் அன்னதானம் பூசை முறையாக நல்லதாம் அடியார்களை ஒன்று கூட்டி சிறப்புறவே நல்லதோர் அகத்தியன் புகழ்பாடி சீராக அவ்வாலயம் தன்னில் எல்லோரும் செல்ல முடியாவிட்டாலும் அவர் அவர் உரிய நிதி திரட்டி முறையாக அவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஆயில்ய பூசை தனை அமர்த்த வேணும் செய்ய வேணும் என்பதே இந்நேர கட்டளை என்பேன் கேட்டு நட என்று கந்தன் பகர்ந்தார்.

கந்த நாடி முற்றே - 

அஉம் ஶ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்குக

அஉம் அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

ஏற்கனவே அழைப்பிதழ்பகிர்ந்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறும் படி நம் தளம் சார்பில் வேண்டுகின்றோம்.

சென்ற பதிவில் உள்ளம் உருகுதய்யா என்ற பாடலோடு பதிவை நிறைவு செய்தோம்.அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Saturday, February 1, 2020

வள்ளலார் அருள்மணிமாடத் திருக்கோயில் - கும்ப நீராட்டு விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் வள்ளலார் அருள்மணிமாடத் திருக்கோயில் - கும்ப நீராட்டு விழா அழைப்பிதழ் பகிர விரும்புகின்றோம். பதிவின் துவக்கத்திலேயே அழைப்பிதழ் தருகின்றோம். 

பதினெண் சித்தர்கள் வரிசை பற்றி நாம் அறிவோம். இது பதினெட்டு சித்தர்கள் என்று இல்லை. சித்தர்கள் வரிசையில் ஒவ்வொருவரும் ஒருவித நிலையில் அடங்குவர். சிலர் பக்தி பற்றி பேசுவார்கள். சிலர் யோகம் பற்றி பேசுவார்கள். சிலர் ஞானம் பற்றி பேசுவார்கள். இந்த வரிசை பற்றி பேசும்போது அருட்பெருஞ்சோதி பற்றி பேசிய வள்ளலார் பற்றி தான் நாம் இன்றைய பதிவில் அறிய உள்ளோம். வள்ளலார் என்றதும் நமக்கு அன்னதானம் என்று தான் நினைவிற்கு வரும். ஏன்? இந்த உயிர் வாழ உடம்பு வேண்டும். உடல் இயங்க பசி போக்க வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பார்க்கும் போது, பசியோடு பலர் இருந்திருக்க, ஆன்மிகம் பற்றி சொல்ல முடியுமா என்ன? உண்மையான ஆன்மிகம் மற்றவர் துயர் போக்குதலே. அதனால் தான் வள்ளலார் என்றதும் அன்னசேவை நமக்கு தெரிகின்றது. அன்னதானம் மூலம்  எத்துணை எத்துனை விஷயங்களை சொல்லி, செய்து காட்டி இருக்கின்றார்.

அன்பு,கருணை ,இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது.

வள்ளலார் தோற்றுவித்த அறநிலையங்கள், அன்பர்கள் ஏற்படுத்தியுள்ள பரந்துபட்ட சன்மார்க்க சங்கங்கள் வழி அணையா அடுப்பும், அருட்பெருஞ்சோதியும் என்றென்றும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றாலும் வள்ளலார் போதித்த வாழ்க்கை நெறியும், சமய வழிநின்று செய்த சமுதாய புரட்சியும், அவர் காலத்திலும் அவருக்குப் பிறகும் நின்று நிலைபெறவில்லை என்ற ஆதங்கள் வள்ளலாருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் உண்டு. அதனால்தான் ‘கடைவிரித்தோம் கொள்வாரில்லை‘ என்று கூறி மறைந்தார்.

இன்று துறைதோறும் தோன்றியுள்ள பல சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் வள்ளலாரே.

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் - வள்ளலாரே.

தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் - வள்ளலாரே.

தமிழகத்தில் முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் - வள்ளலாரே.

தமிழ்நட்டில் முதன்முதலில் மொழிப் பாடசாலை (தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம்) நிறுவியர் - வள்ளலாரே.

தமது கொள்கைக்கென்ற ஒரு தனி மார்க்கத்தை கண்டவர் - வள்ளலாரே.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியர்- வள்ளலாரே.அது, சமரச சன்மார்க்க சங்கம்.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கட்ணவர் வள்ளலாரே. - சன்மார்க்க கொடி.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர் வள்ளலாரே. - அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.

தமது தொண்டுக்கென தர்ம சாலையைக் கட்டியவர் வள்ளலாரே. - சத்திய தருமச்சாலை.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சபையைக் கட்டியவர் வள்ளலாரே. சத்திய ஞானசபை.

சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே.

‘சாகாதவனே சன்மார்க்கி‘ என்பது வள்ளலாரின் உபதேசம்.

‘என் மார்க்கம் இறபொழிக்கும் சன்மார்க்கந்தானே‘.

‘துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச் சூழலில் உண்டு. அது சொல்லவன்றே‘ என்பவை வள்ளலாரின் வாக்குகள்.

இதோ..திருச்சி செந்தண்ணீர்புரத்தில் வள்ளலார் அருள்மணிமாடத் திருக்கோயில் - கும்ப நீராட்டு விழா நடைபெற உள்ளது. கும்ப நீராட்டு விழா என்பது அந்தக்காலத்தில் அரசர்கள் செய்த ஒன்று. இன்று பல கோயில்களுக்கு கும்ப நீராட்டு விழா நடைபெற்று வருகின்றது. பிரபஞ்ச சக்தியை கும்பத்தில் வார்த்து அதனை கோயில் முழுதும் இருக்க செய்வதே ஆகும். இறை சக்தியும், குரு சகதியுமாக அருட்பெருஞ்சோதி ஆண்டவராக ஈர்க்கும் நம் வள்ளலாரின் அருளை இந்த கும்ப நீராட்டு விழாவில் பெற நாம் அன்போடு அழைக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

வள்ளல் மலரடி வாழ்க ! வாழ்க !!

மீள்பதிவாக:-

தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! - ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசிப்போம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_9.html

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html