"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, July 31, 2022

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்று பிற்பகல் 3 மணி முதல் இன்று பிற்பகல்  3 மணி வரை ஆடிப் பூரம் ஆகும். ஆடிப்பூரம் என்றாலே நமக்கு நம்மை ஆளும் ஆண்டாள் தான் எண்ணத்தில் இருக்கின்றார். இதனையொட்டியே இன்றைய பதிவில் நாம் சிந்திக்க இருக்கின்றோம். 

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள்  உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.




அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,  குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை  உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள்  திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த  வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக  எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில்  நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு  அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில்  ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

இன்றைய நன்னாளில் அன்னையை தொழுது அன்னையின் அன்பை பெறுவோம்.

இன்றோ திருவாடிப்பூரம்- எமக்காக
வன்றோ இங்காண்டாளவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்தவான்போகந்தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

ஆம். இன்று ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்த நாள். இந்நாளில் நம் மனதை திறப்போம். ஆண்டாள் நம்மை கொஞ்சம் ஆளட்டும்.





ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.


மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாக துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.





இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த சமயம் சார்ந்த கருத்துகள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாகத் தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர்த் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றிக் கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். 

ஆண்டாள், "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.



கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.






ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

வட இந்தியாவில் ராதாவின் பக்தி பிரபலமாகப் போற்றப்படுகிறது. பெண் பக்தியாளர்களில் மீராபாய் கண்ணனிடம் கொண்ட அர்பணிப்புடன் கூடிய பக்தியைப் போலத் தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி போற்றப்படுகிறது. 

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. 




திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்குச் சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது. இவ் வைபவம், தமிழ் மாதமான புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவம் விழாவில், குறிப்பாகக் கருட சேவை அன்று நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிய மலர் மாலையைப் பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார். இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டதாக உள்ளது.மேலும், திருப்பதி பெருமாளின் மலர்மாலை, வருடந்தோறும் நடைபெறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்காக அனுப்பப்படுகிறது. மதுரையில் நடைபெறும் பிரசித்தமான சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காகத் திருவில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் இடக்கையில் கிளி இருக்கிறது. இது தினமும் புதியதாக இன்றளவும் செய்யப்படுகிறது. இந்தக் கிளியைச் செய்வதற்குத் தோராயமாக நான்கிலிருந்து நாலறை மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இக் கிளியைச் செய்வதற்கு, மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின் அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும், வாழை மரத்தின் இலைகள் மற்றும் நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.


     திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே

     திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

     பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

     பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

     ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே

     உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

     மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே

     வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_11.html

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html




Tuesday, July 26, 2022

சதுரகிரி மகாலிங்கமே போற்றி! போற்றி - ஆடி அமாவாசை திருவிழா அழைப்பிதழ் - 28.07.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் அனைவரும் ஆடி மாத வழிபாட்டில் இணைந்து வருகின்றோம். ஆடி மாதம் என்றாலே சக்தியை பெறும் மாதம் என்றே சொல்லலாம். ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை என்று இம்மாதம் முழுதும் கொண்டாட்டம் தான். ஆடி அமாவாசை சிறப்பு பதிவாக அருள்மிகு சாப்டூர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் திருவிழா அழைப்பிதழை இங்கே பகிர விரும்புகின்றோம்.

அழைப்பிதழை பகிரும் முன்னர் சதுரகிரி வரலாறு கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன், திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடு த்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். 

சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இது பற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித் தான். 

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல்இரக்கம் கொண்ட அவர் அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். 

பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.

சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சை மால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்ல தேவன். நீ யாழ்மீட்டி என்னைபாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். 

இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலை யில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். அனைவரும் சுந்தரமஹாலிங்கம் தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும்.




அருள்மிகு சாப்டூர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி  அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 26.07.22 (செவ்வாய் கிழமை) முதல் 29.07.22 (வெள்ளிகிழமை)  வரையிலான நான்கு நாட்கள் மட்டும் காலை 5மணி முதல் மாலை 3மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

• இக்கோவில் விருதுநகர் மாவட்டம்  தாணிப்பாறை அடிவார பகுதியிலிருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நடைபாதை தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து வன உயிரினச்சரணாலய பகுதியில் 4.75 கி.மீ தூரத்திற்கு செல்கிறது. அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அம்மாவாசை திருவிழா இந்த வருடம் 28.7.22 அன்று நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

• அருள்மிகு சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி  அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 26.07.22 (செவ்வாய் கிழமை) முதல் 29.07.22 (வெள்ளிகிழமை)  வரையிலான நான்கு நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

• பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர்,விருதுநகர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து வாகனங்களுக்கு  தாணிப்பாறை விலக்கு வரை இரு வழிச் சாலைகளும்,  தாணிப்பாறை விலக்கிலிருந்து தாணிப்பாறை அடிவாரத்தின் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம்;  வரை வாகனங்கள் வருவதற்கும், மகாராஜபுரம் விலக்கு வழியாக திரும்பிச் செல்வதற்கும் என ஒரு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

• மேலும், தாணிப்பாறையிலிருந்து  ஐந்து கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே  ஆட்டோ, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனித்தனியாக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பேருந்தை பயன்;படுத்துபவர்களுக்கு என்று தாணிப்பாறையை அடுத்து கோவில் நுழைவு வாயிலுக்கு 800 மீட்டர் முன்பாக மற்றுறொரு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வரை அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்,  தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

• இத்திருக்கோவிலுக்குச் செல்ல கோவில் நுழைவுச் சீட்டு ஏதும் வழங்கப்படாது. பக்தர்கள் யாத்திரை செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.

• மேலும், பக்தர்களுக்கென அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகள், பேருந்து நிறுத்துமிடங்கள், வாகனங்கள் முறையாக எந்தெந்த வழித்தடங்கள் வழியாக செல்ல வேண்டும்; போன்ற விவரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் அழகாபுரி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, வத்திராயிருப்பு பேருந்து நிறுத்தம் மற்றும் தற்காலிகமாக அமைக்கபட்டுள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும்; வைக்கப்பட்டுள்ளது.

• பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே மருத்துவ வசதி, கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.  குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

• வனப்பகுதியில் பக்தர்கள் நெகிழிப்பைகள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்குவதற்கு அனுமதி கிடையாது,

• பக்தர்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு,  கோவிலிருந்து (தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து) மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் மற்ற பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கோவில் செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

• அருள்மிகு சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள், நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் வனப்பகுதிiயை சுத்தமாகவும், சுகாதாரமாகவும்  வைத்திருத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இன்றைய பிரதோஷ வழிபாட்டில் சதுரகிரி மகாலிங்கமே போற்றி! போற்றி என்று கூறி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்துகொள்வோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

 ஆடி அமாவாசை சிறப்பு பதிவு - சேர்மன் அருணாசல சுவாமி கோயில் (19.07.2022 முதல் 30.07.2022 வரை) - https://tut-temples.blogspot.com/2022/07/19072022-30072022.html

ஆடி அமாவாசை - இறை வழிபாடும், இறைப்பணியும் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_9.html

ஆடி அமாவாசை சிறப்பு பதிவு (1) - சேர்மன் அருணாசல சுவாமி கோயில் (22.07.2019 முதல் 02.08.2019 வரை) - https://tut-temples.blogspot.com/2019/07/1-22072019-02082019.html

ஆடி அமாவாசை - ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்க வேண்டிய பக்திக் கதை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_90.html

விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே! - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post_22.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு அறிவிப்பு - 20.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/20072020.html

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_84.html

 முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_83.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/06/21.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

Sunday, July 24, 2022

ஆடி அமாவாசை சிறப்பு பதிவு - சேர்மன் அருணாசல சுவாமி கோயில் (19.07.2022 முதல் 30.07.2022 வரை)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் அனைவரும் ஆடி மாத வழிபாட்டில் இணைந்து வருகின்றோம். ஆடி மாதம் என்றாலே சக்தியை பெறும் மாதம் என்றே சொல்லலாம். ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை என்று இம்மாதம் முழுதும் கொண்டாட்டம் தான். ஆடி அமாவாசை சிறப்பு பதிவாக சேர்மன் அருணாசல சுவாமி கோயில் திருவிழா அழைப்பிதழ் இங்கே இன்றைய பதிவில் பகிர்கின்றோம். காலம் தாழ்த்தி பதிவு செய்வதற்கு அடியேனை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

பரம் பொருள் உணர்த்தும் உயிர்நிலைக் கோயில்கள் நம் நாடு முழுதும் பரவி கிடக்கின்றது. குறிப்பாக நம் தமிழ் நாட்டில் சொல்லவே வேண்டாம். கால் வைக்கும் இடமெல்லாம் சித்தர்களின் ராஜ்ஜியம் தான். ஆனால் நமக்குத் தான் உண்மை நிலை புரிவதும் இல்லை, தெரிவதும் இல்லை.

அந்த வகையில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பற்றி குறிப்பாக இங்கே காணலாம். எப்போ அழைப்பாரோ? என்று நாம் காத்திருக்கின்றோம். ஏனெனில் சக்கரை அம்மா ஜீவ சமாதி பற்றியும், குருபூஜை பற்றியும் நம் தளத்தில் பகிர்ந்தோம். ஆனால் அன்றைய தினம் தீர்த்தமலை சென்று வர இறைவன் பணித்தான். மீண்டும் எப்போது வாய்ப்பு கிடைக்குமோ? என்று ஏங்கிய போது, சென்ற வாரம் சென்று தரிசித்தோம். உயிர்நிலை கோயிலின் உண்மை புரிந்தது. நம்மை தாண்டி அன்னையின் ஆற்றல் நம்முள் புகுவது கண்டோம். புருவ மத்தியில் நினைவை செலுத்து, துரியத்தில் மனம் வை என்றெல்லாம் நாம் நினைக்க வேண்டாம். இவையெல்லாம் இங்கு தானாகவே நடைபெறுகின்றது. மேலும் அங்கே சத்சங்கம் நடந்து கொண்டிருந்தது. இது போல் அனைத்து கோயில்கள்,ஜீவசமாதிகள் முழுதும் சத்சங்கம் நடைபெற்று, நாம் புத்துயிர் பெற வேண்டும், சரி..சேர்மன் அருணாசல சுவாமி பற்றி அறிவோம்.

சேர்மன் அருணாச்சல சுவாமிகள் கோயில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள ஒரு வழிபாட்டு மற்றும் சமாதிக் கோயில் ஆகும். இங்கு சேர்மன் அருணாசல சுவாமி என்பவரின் சமாதி அமைந்துள்ளது.




சேர்மன் அருணாசலம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி நாடாருக்கும் சிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் பிறந்தார். சிறுவயதிலேயே யோகக்கலை பயின்றார். 1906, செப்டம்பர் 5 முதல் 1908, ஜூலை 27 வரை ஏரல் நகராட்சித் தலைவராக (சேர்மன்) இருந்தார். இதனால் "சேர்மன் அருணாசலம்' என்று அழைக்கப்பட்டார்.



சேர்மன் அருணாச்சலம் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனிடம் தன் மரணத்தைச் சொன்னார். அதன்படி, 1908, ஜூலை 28 அன்று ஆடி அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கு சமாதியானர். ஏரலுக்குத் தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக இருந்த ஆலமரத்தின் அருகில் தன்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடும்படி தம்பியிடம் சொன்னார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அவரது சமாதியிடம் இன்று கோயிலாக உள்ளது.



ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார் என்கிற நம்பிக்கையில் இக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். இந்தக் கோயிலில் பிரசாதமாக கோயில் திருமண்ணும், தண்ணீரும் தருகிறார்கள்.




                       ஆடி அமாவாசை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா .  ஆடி அமாவாசையன்று இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மன் திருக்கோலத்தில் எழுந்தருளுவார்.







இனி அழைப்பிதழை இங்கே பகிர விரும்புகின்றோம்.

















  மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழைப் பார்க்கவும். அனைவரும் கலந்து கொண்டு அருள் பெறுக. அனைத்தும் அவர் பாதங்களில் சமர்ப்பணம்.

           ஏரல்  சேர்மன் அருணாசல சுவாமிகளின் திருவடி போற்றி வணங்குகின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆடி அமாவாசை - இறை வழிபாடும், இறைப்பணியும் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_9.html

ஆடி அமாவாசை சிறப்பு பதிவு (1) - சேர்மன் அருணாசல சுவாமி கோயில் (22.07.2019 முதல் 02.08.2019 வரை) - https://tut-temples.blogspot.com/2019/07/1-22072019-02082019.html

ஆடி அமாவாசை - ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்க வேண்டிய பக்திக் கதை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_90.html

விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே! - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post_22.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு அறிவிப்பு - 20.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/20072020.html

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_84.html

 முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_83.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/06/21.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

Saturday, July 23, 2022

சரணம் சரணம் சண்முகா சரணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்று ஆடி கிருத்திகை வழிபாட்டில் பூ மாலை கொடுத்து வழிபாடு நம் தளம் சார்பில் வழிபாடு செய்தது பற்றி கண்டோம். இன்று அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பா மாலை வழிபாடு பற்றி காண உள்ளோம். நேற்று மாலை சின்னாளப்பட்டி ஸ்ரீ முருகப்பெருமான் கோயிலுக்கு மாலை 5:30 மணி அளவில் சென்றோம். பூஜைக்கு சில பொருட்களை கொடுத்து விட்டு அப்படியே அங்கே ஓரிடத்தில் அமர்ந்தோம். நேற்று ஆடி கிருத்திகை என்பதால் கோயிலில் நல்ல கூட்டம் இருந்தது. அன்பர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். தத்தம் குடும்பத்திற்கு அர்ச்சனை செய்து, தீப மேற்றி வழிபாடு செய்து சரண கோஷமிட்டு கொண்டு இருந்தார்கள்.


நாம் அப்படியே முதலில் கந்தன் அறுபடை வீடு கவசம் படிக்க ஆரம்பித்தோம்.ஏற்கனவே நம் தளத்தில் தனித்தனி பதிவாக கொடுத்துள்ளோம். இங்கே அவற்றை ஒரே பதிவில் தருகின்றோம்.

1. திருப்பருங்குன்றுரை தீரனே குகனே

திருப்பரங்குன்றுறை திருமகன்

தேவராய சுவாமிகள்

காப்பு

அமரர் இடர் தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.


துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம், நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்துஓங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள்கந்தர்

சஷ்டிக் கவசந் தனை.

நூல்


திருப்பருங்குன்றுரை தீரனே குகனே

மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா

குறுக்குத்துறையுறை குமரனே அரனே

இருக்கும் குருபரா ஏரகப்பொருளே        ... ... 4


வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே

ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ

ஐயா குமரா அருளே நமோ நமோ

மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ        ... ... 8


பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ

மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ

விராலிமலையுறை விமலா நமோ நமோ

      மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ        ... ... 12


சூரசங் காரா துரையே நமோ நமோ

வீரவேலேந்தும் வேளே நமோ நமோ

பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ

கண்களீராறுடை கந்தா நமோ நமோ        ... ... 16


கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ

ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ

சசச சசச ஓம் ரீம்

ரரர ரரர ரீம்ரீம்        ... ... 20


வவவ வவவ ஆம் ஹோம்

ணணண ணணண வாம்ஹோம்

பபப பபப சாம் சூம்

வவவ வவவ கெளம் ஓம்        ... ... 24


லல லிலி லுலு நாட்டிய அட்சரம்

கக கக கக கந்தனே வருக

இக இக இக ஈசனே வருக

தக தக தக சற்குரு வருக        ... ... 28


பக பக பக பரந்தாமா வருக

வருக வருகவென் வள்ளலே வருக

வருக வருக நிஷ்களங்கனே வருக

தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச்        ... ... 32


சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே

அல்லும் பகலும் அனுதினமும் என்னை

எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை

வல்லவிடங்கள் வாராமல் தடுத்து        ... ... 36


நல்ல மனத்துடன் ஞானகுரு உனை

வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்

இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்

கந்தா கடம்பா கார்த்தி கேயா        ... ... 40


நந்தன் மருகா நாரணி சேயே

என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை

தண்ணளி அளிக்கும் சாமிநாதா

சிவகிரி கயிலை திருப்பதி வேளூர்        ... ... 44


தவக்கதிர்காமம் சார்திரு வேரகம்

கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்

விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்

தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு        ... ... 48


சன்னதி யாய்வளர் சரவண பவனே

அகத்திய முனிவனுக் (கு) அன்புடன் தமிழைச்

செகத்தொர் அறியச் செப்பிய கோவே

சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்        ... ... 52


நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்

வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே ...

உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே

வெற்றிக் கொடியுடை வேளே போற்றி        ... ... 56


பக்திசெய் தேவர் பயனே போற்றி

சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி

அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி

வாணி யுடனே வரைமாக் கலைகளும்        ... ... 60


தானே நானென்று சண்முகமாகத்

தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்

பூரண கிருபை புரிபவா போற்றி

பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள்        ... ... 64


ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்

எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்

பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம்

கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்        ... ... 68


எள்ளினுள் எண்ணெய் போலெழிலுடை உன்னை

அல்லும் பகலும் ஆசாரத்துடன்

சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால்

எல்லா வல்லமை இமைப்பினில் அருளி        ... ... 72


பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாயே

செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி

சந்ததம் மகிழும் தயாபர குகனே ...

சரணம் சரணம் சரஹணபவ ஓம்        ... ... 76


அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்

சரணம் சரணம் சரஹணபவ ஓம்

     சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 79


2. செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா 


திருச்செந்தூர்த் தேவசேனாபதி

 துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
 நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
 நிஷ்டையுங் கைகூடும்,
 நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.


 அமரர் இடர்தீர அமரம் புரிந்த
 குமரன் அடி நெஞ்சே குறி.

சஷ்டியை நோக்கச் சரஹணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட        ... ... 4

மைய நடஞ்செயும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக        ... ... 8

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திரவடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக ...        ... ... 12

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக ...        ... ... 16

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென        ... ... 20

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் ...        ... ... 24

பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும்        ... ... 28

கிலியுங் செளவும் கிளரொளியையும்
நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக        ... ... 32

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்        ... ... 36

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        ... ... 40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்ப ழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நல் சீராவும்        ... ... 44

இருதொடை அழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென        ... ... 48

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி        ... ... 52

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து        ... ... 56

என்றனை யாளும் ஏரகச் செல்வ ...
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலாவிநோத னென்று        ... ... 60

உன்றிருவடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க        ... ... 64

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க        ... ... 68

நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவை செவ்வேல் காக்க        ... ... 72

கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க        ... ... 76

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க        ... ... 80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க        ... ... 84

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க        ... ... 88

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க        ... ... 92

நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க        ... ... 96

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க        ... ... 100

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க        ... ... 104

தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப்பேய்கள்        ... ... 108

அல்லல்படுத்தும் அடங்காமுனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடைமுனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராக் கருதரும்        ... ... 112

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்        ... ... 116

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டா ளர்களும்
என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை அடியினில் அரும்பா வைகளும்        ... ... 120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்        ... ... 124

ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும்அஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட        ... ... 128

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட        ... ... 132

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு        ... ... 136

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்குசெக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்        ... ... 140

பற்றுபற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்        ... ... 144

எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க        ... ... 148

ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலையங் சயங்குன்மம் சொக்குச் சிறங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி        ... ... 152

பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பல்குத்து அரணை பருஅரை ஆப்பும்
எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால்        ... ... 156

நில்லாதோட நீயெனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும்        ... ... 160

உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
சரஹணபவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே        ... ... 164

அரிதிரு மருகா அமாராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை        ... ... 168

இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா        ... ... 172

ஆவினன்குடிவாழ் அழகிய வேலா
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
சமராபுரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்        ... ... 176

என் நாஇருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        ... ... 180

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாசவினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்        ... ... 184

மெத்தமெத்தாக வேலா யுதனார்
சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்கவாழ்க மயிலோன் வாழ்க
வாழ்கவாழ்க வடிவேல் வாழ்க        ... ... 188

வாழ்கவாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்கவாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்கவாழ்க வாரணத் துவஜம்
வாழ்கவாழ்க என் வறுமைகள் நீங்க        ... ... 192

எத்தனைகுறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே        ... ... 196

பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென்மீதுன் மனமகிழ்ந் தருளி
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டிகவசம் விரும்பிய        ... ... 200

பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடனொரு நினைவதுமாகிக்        ... ... 204

கந்தர் சஷ்டிக்கவசமிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுருக்கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய        ... ... 208

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர்
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்        ... ... 212

நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர் கைவேலாம் கவசத் தடியை
வழியாய்க்காண மெய்யாய் விளங்கும்        ... ... 216

விழியால்காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி        ... ... 220

அறிந்தெனதுள்ளம் அட்டலட்சு மிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணித்தகை அதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த        ... ... 224

குருபரன் பழநிக் குன்றிலி ருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி        ... ... 228

தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ்கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி        ... ... 232

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்        ... ... 236

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 238

3. திருவா வினன்குடி சிறக்கும் முருகா



திருவாவினன்குடி தெண்டபாணி

காப்பு

அமரர்இடர்தீர அமரம் புரிந்த 

குமரன் அடி நெஞ்சே குறி,


துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 

பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்

நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 

சஷ்டி கவசந்தனை


திருவா வினன்குடி சிறக்கும் முருகா

குருபரா குமரா குழந்தைவே லாயுதா

சரவணை சண்முகா சதாசிவன் பாலா

இரவலர் தயாபரா ஏழைபங் காளா

பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா

வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா

இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா

திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா

இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்

பட்சத்துடனே பராசக்தி வேலதாய்


வீர வாகு மிகுதள கர்த்தனாய்

சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா

கயிலாய மேவும் கனகசிம் மாசனா

மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா

அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா

சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய

நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்

கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா

திருவரு ணகிரி திருப்புகழ் பாட

இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா


ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்

பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா

எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி

விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா

குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து

உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்

சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்

அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்

வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்

தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்


சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்

ஆரணம் ஓதும் அருமறை யடியார்

தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்

ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி

திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம

பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம

ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம

கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம

சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம

உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம


எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம

சல்லாப மாகச் சண்முகத் துடனே

எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி

உல்லா சத்துறும் ஓங்கார வடிவே

மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை

சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை

வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்

சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை

கைலாச மேருவா காசத்தில் கண்டு

பைலாம் பூமியும் பங்கய பார்வதி


மேலும் பகலும் விண்ணுரு வேத்தி

நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை

கங்கை யீசன் கருதிய நீர்புரை

செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை

அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்

முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி

வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி

ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்

ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்

பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை


தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு

மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி

அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி

மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்

பாகமாய் ரதமும் பகல்வழி யாரை

சாகா வகையும் தன்னை அறிந்து

ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்

விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி

சந்திர சூரியர் தம்முடன் அக்கினி

அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்


சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை

மந்திர அர்ச்சனை வாசிவ என்று

தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்

ஆறு முகமாய் அகத்துளே நின்று

வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து

யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி

மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு

வாலைக் குழந்தை வடிவையும் காட்டி

நரைதிரை மாற்றி நாலையும் காட்டி

உரைசிவ யோகம் உபதேசம் செப்பி


மனத்தில் பிரியா வங்கண மாக

நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து

அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி

மதியருள் வேலும் மயிலுடன் வந்து

நானே நீயெனும் லட்சணத் துடனே

தேனே என்னுளம் சிவகிரி எனவே

ஆறா தாரத்(து) ஆறு முகமும்

மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்

கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க

தனதென வந்து தயவுடன் இரங்கிச்


சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்

எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து

அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்

தட்டாத வாக்கு சர்வா பரணமும்

இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்

துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்

எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்

வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே

அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்

சமுசார சாரமும் தானேநிசமென


வச்சிர சரீரம் மந்திர வசீகரம்

அட்சரம் யாவும் அடியேனுக் குதவி

வல்லமை யோகம் வசீகர சக்தி

நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்

சகலகலை ஞானமும் தானெனக் கருளி

செகதல வசீகரம் திருவருள் செய்து

வந்த கலிபிணி வல்வினை மாற்றி

இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்

கிட்டவே வந்து கிருபை பாலிக்க

அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்


துட்டதே வதையும் துட்டப் பிசாசும்

வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்

வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை

பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க

பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க

பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி

உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்

சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி

வேலா யுதத்தால் வீசிப் பருகி

மழுவிட் டேவி வடவாக் கினிபோல்


தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்

சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்

மதம்பெறும் காளி வல்ல சக்கரம்

மதியணி சம்பு சதாசிவ சக்கரம்

பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்

திருவை குண்டம் திருமால் சக்கரம்

அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்

சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்

விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்


ஏக ரூபமாய் என்முனே நின்று

வாகனத் துடன்என் மனத்துள் இருந்து

தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்

இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்

வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்

உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்

தந்திர மந்திரம் தருமணி அட்சரம்

உந்தன் விபூதி உடனே சபித்து

கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க

எந்தன் மனத்துள் எதுவேண் டினும்


தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்

சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்

சரணம் சரணம் சட்கோண இறைவா

சரணம் சரணம் சத்துரு சம்காரா!

சரணம் சரணம் சரவண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்!

4.  திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!!


திருவேரகம் ... சுவாமிமலைக் குருநாதன்

காப்பு

 அமரர்இடர்தீர அமரம் புரிந்த 

 குமரன் அடி நெஞ்சே குறி,


 துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 

 பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்

 நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 

 சஷ்டி கவசந்தனை

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கா ரமாக உதயத் தெழுந்தே
ஆங்கா ரமான அரக்கர் குலத்தை        ... ... 4

வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே        ... ... 8

நான்கு மறைகள் நாடியே தேடும்
மான் மருகோனே வள்ளி மணாளனே
நானெனும் ஆணவம் நண்ணிடா (து) என்னை
காணநீ வந்து காப்பதுன் கடனே        ... ... 12

காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் புதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி        ... ... 16

... ஏகாட்சரமாய் ... எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதல் பொருளே
... துவியட் சரத்தால் ... தொல்லுல (கு) எல்லாம்
அதிசயமாக அமைத்தவா போற்றி        ... ... 20

... திரியட் சரத்தால் ... சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
... சதுரட் சரத்தால் ... சாற்றுநல் யோகம்
மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே        ... ... 24

... பஞ்சாட் சரத்தால் ... பரமன் உருவதாய்த்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத் (து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்        ... ... 28

ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறு சிரமும் அழகிய முகமும்
ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்        ... ... 32

சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும்ஆ யுதத்தால்
தரங்குலைந் (து) ஓடத் தாரகா சுரன்முதல்        ... ... 36

வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தாய்
சீர்த் திருச் செந்தூர்த் தேவசே னாபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித் திகளருள் ஈசன் புதல்வா        ... ... 40

துட்டசங் காரா சுப்பிர மண்யா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர        ... ... 44

சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க் (கு) அருளும் ஈசா போற்றி        ... ... 48

ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ (டு) உடன்யான்
அருச்சனை செய்ய அனுக்ரகம் செய்வாய்        ... ... 52

பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரொ (டு) என்னைச்
சல்லாப மாகச் சகலரும் போற்ற        ... ... 56

கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்        ... ... 60

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு        ... ... 64

திட்டு முறைகள் தெய்வத சாபம்
குட்டம் சோம்பல் கொடிய வாந்தியும்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்        ... ... 68

உன்னுடை நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை
செய்வதுடன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரனே சரணம்        ... ... 72

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 74

5. குன்றுதோறாடும் குமரா போற்றி

                                 

குன்றுதோறாடும் குமரன்


காப்பு

 அமரர்இடர்தீர அமரம் புரிந்த 

 குமரன் அடி நெஞ்சே குறி,

 துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 

 பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்

 நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 

 சஷ்டி கவசந்தனை

கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமர குருபரா
வள்ளிதெய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா        ... ... 4

அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியனு கூலா
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா        ... ... 8

சண்முகநதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழனிக்கு இறைவா
ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா        ... ... 12

ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறு முகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்        ... ... 16

வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணதீறணி திருநுதல் அழகும்
கருணைபொழியும் கண்ணான்கு மூன்றும்        ... ... 20

குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்        ... ... 24

காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபோலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்        ... ... 28

முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட
ஈஸ்வரன் பார்வதி எடுத்து முத்தாடி
ஈஸ்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்        ... ... 32

கையால் எடுத்து கனமார் (பு) அணைத்தே
ஐயா ... குமரா ... அப்பனே ... என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி        ... ... 36

முன்னே கொட்டி முருகா ... வருகவென் (று)
அந்நேரம் வட்டமிட்டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக        ... ... 40

தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவல் கொடியோய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக        ... ... 44

அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணைப் புண்ணியா வருக
அழகில் சிவனொளி அய்யனே வருக
கலபம் அணியுமென் கந்தனே வருக        ... ... 48

மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக
திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக        ... ... 52

சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலில்சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்        ... ... 56

அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி        ... ... 60

பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திரவாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்        ... ... 64

ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமுடி அணியுமா பரணமும்        ... ... 68

வாயில்நன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோம பந்தியும்
மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்        ... ... 72

ஒழுகிய சந்தனம் உயர்கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்        ... ... 76

ஆணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
நவமணி பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்        ... ... 80

கருணைபொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்        ... ... 84

ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேல்குடை ஒருகை தண்டாயுதம்        ... ... 88

ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்
பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை        ... ... 92

இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்துகொண் டாடத்
தானவர் அடியர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்ய        ... ... 96

சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பைரவர் ஆனந்தமாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சத்த ரிஷிகள் சாந்தக மென்னச்        ... ... 100

சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்        ... ... 104

நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய        ... ... 108

ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன
ஏவல் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தர்வர் பாடிக் கவரிகள் வீசிச்        ... ... 112

சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க        ... ... 116

குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல் உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேந்த        ... ... 120

நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க        ... ... 124

மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்        ... ... 128

வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர
ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்        ... ... 132

சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலறக் குலத்தை அறுத்துச் சயித்து        ... ... 136

விடுத்தவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்பதி செந்தூர்        ... ... 140

திருவாவி நன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலிமலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை        ... ... 144

கண்ணிய மாவூற்றுக் கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்        ... ... 148

பதினா லுகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந் (து) அடியர்தம்
பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க ...
கேட்ட வரமும் கிருபைப் படியே        ... ... 152

தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக் (கு) அருள்சண் முகனே        ... ... 155

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 157


6.  பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!!

                              

பழமுதிர்சோலை பரமகுரு

 அமரர்இடர்தீர அமரம் புரிந்த 

 குமரன் அடி நெஞ்சே குறி,

 துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 

 பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்

 நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 

 சஷ்டி கவசந்தனை

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே        ... ... 4

பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவணபவனே சட்கோணத் துள்ளுறை
அரனருள் சுதனே அய்யனே சரணம்        ... ... 8

சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்
திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்        ... ... 12

திகழொளி பவனே சேவல்கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே        ... ... 16

சவ்வும் ரவ்வுமாய்த் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவணபவனே        ... ... 20

குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்ச மென்றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங் (கு)
அஞ்சலி செய்தவள் அமுதமும் உண்டு        ... ... 24

கார்த்திகை மாதர் கனமார் (பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீரவாகுவோ (டு) ஒன்பான்        ... ... 28

தம்பிமா ராகத் தானையைக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்        ... ... 32

பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்க
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை        ... ... 36

அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேக மதாக
உமையுடன் வந்தினி துவந்து பரிந்து        ... ... 40

அயனைச் சிறைவிடென் (று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே ...
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கெளரி லட்சுமி கலைம களுடனே        ... ... 44

அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித் தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்        ... ... 48

சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்தவ் வமரர்கள் தமக்குச்        ... ... 52

சேனா பதியாய்த் தெய்வீக பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெரும ...
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவேரக முதல்        ... ... 56

எண்ணிலாத் தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென் (று) ஓதினார் சமயம் அறிந்தங் (கு)        ... ... 60

இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழனி தேவ குமாரா
கண்பார்த் (து) எனையாள் கார்த்திகே யாஎன்        ... ... 64

கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலட் சுமிவாழ் அருளெனக் குதவி
இட்டமாய் என்முன் இருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே        ... ... 68

அருணகிரி தனக் (கு) அருளிய தமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்
தேவ ராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட        ... ... 72

சஷ்டி கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த் திறம் தந்தருள் வோனே        ... ... 76

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் தமிழ் தரும் அரசே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்.        ... ... 80

இவ்வாறு நேற்று ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் கவசங்கள் ஆறு முதலில் படித்தோம்.


பின்னர் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை படித்தோம். 



அடுத்து பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்,பகை கடிதல் , குமாரஸ்தவம் படித்தோம்.


பின்னர் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் படித்தோம். இதில் அறுபடை வீடுகள் , குன்றுதோராடல், பஞ்சபூத தலங்கள் என படிக்க வாய்ப்பு கிடைத்தது.



இவ்வாறாக 5 அருளாளர்கள் அருளிய பாடல்களை படித்து , பின்னர் முருகப் பெருமான் அருள் பெற்று வீட்டிற்கு வந்தோம். ஆறு என்ற கணக்கில் வரவேண்டுமே? என்ன செய்வது ? என்று யோசித்த போது  வள்ளலார் அருளிய பாடல் நம் கண்ணில்பட்டது. 


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை

மறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற

வாழ்வுனான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்

தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச்

சைவமணி

சண்முகத் தெய்வ மணியே

என்று படித்து நிறைவு செய்தோம். இவ்வாறாக நேற்றைய ஆடி கிருத்திகை அன்று 6 அருளாளர்களின் (ஸ்ரீ தேவராய சுவாமிகள், நக்கீரர் , பாம்பன் சுவாமிகள் , அருணகிரிநாதர் , வள்ளலார்)  பாடல்கள் படித்து வழிபாடு செய்தது மனதுக்கு மகிழ்வாக இருந்தது. இவை அனைத்தும் பதிவின் தலைப்பை மீண்டும் படித்தால் புரியும்.


சரணம் சரணம் சண்முகா சரணம்!


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. வெற்றிவேல். முருகனுக்கு அரோகரா....

முருகா! முருகா!! முருகா!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 சரணம் சரணம் சண்முகா சரணம் - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post_23.html

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_61.html

குரவு விரவு முருகா வருக! - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_26.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html