"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, April 13, 2026

குருவருளால் பத்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு

இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்....இறைவா..அனைத்தும் நீயே..

                                     சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) & தள உறவுகளுக்கும், உழவாரப்பணி, அன்னதானம் மற்றும் இன்னபிற சேவைகளுக்கு பொருளுதவி செய்தும், தளத்திற்கு மாதந்தோறும்  விருப்ப சந்தா அளித்து உதவும் உள்ளங்கள் அனைவருக்கும், தளத்தில் பதிவுகளை படித்தும், பகிர்ந்தும் நமக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் பராபவ வருட(2026-2027) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டி அனைவருக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.இன்றைய புத்தாண்டில் நம் தளம் குருவருளால்   பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.






இந்த ஆண்டு உழவாரப்பணி செய்வதற்கு இன்று குருவிடம் வேண்டுகின்றோம் . மற்ற சேவைகளான வழிபாடு ,  குழு யாத்திரை ,  தினசரி கூட்டுப் பிரார்த்தனை ,  நீர்மோர் சேவை ,  அன்னசேவை மற்றும் ஏனைய தொண்டுகள் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது .  

நம் குழு எப்படி ஆரம்பித்தோம் என்றும், நம் தளம் சார்பில் செய்து வரும் சேவைகளை பற்றியும் இங்கே தொடர விரும்புகின்றோம்.

 வாழ்க்கை படகில் ஓடிக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று ஆண்டுக்கு முன்பு அகத்தியர் வனம் அறிமுகம் கிடைத்தது. பல்வேறாய் தொண்டு செய்பவர்களுடன் அறிமுகம் கிடைத்தது. அன்ன தர்மம் செய்வது பற்றி நினைத்தேன். அகத்தியர் வனம் மலேசியா குழு அன்னதானம் செய்வதை பார்த்தேன். 

ஜீவ அமிர்தம், rightmantra சுந்தர் என நட்பு வட்டத்தின் அனுபவம் உதவியுடன் என் அலுவலக நண்பர்கள் உதவியுடன் (தமிழ்மணி, அரவிந்த், மணிகண்டன் & மனோ) 2016 ஆம் ஆண்டு  ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 10 உணவு பொட்டலங்கள் தயார் செய்து கூடுவாஞ்சேரி சுற்றி உள்ள பகுதிகளில் கொடுத்தோம். 

நமது முதல் அன்னதானம்  2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ம் தேதி (14.02.2016)  நடைபெற்றது. மார்ச் மாதம் மேலும் சில நண்பர்கள் கை கோர்த்தனர். அன்பு தொண்டு இல்லம், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் என  மாதம்தோறும் குருவருளால்  தொண்டு செய்தோம்.அப்போது நாம் வேறெதுவும் நினைக்கவில்லை. பின்னர் நண்பர்களின் துணையுடன் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT என்ற பெயரில் நம் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த பணி கோவில் சுத்தம் செய்தல், ஆசிரமத்திற்கு உதவுதல் என நீண்டது. நம் குழு சார்பில்  மரம் நடு விழா, மோட்ச தீபம், ஆலயங்களுக்கு தீப  எண்ணெய் வழங்குதல், உழவாரப்பணி, அன்னதானம், மாதந்தோறும் சித்தர்கள் வழிபாடாக ஆயில்ய ஆராதனை, மலை யாத்திரை என தொடர்ந்து வருகின்றோம். தற்போது 100 உறுப்பினர்களுடன் "தேடல் உள்ள தேனீக்களாய்" என்ற பெயருடன் இயங்கி வருகின்றோம்.

எப்படி ஆரம்பித்தோம் என்று இப்போது நினைத்து பார்த்தாலும் பிரமிப்பாய் உள்ளது. அனைத்திற்கும் காரணம் தேட நாம் தான் முயலுவோம். ஆனால் அந்த பரம்பொருள் நம்மை வழிநடத்தி வருவதை பார்க்கும் போது நாம் இன்னும் ஆன்மிகத்தில் இப்போது தான் காலடி எடுத்து 
வைத்துள்ளதாக உணர்கின்றோம். நம் கையில் ஒன்றுமே இல்லை. அனைத்தும் குருமார்களின் ஆசியோடு தான் நடைபெற்று வருகின்றது.

TUT அன்னசேவை பற்றி இன்னும் பேசுவோம். இந்தப் பதிவுகளை பார்க்கும் போது நாம் இங்கே அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டும், கடந்து வந்த பாதை என்ற நிலையிலும் பார்க்க விரும்புகின்றோம். முதன் முதலாக கூடுவாஞ்சேரியில் சுமார் 10 உணவு பொட்டலங்கள் கொடுத்தோம். 

அடுத்து நம் அலுவலக நண்பர் திரு, சிவகுமார் அவர்களின் துணையுடன் வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்ன சேவை செய்து உள்ளோம். சுமார் 100 நபர்களுக்கு உணவு கொடுக்கும் பொருட்டு இந்த சேவை வேளச்சேரியில் தொடங்கி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வரை தொடரும். இது போல் சில மாதங்கள் அன்னசேவை தொடர்ந்துள்ளோம். இதற்கு நம்முடன் கரம் கோர்த்த அன்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நம்முடன் இணைந்த மலேஷியா அகத்திய அடியார் பெருமக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

அடுத்து நம்மால் கூடுவாஞ்சேரியில் இருந்து வேளச்சேரி வரை சென்று வர முடியவில்லை. கூடுவாஞ்சேரி வந்து ஓராண்டு கழித்து நமக்கு வள்ளலார் கோயில் பற்றி தெரிந்தது. பின்னர் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதியம் அன்னசேவை செய்து வந்தோம். இந்த சேவை மேலும் தொடர வேண்டும் இனி மாதம் தோறும் அமாவாசை அன்னதானம் என்று செய்து வந்தோம். அமாவாசை அன்னதானம் இன்று வரை நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது. அடுத்து அமாவாசை அன்னதானம் மற்றொரு வழியில் தன்னை பெருக்கி கொண்டது. ஆம். நம் தளத்தின் மூலம் நடைபெற்று வரும் மோட்ச தீப வழிபாடு  மூலம் அன்று சுமார் 100 பேருக்கு உணவு வழங்கி வருகின்றோம். நமக்கே இது ஆச்சர்யமாக உள்ளது? இந்த அமாவாசை மோட்ச தீப அன்னசேவைக்கு சுமார் ரூ.3000 ஆகும். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தொண்டு நடைபெற்று வருகின்றது.

இப்படியே தொடர்ந்த அன்னதானம் மேலும் பல தன்னலமற்ற சேவை அமைப்புகளோடு இணைந்து நடந்து வருகின்றது. கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில், மதுரை ஸ்ரீ அகத்தியர் இறையருள் மன்றம், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என தொடர்ந்து வருகின்றது. இங்கு சிலவற்றை தான் குறிப்பிட்டு கூறியுள்ளோம். இந்த 2020 ஆம் ஆண்டு அன்னசேவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செய்தோம். நம் தளத்தின் ஆணிவேராக அன்னசேவை தான் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இது தவிர சில நாட்களில் சிறப்பு அன்னதான சேவையும் நம் தளம் சார்பில் நடைபெறும்.குறிப்பாக ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் இது போன்ற சேவை தொடரும்.

ஆங்..சொல்ல மறந்து விட்டோம். சென்ற 2019 ஆண்டில் புரட்டாசி அமாவாசை ஒட்டி நம் தளம் சார்பில் மகாளயபட்ச நாட்கள் முழுதும் இது போன்ற சேவை செய்தோம். 
இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு அன்னசேவையின் போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.

எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.

வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,

அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-
குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு  - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

குருவருளால் ஏழாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2023/04/tut.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 12 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-12.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-11.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 10 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-10.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 9 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-9.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-8.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

No comments:

Post a Comment