"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, April 27, 2026

சித்தன் அருள் - 1859 - அன்புடன் அகத்தியர் - கருவூரார் சித்தர்! - 29.04.2026

                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்....இறைவா..அனைத்தும் நீயே..

                                     சர்வம் சிவார்ப்பணம்...






வணக்கம் அடியவர்களே! 

8/5/2025 என்று மகாராஷ்ட்ரா மாநிலம்  நஸ்தங்பூர் சனி மகாராஜ் ஆலயத்தில் கரூவூர் சித்தர் சுவடியில் வந்து வாக்குரைத்தார். 

முழு வாக்கும் விரைவில் வெளிவரும். 

தனது வாக்கின் இடையே நாளை கரூரில்.. அதாவது கருவூரில் அவருடைய தலத்தில்... சித்த பெருமக்கள் வருவார்கள் என்பதை வாக்கில் தெரிவித்தார். வருகின்ற அனைவருக்கும் ஆசிகள் உண்டு என்று கூறியிருக்கின்றார் அந்த வாக்கினை மட்டும் தற்பொழுது அவசர உத்தரவாக தருகின்றோம். 

""""நிச்சயம் அதாவது பின் அறிந்தும் இதை தன்... நாளைய பொழுதில் நிச்சயம்...... (29/04/2026)

பின் அறிந்தும் என்னுடைய தலத்திற்கு... அனைவரும் வருவார்கள் சித்தர்கள்... தேவாதி தேவர்களும் கூட வருவார்கள்... நிச்சயம் இந்திரனும் வருவான்.... ஆசிர்வாதங்கள் அனைவருக்கும்... ஆசிர்வாதங்கள் பின் கொடுப்பார்கள். 

நிச்சயம் அறிந்தும் அதாவது பின் கருவூரிலே தங்கி இருக்கின்றேன்.. அழகாகவே... பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... அநியாயம் அக்கிரமங்களை எல்லாம். 

நிச்சயம் வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன். 

நிச்சயம் அவ்வாறு ஆசிகள் கொடுத்தால்... நிச்சயம் அறிந்தும் மனிதன் திருந்துவான் என்று பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். 

நிச்சயம் அதாவது பின் நாளைய  பொழுதிலும்... அங்கு வந்து நிச்சயம் அனைவரும் பின் அதாவது பின் ஒரு ஒளி வட்டமாக... நிச்சயம் தன்னில் பின் அனைவருக்குமே ஆசிகளாகவே நிச்சயம் சித்தர்கள் கொடுப்பார்கள்.... 

என்று தனது வாக்கின் உள்ளே கூறினார். 

அடியவர்கள் அனைவருக்கும் ஆசிகள் கொடுப்போம் என்று சொல்லி இருக்கின்றார் அதனால் முடிந்த அடியவர்கள் கருவூரில் சென்று வழிபாடு செய்து முன்னே செயல்களை செய்து முடிந்தால் அங்கு குருநாதர் கூறியபடி பானகம் நீர்மோர் வழங்கி புண்ணிய செயல்களை செய்து சித்தர்களின் ஆசிகள் பெற்று வரலாம்.

கரூவூர் சித்தர் சன்னதி, அருள்மிகு கல்யாண பசுபதேஸ்வரர் திருக்கோயில், கரூர், தமிழ்நாடு.


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment