இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்....இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
வணக்கம் அடியவர்களே!!!
நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையில் சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு
தேதி : 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், போளூர் சாலை, வேங்கிக்கால், திருவண்ணாமலை.
பேருந்து
வழித்தடம் : திருவண்ணாமலை பேருந்து நிலையம் to மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
டவுன் பஸ் அல்லது கலசபாக்கம் டவுன் பஸ் ஏறி EB ஸ்டாப்பில் இறங்கவும்,
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் மண்டபத்தை
அடையலாம்.
உலக
நன்மைக்காகவும் தர்மங்கள் தலைநிமிர்ந்து நிற்கவும் ஈசனார் கட்டளைப்படி,
அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதிகாலை
முதல் உலக நல வேள்வி (யாகம்), நவகிரக தீபவழிபாடு, கோளறு பதிகம் மற்றும்
சிவபுராணம் பாராயணம் மற்றும் அகத்தியர் பெருமான் மற்றும் சித்தர்களின்
கருணையால் மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கு ஜீவநாடி வாக்கு உபதேசங்கள் என
தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
அனைவரும் வருக!!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே...!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!



.jpg)
No comments:
Post a Comment