"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 8, 2025

சித்தன் அருள் - 1948 - அன்புடன் அகத்தியர் - பிருகு மகரிஷி வாக்கு!

                                                             இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


வணக்கம்  அடியவர்களே!!!

சமீபத்தில் பிருகு மகரிஷி தன் பக்தர்களுக்கு உரைத்த வாக்கில்.. பொதுவான வாக்குகளும் கொடுத்திருக்கின்றார். 

அனைவரும் இதை கடைப்பிடிப்பது அவசியம்.






 

இருளகற்ற ஓடோடி வா!! இறைவா!! இறைவா உன்னை எண்ணியே வாக்குகள் ஈகின்றேனே பிருகானவனே

அறிந்தும் அறியாமலும் எண்ணற்ற பல தவறுகள் பிறவிகளில் கூட...

இதை உணர்ந்து நினைத்து அருள் ஈபவன் ... அகத்தியனே!!

இதனால் பல மாற்றங்களை நிச்சயம்.. அகத்தியன் எடுத்து வருவான். 

அவ்வாறாக.. எடுத்து வந்து எடுத்து வந்து சில பக்குவங்களை.. கொடுக்கின்ற பொழுதே நன்மைகள் நடக்கும். 

நடக்கும் அறிந்தும் இவை தன்.. உணராவிடிலும் நிச்சயம்.. உணரத்தான் வேண்டும். 

வேண்டும்!! என்பதனை பின் வேண்டி கேட்டாலும்.. நிச்சயம் அறிந்தும்.. இவை என்று பின் வேண்டாததை கேட்டாலும்.. அதை தன் நிச்சயம் அறிந்தும்.. உண்மைதனை பல கோடியாய்.. புரிந்து வைப்பவன் இறைவனே. 

இதை தன் உத்தமனாகவே இறைவன் பக்குவங்களாகவே பெற்று வழிநடத்தி எண்ணற்ற கோடி ஆசிகளை.. ஆசிகளை இதற்கு சமமான பின் விதித்தாலும் அறிந்தும்.. இவை உண்மைகளை.. புரிந்து கொண்டோர் எவர்????

எவர் என்ற போதிலும் வாழ்க்கையில் முட்டுக்கட்டைகள் பல பல.

 ஏன் எதற்கு.. என்று புரியாது..?? என்று பார்த்தாலும்.. நிச்சயம் ஆழ்ந்த சிந்தனையோடு இன்னும்.. இறை பக்திக்குள் நுழைய வேண்டும்!!!
வேண்டுமடா பிள்ளைகளே அறிந்தும் இதை தன் அப்பொழுது இன்னும்.. சித்தர்கள் வந்து பின் வாக்குகள் செப்புகின்ற பொழுது புரியுமடா.

புரிந்து அருள் ஈந்து அதை உணர்த்தி.. நல் நடத்தையில் பின் இட்டு .. பின் வந்தால் தான்... பக்குவங்களாக பக்குவங்களாகவே...

நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம் அவை சொன்னான் இவை சொன்னான்.. என்றெல்லாம். 

ஆனால் மனதில் பின் நிற்பதோ சில. சில விஷயங்கள்..

பின். அதாவது சில சில விஷயங்கள் என்றாலும்... அவை தன் பாவம் பொறுத்தே அமைகின்றது.

பல விஷயங்கள்.. நன்கு உணர்ந்து கொண்டாலே புண்ணிய விஷயங்கள்..

ஒரு வரியில்  அனைத்தும் பின் முடித்து விடுவோம் யாங்கள்.

ஆனாலும் அதற்கு நீங்கள் தேடி அலைய வேண்டும். 

தேடினாலும் கிட்டாது உண்மை நிலையை கூட. 

அப்படி இருக்கையில் உங்களுக்கு பக்குவங்கள்.. போதவில்லை. 

அறிந்தும் கோள்களும் கூட.. கெட்டியாக பிடித்துக் கொண்டு வாட்டும்... வதைக்கும் சில நேரங்களில்...

அறிந்தும் இவை தன் உணராத... உணர்ந்து கொள்ளும்.. சில வருத்தங்கள் வந்தாலும் அதற்குள்ளே... நிச்சயம் அனைத்தும் பின் மறந்து போகுமடா..

போகுமடா.. அது எல்லையில்லா துன்பங்கள் வந்தாலும்.. அறிந்தும் பின் நிச்சயம்... எல்லையில்லா இன்பங்கள் வந்துவிடுமடா...

ஆனாலும் இதனையும் கூட அன்றின்றி என்றென்றி.. என்று நிற்க ஏது.. தெய்வமாக வந்து நின்று.. அதனை பின் கண்டாலே.. போதுமடா. 

கண்டுணர ஆளில்லை என்பதற்கு இணங்க.. ஆட்டங்கள் மேலடா. 

அப்பப்பா இதுதான் மனிதனுடைய இயல்பே.. 


இதனால் தான் இன்னும் பக்குவங்கள் வேண்டும்.. உங்களுக்கு..

அறிந்தும் இவை என்று யான் அறிய பின் சொல்கின்றேனே...

அறிந்தும் இதையென்று புரிய இதனால்தான்... ஆழ்ந்த சிந்தனையுடனே செல்ல வேண்டும்.பின் குழந்தைகளே!!

அறிந்தும். அதாவது இவை என்று அறியாத வகையிலும் உண்டா?? உண்டு என்பதை நினைத்து விட்டால்... போகுது போகின்ற பாதை ஏதடா??? மறைத்து நின்று வந்து நின்று... எதிரொலித்து அரும் பாடுபட்டு... அப்பொருள் வந்து நின்றது ஏதடா???
பின் கண்ணிமைக்கும் நேரத்தில் பின் எங்கே சென்றதடா??

இது என்ன???

அறிந்தும் போதுமடா !!இதற்கு பதில்... உயிர்.

அறிந்தது ஒன்று... அறியாது எங்கு? மனம்....ஏது நின்று அறிந்தும்... இவை தன் மனம் உணராவிடிலும்.. நிச்சயம் இதை தன் பரிபூரணமாக ஈவது ஏது?...

 பக்தி மார்க்கத்திலா??..

 இன்னும் இதை அறிந்து பின்.. சொல்வது மனிதனின் பின்.. மார்க்கத்திலா????

மனிதனின் மார்க்கத்தில்.. இருக்கின்ற பொழுது பக்தி இங்கு செயல்படாது நிற்கும். 

அறிந்தும் இதன் தன்மை உணர.. பின் ஆள் இல்லை என்பதற்கு இணங்கவே... நிச்சயம் எவ்வாறாகவே.. நின்று நின்று.

இதனால் நிச்சயம் ஆசிகள் தருவதோடு...

ஒவ்வொரு மனதையும் ஆராய்ந்து இருக்கின்றேன் இன்னும் எதைப் பொறுத்து..??? இன்னும் குழப்பங்கள் ஆகவே...

ஏன் இந்த குழப்பங்கள்??
என்றெல்லாம் அறிந்தும் பின் அதாவது உண்மைதனை உணர்த்துவதற்கும் அறிந்தும்.. இவையில்லாமல் போனதே... என்றெல்லாம் தெளிவாக..

 அறிந்தும் இதைத் தன் அதாவது பின் வந்து வந்து தாக்குவது ஏது?? 

ஆனாலும்.. எங்கெங்கோ மனதுகள்.. எக் குழப்பங்கள் எவ்வாறாகவே...

எதை ?எவை? என்று நிறை குறை ஏது எவை என்று அறிந்து... ஆனாலும் சித்தர்களின் ஆசிகள் இருக்கின்ற பொழுது இன்னும்.. குழப்பங்கள் ஆகி குழப்பங்களாகி... சென்றால்தான் ஒரு பதிலே கிடைக்கும். 

எதை என்று நிரூபிக்க இதனால்.. பதில் இங்கு உயிர் இதற்கு தீர்வு.. தேடி அலையுங்கள்.

இதை என்று அறிவித்த நிலையில் பின்.. தெரிவித்த நிலையில் தெரிந்து.. பொருள்பட எங்களுடைய ஆசிகள்.
பரிபூரணம். 

ஒவ்வொருவரிடத்திலும் பூதங்கள் ஒளிந்துள்ளது 
யான் கண்டேன். 

அறிந்தும் இவை தன் உணர ஆனாலும்.... இவை எவ்வாறு பின் நிச்சயம்... பூதம் என்பது என்றால்.. மாயையே!!
மாயையை நினைத்துக் கொண்டு.

மண் பொன் பொருள். 
பெண். 

இதை இவ் பூதத்தை முதலில் தூக்கி எறிய வேண்டும். 
அறிந்தும் இதை தன் நினைத்தார் போல் நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய..

ஆனாலும் இவ் பூதம் கலியுகத்தில் தானாகவே வந்து நிச்சயம் ஏறிக்கொள்ளும்  ஒவ்வொருவனிடத்திலும் கூட.

அதை அறிந்து இறையருள்கள் பலமாக.. சேர்த்திருப்பார்கள் அறிந்தும்... இவை என்று புரியாமல் இருக்க...

ஆனால் கலியுகத்தில் இவ் பூதம்.. பின் நிச்சயம்.. இவை என்று அறியாத சில.. மன மாற்றங்கள் !!

பின் 

(அவர்களுக்கு வாழ்க்கை)
பின் நல்லதாகவே... போய்க்கொண்டிருக்கும் 

(ஆனால் கலிபுருஷன் வரும் பொழுது பிரச்சனைகள் குழப்பங்கள்)

(பரிபூரணமாக பக்தி செலுத்தி இறையருளை பெற்றுக்கொண்டு வாழ்க்கைப் பாதை நன்றாக நடந்து கொண்டிருக்கும் அப்போது கலியின் வினையால் மாய பூதங்கள்)

ஆனால் அவ் பூதம் நிச்சயம் இவனை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று. 

ஏனென்றால் கலியுகத்தில் கெடுதல் நடக்க வேண்டும் என்ற விதி இருக்கின்ற பொழுது... ஏறிவிடும். 

இதற்கு என்ன செய்வீர்கள் நீங்கள்??

இதனால்தான்.. எங்கள் பாதை நிச்சயம் பின்.. அவை தன்.. வேண்டும்!! அவை தன் சாகடிக்க வேண்டும்....

(உங்களை) சாகடிப்பதையே சாகடிக்க வேண்டும்.

அறிந்தும் உண்மைதனை புரிந்தும் இதனால் எத்தனை?? எத்தனை?? பிறவிகளில் கூட... எதை என்று!!

ஆனாலும் உண்மைதனை கூட புரியும் அளவிற்கும் கூட சந்தர்ப்பங்கள்... இன்னும் உங்களுக்கு வருகின்ற பொழுது... சித்தர்களும் வாக்குகள் செப்புகின்ற பொழுது !!

இவ்வாறாக நிச்சயம் அறிந்தும் புரிந்தும் இன்னும் ஞானங்கள் ஏற்படும். 

இவை அறிந்து புரிந்து இதனால் அறிந்தும் புரிந்தும் தெளிந்தும் பெற்றும் உண்மைதனை உணர்ந்தும்.... பல கோடிகளாக குவிக்கப்பட்டு இருக்கும் பாவத்தை ஒழித்தும்.. மீண்டு நிச்சயம் இவை புரிந்து.. கீழ்நோக்கி விட்டு அறிந்தும்.. அதாவது எதை என்று.. எவை புரிய.. நிச்சயம் கீழ்நோக்கி பின் அமுக்கி... புண்ணியத்தை மேல் நோக்கினால் மட்டுமே..

உண்டு பின் உயர்வுகள்... பின் மனக்குழப்பங்களும் போய்விடும்...

அதை சித்தர்கள் செய்வார்கள் வரும் காலத்தில். 

இன்னும் மாயைகள் ஒளிந்து இருக்கின்றது 

அதனை நிச்சயம் சித்தர்கள் அடித்து நொறுக்குகின்ற பொழுது உங்களுக்கு பின் மனக்குழப்பங்கள் வரும். 

ஆனாலும் நிச்சயம் நில்லுங்கள் அழகாகவே. 

ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு மாயை.

கண்களில் பார்த்தால் பின் பெண் என்கின்ற மாயை.

தலையில் பார்த்தால் அறிந்தும் பணம் என்ற மாயை. 

அறிந்தும் வயிற்றில் பார்த்தால்.. பின் நிலம் என்ற மாயை. 

இன்னும் இன்னும் அறிந்தும் பின் முதுகில் பார்த்தால் இன்னும் அதாவது பின் பொழிய வேண்டும் ஸ்வர்ணங்கள்..(தங்க மழை) என்ற மாயை. 

இன்னும் இன்னும் எங்கெங்கு.. இதை இதற்கெல்லாம் பின் எங்கு? ஆசைபட்டு எதை என்று செல்கின்றீர்களோ???

அங்கெல்லாம் பலமாக.. அதாவது எதை என்று.. புரிந்து கொள்ள !!!

எங்கு ? தலையில் சொன்னேனே!!! (பணத்தாசை) அதற்கு... முதலில் ஆசைப்பட்டாலே... எதையும் உணர முடியாது.

இவையெல்லாம் பின் எப்படி விளக்க வேண்டும்??... என்பவை எல்லாம்!!

கண்.. அதாவது தலை இன்னும்.. அறிந்தும் இவையெல்லாம் நிச்சயம்.. செப்புகின்ற பொழுது.. அப்பொழுது உங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும். 
கிடைக்குமடா குழந்தைகளா...

தெரியாமல் செய்கின்றீர்கள் அல்லவா!!

யான் தெரிந்து சொல்கின்றேன்


இவையென்று பின் ஒவ்வொன்றாக செப்பி செப்பி... ஆனாலும் அறிந்தும் கூட..

இதை இவ்வாறாகவே இவ் அழுக்குகள் இருந்தால்... நிச்சயம் மன குழப்பங்கள் ஆகவே... வாழ்க்கையில் விரக்தி தான் ஏற்படும். 

அனைத்தும் மனிதனுடைய பொறுப்புகள் தான் இது.

நீங்களும் சொல்லலாம் இறைவன் படைத்தான் அல்லவா.. என்று 

ஆனால் இறைவன் அழகாகவே. (படைத்தான்)

அதாவது நிச்சயம் இவையெல்லாம்.. தானாகவே..

ஆனாலும் இன்னும் உங்களுக்கு விளக்கங்கள் போதவில்லை... இன்னும் விளக்கங்கள் தருகின்ற பொழுது.. அறிவீர்களாக நீங்கள் !!

இன்னும் அதாவது நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்... இன்னும் பல வகையான வாக்குகள் பின் வருகின்ற பொழுது தான் உண்மை நிலை தெரியும்.


இல்லையென்றால் நிச்சயம் மீண்டும் மீண்டும்... பின் வந்து வந்து உங்கள் உடம்பில் மாயைகள் இருக்கின்ற பொழுது மீண்டும் சந்தேகம்தான்... இறைவன் மீதும் கூட. 

அறிந்தும் இவை என்று புரிய இதனால்.. சனீஸ்வரன் உங்களை பக்குவம்.. அடைய வைத்து நிச்சயம் ஏற்றங்கள் பல பல. 

எங்களால் கொடுக்க முடியாததா என்ன???

ஆனாலும் பின் பக்குவங்கள் வேண்டுமடா.

அறிந்தும் சிறு குழந்தைகள் போல இப்பொழுதும்... ஏதாவது குழப்பிக் கொண்டே வாழ்ந்து வருகின்றீர்கள். 

ஏன்? எதற்கு ? என்று சொல்லி அறிந்தும் அகத்தியன் பலவகையிலும் கூட..

சந்திரன் பின் நிச்சயம் தன் கோடிலிருந்து..(சுற்றுவட்ட பாதையில் இருந்து) நீங்குகின்றது... இதனால் அனைவருக்குமே.. குழப்பங்கள் தான் உலகத்தில்.. அனைவருக்குமே...

(சந்திரனுடைய நிலைமை குறித்து குருநாதர் அகத்தியர் பெருமான் ஏற்கனவே வாக்குகளில் உரைத்தெடுக்கின்றார்.

சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி. இவ் வாக்கினை மீண்டும் படிக்கும் பொழுது மேலும் புரியும்.

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் அவை மட்டுமில்லாமல் சந்திரனின் துகள்கள் அப்பனே அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய பின் சாதாரணமாகவே அப்பனே அறிந்தும் கூட பின்... அதனுள்ளே ஒரு கோள் அப்பனே சந்திரனை தாக்கி அப்பனே ஆனாலும் அப்பனே அதிலுள்ள துகள்கள் அப்பனே பின் பரவி விட்டன என்பேன் அப்பனே 

அதாவது அப்பனே மனிதனை தாக்கவே!!! அப்பனே இன்னும் இன்னும் சிறிது தான் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே 

அதற்கே!!!! இவ்வளவு மனக்குழப்பங்கள் என்பேன் அப்பனே!!! அதாவது கஷ்டங்கள் என்பேன் அப்பனே 

ஆனாலும் இன்னும் அவை தன் (சந்திரனின் துகள்கள்) உதிர்ந்து விட்டால் அப்பனே மனிதன் பைத்தியமாக போய்விடுவான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அனைவருமே பைத்தியக்காரனாக ஆகிவிடுவார்கள் என்பேன் அப்பனே)

சந்திரனுக்கு இவ்வாறாக போக்குவதற்கு... அழகாக பின்... வெள்ளை தன்னில் கூட அறிந்தும்... சரியாக நிச்சயம் பின்... அங்கங்கு பல வகையிலும் கூட.. உணவு பண்டங்களை இட்டு அதாவது இனிப்பு பண்டங்களை இட்டு... சரியாகவே சந்திரனின் பின் மந்திரங்களை ஜெபிக்க ஜெபிக்க நிச்சயம்... இவையெல்லாம் அதாவது குழப்பங்கள் எல்லாம்... சிறுக சிறுக போகுமடா. 

உட்காருவதும் நிச்சயம் பின்  அவ் வெள்ளையே!! (துணி)

அடியவர் ஒருவர் பிருகு மகரிஷியிடம் சந்திரனுக்கு நிறைய காயத்ரி மந்திரங்கள் உள்ளன அதில் எதை கூறி ஜெபம் செய்வது? என்று கேட்டதற்கு

அறிந்தும் சந்திரனுக்கு உரியது எவையோ அவை.. அனைத்துமே பொருந்தும்.

(அதாவது சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரங்கள் அனைத்தும் அவரைச் சாரும் அனைத்தும் பொருந்தும்.. என பிருகு மகரிஷி கூறி இருக்கின்றார்.

(சந்திர காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷரபுத்ராய வித்மஹே அமிர்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

அம்ருதேசாய வித்மஹே ராத்ரிஞ்சராய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதாகராய வித்மஹே மஹாஓஷதீஸாய தீமஹி தன்னோ: சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே நிதீச்வராய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்)

அறிந்தும் இவை தன் உணர்ந்தும் இதனால்.. நன்மைகள் பெருகும். 

இவை தன் உணர்ந்து அறிந்து... இவை தன் உணராத வகையிலும் கூட இருந்தாலும்... உணர வைத்து உணர வைத்து. 

இதனால் நாள்தோறும் சிறிது நேரங்களை.. நிச்சயம் மயமாக்கி அறிந்தும்... 

(அனுதினமும் நேரம் ஒதுக்கி)

இவை என்று அறிய.. விநாயக பெருமானுக்கு நன்றாக பின்... பிடித்த அதாவது.. அருந்துவது அவை தன் நிச்சயம் பின் நன் நீராகவே.. நிச்சயம் பின் நீங்களும் அருந்தி வாருங்கள்... நிச்சயம் ஞானங்கள் அதிலிருந்தே கிடைக்கும்.

(அருகம்புல் சாறு) 

மறைமுகமாக (அருகம்புல்) இவை தன் கேதுவின் பின் நிச்சயம்.. அரசன் இதுவே. 

அறிந்தும் இவை தன் அறிய அனைவருக்குமே... நிச்சயம் கேதுவானவன் அதிக இப்பொழுது உச்சம். 

இன்னொன்றும் சொல்கின்றேன் அப்பொழுது... நீங்கள் வைத்துள்ள அதாவது... இன்னும் கூட அழகாகவே பின்... சொன்னேனே வெள்ளை தன்னில் கூட அழகாக... அதில் தன்னில் கூட பின் மஞ்சளை பின் சரியான மஞ்சளை இட்டு அதை தன்... பிள்ளையோனாகவே எண்ணி...(மஞ்சளில் பிள்ளையார் பிடித்து).. அவனுக்கும் பல அறிந்தும் பின்.. நிச்சயம் மந்திரங்கள் ஓதி... அதில் இருக்கும் சிறிதளவு கீறி... அறிந்தும் இதை தன் நீரில்... பின் துளசியுடன்.. வில்வத்துடன் சேர்க்க.. சேர்த்து அறிந்து வர நலமாகும் இவைதன் பிரச்சனைகள். 

(இதனுடன் சந்திரனுடைய காயத்ரி மந்திரங்களை முடிந்த வரை குறைந்தபட்சம் 108 முறையாவது வெள்ளைத் துணியில் அமர்ந்து தியானம் போல சந்திர காயத்ரி  ஜெபம் செய்ய வேண்டும்)

(கேதுவின் அரசனான அருகம்புல் சாறை அருந்தி வரவேண்டும்)

(வெள்ளைத் துணியில் வீட்டில் பூஜையறையில் இருக்கும் பிள்ளையாரையும் வைத்து... தனியாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையார் மந்திரங்கள் விநாயகர் அகவல் ஓதி அதன் பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாரில் இருந்து சிறிதளவு மஞ்சளை எடுத்து நீரில் வில்வத்துடன் துளசியுடன் கலந்து குடித்து வரவேண்டும்)

சித்தன் அருள் 1947 காசியில் குருநாதர் அகத்தியர் பெருமான்..... இதயத்தில் நடுவில் ஒரு துகள் உள்ளது அதை எரிய வைக்க வேண்டும் அதை எரிய வைத்து விட்டால் மனிதர்களுக்கு துன்பம் வராது நோய்களும் வராது என்று.... குருநாதர் கூறியிருக்கின்றார் 

இறைவனுக்கு ஏன் விளக்கு ஏற்றுகின்றோம் தீபங்கள் ஏன் ஏற்ற சொல்கின்றோம் என்றால் உங்கள் உடம்பில் இப்படித்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று அர்த்தம் என்று மேலும் மனிதர்கள் நம் உடம்பிற்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி குருநாதர் கூறி இருக்கின்றார் அந்த வாக்கினை மேலும் மீண்டும் படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ள முடியும்)

இதைத் தன் உணர நிச்சயம்... உங்கள் மனதில் பின் எப்படி.. விளக்கு அழகாக எரிய வைப்பீர்கள் என்பதையெல்லாம்.. சித்தர்கள் செப்புவார்கள்.உங்களுக்கு!!!

தயாரித்து விட்டான் அகத்தியன். 

ஆனால்.. அதை பின் நிச்சயம்.. பின் நெருப்பு ஊட்டுகின்ற பொழுது மாயை..  வந்து அனைத்திலும் தடுக்கின்றதல்லவா!!

அவை புகுத்துபவன்... கலியவன். 

(கலி புருஷன்)

அதை விலக்குவது யாங்களே!!!

நிச்சயம் இக்கலி யுகத்தில் கலியவன் சரியாகவே.. புரிந்து வைத்திருக்கின்றான். 

மாயையை மனிதனுக்கு இட்டால் பின் நிச்சயம்.. அதை வெல்ல முடியாது...

ஏனென்றால் கலியனை வெல்லக் கூடாது என்று!!

(கலிபுருஷன் யான் தான் இங்கு ராஜா மனிதர்களுக்கு ஆசைகள் என மாயையை கொடுத்து விட்டால் மனிதர்களால் தன்னை வெல்ல முடியாது என்று )

நிச்சயம் அறிந்தும் இதை கூட நிச்சயம் கருணை வடிவான... ஈசனே... இவந்தன் தவத்திற்கு.. கொடுத்து விட்டான். 

(கலிபுருஷன் தவம் இருந்து ஈசனிடம் வரம் வாங்கி விட்டார் ஈசனும் கருணையோடு கலி புருஷனுக்கு வரம் தந்து விட்டார் ஏனென்றால் இதைப் பற்றி ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார் கலியுகத்தில் கலியின் ஆட்டம் தான் அதிகம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு சக்தி அந்த யுகத்தினை இயக்கும் கலியுகத்தில் கலியின் சக்தி அதாவது மாயையின் சக்தி அனைவரையும் இயக்குகின்றது)

ஈசனும் நினைத்துக் கொண்டிருக்கின்றான்..

சற்றுப் பொறுத்திருந்தால் அனைத்தும் விடிவெள்ளியாகும்.

அறிந்தும் இதனால் தான் இன்னும் பலமாக அதாவது நீங்கள் கேள்விகளை நிச்சயம் உங்கள்.. மனதிற்குள்ளே வையுங்கள்!!

நிச்சயம் அனைத்தும்.. ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக (வாக்குகளாக) வருகின்ற பொழுது.. புரியும் அனைத்தும். 

குற்றங்கள் இல்லை!!

அழகாக யான் சொல்லியதை எடுத்துக்காட்டுங்வ(பிருகு மகரிஷி சொன்னதை அனைவரும் செய்ய வேண்டும்

நிச்சயம் சித்தர்கள் அடுத்தடுத்த வாக்குகள் தெளிந்து புரிந்து வைப்பார்கள். 

அறிந்தும் புண்ணியங்கள் தேடிக் கொள்ளுங்கள்!! இன்னும்.. நிச்சயம் மீதி அறிந்தும்.. அறிந்தும் எவை என்று கூற நினைத்துக் கொண்டே இருங்கள்...
அம்மையை அறிந்தும் வடிவமாக !!

(பார்வதி அன்னையை நினைத்துக் கொண்டு புண்ணியம் செய்து கொண்டே இருங்கள்)

பின் இவ்வாறாகவே... சில புண்ணியங்கள் செய்தால் நிச்சயம்.. பின் தானாகவே சித்தர்கள் வந்து வாக்குகள்.. செப்புவார்கள்..

இதை சரியாகவே... புண்ணியங்கள்.. காலங்கள் புண்ணியங்கள்  சம்பாதிக்கும் நேரம் இது.

அழகாக எம்முடைய ஆசிகள்.. இன்னும் வாக்குகள் பரப்புகின்ற பொழுது புரியும்.

இவை என்று புரிய இதை என்று அறிய நிச்சயம் எவை என்று அறிய.. எவ் நேரம் என்றெல்லாம் நிச்சயம் யாங்கள் .... இல்லை.

(எங்களுக்கு காலம் நேரம் சூழ்நிலை எதுவும் கிடையாது யாங்கள் நினைத்த நேரத்தில் வந்து வாக்குகள் செப்புவோம்)

அடியவருடைய கேள்விக்கு பிருகு மகரிஷி உரைத்த வாக்கு

குருவே கலிபுருஷனுக்கு அவருடைய பக்தி தவத்தின் வலிமையாக ஈசன் வரம் தந்து விட்டார்.....

பக்தர்களாகிய நாங்களும் பக்தியை செலுத்திக் கொண்டே இருக்கின்றோம் அனைவருடைய வாழ்க்கையும் எப்பொழுது மாறும்????

பிருகு மகரிஷி.

அறிந்தும் எவை என்று புரிய... எவை மாற வேண்டும்???

அனைத்தும் மாற்றம் அடைய செய்து விட்டான் அகத்தியனே!!

மாற வேண்டும் மாற வேண்டும் என்று இப்படியே இருந்தால்.. வாயில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்..

மாறிவிட்டது என்று சொல்லுங்கள் அனைத்தும் மாறும்!!

மறந்துவிடாதீர்கள் எங்கள் பின்னே தான் வந்து கொண்டே இருக்கின்றீர்கள்... உங்களுக்கே இப்படி என்றால்????

மற்றவர்களை எண்ணிப் பாருங்கள்!!!

(சித்தர்கள் வழியில் செல்பவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்றால் பக்தியை சரியாக கடைப்பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்)

அறிந்தும் நீங்களும் சொல்லலாம்!!

உங்கள் பின்னால் வராதவர்கள் எல்லாம்..(சித்தர்களைப் பின்பற்றி வராதவர்கள்) நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்று...

ஆனால் அவர்களுக்கு வரப்போவது..?? என்னவென்று??? நிச்சயம் யாங்களே உணர்வோம்.

இவை என்று அறிந்து புரிந்துகொண்டு நடக்க நன்று!!!

அடியவர்... குருவே  இதை புரிந்து கொள்வதற்கு புத்தியும் அறிவையும் தாருங்கள்!!!

எதை இதை என்று யாம் அறிவோம்!! இதை நீங்கள் கேட்பீர்கள் என்று...

யாமே முன் உரைத்தோமே... சந்திரன் நிலையை பற்றி..

இதை ஏன் உங்கள் மனதிற்கு படவில்லை????

அடியவர் 

குருவே மன குழப்பங்கள் அதிகமானதால் புரிந்து கொள்ளும் சக்திகள் எங்களுக்கு குறைவு சக்தி வேண்டும்!! புத்தி வேண்டும்.

இதை சொல்லவே!!! இதை தெரிவித்துக் கொண்டே வருகின்றோமே!!!

(ஒவ்வொன்றாக உங்களுக்கு எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை வாக்குகளில் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோமே)

அடியவர்  குருவே எவ்வளவு வணங்கினாலும் பக்தியை நாங்கள் செலுத்தினாலும் மனம் குழப்பங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது

பிருகு மகரிஷி:

அறிந்தும் இப்படித்தான்.. சித்தன் நிலை பைத்திய நிலையே.... ஆனாலும் அறிந்து உண்மை நிலையை தெரிந்து கொண்டால்.. மட்டுமே!!

(உண்மை பொருளை கண்டறிய வேண்டும்)

முதலில் இருந்தே எடுத்து வந்தேன்!! நீங்களும் முதலில் இருந்தே வருகின்றீர்களா என்ன????

அனைத்து சித்தர்களும் வெவ்வேறு கருத்துகளாக (வாக்குகளாக) வருகின்ற பொழுது... அனைத்திலும் கடைசியில் பார்த்தால் ஒன்றே!!!


ஆனாலும் நீங்கள் தான் குழப்பிக் கொள்வீர்கள்.. பின் அங்கு அப்படி இங்கு இப்படி... எங்கு ஏது எவை என்று.. அறிய!!!

(அனைத்து சித்தர்களின் வாக்குகளும் ஒரே கருத்தை ஒரே உபதேசத்தை வலியுறுத்தும்)

குழப்பங்கள் அறிந்தும் புரிந்தும் அறிய... சரியான வழியிலே நிச்சயம் அகத்தியன் சொல்லியிருந்தாலும்.. அதைக் கூட தட்டிக் கழிக்கும்... பாவங்கள்!!

(குருநாதர் அகத்தியப் பெருமான் வழிமுறைகளை சொன்னாலும் அதை புரிந்து கொள்வதற்கும் செய்வதற்கும் தடுக்க பார்க்கும் மனிதருடைய பாவங்கள்) 

அடியவர் குருவே இதிலிருந்து மீள்வதற்கு சக்தியை கொடுங்கள். 

பிருகு மகரிஷி

அப்பப்பா!!!!!! அறிந்தும் அனைத்தும் தெரிவித்து விட்டேன்!!

இதை எவை என்று அறிவிக்க!!! நிச்சயம்.

உங்கள் பாதை ஏன்? எதற்கு???.. எதை .. எவற்றிற்காக???வந்தீர்கள் ??? இதையெல்லாம் தெரிந்து கொண்டால் நிச்சயம்... இவையெல்லாம் கேட்கவே மாட்டீர்கள்.. தயங்குவீர்கள். 

அறிந்தும் இதனால் இதை அறிந்து தெளிவு பெற இன்னும் மாற்றங்கள்.. நடந்த வண்ணம் !!

அறிந்தும்... எப்படியும் எங்கள் ஆசிகளோடும் உங்களை காக்குகின்றோம் அறிந்தும். 

இன்னும் தத்துவங்கள் என்னனென்ன?? ஏது?? என்று... சித்தர்கள் பின் வாக்குகள் ஈகின்ற பொழுது.. அழகாக புரியும்... புரியும்படி அதை நடத்திக் கொண்டாலே... போதும் பின் குழப்பங்கள். 

குழப்பங்கள் குழப்பங்கள் பின் நீண்டு கொண்டே போனால்....அவ் குழப்பங்களே உங்களை கொன்றுவிடும்.

அறிந்தும் எதை என்று புரிந்தும்

நிச்சயம் பின் அனைத்திற்கும்... நல்லதே நல்லதே என்று சொல்லிக் கொண்டு போனாலே.... நல்லது நடக்கும் என்றெல்லாம் நிச்சயம்.

(நடப்பதெல்லாம் நல்லதற்கே என்று)

பாவத்தின் சம்பளம் என்பது குழப்பங்களே!!

அதனால் நிச்சயம் இன்னும் இன்னும் பின் இறைவன் கொடுத்திருக்கின்றான்... அதை வைத்து வாழ்ந்து வருவோம் என்று. 

(மனிதர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை இறைவன் கொடுத்த வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு பேராசைப்படாமல் அனைத்தும் இறைவனுடைய செயல் என்று நடக்க வேண்டும் இப்படிப்பட்ட எண்ணத்தில் இருந்தாலே நிச்சயம் வெற்றிகள் உண்டு என்று எண்ணிக் கொள்ள வேண்டும் இதனால் புண்ணியங்களும் ஏற்படும்)

நிச்சயம் வெற்றி உண்டு !!என்று எண்ணிக் கொண்டு சென்றாலே... புண்ணியம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

பாவம் செய்வதும்  நிச்சயம் பின் புண்ணியம் செய்வதும்... நிச்சயம் உங்களிடத்திலே..

சொல்லி அறிந்தேன்!!

என் செல்ல குழந்தை லட்சுமி தேவியின் அருளும் பரிபூரணமாக லட்சுமி தேவியின் இன்னும் பின் பரிபூரணமாக ஆசிகள் கிடைக்கும் பொழுது வந்து கொண்டே இருக்கும் சென்று கொண்டே இருக்கும் .. எதை என்று புரிய!!!

 (செல்வம் தன லாபம் பணம்)

அவ்வாறாக வந்து கொண்டே சென்று கொண்டே இருந்தால் நிச்சயம் பின் உங்களை எப்பொழுதும் பின் பாவம் அண்டாது!!!

 புண்ணியமே அண்டி கொண்டிருக்கும்.. நிச்சயம். பின் எவை என்று கூற

(பணங்கள்) பின் வந்து கொண்டே அதை சேர்த்துக் கொண்டே நிச்சயம் தன்னில் கூட. இருந்தால். நிச்சயம் எவ்வாறெல்லாம் உண்மைகள் என்றெல்லாம் .. அவை தன் ஒரு பூரணமாக நிச்சயம் பரிபூரணமாக நிச்சயம் ஒரு நாள்
நிச்சயம் பின் மருத்துவ செலவிற்காக இடவேண்டும்.. நிச்சயம் என்பதையெல்லாம் தெளிவுபடுத்தி நிச்சயம் பின் சித்தர்கள் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி!!!


(தனலட்சுமி என் அருளால் அனைவருக்கும் பண வரவு வரும் பொழுது பணம் வரும் போகும் அதை சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது கடைசியாக பெரிய மருத்துவச் செலவிற்கு வழி வகுத்து விடும்.. பணங்கள் வரும்பொழுது நேர்மையாக தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் தனலட்சுமி அருள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்)


ஏது எதை என்று புரிந்தும் உண்மை நிலையை அறிந்தும் நிச்சயம் பின் எவ்வாறு என்பதையெல்லாம் ஏன் உங்களுக்கு? செப்ப வந்தேன் என்பதையெல்லாம் நீங்கள் பிள்ளைகளே!!! அறிந்தும்!!!

இதனால் நிச்சயம் யாங்கள்... பாதுகாப்போம்!!!

ஆனாலும் அனுபவித்து... (தீர்க்க வேண்டும்) சித்தர் வழியில் வருபவர்களுக்கு அனுபவித்து தீர்க்க வேண்டும் ஏனென்றால் எவை பின் எப்பொழுது அவை சாபங்கள்... மீண்டும் வரக்கூடாது.
என்பதற்கிணங்க... அனுபவித்தே தீர்க்க வேண்டும்.

ஆனாலும் எங்கள் துணை !! அதை கடப்பதற்கு உங்களுக்கு தெரியாமலே!!! ஏதோ சில மனக்குழப்பங்களாகவே போய்விடும்.

நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக இல்லாவிடில் நிச்சயம் ... எவ்வாறெல்லாம்?? பின் கஷ்டங்கள் பட வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் ... நிச்சயம் பின் கலியுகத்தில்.. தெரிந்ததே.... தெரிந்த விஷயமே!!!!

இவ்வாறெல்லாம் நடப்பது.. நன்றன்று பின் பிறப்பது பிறப்பென்று நிச்சயம் பின் வந்தது வந்ததென்று... எவை என்றெல்லாம் நிச்சயம் பின் ... வகுப்பது பின் கழிப்பது.. பின் கூட்டுவது பின் பெருக்குவது.. எதை என்று எதை தீர்மானிப்பது?? என்றெல்லாம் பின் உடம்பிற்குள்ளே அனைத்தும் இருக்கின்றது..

ஒவ்வொரு நேரத்திலும் கூட்டுவது கழிப்பது பின் பெருக்குவது எதை என்றெல்லாம் நிச்சயம் அவையெல்லாம்.. நிச்சயம் இயங்குகின்ற பொழுது சரியாகவே நிச்சயம் உங்களுக்குள்ளே ஒளி தோன்றும்!!!

அவை தன் பரிசுத்தமான ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன் பிள்ளைகளே

பிள்ளைகளே நன்கு ஆராய்ந்து இதை உண்மைதனை பின் புரிந்து கொண்டு நிச்சயம் தன்னில் கூட வழி நடந்தால் நிச்சயம் அப்பொழுது கிட்டும் எதை என்று கூற சில யோகங்கள்...

ஆனாலும் எப்பொழுதும் எவை என்று கூற இன்னும் சித்தர்களை வணங்கி வணங்கி .. இப்பொழுது இவ்வாறாகவே குழப்பமாகி போய்க் கொண்டிருக்கின்றது... வாழ்க்கையின் தத்துவத்தை கூட உணராமல் .. நிச்சயம் இவ்வாறு என்பதையெல்லாம் .. புரியாமல் நிச்சயம் வீழ்ந்து நிச்சயம் தாழ்ந்து தாழ்ந்து நிச்சய நிச்சயம் மீண்டும் குழப்பங்களாக ... எவ்வாறு வாழ்வது??? எதை என்று தீர்மானித்து!!...

தீர்மானித்தாலும் அவை பின் செயல்படவில்லையே.. என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட.

இதனையென்று நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அவ்வாறாக இவ்வாறாக..

எதை என்று கூறஇவ்வாறு போகலாமா பின் அவ்வாறு நடக்குமா..

என்பதையெல்லாம் பின் சிந்தித்து செயலாற்றுவதற்கு வாழ்க்கையில் பல தொல்லைகள் வந்து விடுகின்றது..

நிச்சயம் அத் தொல்லைகளை எவ்வாறு நீக்குவது??
என்று தெரியாமல் மீண்டும் எதை என்று அறிய அறிய பின் மீண்டும் குழப்பங்கள்... தெரிந்தும் தெரியாமல் இருந்தும் அறிந்தும் எவை என்று புரிந்தும் கூட நிலையில் இருந்தாலும் மீண்டும்.. எதை என்று கூற.
ஆனாலும் இவை தன் நன்கு உணர்ந்து கொண்டார்கள் சித்தர்கள்.

அதனால் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய உண்மை நிலையை எடுத்துரைக்க பின் ஆளில்லையே.. ஆள் இல்லையே..

அதனால் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய உண்மை நிலையை எடுத்துரைக்க பின் ஆளில்லையே.. ஆள் இல்லையே..

. எதை என்று துன்புறுத்த கலியவன் முயற்சி செய்து கொண்டே இருக்க.. நிச்சயம் தன்னில் கூட அவை தன் பின் நீக்க நிச்சயம் பல வகையிலும் உங்களுக்கு பின் வாய்ப்பாடாகவே ( வாக்கில் பரிகாரம்) நிச்சயம் தன்னில் இதை என்று கூற இப்பொழுது... சொல்லிவிட்டேன்.

அதை சரியாகவே தீர்மானித்து நிச்சயம்.. அப்பனே அறிந்தும் இவை என்று புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின்.. எதை என்று அறிய அறிய

அப்பனே என்றெல்லாம் நிச்சயம் அகத்தியன் பின் பரிபூரணமாக ஆசிகள்...

பரிபூரணமாக ஆசிகள்... பின் செல்ல குழந்தைகள்... எப்படி வாழப் போகின்றீர்கள்??? என்பதையெல்லாம்... செல்லமாகவே நிச்சயம் அப்பனே அப்பனே.. என்றெல்லாம் நிச்சயம்!!!

ஆனாலும் ஏன் எதற்கு பின் செல்லமாக ???... அப்பனே வந்து விட்டீர்களே நிச்சயம்.. கர்மா உலகத்தில் நிச்சயம் தன்னில் கூட...

எவ்வாறு அனுபவிக்க போகின்றீர்கள்?? நீங்கள் பாவங்களை... என்றெல்லாம்!!!

 அகத்தியன் இதனால் அப்பனே அப்பனே.. என்றெல்லாம் பின் மறுபடியும்.. மறுபடியும்...

(குருநாதர் அகத்திய பெருமான் கருணையோடு ஒவ்வொரு வாக்கிலும் அப்பனே அப்பனே அப்பனே அப்பனே அம்மையே அம்மையே தாயே என்றெல்லாம்  சொல்வதன் மகத்துவம் நம்மீது குருநாதருக்கு இருக்கும் பாசம்)


இதை உணர்ந்து கொள்ள என்றெல்லாம் நிச்சயம் சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து. குழந்தைகளுக்கு..

ஆனாலும் மீண்டும் பின் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும்.. செய்வது பின் தவறே அறிந்தும் புரிந்தும்!!

ஆனாலும் அத் தவறையும் கூட திருத்தி திருத்தி... உங்களை மேற்கொண்டு நிச்சயம் குறிக்கோளாக... அழைத்துச் சென்று நல்வழி பாதையிலே இவை தன் நிச்சயம் பின்... அகத்தியன் செய்வான்.

எம்முடைய ஆசிகள்.. நிச்சயம் கூறுகின்றேன் இன்னும் வாக்குகள்... மறு வாக்குகளில் கூட...

ஆசிகள் ஆசிகள் குழந்தைகளே!!!


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! - https://tut-temples.blogspot.com/2025/09/1063.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4.html

சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1168.html

சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1254-6.html

சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! - https://tut-

சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1303-6.html

சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! - https://tut-temples.blogspot.com/2025/09/1861.html

சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) - https://tut-temples.blogspot.com/2025/09/1188.html

சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! - https://tut-temples.blogspot.com/2025/09/1849-5.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395.html

சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1054.html

சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா - https://tut-temples.blogspot.com/2025/09/1858.html

சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) - https://tut-temples.blogspot.com/2025/09/1290-5-06022023.html

சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1056.html

சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1790.html

சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 - https://tut-temples.blogspot.com/2025/09/1298-1.html

சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1024_8.html

சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1592.html

சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1340-10052023-6.html

கூட்டுப் பிரார்த்தனை பற்றி அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_29.html

ஓதிமலை ஆண்டவரே போற்றி! ஓதியப்பரே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_99.html

ஓதிமலையின் சூட்சும தரிசனம் இன்று - 06.12.2024 - https://tut-temples.blogspot.com/2024/12/06122024.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_4.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

சித்தன் அருள் - 1382 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பீமேஷ்வரலிங்கம் திருக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/07/1382.html

அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - முழு தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2025/07/april-2024.html

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html


அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html

Monday, October 6, 2025

அறுபடை வீடு யாத்திரை ஏன் ? எதற்காக ? எப்படி ? என அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கின் தொகுப்பு

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அறுபடை வீடு யாத்திரை ஏன் ?  எதற்காக ?  எப்படி ?  என அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கின் தொகுப்பு இன்றைய பதிவில் அறிய தருகின்றோம் .  அனைவரும் பலமுறை படித்து இறையருள் பெற வேண்டி விண்ணப்பிக்கின்றோம் . 


 சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! 

 சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! 

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! 

சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! 

 சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 

 சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!

 சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 

 சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! 

 சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) 

 சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! 

 சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! 

 சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா 

 சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) 

 சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! 

 சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! 

 சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 

 சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! 

 சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! 

 சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 





 சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! 

30/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில். 


முன்பே அறுபடைவீடுகள் உண்டு என்பேன் அறுபடைவீடுகள் எதற்காக வணங்குகின்றான் என்பதை கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

எதனையும் என்று கூற பின் அறுபடை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவ் அறுபடை வீடுகளும் தரிசித்து இரு மண்டலம் பின் அவந்தனக்கும்(முருகன்) அங்கே கந்த சஷ்டிக் கவசத்தையும் இன்னும் பல அருணகிரிநாதர் எழுதிய பல புத்தகங்களையும்  பின் எவ்வாறு திருவாசகத்தையும் பின் ஒவ்வொரு தலத்திலும் நல முறையாக இரு மண்டலம் ஜெபித்து பின் இதனையுமன்றி  கூறி பின் ஒவ்வொரு தலமாக அறுபடை வீடுகளை தரிசித்து பின் வந்தால் அவந்தனக்கு ஏழாவது என்னும் அறிவு பிறந்து விடும்.

ஏழாவது அறிவு தான் அதைத்தான் சூட்சுமமாக வைத்துக் கொண்டுள்ளேன் .

அதனையும் பிற்பகுதிகளில் பிற் ஆசிகளில்  உரைத்து விடுகின்றேன். 

எதனை என்றும் அதனை கூட உணராத மனிதன் அங்கு சென்றால் அவை நடக்கும் இவைதன் நடக்கும் .

இங்கு சென்றால் அவைதன் நடக்கும் இவ்வாறு கிரகங்களால் ஏற்படும் .இதனையும் என்று கூற பொய் கூறி புறம் கூறி கொண்டிருக்கிறார்கள் அறியாத முட்டாள் மனிதர்கள்.

எதனையும் என்றும் வீணே!! என்பதைக்கூட இதனையும் கூட இவ் ஆறுபடை வீடுகளையும் கடந்துவிட்டால் ஏழாவது படை வீடு ஒன்று உண்டு அதனையும் சிந்தியுங்கள்.

அதனையும் யானே சொல்லிவிட்டால் எவை எவை என்று கூட நீங்களும் அலைவீர்கள் என்பேன்.

எதனையும் என்று கூற அவ் ஏழாவது தலம் தான் அறிவு பின் அனைத்தும் முருகன் உங்களிடத்திலே கொடுத்துவிடுவான் வாழ்வதற்குத் தகுதியானவைகள். 

ஆனாலும் இதனையும் ஏராளமான அரசர்களும் பல புலவர்களும் இதனை நன்கு உணர்ந்திருந்து பல வெற்றிகளைக் கண்டார்கள் என்பேன்.

ஆனாலும் இப்பொழுது இருக்கும் மனிதர்கள் அவைத் முட்டாளாகவே நிராகரித்து எதற்காக வந்தோம் எதற்காக வணங்கினோம் என்பதைக்கூட தெரியாமல் இறைவனை வணங்கிட்டு வணங்கிட்டு சென்று கொண்டிருக்கின்றான் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை .

இறைவன் எங்கு அமர்ந்து எப்படி? எல்லாம் இருப்பான்? என்பதை கூட ஆனாலும் ஒரு சில தலங்களுக்கு வரும் பொழுது யான் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன்.

பக்தியோடு சிரத்தைதோடு அனைவருக்கும் நல் உதவியை செய்து பல அன்னதானங்கள் இட்டு பல அன்னதானங்கள் இட்டு அன்னை தந்தையரை மதித்து சேவைகள் செய்து வந்து திருத்தலம் வந்தால் கூட இறைவன் நிச்சயமாய் நிற்ப்பான் என்பேன்.

அங்கே ஆசிகள் தருவான் என்பேன்



சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு!

9/8/2023 அன்று போகர் சித்த பெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : காக்கும் சிவன் காசி கங்கைகரையில். 

ஆறுபடை வீடுகளுக்கும் நிச்சயம் !!! ஏன்? அறிந்தும்!! அறிந்தும்!! எங்கள் அருள்கள் பலம் ஆக செய்திட்டோம்!!!!

அதனால் நிச்சயம் வலம் வந்து வலம் வந்து அதாவது ஆறு படை வீடுகளையும் கூட வலம் வந்தாலே!!!!!!! நிச்சயம் ஆறு அறிவுகள் செயல்பட ஆரம்பிக்குமே!!!! இக்கலியுகத்தில்!!!!

படை வீடுகள் நிச்சயம் சுற்றி சுற்றி வந்தாலே நிச்சயம் பின் அனைத்தும் தெரியவரும்!!!!

அப்படி இல்லையென்றால் நிச்சயம் தெரியவராது!!!!

நிச்சயம் இன்னும் இன்னும் அவ் ஆறு ஆறிவுகள் செயலிழந்து போகுமப்பா!!!
போகுமப்பா! நிச்சயம்!!!

ஆனாலும் இதை யான்  சரிப்படுத்த மனிதனுக்கு பல வகையிலும் கூட எடுத்துரைத்தேன்!!!! இன்னும் எடுத்துரைப்பேன்!!!


சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! 

39. மருதமலை கோவிலில் மாலை வேளையில் முருகன் வருகிறார் என்று கூறியிருந்தீர்கள்  சரியான கால அளவு எது என்று எடுத்துறயுங்கள் மற்றும் அவ்வேளையில் முருகனின்பரிபூரண அருள் ஆசியை பெற அனுகிரகம் புரியுங்கள் தந்தையே?

அப்பனே! முருகனும் பாம்பாட்டியும் நிச்சயம் பேசிக்கொண்டேதான் இருக்கின்றார்கள் அப்பனே. இவ்விடத்தில் பேசுவார்கள் என்பதும், சரியான நேரமும், கோடியில் ஒருத்தனுக்குத்தான் தெரியும். பார்த்துவிட்டால், பாபமே போய்விடும் என்பேன். நிச்சயம், அறுபடை வீட்டுக்கும் செல்லச்சொல், பிறகு உரைக்கின்றேன்.

40. வளிமண்டலத்தில் இருந்து வரும் மற்றும் ஒளி விழும் இடங்களை(ஆலயங்கள்) பற்றி கூறுகிறேன் என்று கூறினீர்கள். அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாமா தந்தையே?

அப்பனே! இவனை பஞ்ச பூத ஸ்தலங்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும் சென்று வரச் சொல். நிச்சயம் உரைக்கின்றேன். அதுவே போதுமானதப்பா. 


சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! 

1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.

செவ்வாய் திசை!!!! இதை என்று அறியாமலே(ஜாதகத்தில் செவ்வாய் திசை) நிச்சயம் அறுபடை வீடுகளுக்கு எதை என்று பின் உணராமலே பின் எவை என்று அறியாமலே பின் சஷ்டி பின் கிருத்திகை இவற்றில் தன்னில் நிச்சயமாய் ஒரே தன்னில் பின் அறுபடையிலும் கூட இரு வருடம் பின் நிச்சயம் சுற்றி திரிந்தால் அதாவது பின் சஷ்டி தொடங்குவதற்கு முன்பே பின் சஷ்டி முடிவதற்கு முன்பே எதை என்று கூற அறுபடையிலும் தரிசிக்க வேண்டும் இவ்வாறு நிச்சயம் இரு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் சொல்லிக்கொண்டு முருகா!!! முருகா!!! என்று சொல்லிக்கொண்டு திரிந்து கொண்டே இருந்தால் அவன் நிலை மாறும்!!!!

முருகன் காட்சியளிப்பான்!!! சொல்லிவிட்டேன்.

இதற்கும் கூட சரியான தருணங்கள் எவை என்று அறிய இவற்றில் இருந்தும் கூட!!!!!

அதனால் நிச்சயம் வழிகள் வகுத்துக் கொள்ளுங்கள்!!! ஒவ்வொரு கிரகத்திற்கும் என்னென்ன செய்ய வேண்டும்?? எப்படி எல்லாம்?? என்று அறிய அறிய யானே கூறுகின்றேன்!!!!


 சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 

கேள்வி: அறுபடை வீட்டை எப்படி தரிசிக்க வேண்டும்?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து, அறிந்து. இதன் விளக்கம் யான் முன்பே உரைத்துவிட்டேன், அப்பனே. ஆனாலும் இப்பொழுது தேவை இல்லை என்பேன் அப்பனே! யான் முருகனிடம் கேட்டிட்டு, வந்து உரைக்கின்றேன், அல்லது முருகனே வந்து உரைப்பான்.

கேள்வி: "முருகரை வழிபாடு செய்கிற முறையை பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?"

குருநாதர்: "அப்பனே! முருகா என்று அழைத்தால், அவன்தானே சொல்லிக் கொடுப்பான், அப்பனே!.


சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! 

குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த  ரகசியங்கள் பாகம் 1 மற்றும் உத்தரவு

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வாறு அப்பனே பின் நிச்சயமாய் அப்பனே பின் சந்தோசமாகவே பின் நிச்சயம் அனைத்தும் பின் அதாவது செல்களும் கூட அதாவது அப்பனே பின் சிறு சிறு நுண்ணுயிர்களும் கூட அப்பனே  அப்படியே ஆடும் பொழுது அப்பனே அதை தக்க வைக்க அப்பனே நிச்சயம் பின் முருக பெருமானை கூட சரியாகவே!!!

(கந்த சஷ்டி விரதம்)

( 2/11/2024 ஐப்பசி 16 சனிக்கிழமை முதல் 8/11/2024 ஐப்பசி இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை வரை ஸ்கந்த சஷ்டி விரத நாட்கள்) 

அதாவது நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது அப்பனே பின் ஏன் எதற்கு என்று பின் ஐப்பசி மாதத்தில் கூட விரதத்தை அதாவது கந்த சஷ்டி விரதத்தை அப்பனை ஏன் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது...அவ் நுண்ணுயிர்கள் நிச்சயம் அப்பனே பின் அவ்வாறு ஆடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் இன்னும் அதிகமாகவே... (உணவுகள்) உட்கொண்டால் அப்பனே இன்னும் அப்பனே உடம்பிற்கு கேடுகளப்பா!!!

இதனால் அப்பனே பின் அதிகமாகவே வளரும் தன்மை அப்பனே இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே சில சில அப்பனே பின் அதாவது சரியாகவே முருகப்பெருமானை வணங்கிட்டு அப்பனே சரியான உணவுகளை அதாவது பழங்களை கூட எடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே போதுமானதப்பா 

(கந்த சஷ்டி விரத நாட்களில் அதிக அளவு உணவை உண்ணாமல் இயற்கையான பழங்களை உண்ணுதல் வேண்டும்) 

அப்பனே தெளிவு பெற யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே 

அதுமட்டுமில்லாமல் அப்பனே பின் அருணகிரி அழகாக முருகனை நோக்கி!!! அப்பனே பின் பாடி உள்ளான் அப்பனே  

(திருப்புகழ்)

அவ் பாடல்களையும் கூட அப்பனே பின் ஒவ்வொரு நாளும் அப்பனே நிச்சயம் பின் விரதத்தில் பாடி வர நன்று என்பேன் அப்பனே 

அது மட்டும் இல்லாமல் அப்பனே பின் அனுதினமும் அப்பனே பின் அதாவது அறுபடை வீடுகளையும் கூட அதாவது மனதில் வேண்டிக்கொண்டு!!! அப்பனே அங்கு இருக்கும் முருகனை மனதில் மனதார வேண்டிக் கொண்டு அப்பனே பின்  நிச்சயம்  பின் என்ன?... வரங்கள் எதை என்று அறிய அறிய... சாரும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அழகாகவே இன்னும் இன்னும் அப்பனே...

(கந்த சஷ்டி விரத நாட்களில்  பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு சென்றும் வழிபாடு செய்ய முடியும். அப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி அறுபடை வீடு முருகனை நினைத்துக் கொண்டு முருகனை மனதில் நிறுத்தி நமது நியாயமான கோரிக்கைகளை அதாவது வரங்களை வேண்டிக்கொண்டு வழிபாடு செய்தல் வேண்டும் )

நிச்சயம் அப்பனே இன்னும் கர்மா தான்... அதாவது  பாவம்தான் அப்பனே பின்  கலியுகத்தில் அப்பனே அதிகமாக இருக்கின்றது என்பேன் அப்பனே.. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே சில சில பின் அதாவது அப்பனே பின் தகர்வு அதாவது நிச்சயம் அப்பனே
அதாவது அப்பனே நிச்சயம் அதாவது நீக்கிவிட அப்பனே நல் மாற்றங்கள் ஏற்படும் அப்பா 

அதாவது அப்பனே பின் சிலசில வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் துன்பங்கள் அப்பனே பின் எவை என்று அறியாமலும் கூட வந்து இருக்கும் என்பேன் அப்பனே 

அதனால் அவற்றையெல்லாம் அகற்றி நிச்சயம் வாக்குகள் உரைத்து அப்பனே நிச்சயம் உங்களை நல்வழிப்படுத்தி அப்பனே நீங்கள் வேண்டியதை அப்பனே நிச்சயம் யான் கொடுத்திடுவேன் அப்பனே 

இதனால் குறைகள் ஏதும் இல்லை அப்பா... அப்பனே நிச்சயம் அப்பனே ஆசிரியன் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுக்கின்ற பொழுது அவ் மாணவன் சரியாகவே ஆசிரியன் பேச்சை கேட்டு வந்தாலே போதுமானதப்பா!!



சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 

53.அகத்திய பெருமானே மனிதனுடைய ஏழு சக்கரங்களை அண்ட ஆற்றலுடன் எவ்வாறு இணைகிறது

எதை என்று அறிய! அறிய! அறுபடை வீடுகளுக்கும் செல்லச் செல்ல, ஆறு சக்கரங்கள் அறிந்து, அறிந்து செயல்பட்டுவிடும்! ஏழாவது சக்கரத்தை நிச்சயம் யான் கூறமாட்டேன். ஆனாலும், உண்மைகளை புரிந்து! புரிந்து! ஆறு சக்கரங்களை வெளிக்கொண்டு வர, எதுவும் செய்யத்தேவை இல்லை. அறுபடைவீடுகளுக்கும் சென்று கொண்டே இருந்தால், திறந்துவிடும். ஏழாவது, நிச்சயம் சொல்லிவிடுகிறேன், கடைசியில்தான் சொல்லுவேன். 


சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! 

11/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

இவ்வாறு தான் அப்பனே அவை மட்டுமில்லாமல் சில தோஷங்கள் பின் ராகு கேது எவை என்று அறிய அறிய பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் கூட தானாகவே இங்கு விலகிப் போகுமப்பா. 

இன்னும் அப்பனே பின் வரிசையாகவே அப்பனே அதாவது அப்பனே.. ஒன்றிலிருந்து ஆரம்பமாகி முடிக்க வேண்டும் அப்பனே.. அது மட்டுமில்லாமல் 

 அதாவது... கதிர் காமத்தில் இருந்து இங்கு...

அப்பனே இங்கிருந்து கதிர்காமம்... மீண்டும் அப்பனே சென்றடைய வேண்டும்!!!

(மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தரிசனம் முடித்து கதிர்காமம் தரிசனம் 
மீண்டும் கதிர்காமத்தில் இருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி தரிசனம்)

இதே போலத்தான் அப்பனே அறுபடை வீடுகளையும்... செந்தூரில் தொடங்கி அப்பனே பின் எவை என்று அறிய அறிய திருத்தணிகையில் முடிக்க வேண்டும். 

இல்லையென்றால் எதை என்று கூற இப்படியும் முடிக்க வேண்டும்.. அப்பனே மாற்றலாம் அப்பனே!!!

 அதாவது திருத்தணிகையில் இருந்து தொடங்கி அப்பனே.. திருச்செந்தூரில் முடித்திடலாம்!!

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!! ஆனாலும் அங்கு முடித்து அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் அதாவது கடல் நீரை அப்பனே இல்லத்தில் வைத்து அப்பனே பின் முருகனாகவே பாவித்து பூஜைகள் செய்யலாம்!!

(திருத்தணி மலையில் இருந்து அறுபடை வீடுகள் பயணம் மேற்கொண்டு திருச்செந்தூரில் முடித்து திருச்செந்தூரில் இருந்து கடல் நீரை கொண்டு வந்து அதை ஒரு கலசம் அல்லது கும்பம் போன்ற குடத்தில் ஊற்றி வைத்து அதை முருகனாக நினைத்து பூஜைகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்)

அதேபோல் பக்தர்கள் திருச்செந்தூரில் இருந்து யாத்திரையை தொடங்கினால் அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு திருத்தணிகை மலைக்கு வந்து கோயிலுக்கு செல்லும் வழியில் கிடைக்கும் அல்லது சுத்தமான பசும் சாண விபூதியை வாங்கி முருகனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு அல்லது சமர்ப்பணம் செய்துவிட்டு அதை கொண்டு ஒரு கலசத்தில் அல்லது ஒரு குடுவையில் பூஜை அறையில் வைத்து முருகனாக பாவித்து பூஜைகள் செய்து வர வேண்டும். 

மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக தொடங்கலாம் இரண்டும் சமமே என்று குருநாதர் கூறியிருக்கின்றார். 

வட தமிழ்நாட்டில் வசிக்கும் பக்தர்கள் திருத்தணிகை மலையில் இருந்து தொடங்கலாம் தென் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் திருச்செந்தூரில் இருந்து தொடங்கலாம் இது அவரவர் இஷ்டமே)

அதேபோலத்தான் அப்பனே திருத்தணிகையில் நிச்சயம் தன்னில்  முடித்தால்... அங்கு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே.. வழிகளில் கூட விபூதிகள். 

அப்பனே பின் அதாவது விபூதிகளை முருகனுக்கு பின் சமர்ப்பித்து.. அப்பனே பின் அவ் விபூதியை முருகனாகவே பாவித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட வழிபட்டாலே போதுமானதப்பா!!!

சில சில தரித்திரங்கள் நீங்கும் அப்பனே!!

இன்னும் அப்பனே பல பல உண்மைகள் விசித்திரமான உண்மைகளை எல்லாம் நிச்சயம் சித்தர்கள் சொல்வார்களப்பா!!!

அதை ஏற்றுக்கொண்டு நடந்தாலே போதுமானதப்பா.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே கஷ்டங்கள் வராதப்பா அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... இறைவனே இப்புவி தன்னில்..!!!!!

இறைவன். விளையாடிய பூமி.. எதை என்று அறிய அறிய அப்பனே இப் பூமியை அவனே பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே. 




 சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) 

21/9/2022 புரட்டாசி மாதம் ஏகாதசி புதன் கிழமை அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த விஞ்ஞான வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: திருவண்ணாமலை


பின்  எதையென்று கூற அதனால்தான் கார்த்திகைக்கு ஒரு எதை என்று கூற சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இவ் ஒளியானது அண்ணாமலையில் பட்டு பின்  எதையென்று இங்கே எதிரொளித்து ஆறுபடை வீடுகளிலும் கூட அப்பனே படும் என்பேன்!!!!

அதனால் அங்கெல்லாம் சென்றால் அப்பனே பின் எவை என்று கூட கர்மங்கள் சிறிது சிறிதாக பின் கழிந்து விடும்!!!!

அவ் எதை என்றும் அப்பனே இவை என்று கூட அவ் அறுபடை வீடுகளிலும் கூட அப்பனே பட்டு பிம்பம் பிரதிபலித்து அப்பனே பின் சிதம்பரம் எதை எவை என்று கூட நடராசன் பின் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட ஒன்றின் பின் ஒன்றாகவே எதை எவற்றினின்றும் கூற அப்பனே வழிகள் வழிகள் உண்டு.

உண்டு என்பதை கூட எவற்றின் தன்மைகளை உண்டு எவற்றை என்று கூட அப்பனே(பஞ்சபூத ப்ரித்வி ஸ்தலங்கள்) காளாத்திரி(காளஹஸ்தி) இதை எவற்றின் உண்மைகளை புரிந்து புரிந்து அங்கேயும் ஒளி படும்!!! இதனை என்றும் இவற்றின் காஞ்சி(காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்) இவையென்று திருவானைக்காவல் இதை என்றும் அறிவதற்கும் உண்டா!! உண்டா?? ஒளிகள் அங்கே படும்!!! படும்பொழுது கூட சில ஆன்மாக்கள் நிச்சயமாய் ஒளி விலகளை( ஒளிவிலகல் / ஓளி பிரதிபலிப்பு) எதை என்று அறியாத அளவிற்கும் கூட விட்டு எதை என்று கூட அங்கே படும் பொழுது அங்கே நின்றால் நம்முடைய கர்மாக்கள் அழிந்து ஒழிந்து போகும்( அதாவது புரட்டாசி மாதம் தொட்டு அந்த ஒளியானது பஞ்சபூத ஸ்தலங்களான சிதம்பரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் காளகஸ்தி திருவானைக்காவல் இந்த ஐந்து ஸ்தலங்களிலும் வெளியானது பிரதிபலிக்கும் இந்த கால சமயத்தில் நாம் அங்கு சென்று அந்த ஒளியை நம் மீது உள்வாங்கினால் நம்முடைய கர்மாக்கள் தொலையும்) என்பேன் அப்பனே!!!!

இவற்றின் தன்மைகளையும் உணர்ந்து உணர்ந்து எண்ணற்ற கோடி ஜீவராசிகளும் அப்பனே ஆனாலும் வாய்ப்பு அப்பனே இதையெல்லாம் அப்பனே கர்மா தொலைந்த பிறகே ஒருவனுக்கு வாய்ப்பளிப்பான் இறைவனே அதாவது ஈசனே!!!

அப்பனே இப்பொழுது கூடச் சொல்லிவிட்டேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே.


 சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! 

60. தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரம் நட்சத்தித்தில் அதிகம் நடைபெறுவதன் தாத்பரியத்தை விளக்குமாறு தங்களின் பொற்பாதங்களை பணிந்து கேட்டுக் கொள்கிறேன். நன்றி இறைவா

அப்பப்பா! சித்திரை, வைகாசி தன்னில், அறுபடை (வீடுகளுக்கு) போகச்சொல்! இதன் ரகசியத்தை பின்னர் உரைக்கின்றேன்!


 சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! 

9/8/2023 அன்று போகர் சித்த பெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : காக்கும் சிவன் காசி கங்கைகரையில். 

அதனால் தர்மம் எல்லாம் எப்பொழுது தலைகுனிந்து நிற்கின்றதோ அப்பொழுதெல்லாம் சித்தர்கள் எதை என்றும் அறிய  அறிய பின் எவை என்றும் புரியாமல் கூட இதனால் மனிதனின் ஆட்டத்தை விட்டு விட்டால் நிச்சயம் மனிதன் யான் தான் இறைவன் என்று சொல்லிவிடுவான் அதனால் நிச்சயம் வரும் காலங்களில் நிச்சயம் தட்டித்தான் கஷ்டங்கள் ஏற்படுத்தித்தான் பல வகைகளில் கூட நிச்சயம் பின் அனைத்தும் கொடுப்போமே தவிர உடனடியாக இல்லை!!!!

அதனால் ஆறு அறிவு நிச்சயம் மனிதனுக்கு ஆனாலும் அதை பயன்படுத்த தெரியவில்லை தெரியவில்லை என்றெல்லாம் சித்தர்கள் நிச்சயம் செப்பிக் கொண்டேதான் வருகின்றார்கள்!!!!

எதை என்று கூற அப்பா!!! அப்பா!!!! எதை என்றும் பின் நிமித்தம் சென்றாலும் வரும் காலங்களில் அறுபடை வீடுகளுக்கு செல்லாமல் நிச்சயம் அவ் ஆறையும் நிச்சயம் உணர்ந்தும் பின் உணர்ந்தும் கூட இன்னும் இன்னும் செயல்படுத்தி கொள்ள முடியும். 

அவை மட்டும் இல்லாமல் பஞ்ச பூதங்கள் அதாவது ஏன்? எதற்காக? இவ் சித்தர்கள் எல்லாம் பஞ்சபூத ஸ்தலங்களை எல்லாம் உருவாக்கினார்கள்!! இதனால் அழிவுகள் ஏற்படக்கூடாது என்பதையெல்லாம்

ஆனாலும்  அவ் பஞ்சபூதத்தில் உள்ள இன்னும் ஏனைய வழிகளில் உள்ள பல பல பதிவுகளும் கூட நிச்சயம் மனிதனுக்குள்ளே அடங்கியுள்ளது!!!!!!

இதனால் பஞ்சபூத ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டுக் கொண்டே வந்தால் நிச்சயம் அறிந்தும் கூட அறிந்தும் கூட நிச்சயம் அவைகளால் அழிவுகள் வளராது !!!

இதனைத் தான் யாங்கள் நிச்சயம் செப்பி செப்பி!!!!



சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! 

ராகுவும் இனிமேலும் கேதுவும் சனியும் இவ்வாறு என்பதை கூட இவர்கள் ஆட்சியில்தான் உலகம் கடந்து வருகின்றது.

இதனால் பின்.  இவைதன் மனம் குளிரச் செய்யவேண்டும்.

இதனை மனம் குளிரச் செய்ய பல திருத்தலங்களை நாட வேண்டும் என்பேன்.

பஞ்ச ஸ்தலத்திற்கு (பஞ்சபூத ஸ்தலங்கள்) பின்பு பின் அடிக்கடி சென்று அங்கே சிலசில ஜீவராசிகளுக்கும் இயலாதவர்களுக்கும் தானம் அளிக்க வேண்டும்.

அறுபடை வீடுகளுக்கும் செல்ல வேண்டும்.

இவ்வாறு பின் இதனையும் அறிந்து அறிந்து பின் இவை என்று கூற அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும்.

இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது.

இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

இதனையும் அறிந்து நிச்சயமாய் தீபங்கள் யான் சொல்லியவாறே கடைப்பிடியுங்கள் போதுமானது. போதுமானது என்பேன்.

சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா 

ஒரு சிறிய உபாயம் சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

பல புண்ணிய நதிகளிலும் நீராட!! நீராட!! 

அப்பனே அவை மட்டுமில்லாமல் புண்ணிய நதிகளிலும் கூட காயத்ரி  மந்திரங்களை செப்ப!!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட... கடல் தன்னிலும் கூட நிச்சயமாய் அப்பனே இவ்வாறாக செய்து கொண்டே அப்பனே 

அதுமட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதிகமாக அதிகமாக அப்பனே அருகம்புல்லையும் கூட வில்வ இலைகளையும் துளசி இலைகளையும் உட்கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ் சிவப்பு நிறத்தை நிச்சயம் அடியோடு நீக்கி விடலாம் என்பேன் அப்பனே !!!!


ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு நீக்கிவிட்டால் அப்பனே நிச்சயம் தெளிவு பெறுமப்பா!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறு தெளிவு பெற்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... அதற்குப் பின் வருவது கருமை நிறம் என்பேன் அப்பனே... இவையும் கூட கருமை நிறத்தை ஒழித்திட வேண்டும் என்பேன் அப்பனே...

 இதற்கும் பின் தக்க இடங்கள் அப்பனே அறிந்தும் கூட...!!!


 பின் பஞ்சபூத ஸ்தலங்கள்!!!!

 பின் அறுபடை வீடுகள் !!!...............
.அப்பனே நிச்சயம் தன்னில் கூட 

பின் அஷ்ட விநாயகர் தலங்களில் கூட!!!!

 நிச்சயம் மராட்டிய மாநிலத்தில் நிச்சயம் அப்பனே தன்னில் கூட பின் அதாவது குவிகின்றது என்பேன் அப்பனே.

(மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சுற்றியுள்ள அஷ்ட விநாயகர் திருத்தலங்கள் சித்தன் அருள் பதிவு எண் 1321)

ஆனாலும் அப்பனே நிச்சயம் கருப்பை!!!  கருமை நிறத்தை அப்பனே பின் நீக்கிட!!! அதை நீக்குவது தான் மிகக் கடினம் என்பேன் அப்பனே. 


                   

சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) 

56. குருவே! வேல்விருத்தம், மயில் விருத்தம் பற்றி......

அப்பனே! பின் இவை எது என்று அறிய! அறிய, எவை என்று புரிய புரிய! அறுபடை வீடுகளுக்கும் சென்று, பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வரச்சொல், இக்கேள்விக்கான பதில் நிச்சயம் உரைப்பேன்!


 சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! 

11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.


யான் பல என் அறுபடை வீடுகளிலும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அதை தவிர்த்து என் ஏழாவது படை வீடான மருதமலையிலும் .

ஆனாலும் உண்மை பொருளை முருகா அனைத்தும் நீயே என்று கூற எவரும் இல்லை எதனால் பக்தி எதனை எப்பொழுது எதனை என்று கூட அவனவன் சுயநலத்திற்காக என்னை வந்து கேட்கின்றான் ஆனாலும் யானும் இதை தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். கொடுக்கின்றேன்.

ஆனாலும் கடைசியில் திரும்பவும் வருகின்றான் அனைத்தும் இழந்துபோய்.

இவை என்ன எவ்வாறு பக்திகள் செலுத்துவது என்று கூட தெரியப்பட்டால் அவன்தான் மனிதன்.

தாய் தந்தையரை எவ்வாறு மதிக்கின்றீர்களோ அதையும் யான் பார்த்து தான் நிச்சயம் ஆசீர்வதிப்பேன்.

தாய் தந்தையரை மதிக்காதவர்களை யான் என்னிடத்தில் வந்தாலும்கூட கண்டுகொள்ள மாட்டேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.


 சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! 

29/1/2025 மௌனி அமாவாசை அன்று கங்கை யமுனை சரஸ்வதி திருவேணி சங்கமம் தீர்த்தக்கரையில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு மற்றும் உத்தரவு.


"""நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை!!!

அது போல தான் அப்பனே!! நீங்கள் நினைத்தாலே!! உண்மையாக நினைத்தாலே...அப்பனே பரிபூரணமாக யாங்கள் வந்து அப்பனே பின் அதில் கூட அப்பனே நீரையும் கூட பின் எவ்வாறாக மாற்றுவோம் என்பதெல்லாம்!!

அதனால் அப்பனே பின் நிச்சயம் இல்லத்திலே...நீராடி அப்பனே நிச்சயம் சிவராத்திரி வரை அப்பனே நல்லவிதமாக அப்பனே!!

இதனால் அப்பனே சில தொந்தரவுகள் அது மட்டும் இல்லாமல் பின் அப்பனே!!

 பின் நீரில் கூட!!
துளசி இலைகளையும் கூட!!
அப்பனே பின் வேம்பு (வேப்பிலை) இலைகளையும் கூட!! அது மட்டும் இல்லாமல் வில்வ இலைகளையும் கூட... அப்பனே பரிசுத்த பின் உப்பையும் கூட... அப்பனே மஞ்சளையும் இட்டு அப்பனே இன்னும் சில சில விசேஷ மூலிகைகளும் இருக்கின்றதப்பா..அவை தன் என் பக்தர்களுக்கு  தெரியுமப்பா!!! நிச்சயம் அப்பனே அவை பயன்படுத்தி அப்பனே நிச்சயம் இல்லத்திலே நிச்சயம் அப்பனே!!!

(கும்பமேளாவில் வந்து  திரிவேணி சங்கமத்தில் நீராட முடியாதவர்கள்!! பல்வேறு காரணங்களால் செல்ல முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் அவரவர் தமது வீட்டில் சிவராத்திரி வரையும்

நீராடும் பொழுது அந்த நீரில்

துளசி வில்வம் வேப்பிலை மஞ்சள் உப்பு ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இன்னும் மூலிகைகள் கலந்து 

 தமது இரு கைகளை வைத்து வணங்கி அனைத்து தெய்வங்களையும் நினைத்து தேவாதி தேவர்களையும் நினைத்து சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் குருமார்கள் அனைவரையும் நினைத்து வணங்கி!!!

பஞ்சபூத திருத்தலங்கள் அறுபடை வீடுகள் இன்னும் காசியையும் நினைத்து 

அந்த நீரில் புனித புண்ணிய நதிகளை நினைத்து எல்லா நதிகளும் நாங்கள் நீராடும் நேரில் ஆஹாவனம் ஆக வேண்டும்..‌ என்று மனதார உண்மையாக வேண்டிக் கொண்டால்... அந்த வேண்டுதல் எண்ணங்கள் அதற்கு சக்திகள் அதிகம்.. இப்படி எண்ண அலைகளோடு வேண்டிக் கொண்டு சிவராத்திரி வரை பக்தர்கள் நீராடி வரவேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்திருக்கின்றார்)

அதாவது இன்னும் இறைவன் யார் என்று அப்பனே பின்  அறிந்து கொள்ள அப்பனே இவ் உலகத்தில் ஆளே இல்லையப்பா!!!

அப்படி அறிந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஒன்றுக்குமே ஆசைப்பட மாட்டார்களப்பா!!! அப்பனே நிச்சயம் அப்பனே அவ்வளவு தான் வாழ்க்கை... இதுதானா இவ்வளவு தானா என்று போய் சென்று கொண்டே இருப்பான்..அப்பனே

இறைவனை அப்பனே யாருமே உணரவில்லையப்பா!!

                   

சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 

6. முருகவேள் பன்னிரு திருமுறை ஓத / பாராயணம் செய்ய தங்கள் அருள் வேண்டி பணிந்து நிற்கின்றோம்.

மனித முட்டாளே! புசுண்டன் கேட்கின்றேன்! அறிந்து, அறிந்து! இதை யான் எப்படி சொல்ல? எதை என்று? எங்கிருந்தோ, ஆனாலும் கேட்கின்றான்! இதற்க்கு, முருகனே சொல்வான், இதனால், அறுபடை வீடுகளுக்கும், செல்லச் செல்ல முருகனின் திருவிளையாடல்கள் புரியும், பின் அனைத்தும் கற்பித்துக் கொள்வோம். ஆனால், தன் பிள்ளைகளோ, எதை சென்று அறிந்து, தன் சொந்தக்காரர்களோ, இல்லத்தை தேடி வந்துவிட்டால், உங்களுக்கு, பின் என்ன வேண்டும்? வாருங்கள், ஒரு சுகமான விடுதியில் தங்கி, அனைத்தும், பின் உணவை பரிமாறிக்கொள்வோம் என்று எண்ணுகின்றானே, அவ் ஜென்மம் அடாது, ஆனால் இப்படியெல்லாம் பின் மறைமுகமாக கேள்விகள் கேட்டு, பின் மரியாதையோடு, அதாவது, சித்தர்களை கேட்கின்றானே என்கிற எண்ணமே இல்லையே. ஆனால், இவந்தனுக்கு யங்கள், எப்படித்தான் கர்மாவை மாற்றமுடியும், ஒழிக்கவும் முடியும்?


சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! 

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் நிச்சயமாய் பின் ஐந்து அறிவுகள் அனைத்திற்கும் இருக்கும் என்பதை கூட யான் அறிவேன் ஓர் அறிவை பின் பின் மிகவும் கடுமையாக வைத்திருக்கின்றான் எதனால் பின் என்றால் மனிதன் உண்மை நிலையை அறிந்து புண்ணியங்கள் செய்து நல் முறையாக பிறவிக் கடலை தேற்றும் என்று ஆனாலும் அவ் அறிவை தவறாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் மனிதன் இப்பொழுதும் கூட இனிமேலும் கூட.

இதனைப் பயன்படுத்திக் கொண்டாலே அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பதை மனிதனுக்குத் தெரிவதில்லை.

நின்ற பொழுதும் இதனையும் ஆறாவது அறிவை நல் முறைகள் ஆகவே பயன் படுத்தி இதனைத்தான் பின் அனைத்தையும் கடந்து வந்தால் பின் அறுபடையினை(கந்தனின் ஆறுபடைவீடு) தரிசித்து விடலாம் என்பது கூட உண்மை என்பேன்.


இதனை நல் முறைகள் ஆகவே பயன்படுத்தி, பயன்படுத்தி முருகன் நல் முறைகள் ஆகவே யான் என்பேன் எனது பல ரூபங்களில் இருக்கின்றது சுப்பிரமணியர் என்பதிலும் கூட இதிலும் கூட ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கின்றது அடங்கி உள்ளது என்பேன் சுப்பிரமணியன் என்பதைக்கூட எவ்வாறு நின்று தொழுது பார்த்தால் இதில் சூட்சுமமான விஷயம் உள்ளது. இதனை கண்டுபிடித்து விட்டால் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு கஷ்டம் என்பதே வராது என்பேன்.

அதனால்தான் முதலில் சு என்பதை எடுத்துக் கொண்டார்கள் என்பேன்.

இதிலும் நன்கு உணர்ந்து சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே பின் பின் பின் எந்தனையும்  நல் முறைகள் ஆகவே பிடித்துக் கொண்டு பின் வருடங்களுக்காவது நல் மனதோடு நல் மனதோடு நவ முறை அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு( ஒரு வருடத்தில் ஒன்பது முறை ஆறுபடைவீடு தரிசனம்) சென்று விட்டால் அவன் தனக்கு பிரம்மாவும் மனமிரங்கி பின் விதியையே மாற்றி விடுவான் என்பதையும் கூட சுப்பிரமணி என்கின்றார்கள்.

ஆனாலும் இச் சூட்சுமத்தை இதுவரை மனிதர்கள் அறிந்ததே இல்லை இன்று வரையிலும் கூட.

                      
                             


 சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! 


ஆறுபடை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆறாவது அறிவையும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் ஏழாவது அறிவிற்கு அப்பனே பின் எட்ட முடியாது

(ஏழாவது படைவீடாக குருநாதர் அகத்திய பெருமான் மருதமலையை வாக்கில் உரைத்திருப்பதை நினைவு படுத்துகின்றோம்)

எட்டாவது முடிவுக்கு வந்துவிட்டால் அப்பனே அறிந்தும் கூட நவ எதை என்றும் அறிய அறிய அப்பனே இதை நிச்சயம் யான் குறிப்பிடுவேன் அப்பனே பின் அறிந்தும் ஏன் அப்பனே அறுபடை வீடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கக் கூடியது அப்பனே புராணங்களில் கூட அப்பனே எழுதி வைத்திருக்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இன்னும் மூன்று வீடுகள் மறைக்கப்பட்டது அப்பனே

அறிந்தும் கூட ஆனாலும் சிலர் சொல்கின்றார்கள் அப்பனே ஆனாலும் நிச்சயம் பின் ஒன்பதாவது படைவீடு என்பது யான் சொல்வேன் அப்பனே இன்றிலிருந்தை அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட அப்பனே



சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 

62. குருநாதா, அறுபடை வீட்டை இந்த குரு பெயர்ச்சிக்குப்பின் அடிக்கடி சென்று தரிசித்தால் குருவின் அருள் 
நிறையவே கிடைக்கும் என்றீர் அய்யா. உடல் நிலையால் மலையேற முடியாதவர்களுக்கு ஏதேனும் ஒரு வழி 
காட்டுங்கள் அய்யா! 

எப்பொழுதெல்லாம் நம்மால் ஆகாது என்று நினைப்பு வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் என்னால் முடியும் 
என்ற நம்பிக்கை வருகின்றதோ, அவன் மனிதன். ஆகவே, இப்படியே என்னால் முடியாது, முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால், கடைசிவரை முடியாதுதான். பின் என்னால் முடியும், என் முருகனை காண முடியும் என்றால் அனைத்தும் முடியும்.


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! - https://tut-temples.blogspot.com/2025/09/1063.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4.html

சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1168.html

சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1254-6.html

சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! - https://tut-

சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1303-6.html

சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! - https://tut-temples.blogspot.com/2025/09/1861.html

சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) - https://tut-temples.blogspot.com/2025/09/1188.html

சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! - https://tut-temples.blogspot.com/2025/09/1849-5.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395.html

சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1054.html

சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா - https://tut-temples.blogspot.com/2025/09/1858.html

சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) - https://tut-temples.blogspot.com/2025/09/1290-5-06022023.html

சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1056.html

சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1790.html

சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 - https://tut-temples.blogspot.com/2025/09/1298-1.html

சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1024_8.html

சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1592.html

சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1340-10052023-6.html

கூட்டுப் பிரார்த்தனை பற்றி அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_29.html

ஓதிமலை ஆண்டவரே போற்றி! ஓதியப்பரே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_99.html

ஓதிமலையின் சூட்சும தரிசனம் இன்று - 06.12.2024 - https://tut-temples.blogspot.com/2024/12/06122024.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_4.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

சித்தன் அருள் - 1382 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பீமேஷ்வரலிங்கம் திருக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/07/1382.html

அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - முழு தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2025/07/april-2024.html

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html


அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html