"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 2, 2019

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் கார்த்திகை மாத சிறப்பு திருவிழா பற்றி அறிய உள்ளோம். நம் முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழாவினை கொண்டாடி இருக்கின்றார்கள். சித்திரை மாதம் குல தெய்வ வழிபாடு, வைகாசி விசாகம், ஆனி பெருமாள் தரிசனம், ஆடி அம்மன் தரிசனம்  என தொடர்கின்றது. கார்த்திகை என்றாலே தீபம் தானே. அந்த ஜோதியை வணங்குவதே கார்த்திகை தீப நோக்கம் ஆகும்.




இது ஒரு மீள்பதிவு ஆகும்.குருவின் கருணையினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை குன்றத்தூர் கோவிந்தன் தரிசனம் பெற்று, அங்கே உழவாரம் செய்தோம். மேலும் சென்ற மாதம் கந்தலீஸ்வரர் கோயிலில் செய்த உழவாரப் பணி அனுபவத்தை பதிவாக தர விரும்பினோம். அந்த உழவாரப் பணி மறக்க முடியாத ஒன்று, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று சொல்வார்கள். நம்மைப் பொறுத்த வரை ஒரே கல்லுல மூன்று மாங்கா..பின்னே..

உழவாரப் பணி நிறைவில் மூன்று தரிசனங்கள் பெற்றோம், குன்றத்தூர் கந்தலீஸ்வரர், குன்றத்தூர் முருகன் ,குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் என்று..இன்னும் அந்த தித்திப்பு மனதுள் உள்ளது குன்றத்தூர் கோவிந்தன் தரிசனம் பெற இயலவில்லை. அதனை இதோ வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு செய்து முடித்தோம். சரி ..நாம் விசயத்திற்கு வருவோம். இன்றைய பதிவில்  TUT குழுவின் மூலம் நாம் பெற்ற கார்த்திகை தீபம் தரிசனத்தை தர விழைகின்றோம்.


குன்றத்தூர் உழவாரப் பணி முடித்ததும், ஆலய நிர்வாகி அவர்கள், தீபத்திற்கு குன்றத்தூர் வருமாறு நம்மைப் பணித்தார். நாம் திருஅண்ணாமலை சென்று கார்த்திகை தீபம் காண விரும்புவதாய் சொல்லி இருந்தோம். திருஅண்ணாமலை செல்லாது இருந்தால் குன்றத்தூர் வருவதாக சொல்லி இருந்தோம். கடைசியில் திருஅண்ணாமலை தீப தரிசனம் செல்ல இயலவில்லை. நம் மகளிர் குழுவிடம் பேசி, மாலை குன்றத்தூர் கோயிலில் தீபம் ஏற்ற இலுப்ப எண்ணெய் வாங்கி வருமாறு கூறினோம். அவர்களும் சரி என்றார்கள். திருமதி பரிமளம், திருமதி சுபாஷினி, திருமதி மாலதி மூவரும் குன்றத்தூர் கந்தலீஸ்வரர் கோயிலுக்கு வருவதாக சொன்னார்கள்.

நாமும் அன்று மாலை சரியாக 5 மணி அளவில் கோயிலை அடைந்தோம். மூவரும் சற்று நேரத்தில் வந்து விட்டார்கள்.  நம் கையில் என்ன இருக்கின்றது? நடப்பதெல்லாம் அவனின் அருளன்றோ ! என்று நினைக்க தோன்றியது. திருமதி பரிமளம் அவர்கள், சென்ற மாத உழவாரம் போது, அறுபத்து மூவர் சன்னிதியை தூய்மையாக்கி விட்டு, அப்படியே ஒவ்வொரு அடியார்க்கும் விளக்கு போட்டால் எப்படி இருக்கும் என்று மனதுள் நினைத்தார்களாம். இதோ இன்றைய தீபத் திருநாளில் கனவு நனவானது.




கோயிலை அடைந்ததும், திரு விஜயகுமார் அவர்களிடம் பேசி, தீபம் ஏற்ற ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டோம். ஈசனார் தரிசனம் பெற்ற பின்பு, அப்படியே கோயிலின் வெளியே வந்து, விளக்கு எடுத்து வைத்தல்,திரி போடுதல் போன்ற வேலை ஆரம்பமானது.











நேரம் ஆக, ஆக துள்ளாத மனமும் துள்ளியது. பின்னே..முதன் முதலாய் கார்த்திகை தீபம் கோயிலில் வந்து கொண்டாட இருக்கின்றோம், மேலும் நம்முடன் TUT குழுவும் உள்ளது என்னும் போது , மனம் துள்ளுவதில் சந்தேகம் இல்லையே. இதோ அடியார் ஒருவர் கோலம் இட்ட காட்சி. நம்மை வரவேற்கும் அழகுக் கோலம் 







கோயிலின் வெளியே ஒரு கல்வெட்டு இருந்தது. அதனை அங்கிருந்த மூதாட்டி தொட்டு வணங்கினார்கள். நாம் சென்று கேட்டபோது, விளக்கம் சொல்லவில்லை, மாறாக அனைத்தும் இதில் அடக்கம் என்றார்கள், நாமும் சென்ற முறை வந்த உழவாரப் பணியின் போது, இதனை கவனிக்க வில்லை, இதோ இன்று கவனித்துப் பார்த்தோம், கல்வெட்டு எழுத்துக்கள் நமக்குப் புரியவில்லை
சொக்கப் பனை ஏற்ற தயார் 
தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. அந்த வரிசையில் இங்கு நாம் சிவனுக்கு ஏற்றப் படும் தீபம் பார்க்க வந்திருக்க நாம் நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு, அறுமுகனுக்கு ஏற்றப்படும் தீப தரிசனமும் நாம் பெற்றோம்.


                                                  இலுப்பை எண்ணெய் சேர்க்கப்பட்டது

                                            
                                    தீபம் ஏற்ற அகல் விளக்குகள் தயார் செய்த காட்சி

ஒவ்வொரு அடியாரிடமும் ஒவ்வொரு அகல், எண்ணெய் ஊற்ற, மற்றொருவர் வந்து திரி வைத்து, லேசாக கற்பூரம் வைத்த காட்சி 



  முதல் சுற்று முடிவில், அகல் தீர்ந்து விட்டது, இதோ மறுபடியும் வந்து, அகல்கள் துடைக்கப்பட்டன.


                                     சேக்கிழார் பெருமானுக்கு அகல் வைத்த காட்சி






                          நவகிரக சன்னதியில் தீபம் ஏற்ற ஆயத்தப் பணிகள் ஆரம்பம்



கோயிலின் மேலே தீபம் ஏற்ற தயார் செய்த காட்சி 
 


சைதாப்பேட்டை பகுதியில் இருந்து வரும் அடியார் இவர், ஒவ்வொரும் நாயன்மாரின் பிறந்த நட்சத்திரத்தில் இங்கு வந்து, அன்றைய தினம் அடியார்களை தொழுது, தூப தீபம் காட்டி வழிபடுவது இவரது வழக்கம். இதனை நாம் கேட்ட போது மெய் சிலிர்த்தது. அடுத்த சந்திப்பில் இவரிடம் நிறைய விசயங்கள் கேட்க வேண்டும் என்று மனதில் விரும்பினோம். நேரம் மாலை 5:50 மணியை நெருங்கி விட்டது.  நாம் கொடுத்த இலுப்பை எண்ணையை அகலில் ஊற்றிவிட்டு, மீதம் எண்ணையை முருகன் கோவிலில் சேர்ப்பிக்க உத்தரவானது. சரி ! என்று கூறிவிட்டு, நாம் குன்றத்தூர் முருகன் கோவில் நோக்கி புறப்பட்டோம். வெளியே வந்து பார்த்தால், குன்றத்தூர் முழுதும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது.






 ஒரே பதிவாக , கார்த்திகை தீப அனுபவத்தை தர விரும்பி தொடங்கினோம். ஆனால் பதிவின் நீளம் கருதி குன்றத்தூர் முருகன் கோயில் அடிவாரத்தில் நாம் இந்த பதிவை நிறைவு செய்கின்றோம். அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம். என்னவென்று தெரியவில்லை, குன்றத்தூர் பதிவு என்றாலே தொடர்பதிவு தான் போலிருக்கின்றது.

- மீண்டும் சிந்திப்போம்.

ஆலய தரிசனம் எனும் அருமருந்து

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நல்வினையாற்ற 19 வழிகள் என்ற பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். பார்ப்பதற்கு மிக மிக எளிதாக தோன்றும். ஆனால் நடைமுறைப்படுததுவது தான் சிரமம். பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடுவது தானே நம் இயல்பு. இன்றும் மீண்டும் ஆலய தரிசனம் என்ற பதிவில் ஆன்ம தரிசனம் பெற இருக்கின்றோம். சாலையில் செல்லும் போது கன்னத்தில் போட்டுக் கொள்வதல்ல. ஆலயத்தில் சுமார் 1 மணி நேரமாவது இருந்து நம் அகத்தை சுத்தமாக்குவதே ஆலய தரிசனம். இது அற்புத மருந்து. இதற்கு நாம் நம் நேரத்தை முதலீடாக்க வேண்டும். புற சுத்தத்தை வீட்டில் செய்து அக சுத்தத்தை முதலில் ஆலயத்தில் செய்து பழகிக் கொள்ளுங்கள். பின்பு இந்த அக சுத்தத்தை வீட்டிலும் செய்து கொள்ளலாம்.

சரி.தரிசனம் பெறலாமா?

இன்று வழக்கம் போல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்திற்கு சென்றோம். ஆலயம் நடை சாத்தி இருந்தார்கள். உடனே கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயத்திற்கு சென்றோம். நேற்று தான் வேலி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ லெட்சுமி ஸ்ரீ குபேரர் மற்றும் ஸ்ரீ சாய்பாபா ஆலயத்திற்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்றைய மழையில் நம்மால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை.


உடனே வேலி அம்மன் ஆலயத்திற்கு சென்றோம். இன்று கிருத்திகை நட்சத்திரம் ஆதலால் முருகர் வழிபாடும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிறகென்ன? இன்று வேலி அம்மன் கோயிலில் நாம் தரிசனம் செய்தோம்.






ஸ்ரீ வேதநாயகி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரரிடம் நம் பிரார்த்தனைகளை விளக்கேற்றி சமர்பித்தோம். அடுத்து கிருத்திகை முருகன் தரிசனம் பெற்றோம்.





முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
    மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
    தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
    நம்பியே கைதொழுவேன் நான்.

என்று தொழுதோம். அடுத்து ஸ்ரீ லெட்சுமி ஸ்ரீ குபேரர் மற்றும் ஸ்ரீ சாய்பாபா சன்னிதி நோக்கி சென்றோம்.











சாய்பாபாவிடம் ஒரு பிரார்த்தனை வைத்துவிட்டு, பிரசாதம் பெற்று அங்கிருந்து கிளம்பினோம். வழக்கமாக செல்லும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம் பெறவில்லை என்றாலும் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலய தரிசனம் இன்று கிடைத்தது யாம் செய்த புண்ணியமே என்று தான் தோன்றியது. 

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அன்பும் அருளும் ஓங்குக - அகத்தியர் பெருமானுக்கு ஆயில்யம் நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_18.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_15.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

 மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html

பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_96.html


Sunday, December 1, 2019

நல்வினையாற்ற 19 வழிகள்

அடியார் பெருமக்களே...

அனைவருக்கும்  வணக்கம். பொதுவாக நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம் இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால் நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19 வழிகள்  என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம். இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை நல்வினையாற்ற வைக்கும்.



 சரி. பதிவின் உள் செல்வோமா?


முதல் முத்தே..அருமையான ஒன்று. வாழ்தல் என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை. ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும் என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம்.


வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நம் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். அன்றைய தினம் நீங்கள் விரதம் இருப்பது கூட இன்னும் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.


என்னப்பா? இதெல்லாம் ஒரு குறிப்பா? என்று ஏளனமாக நினைக்காதீர். இன்றைய சூழலில் நாம் ஒவ்வொருவரும் தேவையைத் தாண்டி தான் பொருட்கள் வைத்திருக்கின்றோம். அலைபேசி வந்த புதிதில் அனைவரிடமும் ஒன்றே ஒன்று இருந்தது. "ஜியோ" வந்த பின்பு அனைவரிடமும் இரண்டு,மூன்று அலைபேசிகள் ( நம்மையும் சேர்த்து தான் )..ஆனால் ஒரு அலைபேசியை நாம் உபயோகித்தால் போதுமானது. இது போல் தான் ஆடைகள். அனைத்து உபயோகமற்ற ஆடைகளை எடுத்து மூட்டையாக கட்டி வைத்திருப்போம்.  அவற்றை தானமாக கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்துக்  கொண்டே இருப்போம். எல்லா நாளும் நல்ல நாளே.


நம் சுற்றுப்புற குப்பையகற்று. இது புறத்தில் நிகழ, நாம் முதலில் அகக் குப்பையகற்ற வேண்டும். அகமும்,புறமும் வேறு வேறு அல்ல என்று நாம் உணர வேண்டும்.


எதற்கெடுத்தாலும் அலைபேசி எடுத்துக் கொண்டு பிணம் போல் திரிவதை விடுத்து, நம் இளையோர்களிடம் இணைந்து புதிதாக படைக்கலாம். குறிப்பாக தமிழ் நூல் படிக்கலாம் இது நம்மை இன்னும் இளமையாக்கும்.


சிறியோர்களிடம் மட்டும் இணைந்தால் போதுமா? மூத்தோரிடம் அன்பு செய்க. ஆசி பெறு.


இது தான் மிக மிக முக்கியமான ஒன்று, பிரார்த்தனை .சாதாரணம் ஒற்றை சொல் என்று எண்ணாதீர். நாமும் நம் தளம் சார்பாக பிரார்த்தனை அவ்வப்போது செய்து வருகின்றோம். இன்னும் நிறைவில் இல்லை. குருவின் வழிகாட்டல் வேண்டி நிற்கின்றோம்.


இப்படி சொன்னவுடன், வள்ளுவரே சொல்லிவிட்டார் என்று தர்க்கம் செய்யாதீர். ஒரே ஒரு நாள் ..அதுவும் மாதத்திற்கு ஒரே ஒரு நாள் இதை பின்பற்ற வேண்டும். இவை நம்மை அட்டாங்க யோகத்திற்கு நம்மை வழி நடத்தும் என்பதே உண்மை.


இயற்கையை நேசி. இயற்கை தான் கடவுள். கடவுள் தான் இயற்கை. நடை பயிலுங்கள். ஆரோக்கியம் தாண்டி ஆன்ம உணர்வில் ஒன்றுங்கள். இதெல்லாம் ஒரே நாளில் நடந்து விடாது. சித்த அடியார்கள் அனைவரும் சித்தர்களை ஆராதிப்பதுடன், இயற்கையை நேசிக்க கற்று கொள்ளுங்கள். உதாரணமாக மலை யாத்திரைக்கு செல்லும் போது , அருவி குளியல் கிடைத்தால் சோப்பின்றி குளியுங்கள். இது போன்று சில சில மாறுதல்களை செய்யுங்கள். இயற்கையோடு இணைந்து இருங்கள். இது பற்றி நாம் இன்னொரு பதிவில் பேசலாம்.





 நல்லோரைக் காண்பதும் நன்று
நல்லோர் சொற் கேட்பதும் நன்று
நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று
நல்லோருன் இணங்கி இருப்பதும் நன்று.

என்று எப்போதும் நன்மையே செய்ய நாட்டமாயிரு. அப்படி இருந்தால் தான் செடி,கொடிகளுக்கு நீர் ஊற்றும் போது நம்மைப்போல் அவற்றையும் நேசிக்க முடியும்.


சைவமா? அசைவமா? என்று பட்டிமன்றம் இங்கு வேண்டாம். வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது உயிர் கொலை உணவில் சேர்க்காது இருக்க பழகவும். பொதுவாக சைவம் என்றாலே சிவனார் என்று நம் மனதில் தோன்ற வேண்டும். ஆனால் இன்று உணவின் வகையில் என்று பேசும் நிலையில் இருப்பது வேதனையே.

அப்படியென்றால் காய் கறிகளும்,கீரைகளும் உயிர் தானே. என்று தர்க்கம் இங்கே தேவை இல்லை.



அந்த காலத்தில் ஒவ்வொருவரும் சராசரியாக 120 ஆண்டுகள் வரை வாழ்ந்து உள்ளார்கள்.அதில் 60 வயது வரை அவர்களின் இளமைக்காலமே. 60க்கு மேல் தான் முதுமை தொடங்கும். ஆனால் இன்று நிலைமை தலைகீழ். 30 வயது தள்ளவே அரும்பாடு படுகின்றோம். இது ஒருபுறமிருக்கு, 10க்கு மேற்பட்டோரிடம் அன்பை செலுத்து.


சராணாகதி. இறைவனிடம் பெற அனுதினமும் முயல்கின்றோம். அது போலவே குடும்பத்தில் கணவனும், மனைவியும் சரணாகதி தத்துவத்தை பின்பற்றுங்கள். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்று மனதில் நினைக்க வேண்டவே வேண்டாம். பெரியவர் நமக்கு மேலே ஒருவர் இருந்து கொண்டிருக்கின்றார்.

இன்று தினசரி செய்தித்தாளை திறந்து பார்த்தால், எத்துணை விபத்து செய்திகள், விபத்து செய்தி இன்றி செய்தித்தாள் பார்ப்பது அரிது. சாலைத் தகராறுகளை தவிர்


நாம் படுக்கையில் இருந்து எழுந்ததும் எதைத் தேடுகின்றோம், அந்த சூனியக்காரனைத் தானே..ஆம்..அலைபேசி தான். இனிமேலாவது எழுந்தவுடன் ஒரே ஒரு நிமிடம் அமர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்லி, அன்றைய நாளை நன்மனத்தோடு துவக்குங்கள்.


சேவை..அது நம் குடும்பத்திற்கு ஆற்றினால் போதும் என்று எண்ணாதீர். உறவற்ற மக்களுக்கு ஆற்றுவதே சேவை. பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா? என்றால் மனமிருந்தால் சாத்தியமே. முதலில் அண்டை வீட்டாரிடம் பேசிப் பாருங்கள். அவர்கள் பேசவில்லை என்றால் அவர்களை வாழ்த்துங்கள். நாளாக நாளாக அவர்களே நம்மிடம் வந்து உறவாகிவிடுவார்கள்.




கண்ணை இறுக்க மூடிக் கொண்டு நாம் மட்டும் நன்றாக வாழ்ந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். பிறர்க்கு உதவினால் தான் நாம் வாழ முடியும். நான் மட்டும் என்று நினைத்தால் அது வெறும் பிழைப்பு, நாம் என்று நினைத்தால் அது வாழ்வு. வாழ்வா? பிழைப்பா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


நாம் தற்போது வாழ்ந்து வரும் நிலைக்கு நாமே காரணம். அது போல் நம் தவறுகளுக்கும் நாம் தான் காரணம், தவறுக்கு நாமே பொறுப்பு ஏற்றுக் கொள்வோம். பிறரின் மீது பழி சுமத்தி ஆகும் பயன் ஒன்றும் இல்லை. நாமே பொறுப்பு ஏற்கும் போது, மீண்டும் அந்த தவறு நிகழாது நம்மால் சரி செய்ய இயலும். மற்றவர் மீது பழி செலுத்தினால், அதே தவறு மீண்டும் மீண்டும் தோன்றத் தான் செய்யும்.


ஒவ்வொரு உயிரையும் நேசி. யாராக இருந்தாலும் கண்ணைப் பார்த்து பேசி பழக வேண்டும். எப்போதும் திறந்த புத்தகமாக இருக்க கற்றுக் கொள்வோம்.


நம்பிக்கை ... இதுவே நம் வாழ்வின் ஆதாரம், அச்சாணி. நம்மை, நம் பலத்தை நம்புவோம்.

என்ன அன்பர்களே..19 வழிகளும் சிறந்த வழிகள் தான். வாழ்வில் வெற்றி பெற இவை அனைத்தும் தேவை. நாமும் இவற்றை பினபற்ற முயற்சி செய்து வருகின்றோம். ஒவ்வொன்றாக பினபற்றுங்கள். பிறகென்ன வானம் வசப்படும்.