"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 10, 2025

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (11.01.2025)

                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து  சனி பிரதோஷ பதிவாக இன்று சமர்ப்பிக்கின்றோம். காசியில் உரைத்த வாக்கில்...என் பக்தர்கள் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என நமக்கு கூறியுள்ளார்...இதில் இன்று பிரதோஷம் வருகின்றது .  இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை இனி காண உள்ளோம் . 




 சித்தன் அருள் - 1764 - அன்புடன் அகத்தியர் - திதியில் செய்ய வேண்டியவை! 

நம் குருநாதர் அகத்திய பெருமான்.... காசியில் உரைத்த வாக்கில்...என் பக்தர்கள் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கூறியுள்ளார்...இவ் வாக்கினை  அனைவரும் உணர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் 

அப்பனே ஒரு ரகசியத்தை இப்பொழுது சொல்கின்றேன் என்பேன் அப்பனே

முதுகில் அப்பனே வெளிச்சமும் அதாவது இரவும் பகலுமாக அப்பனே பின் நிச்சயம் இருக்கும் அப்பா.. அதைத் தன் வெளிச்சமாக எடுத்து வந்தால்  அப்பனே நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்பேன். அப்பனே 

அப்பனே அதை தன் வெளிச்சமாகவே பின் ஆக்கிவிட்டால் அப்பனே அனைத்திலும் வெற்றியப்பா

அப்பனே இதற்கும் கூட அப்பனே பின் மூச்சுப் பயிற்சி அனுதினமும் செய்ய வேண்டும் (பிராணயாமம்) என்பேன் அப்பனே 

அப்பனே முதுகுத்தண்டு சாதாரணமில்லை என்பேன் அப்பனே 

அதில் தான் அனைத்து விஷயங்களும் அடங்கியுள்ளது என்பேன். அப்பனே... அவை தான் கிரகங்களின் சக்தியை கூட ஈர்த்துக் கொடுக்கின்றது என்பேன். அப்பனே... இரவு அதாவது வெளிச்சமே இல்லாமல் இருந்தால் அப்பனே கிரகங்கள் தாக்குகின்ற பொழுது பல கஷ்டங்கள் வரும் அப்பா 

ஆனாலும் வெளிச்சம் ஆகிவிட்டால் அப்பனே பல கஷ்டங்கள் வராதப்பா 

அப்பனே அங்கு வெளிச்சம் ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் நிச்சயம் புருவம் மத்தியில் அப்பனே தானாகவே ஒரு ஒளி வந்துவிடும் அப்பா 

அப்பனே அங்கு இறைவனை வரவழைத்து விடலாம் என்பேன். அப்பனே பின்பு
நீங்கள் தியானத்தில் அமருகின்ற பொழுது என்னென்ன நடக்கும் என்பதை எல்லாம் நீங்களே அறிந்து கொள்ளலாம் என்பேன். அப்பனே. 

மூச்சு பயிற்சியை தொடர்ந்து அப்பனே செய்து கொண்டு வருகின்ற பொழுது முதுகுத்தண்டில் வெளிச்சம் ஆகிவிடும் அப்பா!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இதை அனைவருக்கும் தெரிவி!!!

அனைவரும் இதை கடைப்பிடித்து வர வேண்டும் என்பேன் அப்பனே!!


நிச்சயம் பின் அதாவது பிரதோஷ வேளைகளில் கூட அப்பனே எப்பொழுதும் கூட அப்பனே நிச்சயம் அதாவது பின் ஏதாவது ஒன்றை  திருத்தலத்திற்கு சென்று செய்து கொண்டே வாருங்கள் அப்பனே இன்னும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே.

(பிரதோஷ காலசமயங்களில் ஈசன் ஆலயத்திற்கு சென்று ஏதாவது சேவைகள் வழிபாடு மற்றும் செய்து வர வேண்டும்)..

இன்றைய பிரதோஷ நாளில் . அதுவும் சனி பிரதோஷ நன்னாளில் குருநாதர் உரைத்த வழிபாட்டை செய்து வாழ்வாங்கு வாழ்வோம் என்று கூறி  பதிவை முழுமை செய்வோம் .  இன்றைய நாளின் முக்கியத்துவம் உணர்த்திய நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு நன்றி கூறி மகிழ்கின்றோம் . நேற்றைய நாளில் பெருமாள் வழிபாடு செய்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம் .  அதே போல் இன்று சிவ வழிபாடு செய்ய வேண்டுகின்றோம் .  நாளைய தினமும் மிக மிக சிறப்பான நாள் .  ஆம் .  நாளை மார்கழி திருவாதிரை .  அதனை பற்றிய சிறப்பு பதிவை அடுத்து காண்போமாக!


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 1263 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வைகுண்ட ஏகாதசி வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/01/1263.html


திதி ரகசியம் - வைகுண்ட ஏகாதசி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (10.01.2025) - https://tut-temples.blogspot.com/2025/01/10012025.html

 அன்புடன் அகத்தியர் - 5 திதி ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/5.html

சித்தன் அருள் - 1764 - அன்புடன் அகத்தியர் - திதியில் செய்ய வேண்டியவை! - https://tut-temples.blogspot.com/2025/01/1764.html

 லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - 04.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/04012025.html

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

No comments:

Post a Comment