இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர்
அருளால் வழக்கம் போல்
நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் நம்மை நம்
குருநாதர் வழிநடத்தி வருவதை பார்க்கும் போது,இறைவா! அனைத்தும் நீயே!
தெய்வமே! குருநாதா!! என்று மனதுள் அவ்வப்போது வேண்டி வருகின்றோம். இதனை
எப்போதும் வேண்ட நம் மனதில் இருத்த முயற்சித்து வருகின்றோம். குருநாதரின்
உத்தரவாக இன்றைய பதிவை சித்தன் அருள் - 1758,1783,1780,1777 - அன்புடன்
அகத்தியர் - தொகுப்பில் இருந்து குருநாதர் அகத்தியர் பெருமான் ஏன் நவகிரக தீபம் நம்மை ஏற்ற சொன்னார் என்பதை இங்கே நாம் கண்டு
தெளிய வேண்டும்.
அகத்தியர்: நிறையவே
கர்மாக்களை சேர்த்துக்கொண்டவர்கள், தனிப்பட்ட வாக்கு கேட்கும் பொழுது,
முதலில் அவர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள பல விஷயங்களை கூறினால்,
எதையுமே மனதிருத்தி, ஆத்மார்த்தமாக கூட செய்வதில்லை. பின் இங்கு வந்து
அகத்தியனுக்கு எங்கு தெரியப்போகிறது என்று வாக்கு கேட்க வரும் பொழுது
மறுபடியும் சுழல விடத்தான் தோன்றும். "செய்" என்று சொன்னால், முழு
நம்பிக்கையுடன், இயன்றவரை நிறைவாக செய்ய வேண்டும். பல திருத்தலங்கள் ஏறி
ஏறி ஏன் செய்யச்சொல்கிறேன் என்றால், கடை நாள் வரை சேவைகள் புரிய
இருக்கின்றதப்பா. ஆதலால், அனைவர்க்கும் வாக்குகள் உண்டு. எப்பொழுது, எங்கு
என்பதை யானே தீர்மானிக்கிறேன். அப்பனே! ஒன்றை சொல்கின்றேன். அனைவரையும்
ஒன்றை (விளக்கு போடுவது) செய்யச் சொல்லியிருக்கிறேன். அதை செய்யச்சொல்
முதலில்.
மனிதனின்
கட்டுப்பாடு கிரகங்கள் கையில் உள்ளது. ஆகவே, கிரகங்கள் விலகி வழிவிட்டால்
தான் இறைவனிடமே செல்ல முடியும். இறைவனை நெருங்க நெருங்க, கிரகங்கள்
தடுக்குமப்பா. அடித்து போடுமப்பா. அப்படியும் இறைவன் தான் வேண்டும் என்று
சென்றால், போய் தொலையட்டும் என்று விட்டுவிடும். அப்பொழுதுதான் உண்மையான
பக்தி பிறக்கும், உண்மையான ஞானம் பிறக்கும்.
யான் தீபம் ஏற்ற சொன்னதே மற்றவர்களுக்காகத்தான்.
அகத்தியப் பெருமானுக்கு மிக்க நன்றி! விளக்கம் நிறைவு பெற்றது!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment