"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, January 9, 2025

திதி ரகசியம் - வைகுண்ட ஏகாதசி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (10.01.2025)

                                                      இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து வைகுண்ட ஏகாதசி பதிவாக இன்று சமர்ப்பிக்கின்றோம். காசியில் உரைத்த வாக்கில்...என் பக்தர்கள் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என நமக்கு கூறியுள்ளார்...இதில் நாளை ஏகாதசி திதி வருகின்றது .  அதுவும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பான நாளை நாம் பெற உள்ளோம். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை இனி காண உள்ளோம் . 




அப்பனே நிச்சயம் பின் ஏகாதசி அன்று அப்பனே நிச்சயம் சர்க்கரை பொங்கலை இட்டு அப்பனே நிச்சயம் விஷ்ணுவிற்கு சமர்ப்பிக்க நல் செய்திகளும் வருமப்பா

அப்பனே பின்பு அப்பனே ஏகாதசி அன்று முடிகின்ற மறுநாள் அப்பனே (ஏகாதசி முடிந்து அடுத்த நாள்) அவையைக் கூட அப்பனே (பெருமாளுக்கு நைவேத்தியமாக படைத்த சர்க்கரை பொங்கலை) பின் அழகாக எறும்புகளுக்கு இட்டு விடுங்கள்.

(குருநாதர் வாக்கினை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பக்தர் ஏகாதசி என்று சாதத்தை சமைப்பது  இல்லை என்ற ஒரு ஐதீகம் இருக்கின்றது... என்று கேட்டதற்கு பெருமாளுக்கு படைத்து விடுங்கள் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக என்று குருநாதர் மறுமொழி கூறினார்.

அடுத்து வைகுண்ட ஏகாதசி பற்றி நம் குருநாதர் கூறிய வாக்கினை இனி அறிய உள்ளோம் . 










6/01/2023 மார்கழி திங்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தில் வெள்ளிகிழமை பௌர்ணமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி

ஆதி ஈசனின் பொற்காலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!!!

அப்பனே நலன்கள்!!!! ஆசிகள்!!!! அப்பனே இன்னும் எதை எதை என்றும் சொல்வதற்கும் கூட அப்பனே பின் நாராயணனே அப்பனே!!! கொடுக்க தயாராகிக்கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!! 

ஆனால்  மனிதனோ அதைப் பெற்றுக் கொள்ள பின் தகுதிகள் இல்லை என்பதுதான் ஆணித்தரமான உண்மை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் எதை எதையோ நினைத்து நினைத்து எதை எதையோ செய்து செய்து அப்பனே கடைசியில் பார்த்தால் பின் அப்பொழுதுதான் பக்தி என்னவென்று  கூட தெரிகின்றது என்பேன் அப்பனே!!

அதனால் பக்திகள் என்பது எதற்காக செலுத்துகின்றான் என்பதை தெரியாமலே செலுத்துகின்றான் அப்பனே!!! 

இதனால் எப்படித்தான் நன்மைகள் ஆகும்?? என்பதைக் கூட மனிதனுக்கு புரியாமல் அதாவது தெரியாமல் அலைந்து திரிந்து கடைசியில் இறைவா!!! இறைவா!!! என்று ஓடோடி வந்து வந்து இறைவனை அடைந்தால் இறைவன் ஐயோ பாவம் தான் என்று சொல்லுவான்!!!

எதை எதை என்று அறிய அறிய இன்னும் இவன் பின் எவ்வளவுதான் கர்மத்தை சுமந்து வந்தான் இவ்வுலகத்தில்!!!! இன்னும் கர்மத்தை இவன் ஏற்றிக் கொண்டிருக்கின்றானே... எப்படி என்பதை பாவம் எதை என்று அறிய அறிய பின் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கும் பொழுது சிறிதளவு செய்து விட்டால் மீண்டும் அவந்தனுக்கு பின் அனைத்தும் வந்துவிட்டது மீண்டும் கர்மத்தில் தான் செல்கின்றான் இப்படி பின் வட்ட வட்டமாக வரும் வாழ்க்கையில் இவந்தன் கர்மத்தை வட்டமாகவே பின் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இன்னும் புரியாமலே வாழ்ந்து வந்து வாழ்ந்து வந்து கஷ்டங்கள் உள்ளே சென்று கொண்டே இருக்கின்றான். 

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே இது கலியுகம். கலியுகம் என்றாலே அனைவருக்கும் பிரச்சினை தானப்பா!!!! 
கலியுகம் என்றால் பிரச்னை என்பது தான் பொருள்!!!!!  என்பேன் அப்பனே!!!! 

அப்பொழுது எப்படித்தான் ஒருவனின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று சொல்!!!

அப்பனே அதனால்தான் நிதானித்து பின் விதியை கூட எவ்வாறு என்று அறிந்து அறிந்து சித்தர்கள் நிச்சயம் பல பல நபர்களையும் கூட எதை என்று நினைத்து நினைத்து ஒவ்வொன்றாக பின் நல்விதமாகவே யான் பின் இணைத்துக் கொண்டே இருக்கின்றேன் என்னிடத்தில் அப்பனே!!!!

நலமாகவே!!! இதனால் புண்ணியங்கள் செய்து நிச்சயம் பின் பிறவி இல்லாமல் வாழ்ந்திடலாம் என்பேன் அப்பனே!!!!

பிறவிகள் வேண்டாம்!!! வேண்டாம்!!! நிச்சயம் சித்தர்களின் கொள்கை பிறவிகள் வேண்டாம் என்பதே!!! என்பேன் அப்பனே!!!! 

அதனால் சித்தர்களை நிச்சயம் எதை என்று அறிய அறிய தேடி வருபவர்களுக்கு அப்பனே முதலில் பிரச்சனை தான் என்பேன் அப்பனே!!!!

அவ் பிரச்சனை எதற்காக என்றால் அப்பனே கர்மத்தை தீர்க்கவே என்பேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அதனால் எங்களை நாடி வருபவர்களுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை யாங்களே கொடுப்போம்!!!!

ஏனென்றால் வேண்டாமப்பா!!! மனித பிறவி!!!! தரித்ர பிறவி என்பேன் மனிதப் பிறவி!!! அனைத்திலும் கீழான பிறவி என்பேன் அப்பனே!!

ஆனாலும் பின் மேலான பிறவி என்பதை கூட நிச்சயம் மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அனைத்தும் கிட்டுகின்றது என்பதை கூட.............

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய பின் மேலான பிறவியை பின் கொடுத்தாலும் அதை சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்பேன் மனிதனுக்கு!!!!

அப்பனே இவ்வாறு சரியாக பின் வாழத் தெரியாமல் வாழ்ந்து வந்து அப்பனே படுகுழியில் வீழ்ந்து வீழ்ந்து பின் எதை என்று பின் அக் குழியிலே மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று யாரும் பின் ஆனாலும் பின் எதை என்று அறிய அறிய அக் குழியில் தான் இருக்கின்றான்.. மனிதனை பார்த்து அவ் பரிகாரம் செய் இவ் பரிகாரம் செய் என்று சொல்லிட்டு ஆனாலும் குழியின் மேலே ஆனாலும் குழியில் இருக்கும் மனிதனுக்கு எதை என்று அறிய அறிய கையைப் பிடித்து பின் மேலே இழுக்க தெரியவில்லை மனிதனுக்கு இதுதான் பரிகாரம் என்பது!!! தெரிந்து கொண்டீர்களா!!!!

அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இதனால் பின் அக் குழியில் இருந்து அப்பனே மேல் நோக்கி இழுப்பதற்கு எங்கள் ஆசிகள் அப்பனே அவசியம் என்பேன் அப்பனே!!!!

இதைத்தான் பரிகாரம் எதை என்று அறிய அறிய குழியில் இருக்கும் பொழுதே எதை எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அவை செய் இவை செய் மேல இருக்கும் மனிதன் அப்படியே சொல்லி கொண்டு போய் கொண்டிருக்கின்றான்!!!

ஆனால் அக்குழியில் இருந்து மேல் நோக்கி எப்படி வரவேண்டும் என்பதை கூட  தெரியாமல் எதை என்று அறிந்து அறிந்து பின் தெரியாமலே மனிதன் சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்பது தான் ஆணித்தரமான உண்மை அப்பனே!!!!

நலமாகவே நலமாகவே எதை என்று அறிய அறிய யாங்களும் வலம் வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!! ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்!!!

அப்பனே நலமாக நலமாக அப்பனே ஆசிகள் ஆசிகள் கொடுத்துக் கொண்டே வருகின்றோம் அப்பனே!!!

 நலமாக பின் எதை எதை என்று அறிய அறிய அப்பனே இவ் மார்கழி திங்களில் அப்பனே சிறப்பு ஒன்றை யான் விவரிக்கின்றேன் அப்பனே!!!

நலமாகவே பின் எதை என்று அறிய அறிய வளிமண்டலத்தில் எதை என்றும் உணரும் ஒரு படலம் நல்விதமாகவே இருக்கும் என்பேன் அப்பனே!!!!!

அவைதன் நல்விதமாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் மனிதனுக்கு தெரியாதவைகள் கூட யான் சொல்கின்றேன் இப்பொழுது!!!!

அப் படலம் எதையென்று அறிய அறிய அப்பனே பின் சிறிய சிறிய பின் ஓட்டைகளாகவே மாறும் என்பேன் அப்பனே!!!
சரி பாதியாக சதுரமாக இருக்கும்!!!!

ஆனால் அதில் கூட சரியான ஓட்டைகள் எதை என்று அறிய அறிய இவ் மார்கழி திங்களில் ஆனால் அப்பனே பின்  அவ் படலமானது மேல் நோக்கி பார்த்தால் எதை என்று அவ் உலகம் புண்ணிய உலகம் என்பேன் அப்பனே!!!! இது எவருக்கும் தெரியாது என்பேன் அப்பனே!!! 

ஆனால் இவை அதாவது பின் அவ் ஓட்டைகள் பின் தெரியும் பொழுது அங்கிருந்து ஒளியானது அப்பனே சரியாகவே முதலில் எதை என்று அறிவதற்குள் அப்பனே இங்கே தான் படும்( திருமலை திருப்பதி கருவறையில்) என்பேன் அப்பனே!!!

அதாவது ஏழுமலையானிடத்திலே!!!! 

இதிலும் சூட்சமம் உள்ளது என்பேன் அப்பனே ஏழுமலையான் இருக்கின்றானே அங்கே தான் முதலில் பின் அதாவது  அவ் ஒளி எதை என்று அறிந்து அறிந்து அங்கே பின் திறக்கும் என்பேன் அப்பனே!!!

பெருமாள் மீது பட்டு அப்படியே (பெருமாளை தரிசனம் செய்யும் பொழுது) மனிதன் மீது எதிரொளிக்கும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது மனிதன் நின்று எவை வேண்டிக் கொண்டாலும் அவை நிச்சயமாய் நடக்கும் என்பேன் அப்பனே!!!

இதை யான் பல ரூபத்தில் கூட எதை என்று அறிய அறிய அப்பொழுது நீங்கள் முருகனாக நினைத்து வேண்டிக் கொண்டாலும் ஈசனாக வேண்டிக் கொண்டாலும் ஏன் பின் தேவியாக வேண்டிக் கொண்டாலும் நிச்சயம் தேவியே!!!!!!!! எந்தனுக்கு கொடு என்றால் உடனடியாக கொடுக்கப்படும் ஆசிகள்!!!

ஈசனே எந்தனுக்கு கொடு!!!!!! என்றால் நிச்சயம் உடனடியாக கொடுக்கப்படும்!!!

அப்பனே ஈசனே!!! ஈசனே!!! முருகா!!! முருகா !!! என்று நினைத்தாலும் கூட உடனடியாகவே அப்பனே நிச்சயம் கொடுக்கப்படும்!!!

ஆனாலும் இதில் தான் சூட்சுமம் உள்ளது என்பேன் அப்பனே!!!!

இவை எப்படி சொல்ல வேண்டுமோ அவை தன் வரும் காலங்களில் நிச்சயம் மனிதனுக்கு யான் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

ஏனென்றால் மாய உலகில் அப்பனே பின் எப்படி இறைவனை வணங்குவது எப்படி எல்லாம் பின் வணங்க கூடாது என்பதை எல்லாம் அப்பனே பின் தெரிந்து கொண்டால் அப்பனே ஆசிகள்!!!

மனிதனும் பின் நல்விதமாகவே வாழ்ந்து விடலாம் அப்பனே அவை மட்டுமில்லாமல் அவ்வொளி பின் நாராயணன் மீது பட்டு எதிரொளிக்கும் போது மனிதன் மீதும் படும் பொழுது கூட நோய்கள் அண்டாது என்பேன் அப்பனே!!!

இதுதான் சிறப்பு என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் சில மனிதர்கள் அங்கு இருக்கும் பொழுதே வினைகள் அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே சில கர்மாக்கள் அப்பனே இருக்கின்றது!!! ஆனாலும் அங்கு( திருமலை திருப்பதியில்) இருப்பவர்களை கூட அப்பனே நோய்கள் வாட்டி வதைத்து தான் கொண்டிருக்கின்றது!!

ஆனாலும் இதற்கும் சரியான தீர்வு எப்படி என்பதையும் கூட நிச்சயம் சொல்வேன் அப்பனே!!!!
வரும் வரும் வாக்கியங்களில் கூட இங்கேயே உரைப்பேன் என்பேன் அப்பனே!!!

எப்படி எல்லாம் நோய்கள் வருகின்றது என்பதையும் கூட அப்பனே சரியான பாதையில் அப்பனே இதனால் மீண்டும் சொல்கின்றேன் அவ் ஓட்டை எதை என்று அறிய அறிய ஓளி விழும் பொழுது அப்பனே அடுத்த ஒளியானது அப்பனே!!!!

 பின் இப்பொழுது நடனமாடுகின்றானே!!!!! அப்பனே !!!!
 """""""""நடராச பெருமான் சிதம்பரம்!!!!!!!!!!!

பின் அங்கு விழும் என்பேன் அப்பனே அதுவும் பின் சரியான முறையிலே அப்பனே எங்கு எதை என்று அவன் மேலே விழும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுதுதான் ஒளி பிரதிபலிக்கும் பொழுது அப்பனே ஆனாலும் எதை என்று அறிய அறிய இங்கு ஒளியானது அப்பனே அருள்கள் கொடுக்கும் ஒளியானது என்பேன் அப்பனே!!!! அங்கு ஒளியானது கர்மத்தை நீக்கும் ஒளியானது என்பேன் அப்பனே!!!

அதனால் இதற்கும் ஒளியின் தன்மைகளை பொறுத்தே மாறுபட்டு இருக்கும் என்பேன் அப்பனே!!!!

இவ் கர்மா எப்படி என்பதை கூட நிச்சயம் விளக்கப் போகின்றேன் அப்பனே அப்பொழுது அங்கே தரிசித்தால் அப்பனே  அவ் ஒளியானது அங்கு பிரதிபலிக்கப்பட்டு மனிதன் மீதும் படும் பொழுது கஷ்டங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே!!!

ஏனென்றால் எதை என்று அறிய அறிய  அவ் ஒளியானது படும் பொழுது அப்பனே பின் சிறிது சிறிதாக அப்பனே பின் கரையும் என்பேன் கர்மங்கள்!!!!

ஏனென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் சூடான நீரிலே அப்பனே உப்பை போட்டால் உடனடியாக நிச்சயம் கரையும் என்பேன் அப்பனே!!!! பின் உப்பை அதே போல தான் அப்பனே அவ்வொளியானது படும்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே உடனடியாக கரைந்து விடும் என்பேன் அப்பனே!!!!

போகப் போக கர்மாக்கள் அப்பனே இவ்வாறு நிச்சயம் கரைப்பதினால் தான் அப்பனே நிச்சயம் அவனவன் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!!

அடுத்து வருவது அப்பனே """"""" பழனி தன்னில் விழும் என்பேன் !!!!!

அப்பனே  அவ் ஒளியானது அப்பனே!!!!

அங்கு தரிசிப்பவர்களுக்கு அப்பனே எதை என்று கூற ஆனாலும் அவ் ஒளியானது """"""மார்கழி திங்களிலும் எதை என்று அறிய தை திங்களிலும் கூட நிச்சயமாய் அதிகளவு படும் என்பேன் அப்பனே!!!!!

அப்பொழுது பிரதிபலிக்கும் பொழுது அப்பனே நிச்சயம் பெருவாழ்வு கிட்டும் என்பேன் அப்பனே!!!!

இதை எதை என்று அறிய அவ் ஒளியானது மிகவும் சக்தி வாய்ந்தது என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

இதனால் அப்பனே அதுவும் கூட முருகன் மீது விழுந்து விழுந்து அதனால் அப்பனே இவையெல்லாம் மனிதன் வடிவமைப்பதல்ல!!!!

அப்பனே இறைவனே எப்படி எங்கிருந்தால் மனிதர்களுக்கு ஆசிகள் கிட்டும் என்பதை கூட உணர்ந்து உணர்ந்து அப்பனே யாங்களும் எதை என்று அறிந்து அறிந்து யாங்களும் உணர்ந்து உணர்ந்து செய்து கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனாலும் மக்களோ எதை என்று அறியாமல் அப்பனே சென்று திரிந்து கொண்டு அப்பனே எங்கங்கோ சென்று கடைசியில் ஏதும் நடக்கவில்லையே!!!!!!!!!!!!!!!! என்று பரிதவிக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்து நலமாகவே மனித குலத்திற்கு எப்படியெல்லாம் எடுத்துரைக்க வேண்டுமோ!!!!!! அப்படியெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!

அதிலும் கூட ஏமாற்றுபவர்கள் அதிலும் கூட கேலி!!!!

அப்பனே ஆனாலும் இவையெல்லாம் எப்படி? சமாளிப்பது?? என்பதையும் கூட யாங்கள் அறிவோம் அப்பனே!!!! எங்களால் அனைத்தும் முடியும் என்பேன் அப்பனே!!!!

எங்கள் வாக்கு பின் இறைவன் வாக்கு தான் என்போம் அப்பனே!!!!

யாங்கள் சொல்வது தான் இறைவனும் கேட்பான் என்பேன் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!

அதனால் அப்பனே மனிதன் தன்மைகள் வரும் காலங்களில் எல்லையை மீறிக் கொண்டே போகும் என்பேன் அப்பனே!!!
தாழ்வு நிலைகள் தாழ்வு எண்ணங்கள் தான் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனால் உயர்ந்த எண்ணங்கள் பின் பெறுவதற்கு ஒரே வழி!!!!!!

அடுத்த ஒளியானது!!!! 

எதை என்று அடுத்து """"""""அண்ணாமலையிலே அப்பனே!!!!! அங்கே ஒளிவிழும் என்பேன் !!!!!அப்பனே!!! அங்கு செல்பவர்களுக்கு எதை என்று அறிந்து அறிந்து பின் மேலான எண்ணங்களை ஈசன் நிச்சயமாய் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!!

அங்கு செல்பவர்களுக்கு எதை என்று அறிந்து அறிந்து பின் மேலான எண்ணங்களே ஈசன் நிச்சயமாய் கொடுப்பான் என்பேன் அப்பனே நலமாகவே!!!!

ஆனால் எதை என்று அறிந்து அறிந்து மேலான எண்ணங்களை கொடுத்து கொடுத்து அப்பனே மாற்றுவதற்கு சமமான திருத்தலம் அண்ணாமலையே என்பேன் அப்பனே!!!

ஆனாலும் இதை அறிந்து அறிந்து அடுத்து பின் ஒரு குவியானது!!!..........  (ஓளி குவிதல். குவி ஆடி லென்ஸ் போன்று ஒளியை குவித்து ஓரிடத்தில் குவிப்பது) எதிர்த்து நின்று போராடி  நின்று மறுபக்கம் """"""காசி தன்னில் விழும் என்பேன் அப்பனே!!!!!! 

சரியாகவே அவ் லிங்கம் எங்கிருப்பதை என்பதைக் கூட அப்பனே ஆனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அங்கு எதிரொலிக்கும் பொழுது பின் அனைவரும் கூட அப்பனே புத்துணர்ச்சி பெறும் என்பேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அறிந்து அறிந்து ஒவ்வொன்றாக சொல்கின்றேன் அப்பனே பயன்படுத்திக் கொள்ளுங்கள் சரியாகவே!!!

அப்பனே எதை என்று கூற.....அவ் மண்டலத்தை """"""""வைகுண்டம் !!!!!!!!!!என்றும் அழைக்கலாம் என்பேன் அப்பனே..... நேரடியாகவே அப்பனே அப்பொழுது தான் வழி விடும் என்பேன் மார்கழி மாதம் மட்டுமே அப்பனே!!!!

பின் நல்விதமாகவே இன்னும் அப்பனே வளிமண்டலத்தில் பல கோடுகளும் கூட அப்பனே பல வழிகளில் கூட அப்பனே அக்கோடுகள் மறைந்து மறைந்து போகும் என்பேன் அப்பனே!!! எதை என்பதை கூட சித்திரை அப்பனே எவை என்று கூற வைகாசி இவைதன்னில் ஆனி, ஆடி இவைதனில் மறைந்து விடுகின்ற பொழுது அப்பனே நம் எதை என்று அறிய அறிய திருத்தலத்திற்கு சென்று சென்று சென்று அதிகமாக நற்பலன்களை வேண்டி வேண்டி இறைவா நீயே கதி!!!!! என்று கதி நீயே!!!!! என்று கூட அப்பனே துதித்து வந்தாலே அப்பனே நிச்சயம் இறைவனே வந்து எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் இதையும் எதிரொலிக்கும் திறன் ஆனாலும் அப்பனே எவ்வாறு என்பதைக் கூட சித்திரை திங்களில் அப்பனே பின்  வளிமண்டலத்தின் கோடு அப்பனே எதை என்று அறிய மங்கலாக காணப்படும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் பின் பூசைகள் பல பல அப்பனே பின் அவ் ஒளியானது எதை என்று வளிமண்டலத்தில் ஒரு ஒளி வரும் அப்பனே!!! அதனையும் கூட அப்பனே எங்கு எதை என்று அறிய இப்பொழுது யான் உதாரணத்திற்காகவே சொல்லுகின்றேன் அப்பனே... பெருமான் மீது படும் ஒளியானது அப்பனே இங்கே(திருமலை திருப்பதி) பல பூசைகள் அவ் மாதத்தில் செய்கின்ற பொழுது இதை தன் அங்கு பிரதிபலிக்கும் என்பேன் அப்பனே!!

அங்கு எவை என்று இவனுடைய ஒளி அப்பனே இங்கேயும் பட்டு அங்கேயும் பட்டு எதிரொலிக்கும் என்பதை கூட அப்பனே சரியாகவே பின் அவ் நேர்கோடானது  சிறிதாக அப்பனே பின் மேம்படும் என்பேன் அப்பனே!!! அனைவருக்குமே நல்லது ஏற்படும் என்பேன் அப்பனே!!!

இதுதான் ஆணித்தரமான உண்மை என்பேன் அப்பனே!!!

நிச்சயம் அக்கோடுகள் அழிந்து விட்டால் உலகம் அழிந்து விடும் என்பது தான் எனது கருத்தாகவும் அப்பனே எதை என்று ஏற்கனவே யான் பல கண்டுபிடிப்புகள் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பல மக்களுக்கு உரைப்பதற்காகவே எழுதி வைத்திருந்தேன்!!

ஆனாலும் அதையெல்லாம் சில நபர்கள் பயன்படுத்திக் கொண்டு தாம் தான் அனைத்தும் செய்தேன் என்று கூட அப்பனே மாற்றி விட்டார்கள் என்பேன் அப்பனே!!! 

எதை என்று அறிய அறிய அதை யான் பல வழிகளில் கூட எப்படி? எடுத்துரைக்க வேண்டுமோ!!! அப்படியெல்லாம் என்னுடைய புதுமையான விஷயங்கள் வெளிவரும் என்பேன் அப்பனே மக்களுக்காகவே என்பேன் அப்பனே!!!!

அப்பொழுது தெரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!!

யான் சொல்லாததை இவ்வுலகத்தில் எவருக்கும் தெரியாது என்பேன் அப்பனே!!

ஆனால் காலம் வந்துவிட்டது அப்பனே நல்முறையாகவே அப்பனே இவை என்று அறிய அறிய எங்கு??? எதனை பின் பற்றி எங்கு அடித்தால் அப்பனே நலன்கள் ஆகும் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே!!!!

நிச்சயம் ஒவ்வொன்றாக மக்களுக்கு அதாவது எதை என்று அறிய அறிய ஒளி ரூபமாகவே ஏன் இறைவன் தரிசனம் தருகின்றான் என்பதை கூட யான் அறிந்து அப்பனே மக்களுக்கு தெரிவிப்பேன் அப்பனே!!!

எங்கு அந்த ஒளி அப்பனே சரியாகவே தென்படுகின்றது என்பதையெல்லாம் கூட அப்பனே வரும் காலங்களில் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே ஆனாலும் மனிதனின் நிலைமைகளும் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றுதான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே!!

இப்போதைய நிலைமையில் அப்பனே!!! ஏனென்றால் இது கஷ்ட காலம் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் பரிகாரங்கள் எதை எதை என்று அறிய அறிய அப்பனே சொன்னாலும் அதனால் அப்பனே கவலைகள் இல்லை என் பக்தர்களைக் கூட அப்பனே அதாவது பின் ஏதும் இல்லாதவர்களுக்கும் என்னுடைய அருள்கள் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!! ஒவ்வொன்றாக அப்பனே அப்படி முடியாவிட்டாலும் யாங்களே அவந்தன் இல்லத்திற்கு எதை என்று அறிய அறிய தெரியாமல் சென்று ஆசிகள் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றோம் அப்பனே!!!!

அவ் ஒளிவட்டம்!!!! அப்பனே பிரபஞ்சம்!!!! அப்பனே எதை என்று அறிய அறிய பிரபஞ்சத்தில் என்னென்ன எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே மனிதன் பின் வாழ பின் தகுதி இல்லாதது இப்பூமியே என்பேன் அப்பனே!!!

இவைதன் இப்படி இருக்கும் பொழுது பின் யான் வாழ்கின்றேன் யான் வாழ்கின்றேன் என்பதைக் கூட மனிதன் சொல்லி திரிந்து கொண்டு தான் இருக்கின்றானே!!!!!!.......... அப்பனே...... 

எவ்வளவு அப்பனே விஷயங்கள் என்பதை கூட அப்பனே இருக்க அப்பனே இன்னும் மேலோகத்திலும் ஆட்களும் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!! அவர்களுக்கும் நலன்கள் !!!

அப்பனே எதை என்று அறிய அறிய பின் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய பின் புண்ணியம் செய்தவர்கள் அப்பனே ஒரு லோகத்தில்!!!!

அப்பனே சற்று புண்ணியம் குறைந்தவர்கள் அப்பனே சற்று எதை என்று அறிய அறிய ஒரு லோகத்தில்!!

அப்பனே இன்னும் புண்ணியம் குறைந்தவர்கள் அப்பனே ஆனாலும் தரம் அதாவது கெட்டவர்களாக மிகும் பள்ளத்தில் இருப்பவர்கள் தான் பூமியில் அப்பனே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!

இதனால்தான் யாங்கள் சித்தர்கள் அறிந்து அறிந்து பல திருத்தலங்களை உருவாக்கினோம் அப்பனே!!!

எதற்காக என்று கூட அதனால்தான் அப்பனே கஷ்டங்கள் எப்பொழுது எதை என்று அறிய அறிய செல்கின்றது இப்புவிதனில் கூட என்று கூட அப்பனே யாங்கள் நிச்சயம் மாற்றி அமைத்து விடுவோம் என்பேன் அப்பனே!!!!

அனைவரையும் மாற்ற வேண்டும் அப்பனே!!!

இங்கு தராதரம் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் மாய உலகம் என்பதை கூட அப்பனே இப்பொழுது புரிந்து கொண்டீர்களா??? என்பேன் அப்பனே!!!!! 

எதை என்று அறிந்து அறிந்து அப்பனே கீழான புவி தன்னில் தான் மனிதன் எதை என்று அறிய அறிய அப்பனே புண்ணியம் செய்தவன் மேலோகத்தில் என்னென்ன எதை எதை என்று அறிய அறிய வரும் காலங்களில் அதையும் பின் நம்பாதவர்களுக்கும் எதை என்று அறிய அறிய பின் நம்பும் படி எதை என்றும் உணர்ந்து உணர்ந்து சொல்வேன் அப்பனே!!!! 

இதுவும் அறிவியல் ரீதியாகவே இருக்கும் என்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய என்னால் பின் கண்டுபிடிக்க முடியாதது!!!!! இவ்வுலகம் எதை என்று அறிய அறிய எவைதான் உள்ளது?????????? என்பேன் அப்பனே!!!!!!!!!

புதுமையான விஷயங்கள் என்னிடத்திலே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய என்னால் அனைத்தும் செய்ய முடியும் என்பேன் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து!!!

அதனால் அப்பனே ஒரு மனிதனின் நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு அப்பனே நலமாகவே நிச்சயம் மனிதனை மாற்றியும் கூட மனதையும் எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் சித்தர்கள் யாங்கள் செய்வோம் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் எதை என்று அறிய அறிய புசுண்ட( காகபுஜண்டர்) முனியும் பல மக்களுக்கு நிச்சயம் யானே பல கஷ்டத்தை கொடுப்பேன் கொடுப்பேன் என்று!!!!!

யானும் பின் புசுண்ட முனியே!!!!!! சற்று பொறுமையாக இரு பார்ப்போம் எதை என்று அறிய அறிய அனைத்தும் முடியும்!!! அடுத்து  அனைத்தும் நம் கையிலே இருக்கின்றது!!!! எதை என்று அறிந்து அறிந்து அதனால் பாவப்பட்ட மனிதர்களுக்கு இரங்கி ஏதாவது ஒன்றை செய்வோம்!!! 

அனைவருமே எதை என்று அறிய அறிய இறைவன் பிள்ளைகளே!!!!!

பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் செய்வோம் என்பதை கூட அப்பனே திருத்தலத்திலே இருந்து கொண்டு பின் கஷ்டப்படுபவர்களும் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!! 

பின் ஒரு வேளை உண்ண ஆகாரம் இல்லை என்பதையும் யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

ஆனால் இவையெல்லாம் எப்படி மாற்றுவது என்பதை கூட அப்பனே நல்விதமாகவே யான் ஆராய்ந்து ஆராய்ந்து வைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!! நலமாகவே!!! 

இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் எவையென்று உணர்ந்து உணர்ந்து அப்பனே 

""" வைகுண்டம்""""" என்பதற்கு பொருள்!!!!!!........ எதை என்று அறிய அறிய வைகுண்ட ஏகாதசி என்கின்றார்கள் அப்பனே எதை என்று வளிமண்டலம் தான் என்பேன் அப்பனே!!!

எவையென்று பின் அவை திறக்கும் பொழுது அவ் ஒளியானது நேர்கோடாகவே எதை என்று சரியாகவே விழும் என்பேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய பின் எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இங்கே நலன்கள்( திருமலை திருப்பதி) அப்பனே எப்படி எல்லாம் சென்று கொண்டிருக்கின்றது என்பதை கூட அப்பனே நிச்சயம் பின் பழனி தன்னில் கூட வரும் வரும் வாக்கியங்களில் கூட நிச்சயம் ஏராளமான செய்திகளையும் உரைப்பேன் என்பேன் அப்பனே!!!!

நலமாகவே அப்பனே நலமாகவே எதை என்று அறிய அறிய அப்பனே ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள் அப்பனே!!!

அதாவது எதை என்று அறிய அறிய ஒரு (ஒளி) வீச்சு இருக்கின்றது என்பேன் அப்பனே அவை நம் கையில் இருந்து விட்டால் அப்பனே எதை என்று கூட அப்பனே இறைவனுக்கு எவை என்று அறிய அறிய அனைத்தும் உந்தனுக்கு கிடைக்கும் என்பேன் அப்பனே!!!

அதனையும் கூட நல்லோர்களை பார்த்து யான் வழங்கியும் வருவேன் அப்பனே வரும் வரும் காலங்களில் கூட நலமாகவே நலமாகவே அப்பனே!!! ஏற்றங்கள் தான் உண்டு!!!

ஆனால் மனிதனோ பின் இறக்கங்களாக( கீழ் நோக்கி) சென்று கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!

சரியான வழியைப் பின்பற்றி அப்பனே நல்முறையாக வாழ்ந்து வந்தாலே உயர்வுகள் எதை எதை என்று அறிய அறிய!!!

""""""""""" அன்னத்தை அளியுங்கள்!!!!! அன்னத்தை அளியுங்கள்!!!!!! அப்பனே!!!!

எதை என்று அறிய அப்பனே முதலில் வயிற்றில் ஏற்படும் என்பேன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே சில நோய்கள்!!!!

அதற்காகத்தான் அப்பனே வளைந்து (குனிந்து உணவை பரிமாற்றங்கள்) அப்பனே பின் அன்னத்தை அளியுங்கள்!!!! என்று எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அன்னத்தை அளிக்கும் பொழுது எதை என்று கர்மாவும் சில சில எதையென்று கரையும் என்பேன் அப்பனே!!! 

உடலில் உள்ள பின் வளைந்து அப்பனே அன்னத்தை இட்டால் அப்பனே மாறும் என்பேன் அப்பனே சில சில வினைகள் என்பேன் அப்பனே!!!!!

அவனிடத்திலிருந்து( அன்னதானம் பெறுபவர்) அப்பனே எதை என்று அறிய அறிய பின் அவன் சந்தோஷம் அடையும் பொழுது முதலில் அப்பனே ஒளியானது பின் அதாவது எதை என்று அறிய அறிய நீ பேசினாலும் ஒரு ஒளி அப்பனே சந்தோசம் அடைந்தாலும் ஒரு ஒளி வயிற்றில் முதலில் பதியும் என்பேன் அப்பனே...பின் வளையும் பொழுது அப்படியே ஒளி படியும் பொழுது அப்படியே அமுக்கிக் ( வயிறு உள்வாங்கி) கொள்ளும் என்பேன் அப்பனே!!!!

வயிற்றுக்குள் உள் நுழைந்து புண்ணியங்கள் பெருகும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே என்னென்ன எதை எதை என்று அறிய அறிய எதற்கெல்லாம் செய்கின்றார்கள் என்பதை கூட தெரியாமல் செய்து விடுகின்றார்கள் அப்பனே அதனால்தான் சரியான வழியில் அப்பனே இன்னும் இன்னும் ஏராளமான செய்திகள் உரைத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

நலமாகவே ஆசிகள் ஆசிகள் அப்பனே இன்னும் வாக்குகளும் செப்புவேன் அப்பனே மனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்கு அப்பனே ஆசிகள்!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அன்புடன் அகத்தியர் - 5 திதி ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/5.html

சித்தன் அருள் - 1764 - அன்புடன் அகத்தியர் - திதியில் செய்ய வேண்டியவை! - https://tut-temples.blogspot.com/2025/01/1764.html

 லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - 04.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/04012025.html

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

No comments:

Post a Comment