"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 6, 2020

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள்

அனைவருக்கும் அன்பு  வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் கண்டு வருகின்றோம். அருள்மிகு வீரராகவ சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், போகர், ஸ்ரீ ரோம மகரிஷி , ஸ்ரீ சதானந்த சுவாமிகள், ஸ்ரீ சுப்பையா சுவாமிகள், மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லையா சுவாமிகள், ஸ்ரீ காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் என தொட்டுக்காட்டி வருகின்றோம். இன்றும் ஒரு மாபெரும் ஞானி பற்றி காண இருக்கின்றோம்.எப்போது அழைப்பாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றோம்.

சித்தர்கள் நம்மை வாழ்விக்க வந்தவர்கள். பார்ப்பதற்கு பித்தர்கள் போன்று தோன்றலாம். சிவத்தை ஜீவனில் உணரும் போது பித்தம் தெளிந்து சித்தம் வெளிப்படும். சிலர் குருவாக, சிலர் சற்குருவாக, சிலர் சத்குருவாக என வாழையடி வாழையாய் ஞானம் போதிக்க வருபவர்கள். சென்னையில் மட்டுமா சித்தர் பரம்பரை உள்ளது என்று நினைத்த நமக்கு தமிழ் நாடு என்ற அளவில் விரிந்து பார்த்தோம். அத்தனையும் தாண்டி பாண்டிச்சேரியில் இன்னும் உயிர்ப்பாக சித்தர்களின் அருளை உணர முடிகின்றது.

சென்னையும், புதுச்சேரியும் சித்தர்கள் உலாவும் புண்ணிய பூமி. இந்த உலகிலே எங்கெங்கோ நாம் பிறந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் பிறந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அது நம் முன்னோர் செய்த புண்ணியமே. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது அதனினும் புண்ணியமே.

தமிழ்நாடு முழுதும் ஜீவன் முக்தர்களின் அரசாட்சி தான். திரும்பிய இடமெங்கும் உயிர்நிலை கோயில்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை சித்தர்களின் ராஜ்ஜியம் தான். அந்த வரிசையில் சென்னை என்றால் நமக்கு மிக மிக நெருக்கமாக சதானந்தர். இவரைத் தாண்டி பாரத்தால் சென்னையில் சாங்கு சித்தர், வேளச்சேரி மகான், பட்டினத்தார் என நீளும் பட்டியலில் திருஒற்றியூர் பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது. இது போல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் சித்தர்களின் அருளாசி நிரம்பி வழிவதை நாம் உணர முடிகின்றது. அந்த வரிசையில் இன்று நாம் திண்டுக்கல் செல்ல இருக்கின்றோம்.

சித்தர்கள் என்று ஆரம்பித்தால், பழநியை முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.  பதினென் சித்தர்களில் ஒருவரான போகர் பெருமான் அடங்கி இருப்பது பழநி மலைøயே! போகரின் வழியைப் பின்பற்றி எண்ணற்ற சித்தார்கள் இந்தப் பகுதியில் அவதரித்தனர்.  ஒட்டன்சத்திரம், கசவனம்பட்டி, மானூர், கணக்கம்பட்டி, திண்டுக்கல் என்று பழநியை ஒட்டிய ஊர்களில் வசித்த சித்தர்கள் எண்ணிக்கை சொல்லி மாளாது! ஒரு காலத்தில் இந்த ஊர்களில் தெருவிலும் சாக்கடையிலும் திரிந்த சித்தர்கள் அதிகம்.  இப்படி திண்டுக்கல்லில் குடி கொண்ட ஒரு சித்த புருஷரைத்தான் பார்க்கிவிருக்கிறோம்.

திண்டுக்கல் நகரையே தற்போது வாழ்வித்து வருபவர் எங்கள் சுவாமிதான் என்று கொண்டாடுகிறார்கள் இவரின் பக்தர்கள் திண்டுக்கல் மலைக் கோட்டையின் மேற்குப் புறமாக (கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்பக்கம்) ஜீவ சமாதி அடைந்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காத்து அருள் புரிந்து வருகிறார் இந்த சுவாமிகள். யார் இந்த சுவாமிகள்? இவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது? பெற்றோர் யார்? பூர்வாஸ்ரமம் என்ன? - இப்படிப் பல கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடை சொல்ல முடியாது என்றாலும்.  சுவாமிகளின் சரித்தரத்தில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்களைப் பார்ப்போம். 

ஸ்ரீமத் ஓத சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இவரை சுப்பையா சுவாமிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் - சுப்பிரமணியன்.  இவரது திரு அவதாரமே மிகவும் சிலிõர்க்க வைக்கும் ஒன்று.  கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நடசத்திரத்தில் தோன்றியவர் ஒத சுவாமிகள்.  ஆதிரை திருநட்சத்திரம் ஈசனின் ஜன்ம நட்சத்திரம் ஆயிற்றே? என்று சொல்ல தோன்றுகிறதா? ஆம்! காசியில் வாழும் ஸ்ரீவிஸ்வநாதரின் ஆசியோடும் அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான்  ஒத சுவாமிகள்.




அது மட்டுமல்ல... சுவாமிகளின் அவதாரத்தைக் கண்டு ஆசி வழங்குவதற்கு மும்மூர்த்திகளும் அவர் ஜனித்த கிராமத்துக்கே வந்தார்கள் என்றால் பிரமிப்பாக இருக்கிறதா? பிரமிக்க வைக்கும் சுவாமிகளின் திரு அவதாரத்தைப் பார்ப்போம்.

பழநியில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பாலசமுத்திரம் என்கிற கிராமத்தில் வாழ்ந்து வந்தது சுவாமிகளின் குடும்பம்.  ஒத சுவாமிகளின் தந்தையாரான பரமேஸ்வர ஐயர், இறை பக்தி மிக்கவர்.  ஒரு முறை வட மாநிலங்களுக்கு க்ஷேத்திராடனம் சென்றார்.  வாகன வசதி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் சுமார் ஏழு வருடங்கள் நீடித்தது  இந்த யாத்திரை.  அதாவது வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழு வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் வீடு திரும்பினார் பரமேஸ்வர ஐயர். அந்தக் காலத்தில் யாத்திரை என்றால் இப்படிதான் இருக்கும். யாத்திரை நிகழ்ந்த ஏழு வருடமும் கடுமையான விரதம்.  காய்ந்த சருகு மட்டுமே உணவு.  எங்காவது நீர்நிலைகளில் ஒடுகின்ற தண்ணீரை மட்டுமே அருந்தவார்.  இப்படிக் கஷ்டப்பட்டுச் சென்று காசி விஸ்வநாதருக்குக் கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்து, ஆனந்தப்பட்டார் பரமேஸ்வர ஐயர்.  அந்த ஜோதிர்லிங்க சொரூபனின் சந்நிதியிலேயே ஆசிர்வாதமும் கிடைத்தது.  பரமேஸ்வரா.... இந்தக் காசிவிஸ்வநாதனே உனக்கு மகனாக கூடிய சீக்கிரம் பிறக்கப் போகிறான், பார் என்று அங்கே ஒர் அசரீரி வாக்கு எழுந்தது. மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வர ஐயர்

அதன் பின் பூரி, திருப்பதி, ராமேஸ்வரம் முதலான க்ஷேத்திரங்களை தரிசனம் செய்து பாலசமுத்திரம் திரும்பினார் பரமேஸ்வரர்.  மகான் வழங்கிய ஆசி மனத் திரையில் ஒடிக் கொண்டே இருந்தது. தன் மனைவியிடம் அவ்வப்போது இதைச் சொல்லிப் பூரிப்பார்.  உத்தம மகன் பிறக்கப் போகும் நாளை அந்தப் பெற்றோர் ஆர்வாமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலங்கள் ஒடின,  காசி விஸ்வநாதரின் அருளால் மணி வயிறு வாய்க்கப் பெற்றார் பரமேஸ்வரரின் துணைவியார். பிரசவ காலமும் நெருங்கியது.  பிரசவ வலி ரொம்பவும் வாட்டியது. எனவே, உள்ளூரில் இருந்த மருத்துவச்சியின்  துணையோடு, வீட்டின் தனியான ஒர் அறையில் கிடத்தப்பட்டார் பரமேஸ்வரரின் துணைவியார்.  வீட்டுக்கு வெளியே தவிப்புடன் காணப்பட்டார்.  பரமேஸ்வரர்.  என்னதான் இறைவனின் ஆசியோடு மகன் பிறக்கப்போவதாகத் திருவாக்கு மலர்ந்திருந்தாலும், உள்ளே பெரும் அவஸ்தையுடன் மனைவியானவள் அலறிக்கொண்டிருக்கும்போது. கணவனுக்குத் தவிப்பில்லாமல் இருக்குமோ? ஒரு சில நிமிடங்கள் உருண்டோடின.  உள்ளே எந்த விதமான அலறல் சத்தமும் இல்லை.  மருத்துவச்சியின் ஆறுதல் குரலும் கேட்கவில்லை. மாறாக வேத ஒலி கனகம்பீரமாக, அட்சர சுத்தமாக கேட்டது.  பிரசவ அறைக்குள் இருந்து வேத ஒலி எப்படி? வெளியே தவிப்புடன் நின்றிருந்த பரமேஸ்வர ஐயரும் அவரின் உறவினர்களும் பிரமித்தனர்.

மருத்துவச்சி வந்து தகவல் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் வெளியே காத்திருந்த அனைவருக்கும் பிரமிப்புதாங்க முடியவில்லை.  எனவே கதவை வேகமாகத் திறந்து உள்ளே நுழைந்தார்கள்.  அங்கே அவர்கள் கண்ட காட்சியில் நிலை குலைந்துபோனார்கள்.  பேசுவதற்கு வார்த்தைகள் எதுவும் எழவில்லை. பரமேஸ்வர ஐயரின் மனைவி அப்போது பிரசவத்திருந்த அந்த ஆண் சிசு புன்னகை ததும்பும் முகத்தோடு காணப்பட்டது.

கண்களில் அதீதமான ஒரு பிரகாசம் இழையோடியது.  குழந்தையின் முகம் தவிர, உடல் முழுதும் ரோஜாப்பூக்களால் மறைக்கப்பட்டிருந்தது. தவிர, குழந்தையின் அருகிலும் ஆங்காங்கே ரோஜாப்பூக்கள் சிதறி இருந்தன. இதென்ன  அதிசியம்?  இந்த ரோஜாப்பூக்களை மருத்துவச்சி அணிவித்திருப்பாளோ? அப்படியென்றால் அவளுக்கு ஏது இத்தனை பூக்கள்? அதுவும் இந்தப் பூக்கள் சாதாரணமான ஒரு தோட்டத்தில் மலர்ந்தவையாகத் தெரியவில்லையே?  தேவலோக நந்தவனத்தில் இருந்து பறித்துக் கொண்டுவந்தவை போல் பிரகாசிக்கின்றனவே!  இதன் அலாதியான நறுமணம் ஊரையே கூட்டுகிறதே! இப்படி என்னென்னவோ யோசித்த பரமேஸ்வர ஐயரால் அதற்குமேல் அமைதியாக இருக்க முடியவில்லை. மருத்துவச்சியிடமே கேட்டார்.  தாயே... என்ன நடந்தது இங்கே? இந்த ரோஜாப்பூக்கள் எப்படி வந்தன?

முதலில் அவளுக்குப் பேச்சே வரவில்லை.  பிறகு, மெள்ள ஆரம்பித்தாள்:  என் கண்களால் நான் கண்ட இந்தச் சம்பவத்தை நம்பவும் முடியவில்லை.  நம்பாமலும் இருக்க முடியவில்லை.  தெய்வீக அம்சம் முகத்தில் ததும்பும் மூன்று பேர் பிரசவ காலத்தில் இங்கே தோன்றினார்கள்.  காண்பவரை மயக்கும் ஒரு வித பிரகாசம் அவர்களிடம் இருந்தது. ஒருவர் நெற்றியில் திருநீறும், இரண்டாமவர் திருமண்ணும், மூன்றாமவர் சந்தனமும் தரித்திருந்தனர்.  எனக்கோ வியப்பு கலந்த அதிர்ச்சி.  பிரசவம் நடக்கின்ற இந்த அறைக்குள் ஆண்மக்களாகிய நீங்கள் வந்திருக்கிறீர்களே.....யார்?என்று கேட்டேன்.  




முதலாமவர் கயையில் இருந்து வந்திருப்பதாகவும், இரண்டாமவர் காசியில் இருந்து வந்திருப்பதாகவும், மூன்றாமவர் பிரம்ம கபாலத்தில் இருந்து வந்திருந்ப்பதாகவும் சொன்னார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  இப்போது நீங்கள் பார்க்கும் இந்த ரோஜாப்பூக்களும், வெளியில் இருந்தபோது ஒலித்த வேத ஒலியும் அவர்களுடைய செயல்களாகத் தான் இருக்கும் போலிருக்கிறது.  அவர்கள் இந்த அறைக்குள் இருந்தபோது ஒரு வித மயக்கம் என்னை ஆட்கொண்டது. மருத்துவச்சி சொன்ன தகவலைக் கேட்ட பரமேஸ்வர ஐயர், வந்தவர்கள் யாராக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டார். காசி விஸ்வநாத ரின் அருளோடு பிறந்த இந்தக் குழந்தையை ஆசிர்வதிக்க மும் மூர்த்திகளான சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மெய் சிலிர்த்தார்.  அவருடைய கண்கள் கலங்கின. தனது வாரிசான அந்தச் சிசுவை - வருங்கால ஞானியை உச்சி முகர்ந்து தழுவினார்.  பிறகு, பூஜையறைக்குப் போய் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி சொன்னார்.

அதே வேளையில் பழநி திருக்கோயிலில் பூஜையின்போது ஒலிக்கப்படும் பிரமாண்டமான மணியின் ஒசை கணீரெனக்கேட்டது. அதன் முழக்கம் ஒம்....ஒம் என்பதுபோல் இருந்தது பரமேஸ்வர ஐயருக்கு.  இதையே ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக் கொண்டு, குழந்தைக்கு முருகப் பெருமானின் திருநாமமான சுப்பிரமண்யன் என்பதையே சூட்டிவிட்டார். பரமேஸ்வர ஐயர்என்றாலும், பின்னாளில் சுப்பையா என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார் சுவாமிகள். சுவாமிகளுடைய ஐந்தாவது வயதில் அவருக்கு உபநயனம் நடந்தது.  சிறு வயதிலிருந்தே இறை இன்பத்தில் நாட்டம் அதிகம் கொண்டவராகத் திகழ்ந்தார். சுவாமிகள். ஒம் என்றும், ஆதிசங்கரா என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தந்தையார் மறைந்துவிட்டார்.  அதன் பின் காடு என்று சுற்றித் திரிய ஆரம்பித்தார்.  ஒரு முறை தன் தாயாரிடம், நீ என்னை எப்போது கூப்பிடுகிறாயோ அப்போது நான் வருகிறேன் எனக்கென்று சில பணிகள் இருக்கின்றன. என்று சொல்லி, அன்னையின் ஆசியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.  தனது எட்டு வயதிலேயே அஷ்டமாஸித்திகளும் சுவாமிகளுக்குக் கைவரப் பெற்றதாகச் சொல்லவர்.  பாரத தேசத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றி இருக்கிறார்.  அவரின் பக்தர்கள் இதை அபூர்வமாகப் பேசிக்கொள்வர்.

திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப் புறம் அடர்ந்த புதர்கள் மண்டி, ஒரே காடாக இருந்தது.  இதைக் கடந்து உள்ளே நடந்தால், ஒரு சில குகைகள் உண்டு.  ஜன நடமாட்டமே இல்லாத இந்த இடம் ஆரம்ப காலத்தில் சுவாமிகளின் தவத்துக்கு உதவியது.  குகைக்கு மேலே இருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும்.  சுவாமிகள் வெட்டிய ஒரு குளம் ஒன்றும், அய்யன் குளம் என்ற பெயரில் இன்று அழைக்கப்பட்டு வருகிறது. மலைப் பகுதிகளிலும், திண்டுக்கல் தெருக்களிலும் பித்தன் போல் திரிவார் சுவாமிகள்.  அடையாளம் தெரிந்தவர்கள் இவருடைய திருப்பாதங்களில் விழுந்து கும்பிடுவார்கள்.  விவரம் அறியாத ஜன்மங்கள் இவரைக் கேலி பேசியும் கற்களால் அடித்தும் துன்புறுத்தியது உண்டு.  எல்லோரையும் ஆசிர்வதிப்பார் சுவாமிகள். எண்ணற்ற லீலைகளை சிறு வயதிலேயே நிகழ்த்திக் காண்பித்தார் சுவாமிகள்.  தெருவில் குடிநீர் எடுத்துக்கொண்டு போகும் ஒருவண்டியில் உள்ளே ஒட்டுமொத்த நீரையம் ஒரே மடக்கில் விறுவிறுவெனக் குடித்துவிடுவார்.  இதைப் பார்ப்பவர்கள் வாய் பிளந்து நிற்ப்பார்கள்.  அடுத்து, குடித்த நீர் மொத்தத்தையும் வெளியே துப்பி விடுவார். பகவான் ஸ்ரீரமண மகரிஷியைத் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்த பெருமை ஓத சுவாமிகளையே சாரும். ஸ்ரீரமணர் திருச்சுழியில் பிறந்தவர். தந்தையின் பணி மாறுதல் காரணமாக அவரது குடும்பம். திண்டுக்கல்லுக்கு இடம் பெயார்ந்தது. அபிராமி அம்மன் கோயில் அருகே ரமணரின் குடும்பம் வசித்துவந்தது. அப்போது நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்சேர்க்கப்பட்டார் ரமணர்.  துவக்கத்தில் ஒழுங்காகத்தான் பள்ளிக்குச் சென்றார்.

ஆனால், ஒரு முறை அவதூதராகத் தெருக்களில் வலம் வரும் ஒத சுவாமிகளைப் பார்த்த மாத்திரத்தில், ரமணர் மனத்துக்குள் ஏதோ ஒன்று பிசைய ஆரம்பித்தது. இவர் பின்னாலே செல் என்று அவருக்கு மூளை உத்தரவிட்டது. ஒத சுவாமிகள் செல்லும் இடமெல்லாம் அவர் பின்னால் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.  காடு மலை எங்கு சென்றாலும், அவரது நடவடிக்கைளையே கண் கொட்டாமல் பார்த்து வியப்பார் ரமணர். ஓரு கட்டத்தில் சிறுவனான ரமணரை அடையாளம் கண்டுகொண்ட ஓத சுவாமிகள், அவரை அருகே அழைத்தார்.  நீ திருவண்ணாமலைக்குச் செல்.....  அங்கே உனக்கான பணி காத்துக்கொண்டிருக்கிறது. அண்ணாமலையார் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறார் என்றார் ஓத சுவாமிகள்.  அதன் பின்தான் ஒரு சந்தர்ப்பத்தில் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு, புறப்பட்டார் ரமணர். சிருங்கேரி ஆச்சார்ய ஸ்வாமிகளே, நம் ஓத சுவாமிகளுக்கு முழுமரியாதை கொடுத்து, அழைத்துப் பேசிய விவரம் இன்னும் சுவாரஸ்யமானது. ஓத சுவாமிகள் என்கிற சுப்பையா சுவாமிகள் திண்டுக்கலில் அவதூதராக வீதி வீதியாகச் சுற்றிக்கொண்டிருந்த காலம்....எதாவது ஒரு தெருச் சாக்கடையில் சாஷ்டாங்கமாக அமர்ந்து அந்த நீரை ஆனந்தமாக அளைந்துகொண்டிருக்கும் சுவாமிகளைப் பார்க்கும் திண்டுக்கல் வாசிகள் அந்த இடத்திலேயே நமஸ்கரித்து அவரை வணங்குவார்கள்.  மகான்களைப் பொறுத்தவரை சாக்கடையும் ஒரு கங்கைதான்.  சாக்கடையையும் ஒரு கங்கையாகப் பார்க்க முடிந்தால்தான், அவர்கள் மகான்கள் ஆனார்கள்.

சுவாமிகளின் ஸித்துத் திறனை அப்போதே புரிந்துகொண்டு இவரிடம் வந்த ஆசி பெற்ற ஆன்மிகப் பெருமக்கள் அதிகம்.  இறை இன்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பே கிடைக்கப் பெறாத ஒரு சிலர், இந்தக் காட்சியைக் கண்டு அருவருப்புடன் மூக்கை பிடித்துக்கொண்டு நடப்பார்கள்.  அவர்களைப் பார்த்து சுவாமிகள் சிரிப்பார். இந்தக் காலக்கட்டத்தில்தான் சிருங்கேரி ஆச்சார்யாளும் ஓத சுவாமிகளும் சந்திக்கும்படியான ஒரு ஆன்மிக நிகழ்வு நடந்தது. சுவாமிகள் யார் என்பதை - அவரை பற்றி அறிந்திராதவர்களுக்கு - உலக்கு எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்தது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சிருங்கேரி ஆச்சார்யாளே இருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது சிருங்கேரி ஸ்ரீமடத்தின் முப்பதிரண்டாவது பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் திண்டுக்கல்லுக் கு விஜயம் செய்திருந்தார்.  அபிராமி அம்மன் ஆலயத்தின் எதிரே இருக்கும் சாலையில் சிருங்கேரி மடம் இருந்தது. அங்கே முகாமிட்டிருந்தார் ஆச்சார்யர். சிருங்கேரி மடத்தின் மீது அபிமானம் கொண்ட எண்ணற்ற பக்தர்கள்  அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வந்து திண்டுக்கல் மடத்தில் குவிந்திருந்தார்கள்.  ஆச்சார்யரின் தரிசனத்தில் திளைத்தார்கள்.  திண்டுக்கல் நகரில் வசித்துவரும் பக்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்பதற்காக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார்.

சிருங்கேரி ஆச்சார்யர், படடுப் பீதாம்பரம் தரித்து, சங்கர சொரூபமாக பல்லக்கில் அமர்ந்து தெருவாசிகளுக்கு ஆசி வழங்கிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்.  பல்லக்குக்கு முன்னால் மேளமும் தாளமும் வேத கோஷமும் அமர்க்களப்பட்டன. யானை, குதிரை , ஒட்டகம் போன்றவை சாலைகளில் அணிவகுத்துச் சென்றன.  தங்கள் நகருக்கு வந்த ஸ்ரீசிருங்கேரி மகானை உற்சாகமாக வரவேற்கும் பொருட்டு, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தெருவிலும் நீர் தெளித்து, மாக்கோலம் போட்டிருந்தனர் மக்கள்.  ஆச்சயார்ருக்கு சமர்ப்பிப்பதற்காக பழங்கள், புஷ்பங்கள் போன்றவற்றை வாங்கி வைத்திருந்து, தங்கள் வீட்டு வாசலுக்குஎப்போது வருவார் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். திரளான பக்தகோடிகள் பல்லக்கின் முன்னாலும் பின்னாலும் செல்ல... கோலாகலமான இந்த ஊர்வலம் பங்களாத் தெருவை எட்டியது.  அந்தத் தெருவின் துவக்கத்தில் ஒரு சாக்கடை உண்டு.  கன்னங்கரேலென்ற அந்தச் சாக்கடை நீரில் - எவரும் பார்த்தலே குமட்டிக் கொண்டு வரும் அந்த நீரில் - ஆனந்தமாக ஸ்நானம் செய்துகொண்டிருந்தார். ஒத சுவாமிகள். சிருங்கேரி ஆச்சார்யரின் ஊர்வலம், இந்த இடத்தைக் கடக்கும்போது அண்ணாந்து ஆச்சார்யரைப் பார்த்தார் ஒத சுவாமிகள். பிறகு ஒரு பெருமூச்செறிந்து, ஹும்... பல்லக்கு, பட்டுப் பீதாம்பரம் தெரு வழியே போகுது பார் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

சிருங்கேரி ஆச்சார்யரான ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் பெரும் கீர்த்தி வாய்ந்தவர்.  எண்ணற்ற ஸித்திகள் கைவரப் பெற்றவர். சுவாமிகளை நேருக்கு நேர் பார்க்கவில்லை என்றாலும், இந்த இடத்தில் இருந்து கொண்டு யாரோ தன்னை விமரிசிக்கிறாரே என்பதை ஞானத்தால் உணர்ந்த ஆச்சார்யர், சட்டென்று பல்லக்கை நிறுத்தச் சொன்னார். கீழே இறங்கினார். தெருவில் நடந்தார். வேதம் ஒதிக்கொண்டு வந்த பண்டிதர்களும், சிருங்கேரி மடத்தின் பக்தர்களான திண்டுக்கல்வாசிகளும் குழம்பினர். பல்லக்கை நிறுத்தச் சொல்லிவிட்டு, ஆச்சார்யர் அவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறார் என்கிற கவலையுடன் அவரைப் பின்தொடர ஆரம்பித்தனர். சாக்கடையில் அமர்ந்து ஸ்நானம்  செய்துகொண்டிருந்த ஒத சுவாமிகளின் அருகே வந்தார் ஆச்சார்யர். ஒரு புன்னகை புரிந்தார். ஒத சுவாமிகளும் ஆச்சார்யரை நோக்கினார். சாக்கடையில் அமர்ந்திருந்த ஒத சுவாமிகளின் அருகே வந்து, அண்ணா... என்ன கோலம் இது! என்று ஆச்சரியமாகக் கேட்டார் சிருங்கேரி ஆச்சார்யர். ஓ....நரசிம்மனா...வா நரசிம்மா. வா வா என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இதற்க்குள் அங்கு சூழ்ந்திருந்த வேத பண்டிதர்களும் உள்ளூர் பிரபலங்களும், சிருங்கேரி ஆச்சார்யரிடம் ஸ்வாமி....இவன் பித்துப்பிடித்தவன்.  இவனை ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் ஸ்வாமீ..... இதே ஊரில் வெகு நாட்களாக இப்படித்தான் திரிந்து

கொண்டிருக்கிறான் இவனைப் பார்த்தாலே எல்லோருக்கும் குமட்டிக்கொண்டு வரும் என்று முகம் சுளித்துக்கொண்டே சொன்னார்கள்.

இப்படி சொன்னவர்கள் அனைவரையும் பார்த்து உத்தரவு போல் சிருங்கேரி ஆச்சார்யர் சொன்னார். அப்படி எல்லாம் சொல்லக்கூடாது.  சுத்தமான தங்கத்தின் மேல் படிந்திருக்கிற மாசு போன்ற நிகழ்வு இது.  சுவாமிகள் பரிசுத்தமானவர். எவரையோ சுத்தம் செய்வதற்காக அவர் இந்தச் சக்கடையில் இறங்கி ஸ்நானம் செய்துக்கொண்டிருக்கிறார்.  மாபெரும் சித்த புருஷர்.  இறை பக்தியில் இத்தகைய நிலையை அடைவது என்பது எவருக்கும் எளிதில் கைகூடாது.  நானும் இது போன்ற நிலையை அல்லவா எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.... அதற்காகத்தானே இன்னமும் இருந்து வருகிறேன். சிருங்கேரி ஆச்சார்யரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், அதுவரை சுவாமிகளிடம் ஏனோதானோ என்று இருந்து வந்த வேத பண்டிதர்களும் திண்டுக்கல்வாசிகளும் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.  இதோடு சிருங்கேரி ஆச்சார்யர் நிறுத்திக்கொள்ளவில்லை. தான் தங்கி இருந்த சங்கர மட முகாமுக்கு ஒத சுவாமிகளை சகல மரியாதைகளோடு அழைத்து வருமாறு உத்தரவிட்டார். அதன்படி மடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்ட சுவாமிகளின் உடலில் இருந்து சந்தன மணம் அபாரமாக வீசியது. திருமேனியில் சாக்கடை நீரும் குப்பையும் அப்பியிருந்தாலும் உடலிலிருந்து நறுமணம் அல்லாவோ வீசுகிறது.... இவர்  எப்பேர்ப்பட்ட மகானாக இருக்கவேண்டும் என்று வியந்து பலரும் ஒத சுவாமிகளின் திருவடிகளில் விழுந்தனர். ஒரு தனி அறையில் சிருங்கேரி ஆச்சார்யரும் ஒத சுவாமிகளும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.  அதன் பின் ஒத சுவாமிகளை வழியனுப்ப, சிருங்கேரி ஆச்சார்யரே வெளியே வந்துவிடைகொடுத்தாராம்.  வரேன் நரசிம்மா..... என்று சத்தமாகக் கூறியபடி ஒத சுவாமிகள் அங்கிருந்து கிளம்பினாராம்.

ஒரு மகானை இன்னொரு மகானே அறிய முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். குழந்தைகளுடன் விளையாடுவது என்றால், ஒத சுவாமிகளுக்குக் குதூகலம்தான்! அதுவும் குடிசைப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடுவார். விளையாட்டுப்பொருட்களைக்காட்டி அவர்களை சந்தாஷப்படுத்துவார். ஒடியாடி விளையாடுவார்; குதித்துக் குதித்து விளையாடுவார். தெருவோரத்தில் குப்பைகளைக் கொட்ட வைத்திருக்கும் நகராட்சித் தொட்டியில், குப்பைகளுக்கு நடுவே உடலைக் குறுக்கிக்கொண்டு சம்மணமிட்டு அமர்ந்துவிடுவார் சுவாமிகள்.  பிறகு, அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை அழைத்து, தன் தலையில் நெருப்பு மூட்டச் சொல்வார்.  ஹே..... என்று ஆர்ப்பரிக்கும் குழந்தைகள் . சுவாமிகளின் தலையில் சிறிது காய்ந்த குப்பையை வைத்து, நெருப்பு மூட்டும். ஓம்.....ஓம் என்று சுவாமிகள் உச்சரித்துக்கொண்டே இருப்பார்.நெருப்புக்குள் சுவாமிகள் எங்கே இருக்கிறார் என்பதையே கண்டுபிடிக்க முடியாது.  குழந்தைகள் எட்ட நின்றபடி தேடித் தேடிப் பார்க்கும்.  கொழுந்து விட்டு எரிந்த குப்பைகள் ஒரு கட்டத்தில் அணைந்து சாம்பலாகிவிடும்.  தொட்டியின் அருகே எவராவது சென்றால் அப்படித் தகிக்கும். அத்தகைய தொட்டிக்குள் இருந்து அநாயாசமாக எழுந்து வெளியே வருவார் சுவாமிகள்.  அவரது உடம்பில் தீப் பட்ட சுவடு கொஞ்சமும் இருக்காது.  இது ஏதோ வேடிக்கை போலும் என்பதாக நினைத்துக் கைகொட்டிச் சிரிக்கும் அந்தக் குழந்தைகள்.

அதுபோல் குழந்தைகளுக்கு ஜுரம் போன்ற ஏதாவது வியாதி இருந்தால், சுவாமிகளே அவர்களது வீடுகளுக்குத் தேடிப் போவார். குழந்தையைப் பெற்ற தாயும், சுவாமிகளைப் பார்த்து, எம் புள்ள குணாமாகணும் சாமீ என்று கைகூப்பி வேண்டுவார். குழந்தையை வாங்கி ஓரிரு விநாடிகளுக்கு சுவாமிகள் கொஞ்சுவார்.  என்னே ஆச்சரியம்.... அடுத்த சில நிமிடங்களில் குழந்தைக்கு இருந்த வியாதி பஞ்சாய்ப் பறந்தோடிப் போய்விடும். திண்டுக்கலில் சௌராஷ்டிர பிராமணர் ஒருவர் வசித்து வந்தார்.  திருமணாகி, குழந்தையே இல்லை.  சுவாமிகளின் மேல் கொள்ளைப்பிரியம்.  தீவிரமான பக்தர்.  சுவாமிகளை தரிசிக்கவில்லை என்றால்  அவருக்கு உணவு செல்லாது; தூக்கம் வராது.  தங்கள் வீட்டில் மழலை ஒலி கேட்க, குழந்தை வரம் வேண்டி, சுவாமிகளை அவ்வப்போது பிரார்த்தனை செய்வார். விதியின் போக்கை யார் அறிவார்?  பூர்வ வினைகளின் காரணமாகக் காச நோய் அந்த சௌராஷ்டிர பிராமணரைத் திடீரெனப்பற்றிக்கொண்டது.  குடும்பத்தினர் அதிர்ந்து விட்டனர்.  மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.  ஒரு டாக்டரது சிகிச்சை பலன் தரவில்லை என்றால் இன்னொரு டாக்டரைப் பார்த்தனர்.  ஆனாலும், சிகிச்சையினால் எந்தப் பலனும் விளையவில்லை.  ஒரு கட்டத்தில் அனுபவித்தில் முதிர்ந்த டாக்டர்களே, இது தீர்க்க முடியாத வியாதி, உயிர் பிழைப்பதே சிரமம்.  இருக்கும்வரை அவர் சந்தோஷமாக இருக்குட்டும்.  வீட்டுக்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை.... மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மகானே துணை!  அந்த சௌராஷ்டிர பிராமணர், ஒத  சுவாமிகள் இருந்து வரும் குகைக் கோயிலுக்குப் போய் வழிபட ஆரம்பித்தார்.  தினமும் மனமுருகப் பிரார்த்திப்பார்.  இப்படித்தொடர்ந்து ஒரு மண்லம் வழிபட்டார்.  ஆனாலும், பிராமணரின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை, ஒரு நாள் மனம் வெறுத்துப்போனார்.  சுவாமிகளை வழிபட்டும் உடல் நிலை தேறவில்லை என்றால், இந்த உடல் இருந்து என்ன பயன்?  என்று தீர்மானித்தவர் அந்தக் கோயிலேயே தன் உயிரை விட முடிவெடுத்தார். அன்றைய தினம் நள்ளிரவு வேளையில் தன்னை மாய்த்துக் கொள்வதாக இருந்தார். பிராமணர். மனைவியைப் பிரிகிறோமே

என்கிற வேதனையும் இல்லாமல், தன் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு நேரம் பார்த்துக் காத்திருந்தார்.  குகைக் கோயிலின் ஏதோ ஒரு மூலையில் சுவாமிகள் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். மனமுருக அவரைப் பிராத்தித்துக்கொண்டார்.  மற்றப்படி வேறு எவரும் அங்கே இல்லை. தன் பக்தன் ஒருவன் , இப்படி உயிரை மாய்த்துக்கொள்ள ஒத சுவாமிகள் விரும்புவாரா? சித்து வேலைகளைத் துவக்கினார்.  அந்த நள்ளிரவு வேளையில் பிராமணரின் வீட்டுக்குப் போனார். கதவைத் தட்டினார். மனைவிதான் கதவைத் திறந்தார். (கணவர்தான் உயிரைப் போக்கிக்கொள்வதற்காக இங்கே குகைக் கோயிலில் அமர்ந்திருக்கிறாரே!). அகால வேளையில் சுவாமிகளைப் பார்த்தும் பதறிப் போனார் மனைவி.  பிறகு, தோபாரம்மா .... உம் புருஷன் அங்கே உக்கார்ந்து என் நிஷ்டையைக் கெடுத்துக்கொட்டிருக்கான்.  அவனை அந்த இடத்துக்கு இனிமே வரச் சொல்லாதே. அவனுக்கு ஒரு வியாதியும் இல்லை.  தேவை இல்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்கறான்.  கூடிய சீக்கரமே உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கப் போகுது.  உடனே கௌம்பிப் போய், அவனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடு.  அதுதான் நல்லது என்று சொல்லி, மனைவியையும் ஆசிர்வதித்து மறைந்தார்.

அடுத்து என்ன நடந்தது போன்ற சுவாரஸ்யமான செய்திகளை அடுத்த பதிவில் காண்போம்.


மீள்பதிவாக:-

 திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Monday, October 5, 2020

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று அக்டோபர் 5 ஆம் தேதி.. வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று. வள்ளலார் வருகையால் மடம் சங்கமானது. சத்திரம் சாலையானது. கோவில் சபையானது.இன்று தமிழகம் முழுதும் வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் சார்பில் பல இடங்களில் அன்னசேவை, அகவல் பாராயணம் என பல்வேறு வகைகளில் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வள்ளலார் வாழும் சித்தர் ஆவார். மரணத்தை வென்ற மாபெரும் மகான் ஆவார். வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர். அன்னசேவையை அணையா அடுப்பு மூலம் ஆரம்பித்து வைத்தவர். எட்டும் இரண்டும் பற்றி பேசியவர். பெயருக்கு ஏற்றார் போல் வள்ளலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.



முதலில் சில காட்சிப்படங்களை கீழே இணைத்துள்ளோம். ஒரு முறை படித்தால் ஒன்றும் புரியாது. மீண்டும் மீண்டும் படித்தால் தான் மனதுள் இவரை நிலைநிறுத்த முடியும். நமக்கும் சேர்த்து தான் இங்கே சொல்கின்றோம்.






 நம் தேடல் உள்ள தேனீக்களாய் தளமும் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் பலமுறை அன்னதானம் செய்துள்ளோம். அடுத்து வள்ளலார் சீடர்கள் பலரின் அறிமுகம் கிடைத்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சன்மார்க்க நேசன் திரு. M.A. ஹுசைன் ஐயா, வள்ளலார் மோகன் ஐயா, காந்திராஜன் ஜானகிராமன் ஐயா, கொளப்பாக்கம் சந்தானம் ஐயா, தயவு சித்தாஸ்ரமம் திரு.சரவணன் ஐயா  என அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களில் ஒவ்வொருவரின் சேவை,தொண்டு பற்றி நேரில் சென்று அளவளாவி தனிப் பதிவாகவே அளிக்கலாம். சிலரை நம் தளத்தில் பதிவிட்டு இருக்கின்றோம். குறிப்பாக சன்மார்க்க நேசன் திரு. M.A. ஹுசைன் ஐயா பற்றியும், தயவு சித்தாஸ்ரமம் திரு.சரவணன் ஐயா பற்றியும் தொட்டுக் காட்டி இருக்கின்றோம்.  மேலும் கூடுவாஞ்சேரி வள்ளலார் சன்மார்க்க சபை மாதந்தோறும் அன்னதானத்தோடு, கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பூச நட்சத்திர பூசையும் செய்து வருகின்றார்கள்.














சென்ற புரட்டாசி மாத மகாளய பட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையில் நடைபெற்றது. அப்போது சபை பெரியோர்கள் அக்டோபர் 5 ஆம் தேதி வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் அன்னசேவை செய்ய கூறினார்கள். நாம் இதனை கட்டளையாகவே ஏற்றுக் கொண்டு அன்றே சிறு முன்தொகையாக ரூ.500 கொடுத்துவிட்டு வந்தோம். இது நாம் வழக்கமாக செய்யும் அன்னசேவை போல் தான் இருக்கின்றது. எனவே இனிப்பு, உளுந்த வடை சேர்த்து பிரிஞ்சி சாதம் இன்றைய அன்னசேவையில் சேர்த்தோம்.

இருப்பினும் மனதில் ஒரு நிறைவு நமக்கு ஏற்படவில்லை. அப்போது தான் பெங்களூரிலிருந்து நம் அன்பர் அன்னசேவைக்கு தேவையான அரிசி,பருப்பு, மளிகை பொருட்கள் வாங்கித் தரும்படி கூறினார்கள். அட..இது நமக்கு தோன்றாமல் போய் விட்டதே என்று கருதினோம். உடனே இதனையும் ஏற்பாடு செய்தோம். மேலும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கேற்ற இலுப்பெண்ணெய் உள்ளதா என்று கேட்ட போது இரண்டு லிட்டர் உள்ளது என்று கூறினார்கள். எனவே இலுப்பெண்ணை 15 கிலோ கொண்ட ஒரு டின் வாங்கி தரலாம் என்று தீர்மானித்தோம்.

இதோ..அனைத்தும் குருவருளால் நிறைவேறியது.


                                                                                                                                                                                                








அடுத்து ஒரு நாள் அன்னசேவைக்கு தேவையான அரிசி, பருப்பு,மளிகை பொருட்கள் தந்த போது 


15கி எடை கொண்ட இலுப்பெண்ணை டின் ஒன்றும் கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையில் கொடுத்துள்ளோம்.


பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி, இப்பதிவை நிறைவு செய்ய விரும்புகின்றோம். சென்ற ஆண்டில் இதே நாள் அக்டோபர் 5 ஆம் தேதியை நாம் ஒன்றும் செய்யாமல் கடந்தோம். ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டில் குருவருளால் நம்மால் முடிந்த அளவில் சுமார் 100 அன்பர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம், ஒரு நாள் அன்னதானம் செய்ய தேவையான அரிசி,பருப்புடன் மளிகை பொருட்கள், தீபமேற்ற இலுப்பெண்ணை கொடுத்துள்ளோம் என்றால் அனைத்தும் குருமார்களின் வழிகாட்டல் தான் என்பதை மீண்டும் இங்கே நாம் உணர்கின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.

மீள்பதிவாக:-

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

Saturday, October 3, 2020

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கிரிவலம் என்ற ஒற்றைச் சொல்லுக்குத்தான் எத்தனை மகிமைகள்! கிரி என்றால் மலை,
வலம் என்ற சொல்லுக்கு உங்களுக்கே பொருள் தெரியும். மலையையைச் சுற்றி வலம் வருவது தான்
கிரிவலம். பொதுவாக கிரிவலம்  என்று சொன்னாலே அனைவருக்கும் திருஅண்ணாமலை என்று
தான் நினைவிற்கு வரும், ஒவ்வொரு தமிழ் மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில்
திருஅண்ணாமலை கிரிவலம் பிரசித்தி பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்று நாம் கிரிவலம் பற்றியும், திருஅண்ணாமலை பற்றியும் அறிய உள்ளோம்.





திருஅண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை
வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில்
 உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள்
இங்கு கிடைத்த   செப்பு தகடுகளால்  கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின் புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது.
அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை
மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள்,
கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம்
அடைய உதவியுள்ளனர்.



மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில்
இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில்
 கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார்
 பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு
வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.


சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்.
ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில்,
சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும்,
பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார்.
இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா
 ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை.
இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக
உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.




திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக
பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.
பல மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள்
மூலம் பாராட்டுகளைப்  பெற்ற ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. உலகை உருவாக்கிய மற்ற நான்கு பூதங்கள் நீர், வாயு, ஆகாயம், மற்றும் பூமி. இந்த அழகிய சிவனடியார்களின் கோயில்
அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயிலை சென்றடைய காட்பாடி [ வேலூர் ]. ரயில் நிலையத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார். சிவனை அசைக்க முடியாத மலை என நம்புவதால்
 பக்தர்கள் சிவனடியாரை அண்ணாமலையார் என்றும் பெயர் சூட்டி வழிபடுகின்றனர்.
 அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும்
கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.
 கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது.
ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும்
 அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெறும்  என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை.



தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான
 உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும்,
திரேதா யுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது
இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது.அருணாச்சலேஸ்வரர்
கோயிலில்  அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு 
திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு
திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம்  என்று அழைக்கப்படுகிறது.

இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்க்கை  அமைய வழி
செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்த லிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.
சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும்
பெருத்த செல்வமும் வழங்கும்.



கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில்
இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள்
 நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம்
 சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.
 இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது, யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு
 உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை
வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும்.
இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக
பிரச்னைகளின்றி வாழலாம்.



கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு.
மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம்
சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும்
கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம்
கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல் , மற்றும் பொதுவாக
வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம்
குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த
லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய
வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம்
ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு
திகழ்வார்கள்.

அடுத்து கிரிவலம் செல்வதற்கான சில யோசனைகளை இங்கே அறியலாம். நம்மைப் பொறுத்தவரை அந்த எஜமானின் ஏகாந்த நிலை உணர, பௌர்ணமி அல்லாது மற்றைய தினங்களில் கிரிவலம் செல்வது நன்று.
இப்போதெல்லாம் ஏனோ,தானோ என்று தான் செல்கின்றார்கள், அங்கே வந்து கொண்டு தொலைக்காட்சி
சீரியல்கள் போன்ற தேவையில்லாத செய்திகள் பேசிக்கொண்டு தான் கிரிவலம் வருகின்றார்கள்.ஆனால்
கிரிவலத்தின் நோக்கம் இது அன்று. மனதில் சிவ சிவ என்று நமக்குத் தெரிந்த சிவா மந்திரத்தையோ அல்லது
இறை நாமத்தையோ ஜெபித்துக் கொண்டு செல்ல வேண்டும். திருஅண்ணாமலை ..வார்த்தைகளில் அடங்கா
ஆன்மிக பூமி. எப்போதும், யாராவது இங்கே கிரிவலம் வந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பது
திருஅண்ணாமலையில் தனிச்சிறப்பு.




கிரிவலம் செல்பவர்களுக்கு சில யோசனைகள் :-

  • பாதணிகள் இல்லாமல் செல்வது பொருத்தமாகும்.
  • கிரிவலம் வரும்போது மலையின் உச்சியை நோக்கியே வலம் வருவது மிகவும் நல்லது.
  • கிரிவலம் பௌர்ணமி தினமும் அல்லது இரவில்,அமாவாசை, மாத சிவராத்திரி அன்று செல்லலாம்.
  • கிரிவலம் செல்பவர்கள் “ஓம் அருணாச்சல” என சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.
  • கிரிவலம் வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் தீய வார்த்தைகளைப் பேசக்கூடாது. 
  • எந்த இடத்திலிருந்து தொடர்ந்தோமோ அதே இடத்தில் முடித்தால்தான் கிரிவலம் முழுமை பெறும் என்கிறது, அருணாசல புராணம். 
  • சித்திரை மாத பௌர்ணமியன்று அண்ணாமலையாரின் கிழக்கு கோபுரத்தின் முன் பசுநெய்யிட்டு, தாமரைத் தண்டு திரியினால் அகல் விளக்கு ஏற்றி அதை உயர்த்திப் பிடித்து தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து, பிறகு கிரிவலம் தொடங்க வேண்டும். பிறகு பூதநாராயணர் ஆலயத்தில் பூக்களை தானமளித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  • கிழக்கு கோபுர வாயிற்படியில் அருளும் லட்சண விநாயகரை சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து வணங்கி பின் அண்ணாமலையாரை  தரிசிக்க வேண்டும். இதற்கு லட்சண திருமுக தரிசனம் எனப் பெயர். அதன் பின் மகாலட்சுமி காயத்ரி மந்திரத்தை ஜபித்தவாறே கிரிவலம் வந்தால்  செல்வ வளம் பெருகும்.
  • எமலிங்கத்தின் அருகே இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும். முடியாதவர்கள் அத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு, சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து அதை பிரசாதமாகப் பெற்று எமலிங்கத்தின் வாயிலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஔதும்பர தரிசனம் என்று பெயர். இது நீடித்த ஆயுளைத் தரும். 
  • கிரிவலப் பாதையில் செங்கம் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இது பரஞ்ஜோதி  தரிசனம் என அழைக்கப்படுகிறது. 
  • குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதனை வைவஸ்வதலிங்கமுக தரிசனம் என்பார்கள்.  
  • பூதநாராயணப் பெருமாளை தரிசித்து நம் பொருளாதார பிரச்னைகளுக்கு அவரிடம் பிரார்த்தனை செலுத்தி பின் அண்ணாமலையை  தரிசிக்க வேண்டும். இது சத்தியநாராயண தரிசனம் எனப்படுகிறது. 
  • கிரிவலம் வரும்போது மிகவும் மெல்ல நடக்க வேண்டும். இறை சிந்தனையோடும் நாம ஜபத்தோடும் நடக்க வேண்டும். 
  • கிரிவலத்தின் போது ஒவ்வொரு திக்கிலும் தியானித்து, கைகூப்பித் துதித்து, ஒரு நிறைமாத கர்ப்பிணி எவ்வளவு நிதானமாக நடப் பாளோ அவ்வளவு மெதுவாக, வைக்கும் காலடி சத்தம் கேட்காதபடி நடக்க வேண்டும். 
  • நீராடி, மடித்துணி உடுத்தி, விபூதி-ருத்ராட்சம் தரித்து கிரி பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக்கு அணி யலாம்.       
  • நீர் அருந்துவதைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது. 
  • பாதணிகள் அணியாமல் அண்ணாமலையை வலம் வர வேண்டும்.
  • பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அண்ணாமலையாரை அர்ச்சித்து மௌனமாக கிரிப்பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்  பாவங்கள் பறந்தோடும்.
  • கிரக பீடைகள் நீங்க விரும்புவோர் சனிக்கிழமையில் அண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் வாகனத்தில் அமர்ந்து கிரிப் பிரதட்சிணம் செய்யக்கூடவே கூடாது.  
  • நிலைத்த இளமை வேண்டுவோர் கிரிவலம் வந்து உண்ணாமுலையம்மனை தரிசித்தல் வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. 
  • மற்ற தலங்களில் தவமிருந்தால் முக்தி கிட்டும்; இங்கோ, நினைத்த மாத்திரத்திலேயே முக்தி கிட்டும். எனவே முடிந்த போதெல்லாம் அருணாசல மலையை தியானிக்க வேண்டும். 
  • உலகில் எவ்வளவு தவங்கள் உண்டோ அவ்வளவு தவங்களின் பலனையும் கிரிப்பிரதட்சிணம் ஒன்றே தரும் என்பதால் ஆழ்ந்த நம்பிக்கையோடு கிரிவலம் வரவேண்டும். 



இது மட்டுமா? இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இந்த புண்ணிய பூமியில் உண்டு, ரமணர் ஆசிரமம்,
சேஷாத்திரி, விசிறி சாமியார் என பார் புகழும் பாரத மகான்களை இங்கே தரிசிக்கலாம். சித்தர்கள்
அருளும் சித்தாந்த உலகம் இன்னும் அங்கே உண்டு. இனிவரும் பதிவுகளில் இன்னும் உணர்வோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

Friday, October 2, 2020

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில்  கொஞ்சம் வள்ளலார் பற்றி சிந்திப்போம். இந்த மாதம் 5 ஆம் தேதி வள்ளலார் வருவிக்க உற்ற தினம் ஆதலால் இயல்பாக இன்றைய பதிவில் வள்ளலார் பற்றி அறிய இருக்கின்றோம். நம் தளம் சார்பில் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையில் மதியம் அன்னசேவைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நாம் இப்போது தான் வள்ளலார் வழியில் சில அடிகள் எடுத்து வைத்து உள்ளோம்.




மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.எடுத்த உடனே திருவருட்பா, அகவல் என்று சென்றால் அது கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகி விடும். அதற்கு முதலில் அருகில் உள்ள  வள்ளலார் சபைக்கு சென்று சேர வேண்டும்.

அவர்களின் வழியொற்றி நடந்தால் தான் நமக்கு வள்ளலாரின் வழி என்ன என்றும் புரியும். அப்படி நமக்கு கிடைத்த செய்திகளை இங்கே தொகுத்து தர இருக்கின்றோம். 

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் என்று வள்ளலார் வேண்டுகின்றார் என்றால் அவரின் மனம்,மொழி,மெய் எவ்வளவு தூயதாக இருக்க வேண்டும். அந்த நிலையை அனைவரும் பெறுவதே அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் ஆணையும் கூட.

ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.


திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே


என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,


தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்


ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,


சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே


ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.


ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.





வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும்.


நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே


ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும்.  ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறலாம் என்பது திண்ணம்.
































சரி. வள்ளலார் பற்றி சிறிது உணர்ந்து கொண்டோம். இனி அவரின் உபதேசங்களை சிறிதும்  கண்டோம்.ஒரு தடவை படித்தால் புரியாது. ஓராயிரம் தடவை படித்தால் தான் உணர்ந்து நாம் கைக்கொள்ள முடியும். அடுத்து வள்ளலார் என்று சொன்னால் நம் நினைவிற்கு வருவது திருஅருட்பா. நமக்கு என்று வாய்க்கும் என்று தெரியவில்லை. உணர்ந்தபின் இங்கே அறிய தருகின்றோம்.இத்துடன் இந்தப் பதிவில் நிலை பெறுவோம்.  

- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.


மீள்பதிவாக:-

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html