"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, November 27, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் திருஅண்ணாமலை தீப தரிசனம் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. நம்மால் என்ன செய்து விட முடியும்? அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்று வருகின்றது என்று ஒவ்வொரு நிகழ்விலும் உணர்த்தப்பட்டு வருகின்றோம். திருஅண்ணாமலை தீப தரிசனம் காண ஏற்பாடானதும், எங்கிருந்து?எப்படி? காண உள்ளோம்? 30 லட்சம் பக்தர்கள் கூட்டத்தில் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா? அந்த ஞான ஜோதியை இந்த ஊனக்கண் கொண்டு காண நமக்கு தகுதி உள்ளதா? என்று நினைத்து, குருவிடம்..நீரே துணை.. தீப ஜோதி காண அருளுங்கள் அப்பனே! என்று மனதுள் வேண்டி சென்றோம்.

குருவிற்க குறைவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு ஆனந்த தரிசனம் கொடுத்தார். அங்குமிங்கும் ஓடி, இங்கு இருந்து பார்த்தால் தெரியுமா? என்று அலைந்த போது, ஒரு தங்கும் விடுதியின் மேலே செல்ல வாய்ப்பு கிடைக்க, ஒரு 10 முறை மாடி படி ஏறி, மேலே சென்று பார்த்தால், அடியார்கள் படை சூழ, பஞ்சாட்சரம் ஓதிக் கொண்டே நேரில் கார்த்திகை தீப தரிசனம் கண்டோம்.

எதுவும் என்னுடையது அல்ல,அனைத்தும் உன்னுடையதே, அருளாளா அருணாசலா! 

என்று வேண்டுவதையே வாழ்வில் கை கொள்ள வேண்டும். 

அகத்தியம் வழிபாட்டிற்கு வந்த பின்னர் அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பில் ஆலய தரிசனம் கண்டு வருகின்றோம். அந்த வகையில் குருநாதர் அருளால் நமக்கு பொது வாக்கில் பல ஆலய தரிசனங்களை அருளி உள்ளார்கள். அவற்றை கடந்த ஐப்பசி மாதம் முதல்  அகத்தியப் பெருமானின் உத்தரவு! என்ற தலைப்பில் பார்த்து வருகின்றோம். கருணைக்கடலாம் ஸ்ரீ அகத்தியர் பெருமான் நமக்கெல்லாம் அருளை வாரி வழங்கிக் கொண்டு வருகின்றார். அதனால் தான் நமக்கு பரிகாரங்கள் என்று கூறுவதை விட, எப்படி வாழ வேண்டும் என்று வாழ்வியல் விழுமியங்களை ஆலய தரிசனம் , தர்மம், தீப வழிபாடு மூலமாக கூறி வருகின்றார். ஏற்கனவே அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் என்று முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! பற்றி பார்த்தோம். 

இன்றைய பதிவில் கார்த்திகை மாதம் -  ஓதிமலை தரிசனம் பற்றி குருவின் மொழியில் அறிந்து கொள்ள உள்ளோம். 



கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது சஷ்டியில் வேளை மாலைப்பாெழுதில், ஓதிமலை உச்சியில் முருகன், பிள்ளையாேன், ஐயப்பன் என மூவரும் விளையாடுவார்கள். அவ்வேளையில் அவர்களின் பார்வைகள் நம்மீது பட்டால் பல கர்மாக்கள் நீங்கும்

என நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் உரைத்துள்ளார்.


(ஓதிமலையப்பன் சூட்சுமத்தை பற்றி அகத்தியர் 7/9/2021 அன்று  உரைத்த ஜீவநாடி பாெதுவாக்கு)

ஓதிமலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன். நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன். கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன். அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள். அப்பனே! அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட.

அப்பனே! இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால், பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும்பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு.

முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். 

ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள்.

 என்று குருநாதர் திரும்பவும் வாக்குரைத்திருந்தார்.

 இவ்வருடத்தில் கார்த்திகை மாதத்தில் கடைசி சஷ்டி நாள்  (03.12.2023 - ஞாயிறு அன்று)

 சொல்கின்றேன் அப்பனே

நல் விதமாக இவை என்று கூற 

அன்று கந்தன் அப்பனே ஐயப்பன் அப்பனே நல் விதமாகவே பின் இதனையும் அறிந்து பிள்ளையோனும்(பிள்ளையார்) நல்விளையாட்டாக விளையாடி பின் அனைவருக்கும் ஆசிகள் தந்துவிட்டார்கள். அன்றைய தினத்தில் அனைவருக்கும் ஆசிகளே.

இன்னும் மென்மேலும் சில சில வினைகளால் சில  கஷ்டங்கள் ஏற்பட்டபின் இவர்களுக்கும் நல் விதமாகவே சிலசில கர்மங்களில் இருந்து நீக்கி விட்டான் பின் ஓதிமலையப்பன்.

இதனை அறிந்து கூட அவரவர் ஒருவர் ஒருவர் தம் நினைப்பிலும் இவ்வாறு ஆக வேண்டும் அவ்வாறு ஆக வேண்டும் என்று நினைத்ததற்கு எல்லாம் பின் நல்வழிகள் தந்துவிட்டான்.

ஆனாலும் விதியில் இல்லாததையும் சிலபேர் கேட்டனர் ஆனாலும் அதையும் கூட முருகன் தயங்கினான் என்பேன்.

ஆனாலும் இதையும் பின் இவையன்றி  கூற சிறிது சிறிதாக கொடுப்போம் என்று எண்ணி பின் நல் விதமாகவே பின் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும்.பின் தன் குழந்தைக்கும் திருமணம் பாக்கியம் இல்லாதவர்களுக்கும் தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் பாக்கியமும் நிச்சயம் உண்டு என்பேன்.

என்று கூற நிச்சயமாய் ஐயன்(ஐயப்பன்) கூட அருளி விட்டான் என்பேன் என்பேன்.

என்பதற்கிணங்க பிள்ளையோனும் விளையாட்டாக பின் எதனையும் என்றும் கூட இவர்களும் இங்கு வந்து விட்டார்களா?!

யாம் எதனை என்று கூற பின் எதனையும் என்று கூற பொய்யான பக்தர்கள் இனிமேலும் எதனை என்று கூறாமலே  பின் எதனை என்றும் தெரியாமலே வணங்கு கின்றனர் என்று கூட பிள்ளையோன் சிறிது நேரம் பின் அமர்ந்திட்டான். 

ஆனாலும்

பின் இதனையும் என்று கந்தனிடம் இவையன்றி கூற பின் பிள்ளையோனும் கூறி கூறினான் இவ்வாறு.

கந்தனே இவ்வாறு என்று உந்தன் இடத்தில் எவ்வாறு வணங்குகின்றார்கள் என்பதற்கிணங்க அனைவரும் மாயையையே கேட்கின்றார்களே

ஆனாலும் நீயும் கொடுத்து அனுப்புகின்றாய்  அதனையும்

ஆனாலும் கடைசியில் அம்  மாயை அழிந்து விட்டு பின் திரும்பவும் திரும்பவும் கேட்கிறார்களே அப்போதெல்லாம் நீ என்ன செய்வாய்? என்று கேட்க.

கந்தனும் இவை என்றெல்லாம் பின் இவந்தன்  தெரிந்து கொள்ளத்தான் யான் கொடுக்கின்றேன்.

ஆனாலும் இவந்தனே பின் அழித்துவிட்டு பின் கடைசியிலே பின் கந்தா என்று வருகின்றார்கள் அதனால்தான் மனச்சஞ்சலம் அவந்தனுக்கே. 

அதனால் தான் மனிதன் போனால் பிழைத்து கொள்ளட்டும் என்றெல்லாம் கூட என் ஆசீர்வாதங்கள் தந்து கொண்டேதான் இருக்கிறேன்.

அவ் ஆசீர்வாதங்களை மனிதன் சரியாக முறையாக பயன்படுத்துவதே இல்லை என்பேன்.

சரியாக முறையாக பயன்படுத்தினால் அவனை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

என்னுடைய அருள் பெறுகின்றவர்களும் இனிமேலும் நலன்களே ஏற்படுவது உறுதி என்பேன்.

உறுதி என்பேன் இன்னும் பல போராட்டங்களும் வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும் இக்கலியுகத்தில்.


நிச்சயமாய் கந்தன் நல் விதமாகவே அவனுடைய அருள் பெற்று விட்டால் இவ்வுலகத்தில் ஏதும் எவராலும் செய்ய இயலாது என்பேன்.


இவ்வுலகத்தில் நிச்சயமாய் இவ் கலியுகத்தின்  தெய்வமாக கந்தனே விளங்குவான் என்பதைக்கூட உறுதியாகச் சொல்கின்றேன்.

அதனால் அப்பனே இவையன்றி   கூற இனிமேலும் மனிதர்கள் நிச்சயம் பின் பணத்திற்காக இவையன்றி கூற சில போராட்டங்களுக்காகவே இவைதன் தீர்க்க தீர்க்க இறைவனிடத்தில் ஓடி வந்தால் நிச்சயம் செய்ய மாட்டான். 

அமைதியாக இறைவா இறைவா உன் அருளே போதும் என்று நினைத்திருந்தாலே போதுமானது.

போதுமானதற்கிணங்க பின் பின் மேலும் முயற்சிகள் மேற் கொண்டால் அப்பனே அனைத்தும் நிறைவேறும் அனைத்தும் நடக்கும் அப்பனே.

ஓதியப்பனின் அருள் அப்பனே பன் மடங்கு என்பேன்.

அங்கு சக்திகள் அப்பனே பல பல என்பேன்.

ஆனாலும் யாரும் உணர்வதில்லை அப்பனே.

இன்று கூட அங்கு போராட்டங்கள் அப்பனே சிலசில வினைகளால் அப்பனே எதிரிகள் கூட தங்கி நின்று அப்பனே எவை எவை என்று கூட நிற்கின்றார்கள்.

ஆனாலும் முருகனோ  அப்பனே அன்று இரவும் எவ்வாறும் அன்றிலிருந்து இன்று வரையும் கூட அப்பனே சிறிது ஓய்வெடுத்து பின் உறங்கி தான் செல்கின்றான் அப்பனே.

இவையன்றி  கூற இன்னும் பெரிய பெரிய மாற்றங்கள் இவ்வுலகத்தில் வந்து கொண்டே இருக்கும் அப்பனே.

அப்பனே இவைதன் நல் விதமாக ஓதிமலையப்பனை தரிசனம் கண்டே வந்தால் அப்பனே வாழ்க்கையில் உயர்வுகள் பெற பெற இருப்பது நிச்சயமே என்பேன் அப்பனே.

இன்னும் 05 நாட்களே (03/12/2023 - ஞாயிறு) உள்ளன ஓதிமலை உச்சியில் தெய்வங்களான முருகன், விநாயகர், ஐயப்பன் மூவரும் விளையாடும் நிகழ்வு :




அகத்திய மாமுனிவர் உத்தரவு வாக்கு :

"கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது சஷ்டியில் (03/12/2023 - ஞாயிறு) மாலைப்பாெழுது வேளையில், ஓதிமலை உச்சியில் முருகன், பிள்ளையார், ஐயப்பன் என மூவரும் விளையாடுவார்கள். அவ்வேளையில் நீங்கள் அங்கு செல்ல மூவரின் பார்வை மனிதர்கள் மீது பட்டால் பல கர்மாக்கள் நீங்கும்" என அகத்தியர் உரைத்துள்ளார்.

ஆலயம் : அருள்மிகு ஓதிமலை முருகன் காேவில்.

ஊர் : ஓதிமலை (இரும்பறையில் இருந்து 04 கி.மீ தாெலைவு)

வட்டம் : அன்னூர்

மாவட்டம் : காேயம்புத்தூர்

மலைப் படிக்கட்டுகள் : 1850 படிகள்

ஓதிமலை பற்றி அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :

1. சங்கரனுக்கு, சரவணகுகன் ஓதிய கிரி

2. சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி

3. சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி

4. சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி

5. சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி

6. சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி

7. சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால்,

8. பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தோன் அருளும் கிரி

9. சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி

10. அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி

11..நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
 நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி

12.கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள் ஓதினாலும்,
கட்டிய மனைவி ஒதுகிறாளே என்று தாய் ஓதினாலும்,
 உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும்
மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்
அனைத்திலும் பேதமுண்டு.சுயநல நோக்குண்டு
பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக 
ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,
நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,
அறுவதனமும் ஐவதனமாகி,
எழு பிறப்பும் எட்டென விரட்டி,
உபயவினையும் இல்லாது ஒழித்து,
சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,
அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி
ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.

13.ஞானத்தை நல்கும் கிரி

14.அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி

15.பேதத்தை நீக்கும் கிரி

16.வேதத்தை உணர்த்தும் கிரி

17.சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி

18.நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி

19.வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி

20.எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி

21.கர்ம நிலைகளை மாற்றும் கிரி

22.அக உளைச்சல் ஒழிக்கும் கிரி

253.பேதம் காட்டா வேத கிரி




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

 ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

 வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

Sunday, November 26, 2023

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இந்த ஆண்டில்  அந்த நாள் இந்த வருடம் - 2023  - கோடகநல்லூர் தரிசனம் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நாமும் அன்றைய தினம்  மதியம் வரை கோடகநல்லூர் யாத்திரை பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால் இதற்கு முந்தைய  கோடகநல்லூர் பதிவை நாம் பகிர்ந்த போது ஐப்பசி உத்திரட்டாதி பற்றி படிக்க படிக்க அன்றைய நாளின் முக்கியத்துவம், குருநாதர் வழிகாட்டல் இவை அனைத்தும் நம்மை கோடகநல்லூர் பற்றியே சிந்திக்க வைத்தது. பின்னர் மதுரையில் இருந்து நேற்று காலை கோடகநல்லூர் யாத்திரை செல்ல குருவருளால் பணிக்கப்பட்டோம். இத்துடன் சில அன்பர்களும் பூஜைக்கு பொருளுதவி செய்தார்கள். அவற்றையும் நேற்று சமர்ப்பித்தோம். நேற்றைய கோடகநல்லூர் வழிபாட்டில் சில துளிகளை இங்கே பகிர்கின்றோம்.

1. முதலில் மணிமூர்த்திஸ்வரம் விநாயகப் பெருமான் தரிசனம்.( திருநெல்வேலிக்கு சென்றதும் தீடீரென குருவருளால் தரிசிக்க சென்றோம்)

2. விநாயகப் பெருமான் சன்னிதியில் அகவல் பாட விரும்பி செல்ல, ஏற்கனவே அடியார் பாடிக் கொண்டிருக்க நாமும் இணைந்தோம்

3. கோடகநல்லூரில் தாமிரபரணி தீர்த்த நீராடல்

4. தாமிரபரணி அன்னைக்கு மங்கலப் பொருட்கள் வைத்து, அன்னையைப் போற்றி, நன்றி கூறினோம்

5. அவிமுக்தீஸ்வரர் ஆலய நந்தவனத்தில் வில்வம்,அரசு, செம்பருத்தி மரக்கன்றுகள் நட்டோம்

6. கோடகநல்லூர் பெருமாள் திருமஞ்சனம் கண்டு, அபிஷேகம் பார்த்தோம்

7. நம் குழு அன்பர்கள், சில அடியார்களை நேரில் காணும் வாய்ப்பு

8. பல அகத்திய அடியார்களை நேற்று ஒரே நாளில் சந்தித்தோம்( சுமார் 20 அடியார்கள்)

9. அகத்திய வழிபாட்டில் நம்மை வழிநடத்தி வரும் அன்பர்கள் திரு.அக்னிலிங்கம் ஐயா, திரு. சுவாமி நாதன் ஐயா, திரு. முருகானந்தம் ஐயா, திரு ஆதவா ஐயா என நேரில் சந்தித்தோம்

10. பெருமாள் தரிசனத்தில் கோயிலில் தான் இருக்கின்றோமா? என வியப்பில் பல சுகந்த நறுமணத்தில் பெருமாள் தரிசனம்

11. அண்மையில் அம்மையப்பர் வாக்கு பெற்ற அடியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றோம். ( குருவருளுக்கு நன்றி)

12. நிறைவாக மஞ்சள் பிரசாதம், அன்ன பிரசாதம் பெற்றோம்

13. திரு. அக்னிலிங்கம் வழங்கிய புது பணம், திரு.சுவாமிநாதன் ஐயா வழங்கிய பெருமாள்,அகத்தியர் தரிசன போட்டோ என பெற்றோம்

14. பற்பல பிரசாதங்களாக மஞ்சள் கிழங்கு, பால்கட்டி பிரசாதம், அபிசேக மஞ்சள், பெருமாள் & அகத்தியர் போட்டோ என மனதிற்கு நிறைவாக பல பல பல பிரசாதங்கள்

15. வழிபாட்டிற்கு தயாரான போது 5 கருடன்கள் கோயிலை வட்டமிட்ட காட்சி

16. வழிபாடு நிறைவில் அனைவரும் எதிர்பார்த்த வருண பகவான் ஆசி

17. மதுரை பசுமலையில் ஶ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் கண்டு, நேற்றைய அருள்நிலைகளுக்கு நன்றி கூறி, மதுரை பரமசிவன் ஐயா சந்திப்போடு இந்த வழிபாடு முழுமை செய்தோம். ஒரே ஒரு மனக்குறையாக திரு.ஜானகி ராமன் ஐயா அவர்களை நேற்று நேரில் பார்க்க இயலவில்லை. ஐயா அவர்கள் நேரில் வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இன்னும் ..இன்னும்…குருவருள் வழிநடத்தட்டும்

அந்த நாள் இந்த வருடம்  2023 - கோடகநல்லூர் வழிபாட்டிற்கு அருளுதவியும், பொருளுதவியும் செய்த அனைத்து அடியார்களின் பாதம் வணங்கி, நன்றிகளைக் கூறி குருவருள் நம்மை இன்னும் பணிக்க வேண்டி பணிகின்றோம்

இன்றைய பதிவில் கோடகநல்லூர் ஆலயத்தில் இருந்து  நம் குருநாதர் தரிசனம் பெற உள்ளோம். இதுவும் நமக்கு இருந்த கேள்வி தான். அனால் கோடகநல்லூர் ஆலயத்தில் நுழைந்து திரு.அக்னிலிங்கம் ஐயா அவர்களை பார்த்ததும், அவர் இந்த நிகழ்வைக் கூறி, நம்மை நேரில் சென்று தரிசனம் செய்யும்படி பணித்தார். ஆம்.இந்த ஆண்டில் கோடகநல்லூர் ஆலயத்தில் முதல் முதலாக நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் பெற்றோம். நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள். இனி சித்தன் அருள் வலைத்தளத்திலிருந்து பதிவை தொடர உள்ளோம்.

 




அந்த நாள் இந்தவருடம் என்கிற தலைப்பில், கோடகநல்லூரில், பச்சைவண்ண பெருமாளுக்கு, அகத்தியப்பெருமான், அடியவர்கள் சார்பில் நடத்துகிற அபிஷேக பூஜைகள் 26/10/2023 வியாழக்கிழமை அன்று அகத்தியப்பெருமானால் தீர்மானிக்கப்பட்டது!

25/10/2023 அன்றே கோடகநல்லூர் சென்று பெருமாளை சந்தித்து, தனிமையில் த்யானம் செய்யலாம் என்று கிளம்பி சென்றேன்.

அவ்வாறு கிளம்பும் முன், அடியேன் பூசை அறையில், அகத்தியப்பெருமானையும் சேர்த்து, அனைவரிடமும் உத்தரவு வாங்கும் பொழுது, மனதுள் உதித்த ஒரு கேள்வியை சமர்பித்தேன்.

திரு ஹனுமந்ததாசன் அவர்கள் வாசித்த ஜீவ நாடியில் வந்து வாக்குரைத்த நீங்கள், பச்சைவண்ணப் பெருமாள் இங்கு வந்து அமரும் முன் 6000 வருடங்களுக்கு முன்னரே யாம் இங்கு வந்து பூங்காவனம் அமைத்து, தவமிருந்தேன் என கூறினீர்கள். தாங்கள் இங்கு அமர்ந்து தவம் செய்ததிற்கு ஏதேனும், சாட்சியம் உள்ளதா? என கேட்டேன், பின்னர் மறந்தே போனேன்.

கடந்த 6 மாதங்களாகவே, அடியேனுக்கும், குருநாதருக்கும், சில பொது விஷயத்தில் ஜீவநாடியில் சரியான வாய் தகராறு. கேள்வி கேட்கும் பொழுது, ஒரு பயமுமின்றி தெளிவாக எந்த விஷயத்தை பற்றியும் கேட்டு விடுவது அடியேனின் குணம். கேள்வி கேட்டு அவரை ஒரு பொழுதும் தோற்கடிக்க முடியாது. அனைத்தும் அறிந்தவரானதால், எல்லாவற்றிற்கும் அவரிடம் பதில் இருக்கும். ஒரு நிலைக்குப்பின் பின்னர், எதுவுமே கேட்காமல் அமைதியாக விலகி நின்றேன். திரு.ஜானகிராமனோ, அடியேன் கேட்கும் கேள்விகளை குருநாதரிடம் கேட்க பயப்படுவார். அவர் திட்டினால், அடியேன் பெயரை சொல், நான் கேட்க சொன்னேன் என்று கூறு என்பேன். பின்னர் யோசித்த பொழுது, எதற்கு இந்த களேபரத்தை உருவாக்க வேண்டும், என தோன்றியது. அமைதியாகிப் போனேன், இனி குருநாதரே விரும்பி ஏதேனும் சொன்னால் மட்டும் கேட்டு கொள்ளலாம், நாமாக எதுவும் கேட்க வேண்டாம் என்று, ஒதுங்கிக் கொண்டேன்.

இப்படிப்பட்ட நிலையில்தான் "சாட்சியம்" கேள்வி மனதுள் உதித்தது. எதிர்பார்ப்பின்றி கேட்டு விட்டேன்.

புதன் கிழமை மாலை, 4 மணிக்கு கோடகநல்லூரில் இறங்கினேன். கோவில் திறக்கவில்லை. சிறிது நேரம் தாமிரபரணிக் கரையில் அமர்ந்திருக்கலாம் என்று மனைவியுடன் சென்றேன். தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே நிறைய மண்மேடு தெரிந்தது. அப்படியென்றால், நீர் வரத்து மிக குறைவு என்று புரிந்தது. அருகில் சென்றதும் உண்மை என்று புரிந்தது. கால் கீழ் முட்டு வரையே நீர் சென்றது. எல்லா வருடமும், அந்தநாளுக்கு முன்னரே ஒரு நாள் வந்து பெருமாளிடம், நதியில் நீர் நிறைய வேண்டும் என விண்ணப்பித்து செல்வது அடியேனின் வழக்கம். இம்முறை, இந்த பக்கமே வராததினாலும், அகத்தியப்பெருமான் சொல்லட்டும் பின் பார்க்கலாம் என்று ஒதுங்கி நின்றதினாலும், விண்ணப்பம் சமர்ப்பிக்க மறந்து போனது. இருப்பினும், நதிக்கரையில் நின்று பெருமாளிடம் விண்ணப்பித்தேன், "நாளை உங்கள் குழந்தைகள் வருவார்கள், எல்லோரும் ஸ்னானம் செய்ய, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் கொடுக்க, இன்னும் சற்று நீர் வேண்டும். ஏதேனும் பார்த்து செய்யுங்கள்" என்றேன். பெருமாளும் ஆசிர்வதித்தார். [கீழ் முட்டு வரை இருந்த ஓடும் நீரின் உயரம், மறுநாள் காலை மேல் முட்டு வரை சென்றது.]

ஆற்றின் கரையில், மிக அமைதியான சூழ்நிலை. எதிர்கரையில், மயிலின் சப்தம், நிமிர்ந்து பார்க்க தோகை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது. வானில் மழை மேகம். மனம் ஒன்றி அமைதியை நாட, குளிர்ந்த காற்றில் மௌனமானேன். நகர பேரிரைச்சல் வாழ்க்கையில் ஒருபோதும் கிடைக்காத சூழ்நிலை.

சற்று நேரத்தில் எழுந்து, கோவிலை நோக்கி நடந்தேன். முன் வாசல் திறந்திருந்தது. "வாருங்கள்! எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டபடி அர்ச்சகர் கோவிலில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சுருக்கமாக பேசிவிட்டு, உள்ளே எட்டி பார்க்க, கொடிமரம் வரைதான் போக முடியும். உள்ளே கதவு இன்னும் திறக்கப்படவில்லை.

பெருமாளை பார்க்கும் முன் கருடாழ்வாரை பார்த்து, நமஸ்காரம் சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். வெகு நாட்களுக்குப்பின் வருவதால் கொடி மரத்தின் முன் நமஸ்காரம் செய்தேன். கண்ணை மூடி தியானித்து  பின் கருடாழ்வாரை பார்த்துவிடலாம் என்று அடி எடுத்து வைக்க,

"யாம் இங்குதான் இருக்கின்றோம்!" என்று கூறுவது தெள்ளத் தெளிவாக செவியில் கேட்டது. மனம் திறந்திருந்தால், இது அகத்தியப் பெருமானின் வாக்கு என்று உணர முடிந்தது.

"அது சரி! எங்க இருக்கீங்கன்னு எப்படி தெரியும்?" என்று மனதுள் கேள்வி கேட்டேன்.

"கருடாழ்வாருக்கு விளக்குப் போட்டுப்பார்! எம்மை பார்க்கலாம்!" என்று பதில் வந்தது. விளக்கு போட திரி, எண்ணெய், தீப்பெட்டி, விளக்கு என எதுவுமே கையில் இல்லை. வெறும்கை வேங்கடவனாக நடந்தேன்.

கருடாழ்வார் சன்னதி முன் சென்று நின்ற பொழுது, அவரை நோக்கி கை கூப்பி "இது வந்துவிட்டது! அய்யனே! நமஸ்காரம்!" என கூறிவிட்டு, பார்வையை அங்கும் இங்கும் ஓட்டினேன்.

எரிந்து முடிந்த விளக்குகள் நிறைய இருந்தது. கருடாழ்வாருக்கு இருபுறமும், சிறு தூண் விளக்கு. இடதுபுற விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. எண்ணெய் இல்லாமல் அணையப்போகிற நிலை. வலது பக்க தூண் விளக்கில், எண்ணை விட்டு, திரி போட்டு விளக்கேற்ற தயார் நிலையில் இருந்தது. அந்த திரியை எடுத்து எதிர் பக்க விளக்கில் அக்னியை கடன் வாங்கி விளக்கில் சேர்க்க வெளிச்சம் மிக குறைவாக இருந்தது.

இன்னொரு நூல் திரி இருந்தால் நன்றாயிருக்குமே என்று தேட, அந்த விளக்கின் அடியில் ஒரு புது திரி கிடந்தது. அதை எடுத்து விளக்கில் சேர்த்து தீபத்தை தூண்டிவிட, உயர்ந்து வந்த ஜோதியின் முனையில், அதற்குப்பின் தூணில் ஒரு உருவம். கங்கைக்காக தவம் செய்த பகீரதனின் தவம் போல், ஒற்றைக்காலில், (இடது கால் வலது முட்டியில் வைத்து) ஜடா முடி விரித்துப்போட்டு, கைகளை தலைக்குமேல் சேர்த்து கூப்பி, ஒரு சித்தனின் உருவம். உடனே புரிந்தது, இது நான் கேட்ட "சாட்சி"க்கு குருநாதர் காட்டித்தரும் "அத்தாட்சி". உடனேயே அவர் காலை தொட்டு வணங்கினேன்.





"போதுமா?" என்றார்!

"போதும்! ஆனால் வருபவர் அனைவரிடமும் உங்களை காட்டிக் கொடுப்பேன். அனைவருக்கும் அருள வேண்டும்!" என்றேன்.

முதலில் அர்ச்சகரை கூப்பிட்டு "அகத்தியப்பெருமானை" காட்டிக் கொடுத்துவிட்டு, "தினமும், கருடாழ்வாருக்கு விளக்கு போடும் பொழுது, குருநாதருக்கு ஒரு விளக்கு போட்டு விடுங்கள்!" என்றேன். அருகில் வந்து, அகத்தியப்பெருமானை பார்த்தவர், "அட! இத்தனை வருடங்களாக இந்த கோவிலில் வேலை பார்க்கிறேன், இதுவரை நான் பார்த்ததே இல்லை. இதற்குமேல் என்ன சாட்சியம் வேண்டும்? இனி தினமும் விளக்கு அவருக்கும் சேர்த்தே போட்டுவிடுகிறேன்!" என்றார்.

இதற்குள், அர்ச்சகர் கதவை திறக்க, நாளைய பூஜைக்கு அகத்தியப்பெருமான் இன்றே வந்துவிட்டார் என்ற உணர்வுடன், பெருமாளை தரிசிக்க சென்றேன்.

இரவு பூசை முடிந்து, அர்ச்சகர் தந்த பிரசாதம், பெருமாள் பாதத்தில் சார்த்திய மஞ்சள்பொடி, பள்ளியறைப்பால் (மிக அருமை) போன்றவை பெற்றுக்கொண்டு, ஒரு துணிப்பை நிறைய தனத்தை "பெருமாள் பாதத்தில் வைத்துவிடுங்கள், நாளை மதியம் வாங்கிக்கொள்கிறேன்" என்று கொடுத்தேன். முதன் முறையாக, அடியவருக்கு கொடுக்க நினைத்த தனம் (786/354/108) ஒரு நாள் முழுவதும் பெருமாள் காலடியில் சென்று அமர்ந்தது.

மறுநாள், பூஜைக்கான விஷயங்களை அர்ச்சகரிடம் பேசிவிட்டு, விடை பெற்றேன்.

அடுத்த நாளுக்காக காத்திருந்தேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

 ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

 வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

Friday, November 24, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அகத்தியம் வழிபாட்டிற்கு வந்த பின்னர் அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பில் ஆலய தரிசனம் கண்டு வருகின்றோம். அந்த வகையில் குருநாதர் அருளால் நமக்கு பொது வாக்கில் பல ஆலய தரிசனங்களை அருளி உள்ளார்கள். அவற்றை கடந்த ஐப்பசி மாதம் முதல்  அகத்தியப் பெருமானின் உத்தரவு! என்ற தலைப்பில் பார்த்து வருகின்றோம். கருணைக்கடலாம் ஸ்ரீ அகத்தியர் பெருமான் நமக்கெல்லாம் அருளை வாரி வழங்கிக் கொண்டு வருகின்றார். அதனால் தான் நமக்கு பரிகாரங்கள் என்று கூறுவதை விட, எப்படி வாழ வேண்டும் என்று வாழ்வியல் விழுமியங்களை ஆலய தரிசனம் , தர்மம், தீப வழிபாடு மூலமாக கூறி வருகின்றார். ஏற்கனவே அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் என்று முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! பற்றி பார்தோம். 

இன்றைய பதிவில் கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் பற்றி குருவின் மொழியில் அறிந்து கொள்ள உள்ளோம். இன்றைய பதிவை படிக்கும் அன்பர்கள், தள வாசகர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் நம் TUT தளம் மூலம் சொல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். 





எங்கெங்கு காணினும் சிவமாய் தெரிகிறதே.அன்பே சிவமாய் கொள்ளும் போது, தற்போது நடைபெற்று வரும் திருக்கார்த்திகை விழாவும் நம்மோடு சேர்ந்து துள்ளலை கொடுத்துக் கொண்டு வருகின்றது. நாமும் இங்கே திருஅண்ணாமலை, கிரிவலம் என்ற பதிவுகளில் கண்டு வருகின்றோம். பதிவின் தலைப்பை பார்த்தாலே மீண்டும் திருஅண்ணாமலை பற்றி சில செய்திகள் அறிய இருக்கின்றோம்.

அறுசுவையும் அளவிற்கு மீறினால் துன்பம் தரும். ஆனால் இறையின் சுவை இந்த அறுசுவை தாண்டியது. ஐம்புலனும் இறை சுவை அறியவே படைக்கப்பட்டது. காதால் அந்த இறையின் நாமம் கேட்க வேண்டும், கண்ணால் அந்த இறையின் சொரூபத்தை காண வேண்டும். மூக்கால் இறையின் வாசம் நுகர வேண்டும். வாயால் அந்த இறையை போற்ற வேண்டும். மொத்தத்தில் அந்த இறையை நம் மெய் கொண்டு பற்ற வேண்டும். 



பதிவின் உள்ளே செல்லும் முன்னர் பழநி திருப்புகழ் ஒன்றை படித்து உள்ளே செல்வோம்.

திருப்புகழ் 170 நாத விந்து  (பழநி)


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

......... பாடல் .........

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.









5/11/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : உத்ர காவேரி நதிக்கரை. 

ஆதி அண்ணாமலையனையும் உண்ணாமலை தேவியையும் மனதில் நிறுத்தி வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

நலமாக என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே!!!! 

எதனால் என்பதை கூட  ஓர் சூட்சுமமான ரகசியத்தை உரைக்கின்றேன்!!! 

அண்ணாமலைக்கு ஏன் ?எதையென்று இத்தனை சிறப்புக்கள் என்றால் அதாவது இக் கார்த்திகை திங்களில் அப்பனே எதை என்று அறியாமல் கூட ஆனாலும் கூட்டங்கள். 

ஆனாலும் இப்பொழுதில்லை!!!! எதையென்று அறிய அறிய பல ரிஷிமார்களும் அதாவது பின் ஞானியர்களும் பின் ஏன்? அண்ணாமலைக்கு வர வேண்டும் என்பதைக்கூட யான் இப்பொழுது நிச்சயம் செப்புவேன்!!!!! 

அப்பனே எதையென்று அறிய அறிய தீபத்தை எவ்வாறு என்பதையும் கூட  பின் அப்பனே அங்கே தீபம் எரியும்பொழுது!!!!!!  அப்பனே எதை என்று அறியாமலே  அனைத்து கிரகங்களும் கூட செயல் படாமல் போய்விடும்!!!!! என்பேன் அப்பனே!!!! 

இதனால் அப்பனே சில தரித்திரங்கள் நம்மை அண்டாது என்பேன் அப்பனே அதனால் அப்பனே எவை என்று அறியாமலே ஈசனுடைய அருளும் பார்வதி தேவியின் அருளும் நம்தனக்கு சுலபமாக கிடைத்துவிடும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இதற்கும் பின் தடுத்து நிற்கும் கிரகங்கள் சில சில விஷயங்களில் கூட பின் கிரகங்கள் விட்டால் தான் அதாவது பின் கிரகங்களை பின் கிரகங்கள் இருக்கும் பொழுது நிச்சயம் இறைவன் பலம் கிட்டாது.

கிரகங்களை தாண்டி பின் சென்றால் தான் இறை பலமும் கிடைக்கும் என்பது மெய்!!!!

ஆனாலும் இதை யாரும் மனிதர்கள் உணர்ந்திருக்கவில்லை அதனால்தான் பின் தீபத்தை எதை என்று அறிய அறிய பின் அங்கு பின் சரியாகவே எரியும் பொழுது நிச்சயம் அனைத்து கிரகங்களும் அமைதியாக போய்விடும்!!!

""அங்கு ஈசன் தான் விளையாடுவான் பார்வதி தேவியும் தான் விளையாடுவாள்!!!!

இதனை நோக்கி அங்கே இருந்தால் நிச்சயம் அங்கே இருந்தால்( திருவண்ணாமலையில் தீபத்தை காண) நிச்சயம் எண்ணிய எண்ணங்கள் அதாவது எதை என்று அறிய அறிய அதி விரைவிலே பாவங்கள் நாசமாகும் என்பது தீர்ப்பு!!!!

அதனால்தான் பல பல ரிஷிமார்களும் குருமார்களும் ஞானியர்களும் பல பல தவ யோகிகளும் இதனை அறிந்து அண்ணாமலைக்கு புறப்பட்டனர்!!!!

ஆனாலும் அப்பனே இன்றைய நிலையில் எதை என்று அறிய அறிய அதனால்தான் ஆனாலும்  

""""புண்ணியம் செய்பவர்களுக்கே அண்ணாமலையில் இடம்!!!!

ஆனாலும் அண்ணாமலையில் கூட தங்கிவிட்டால் கிரகங்கள் வேலை செய்யாமல் போய்விடும் ஆனாலும் நிச்சயம் பின் தண்டனை யார் மூலம்???

ஆனாலும் அங்கிருந்து தவறு செய்தாலும் ஈசன் பலமாக பின்  எதையென்று தவறு செய்பவர்களுக்கும் கூட அடிகள்!!!!

இதனால்தான் அப்பனே அதனால்தான் தீபத்தை எதற்கு எதை என்று அறிய அறிய பல ஞானியர்களும் பல பல வழிகளில் வந்த எதை என்று அறியாமலே அப்பனே பின் தீபத்தை எரிய விடுங்கள் எரிய விடுங்கள் என்றெல்லாம்!!!!

அப்பனே!!! இதற்கும் கூட அப்பனே பல பல சக்திகள் அதாவது வளிமண்டலத்தில் இருந்து வரும் ஒளிக்கற்றைகள் அப்பனே எதை என்று அறியாமலே பின் தீபத்தை ஏற்றும் பொழுது கூட அதாவது பஞ்ச தீபத்தில்  எதையென்று அறியாமலே அப்பனே பல வகைகளில் கூட அப்பனே எதையென்று அறிந்து அறிந்து அப்பனே பல சுலபமான எண்ணெய்களும் எதை என்று அறிந்து அறிந்து ஏற்றுவதன் மூலம் அப்பனே சமமாக அதாவது பல வகையான பல பல நூற்றுக்கு பின் மேலாக தீபங்களை ஏற்றும் பொழுது அவ் ஒளிக்கற்றைகள்  அப்பனே எதை என்று அறிய அதாவது எதை என்று உணரும் பொழுது பின் தீபத்தின் அமர்ந்து அதாவது அருகிலேயே அமர்ந்து கொண்டால் அதாவது எதை என்று அறிய அறிய பின் நம்தனை அடையாது என்பது நிச்சயமான உண்மை அதனால்தான் அப்பனே தீபத்தை ஏற்றுங்கள்!! தீபத்தை ஏற்றுங்கள்!! அப்பனே எதையென்று அறிய அறிய பின் சுற்றி அதாவது தீபத்தை ஏற்றி நடுவில் ஒருவன் உட்கார்ந்து நல்விதமாக தியானம் செய்தால் அப்பனே அவந்தனுக்கு அதிவிரைவிலே அப்பனே உண்மை நிலை புரியும்!!!!

[அதாவது நம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஐந்து முதல் 100க்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றலாம் சுலபமாக கிடைக்கும் எண்ணெய் வகைகள் இலுப்பை எண்ணெய் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் இவற்றில் ஏற்றலாம் விளக்குகளை ஏற்றி நடுவில் அமர்ந்து தியானம் செய்தால் ஒளிக்கற்றைகள் பாதிப்பிலிருந்து நமக்கு தொல்லைகள் இருக்காது மேலும் மேலும் மேன்மைகள் ஏற்படும் என்பதை குறிப்பிட்டுள்ளார்]

அனைத்தும் மாயை என்று கூட தெரிந்து விடும்!!!!

இதனால்தான் அப்பனே வள்ளல் பெருமானும் அப்பனே எதை என்று அறிய """"தீபத்தின் வழியே இறைவனை நிச்சயம் அடைந்தான்!!!!! என்பதை கூட தீபம் வழியாகவே இறைவனை காணலாம் என்பதை கூட மெய்யாகவே அப்பனே!!!! இப்பொழுது கூட அப்பனே அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதற்காக தீபங்கள் ஏற்றுகின்றோம் என்பதை கூட தெரியாமல் மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர் அப்பனே!!!!

என்ன பலன்????? 

எதை என்று கூட அதனால் தான்  அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் பொய் சித்தர்கள் பொய் என்றெல்லாம் வரும் காலங்களில் கூட இதனை தெரியாமல் அதாவது கூட பின் எவை என்று அறிய அறிய பின் ஞானியர்களும் இதை சரியான அளவிலே ஏற்கனவே சொல்லி எதை என்று அறிந்து அறிந்து ஆனால் மனிதன் போன போக்கில் நிச்சயம் ஆன்மீகத்திற்கு சென்று விட்டால் மனிதன் வாழ்ந்து விடுவான் என்ற கெட்ட எண்ணத்தோடு அனைத்தையும் பின் அழித்து வருகின்றான் அப்பனே!!!!

உண்மைகளையும் கூட மறைத்து வருகின்றான் அப்பனே!!!

யாங்கள் சித்தர்கள் ஆனால் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் விட்டுவிடுவதில்லை என்பேன் அப்பனே!!!! அதனால்தான் அப்பனே அன்றைய தினத்தில்( கார்த்திகை தீபம்) அண்ணாமலை நோக்கி பல சூட்சுமமான அப்பனே ஆன்மாக்களும் ஓடோடி வந்துவிடும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அவ் தீபத்திற்கு அவ்வளவு சிறப்பு என்பேன் அப்பனே!!!

அவ் தீபத்தை நல் முறையாக அப்பனே சரியான முறையாகவே பார்த்திட்டு வந்தாலே அப்பனே எதை என்று அறிய அறிய கிரகங்களும் அந்நேரத்தில் அமைதியாகிவிடும்!!!

எதை என்று அறிந்து அறிந்து அதனால் பல பல எதை என்று அறிய ஆண்டுகளாக தீபத்தை அப்பனே பார்த்து வந்தாலே அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே நினைத்தது நிச்சயம் எதை என்று அறிய அறிய அதனால்""" நினைத்தாலே எதை என்று அறிய முக்தியும் கிடைக்கும் என்பது மெய்யப்பா!!!!( திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி)

இதனை நிச்சயம் அனைவரும் உணர வேண்டும்!!!! அப்பனே!!!

ஆனாலும் சிலர் கேட்கலாம் அப்பனே!!!!!

அங்கு இருப்பவர்களும் எதையென்று அறிந்து அறிந்து தீபத்தையே பார்த்து கொண்டிருக்கின்றார்கள் என்றால்!??     அப்பனே  இதையும் யோசிக்க வேண்டும் அப்பனே!!!

கிரகங்கள் வேலை செய்யாது!!!! ஆனால் அப்பனே!!!  """இறைவன் அதாவது ஈசன்!!!! வேலை செய்வான் அப்பனே!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய கெட்டதை நோக்கி இன்னும் பலமாக அடிகள் விழும் இவ்வளவு தான் அப்பனே!!! எதையென்று அறிய அறிய அதனால் அப்பனே சரியாக தெளிவுகள் பெற்று அப்பனே இறைவனை வணங்கினால் தான் அப்பனே வெற்றியும் உண்டு!!!!

அப்பனே!!! எதையென்று அவை மட்டும் அப்பனே ஒன்றும் தெரியாமல் வாழ்ந்திட்டு வந்தாலும் அப்பனே தோல்விகளில் தான் அப்பனே மனித வாழ்க்கை முடியும் என்பேன்!!! அப்பனே

வெற்றிக்கு என்ன வழி??? என்பதைக் கூட நிச்சயம் என் பக்தர்களுக்கு வரும் காலங்களில் யான் செப்பிக்கொண்டே இருப்பேன் அப்பனே!!!

இதை நன்கு நல்முறையாக பயன்படுத்திக் கொண்டாலே அப்பனே வெற்றி சுலபமாகவே கிடைத்துவிடும் என்பேன் அப்பனே எதையென்று அறிய அறிய அப்பனே இன்னும் பல பல வாக்குகளிலும் கூட அப்பனே யான் உரைத்து வருகின்றேன் அப்பனே!!!!

இதையென்றும் அறிய அறிய அப்பனே அண்ணாமலைக்கு இச்சிறப்பு கார்த்திகை திருநாளிலே அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அதனால்தான் அப்பனே எதை என்று கூட !....

"""இதன் சிறப்பு அப்பனே!! யாங்கள் மட்டுமே அறிவோம்!!!!! 

வரும் காலங்களில் இன்னும் வாக்குகள் பலமாக செப்புவோம் அப்பனே... நலமாக என்னுடைய ஆசிகள் அப்பனே!!!!! அனைவருக்கும் நல்விதமாக என்னுடைய ஆசிகள்!!!!!! 

யானும் வந்து நல்விதமாகவே ஆற்றில் எதை என்று அறிய அங்கு அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்துவிட்டேன்!!!! நலமாகவே நலமாகவே ஆசிகள்!!!!! அவரவர் விருப்பப்படி எதை என்று அறியாமலே நிறைவேறும் என்பேன் அப்பனே அதனால் என்னிடத்திலே நீங்கள் இருப்பதால் அப்பனே என்னையும் அங்கிருந்து தேடி வந்ததாலும் அப்பனே நிச்சயம் நல்முறையாகவே எதை என்று அறிய அறிய அப்பனே உணர்ந்து உணர்ந்து உங்களுக்கும் என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே சில மன குழப்பங்களும் போராட்டங்களும் சனியவனால் வரலாம் ஆனாலும் அப்பனே அனைத்தும் எதை என்று அறிய அறிய யானே மாற்றி அமைத்து உங்களுக்கும் நல்வழி காட்டுகின்றேன் அப்பனே எம்முடைய நல்லாசிகள்!!!! நல்லாசிகள்!!!




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

 ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

 வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நேற்று  மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் காண வாய்ப்பு கிடைத்தது. கும்பாபிஷேகம் காண்பது மிக மிக சிறப்பான தரிசனம் ஆகும். நேற்றைய அருளில் இறை தரிசனம் கண்டு, நம் அகத்திய அடியார்கள் தரிசனம் பெற்றோம். நம் தளம் சார்பில் சிறு தொகை சமர்ப்பித்து இருந்தோம். மேலும் 500 சிவபுராண சிறு நூல்கள் கொடுக்க பணிக்கப்பட்டோம். மேலும் இறை பிரசாதமாக அன்னப்பிரசாதம் பெற்றுக் கொண்டோம். இவை அனைத்தும் நேற்றைய நாளில் குருநாதர் அருளால் நடைபெற்றது கண்டு மகிழ்வுற்றோம். உணவு உண்ணும் போது சிவபுராணம் கேட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். சற்று நேரத்தில் கோயிலில் திருவாசக முற்றோதுதல் நடைபெற துவங்கியது கண்டு குருநாதர் பதம் பற்றினோம்.

இந்த காத்திகை மாத வழிபாட்டில் முருக வழிபாடாக தினசரி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றது. இரு நாட்களுக்கு முன்னர்  555 ஆம் கூட்டு வழிபாடு இன்னும் நம் உள்ளத்தில் நிறைவாக நிற்கின்றது.அப்படி என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. இதை பற்றி இனிவரும் பதிவுகளில் பேசுவோம். 

நேற்றைய அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேக நிகழ்வில் நாம் அகத்திய அடியார் ஒருவரை சந்தித்தோம். அவராகவே வந்து, நம்மிடம் அறிமுகம் செய்து கொண்டு, தாம் திருச்சி எனவும், நம்மை பார்த்துள்ளதாகவும் கூறினார். அவர் திருவையாறு அகத்தியர் தரிசனம் பெற்றுள்ளதாக கூறினார். நாம் இன்னும் திருவையாறு குருநாதர் தரிசனம் பெறவில்லையே என்று மனதுள் நினைத்து விட்டு அப்படியே மறந்துவிட்டோம். மீண்டும் மீண்டும் அந்த அகத்திய அடியார் நம்மிடம் பேச முற்பட்டார். நமக்கும் அவரிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. நம் கையில் இருந்த அகஸ்தியர் வழிபாடு - தொகுதி 3 புத்தகம் ஒன்றை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டோம். 

பின்னர் தான் நமக்கு திருவையாறு அகத்தியர் என்றதும் சித்தன் அருள் தலத்தில் உள்ள எண்ணத்தில் என்னை வை! என்ற பதிவு நினைவிற்கு வந்தது. இந்தப் பதிவது ஏற்கனவே படித்தாலும் கடந்த ஒரு வாரமாக நம்மை உலுக்கி எடுத்து விட்டது. குரு பக்தி என்றால் என்ன? எப்படி இருக்க வேண்டும் என்று பல செய்திகளை நமக்கு உணர்த்திய பதிவு ஆகும்.

உடனே நமக்கு அந்த அகத்தியர் அடியார் நினைவிற்கு வர, வீட்டிற்கு வந்ததும் , நம்மிடம் பேச விரும்பிய அடியாரிடம் அலைபேசியில் பேசி, தாங்கள் தான் இளையராஜா ஐயா வா? என்று கேட்டதும், ஆம் என்று கூற, குருநாதா! குருநாதா!! என்று கூறி மகிழ்ந்தோம். இன்னும் சிறப்பாக இன்று அவர் மீண்டும் புதிதாக தேநீர் கடை துவங்கியுள்ளார். அட..இன்றைய பதிவில் நம் குழு சார்பில் அவரை வாழ்த்தி, அவரது தொண்டு சிறக்க மேலும் மேலும் வாழ்த்தி மகிழ்கின்றோம். இதோ. இன்றைய பூஜையாக, திரு.இளையராஜா ஐயாவிடம் இருந்து கீழே பகிர்கின்றோம்.



இனி நம் குருநாதர் அருளிய """"""""எண்ணத்தில் என்னை வை!!!!!!!! கண்டு, மனதுள் இருத்தி, உள்ளத்தை கோயிலாக்க குருவிடம் வேண்டி பணிவோம்.


""""""""எண்ணத்தில் என்னை வை!!!!!!!!

நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் முத்தான வாக்கு இது!!!!

இவ் வாக்கினை அப்படியே கடைப்பிடித்து அகத்திய பெருமானின் மனதில் இடம்பிடித்து அவரை தன் இல்லம் தேடி வர வைத்து தனக்குப் பிறந்த குழந்தையின் விதியையும் மாற்றி உயிரை காப்பாற்றி கொடுக்க வைத்த பக்தரின் பக்தி மிகுந்த அனுபவம் இது.

விழுப்புரத்தைச் சேர்ந்த தூத்துக்குடியில் வேலை பார்த்து வசித்து வரும் அகத்திய அடியவர் ஒருவர் அகத்தியரின் மேல் பேரன்பு கொண்டு பக்தியை செலுத்தி குருநாதருடைய வாக்குகளை சமூக வலைத்தளங்கள் மூலம் அனுதினமும் தினம் அகத்தியர் வாக்கு என்று அகத்திய பக்தர்களுக்கு குருநாதருடைய வாக்குகளை பரப்பி சேவை செய்து வருகின்றார். அகத்தியரின் காலடியே எனது வாழ்க்கை என வாழ்ந்த வரும் அவர் திருமணம் கூட எந்தனுக்கு வேண்டாம் அவருடைய திருவடிகளே போதும் என வாழ்ந்து வருபவர்!!!! தூத்துக்குடியில் வேலை பார்த்துக் கொண்டே பாபநாசம் கல்யாண தீர்த்தம் திருச்செந்தூர் என எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் குருநாதர் வாக்குகளில் கூறும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று தாமிரபரணியில் நீராடி தொழுது வணங்கி அகத்தியரின் வாக்குகளை பல்வேறு குழுக்களுக்கு அனுப்பி வாக்குகளை பரப்பி வருகின்றார்.

அப்படி தினம் அகத்தியர் வாக்கு குழுவில் திருச்சி லால்குடியை சேர்ந்த ஒரு அன்பர் இணைகின்றார்!!! இணைந்து அனுதினமும் குருநாதருடைய வாக்குகளை படித்து!! படித்து !! படித்து குருநாதர் மேல் பெரும் பக்தியை கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டார்!!! அதற்கு முன் குருநாதர் அகத்தியரை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது!!!! அனுதினமும் வாக்குகளாகவும் சித்தன் அருள் வலைத்தளத்தில் பதிவுகளாகவும் படித்து படித்து மிகுந்த பக்தியை குருநாதர் மேல் காட்ட ஆரம்பித்து குருநாதருடைய ஆலயங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கங்கெல்லாம் சென்று தரிசனம் செய்து வருவார்.குறிப்பாக கோடகநல்லூர் ஆலய தரிசனம் இவர் பாதையையே மாற்றியது என சொல்லலாம். இப்படியே நல்முறையாக தூத்துக்குடி அடியவரும் இவரும் நண்பர்கள் ஆகிவிட்டனர்.

இவர் வசிப்பது திருச்சிராப்பள்ளி லால்குடியில்!!! அவர் சொந்தமாக ஒரு தேநீர் கடையை நடத்தி வருகின்றார்.இவர் ஒரு எம். பி. ஏ. பட்டதாரி... மெத்த படித்திருந்தாலும் சொந்த தொழில் செய்து குருநாதர் வாக்கின் படி அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு செயல்பட்டு வருபவர். 

அவர் நடத்தும் தேநீர் கடையில் காலையிலிருந்து இரவு வரை வேலை இருக்கும் இரவு வீட்டிற்கு வந்து விட்டு குளித்துவிட்டு குருநாதரை வணங்கி தினமும் குருநாதர் வாக்கில் என்ன கூறியிருக்கின்றார் என்பதை படித்து விட்டு தான் உறங்கச் செல்வார்!!!!

மனைவி ஒரு பெண் குழந்தை என வாழ்ந்து வந்த அவருக்கு.... ஒரு மார்கழி ஆயில்ய நட்சத்திர திருநாளில் குருநாதரை தரிசனம் செய்ய வேண்டும் அருகில் ஏதாவது குருநாதருடைய ஆலயம் இருக்கின்றதா என்று தேடி விசாரித்து பார்த்ததில் திருவையாறில் அகத்தியர் ஆலயம் இருக்கின்றது என்பதனை அறிந்து கொண்டு அங்கு குருபூசை தின விழா அன்று சென்று நல்முறையாக தரிசனம் செய்து பிரசாதமாக ஒரு ஆப்பிள் பழத்தையும் பெற்றுக் கொண்டு மிகுந்த மன திருப்தியோடு வீடு திரும்பினார் வீடு திரும்பி மிகவும் சந்தோஷத்துடன் அனைவரும் பிரசாதமாய் அதை உண்டு மகிழ்ந்து பின்பு அடிக்கடி திருவையாறு அகத்தியர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வந்து கொண்டிருந்தார். 

அப்படி இருக்கையில் திருவையாறில் கடந்த வருடம் நடந்த குருநாதர் பெருமான் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடி அடியவரும் வர!!   லால்குடியைச் சேர்ந்த இவரும் திருவையாறு அகத்தியர் ஆலய கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு அவரையும் சந்தித்து குருநாதருடைய வாக்குகளை பற்றி.  பேச ஆரம்பித்து!!!! """

என்னுடைய வாழ்க்கையவே மாற்றி அமைத்து விட்டார் குருநாதர்!!!

தன்னுடைய வாக்கில் என்னென்ன கூறுகின்றாரோ அதை அப்படியே என்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றேன் ஜீவ காருண்ய முறையையும் சுத்த சன்மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டு குருநாதர் உரைத்தபடியே வாழ்ந்து வருகின்றேன் என்று குருநாதரை பற்றி பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த கும்பாபிஷேக விழாவில் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் கலந்து கொள்ள அவரிடமும் அறிமுகமாகி நல்ல முறையில் பேசி ஆலய விழாவில் கலந்து கொண்டு அடியவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்றது!!!

அன்னை லோப முத்ரா தேவியிடனும் குருநாதரிடமும் .... ஒரு கோரிக்கையாக மீண்டும் ஒரு குழந்தை பாக்கியத்தை தாருங்கள் என்று மனைவியுடன் சேர்ந்து மனம் உருக பிரார்த்தித்து  தரிசனமும் செய்துவிட்டு வீடு திரும்பினார்.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வந்த பின் அடுத்த ஒன்றரை மாதங்களில் அடியவரின் மனைவி கருவுறுகின்றார். மிக்க மகிழ்ச்சி அடைந்த அடியார் மாதாந்திர பரிசோதனைகளுக்காக மருத்துவமனை செல்ல மருத்துவ மனையில் மருத்துவர்கள் அடியவரின் மனைவியை பரிசோதித்து விட்டு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சினைகள் இருக்கின்றன இது கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறி விட அடியவருக்கோ மிகுந்த மனக்கலக்கம்.

அகத்தியப்பா!!!! நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனக்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை உங்கள் தரிசனம் கண்ட பிறகு உங்கள் அருளால் உதித்த கருவாக இதை நான் எண்ணிக் கொண்டிருக்கின்றேன். இக்குழந்தை வளர்ந்து உங்களை வணங்கி உங்கள் பேரையும் புகழையும் பார் முழுவதும் பரப்பி சமுதாயத்திற்கு நல்ல சேவைகள் செய்யும் குணம் உள்ள குழந்தையாய் வளர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றேன்.

நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் என்று குருநாதரை வணங்கி வணங்கி வந்த அவர் ஒரு நாள் அப்படியே  குருநாதரை நினைத்து மெய்யுருகி   எனக்கு அகத்தியரை விட்டால் கதி வேறொன்றுமில்லை அவர்தான் காப்பாற்ற வேண்டும் அவரை சரணடைவதை தவிர வேறு ஒன்றும் இதற்கு வழி இல்லை என்று நினைத்து குருநாதரையே சென்று பார்த்து சரணடைவோம் என்று இரவு முழுதும் நினைத்துக் கொண்டு எழுந்தவர் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு குருநாதரை காணச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் லால்குடியில் இருந்து திருவையாறு அகத்தியர் ஆலயம் வரை கிட்டத்தட்ட 37 கிலோமீட்டர் நடந்தே செல்ல ஆரம்பித்தார்!!!

அதிகாலை நேரம் ஆதலால் வெறும் காலால் நடப்பதற்கு சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை ஆனால் சூரியன் உதித்த பின் மெது மெதுவாக மெது மெதுவாக வெயில் சூடு ஏற ஏற வெறும் கால்களில் தார் சாலையில் நடக்க நடக்க அனல் அடிப்பதை கால்களால் பொறுக்க முடியவில்லை!!!

அகத்தியா !!!அகத்தியா!! அகத்தியா !!அகத்தியா!! என்று குருநாதர் பெயரையே உச்சரித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்!!!

வெயில் ஏற ஏற தாகம் களைப்பு வியர்வை என ஒன்று சேர்ந்து தாக்க...... அதனைப் பற்றி கவலைப்படாமல் நீரை மட்டுமே அருந்தி கொண்டு மீண்டும்  அகத்தியா அகத்தியப்பா என்று கூறிக்கொண்டே மிகுந்த களைப்பு இருந்தபோதிலும் மேலும் நடக்கத் தொடங்கினார்.

பத்து மணி பதினோரு மணி அளவில் சூரியன் மேலும் வெப்பத்தை வெளியிட இவரும் அகத்தியன் மீது கொண்ட பற்றினால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு மேலும் நடந்து நடந்து சரியாக  ஒரு மணி  அளவில் திருவையாறு அகத்தியர் ஆலயத்திற்கு வெறும் கால்களால் நடந்து வந்து குருநாதர் முன்பு சரணடைந்து கரைந்து உருகி வணங்கத் தொடங்கி விட்டார்!!!!

அப்பனே!!!அகத்தியா என் தாயும் நீ என் தந்தையும் நீ 

எனக்கு எல்லாம் ஆனவன் நீ!!! உன்னையே நம்பிக் கொண்டிருக்கின்றேன் அகத்தியப்பா!!!!

நீதான் தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும்!!!!

என மனம் உருகி பிரார்த்தித்துக் கொண்டே மயங்கி சாய்ந்து விட்டார்!!!

அங்கேயே சிறிது நேரம் மயக்கமுற்று பின்பு மயக்கம் தெளிந்து எழுந்தவர் மீண்டும் வணங்கி என்னுடைய பாரத்தை எல்லாம் அகத்தியன் காலடியிலேயே விட்டு  விட்டேன் இனி என் தந்தை பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்!!!

இவர் ஆலயத்திற்கு சென்ற பொழுது உச்சிப்பொழுது ஆகியதால் ஆலயத்திலும் யாரும் இல்லை இவர் மட்டும் தனியாக பிரார்த்தனைகள் செய்து விட்டு வந்து விட்டார்!!!!

அதன் பிறகு அனுதினமும் குருநாதரை வணங்குவது மனைவியை நன்கு கவனிப்பது என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே தூத்துக்குடி அடியவர் மூலம் ஒருமுறை திரு ஜானகிராமன் ஐயா அவர்களிடம் குருநாதருடைய வாக்குகள் கேட்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது!!!!

அப்பனே!!!!!! என் மீது இவ்வளவு நம்பிக்கை அப்பனே!!!!  என் மீது பக்தி கொண்டு இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றாயே இவையன்றி கூற யான் வந்தேன்ப்பா உன் இல்லத்திற்கு!!!!!! என் மீது நீ காட்டிய அன்பிற்கு யான் வந்தேனப்பா உன்னையும் பார்த்தேனப்பா நல்லாசிகள் தந்தேனப்பா!!!! இவ்வுறவு இப்பிறவியில் மட்டும் வந்ததில்லை என்பேன் அப்பனே முற்பிறவிலும் உண்டு அதனைப் பற்றியும் அடுத்த முறை எடுத்துக் கூறுவேன் அப்பனே நல்லாசிகள் நல்லாசிகள் என்று வாக்குகள் தந்திருந்தார்!!!

அடியவரும் குருநாதருடைய வாக்குகள் கிடைத்த மகிழ்ச்சியில் அவருடைய பணியை செய்து கொண்டே வந்து கொண்டிருந்தார். குருநாதர் தனது வாக்கில் உரைத்தபடி அனுதினமும் ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவளிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அதிகாலையில் தேநீர் கடையை திறந்தவுடன் பாலை காய்ச்சி அதை குளிர வைத்து பைரவர்களுக்கு ஒரு கோப்பையில் பால் மற்றும் உணவுகளை வைத்து விடுவார்!! தேநீர் கடையில்  இயலாதவர்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் யாராவது வந்தாலும் அவர்களுக்கு உணவையும் பாலையும் அகத்தியர் பெயரை உச்சரித்து காசுகள் வாங்காமல் தர்மமாக செய்து வருகின்றார். கடையின் பெயரும் நற்பவி என்று வைத்துள்ளார். தினமும் காலை கடையை திறந்து முதல் தேநீரை குருநாதர் புகைப்படம் முன்பு வைத்து பிராத்தனை செய்தே அன்றைய வியாபாரத்தை தொடங்குவார். 

இதை அனுதினமும் இன்றளவும் இதை செய்து கொண்டே வருகின்றார்.

அடியவரின் மனைவிக்கும் மகப்பேறு காலம் நெருங்கி விட்டது!!!! மருத்துவமனையிலும் சேர்த்து  பிரசவத்திற்காக காத்திருந்தனர்!!!!

பிரசவ நாளும் வந்தது!!!!! அடியவரும் அவரது மனைவியும் குருநாதர் பிரார்த்தித்துக் கொண்டிருக்க மருத்துவர்களின் மிகுந்த போராட்டத்திற்கிடையே அழகாக ஒரு பெண் குழந்தையை ஈன்றார் அவருடைய மனைவி!!!

ஆனால் குழந்தை பிறந்தவுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கின்றது நுரையீரலில் பிரச்சனை என்று மருத்துவர்கள் NICU வார்டில் குழந்தையை அனுமதித்து அவசர அவசரமாக சிகிச்சியை செய்ய தொடங்கினர்!!! 

இதனை கண்ட அடியவரும். அதிர்ச்சியாகி மனம் உடைந்து அகத்தியப்பா என்னப்பா இது சோதனை உங்களையே நம்பிக் கொண்டிருந்தேனே!!!! குழந்தை நல்லபடியாக வரவேண்டும் இது உங்கள் குழந்தை அப்பா என்று குருநாதர் புகைப்படத்தை பிடித்துக் கொண்டு கதறி அழுது கொண்டு ஊன் உறக்கம் இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் இடைவிடாது பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார்.

ஏற்கனவே இந்த அடியவருக்கு ஜானகிராமன் ஐயாவுடன் பயணிக்கும் ஒரு அடியவர் பழக்கம் இருந்தது அவரிடம் போனில் தொடர்பு கொண்டு சூழ்நிலையை எடுத்துக் கூற அந்த அடியவரும் திரு ஜானகிராமன் அய்யாவிடம் பேசி குருநாதரிடம் கேட்கலாம் என்று கேட்ட பொழுது!!!!

நல்விதமாக என்னையே நம்பிக் கொண்டிருக்கின்றான் இவந்தன்!!!! நல்விதமாக எதை என்று அறிய அறிய யானே அங்கு செல்கின்றேன் பொறுத்திரு எவை எவை என்று அறிய!!!! அப்பனே யானும் நேற்றைய பொழுதிலும் அங்கேயேதான் இருந்தேன் என்பேன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய சென்று கொண்டே தான் இருக்கின்றேன் இதற்கு ஒரு முடிவு எதை என்று அறியாமலே அக்குழந்தைக்கு எதை என்று அறியாமலே.................... ஆனாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து யான் இருக்கின்றேன் அப்பனே!!!!

என்று குருநாதர் சுருக்கமாக வாக்குகள் தந்து முடித்துவிட்டார்.

அந்த அடியவரும் அந்த நபருக்கு போனில் தொடர்பு கொண்டு குருநாதர் உரைத்ததை அப்படியே எடுத்துக் கூறி நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் குழந்தைக்கு ஒரு ஆபத்தும் வராது!!!

குருநாதர் அங்கேயே தான் இருக்கின்றார் ஆதலால் நீங்கள் தைரியமாக இருங்கள் என்று கூறி விட!!!!.......... சிறிது மன தைரியம் அடைந்து அடியவரும் தாயின் அருகிலும் என்ஐசியு வார்டிலும் மாறி மாறி சென்று கொண்டே வந்து குருநாதருடைய நாமத்தை தாயின் காதிலும் குழந்தையின் காதிலும் ஓதி ஓதி அவருடைய புகைப்படத்தை தலையின் அருகே வைத்து இடைவிடாது பிரார்த்தனைகளை செய்து கொண்டே இருந்தார்.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் போராட்டமாகவே இருந்தது!!!

மூன்றாவது நாள் நடந்தது தான் அற்புதம் அதிசயம்!!!!

நுரையீரல் பிரச்சனையால் குழந்தைக்கு வந்த பேராபத்து சூரியனைக் கண்ட பனிபோல விலகியது.

தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தாலும் ஒரு சந்தேகமாகவே இருந்த மருத்துவர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர். படிப்படியாக நுரையீரல் செயற்கையாக கொடுக்கப்பட்ட இயங்கும் முறையில் இருந்து இயற்கையாக தானாக இயங்கத் தொடங்கி கிட்டதட்ட மூன்றாவது நாள் முடிவில் முழுமையாக சீரடைந்து குணமடைந்து விட்டது. மருத்துவர்களும் டிஸ்சார்ஜ் செய்து மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தனர்.

தாயும் சேயும் நலமாக வீடு திரும்பியவுடன் அந்த அடியவர் திரு ஜானகிராமன் அய்யாவுடன் பயணிக்கும் அடியவர்களிடம் தொடர்பு கொண்டு குருநாதன் என் குழந்தையை காப்பாற்றி விட்டார் தற்பொழுது தாயும் சேயும் நலம் என ஆனந்த கண்ணீரோடு நன்றி நவில!!!!!!....... குருநாதரின் கருணையை எண்ணி அனைவரும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு சரி இதனை பற்றியும் குருநாதரிடம் மீண்டும் கேட்டு விடலாம் என்று எண்ணி குருநாதரிடம் கேட்க!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அவந்தன் என் மீது மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளான் என்பேன் அப்பனே!!!!

யானே தான் அங்கு சென்று வந்தேன் என்பேன் அப்பனே!!!

இவந்தனுக்கு ஆனால் குறைகள் எதையென்று அறிய அறிய ஆனாலும் அதனையும் யான் மாற்றித்தருவேன் பொறுத்திருந்தால்!!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய எதனை எதனை என்று அறிய அறிய பின் யான் அங்கேயே வந்து விட்டேன் அப்பனே இதிலிருந்து நீ புரிந்து கொண்டாயா என்ன!!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு நல்விதமாகவே அப்பனே எதை எதை என்று அறிய அறிய எவரையும் நம்பி விடாதே என்று சொல் அவனிடம் அப்பனே!!!

யான் இருக்கின்றேன் அப்பனே.... எதை எதை என்று அறிய அறிய அவனிடத்தில் சென்று யான் தேனீரும் அருந்தினேன் என்பேன் அப்பனே!!!!

அப்பனே இதனால் என்னை நம்பியவர்களை யான் எப்பொழுதும் கைவிட்டதில்லை என்பேன் அப்பனே

ஆனால் மனிதன் மனிதனை நம்பினால் தான் அப்பனே இங்கு பிரச்சனை ஆரம்பம் என்பேன் அப்பனே!! 

அதனால் எதை  என்று அறிய அறிய யானே வருவேன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு கூட!!!!

அக்குழந்தைக்கு நல்விதமாகவே மூன்று முறை காதில் ஓதுவேன் என்பேன் அப்பனே நலன்கள் நலன்கள் ஆசிகள்!!!!!!

என்று நல்லாசிகள் தந்தார்!!!!! இவ்வாக்கினை கேட்ட அனைவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஆனந்தக் கண்ணீர் வந்து கண்ணீர் மல்க பிரசவத்தின் போதும் உடன் இருந்து குழந்தைக்கு மிகுந்த பிரச்சினைகள் இருந்த பொழுதும் உடன் இருந்து காப்பாற்றி தந்து நாங்கள் கொண்ட நம்பிக்கையை மெய்யாக்கி எங்களுக்கு ஆசீர்வதித்த தெய்வமே!!!! உங்களுக்கு கோடான கோடி நன்றி என்று மனம் உருகிப் போய்விட்டனர்!!!!!!

தற்போது அந்த குழந்தைக்கும் """" நற்பவி""" என பெயரிட்டு குழந்தையும் குருநாதர் அகத்தியர் அருளால் நலமுடன் வளர்ந்து வருகின்றது!!!!! 

அகத்தியன் வாக்கு எதை என்று அறிந்து அறிந்து!!!!

ஒன்றை விட்டு விட்டால் நிச்சயம் அது நடக்காமல் எப்பொழுதும் கூட செல்லாது என்பேன்!!!!

"""""அகத்தியன் ஒரு """""சொல் !!!!!!    விட்டு விட்டால்!!!!!!!!! அச் சொல் ஜெயிக்குமே!!!! தவிர தோல்வி அடையாது!!!!!!

தோல்வி என்றால் தோல்வி என்று சொல்லிவிடுவேன்!!!!

வெற்றி !!! என்றால் வெற்றி!!! இதுதான் நிச்சயம்!!!!........

இவ்வாக்கு குருநாதருடைய பொன்னான வாக்கு மீண்டும் ஒருமுறை யுகம் யுகங்களாக தொடர்ந்து வந்தாலும் இந்த சூழ்நிலையிலும் இப்பொழுது நிரூபணம் ஆகி உள்ளது!!!!!!

என்னை நம்பியோரை அகத்தியன் கைவிட்டதாய் சரித்திரம் இல்லை!!!!!!!!

என்ற வாக்கு  யுகம் யுகங்களாக!!!! இந்த பிரபஞ்சத்தில் எத்தனை மாற்றங்கள் அடைந்தாலும் குருநாதர் அகத்திய பெருமானுடைய இவ்வாக்கு என்றும் மாறாது!!!!! மாறாது !!! மாறாது!!!!!!



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html
மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

 ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

 வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html