சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர்
அருளால் வழக்கம் போல்
நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் நம்மை நம்
குருநாதர் வழிநடத்தி வருவதை பார்க்கும் போது,இறைவா! அனைத்தும் நீயே!
தெய்வமே! குருநாதா!! என்று மனதுள் அவ்வப்போது வேண்டி வருகின்றோம். இதனை
எப்போதும் வேண்ட நம் மனதில் இருத்த முயற்சித்து வருகின்றோம். குருநாதரின்
உத்தரவாக இன்றைய பதிவை சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! பற்றி அறிந்து உணர உள்ளோம் .
29/1/2025 மௌனி அமாவாசை அன்று கங்கை யமுனை சரஸ்வதி திருவேணி சங்கமம்
தீர்த்தக்கரையில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு மற்றும்
உத்தரவு.
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!
அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அனைத்து சித்தர்களும் இங்கு வந்தோம் அப்பா நல்விதமாகவே அப்பனே.
ஆனாலும் பின் ஏக்கங்கள் அனைவருக்கும் இருக்குமப்பா !!
(கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் வந்து கலந்து கொண்டு நீராட ஏக்கங்கள்)
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இல்லத்திலே அப்பனே பின் நல்
முறையாகவே சில மந்திரங்களைக் கூட நிச்சயம் தெரியுமப்பா!!! உண்மை பக்தி
இருந்தால் அப்பனே அவர்களுக்கே சில மந்திரங்கள் தெரியுமப்பா!!!
(குருநாதர்
பொது வாக்குகளில் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா பாலாம்பிகை மந்திரம் ஆன ஓம்
ஐம் க்லீம் சௌம்... என பல மந்திரங்களையும் பொதுவாக்குகளிலும் தனிநபர்
வாக்குகளிலும் பல மந்திரங்களை தினசரி செப்பி வர பல மந்திரங்களை உபதேசம்
செய்திருக்கின்றார்...)
அப்பனே ஒரு ஐந்து நிமிடம் எங்கு இருந்தாலும் அப்பனே பின் அவ் நீரில்
அப்பனே இரு கைகளையும் வைத்து ஈசனையும் கூட அனைத்து தேவர்களையும் கூட
இந்திரனையும் கூட சித்தர்களையும் கூட ஞானிகளையும் கூட ரிஷிகளையும் கூட
குருமார்களையும் கூட காசி சிவனையும் கூட (காசிநாதன் விஸ்வநாதன்) கூட பின்
அறிந்தும் அனைத்து பஞ்சபூத ஸ்தலங்களை கூட நினைத்து..(சிதம்பரம் காஞ்சி
ஏகாம்பரம் திருவண்ணாமலை திருக்காளஹஸ்தி திருவானைக்காவல்)
ஆறுபடை வீடுகளையும் கூட
(திருப்பரங்குன்றம்
திருத்தணி ஆவினன்குடி சுவாமிமலை பழமுதிர்ச்சோலை திருச்செந்தூர்... இன்னும்
7ம் படைவீடு மருதமலை ஒன்பதாம் படைவீடு ஓதிமலை) நினைத்து வணங்கி
அனைத்து பின் நீரையும் கூட...
(அனைத்து புனித நதிகளையும் அதாவது கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி தாமிரபரணி கோதாவரி இவ் நதிகளின் பெயரை நினைத்து)
பின் இங்கு வரவேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து அப்பனே... இவை தன் அப்பனே நிச்சயம்!!
ஆனாலும்... பின் முட்டாள்தனமாகவே கேட்பானப்பா!!! எப்படி இவையெல்லாம் சாத்தியம்??? என்று!!
( சில பேர்கள்...தெய்வ வாக்கான குருநாதரின் வாக்குகளை உணராமல்)
ஆனாலும் அப்பனே எண்ண அலைகள் இருக்கின்றதே!!!
அதற்கு சக்திகள் அதிகமப்பா!!!
அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே!!!
"""நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை!!!
அது
போல தான் அப்பனே!! நீங்கள் நினைத்தாலே!! உண்மையாக நினைத்தாலே...அப்பனே
பரிபூரணமாக யாங்கள் வந்து அப்பனே பின் அதில் கூட அப்பனே நீரையும் கூட பின்
எவ்வாறாக மாற்றுவோம் என்பதெல்லாம்!!
அதனால் அப்பனே பின் நிச்சயம் இல்லத்திலே...நீராடி அப்பனே நிச்சயம் சிவராத்திரி வரை அப்பனே நல்லவிதமாக அப்பனே!!
இதனால் அப்பனே சில தொந்தரவுகள் அது மட்டும் இல்லாமல் பின் அப்பனே!!
பின் நீரில் கூட!!
துளசி இலைகளையும் கூட!!
அப்பனே
பின் வேம்பு (வேப்பிலை) இலைகளையும் கூட!! அது மட்டும் இல்லாமல் வில்வ
இலைகளையும் கூட... அப்பனே பரிசுத்த பின் உப்பையும் கூட... அப்பனே
மஞ்சளையும் இட்டு அப்பனே இன்னும் சில சில விசேஷ மூலிகைகளும்
இருக்கின்றதப்பா..அவை தன் என் பக்தர்களுக்கு தெரியுமப்பா!!! நிச்சயம்
அப்பனே அவை பயன்படுத்தி அப்பனே நிச்சயம் இல்லத்திலே நிச்சயம் அப்பனே!!!
(கும்பமேளாவில் வந்து திரிவேணி சங்கமத்தில் நீராட முடியாதவர்கள்!! பல்வேறு காரணங்களால் செல்ல முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் அவரவர் தமது வீட்டில் சிவராத்திரி வரையும்
நீராடும் பொழுது அந்த நீரில்
துளசி வில்வம் வேப்பிலை மஞ்சள் உப்பு ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இன்னும் மூலிகைகள் கலந்து
தமது இரு கைகளை வைத்து வணங்கி அனைத்து தெய்வங்களையும் நினைத்து
தேவாதி தேவர்களையும் நினைத்து சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள்
குருமார்கள் அனைவரையும் நினைத்து வணங்கி!!!
பஞ்சபூத திருத்தலங்கள் அறுபடை வீடுகள் இன்னும் காசியையும் நினைத்து
அந்த
நீரில் புனித புண்ணிய நதிகளை நினைத்து எல்லா நதிகளும் நாங்கள் நீராடும்
நேரில் ஆஹாவனம் ஆக வேண்டும்.. என்று மனதார உண்மையாக வேண்டிக் கொண்டால்...
அந்த வேண்டுதல் எண்ணங்கள் அதற்கு சக்திகள் அதிகம்.. இப்படி எண்ண அலைகளோடு
வேண்டிக் கொண்டு சிவராத்திரி வரை பக்தர்கள் நீராடி வரவேண்டும் என்று
குருநாதர் உத்தரவு கொடுத்திருக்கின்றார்)
அதாவது இன்னும் இறைவன் யார் என்று அப்பனே பின் அறிந்து கொள்ள அப்பனே இவ் உலகத்தில் ஆளே இல்லையப்பா!!!
அப்படி
அறிந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஒன்றுக்குமே ஆசைப்பட மாட்டார்களப்பா!!!
அப்பனே நிச்சயம் அப்பனே அவ்வளவு தான் வாழ்க்கை... இதுதானா இவ்வளவு தானா
என்று போய் சென்று கொண்டே இருப்பான்..அப்பனே
இறைவனை அப்பனே யாருமே உணரவில்லையப்பா!!
ஆனால் அப்பனே மனிதனோ வேஷங்கள் போட்டு யான் பெரிய ஆள்!! யான் பெரியவன் என்றெல்லாம் அப்பனே சுற்றி கொண்டிருக்கின்றான்.
ஆனால் உண்மை இறைவனை உணர்ந்தவன் அப்பனே நிச்சயம் பின் எதற்கும் பின்
அதாவது பஞ்சம் பிழைப்பானப்பா!! நாடோடியாக செல்வானப்பா!!! இது தான் அப்பனே!!
அதனால்தான்
அப்பனே என் பக்தர்களை நிச்சயம் பக்குவப்படுத்தி அப்பனே நல்முறையாக்கி
அப்பனே சில பேர்களாவது தேர்ந்தெடுத்து பின் அப்பனே பல பேர்களுக்கு நன்மைகள்
செய்யும்படியாக அப்பனே யாங்கள் சித்தர்கள் அப்பனே வந்து கொண்டே
இருக்கின்றோம் அப்பனே.
அதாவது சொல்லிக்கொண்டே
இருக்கின்றோம் அப்பனே ஒருவர் போதும் என்பேன் அப்பனே...அவ் ஒருவனை வைத்து
அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வுலகத்தையே மாற்றலாம் என்பேன் அப்பனே...
அதனால்தான் அப்பனே நிச்சயம் அதாவது அப்பனே கொடுப்பதற்கு யாங்கள் தயார் அப்பனே... நீங்கள் வாங்குவதற்கு தயாரா???
ஆனால் இதிலும் கேட்பானப்பா!!!! பின் யாங்கள் பின் வாங்க தயார்.
ஆனால் நீங்கள் தான் கொடுப்பதில்லை என்று!!
ஏனென்றால் மனிதன் பைத்தியக்காரன் ஆகிவிட்டான் என்பேன் அப்பனே.
ஆனால் பின் இவ்வாறு கேட்பவன் நிச்சயம் பாவத்தில்!.
ஆனாலும் அப்பனே இதற்கெல்லாம் நிச்சயம்.. வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே... ஒருவன் குறை கூறிக் கொண்டிருக்கின்றானே !!!
(சித்தன்
அருள் வலைத்தளத்தில் வந்து குருநாதர் தரும் வாக்குகளை அப்படி இப்படி என்று
கருத்துக்களை பதிவு செய்து குறை கூறிக் கொண்டிருக்கும் நபருக்கு)
அவனை ஊரார் என்னவென்று சொல்கின்றார்கள் என்றால்.. நிச்சயம் இறைவனை வணங்குகின்றான் இவன்.
நிச்சயம் இறைவன் சரியானவன் தான்!
நிச்சயம் பின் இவன் என்னென்ன???!!.........
அதாவது இவனும் பிழைக்க மாட்டான்!!.... மற்றவனையும் பிழைக்க வைக்க மாட்டான்..
சரியான தண்டனைகள் தான் நிச்சயம் இவந்தனுக்கு கொடுக்கின்றான் என்று ஊரார்கள் அனைவரும் பேசுகின்றனர்.
ஆனால் இவனோ??? யான் பக்தன் பக்தன் என்று!!
ஆனால் நிச்சயம் பல பேர்.. அப்படி!!!
ஆனால் ஒருவன் இப்படி??...
யாருக்கு கொடுப்பான் இறைவன்???
அப்பப்பா!!!.... இதுதான் இன்றைய காலகட்டம் என்பேன் அப்பனே!!
இதனால் யான் சொல்லியவற்றை அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் அதாவது பின் செய்யப் போவதில்லை.
புண்ணியங்கள் இருந்தால் தான் செய்வான்.
வரும் காலத்திற்கு அப்பனே உபயோகமாக படும் என்பேன் அப்பனே இவ் வாக்குகள் என்பேன் அப்பனே.
(குருநாதருடைய வாக்குகளை தேடி தேடி பார்ப்பார்கள் அப்பா என்று ஏற்கனவே
குருநாதர் வாக்குகள் கூறி இருக்கிறார்கள் குருநாதர் தரும் வாக்குகள்
எக்காலத்திற்கும் பொருந்தும்... குருநாதர் திருவாய் மலர்ந்து வருங்கால
சந்ததியினர் பிள்ளைகள் எல்லாரும் இதை பயன்படுத்தி நன்றாக வாழ்வார்கள் என்று
ஆசிகள் தந்து வாக்குகள் தந்திருக்கின்றார் இதை பக்தர்கள் அனைவரும்
கடைப்பிடித்து அனைவருக்கும் தெரியப்படுத்தி குருநாதரின் கருணை பெற
செய்திடல் வேண்டும் புண்ணியம் இருப்பவர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என்றும்
குருநாதர் கூறி இருக்கின்றார் புண்ணியத்துடன் நம்பிக்கை வைத்து நாம் நலம்
பெற குருநாதர் கூறிய வழிமுறைகளை பின்பற்றுவோம்)
அதனால் தான் அப்பனே பின் யாகங்கள் எது தடுத்தாலும்.. எவர் தடுத்தாலும் ஏனென்றால்... மனிதனுக்கு புத்திகள் இல்லை என்பேன் அப்பனே.
அறிந்தும் கூட!!..
இதனால் தான் அப்பனே நிச்சயம் (மனிதர்களின் பிரச்சாரங்கள்)அனைத்தையும் பொய்யாக்குவோம் வரும் காலத்தில் என்பேன் அப்பனே.
இவ்வுலகத்திற்கு எவை நல்லதோ அவை நிச்சயம் யாங்கள் செய்வோம் என்போம் அப்பனே.
பின்
வரும் வரும் சந்ததியினர்களுக்கு...கூட அழகாக இன்னும் இதை படித்து அப்பனே
பயன்படுத்தி அப்பனே நல் முறைகளாகி நல் ஒழுக்கங்களாகவே வாழ்வார்கள் என்பேன்
அப்பனே பிள்ளைகள் என்பேன் அப்பனே!
அழகாக ஆசிகளப்பா!! ஆசிகளப்பா!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment