"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 11, 2023

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு - ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியே போற்றி! போற்றி!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. பல யாத்திரைகள் நம் மனதுள் இன்னும் பரவசத்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.  இதில் கோடகநல்லூர் தரிசனம், ஓதிமலை தரிசனம், குடிமங்கலம் பாலா அம்மன் தரிசனம் என சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுள் நாம் ஏற்கனவே அந்த நாள் இந்த வருடம் - கோடகநல்லூர் யாத்திரை குறிப்புகளை இங்கே மீண்டும் கண்டு , அதில் உள்ள முதல் தரிசனம் பற்றி  குருநாதர் அருளிய வாக்கினை உள்வாங்குவோமாக!

கோடகநல்லூர் வழிபாட்டில் சில துளிகளை இங்கே பகிர்கின்றோம்.

1. முதலில் மணிமூர்த்திஸ்வரம் விநாயகப் பெருமான் தரிசனம்.( திருநெல்வேலிக்கு சென்றதும் தீடீரென குருவருளால் தரிசிக்க சென்றோம்)

2. விநாயகப் பெருமான் சன்னிதியில் அகவல் பாட விரும்பி செல்ல, ஏற்கனவே அடியார் பாடிக் கொண்டிருக்க நாமும் இணைந்தோம்

3. கோடகநல்லூரில் தாமிரபரணி தீர்த்த நீராடல்

4. தாமிரபரணி அன்னைக்கு மங்கலப் பொருட்கள் வைத்து, அன்னையைப் போற்றி, நன்றி கூறினோம்

5. அவிமுக்தீஸ்வரர் ஆலய நந்தவனத்தில் வில்வம்,அரசு, செம்பருத்தி மரக்கன்றுகள் நட்டோம்

6. கோடகநல்லூர் பெருமாள் திருமஞ்சனம் கண்டு, அபிஷேகம் பார்த்தோம்

7. நம் குழு அன்பர்கள், சில அடியார்களை நேரில் காணும் வாய்ப்பு

8. பல அகத்திய அடியார்களை நேற்று ஒரே நாளில் சந்தித்தோம்( சுமார் 20 அடியார்கள்)

9. அகத்திய வழிபாட்டில் நம்மை வழிநடத்தி வரும் அன்பர்கள் திரு.அக்னிலிங்கம் ஐயா, திரு. சுவாமி நாதன் ஐயா, திரு. முருகானந்தம் ஐயா, திரு ஆதவா ஐயா என நேரில் சந்தித்தோம்

10. பெருமாள் தரிசனத்தில் கோயிலில் தான் இருக்கின்றோமா? என வியப்பில் பல சுகந்த நறுமணத்தில் பெருமாள் தரிசனம்

11. அண்மையில் அம்மையப்பர் வாக்கு பெற்ற அடியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றோம். ( குருவருளுக்கு நன்றி)

12. நிறைவாக மஞ்சள் பிரசாதம், அன்ன பிரசாதம் பெற்றோம்

13. திரு. அக்னிலிங்கம் வழங்கிய புது பணம், திரு.சுவாமிநாதன் ஐயா வழங்கிய பெருமாள்,அகத்தியர் தரிசன போட்டோ என பெற்றோம்

14. பற்பல பிரசாதங்களாக மஞ்சள் கிழங்கு, பால்கட்டி பிரசாதம், அபிசேக மஞ்சள், பெருமாள் & அகத்தியர் போட்டோ என மனதிற்கு நிறைவாக பல பல பல பிரசாதங்கள்

15. வழிபாட்டிற்கு தயாரான போது 5 கருடன்கள் கோயிலை வட்டமிட்ட காட்சி

16. வழிபாடு நிறைவில் அனைவரும் எதிர்பார்த்த வருண பகவான் ஆசி

17. மதுரை பசுமலையில் ஶ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் கண்டு, நேற்றைய அருள்நிலைகளுக்கு நன்றி கூறி, மதுரை பரமசிவன் ஐயா சந்திப்போடு இந்த வழிபாடு முழுமை செய்தோம். ஒரே ஒரு மனக்குறையாக திரு.ஜானகி ராமன் ஐயா அவர்களை நேற்று நேரில் பார்க்க இயலவில்லை. ஐயா அவர்கள் நேரில் வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இன்னும் ..இன்னும்…குருவருள் வழிநடத்தட்டும்

அந்த நாள்,இந்த வருடம் கோடகநல்லூர் வழிபாட்டிற்கு அருளுதவியும், பொருளுதவியும் செய்த அனைத்து அடியார்களின் பாதம் வணங்கி, நன்றிகளைக் கூறி குருவருள் நம்மை இன்னும் பணிக்க வேண்டி பணிகின்றோம். இதில் முதல் தரிசனமாக அமைந்த உச்சிஷ்ட கணபதி கோயில் தரிசனத்தை அடுத்த பதிவில் காண்போம். அதற்கு முன்பாக இன்று நாம் அந்த ஆலயத்தில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய பொது வாக்கை காண இருக்கின்றோம்.





27/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம் : உச்சிஷ்ட கணபதி கோயில் மணிமூர்த்தீஸ்வரம். திருநெல்வேலி மாவட்டம். 

ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

நலமாக!!! நலமாக!!! இத்திருத்தலத்தில் பல அதிசயங்கள் உண்டு !!!என்பேன். உண்டு என்பேன் எதற்காக சிலசில பலத்த கர்மாக்கள் மனிதனுக்கு பின் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது கலியுகத்தில். பின் எதனையென்று கூற.....

ஆனாலும் கர்மாக்கள் சிலவையே (சிறிதளவே) என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் பலத்த எதையென்று கூற உச்சம்பெற்ற... அப்பனே பாவங்கள் அப்பனே ""அஷ்டமா"" எதையென்று கூற அவ் ""அஷ்டமா!!!!!(8 வகையான பெரும் பாவங்கள்) கர்மாக்களை பெற்றவர்கள் எதையென்று கூற நிச்சயம் வாழ்வில் உயர மாட்டார்கள் என்பேன்.

எத்திருத்தலத்திற்கு சென்றாலும்... எதனை என்றாலும் கூட ஒன்றும் செய்ய இயலாது.

செய்ய இயலாது என்பேன்.

அதுமட்டுமில்லாமல் ஏதும் நடக்காது என்பேன்.அவ் அஷ்ட கர்மாக்களை நீக்கினால்தான் மனது தெம்படையும் என்பேன்.

அவை மட்டுமில்லாமல் அனைத்தும் நிறைவேறும் என்பேன். எதையென்று கூற பல பாக்கியங்கள் வந்து சேரும் என்பேன். 

அதனால் எதை என்று கூற அவ் அஷ்டகர்மத்தை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் நிச்சயம் இறைவனை அடைய முடியாது என்பேன்.

கஷ்டங்கள் தான் கூடிக்கொண்டே இருக்கும். இவையென்று கூற .....

ஆனாலும் இவை தன் முன் ஜென்மத்தில் வந்தவையா??

இந்த ஜென்மத்தில் வந்தவையா?? என்று கேட்டால் நிச்சயம் அனைத்து ஜென்மங்களிலும் இருந்து வந்தவை!! இச் ஜென்மத்திலிருந்தும் வந்தவையே என்பேன். பிறப்பெடுத்தும் கூட....

இதனால் எதை என்று கூற இத்திருத்தலத்திற்கு வந்து கொண்டே சென்று கொண்டிருந்தால் அவ் அஷ்ட கர்மாக்களை அழிக்க முடியும் என்பேன்.

ஆனாலும் அதற்கும் எதை என்று கூற  இவ் பிள்ளையோன்(பிள்ளையார்) வரவழைக்க வேண்டும் என்பேன். இவன் அருள் இல்லாமல் நிச்சயம் இங்கு வர முடியாது என்பேன்.

ஆனாலும் பல மனிதர்கள் இங்கே வந்து வந்து பல அரசர்கள் இங்கே வந்து வந்து உயர்வுகள்  பெற்றடைந்தனர்....

ஆனாலும் சில மனிதர்கள் மாய பிறப்பில்  எதையென்று கூறாத அளவிற்கும் கூட... இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதைக்கூட மக்களின் கணிப்பு என்பதே இங்கு வந்தவர்கள் திடீர்!!! திடீரென்று கூட உயர்வுகள் பெற்றுக்கொண்டே செல்கின்றார்கள். செல்வங்களும் வந்து கூடிக் கொண்டே இருக்கின்றது. நலமுடன் வாழ்கிறார்களே ! ! என்று எண்ணி பலபல செய்கைகள் அற்ற பின் புத்தியில்லாத மனிதர்கள் இதனையும்  கெடுத்து விட்டனர். 

ஆனாலும் இவ் உலகத்தின் முதல் எதையென்று கூற பின்... பின்,  ......"""அ"""" என்ற வடிவில் வந்தவனே கணபதியே!!!! எதையன்றி ஆனாலும் அவந்தன் விடுவானா!! என்ன???

அதனால் நிச்சயம் இக்கலியுகத்தில் எதை என்று கூற  எதனை என்றும் கூறாத அளவிற்கும் கூட வெற்றிகள் உண்டு என்பதற்கிணங்க நிச்சயம் நல்லோர்களை இங்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றான் இன்னமும்கூட!!!!!

அதனால் நல்லோர்கள் தான் நிச்சயம் இங்கு வந்தடைய முடியும் மோட்ச கதியையும் அடைய முடியும். எதையென்று கூற சில கர்மாக்களையும் பின் நீக்கமுடியும். சொல்லிவிட்டேன்.

இதனால் எதை எதை என்று கூற பாண்டியனும் (நெடுஞ்செழியன்) இங்கு வந்து பல பல பெருமைகளை இங்கு நிகழ்த்தினான் என்பேன்.

கட்டபொம்மனும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) எதையென்று கூற... இங்கே வந்து எதையென்று கூற பல பல வழிகளிலும் வழிபட்டு சென்று பல அதிசயங்களை நிகழ்த்தினான் என்பேன்.

எதையென்று கூற ஆனாலும் கர்மாக்கள் எவை என்று விடாமல் சென்று கொண்டு இருக்க ஆனாலும் அவ் கர்மத்தையெல்லாம்... இங்கு நீங்கும்.

இதனால் அஷ்ட கர்மாக்களை நீக்கினால் அஷ்ட சித்துக்களை பெறலாம்....எதையென்று கூற இவ் கணபதியே கொடுப்பான் என்பேன்.

ஆனாலும் அதற்கு தீர்வுகள் கணபதியிடமே உள்ளது....எதையென்று கூற யானும் இங்கு பல தடவை வந்திட்டேன்.எதையென்று கூற பல சித்தர்களும் இங்கு வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள். மறைமுகமாக!!!!

அதனால் நல்லோர்கள் தான் இத்திருத்தலத்தை வந்து அடைய முடியும்!!! மற்ற யாரும் எதை என்று கூற எவ்வாறு நினைத்தாலும் இங்கே வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எதனையுமென்று அறிவதற்கு...

அதனால் இன்னும் பல சூட்சமங்கள் உண்டு எதனை என்று அறியாத அளவிற்கும் கூட வெற்றிகள் உண்டு... அனைவருக்கும் என்பேன்.

இதனால் எங்கெங்கு??? பலப்பல திருத்தலங்களும் அப்பனே...எதையென்று கூற தெரியாத அளவிற்கும் மறைந்து போயிற்று!!!!!!! அப்பனே!

கலியுகத்தில் இத் திருத்தலங்களைப் பற்றி இன்னும் ஏராளம் ஏராளமான வாக்குகளும் காத்துக்கொண்டிருக்கின்றது என்பேன். எதையென்று கூற....

ஆனாலும் ஓர் பிறவியில் எவையென்று கூறும் அளவிற்கு கூட.... பாண்டியன்(நெடுஞ்செழியன்) வரலாற்றைப் பார்த்தால் தோல்வியுற்றதற்காக... ஓர் ரிஷி சொல்லிவிட்டான். இதனால் பல திருத்தலங்களுக்கு அலைந்தான் அலைந்தான் எங்கெல்லாம் அலைந்தான்.

எதனையென்று கூற வெற்றி கொள்ள வேண்டுமே!!!! என்று கூட பல திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்து ஆனாலும் வெற்றியும் சில நேரங்களில் பெற முடியவில்லை... ஆனாலும் யோசனை!!!! இவையென்று கூட பலமாகவே!!! பலமாகவே!!!!...

"ஈசனை!!! நோக்கி எதையென்று கூறாத அளவிற்கும் கூட பக்திகள் செலுத்தினான்!!!

ஈசனே!!!!  நேரில் எதையென்று எவையென்று கூற ஆனாலும் வந்து கனவில்....எதையென்று ஆனாலும் சிலசில கர்மாக்களையும் நீ பெற்றிருக்கின்றாய்... அதை நிச்சயம் இங்குள்ள பின் திருத்தலத்திற்கு செல்!!! பின் நிச்சயமாய் அங்கே தங்கி "வா!!!! .....

பலக் கர்மங்கள்.. நிச்சயம் அழிந்திடும்.பின்பு வெற்றிகொள்வாய்.உன் பெயர்!!! புகழ்!!! எதையென்று கூற இவ்வுலகத்தில்...பின் உலகம் இருக்கும் வரை நிச்சயம் உன் பெயர் அழியாது.... என்று கூட கூறிவிட்டான். சொப்பனத்திலே!!!!

அதனால் அதை தேடி அலைந்து எதை என்று கூற இங்கே வந்தான்... ஆனாலும் எவையென்று கூற... இப்பொழுதும் கூட அவந்தன்....எதையென்று கூற பெயரும் நிலைத்திருக்கின்றது .

இதனையென்று கூற கண்டு கண்டு மகிழ்ச்சி அடைந்தான். அதனால் எவையென்று கூற பிள்ளையோனும் நேரில் வந்து பல ஆசிகளை தந்தான்.

இதனால் பல மனிதர்களுக்கும் பலப்பல அரசர்களுக்கும் இவற்றின் மூலம் தெரிவித்தான்... இதனால் பலப்பல திருத்தலங்களையும் வடிவமைத்தான் நல் விதமாகவே!!!!

எதையென்று கூற இதனால் அவந்தன் பெயர் கெடவில்லை....எதையென்று கூட எவையென்று கூற  இவ்வுலகத்தை பின் இருக்கும் வரை நிச்சயமாய் அவன் பெயர் நிச்சயம் வரும்!!!!

சொல்லிக்கொண்டே..... இன்னும்! இன்னும் !ஏராளம்! என்பேன்!!

அதனால் சில சில வினைகள் ஆட்கொண்டு ஆட்கொண்டு இருந்தாலும் இங்கு வந்து வணங்குபவர்களுக்கு நல் விதமாகவே கர்மாக்கள் அழிந்துகொண்டே... போகும்!!!.

ஓர் முறை!!!  இரு முறையல்ல!!!! 

பலமுறை வந்தடைய வேண்டும்!!!!!

எதையென்று கூறும் எவை எவை என்று கூறும் அளவிற்கும் கூட இன்னும் வெற்றிகள் தான் உண்டு என்பேன்.

தித்திக்கும்...!!! இவந்தனை வந்தடைந்து விட்டால் இன்னும் ஏராளமான விஷயங்கள் நடக்கக்கூடும்.

ஆனாலும் இதையென்று தெரியாமலேயே பின் கர்மம் செய்து எவையென்று கூற... அனைத்தும் தெரிந்து கர்மா செய்து கொண்டிருந்தாலே இவந்தன் நிச்சயம் விடமாட்டான் என்பேன்.

கர்மா அழிக்கும்!!!  எதையென்று கூற... அழித்து அருள் தரும் இடம் இத் திருத்தலம் என்பேன். எதையென்று கூற ஆனாலும் அப்பனே.... இங்கு உள்ளது நெல்லைப்பன் என்ற திருக்கோயில். ஆனாலும் அதன் அருகே திடீர் திடீரென்று சென்றுவிடுவார்கள். ஆனாலும் அப்பனே அவை எல்லாம் ஆகாது என்பேன்.

இங்கு சென்று நல் விதமாகவே அங்கு வணங்கினால்(முதலில் கணபதி தரிசனம் செய்து விட்டு நெல்லையப்பர் தரிசனம் செய்ய வேண்டும்) இன்னும் அப்பனே....

ஏராளம் என்பேன்... ஏராளம் என்பேன் வெற்றிகள் அதாவது எதை என்று கூற முதலில் இங்குதான் வரவேண்டும் ஆனாலும் பின் காலப்போக்கில் மனிதர்கள் எதை எதையோ சொல்லி பின் மனிதன் தன்மையையே மாற்றி விட்டான்.

ஆனாலும் இதைத் தான் முதலில் யான் செப்புவேன் அப்பனே சொல்லிவிட்டேன்.பின் நெல்லையப்பனை தரிசித்தாலும் அப்பனே எதை எதை என்று கூற சில கஷ்டங்கள் நிச்சயம் வரும்.

அதனால் எப்படி??? வணங்க வேண்டும் என்றால் அப்பனே..... திரும்பவும் சொல்கின்றேன் இங்கு வந்து நல்முறையாக தியானங்கள் செய்து பின்பு அங்கு சென்றால் தான் நிச்சயம் அருள் கிடைக்கும் செப்பிவிட்டேன் அப்பனே.

இன்னும் பல ஏராளம் ஏராளமான வாக்குகளும் எவையெவை என்று கொள்வதற்கிணங்க.. அப்பனே வெற்றிகள் இல்லை அப்பனே இன்னும் இன்னும் இன்னும் எதை எதை அறிந்து இன்னும் பல திருத்தலங்கள் ஒளிந்து ஒளிந்து கொண்டிருக்கின்றன அப்பனே.... அவ் ஒளிந்த கோயில்களையும் எவை என்று கூறும் அளவிற்கும் கூட சித்தர்கள் யாங்களே நிச்சயம் இக்கலியுகத்தில் நல்லோர்களை வாழச் செய்ய ஏற்படுத்துவோம் என்போம்.

அப்பனே எதையன்றி கூற அதனால் அப்பனே பல மனிதர்கள் எதை எதை?எதையோ என்று பொய் சொல்லி அப்பனே அகத்தியன் எதை என்று கூற சித்தர்கள் பெயரைச் சொல்லியும் ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அப்பனே யாங்கள் பல திருத்தலங்களை அப்பனே!! எப்படி வணங்க வேண்டும்?? எதனை நிறுத்த வேண்டும் என்பதைக்கூட அப்பனே சொல்லிவிட்டு வந்து கொண்டிருக்கின்றோம்.

யாங்களே அப்பனே கலியுகத்தில் அப்பனே!! ஏனென்றால் மனிதனை நம்பி நம்பி அப்பனே எதை என்று கூற அப்பனே பாசம் வைத்தார் போல் வைத்து... அப்பனே பின் எதை என்று கூற கர்மாக்களை சேர்த்து விடுகின்றான் அதனால் யாங்கள் எப்பொழுதும் மனிதனை நம்பி விடுவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே. 

மீண்டும் சொல்கின்றேன் அப்பனே அகத்தியன்..  இறைவன். இதை என்றெல்லாம் சொல்லி பொய் சொல்லி நடந்து கொண்டு இருக்கின்றான்.

ஆனால் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று எண்ணவில்லை பொருளுக்காகவும் பணத்திற்காகவும் தங்க நகைகளுக்காகவும்... எதையென்று கூற அனைவரும் இப்படி தான் அகத்தியன் பெயரைச் சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.

ஆனாலும் யானும் அமைதியாக இருந்து விட்டேன். ஆனாலும் இனிமேலும் அமைதியாக..........

ஆனாலும் அப்பனே நல்லோர்கள் இவ்வுலகத்தில் வாழவேண்டும் அப்பனே அதுதான் எங்கள் கோரிக்கை.... அதனால்தான் அப்பனே பல பல திருத்தலங்களுக்குச் சென்று அப்பனே அடிமட்டத்தில் இருக்கும் திருத்தலங்களையும் யாங்கள் உயர்த்துவோம்.

இத்திருத்தலம் அப்பனே பலம் மிகுந்ததாகும்!!! என்பேன் ! அப்பனே... பலம் மிகுந்த அருள்களும் தரக் கூடியவன் """" இவ் கணபதி!!

எதையென்று கூற அதனால் நல் மனதாக இங்கு வருபவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் அப்பனே மாற்றம் உண்டு என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே இதை யாரும் கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் அப்பனே யாங்கள் கண்டுகொள்வோம் அப்பனே... இனிமேலும் அப்பனே இத்திருத்தலத்தை மாற்ற செய்வோம்.... அப்பனே மாற்றியமைத்து.... இன்னும் பல சக்திகளை உருவாக்குவோம் அப்பனே

சக்திகளை உருவாக்கி அப்பனே நலம் பெறச் செய்வோம்  என்பேன் அப்பனே.

அதனால் யாங்கள் இவ்வுலகத்தை திருத்த வேண்டும் என்றால் அப்பனே ஆனாலும் பழைய திருத்தலங்கள் அப்பனே அழிந்து கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது அப்பனே... அதையே  யாங்கள் உருவாக்குவோம். 

ஆனால் மனிதன் பல பல உண்மைகளை தெரியாமல் தன்னிடம் காசு உள்ளதே... எதையென்று கூற எவையென்று கூற சில திருத்தலங்களை எவை என்று கூற தெரியாமலே உருவாக்குகின்றான். ஆனாலும்... அங்கு உள்ளது அப்பனே யான் வீண்!!!!!!!! என்று சொல்லிவிட்டேன்!!

அப்பனே... எதையன்றி கூற...

ஆனாலும் பல திருத்தலங்கள் யாங்களே வடிவமைத்தோம் என்பேன் அப்பனே.... அங்கெல்லாம் எதை என்று கூற வந்தால் சில தரித்திரங்கள் நீங்கும். 

அப்பனே மேன்மை பெறும் அப்பனே...எதையன்றி கூற.....

அப்பனே.... ஒன்றைப் புரிந்து கொண்டீர்களா!!!!!!!

அப்பனே!!!.... எதற்காக நீங்கள் திருத்தலத்தை அமைப்பீர்கள்??????? எதையென்று கூற....எதை எவை என்று கூற உன் கஷ்டத்தால் வந்தவையா???????

 இல்லை....!!!!

எவையென்று கூற.... மற்றவர்கள் பொருளை சம்பாதிப்பதற்கு என்பேன் அப்பனே.

இதை இறைவன் கேட்டானா???!!!!! என்ன!!!!!??

அப்பனே நல்லோர்கள் வாழவேண்டும் இனிமேலும் நிச்சயம் யாங்கள்... வழி வகுத்துக் கொண்டே இருப்போம் அப்பனே!!!

பழைய திருத்தலங்களையும் அப்பனே யாங்களே வடிவமைத்து இன்னும் உயர்த்தச் செய்வோம் அப்பனே..... அப்பொழுது நல்லோர்கள் எல்லாம் வாழ நிச்சயம் வாழ்வார்கள் என்பேன் அப்பனே.

நல்லோர்களை அப்பனே நல்லோர்களை காக்கவே யாங்கள் நிச்சயம்...எதையென்று கூற ஆனால்.... தீயவர்களும் இருக்கின்றார்கள் அப்பனே.

அவர்களும் நிச்சயம் தீயவை செய்து கொண்டிருந்தால்.... அவர்களும் பின்னோக்கிச் சென்று விடுவார்கள்.

நல்லோர்களை காக்க நிச்சயமாய் எஞ்சியுள்ளது என்பேன் அவ் நல்லோர்களை உயர்த்தினாலே போதும்... உலகம் மாற்றமடையும் என்பேன் அப்பனே.

அதனால்தான் அப்பனே பல திருத்தலங்களை பற்றி சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே இன்னும்.... எதை எதை என்று ஏராளம் அதனால் அப்பனே.... இன்னும் எதை என்று கூற அப்பனே இத்திருத்தலத்தை இன்னும் யாங்கள் வடிவமைப்போம் அப்பனே... பல பல செல்வங்களும் இதற்கு தானம் அளித்து நல் விதமாகவே இன்னும்...யாங்களே அதி விரைவிலே உற்பத்தி செய்வோம். இத்திருத்தலத்தின் சிறப்புக்களையும் அப்பனே!!!

நல் விதமாக ஆசிகள் ஆசிகள்.... மற்றொரு வாக்கும் சொல்கின்றேன் ஒரு திருத்தலத்தில் அப்பனே!!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோயில்.

மணிமூர்த்தீஸ்வரம் 

திருநெல்வேலி 

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம், மணி மூர்த்தீஸ்வரம்,திருநெல்வேலி .627001 

தொடர்பு எண் :09444794200

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்)     இருந்து சரியாக 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயச் சிறப்புகள் :-


உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.

ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து  ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில்  நாயக்கர்கள், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.

இந்தியாவிலேயே ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள்,மூன்று பிரகாரங்கள்,கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயில் என்ற சிறப்பு உடைய ஆலயம்.

இத்திருத்தலத்தில்  உச்சிஷ்ட கணபதி அமர்ந்த திருக்கோலத்தில்விநாயகர் தனது இடப்பக்க மடியில் ஸ்ரீ நீலவாணியை அமர்த்தியபடி அருளுகிறார். ஸ்ரீ நீலவாணி என்பது லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய தேவியரை உள்ளடக்கிய தெய்வமாக கருதப்படுகிறது.

ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன்களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விசேஷமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்க ளுக்கு தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர் நான்கு கரங்களுடன் யோக நிலையில் அருள் பாலிக்கிறார்.

வற்றாத ஜீவநதியும், வேதங்களில் புகழப்பட்ட புண்ணிய நதிகளில்   ஒன்றான  தாமிரபரணி நதி வடக்கு முகமாக (உத்திர வாஹினி)  ஓடுகின்ற பகுதியில் அமைந்துள்ளது.

திருக்கோயிலின் அருகில் பைரவ தீர்த்தம் என்னும் உன்னதமான தீர்த்தக் கட்டம் உள்ளது.இதில் நீராடி விநாயகரை வழிபடத்  தோஷங்கள் யாவும் நீங்கும்.

தமிழ் வருடப்பிறப்பான  சித்திரை மாதம் முதல் தேதி அன்று சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் அதிசயம் நிகழ்கிறது.

இத்திருக்கோயில் அருகில் பைரவ தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி விநாயகரை வணங்குவது சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றுள்ள திருத்தலம் ஆகும்.

முற்காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் பூசையில் ஒலிக்கப்படும் மணியோசை இங்கே கேட்ட பின் பூசை துவங்குமாம் எனவே தான் மூர்த்தீஸ்வரம் என்ற இவ்வூர் மணிமூர்த்தீஸ்வரம் எனப் பெயர்ப் பெற்றது எனக் கூறப்படுகிறது.

இத்திருத்தலத்தில் அனைவரும் எளிமையாக சென்று வணங்கும் வகையில் அமைத்துள்ளனர்.

எந்த வித மந்திர தந்திரங்களும் தேவையில்லை தன்னை வணங்குவோரை வளம் பெற வாழச் செய்கிறார் இந்த உச்சிஷ்ட கணபதி.

இவருக்கு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தேங்காய் மாலை சாற்றினால் அனைத்து நன்மைகளும் தருவார் என நம்புகின்றனர் பக்தர்கள்.

அவல், கொழுகட்டை, சுண்டல், அப்பம், தேங்காய், கரும்பு, வாழைப்பழம் முதலியவற்றை நைவேத்தியமாக படைக்கின்றனர்.

திருமண தடை நீங்கவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இங்கே வந்து பிராத்தனை செய்தால் நிச்சயம் பலன் அளிப்பார் உச்சிஷ்ட மகா கணபதி.

உச்சிஷ்ட கணபதி ஆலய அமைப்பு

உச்சிஷ்ட கணபதி ஆலயமானது ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன், கம்பீரமான கொடி மரத்துடன் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

கோவிலை வலம் வந்தால் சிவன், பார்வதி, முருகன் சன்னதிகளும் உள்ளன. கருவறையில் நான்கு திருகரங்களுடன் நீலவாணியை மடியில் அமர்த்தி கொண்டு காட்சி தருகிறார் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.பிரகாரத்தில் 16 வகையான விநாயகர்

உச்சிஸ்ட கணபதி கோயிலின் உள் பிரகாரத்தில் விநாயகர் 16 வடிவங்களுடன் தனிச்சிறப்புகளுடன் அருளுகிறார். குஷி கணபதி (நோய் அகல), ஹரித்ர கணபதி (காரியத்தடை, வியாதி நீங்க), ஸ்வர்ண கணபதி (தங்கம் அடைய), விஜய கணபதி (வெற்றி அடைய), அர்க கணபதி (நவக்ரக தோஷம் நீங்க), குருகணபதி (குருவருள் பெற), சந்தான லட்சுமி கணபதி (நன்மகவு அடைய), ஹேரம்ப கணபதி (அமைதிபெற), சக்தி கணபதி (செயல் வெற்றிபெற), சங்கடஹர கணபதி (தடங்கல் நீங்க), துர்கா கணபதி (துன்பம் நீங்க), ருணஹரண கணபதி (கடன் தொல்லை தீர), ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ (காரிய சித்தி, கணவன் மனைவி அன்பு பெருக), சித்தி கணபதி (முயற்சிகள் வெற்றிபெற), வீர கணபதி (தைரியம் அடைய), சர்வ சக்தி கணபதி (உடற் பலம் பெற) ஆகிய கணபதி சன்னதிகள் உள்ளன.

முற்காலத்தில் பாண்டியர்கள், நாயக்கர்கள் பின் நகரத்தாரால் பராமரிக்கப்பட்டும், திருப்பணிகள் செய்யப்பட்டும் வந்ததற்கு சான்றுகள் கோவிலில் உள்ளன

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஈசான பாகத்தில் அமைந்துள்ள ஒரே விநாயகர் ஆலயம்  இது மட்டுமே.

இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.



ஆலயத்திற்கு வரும் வழி :-

ரயிலில் வருபவர்கள் :-  திருநெல்வேலி சந்திப்பு ஸ்டேஷனில் இறங்கி  அங்கிருந்து தச்சநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி உடையார்பட்டி பைபாஸ் ரோட்டில் இறங்கி எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிஷ்ட கணபதி ஆலயம் செல்லும் வழி என்று ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.அதனுள் ஒரு 200 அடி தூரத்தில் ஆலயம் உள்ளது.

பஸ்ஸில் வருபவர்கள் :-   திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம்  1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .

காரில் வருபவர்கள்:- மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வடக்கே இருந்து வருபவர்கள் சங்கர்நகர் தாண்டி 5 கிலோ மீட்டரில் தச்சநல்லூர் பைபாஸ் வரும் அதில் இருந்து கன்னியாகுமரி சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றுப் பாலத்துக்கு  சிறிது முன்னால் இடது புறம் வழிகாட்டும் பலகை இருக்கும் அந்த வழியில் வரவும்.

வழக்கம் போல் அன்பர்கள் இங்கே தரிசனம் பெற்று, குருவருள் பெற வேண்டி பணிகின்றோம்.

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

Saturday, December 9, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. சென்ற வாரம் இதே நாளில் ஓதியப்பர் தரிசனம் அனைவரும் பெற்றோம். ஒவ்வொரு யாத்திரையிலும் குருநாதர் அருளால் சிறப்பாக தரிசனம் பெற்று வருகின்றோம். சென்னை புயல் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கு நலம் பெற வேண்டி, மாலை கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம். மேலும் நம் தளம் சார்பில் கீழ்க்கண்ட சேவையில் இணைய வாய்ப்பு கிடைத்தது.

- செங்கல்பட்டு பூங்காவனம் ஐயா கஞ்சி ஊற்றும் சேவை 

- அம்மு நேச்சுரல்ஸ் அவர்களின் மூலம் சென்னை சேவை 

- எம் அலுவலக பணி அன்பர்களின் மூலம் சென்னை சேவை 

இவற்றுடன் நம் குருநாதரின் மார்கழி ஆயில்ய குருபூஜை வருகின்றது. வழக்கமாக பல தலங்களுக்கு நம் குழு சார்பில் சிறு தொகை சேர்ப்பது நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டிலும் இந்த சேவை ஓதிமலை தலத்தில் வீற்றிருக்கும் நம் குருநாதருக்கு வழிபாடு மேற்கொள்ளும் பொருட்டு பணிக்கப்பட்டு உள்ளோம்.அதே போன்று சென்ற ஞாயிறு வழிபாடு அன்று ஒரு பிரார்த்தனையும் நம் குழு சார்பில் பதிவின் தலைப்பையொட்டி வைத்துள்ளோம். 2024 ஆம் ஆண்டில் இது நிறைவேறும் என்று நாம் விரும்புகின்றோம். மேலும் திருச்செந்தூர் திருக்கண்ணபுரம் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்யம் வழிபாட்டிற்கும் சிறு தொகை அனுப்பி உள்ளோம். மேலும் பல ஆலயங்களுக்கும், அன்றைய தினம் அன்னசேவைக்கும் சேர்க்க வேண்டி, குருவிடம் பணிந்து இன்று அனைவரையும் திருப்புகழ் அமிர்தம் பருக அழைக்கின்றோம். திருப்புகழ் ஒவ்வொன்றும் அமிர்தம் என்றாலும் இதில் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் நமக்கு அருளிய மூன்று முத்தான திருப்புகழ் படித்து முருகன் அருள் பெறுவோமாக!

அவ்வப்போது நம் தளத்தில் திருப்புகழ் தலங்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். மேலும் நம் தளத்தில் நடைபெறும் கூட்டு வழிபாட்டில் முருகவேள் பன்னிரு திருமுறை மூலமாக திருப்புகழ் படிக்க வாய்ப்பு கிடைத்து. மீண்டும் மாலை வழிபாட்டில் திருப்புகழ் படிக்க முருகப் பெருமானிடம் வேண்டுகின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மில் தோன்றுவது இது தான். இது மட்டும் தான்.


முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!




இந்த நிலையில் நமக்கு சில திருப்புகழ் பாடல்கள் மிக மிக நெருக்கமாக அமைகின்றது. அவற்றை மீண்டும் படித்து அமுதம் பருகுவோமாக!

திருப்புகழ் 170 நாத விந்து  (பழநி)


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

......... பாடல் .........

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

இந்த திருப்புகழ் மதுரை பசுமலை அகத்தியர் கோயிலில் நாம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.



அடுத்து  அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கில் அடியார் ஒருவர் பாடிய திருப்புகழ் படிக்க உள்ளோம்.

குருநாதர்:- அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க முடியவில்லையே அப்பனே வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல் வாழந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அப்பனே இப்பொழுது சொன்னானே , ஆடினானே இதுபோலத்தான் அப்பா. ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். கர்மாவில் மிதந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. ஆடாமல் நிற்கவேண்டும் என்றால் அப்பனே எங்களை நிச்சயம் சரண்டதல் அதாவது எங்களை சரணடையத் தேவை இல்லை. நீங்கள் புண்ணியம் செய்து கொண்டிருந்தாலே யான் உங்களை நோக்கி வருவோம். அப்பனே (ஒரு) பாடலைப்பாடு முருகனை நோக்கி.

அடியவர்:- (முருகன் பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு - திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த  (பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.)

குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன?

அடியவர்:- (மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை தூக்கி பாட ஆரம்பித்தார். அந்த திருப்புகழ் பாடல் படித்து முருகனை உளம் உருகி தொழுது உய்யுங்கள்.

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.


அடுத்து மீண்டும்  அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 05.09.2023 உரைத்த வாக்கில் அம்மை ஒருவருக்கு குருநாதர் அருளிய வாக்கில் நாம் அனைவரும் இந்த திருப்புகழை அனுதினமும் பாடி, முருகப் பெருமான் அருள் பெறுவோமாக!

அடியவர்:- ( அம்மை ஒருவருக்கு வாக்கு கேட்ட பொது )

குருநாதர்:- அம்மையே ஏதாவது ஒரு பாடலை பாட வேண்டும்.

அடியவர்:- ( அம்மை அவர் கந்த வடிவேலவன் அருளால் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள முத்தைத்திரு என்ற பாடலை மிக அருமையாக பாட ஆரம்பித்தார். அந்த மகிமை புகழ் பெற்ற மகத்தான பாடலை அடியவர்களுக்கு பகிர்கின்றோம். இந்தப்பாடல் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.)

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

(கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி பாடல் முடியும் வரை கேட்டார்கள். இந்த அம்மை செய்த பாக்கியம்)

குருநாதர்:- அம்மையே இவை தன் யான் சொல்லுகின்றேன் அம்மையே. யாருக்கும் சில அறிவுரைகளே இல்லை அம்மா.  அனுதினமும் அம்மையே அதாவது இல்லத்திலேயே தீபம் ஏற்றி ஒரு மண்டலம் வரை (48 நாட்கள் இந்த பாடலை) இதை உரைத்து அனைவரையும் பாடச்சொல்லிட்டு மீண்டும் வாக்குகள் கேட்கச்சொல். அதன் உள்ளே சில விசயங்கள். அனைவருமே கர்மாவில் இருக்கின்றார்கள் அம்மையே. அதனை (யான்) மாற்றி அமைக்கின்றேன் என்று நீ கூற வேண்டும். எழுந்து நில்.

அடியவர்:- (இந்த அம்மை அங்கு உள்ள அடியவர்களுடம் பின் வருமாறு உரைத்தார்கள்)  48 நாளைக்கு உங்க வீட்டில் தினமும்  தீபம் ஏற்றி, இந்த முத்தைத்திரு என்ற பாடலை பாடுங்கள். 48 நாள் முடிந்த பின் வாக்குகள் குருநாதர் ஐயாவிடம் கேளுங்கள்.

குருநாதர்:- அம்மையே நீயே பாட வேண்டும் இல்லத்தில் கூட.


அனைவரும் மூன்று திருப்புகழ் பாடல்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். மீண்டும் மீண்டும் முருகப் பெருமானை மனதில் நினைத்து, திருப்புகழ் படித்து, பாடி மெய் உணர்வோமாக!


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டிப் பணிவோம்.



திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

           ஓம் குரு மொழியே வேதம் வேதம்

 ஓம் குரு விழியே தீபம் தீபம்

                                                                ஓம் குரு பதமே காப்பு காப்பு 




இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்

https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

(பகுதி 7 - வாக்கு ஆரம்பம் ) 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அடியவர்:- நன்றி குருவே.

குருநாதர்:- அப்பனே, எதற்காக நன்றி சொன்னாய்?

அடியவர்:- (எங்களுக்கு) அறிவு இல்லை.

குருநாதர்:-  அப்பனே ஒர் முறை சொல்லிவிட்டேன் (நீ கூறியதை). மற்றொரு முறை ஏதாவது ஒன்றை உரை.

அடியவர்:- எனக்கு என்னங்க தெரியும். (குருநாதா) உங்களுக்குத்தான் தெரியும்.

குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை நீ செய்யவில்லை அப்பா. அதனால்தான் பல அடிகளை வைத்து அப்பனே ஆனாலும் சில சில வகைகளிலும் கூட பக்குவங்கள் ஏற்ப்படுத்தி ஒரு மனிதனாக வாழ வைக்கப்போகின்றேன். நீ கேட்கலாம்  (இதுவரை) இப்போது நான் மனிதனாக வாழவில்லையா என்று. நிச்சயம் வாழவில்லையப்பா. இனிமேல்தான் நீ மனிதனாக வாழப்போகின்றாய் அப்பனே. போதுமா? ( குருநாதரின் கருனை மழை இங்கு இந்த அடியவருக்கு பொழிந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.)

அடியவர்:- நன்றிங்க ஐயா. (அடியவர் குருநாதரின் அன்பு வாக்கை கேட்ட உடன் உடைந்து அழ ஆரம்பித்தார்)

குருநாதர்:- அப்பனே அதனால் உன் பக்கத்தில் இருக்கின்றானே இவன்தனும் சில சில தவறுகள், அதாவது சில கர்மத்தை சேகரித்துக் கொண்டான் அப்பனே. இதனால்தான் அப்பனே இதுவரையில் கூட சில வாக்குகள் யான் செப்ப வில்லை என்பேன் அப்பனே. இனிமேலும் அதை எப்படி அகற்றிட வேண்டும் என்பதைக்கூட சிறிது சிறிதாக அகற்றிக்கொண்டிருந்தேன் அப்பனே. இனிமேலும் உன் வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் யான் சொல்லுகின்றேன். பொறுத்திருக.

(அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் ஓர் வேண்டுகோள்.  ஒரு மிக முக்கிய நிகழ்வை இந்த அடியவர் மூலம் உணரந்திட வேண்டியது அவசியம். எனக்கு ஏன் நாடி வாக்கு பல முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என நல் உள்ளங்கள் பல ஏங்கும் நேரங்கள் பல உண்டு. அதே நேரத்தில் அந்த நல் உள்ளங்கள் கர்மத்தினால் திசை திருப்பப்பட்டு வழி தவறிய ஆடு போல் ஜோதிடம்/இதர சுவடிகளிடம் சென்று பணம் கொடுத்து பரிகாரம் என்ற கர்ம வழிக்கு செல்பவர்களும் உண்டு. ஆனால் இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை உணர இந்த வாக்கு ஒரு உதாரணம். நாடி வரும் வரை பொறுமை காத்தலே சிறந்த சீடனுக்கு/பக்தனுக்கு அழகு. வேறு கர்மம் பிடித்த வழிகளில் சென்று கர்மத்தை சேர்ப்பதை தவிர்க்கவும். கர்மா இருக்கும் நேரங்களில் அகத்திய பிரம்ம ரிஷி நாடி வாசிக்கும் அகத்தியர் மைந்தன், அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்களை தொடர்பு கொள்ள அவர்கள் கர்மா விடாது என்பதை அறியவும்.  பொறுத்தார் பூமி…..)

அடியவர்:- (உடைந்து அழுதுகொண்டே இருக்கின்றார்கள்…)

குருநாதர்:- இதுபோலத்தான் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா வினை. அதனுள்ளே எந்தனுக்கு அதைத்தா, இதைத்தா என்றெல்லாம் பின் கேட்டால் யான் எப்படியப்பா தருவது? தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இவ் அகத்தியன் அப்பனே எப்பொழுது யாருக்கு (நாடி வாக்குகள்) தர வேண்டும் என்று எண்ணி அப்பனே நிச்சயம் கொடுப்பான் அப்பா. நிச்சயம் கைவிடமாட்டேன் அப்பா. ஆனால் திருத்துவதற்கே அனைத்தும் கூட. அதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. அப்பனே (வேறு எங்கு) சென்றாலும் உன் கர்மா விடாதப்பா. அப்பனே சொல்லி விட்டேன். இப்பொழுது பின் இருவரை (ஒற்றைக்காலில்) நிக்கச்சொன்னேன் அப்பனே. கால்களை ஆட்டி ஆட்டி இதனால்தான் நீ எங்கு எதை செய்தாலும் கர்மா உங்களை ஆட்டும். ஆட்டிப்படைக்கும்.  சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் சமமாக நிற்கவேண்டும் தைரியமாக. பின் அவ் கர்மத்தை நீக்கினால்தான் அப்பனே அனைத்தும் வெற்றியாகும். அதனால்தான் முதலில் கர்மாத்தை (நீக்க வேண்டும்). அதனால் சில துன்பங்கள் அதனால்தான் ஏற்படுத்துகின்றேன் என்பேன் அப்பனே. கவலைகள் இல்லை. அப்பனே யார் யார்க்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் யான் கொடுப்பேன். உங்கள் பல தலங்களைக்கூட யானே வடிவமைத்தேன் என்பேன் அப்பனே. அங்கெல்லாம் யான் நிச்சயம் வரும் காலங்களில் அப்பனே யான் எதை எங்கு எவை என்று அனைத்தும் எடுத்துரைக்கப் போகின்றேன். உலகம் அப்பனே பின் பக்திமயமாகட்டும். அதனால்தான் யாங்கள் வந்தோமப்பா. அப்பனே இப்படியே சென்று கொண்டு இருந்தால் பக்தி என்ற சொல்லுக்கு பொய் என்று ஆக விடும் என்று அப்பனே அதனால்தான் மனிதன் பல குற்றங்களை செய்து செய்து கடைசியில் பாரத்தால் அப்பனே திருடன் கூட ஒரு ருத்திராட்சத்தை அணிந்து, பின் காவி உடை அணிந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே. யான் பக்தன், எந்தனுக்கு அனைத்தும் தெரியும் பின் வாயில் வந்தவை எல்லாம் சொல்வது அப்பனே. பின் வாயில் வருவதை எல்லாம் சொல்லி பின் பணங்கள் பறிப்பது. அப்பனே இவை இருந்தால் அப்பனே இக்கலியுகத்தில் இப்படித்தானப்பா நடக்கும். அதனால்தான் நாங்கள் சித்தர்கள் விட வில்லை அப்பா. பக்தி எப்படி காண்பிப்பது எப்படி என்று வரும் காலங்களில் யாங்கள் அங்கங்கு தெரிந்து தெரிந்து காண்பிப்போம் என்பேன். அதனால் அப்பனே முதலில் அகத்தியனுக்கு எங்கு திருத்தலம் கட்ட வேண்டும் அப்பனே? சொல்லுங்கள்.

அடியவர்:- மனதில், உள்ளத்தில்

குருநாதர்:-  அப்பனே, அதை தெரிந்து கொண்டாலே போதுமப்பா. உன் ஆசைகளை யானே நிறைவேற்றி விடுவேன் அப்பனே. எந்தனுக்கு ஒன்றுமே தேவை இல்லையப்பா. இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. மனிதனாக வாழுங்கள் போதுமானது என்பேன் அப்பனே. அன்புக்கு அதற்கே யான் கட்டுப்பட்டவன். அப்பனே என்னை வைத்துக் கொண்டே அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே. அதாவது பின் என்னையும் லோபாமுத்ராவையும் அமைத்து விட்டார்கள் அழகாக. ஆனால் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான் (ஆலயம் கட்டியவர்). பின் ஆனால் பொய்களப்பா பொய்கள். வாய்க்குள் வருவதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றான் ஒருவன் அப்பனே. என்னதான் அவன் தனக்கு யான் செய்வது அப்பனே. ஆனால் கடைசியில் பார்த்தால் அகத்தியனுக்குத்தான் தொண்டு செய்தேன். ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால் எப்படியப்பா (யான்) பொறுப்பு? இதை நீ சொல்ல வேண்டும் அப்பனே. நீ அலைந்தவன். அப்பனே அதனால் நீ தான் சொல்ல வேண்டும். அப்பனே அதனால் நிச்சயம் எந்தனுக்குக்கூட சேவைகள் செய்யாதீர்கள் சொல்லிவிட்டேன். இயலாதவர்களுக்கு சேவை செய்யுங்கள் போதுமானது அப்பனே. யான் உங்களுக்காக சேவை செய்கின்றேன். அவ்வளவுதான் அப்பனே. (இதுவரை ஒற்றைக்காலில் கைகளை மேலே தூக்கி நின்ற அடியவர்களை) அப்பனே, நின்று கொண்டிருக்கின்றீர்களே நீங்கள். சேவை என்பது என்ன?

அடியவர்:- தன்னலமில்லாமல் பிறருக்கு உதவி என்று செய்யாமல் நமக்கு நாமே சேவை செய்வது.

குருநாதர்:- அப்பனே எதை என்று கூற சேவை என்பது உன் பக்கத்தில் இருப்பவன் சொல்லட்டும்.

அடியவர்:- பிறருக்கு தொண்டு செய்வது.

குருநாதர்:- அப்பனே, எதற்காக தொண்டு செய்கின்றாய்?

அடியவர்:- தேவையான உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு கொடுக்கிறது.

குருநாதர்:- அப்பனே, பிறருக்கும் சேவை செய்கின்றாய். உந்தனுக்கும் சேவை செய்கின்றாய். உந்தனுக்கும் சேவை செய்து கொண்டு இருக்கின்றாய். அவ்வளவுதான். பிறருக்கு யார் ஒருவன் சேவை செய்கின்றானோ அவன் தன் தனக்கே சேவை செய்கின்றான். தன் கர்மத்தை போக்கிக் கொள்கின்றான் என்பதே அர்த்தம் இதன் பொருள். அப்பனே கர்மத்தை நீக்க வேண்டும் என்றால் அப்பனே நல்படியாக நல் எண்ணங்கள் முதலில் வளர வேண்டும் அப்பனே. அனுதினமும் ஏதாவது உயிருக்காவது என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றால் கூட ஒருவனுக்காவது இவ்திருத்தலத்திறக்குச் செல் நலமாகும். எதாவது பின் நல்லதை பின் சொல்லிக் கொண்டிருந்தாலே (நல் சேவை/புண்ணியங்கள்) ஆனாலும் அப்பனே பின் உண்மைகள் தெரியாமல் , பொய்கள் பரப்பிக்கொண்டிருந்தாலே அதுவும் கர்மாதானப்பா. இன்றைய நிலையில் அதுபோலத்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. அதனால் அப்பனே நீங்கள் ஒன்றும் இறைவன்கள் இல்லை. உங்களால் ஒன்றும் செய்ய முடியாதப்பா. இதுபோலத்தான் மனிதன் செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. பின் அதை , இவை, யான் இறைவனுக்கே சேவை செய்பவன். இறைவனுக்கு அப்பரிகாரங்கள் செய்தால் நல்லவை நடக்கும். இவை எல்லாம் ஒரு வெற்று வேட்டுகளப்பா. பொய்களப்பா. இதனையும் கூட வரும் காலங்களில் நிருபிக்கப்போகின்றேன். அனைத்தும் தான் தன் வாழ்வதற்கே செய்து கொண்டிருக்கின்றான் மனிதன் அவ்வளவுதானப்பா. ஆனால் கர்மா சேர்கின்றது என்பது தெரியாமல் போய் விட்டதப்பா. பாவமப்பா மனிதனப்பா.

அடியவர்:-  ( மொனம் )

குருநாதர்:-  அப்பனே அதனால் உண்மை நிலை உணருங்கள். ஒருவொருவரும் எதை என்றும் அறிய அறிய யாருக்குமே உண்மைநிலை தெரியவில்லை அப்பா. அதனால்தான் உண்மை நிலை தெரிவித்திருக்கின்றேன் இன்று.

அடியவர்:- ( மொனம் )

குருநாதர்:- அதனால் உண்மையை உணருங்கள் அப்பனே. உண்மையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே. இறைவன் நிச்சயம் நிச்சயம் உன்பால் நிச்சயம் பின் வந்து உதவிடுவான் இதனால் அப்பனே  நல்முறைகளாக இன்னும் இன்னும் எதிர்பார்த்து எவை என்றும் புரியாமல் அப்பனே எதற்காக வந்தாய் இங்கு நீ?

அடியவர்:- குருநாதரை பார்த்து தரிசனம் செய்ய.

குருநாதர்:- அப்பனே, நீ சொல்லிவிட்டாய் உன்பக்கத்தில் உள்ளவனை சொல்லச்சொல்.

அடியவர்:- குருநாதர் ஆசிர்வாதம் வாங்க

குருநாதர்:- அப்பனே, என்னுடைய எப்பொழுதுமே இருக்குமப்பா உந்தனுக்கு.

அடியவர்:- கடன் ( இந்த அடியவர் கேட்ட விதம் பொதுவாக அனைவர் கேட்கும் கேள்வியாக பொருந்தும். உடனே கருணைக்கடல் அகத்தியப்  பெருமான் அளித்த அற்ப்புத பதில் கடனில் உள்ள உலகோர் அனைவருக்கும் பொருந்தும். )

குருநாதர்:- அப்பனே , தெரியாமலே கேட்கின்றேன். அனைவரையும் பார்த்தே கேட்கின்றேன். அதாவது என்னை கேட்டுத்தான் வாங்கினாயப்பா நீ? ( இங்கு நீ என்பது கடனில் உள்ள அனைவரையும் குறிக்கும் என்று உணர்க)

அடியவர்:- ( மொனம் )

குருநாதர்:- அப்பனே உன் சந்தோசத்திற்காகவே வாங்கி மீண்டும் சோம்பேறித்தனமாக கட்ட முடியாமல் மீண்டும் என்னிடத்தில் கேட்டால், யான் என்ன செய்ய வேண்டும் அப்பனே?

அடியவர்:-நீங்கதான் வழி சொல்லனும்.

குருநாதர்:- இதுதானப்பா, கர்மா செய்யும்போது யாருமே கேட்பதில்லை என்பேன் அப்பனே மனிதன். அப்பனே ஒரு முறையாவது யான் இப்படி செய்கின்றேன் என்று கேட்டானா? இல்லையப்பா. அதனால்தான், கர்மா சேகரித்துக் கொண்டு   அப்பனே அவை பலங்கள் ஆகும் பொழுதுதான் இறைவனையே நோக்கிப்படை எடுத்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். அதனால் முன்னே உணர வேண்டும். இவை பின் செய்யலாமா? வேண்டாமா? என்று அப்பனே ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே. அதனால் அப்பனே இதைக்கூட யான் பார்த்துக்கொள்கின்றேன். பொறுத்திருக!




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

Monday, December 4, 2023

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! என்று ஏற்கனவே நம் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளோம். இந்த பதிவையும் குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! என்று நாம் பகிர பல காரணங்களை நேற்று ஓதிமலை வழிபாட்டில் உணர்த்தப்பட்டோம். குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! என்ற பதிவில் நீங்கள் சென்று பார்த்தால் குருநாதரின் அருள்நிலை படங்களை காண முடியும். ஏனென்றால் குருவின் தாளினை எப்போதும் போற்ற வேண்டும் என்றால் குருவினை காண வேண்டும். அதன் பொருட்டே அப்படி ஒரு நிலையாக குருவின் தரிசனம் காண கிடைத்து வருகின்றது. இன்றைய பதிவிலும் நேற்றைய ஓதிமலை தரிசன அருள்நிலைகளை குறிப்புகளாக  இங்கே காண இருக்கின்றோம். 

வாழ வழி காட்டும் குருவை போற்றுகின்றோம். குருவின் தாளினை எப்போதும் போற்றி மகிழ்கின்றோம்.


அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டபரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியரே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!

--திருவள்ளுவ ஞானம்





2020 ஆம் ஆண்டில் தரிசனம் 



குருவருளால் நேற்றைய அந்த நாள் இந்த வருடம் ஓதிமலை யாத்திரை மிக மிக சிறப்பாக அமையப் பெற்றது.  இதற்காக எத்தனை நாட்கள் திட்டமிடல், உடல் உழைப்பு, பொருளுதவி, அருளுதவி என்று நினைத்து பார்க்கும் போது குருவின் அருளாலே குருவிந்  தாள் என்றென்றும் பணிந்து போற்றுகின்றோம். 

1. நேற்று காலை சின்னாளபட்டியில் இனிப்புடன் கூடிய அன்னசேவை - பொங்கல் காலை உணவாக 
2. நேற்றைய அன்னசேவையில் மதுரை காஞ்சனா அம்மா நம்முடன் இணைந்தார்கள் 
3. வள்ளலார் ஆசிரமத்திற்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கினார்கள் 
4. மாலை 4 மணி அளவில் ஓதிமலை அடிவாரம் 
5. சரியாக மாலை 5:08 மணி அளவில் அரோகரா கோஷம் கேட்டு கோயிலை அடைந்தோம்.
6. முதலில் மதுரை பரமசிவம் ஐயா அவர்களை சந்தித்தோம் 
7. நமக்கு தெரிந்த பல அகத்திய அடியார்களை (பெயர்களை இங்கே சொல்ல இடம் போதுமா? என்றும் அவர்களுக்கு நம் மனதில் இடம் உண்டு ) நேரில் சந்திக்கும் வாய்ப்பு 
8. 300 கந்த ஷஷ்டி கவசம் சிறு நூல்கள் கொடுக்க பணிக்கப்பட்டோம்.
9. அனைத்து அடியார்களும் ஒன்று சேர, கந்த ஷஷ்டி கவசம் பாட வாய்ப்பு 
10. ஸ்ரீ அகஸ்தியர் ,அருணகிரிநாதர், போகர் முன் கந்தர் அனுபூதி பாட வாய்ப்பு 
11. நேற்று கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ அகஸ்தியர் வழிபாடு, பூசம் அன்று வள்ளலார் வழிபாடு, 
12. நேற்று கூடுவாஞ்சேரியில் முருகப் பெருமான் வழிபாடு 
13. சில புதிய அடியார்கள் அறிமுகம். சில அடியார்கள் மாலை 6 மணிக்கு மேல் வந்து தரிசனம் செய்தார்கள் 
14. சுமார் 300 அடியார்களுக்கு மேல் நேற்றைய ஓதிமலை வழிபாடு 
15. நிறைவாக தினை உருண்டை, அவல் , பழங்கள் பிரசாதம் , திருநீறு பிரசாதம் 
16. ஓதிமலை அடிவாரத்தில் காலை அடியார் பெருமக்கள் வழங்கிய அன்னசேவை 
17. கோயிலில் அகத்தியர் அதிர்ஷ்ட தீபக் குழு மூலம் தீப வழிபாடு 
18. மாலை ஓதிமலை அடிவாரம் - இரவில் இயற்கை ஒளியில் , இயற்கை காற்றில்..அப்பப்பா..ஓதியப்பா

இது போன்று ஒவ்வொரு அருள்நிலை துளிகளையும் பற்றி பேசிக்கொண்டே போகலாம். சில காட்சிப்படங்களை கீழே இணைக்கின்றோம். 


சின்னாளப்பட்டி - வள்ளலார் கோயில் தரிசனம் 


கூடுவாஞ்சேரி -  கார்த்திகை பூசம் வள்ளலார் வழிபாடு 


கூடுவாஞ்சேரி -  கார்த்திகை ஷஷ்டி ஸ்ரீ அகஸ்தியர் வழிபாடு 


கூடுவாஞ்சேரி -  காத்திகை ஷஷ்டி முருகப் பெருமான் வழிபாடு 


ஓதிமலை தரிசனம் 


ஓதிமலையில் மூவர் ( அருணகிரிநாதர்,போகர்,ஸ்ரீ அகஸ்தியர் ) தரிசனம் 
 

ஓதியமலை அடியார் கூட்டம் 


ஓதிமலை விநாயகர் முன்பு 


கந்த ஷஷ்டி கவசம் நூல்கள் அன்பர்களுக்கு வழங்கிய போது 


ஓர் அற்புத தரிசனம் ..முருகா..ஓம் முருகா....


இடையிடையே மலையேற்றத்தில் 



அன்பர்கள் ஷஷ்டி கவசம் பாடிய போது 






 இவ்வாறு நேற்றைய ஓதிமலை யாத்திரை மிக மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் ஒரு முறை. பதிவின் தலைப்பை உள்வாங்கி கொண்டு எப்போதும் எப்போதும் 

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!

என்று போற்றி மகிழ்வோம். 



என்னை  ஆதரித்தருள்  பரம  ரகசிய  சக்தி என்னை  நம்பியோரை   ஆதரியாது நிற்குமோ    ஐயம்  வேண்டாம் - பாம்பன் சுவாமிகள்

இபதிவிலும்  குருவின் அருள் நிலையாக , முந்தைய பதிவில் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம் கண்டு, இந்தப் பதிவிலும் நிறைவாக பாம்பன் சுவாமிகள் அருளுரை கண்டு தெளிகின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

Saturday, December 2, 2023

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய சஷ்டியோடு  இணைந்த ஆயில்ய நட்சத்திர நன்னாளில் ஷஷ்டி தரிசனமாக ஓதிமலை ஓதியப்பர் தரிசனம் இன்று நடைபெற உள்ளது. மேலும் ஆயில்ய நட்சத்திர வழிபாடாக கூடுவாஞ்சேரியில் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு வழிபாடு நடைபெற்றுக் கொண்டி இருக்கின்றது. இன்றைய நாளில் மேலும் சிறப்பு பதிவாக பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! தர குருவின் உத்தரவின் பேரில் தருகின்றோம். அனைவரும் இந்த வழிபாட்டை சிரமேற்கொண்டு செய்து குருவருள் பெற்று வாழ நாமும் பிரார்த்திக்கின்றோம்.

இன்றைய ஓதிமலை தரிசனத்திற்கு வரும் அடியார்களுக்கும் நம் தளம் சார்பில் குருநாதர் படமும், கந்த ஷஷ்டி கவசம் சிறு புத்தகமும் வழங்க குருவருள் நம்மை பணித்துள்ளார்கள். மேலும் நேற்று வீட்டில் பொருட்களை சரி பார்த்துக் கொண்டு இருந்த போது, ஒரு தாளில் பித்ருக்கள் சாபம் விலக என்ற செய்தி கிடைத்து ,அதை நாமும் இணையத்தில் தேடி, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! பாடலை எடுத்து விட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானிடம் உத்தரவின் பேரில் இன்று அவற்றை பகிர்கின்றோம்.

இனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! பாடலை இங்கே பகிர உள்ளோம். அதற்கு முன்னர் சில வழிபாட்டு குறிப்புகளை அனைவரும் அறிந்து பின்பற்ற வேண்டுகின்றோம்.

பித்ரு தோஷம் நீக்கும் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்  ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய திருவிராமேச்சுரம் பாடல் ஆகும். இது நமக்கு வெளியே உள்ள பகை, நமக்கு உள்ளே உள்ள பகை (கர்மவினை) இவற்றை அழித்து பித்ருக்களின் சாபத்தையும், தோஷத்தையும் போக்க வல்லது. 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். 

முதன் முதலில் ஆரம்பிக்கும் போது உங்களின் பிறந்த நட்சத்திரம் அல்லது பிறந்த திதி வரும் நாளில் ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அல்லது அமாவாசை திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். 

முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும். அமாவாசை திதியே மிக மிக சிறப்பானது. பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். 

முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். 

நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் பூஜித்து  விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை. 

ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். 

முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று. மேலும் பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். 

ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். அன்னதானம் செய்யலாம். அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழங்களை அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு. அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும். 

முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்றும், ஒவ்வொரு அமாவாசை திதியன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது. அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள். 

தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும். அனைத்து கர்ம வினைகளும் தீரும். அனைத்துவித தோஷங்களும் நீங்கும். தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். பாராயணம் செய்த பின்பு எள் கலந்த சாதத்தை காக்கைக்கு உணவாக அளிக்கவும். வெகு விரைவில் பித்ரு தோஷம் நீங்கும். வாழ்வில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்கும். நிம்மதியும், பித்ருக்களின் அருளும் கிட்டும். நமக்கு வெளியே உள்ள பகையும், நமக்கு உள்ளே உள்ள பகையும் அழிந்து பித்ரு தோஷம் நீங்கி என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. 







நன்றி: http://mscherweroyar.blogspot.com/2008/09/blog-post_2509.html

PDF வடிவில் தரவிறக்க - https://drive.google.com/file/d/1UlRFU-ZOggnQkBv2MTe1cGjBli11agfS/view?usp=drive_link

எழும் போது வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து 
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

ஓம் சரவணபவஓம் 

சிவ சிவ ஓம்

ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html