அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்கள் அனைவரையும் இந்தப் பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நிறைய செய்திகளை உங்களோடு பகிர வேண்டும் என்று விரும்புகின்றோம்.ஆனால் சில காரணங்களால் பதிவில் தொய்வு ஏற்பட்டு விடுகின்றது. இம்மாதத்தில் மகா சிவராத்திரி வழிபாடு நிறைவில் அனைவரும் இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் குருவின் அருளால் தினசரி கூட்டுப் பிரார்த்தனை, நம் குழுவின் மூலம் குருவருளால் நடைபெற்று வரும் அறப்பணிகள் என்று தொடர்ந்து வருகின்றது. இம்மாதம் வழக்கமான சேவைகளுடன் , காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் கும்பாபிஷேகத்திற்கு பங்களிப்பு செய்துள்ளோம். இம்மாத அறப்பணிகளை
தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில்
2. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை
3. கும்பாபிஷேக திருப்பணி
4. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை
5. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு
6. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை
7. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை
8. திருஅண்ணாமலை அன்னசேவை
இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.இவ்வாறு
நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து
வருகின்றோம்.
சிவராத்திரி வழிபாடு சேவை நம் தளம் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது. இப்படித் தான் செய்ய வேண்டும் என்று மனதில் எதுவும் நினைப்பதில்லை. திட்டமிடுவதும் இல்லை. நடைபெற்ற அருள்நிலைகளை பார்க்கும் போது குருவின் அருள் கண்டு மெய் சிலிர்த்து நிற்கின்றோம்.
சிவராத்திரி வழிபாடு சேவைகள்:-
1. சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 20 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா சிறு தொகை
2. தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று போற்றப்படும் பெரிய புராணம் வழங்கிய தெய்வ சேக்கிழார் வழிபட்ட அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்கு குருவருளால் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக மாதந்தோறும் சிறு தொகை நம் தளம் சார்பில் கொடுக்க பணிக்கப்பட்டுள்ளோம். இம்மாதத்தில் சிவராத்திரி வழிபாட்டில் இணைத்துள்ளார்கள்.
இத்தகைய புண்ணிய செயலில் நம்மோடு இணைந்து பயணிக்கும் அனைவருக்கும் நன்றி
3. குருவருளால் காசியில் அன்னசேவை வணக்கம் ஐயா காசி கங்கைகரையில் கிச்சடி பாபா சன்னதியில் சாதுக்களுக்கு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் பங்கெடுத்து நன்கொடை வழங்கப்பட்டது.சிவ சிவ திருச்சிற்றம்பலம் அன்னம் பாலிக்கும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் பசிப்பிணி போக்கும் சிவன் .
4. சின்னாளபட்டி ஶ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலுக்கு கடந்த ஓராண்டாக மாதந்தோறும் நி்த்ய மலர் அலங்காரத்திற்கு சிறு தொகை கொடுத்து வருகின்றோம். இம்மாத சேவையுடன் சிவராத்திரி வழிபாட்டிற்கென பழங்கள், பூஜை பொருட்கள் நம் தளம் சார்பில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
5. குருவருளால் நேற்றைய சிவராத்திரி வழிபாட்டில் 100 சிவபுராணம் அச்சிட்டு நம் தளம் சார்பில் இரு கோயிலில் வழங்கினோம்.
6. தேனி வேதபுரியில் உள்ள ஸ்ரீ சுவாமி சித்பவானந்தா ஆசிரமத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டிற்கு சிறு தொகை வழங்கியுள்ளோம்.
சில தரிசன காட்சிகளை இங்கே இணைத்துள்ளோம்.
அடுத்து நம் குருநாதரின் தரிசனம் பெற இருக்கின்றோம்.
சிவராத்திரி வழிபாடு சேவை எப்படி தொடங்க போகின்றோம்? என்று நினைத்தோம். ஆனால் இது போன்று மிக மிக அருமையாக சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பாக நம் தளத்திற்கு அமைந்தது. இத்துடன் தினசரி வார நாட்களில் கூட்டு வழிபாடு குருவருளால் நடைபெற்று வருகின்றது.358 ஆம் நாள் கூட்டுப் பிரார்த்தனை இன்று முழுமை பெற்றது. இவை அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்று வருகின்றது. பதிவின் நிறைவாக சிவத்தை உணர வேண்டி நிற்கின்றோம்.
நம்முள் இருக்கும் சிவத்தை ஒவ்வொரு நொடியும் உணர வேண்டி குருவிடம் விண்ணப்பம் செய்கின்றோம்.
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
உலக நன்மை வேண்டி மஹாவேள்வி - சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/03/blog-post.html
No comments:
Post a Comment