அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இதற்கு முந்தைய பதிவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க, பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 09.01.2023 பற்றி அறிந்தோம். இன்றைய பதிவில் மீண்டும் ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை விழாவைப் பற்றி இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம்.இன்று தங்கள் அனைவரையும் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 11 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழாவிற்கு வருக! வருக!!என்று அழைக்க விரும்புகின்றோம்.
அகத்தியர்
ஒரு பேருண்மை. கற்பக தரு ஆவார். அகத்தீ யர் யார் என்று உணர்ந்து
பாருங்கள். நம் உள்ளத்தின் உள்ளே உள்ள அகத்தீ கொண்டு நாம் நம்மை மேம்படுத்த
வேண்டும். இந்த அகத்தீ கொண்டு உள்ளே அக்னி வளர்த்து நம் மன மாசுக்களை
பொசுக்க வேண்டும். அப்படி பொசுக்கி விட்டால் என்ன கிடைக்கும். நம்
உள்ளத்தின் ஈசன் வெளி வருவார். இது புறமாக செய்ய வேண்டிய செயல் அல்ல. இது
அக மார்க்கமாக செய்ய வேண்டும். அகத்தில் ஈசன் வெளிப்பட்டால் அந்த அகத்தீசனை
நாம் உணரலாம்.இதனையே தான் அகத்தின் ஈசனே அகத்தீசன் என்றும் சொல்வது
உண்டு.
இங்கே
அகத்தியர் அக்னி அம்சமாக உள்ளார். இவரே அதற்கு எதிர்குணமான நீர் அம்சமான
காவேரியை மணந்தார் என்பது நம் அறிவின் தெளிவாம். இதோ இந்த பதிவிலும்
நாம் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 11 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா அழைப்பிதழ் பகிர
விரும்புகின்றோம்.
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html
No comments:
Post a Comment