அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் சில வழிபாடுகள் நம் தளத்தின் சார்பில் தொன்று தொட்டு வரும் ஒன்றாகும். இதில் அந்த நாள் இந்த வருடம் வழிபாடு அமையும். இதனுடன் அவ்வப்போது சித்தர்கள் குருபூஜை இயல்பாக அமையும். தற்போதைய மாசி மாதத்தை எடுத்துக் கொண்டால் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக நாம் இணைக்கப்பட்டு வருகின்றோம்.
மாசி மாத வழிபாட்டில் மாசி
மாத மக நட்சத்திர வழிபாடு இன்றியமையாத ஒன்று. மாசி மகம் சகல தோஷமும் நீக்கும் நாள் ஆகும்.
அதிலும் நம் குருநாதரின்
அருளால் வருடந்தோறும் மாசி மகத்தன்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழாவில்
கடந்த 4 ஆண்டுகளாக நாம் கலந்து கொண்டு குருவருள் பெற்று வருகின்றோம்.இந்த
ஆண்டும் வருகின்ற 06.03.2023 திங்கட்கிழமை அன்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா
பாபநாசத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் பகிர்ந்து அனைவரையும்
வருக! வருக!! என்று இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம்.
மாசி மகம் சித்தர்களின் மஹா யாகம் -பாபநாசம்
குரு தேவர் திருவடி சரணம்!
குரு தேவர் திருவடி காப்பு!!
குரு தேவர் திருவடி போற்றி!!!
மாசி மாதம் 5 ஆம் தேதி ஆங்கில வருடம் 2022 பிப்ரவரி 17 ஆம் தேதி வியாழக் கிழமை
தலையாய
சித்தரும் மஹரிஷியும் கும்பமுனியுமானகுரு நாதரின்
பெரும்கருணையினால்,பொதிகை மலை அடிவாரத்தில் இறைவன் தன் திருமண கோலத்தை,
அம்மை அப்பர் தரிசனத்தை அகஸ்திய மஹா முனிவருக்கு நல்கிய பாபநாசத்தில்,
மேற்குறிப்பிட்ட திங்களில் சித்தர்களின் யாகம் அன்ன சேவையுடன் சீரும்
சிறப்புமாக நடைபெறுகிறது
இதன்
பொருட்டு அன்பர்களும் அடியார்களும் நண்பர்களும் அனைவரும் தங்கள் சுற்றம்
சூழ வருகை புரிந்து,இறைவன் கருணையினால் சித்தர்களின் , ரிஷிகளின்
கருணையினால் அவர்கள் அருளையும் ஆசிகளையும் அகத்திய அன்பர்கள் அனைவரும் பெற
வேண்டி அனைவரையும் வேண்டுகிறோம்.
குறிப்பு: அடியார்கள் தங்களால் இயன்ற அளவில் ஹோமத்திற்கு / அன்னதானத்திற்கு உதவிட வேண்டுகின்றோம்.
பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 அருள்காட்சிகளை காண இருக்கின்றோம்.
வாழ வழி காட்டும் குருவை போற்றுகின்றோம். குருவின் தாளினை எப்போதும் போற்றி மகிழ்கின்றோம்.
அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டபரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியரே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!
--திருவள்ளுவ ஞானம்
அண்டம் வலம் வரும் அருளே போற்றி
அறிவில் குருவாய் அமர்ந்தாய் போற்றி
அடியாரைக் காக்கும் கருணையே போற்றி
அகத்தில் சிவமாம் அகத்தீஷாய திருவடியே போற்றி! போற்றி
ஓம் அகத்தீஸ்வராய வித்மஹே பொதிகை சஞ்சாராய தீமஹி தன்னோ ஸ்ரீ ஞானகுரு ப்ரசோதயாத்
ஓம் சத் சிவமே அகஸ்தியா போற்றி
ஓம் சித் சிவமே அகஸ்தியா போற்றி
ஓம் ஆனந்த சிவமே அகஸ்தியா போற்றி ஓம் சத்சிம் ஆனந்த சிவமே அகஸ்தியா போற்றி! போற்றி
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சந்திப்போம்
No comments:
Post a Comment