"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, September 6, 2020

ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் - தவத்திரு.காட்டு சுவாமிகளின் மூன்றாம் ஆண்டு குரு பூஜை - 07.09.2020

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் அடியார் பெருமக்களின் பொருளுதவியாலும், அருளுதவியாலும் மஹாளய பட்ச தினசரி அன்னசேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அனைவருக்கும் நன்றி கூறி, இன்றைய பதிவில் குரு பூஜை பற்றிய அழைப்பிதழை பகிர்கின்றோம்.

சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது.

பாரதம் என்று சொல்வதற்கே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதிலும் தென்னாடுடைய சிவ பூமியான தமிழ்நாடு சென்று சொல்வதற்கும், இங்கே பிறப்பதற்கும் புண்ணியத்திலும் புண்ணியம் வேண்டும். ஏனென்றால் எத்தனை அருளாளர்கள் பிறப்பெடுத்த பூமி இது? நாம் தான் இந்த மகத்துவம் தெரியாமல் வீண் பேச்சு பேசி, தேடி சோறு நிதம் தின்று வீணாக பொழுதை போக்கி வருகின்றோம். பொழுதை போக்காமல், பொழுதை ஆக்க வேண்டும். இது தான் இன்று நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி ஆகும். சித்தர்கள் வழிபாடு பொழுதை ஆக்கும் வழிபாடு ஆகும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் சித்தர்களின் அருள் நிறைந்துள்ளது. சென்னை, பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருநெல்வேலி என ஒவ்வொரு ஊரிலும் சித்தர்களின் அருளாட்சி, பாடல் பெற்ற தலங்கள், இறையாசி கிடைக்கும் மலைகள் என ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் கோயம்புத்தூர் என்று பார்த்தோமானால் அனுவாவி மலை முருகன் கோயில், ஏழு மலை உச்சியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை தரிசனம், பாடல் பெற்ற தலங்களை காண முடிகின்றது. இதில் அனுவாவி மலை அடிவாரத்தில் ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் உள்ளது. இங்கே ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பௌர்ணமி யாகம், ஆயில்ய நட்சத்திரத்தில் பதினெண்சித்தர்கள் வழிபாடு என வழிபாடும், சிறப்பாக அன்னசேவையும் செய்து வருகின்றார்கள்.இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் தவத்திரு.காட்டு சுவாமிகள் ஆவார். அவருடைய மூன்றாம் ஆண்டு குரு பூஜை - 07.09.2020 நாளை நடைபெற உள்ளது.வழக்கம் போல் அழைப்பிதழ் பகிர்ந்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும்,இறையருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.





சரி..அப்படியே ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் சென்று  ஆயில்ய வழிபாடு கண்டு வருவோமா?

சென்றோம்.



ஆசிரமத்தில் உள்ளே நுழைந்தோம்.



யாகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிவன் கோயிலில் எப்படி நாம் அறுபத்து மூவரை தரிசனம் செய்கின்றோமோ, அதே போல் இங்கே அனைத்து சித்தர்களின் தரிசனம் பெறலாம்.




இங்கு மாதந்தோறும் பௌர்ணமி பூசையானது யாகம், அகத்தியருக்கு அபிஷேகம், அலங்காரம், அன்ன  தானம் என்று சிறப்பாக நடைபெற்று .




சித்தர்களின் ஜோதி தரிசனம் கண்டோம். அருட்பெருஞ்சோதி அல்லவா இது! சற்று நேரத்தில் யாகம் ஆரம்பிக்கப் பட உள்ளது.



இவர் தான் குமார் சுவாமிகள்.  இமய மலை போன்ற யாத்திரை பலமுறை சென்று வந்துள்ளார். இவர் தான் அகத்தியர் ஆசிரமத்தை பராமரித்து வருகின்றார். ஐயாவை அன்று தான் கண்டோம். பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம்.மலேசியா அகத்தியர் வனம் குழு பற்றியும் சுவாமிகளிடம் சொன்னோம்.




இதோ யஞம் ஆரம்பித்து விட்டது.





யாகத்தில் இடும் பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.இது மனதிற்கு திருப்தியாக இருந்தது.



அன்பர்கள் அனைவரும் யாகத்தில் பொருட்களை இட தயாராக இருந்தார்கள். அனைவரும் நிறைவு செய்ததும் பூராணாகுதி செய்து ,யஞம் முழுமை பெற்றது. அப்போதே அகத்தியர் தரிசனம் பெற்றோம்.


நவகோடி சித்தர்களுக்கும் இங்கே தீபாராதனை செய்யப்பட்டது.







சித்தர்களுக்கு தீபாராதனை முடிந்தவுடன், அகத்தியர் பெருமானுக்கு அபிஷேகம் என்றார்கள். நாம் சன்னதி வெளியே நின்று கொண்டிருந்தோம். உடனே சுவாமிகள் நம்மை உள்ளே  .முதல் சந்திப்பு..கூட்டத்தில் ஒருவனாக வெளியே நிற்க இருந்த நம்மை அவர் அருகிலேயே அழைத்தார் அகத்தியர். இனி அபிஷேகம் ஆரம்பம்.






பால்,தயிர், இன்ன பிற அபிஷேகங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நமக்கு இதை விட வேறென்ன வேண்டும். இதனை அருகில் நம் அப்பன் அகத்தியர் தரிசனம்.





இதோ ,அரிதிலும் அரிதான கிடைத்தற்கரிய சங்கில் பால் அபிஷேகம், இங்கு விசேஷம் என்னவென்றால் ஒவ்வொன்றையும் சுவாமிகள் விளக்கி கூறுவது தான்.





பால் அபிஷேகத்தில் சங்கு நாதம் கேட்க, நமக்கு புதுவித உணர்வு ஏற்பட்டது



சந்தன அபிஷேகம் மேலே 


                                             அன்ன அலங்காரத்தில் நம் அகத்தியர் பெருமான்





                                               விபூதி அபிஷேகமும் ஆராதனையும்

இதற்கு அடுத்து தான் நமக்கு இன்னுமொரு அபிஷேக தரிசனம் கிடைத்தது. ஆம் ..அது 108 சங்காபிஷேகம்.இது பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.அன்று தான் நேரில் பார்த்தோம். இதோ நீங்களும் கண்டு அருள் பெறுங்கள்.








அடுத்து அலங்காரமும் ஆராதனையும் தான் உள்ளது. 





அனைவரும் அலங்காரத்திற்காக காத்திருந்தோம். அட..

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை 
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர் 
சிலம்பொலி போல் பாடுகின்ற  சித்தன் தன்னை 

வெஞ்சாபமும்  இல்லை ஓர் வினையும் இல்லை

வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம் 

அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும் 
அகத்தியனை அருட்குருவை 
அகத்துள் வைப்போம்

என்று நம்மை துதிக்கும் படி அலங்காரம் இருந்தது. நீங்களும் கண்டு தரிசியுங்கள்.








இரண்டு ,மூன்று முறை சென்று தரிசனம் செய்தோம். மெய் சிலிர்த்தோம். பின்னர் அன்னதானத்தில் உணவு எடுத்துக் கொண்டு. சுவாமிகளிடம் நன்றி சொல்லி .விட்டு அங்கிருந்து விடை பெற்றோம்.

இன்னும் அனுவாவி அகத்தியர் நம்மை ஆட்கொண்டு வருவதை நம்மால் உணர முடிகின்றது.

இதோ..காணொளி வடிவில் 





அன்றைய தினம் யாம் பெற்ற தவத்திரு.காட்டு சுவாமிகள் தரிசனம் இங்கே தருகின்றோம்.



என்ன அன்பர்களே..ஒரே பதிவில் யாகம்,அபிஷேகம்,அலங்காரம் என அகத்தியர் ஆராதனை பெற்றீர்களா? அனைத்தும் குருவருளால் தான். 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை பெருவிழா - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_57.html

அன்பும் அருளும் ஓங்குக - அகத்தியர் பெருமானுக்கு ஆயில்யம் நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_18.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_15.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

 மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

2 comments: