"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, July 28, 2020

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா

அன்பார்ந்த அடியார் பெருமக்களே,

சுமார் இரண்டு  ஆண்டுகளுக்கு முன்னர,  நாம் சித்தர்கள் யாத்திரை சென்று வந்தோம். அப்போது திருஒற்றியூர் சென்ற போது, அங்கு ஏகப்பட்ட சித்தர்களின் உயிர்நிலை கோயில்களை கண்டோம். பின்னர்தான் புரிந்தது  திருஒற்றியூர் ஒரு ஆன்மிக பூமி. திருஒற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஒன்றே போதும். ஆனால் இத்தனையும் தாண்டி இன்னும் ஏகப்பட்ட சித்தர் பெருமக்கள் அருள் செய்து வருகின்றனர்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி, திருவொற்றியூர் டோல் கேட் ரோட்டில் உள்ள பரஞ்சோதி மகான் தர்கா,சங்கர மடத்துறவி மகா தேவேந்திரர் அதிஷ்டானம்,அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குபேரனால் வழிபடப்பட்ட கோவில்,தக்ஷிணாமூர்த்தி கோவில்,எண்ணூரில் பன்னண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு முத்தாரம்மன், சுயம்பு சித்தர்,பாடகச்சேரி பைரவ சுவாமிகள் அப்புடு சுவாமிகள்,ரோமச மகரிஷி சுயம்பு உருவம்,காக புஜண்டர் ஜீவசமாதி,பட்டினத்தார் சுவாமிகள் ஜீவசமாதி,வீரராகவ சித்தர் ஜீவசமாதி, குணங்குடி மஸ்தான் தர்கா என அருள் நிறைந்த ஊரே திருஒற்றியூர். காண கிடைக்க வேண்டுகின்றேன் திருஒற்றியூர் தரிசனம் !!!

வாவி எல்லாம் தீர்த்தம் மணலெல்லாம் வெண்நீறு
காவனங்களெல்லாம் கணநாதர் - பூ உலகில்
ஈது சிவலோகமென் றன்றே மெய்த்தவத்தோர்
ஓதுந் திருவொற்றியூர்

என்று பட்டினத்தார் சொல்கிறார் என்றால் சும்மாவா? மெய்யான தவம் புரிந்த புனிதர்கள் எல்லோரும் போற்றுகின்ற திருத்தலமாம் திருவொற்றியூரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவ புண்ணிய தீர்த்தங்களாம்; அந்நகர் எங்கும் பரவிக் கிடக்கும் மணல் யாவும் அவன் அணியும் திருநீறு; மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள் அனைத்துமே சிவகணங்களாகும். மொத்தத்தில் திருவொற்றியூர் சிவலோகமாகும்.

சென்ற ஆண்டு தரிசனத்தில் நாம்  ரோம மகரிஷி தரிசனம் பற்றி  மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க !  என்று ஒரு பதிவு சொல்லி இருந்தோம். அடுத்து அப்படியே பயணம் சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு முன் இதே போல் ஒரு ஒரு நிகழ்வு சாங்கு சித்தர் குருபூசை பதிவில் சொல்லி இருந்தோம். அதாவது சென்ற  ஆண்டு குருபூஜை அழைப்பிதழை இணைத்து பதிவு செய்து இருந்தோம். இந்த ஆண்டு குருபூஜை பற்றியும் நாம் அறியவில்லை. ஆனால் குருவருளால் இரண்டு வாரங்களுக்கு முன்னர், அடியார் ஒருவரின் மூலம் நமக்கு அழைப்பிதழ் கிடைத்தது. வரும் வாரம் வாய்ப்பு கிடைக்கும் போது சென்று தரிசிக்க உள்ளோம். சுருக்கமாக சித்தர்கள் மார்க்கத்தில் வழிபாடு செய்ய நாம் பற்பல புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நாம் பற்பல சித்தர்களை இங்கே அறிந்து வருகின்றோம் என்றால், நம் தளம் சித்தர்களின் அருளாசி பெற்றது என்றே கருதுகின்றோம். இதே போல் தான்   ரோம மகரிஷி தரிசனமும்.

 மலேசியாவில் இருந்து நம் அன்பர் திரு.பாலச்சந்திரன் சென்ற வாரம் வியாழக்கிழமை சென்னை வந்து இருந்தார்கள். வந்த உடனே வள்ளலார் கோயிலில் அன்னம்பாலிப்பு நடைபெற்றது.அடுத்து திருஒற்றியூர் தரிசனம், சுமார் 7:30 மணி அளவில் வடிவுடையம்மன்,பட்டினத்தார், வீரராகவ சுவாமிகள் என மணி 8 ஆனது. பின்னர் கூடுவாஞ்சேரி வர முற்பட்ட போது, மயிலாண்டவர் திருக்கோயிலுக்கு அழைத்து, திருநடை நேரம் பற்றி விசாரித்தோம்.இன்னும் 1 மணி நேரம் இருப்பது தெரிந்த உடன், நேராக அங்கு சென்றோம்.

ரோம மகரிசி தரிசனம் செய்து, அங்கிருந்த தர்மகர்த்தாவிடம் பேசினோம் உடனே அவர்  ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 11 ஆம் ஆண்டு விழா  அழைப்பிதழ் கொடுத்தார். நமக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. சென்ற ஆண்டும் இதே போல் அழைப்பிதழ் கிடைத்தது. இவ்வாண்டும் கிடைத்துள்ளது. எப்படி நமக்கு கிடைக்கின்றது? எப்படி நாம் சரியாக குருபூஜை நேரம் பார்த்து தரிசனம் செய்ய செல்கின்றோம். இதெல்லாம் நமக்கு மேல் உள்ள அந்த ஆண்டவன் கணக்கு தான். இதே போல் மற்றொரு நிகழ்வும் சென்ற வாரம் நடைபெற்றது. அதுவும் விரைவில் தனிப் பதிவாக தருகின்றோம். கொஞ்சம்  ரோம மகரிஷி பற்றி பாப்போம். அழைப்பிதம் இணைப்பில்  உள்ளது.

 இத்தகு சிறப்புமிக்க திருஒற்றியூர் தான் மயிலாண்டவர் திருக்கோவிலைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இது போன்ற கோவில் இருப்பதை யாரும் அறிய மாட்டார்கள். நம்முடைய கடமை இது போன்ற சித்தர் பீடங்கள்,பழந் திருக்கோவில்கள் இவற்றை எல்லாம் அனைவரும் அறியும் வண்ணம் மிளிரச் செய்வதே.





எத்துணையோ மகான்களும் ரிஷிகளும் வந்துபோன பூமியிது .உரோமச மகரிஷி :உரோம ரிஷி 

உரோம ரிஷி சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார். அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது.

உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது.
அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார். அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.
உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும்,

அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்,

கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம். உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. 




மகத்துவமான, விசேஷமான ரோமசமகரிஷி என்கிற மிகுந்த மகத்துவம் வாய்ந்த மாமுனிவர் தனது சக்தியின் ஒரு பகுதியை இந்த தர்மம் மிகு சென்னையில் சேமித்து வைத்துள்ளார்.


இந்திரன், பிரும்மா என அனைத்துமே தேவலோகத்தில் இருக்கும் பதவிகள். இந்த பூமியில் பிறந்து மிக அதிகமான புண்ணியம் செய்த ஆற்றல் மிக்க ஆத்மாக்களே இந்திரனாக,பிரும்மாவாக மாறுவார்கள் என்று நமது வேதாகமங்கள் சொல்கின்றன.

நமது அனைவரின் ஆயுளையும் தீர்மானிக்கும். பிரும்மாவின் ஆயுள் 7 கோடியே 20 லக்ஷம்.

ரோம பெயர் காரணம்- ரோமம் என்றால் முடி. கரடியின் உடலில் உள்ள முடியை விட இவர் உடலில் அதிகமாக முடி இருக்கும் என்று மகா பாரதம் போன்ற நூல்கள் சொல்கின்றன.

ரோம மகரிஷியின் மகத்துவம்

ஒரு பிரும்மாவின் ஆயுள் முடிந்ததும். அதாவது 7 கோடியே 20 லக்ஷம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோமச மகரிஷி உடலில் இருந்து ஒரு முடி கீழே உதிருமாம்.

ரோமச மகரிஷி அவராகவே தனது உடலில் இருந்து ஒரு முடியை கிள்ளி எறிந்தால்? அடுத்த நொடியே பிரும்மாவின் ஆயுள் முடிந்தது.

இத்தகைய பேராற்றல் மிகுந்த ரோமச மகரிஷியின் கோவில் திருவொற்றியூரில் இருக்கிறது.

திருவொற்றியூரில் உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் ரோமச மகரிஷி அருள் பாலிக்கிறார். 





மிக முக்கியமான ஒரு விஷயம். இங்கே ரோமச மகரிஷி ஜீவசமாதி அடையவில்லை.

பலகோடி பிரும்மாக்களின் ஆயுளை தனது உடலில் உள்ள முடிகளில் சுமந்து கொண்டிருக்கும் இவர் ஜீவசமாதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. சிவபெருமான் பல ஸ்தலங்களில் சுயம்புவாக தோன்றியதை போல் ரோமச மகரிஷி இந்த திருவொற்றியூரில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றினார். 


இந்த ரோமச மகரிஷியை அகஸ்திய முனிவர் வழிபட்டு இருக்கிறார்.

 ராமபிரான் வழிபட்டு இருக்கிறார்.

பல இடங்களில் ஜீவசமாதி அடைந்த காகபுஜண்ட மகரிஷி ரோமச மகரிஷியை இங்கே வழிபட்டு அதே இடத்தில் ஜீவசமாதியும் அடைந்து இருக்கிறார். மானுட ஆத்மா போல் மகான்களின் ஆத்மா ஒரே இடத்தில் முடங்கி கிடக்காது.

திருவொற்றியூரில் உள்ள சில நாஸ்திக, வேறு மதத்தை சேர்ந்த சில மாபாவிகள் ரோமச மகரிஷி கோவிலையும், கோவிலுக்கு சொந்தமான இடத்தையும் கொள்ளையடிக்க பல முயற்சி செய்தனர்.

அந்த தீய சக்திகளை ரோமச மகரிஷி தூள், தூள் ஆக்கினார்.

அப்பொழுது பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தது.

இதெல்லாம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான்.


என்ன அன்பர்களே..படிக்க படிக்க புல்லரிக்கின்றதா? இது தான் சித்தர்களின் அருள்.அவர்களின் அருளை ஒரு பதிவில் அடக்க முடியுமா? முடியவே முடியாது.இனி இந்த திருக்கோவில் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த மயிலாண்டவர் கோவிலில் அம்பாள் சன்னதி இல்லை. சிவபெருமான் மட்டும் உள்ளார். இந்த சிவ லிங்கமே காக புசுண்டர் ஜீவ சமாதி என்று சொல்லப் படுகின்றது.ரோமச மகரிஷி பஞ்ச பட்சி சாத்திரத்தை எழுதினார். அதில் "மயில் " வெகுவாக குறிப்பிடத்தக்கது.எனவே தான் இந்தக் கோவிலுக்கு மயிலாண்டவர் என்ற பெயர் ஏற்பட்டது.


 இந்த கோவில் பார்ப்பதற்கு மாடம் போல் உள்ளது. அதாவது மாட வடிவில் கோவில் உள்ளது.இந்த மாட கோவிலுனுள் ரோமச மகரிஷி அருள் பாலிக்கின்றார்.சொல்லில் வடிக்க இயலாத நிலையில் ரோமச மகரிஷி  தவ நிலையில் இருக்கின்றார்.சற்று ஏறக்குறைய 3-4 ஆதி உயரத்தில் உள்ளார்.வெகு நீண்ட ஜடாமுடியுடன் உள்ளார்.ஜடாமுடியை நன்கு உற்று பார்த்தால் சிவ லிங்கங்களை பார்க்க முடிகின்றது. மொத்தத்தில் ஜடா முடியில் இரண்டு சிவலிங்கங்களை பொதிந்து வைத்துள்ளார்.

தாடியும் அழகாய்,டிரிம் செய்து காட்சி அளிக்கின்றார்.கழுத்தில் ஒரு உருத்திராக்க மாலை அணிந்து உள்ளார்.வலது கையில் வரத முத்திரையிலும்,இடக் கையில் ஒரு சொம்பும்,கரண்டியும் கொண்டு காட்சி தருகின்றார்.இது நோய்களை தீர்க்க அருள் தரும் நிலையன்றோ? வரத முத்திரையில் எங்களின் பயம் நீக்கவும், இடக்கையில் நோய்,நொடி நீக்கும் வல்லமை கொண்ட முனி நீர் தானே !

அத்தி மரம் இந்த திருத்தலத்தின் தல விருட்சமாக உள்ளது. 





ரோம மகரிஷி - கேட்கக் கிடைத்தவை :


1. கண்ணகி அம்மன் மதுரையை எரித்து விட்டு,சென்னை வந்த போது,அவரை "வட்டப்பாறை அம்மன் " என்ற அருள் நிலையில் ரோம மகரிஷி வடிவுடையம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.மேலும் அம்மனின் உக்கிரத்தை குறைக்க,ஸ்ரீ ஆதி சங்கரர் இங்கே வந்து,ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து,சாந்த சொரூபிணியாக மாற்றியதாக தகவல்.

2. திருஒற்றியூர் ஆதிபுரீஸ்வர் கோவிலில் லிங்க பிரதிஷ்டை செய்வதற்கு,தொண்டைமான் சக்ரவர்த்திக்கு உதவினார்.


3. படம்பக்கநாதர் என்ற திருப்பெயரை  ஆதிபுரீஸ்வரருக்கு வழங்கியவர் இவரே.

4. மாசி மக நட்சத்திர நாளில், மகரிஷி சித்தர்களின் நெறிமுறைப்படி இந்த பரவெளியில் கலந்து உள்ளார்கள்.

5. உரோம மகரிஷி,இந்த உலகம் படிக்கப்பட்டது முதல் யுகயுகத்தும் வாழ்கின்ற யோகி ஆவார்

6. உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்கள்.சதுரகிரியில் இப்போதும் இருந்து அருள் வழங்கி வருவதோடு,18 சித்தர் பெருமக்களுக்கும்குருமுகமாய் இருந்து வருகின்றார்கள்(18 சித்தர்களின் பெயர்கள் ஒவ்வொரு சித்தர் வழியில் மாறுபடும் )

7. திருக்கழுக்குன்றத்தில் உள்ள "சங்கு தீர்த்தம்" இவரால் உருவாக்கப்பட்டது.

8. சதுரகிரியில் உள்ள சுயம்பு இரட்டைலிங்கங்களுக்கு சந்தன மஹாலிங்கம் மற்றும் சுந்தர மஹாலிங்கம் என்ற திருப்பெயர் இவரால் வழங்கப் பட்டது.

9. காசி விஸ்வநாதர் மனித உரு கொண்டு, இங்கே வந்து இவரை தரிசித்தார்.மகரிஷி அவரைக் கண்டு,அதன் பொருட்டு தங்கத்தால் ஆன விஸ்வநாதர் கொண்டு,திருஒற்றியூர் கடற்கரையில் சில யுகங்களுக்கு முன்பு, கோவில் காட்டினார்.அந்த கோவில் கடலிலே பல யுகங்களுக்கு முன்பு உள்வாங்கப்பட்டது.

10. ராமர் மற்றும் ராவணர் இவரை த்த்ரேதா யுகத்தில் தரிசித்துள்ளனர்.பாண்டவர்கள் துவாபர யுகத்தில் தரிசனம் செய்துள்ளனர்

11. இவரின் உடலில் இருந்து ஒரு முடி விழுந்தால் பிரம்மவின் ஆயுள் முடிவதற்கு அர்த்தம்.இது நமது கால அளவில் பல கோடி ஆண்டுகளுக்கு சமம்.தற்போது வரை சில முடிகள் விழுந்துள்ளன.

12. இவர் ராஜ ரிஷி ஆவார்.பற்பல கோவில்களை உருவாக்கியுள்ளார்.

13. தற்போது நீர் வறண்டு காணப்படும் பாலாறு,இவரால் உருவாக்கப்பட்டது.


14. மயில்,காகம்,ஆந்தை,கருடன்,சேவல் முதலிய 5 பறவைகளைக் கொண்டு பஞ்ச பட்சி சாஸ்த்திரம் உருவாக்கியுள்ளார்.

15.  ரோமம் என்றே சொல்லடா ! ரோம பிள்ளை சொல்லடா ..தலைநிமிர்ந்து நில்லடா என்ற புகழ் பெற்ற வரிகள், நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள் என்பதை நினைவூட்டுகின்றது.

16. முடிவாக, மஹாகுரு அகத்தியர் மற்றும் இடைக்காடர் இங்கே வந்து, ரோம மகரிஷியை வழிபட்டுள்ளார்கள்.

கோவில் அமைவிடம் :

#98, எல்லை அம்மன் கோவில் தெரு,திருஒற்றியூர்,சென்னை -19

எப்படி செல்வது?

திருஒற்றியூரில் உள்ள எல்லை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.முதலில் அங்கே  சென்று,அந்த தெருவிலே சுமார் 50 மீட்டர் தொலைவு சென்றால் அங்கே,பல கடை மற்றும் வீடுகளுக்கு இடையில் ஒரு கோவிலுக்கான வாயில் இருக்கும். அங்கே வழிகாட்டி பலகையும் இருக்கும்.அதனுள்ளே 3 2 அல்லது 3 வீடுகளுகள் தாண்டி சென்றால், நம் துயர் நீக்க, ரோம மகரிஷி காத்துக் கொண்டிருக்கின்றார்.

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ம் ஆண்டு விழா இன்று காலை  அருள்மிகு மயிலாண்டவர் திருக்கோவிலில் நடைபெற்றது. தற்போது உள்ள ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அனைவரும் வழிபாடு செய்துள்ளார்கள்.

இன்றைய ஆடி சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர் குரு பூசையும் நடைபெற்றுள்ளது. சுந்தரர் தரிசனம் அடுத்த பதிவில் பெறுவோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க ! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_20.html

Monday, July 27, 2020

அப்துல் கலாம் காட்டும் வழியில்...நீ நீயாக இரு!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று.

கலாம் காட்டிய வழியில் நாம் பயணிக்க இன்று கொஞ்சம் நாம் முயற்சி செய்வோமாக!

திரு.கலாம் அவர்கள் குடியரசு தலைவராக இருந்த போது தினமும் 200 மாணவர்களை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டவர். இந்தியாவை வல்லரசு ஆக்குவதையே தம் மூச்சாக கொண்டவர். திருக்குர்ஆன் எந்த அளவிற்கு தெரியுமோ அந்த அளவிற்கு வரிக்கு வரி பகவத் கீதையும் அறிந்தவர் ஆவர். மதங்கள் கடந்த மாமனிதர் என்பது இவருக்கு சாலப் பொருந்தும்.
 
நீ நீயாக இரு என்ற தலைப்பில் திரு.அப்துல் கலாம் ஆற்றிய உரையினை இங்கே பகிர்கின்றோம்.




உங்களிடம் நீ நீயாக இரு என்ற தலைப்பில் உரையாட வந்திருக்கிறேன். எண்ணங்கள் செயலாகின்றன. மேகம் இல்லாத நாட்களில் தென் வானத்தை அன்னாந்து பாருங்கள், அங்கு பிரகாசமாகத் தெரிவது தான் மில்கி வே என்ற நம் அண்டம். அந்த மில்கி வேயில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றிலும் பல்வேறு விண்மீன்கள் உள்ளன. நமது பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியன் நம்து கேலக்ஸியான மில்கி வேயை சுற்றுகிறது. மில்கி வேயே பிரபஞ்சத்தை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. நமது மில்கி வேயைப்போல் ஆயிரக்கண க்கான மில்கி வேக்கள் உள்ளன. இதைப் பார்க்கும் போது ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது.


கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி சந்திராயன் -1 திட்டத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாசா, ஜேபிஎல், இஸ்ரோ விஞ்ஞானிகளோடு நானும், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரும் கலந்து கொண்டோம். இஸ்ரோவும், நாசாவும் சேர்ந்து உருவாக்கிய எம்3(மூன் மினராலஜி மேப்பர்) என்ற சென்சார் உபகரணம் எப்படி HO/H2O தண்ணீர் படிகங்களை கண்டுபிடித்தது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விவாதித்தோம். அப்போது நாசா ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஒரு சிறப்பைப் பற்றி கூறினார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்) தனித் தனியே செய்த முயற்சியால் கண்டுபிடிக்கப்படாதது, இந்தியாவின் சந்திராயனால் சாத்தியப்பட்டது, இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சியால் எம்3 தண்ணீரை கண்டறிந்தது என்ற ஆராய்சி முடிவுகளை அறிந்த போது இந்தியாவை நினைத்து மிக்க மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தேன். 

எனவே, மாணவர்களே இந்தியாவின் அறிவியல் மாட்சிமையை உலகிற்கு பரைசாற்றும் விதமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. அது எப்படி சாத்தியமாகிறது. 

நீ நீயாக இரு. 

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும் போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.

ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான் சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது. 

அஹிம்சா தர்மம் என்ற ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அஹிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள். எனவே, ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்  வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. 

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! 

ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன்,

நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம். 

மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்க வழக்கங்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு, இந்தக்கால முறைக்கு ஏற்றாற் போல் நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்கவேண்டும். நாம் நமது முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

இந்த சமயத்தில் நான் ஓரு முறை இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றிப் பாடிய கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு இலட்சியம்.

இலட்சியம். 

நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன், 

எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், 

என் இறைவா நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன், எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன், எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக. 

இந்த கவிதையின் கருத்து என்ன? 

நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும். அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். 

எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பார்க்கிறேன். நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பதாகும். 

நான் பறந்து கொண்டேயிருப்பேன் 
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன், நான் பிறந்தேன் நற்பண்புகளுடன், நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன், நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த, நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன், 

நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க, நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன். தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம். பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன். பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். 

அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும். நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். 

நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும், கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும். 

என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும், என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம். அவரது வீட்டில் தான் மின்சாரம் இருந்தது, பரீட்சைக்குப் படிக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று தான் படிப்பேன். எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள் இருந்தாலும், ஓர் ஒற்றுமை இருந்தது. அது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பது தான். எனவே, நாங்களும் நண்பர்களாக இருந்தோம். நானும், என் நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம். 1936-40-ம் வருடங்களில் பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம். இரவில் அவரது வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாக படிப்போம். படித்து, படித்து முன்னேறினோம். பல தடைகள் எங்கள் முன்னேற்றத்தை தடுக்கவில்லை. அது எவ்வாறு முடியும். 

பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும் என்னுடைய கருத்து என்னவென்றால் உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.

 மாணவ நண்பர்களே, உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன? எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், கலெக்டர், ஆசிரியர், தொழில் அதிபராக கனவு காண்கிறீர்கள்? எத்தனை பேர் விண்வெளியில் நடக்கவும், சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் நடக்க விரும்புகிறீர்கள்? 

கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறேன், அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்களாகப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு 100 இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள். 

எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அனைவரும் கையைத் தூக்கினார்கள். எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள். அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். 

ஒரு மாணவன் இந்தியாவை 10 ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார். லஞ்சத்தை ஒழிப்பேன் என்று ஒரு மாணவி கூறினார். இன்னொரு மாணவன் - இளைய சமுதாயத்தை என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை கொடுப்பேன் என்றார். 

எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன். எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள். 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். 

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும். பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் மனஎழுச்சி கொண்ட இளைஞர்கள் தான் மிகப் பெரிய சக்தி. 

இந்தியா 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஒரு வகையில் மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின், இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். 

ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம். 

அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா. 

அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். 

அது என்னவென்றால், அதற்கு ஓரு சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி 

 கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது சிந்தனை அறிவை வளர்க்கிறது அறிவு உன்னை என்ன ஆக்குகிறது? தெரியுமா?...மகானாக்குகிறது.

கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். 

எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும். நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும். குடும்பத்தில் சாந்தி இருந்தால் நாட்டில் சீர்முறை உயரும். நாட்டில் சீர்முறை இருந்தால் உலகத்தில் அமைதி நிலவும். எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன். 

மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள். 

உள்ள உறுதி புதிய எண்ணங்களை உருவாக்கும் .உள்ள உறுதி இன்று என்னிடம் உள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது. 

இந்த உள்ள உறுதிகள் எல்லாம் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும், அஸ்திவாரம் ஆகும். இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான் என் கடின உழைப்பாலும், உள்ள உறுதியினாலும், தோல்வியை தோல்வியடையச் செய்து, வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடக்குவேன். நண்பர்களே, உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி வரும், 

யார் மூலம் வரும். நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், ந்ல்ல புத்தகங்கள் இவைகள் உள்ளத்தில் உறுதி பெற வைக்கும். அது நாம் எக்காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும், நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள். என்னால் எதைக் கொடுக்க முடியும் இளைய சமுதாயத்திற்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஒரு இளைஞர்கள் இயக்கம். "என்னால் எதைக் கொடுக்க முடியும்" அல்லது "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் உருவாக்குவது தான் அந்த இயக்கத்தின் நோக்கம். 

10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து அதை செயல்படுத்துவது தான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனதை, வீட்டை, குடும்பத்தை தூய்மையானதாக மாற்றுவோமேயானால் நாடு மாறும். 

"நான் என்றென்றைக்கும் கொடுத்துக் கொண்டே இருப்பேன்" என்ற மனநிலை நம் இளைஞர்களுக்கு வருமென்றால், அந்த மனநிலை, "எனக்கு வேண்டும், எனக்குத்தான் வேண்டும்" என்ற எண்ணத்தை சுட்டெரிக்கும். 

இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்கு தயாரா? வாருங்கள் நண்பர்களே! என்ற இணையதளத்தில் உங்களை பதிவு செய்து இந்த இயக்கத்தை வலிமையானதாக ஆக்குங்கள். நீங்கள் என்னை www.abdulkalam.com என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.

மாணவர்களுக்கான பத்து உறுதிமொழிகள் 

1. நான், எனது வாழ்க்கையில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன். நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கையிலே மேற்கொண்ட லட்சியத்தை அடைய முற்படுவேன். 

2. நான், எனது விடுமுறை நாட்களில், எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்க கற்றுத்தருவேன். 

3. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன். 

4. நான், எனது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வேன், எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வேன், எனது முதுகுளத்தூரை தூய்மையாக வைத்துக்கொள்வேன். எனது இந்த செயலால் என் தமிழ்நாடு தூய்மையாகும், இந்தியா தூய்மையாகும், மக்களின் மனமும் சுத்தமாகும், வாழ்வு சிறக்கும்.

 5. மது, சூதாடுதல் மற்றும் போதைப்பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.

 6. நான், ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன். 

7. நான், வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு ம்ற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.

 8. நான், என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளிப்பேன். 

9. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விடச் செய்வேன். 

10. நமது தேசியக் கொடியை என் நெஞ்சத்தில் ஏந்தி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்.

அன்பர்களே..மேலே சொன்ன 10 உறுதிமொழிகள் மாணவர்களுக்காக என்று எண்ண வேண்டாம். இது மனிதர்களுக்கான 10 உறுதிமொழிகள் ஆகும்.ஒரு முறை மட்டும் இந்த பதிவை படித்தால் போதாது. மீண்டும் மீண்டும் படித்தால் தான் நாம் நாமாக மாற வேண்டும் என்ற எண்ணம் நம்முள் உதிக்கும். ஆம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கின்றது. அதனை தேடி மனிதம் வளர்த்து நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்போம்.

இந்த பதிவை அளிக்க இங்கே காரணமாக இருக்கும் திரு.சுவாமிநாதன் நேதாஜி ஐயாவிற்கு நம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

யார் உண்மையான பக்தன் ? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_30.html

ஆறுவது சினமா? ஆறாதது சினமா? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_10.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2020/05/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - https://tut-temples.blogspot.com/2020/04/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - https://tut-temples.blogspot.com/2020/03/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_11.html


Sunday, July 26, 2020

அகத்தியர் கீதம் இசைந்திட்ட TUT இரண்டாம் ஆண்டு விழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தேடல் உள்ள தேனீக்களாய் குழு 2018 ஆண்டில் கொண்டாடிய இரண்டாம் ஆண்டின் நிறைவு விழாவில் நடைபெற்ற நிகழ்வின் துளிகளை இங்கே காண இருக்கின்றோம். அன்றைய தினம் நாம் குருவின் அருளால் "அகத்தியர் கீதம்" இசைத்தோம். மீண்டும் இங்கே அகத்தியர் கீதம் இசைக்க விரும்புகின்றோம். 

அகத்தியர் கீதம்

அகத்தியர் வனம் மலேஷியா குழுவும், AUM குழுவும் இணைந்து வெளியிட்டிருக்கும் ஒரு அருள் தொகுப்பு. முத்தாக 6 பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் நம்மையும் நம் கருத்தையும் கவர்ந்து உள்ளது. ஒவ்வொரு சித்த அடியார்களும், தம் பித்தம் தெளிந்து, சித்தம் மலர இந்த அருள் ஏடு உதவும். அன்பின் ஆழம், கருணையின் காருண்யம், அகத்தியரின் மாண்பு, சித்தர்களின் வரவேற்பு என நம்மை துள்ளி குதிக்க வைக்கின்றது. இத்தகு சிறப்புமிக்க அருள்தட்டினை நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழுவின் இரண்டாம் ஆண்டு விழாவில் குருவருளால் வெளியிட்டோம்.இந்த பதிவில் அகத்தியர் கீதத்தில் உள்ள பாடல் வரிகளை அனைவர்க்கும் சமர்ப்பிக்கின்றோம்.



1.துவக்க பாடல் (கருணை விழியால்)

பல்லவி

கருணை விழியால் பதமலர் தருவாய் 
சற்குரு நாதனே 
ஞானத்தின் வடிவே அருட்பெருந் சுடரே 
பொதிகை வாசனே  

யாரப்பா .. நீ கொஞ்சம் சொல்லப்பா  
ஞானப்பா .. உன் பிள்ளை நான் அப்பா 
கருணா அருணா யோகத்தை வென்றாய் 
குணநா  குமரா  இனிய தமிழால் இனத்தை காத்தாய்  

கருணை விழியால் பதமலர் தருவாய் 
சற்குரு நாதனே 
ஞானத்தின் வடிவே அருட்பெருந் சுடரே 
பொதிகை வாசனே  

சரணம் 1

தீராத வினையாவும் தீர்த்தாய் 
மாறாத இசையாவும் ஈன்றாய் 
உனைப்போல் தெய்வம் வேறொன்று யார் சொல்லப்பா  
பரமாய் அருளாய் தெளிவாய் முடிவாய் 
இசையாய் இனியாய் செயலாய் வடித்தாய் 
கதையாய் கனலாய் விடையாய் முடித்தாய் 
ஓங்கார நாத 

ஆசை கொண்டேன் அருகினில் நீ வா வா 
ஓசை கொண்டு இசை தமிழ் நீ தாராய் 
குருவே திருவே 
அருவாய் உருவாய் வருவாய் அருள்வாய் 
உன் பதமே பரமே 
தாள்பணிந்து நின்றேன் 
சரண் அடைந்து கொண்டேன் 

கருணை விழியால் பதமலர் தருவாய் 
சற்குரு நாதனே 
ஞானத்தின் வடிவே அருட்பெருந் சுடரே 
பொதிகை வாசனே  

யாரப்பா .. நீ கொஞ்சம் சொல்லப்பா  
ஞானப்பா .. உன் பிள்ளை நான் அப்பா 
கருணா அருணா யோகத்தை வென்றாய் 
குணநா  குமரா  இனிய தமிழால் இனத்தை காத்தாய் 

கருணை விழியால் பதமலர் தருவாய் 
சற்குரு நாதனே 
ஞானத்தின் வடிவே அருட்பெருந் சுடரே 
பொதிகை வாசனே    

2.புகழ்  பாடல் (ஞான ஒளியே)

பல்லவி

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமை இன்றி வேறில்லை!

மலை வாசா
குகை வாசா
அகத்தில் உறையும் ஈசா
என்னை ஆண்ட குரு நீரே .... பிரம்மம் நீரே

மொழி ஆனாய்
விழி ஆனாய்
உயிரில் உயிராய் நின்றாய்
மறு ஜென்மம் இனி ஏது ... சர்வம் நீரே

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமை இன்றி வேறில்லை!

சரணம் 1

தமிழ்மொழி முதன்மொழி இலக்கணம் படைத்தவர் நீரே ..
தமிழ் ஞானி நீரே

பண்ணிரெண்டு ஆண்டுகள் சமுத்திர தவத்தில் ஆழ்ந்தாய் ...
மா சித்தன் ஆனாய்

சுவாசம் நீரே சுகமும் நீரே
சுடரும் நீரே சுமைதாங்கியே

மாளவனை ஹரணாய் வணங்கி வந்தாய்
ராமனுக்கு பானு மந்திரம் அளித்தாய்
உத்தமனாய் வாழ்வதற்கு சரியை கிரியை யோக ஞான
பாதைகளை அமைத்து தந்த
வழி  காட்டி நீரே ... தலை வணங்கினேனே

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமை இன்றி வேறில்லை!

சரணம் 2

பொதிகை மலையை குகனிடம் பெற்றவர் நீரே ...
பின் சஞ்சாரம் செய்தாய்

திருமறை காட்டில் தரணியை சமநிலை கொண்டாய் ....
இறைக்காட்சி கண்டாய்

புகழும் நீரே அருளும் நீரே
தயவும் நீரே கருணை நீரே

ராவணனை இசையில் மீட்டி வென்றாய்
ஆழி நீரை பருகி அனைத்தும் உண்டாய்
மொட்சமது புரிவதற்க்கு பெறுவதற்க்கு அருள்வதற்க்கு
சூட்சுமத்தை தெரிவித்த வழி காட்டி  நீரே ... 
தலை வணங்கினேனே 

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமை இன்றி வேறில்லை!

மலை வாசா
குகை வாசா
அகத்தில் உறையும் ஈசா
என்னை ஆண்ட குரு நீரே .... பிரம்மம் நீரே

மொழி ஆனாய்
விழி ஆனாய்
உயிரில் உயிராய் நின்றாய்
மறு ஜென்மம் இனி ஏது ... சர்வம் நீரே

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமை இன்றி வேறில்லை!

ஞான ஒளியே
கான இசையே
ராஜ குருவே நீரே
உமை போல யார் இங்கே?

காக்கும் அரசே
பேசும் இறையே
தேவ குருவே நீரே
உமை இன்றி வேறில்லை!
உமை இன்றி வேறில்லை!



3.பாராட்டு பாடல் (அறியா பயணம்)

அனு பல்லவி

அறியா பயணம் தொடர்ந்தோமே 
நாம் இங்கே 
அழியா நிலை பெற்றோமே 
மௌன ஞானம் நீயும் அளிக்க 
கருணை விழி நீ திறக்க 
என்ன தவமோ என்ன வரமோ 
உனது பதம் சரண் அடைய 
ஈசா அகத்தீசா தரிசனம் நீ தந்தாய் 

பல்லவி

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட 
போற்றிட போற்றிட நோய் விலக 
போற்றிட போற்றிட துயர் மறைய 
அருள் பொழிவாய் குருவே 
தந்தன தந்தன கவசமாய் நின்றிட 
தந்தன தந்தன திரைவிலக 
தந்தன தந்தன ஞானத்தை பெற 
ஒளியாய் மாறினோம் 

அறியா பயணம் தொடர்ந்தோமே 
நாம் இங்கே 
அழியா நிலை பெற்றோமே 

அறியா பயணம் தொடர்ந்தோமே 
நாம் இங்கே 
அழியா நிலை பெற்றோமே

சரணம் 1

குரு நான் என்று அறிமுகம் செய்தவர் 
ஊழ்வினையை அறிய செய்தாய் 
யாகம் அதில் சுடர் ஒளியாய் 
வினையாவும் நீயே ஏற்றாய் 

ஞானம் அது வழங்கிட வந்தவர் 
ஞான கோட்டம் வந்தமர்ந்தாய் 
அன்னம் இட அமுத சுரபியாய் 
பசியாவும் தீர்த்தாய் 

இவ் வாழ்வின் பயன் கண்டோம் 
இனி ஏது துயரம் அப்பா 
உந்தன் நாமம் இங்கு சொல்ல சொல்ல 
மனம் சாந்தம் நிரம்பி இங்கு வழியுதே 

அட உன்மேலே ஆசை அப்பா 
என் மெய் எல்லாம் குளிர்ந்ததப்பா  
மதி நிறைந்து ஒளிர்ந்ததப்பா 
நீயே பரமானந்தம்

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட 
போற்றிட போற்றிட நோய் விலக 
போற்றிட போற்றிட துயர் மறைய 
அருள் பொழிவாய் குருவே 
தந்தன தந்தன கவசமாய் நின்றிட 
தந்தன தந்தன திரைவிலக 
தந்தன தந்தன ஞானத்தை பெற 
ஒளியாய் மாறினோம் 

சரணம் 2

ஓர் மகனாய் உன்னிடம் வந்தேன் 
சாலோக்கிய நிலை அறிந்தேன் 
சரியை பின் கிரியை உணர்ந்தேன் 
சாமீப்பியமாக நின்றாய் 

யோகத்தால் அமுதம் பரவிட 
சாரூப்பிய படி அடைந்தேன் 
ஞானத்தின் கதவு திறந்திட இனி 
சாயுச்சியம் எந்நாளோ  

இந்நிலையை நான் அடைய 
சற்குருவாய் வந்தாய் அப்பா 
உன்தன் அழகை இங்கு ரசிக்க ரசிக்க 
மனம் பரவசமாகி மகிழுதே 

அட உன்மேலே ஆசை அப்பா 
என் மெய் எல்லாம் குளிர்ந்ததப்பா  
மதி நிறைந்து ஒளிர்ந்ததப்பா 
நீயே பரமானந்தம் 

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட 
போற்றிட போற்றிட நோய் விலக 
போற்றிட போற்றிட துயர் மறைய 
அருள் பொழிவாய் குருவே 
தந்தன தந்தன கவசமாய் நின்றிட 
தந்தன தந்தன திரைவிலக 
தந்தன தந்தன ஞானத்தை பெற 
ஒளியாய் மாறினோம் 

அறியா பயணம் தொடர்ந்தோமே 
நாம் இங்கே 
அழியா நிலை பெற்றோமே 
மௌன ஞானம் நீயும் அளிக்க 
கருணை விழி நீ திறக்க 
என்ன தவமோ என்ன வரமோ 
உனது பதம் சரண் அடைய 
ஈசா அகத்தீசா தரிசனம் நீ தந்தாய் 

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட 
போற்றிட போற்றிட நோய் விலக 
போற்றிட போற்றிட துயர் மறைய 
அருள் பொழிவாய் குருவே 
தந்தன தந்தன கவசமாய் நின்றிட 
தந்தன தந்தன திரைவிலக 
தந்தன தந்தன ஞானத்தை பெற 
ஒளியாய் மாறினோம் 

4.தாலாட்டுப் பாடல் (பாடவந்தேனே)

பல்லவி

பாடவந்தேனே கண்ணுறங்காயோ அகத்தீசனே
நாடிவந்தேனே நின் கருணை வேண்டிட எந்தன் ஈசனே
ஆரிரோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலாலோ தாலேலாலோ
அம்மாவின் கதைகேளு ஆரிராரோ
கண் மூடி நீ தூங்கு தாலேலாலோ

பாடவந்தேனே கண்ணுறங்காயோ அகத்தீசனே
நாடிவந்தேனே நின் கருணை வேண்டிட எந்தன் ஈசனே

சரணம் 1

தனிமையில் நீ ஓய்ந்திட
தாயாய் நான் வந்திட ......

தனிமையில் நீ ஓய்ந்திட
தாயாய் நான் வந்திட ...... மகனே வா...

மகனே வா.. என் மடியில் சாய்ந்திடு
உன் கண்ணீரை நான் துடைப்பேன் வந்திடு

குகன் வந்து கூறிட
தாய் பற்றை உணர்த்திட
இறை பெற்ற குழந்தையாய்
நீயே ஆனாய்

வட திசை உயர்ந்திட
தெற்கே நீ சென்றிட
சதுர் யுகம் கண்டிட
மாமுனியே நீ தூங்கு .....பாடவந்தேனே...

பாடவந்தேனே கண்ணுறங்காயோ அகத்தீசனே
நாடிவந்தேனே நின் கருணை வேண்டிட எங்கள் ஈசனே

சரணம் 2

தர்மத்தின் வழி சொல்ல
கர்மத்தை போக்கிட ....

தர்மத்தின் வழி சொல்ல
கர்மத்தை போக்கிட .... தவசீலா.......

தவசீலா... கானத்தில் மயங்கிடு
அழகா நீ கண்டிமூடி தூங்கிடு

உன்னை கண்டு கொண்டிட
மனதினில் நீ நின்றிட
நினைவினில் தோன்றிட
நீயே வந்தாய்

குறை ஒன்றை கூறிட
வரம் ஒன்று தந்திட
கரு என்னுள் மலர்ந்திட
நீயே என் மகனாக ... ஏங்கி நின்றேனே


பாடவந்தேனே கண்ணுறங்காயோ அகத்தீசனே
நாடிவந்தேனே நின் கருணை வேண்டிட எந்தன் ஈசனே
ஆரிரோ ஆராரோ ஆரிராரோ
தாலேலோ தாலாலோ தாலேலாலோ
அம்மாவின் கதைகேளு ஆரிராரோ
கண் மூடி நீ தூங்கு தாலேலாலோ

... அகத்தீசனே .... எந்தன் ஈசனே

5.மூல மந்த்ரா


ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே 
சாப பாவ விமோச்சனம் 
ரோக அகங்கார துர் விமோச்சனம் 
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் 
சற்குருவே ஓம் அகஸ்திய கிரந்த கர்த்தாய நம


6.பாஜன் பாடல் (18 சித்தர் பாஜன்)

1.ஓம் நம ஓம் ஓம் நமஹ 
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ அகத்தியர் ஐயா ம் நம ஓம்  
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

2.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ வால்மீகி ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

3.ம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ கருவூரார் ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

4.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ மச்சமுனி ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

5.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ திருமூலர் ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

6.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ கமலமுனி ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

7.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ கோரக்கர் ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

8.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ தன்வந்த்ரி ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

9.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ சிவவாக்கியர் ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

10.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ காலாங்கி ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

11.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ பதஞ்சலி ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

12.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ கொங்கணர் ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

13.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ பாம்பாட்டி ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

14.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ குதம்பை ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

15.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ போகர் ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

16.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ புலிப்பாணி ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

17.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ இடைக்காடர் ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 

18.ஓம் நம ஓம் ஓம் நமஹ
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ சுந்தரானந்தர் ஐயா ம் நம ஓம்
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா 
அருள் புரிந்திட வருவாயா
அருள் புரிந்திட வருவாயா 

ம் நம ஓம் ஓம் நமஹ 
ம் நம ஓம் ஓம் நமஹ 
ஸ்ரீ அகத்தியர் ஐயா ம் நம ஓம்  
அருள் புரிந்திட வருவாயா 

அகத்தியர் கீதத்தை காணொளியில் காணலாமா?








மீண்டும் மீண்டும் அகத்தியர் கீதம் கேளுங்கள். நம் குருநாதர் தாள் பற்றி, போற்றுங்கள்.
 

மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html


தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html