"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, July 31, 2019

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி!

  முருகன் அருள் முன்னிற்க!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம்.  ஆடி அமாவாசை அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை மோட்ச தீப வழிபாட்டிற்கும் நாம் ஏற்பாடுகள் செய்துவிட்டோம். முருகப் பெருமான் இன்னும் நம்மை அகத்தியம் பேச,எழுத, படிக்க வைக்கின்றார். மீண்டும் கோடகநல்லூர் பதிவை மெருகேற்ற விரும்புகின்றோம். ஜீவ நாடி அற்புதங்கள் மீண்டும் மீண்டும் படித்தால் தான் சித்தர் பெருமக்கள் நமக்கு உணர்த்தும் உன்னத நிலை புரியும்.



நமக்கு கிடைத்த ஜீவ நாடி அற்புதங்களை, பொது வாக்குகளை இங்கே உணர்த்த விரும்புகின்றோம்.

 நாடியை பற்றி தெரிந்தவர்கள் நிறைய பேர். தமிழ்நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் உண்டு!  அதில் ஒன்று தான் நாடி.  இது நமது எதிர்காலத்தை அல்லது கடந்தகாலத்தை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள சித்தர்களால், நமக்காக எழுதிவைக்கபட்டவை.  இது மிகவும் அற்புதமானது. நாடியிலிருந்து வரும் விளக்கங்களை, பரிகாரங்களை செய்து தங்கள் வாழ்க்கையை சரி செய்து கொண்டவர்கள், ஆரோகயத்தை, அமைதியை வாழ்வில் திருப்பி பெற்று கொண்டவர்கள் ஏராளம். சரி! சித்தர்கள் யார்?

முக்காலத்தையும் அறிந்தவர்கள். ஞானிகள்.  ஒரு கம்பெனி தலைவருக்கு செக்ரட்டரி போல, இறைவனுக்கு தூதுவர்கள். இறைவனை பிரார்த்தனை செய்தும் நற்காரியம் எதுவும் பெறாத பக்தர்கள் பலர், இவர்களை நாடி வந்து, இவர்கள் மூலம் நன்மை பெற்றவர்கள் ஏராளம்.  இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் நடப்பதாக தெரியவில்லை.

ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்."


இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார். அடுத்த வினாடியே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஓலை சுவடி மூலம் பாவத்தை தீர்க்க, கஷ்டங்களை போக்க, வியாதி கொடுமைகளை போக்க, குடும்பத்தில் காணப்படும் பிரமஹத்தி தோஷம் போக்க வழிமுறைகளை செந்தமிழ் பாட்டில் எழுதி வைத்து விட்டார்கள்.  இப்படி அவர்கள் எழுதி வைத்த ஓலை சுவடிக்கு பெயர் தான் "நாடி". நம் பிரச்சனைகளை தீர்க்க நாம்தான் சித்தர்களை தேடி போகவேண்டும்.  அவர்களாக வரமாட்டார்கள்.



 சமீபத்தில், அகத்தியப் பெருமான், இறைவன் உத்தரவால், தன் சேய்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்காக, ஒரு அருள் வாக்கை அருளியுள்ளார். ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, ஒலிநாடாவிலிருந்து, முக்கியமான விஷயத்தை, சுருக்கமாக, அடியேன் புரிந்து கொண்ட வரையில் கீழே தருகிறேன்.
ஆனிமாத முடிவில் ஏற்பட்ட, சந்திர கிரஹணத்துக்குப்பின், நல்லதை செய்கிற ஏழு கிரஹங்களும், ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனுடன், பஞ்ச பூதங்களும், அந்த இரு கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இது, கார்த்திகை மாதம் முடியும் வரை தொடரும். இந்த காலகட்டத்தில், நிறைய அனிச்சையாக, சம்பவங்கள் நடக்கும். மனித மனதை, எண்ணங்களை விஷப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்துக்குள், பொது வாழ்க்கையில், வேண்டாத விஷயங்களை நடத்திவைக்கும். இது, பக்தி மார்கத்தில், சித்த மார்கத்தில், மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும் தடுமாற வைக்கும். தேவை இல்லாத கெட்ட பெயர், பேச்சு, தூற்றுதல், போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கும். இவ்வுலகில், நடக்கும் அனைத்தும் இறைவன் அருளால் நடப்பதால், எவ்வளவோ பக்குவத்துடன் இருந்தாலும், சேய்கள் மனம் கலங்கத்தான் வேண்டிவரும். ஆகவே, இறைவன் உத்தரவால், அனைத்து சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும், அனைத்து ஆத்மாக்களையும், இந்த நேரத்தில், அருகிலிருந்து, வழி நடத்தி, காப்பாற்ற அனுப்பப்பட்டுள்ளனர். நாம் காப்பாற்றப்பட்டு, வழி நடத்திட, என்ன செய்ய வேண்டும் என ஒரு வழியையும் அகத்தியப் பெருமான் அருளியுள்ளார்.
இறைவனை, ஜோதி ரூபமாக, (அதுவே கல்யாணக் கோலம்), தினமும் காலையிலும், மாலையிலும் அவரவர், வீட்டில் ஒரு விளக்கேற்றி வைத்து, முடிந்தவரை, குறைந்தது ஒரு நாழிகையாவது, த்யானம் செய்யச் சொல்கிறார். நடப்பது எதுவாயினும், மனதுக்கு பிடிக்காததாக இருந்தாலும், பொறுமையை கைபிடித்து, பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற திடமான நம்பிக்கையில், இறைவனிடம் அர்ப்பண மனோபாவத்துடன் இருக்கச்சொல்கிறார்.

இந்த செய்தியை நம் அன்பர்களுக்கு ஏற்கனவே பகிர்ந்தோம். சென்ற வாரம் ஒரு அகத்திய அடியார் நம்மை அழைத்து தொடர்ந்து மூன்று நாட்களை தீப வழிபாட்டை செய்ததாகவும், அதனால் தமக்கு ஏற்பட்ட நல்வழியைப் பற்றியும் கூறினார். அனைத்தும் குருநாதருக்கு சமர்ப்பணம் என்று அவரிடம் தெரிவித்தோம்.

நம் தளத்தைப் பொறுத்த வரை நம் குருநாதர் அருளினால் நமக்கு கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷம் மோட்ச தீப வழிபாடு. இன்றைய வழிபாட்டோடு முதலாம் ஆண்டை நிறைவு செய்கின்றோம்.ஓராண்டு நிறைவில் எத்துனைஅடியார்கள் நம்மிடம் அன்பால் இணைந்துள்ளார்கள்.  

ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! என்று பதிவின் தலைப்பில் நாம் நம்முடைய குருநாதரை போற்றுவோம். தினமும் உங்களுடைய வழிபாட்டில் இந்த போற்றியை சேர்க்கவும். இது நந்தியெம்பெருமான் அகத்தியரை பற்றி கூறியது. இந்த போற்றியை வைத்துக் கொண்டே அகத்தியம் பேசலாம். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அனைத்திற்கும்  மூலம், ஆதாரம் ஓம். எனவே எந்த மந்திரமாக இருந்தாலும் ஓம் என்று தொடங்குவார்கள். ஏகமாய் என்றால் ஒன்றாக என்று பொருள் கொள்ளலாம். வேறெந்த நிலையில் நிற்காது ஒரே நிலையில் இருத்தல் என்று கொள்ளலாம். எங்கே நிற்க வேண்டும்? என்று கேட்டால் சிவசாயுச்சியம் என்ற நிலை. அப்படி நின்றவர், நின்று கொண்டிருப்பவர் நம் குருநாதர். அந்த பரம்பொருளின் நிலையை சிவசாயுச்சியம் என்று கொள்ளலாம். அந்த பரம்பொருளே நம் குருநாதராக உள்ளார். எவ்வளவு உயர்ந்த நிலை இது? இந்த நிலையில் நாம் நிற்க நம் குருநாதரை வேண்டுவோம். சிவசாயுச்சியம் நிலையில் இருக்கும் போது படித்தவன்,படிக்காதவன், உயர்ந்தவன்,தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், ஆண்,பெண் போன்ற எந்த வேறுபாடும் இருக்காது. உள்ளிருக்கும் ஆன்மா பற்றி மட்டும் தான் நம்மால் சிந்திக்க முடியும். நாமும் சிவசாயுச்சியம் பற்றிட, அவரின் போற்றியைப் போற்றுவோம்.

ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி!
ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி!
ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி!


இன்றைய தின அகத்தியர் வாக்கு :

கேள்வி : கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?

அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :

கலி என்றால் துன்பம் என்று ஒரு பாெருள். அலுப்பிலும், சலிப்பிலும், விரக்தியிலும் ஒரு மனிதன் கூறுவது "கலி முற்றிவிட்டது" என்று. கலி காலம் என்பது தனியான ஒரு காலம் அல்ல. த்வாபர யுகத்திலும், திரேதா யுகத்திலும் கலி இருந்தது. எல்லா காலத்திலும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் எந்த காலம்? அங்கே பலர் அறிய ஒரு பெண்ணை துகில்(ஆடை) உரியவில்லையா?

எனவே, எல்லா காலத்திலும், மனிதரிடம் உள்ள தீய குணங்கள் வெளிப்பட்டு காெண்டுதானிருக்கும். அதற்கு ஆதாரவாகத்தான் அசுர சக்திகள் எப்பாேதும் செயல்பட்டுக் காெண்டே தான் இருக்கும். அதனால்தான் தவறான வழியில் செல்பவர்களுக்கு, செல்வம் அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள் உதவி செய்கின்றன.

நாங்கள்(சித்தர்கள்) அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான் நல்வழியில் செல்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். உடனடி லாபம், ஆதாயம் பெற, தீய வழியில் செல்லக்கூடாது என்று நாங்கள் பலமுறை கூறுகிறோம். எனவே, இந்த நல்ல எண்ணங்களும், நல்ல செய்கைகளும், எத்தனை துன்பங்கள் இருந்தாலும், நன்மைகளை விட்டு விடாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதரிடம் இருக்க இருக்கத்தான், அந்த தீய சக்தியின் அட்டூழியங்கள் குறையும்.

இல்லை என்றால் "கலி முற்றி விட்டது. கலி காலத்தில் இப்படி தான் வாழ வேண்டும்" என்று இவனாகவே வேதாந்தம் பேசி, தவறு மேல் தவறு செய்து கொண்டே போனால், முதலில் அது இன்பத்தை காட்டி, முடிவில் முடிவில்லா துன்பத்தில் ஆழ்த்தி விடும். எனவே கலி முற்றி விட்டது என்பது எப்பொதுமே பேசக்கூடிய ஒரு வழக்கு சொல்தான்.

கேள்வி : மற்ற சமயங்கள் பற்றி :

அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :

பிற ஜீவனுக்கு ஹிம்சை செய்யாதே என்றால் நீ அந்த பிரிவில் இருந்து காெண்டுதான் அவ்வாறு இருக்க வேண்டுமா? எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாமே? அதற்கு எதற்கு ஒரு பிரிவு, மதம்? மதம் என்பது என்ன? மனிதனை மிருகமாக்காமல் வாழும் போதனைகளை எல்லாம், பிற்காலத்திலே யாரெல்லாம் அதை பின்பற்றுகிறார்களோ  அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது. எனவே நீ எந்த மதம் என்று கூறுவது கூட தவறு.

நீ எந்த பிரிவில் இருந்தாலும், இருந்து கொள். மனித நேயம், மனித அன்பை பாேதிப்பதற்காகத்தான் பெரிய ஞானிகள் பாடுபட்டார்கள். எனவே கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகின்ற எந்த விஷயமும் காலப்பாேக்கில் நிர்மூலமாக்கப்படும். இது நல்லவைக்கும், தீயவைக்கும் பொருந்தும். எனவே நல்ல விஷயத்தை கூட சர்வ சுதந்திரமாக அவனே உணர்ந்து செய்யும் போதுதான் அந்த பிரிவிலே தொடர்ந்து வாய்ப்புகள் இருக்கும்.

அதே போல் , பொருளாதார தேவைக்காகவும், அச்சுறுத்தலுக்காகவும் பிரிவுக்கு பிரிவு தாவுகின்ற நிலைமை எல்லா காலத்திலும் உண்டு. இவையெல்லாம் காலப் போக்கிலே ஏற்றமும், இரக்கமும், கருத்து மாற்றத்தோடும் இருப்பது மனிதனின் குணாதியத்தை பொறுத்துதான். எனவே அதனால், அதிலுள்ள கோட்பாடுகளுக்கு அழிவு என்பது இல்லை.

 குரு திருவடி சரணம்! சரணம்!

 ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

மேற்கண்ட அருள்வாக்கு அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பொது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).

குருவின் தாள் பணிந்து மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


8 comments:

  1. Replies

    1. குருவே சரணம்.தங்களின் வருகைக்கு நன்றி ஐயா

      ரா.ராகேஷ்
      கூடுவாஞ்சேரி

      Delete
  2. ஒரு நல்ல தகவலை பதிவிட்ட திரு. ராகேஸ் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி ஐயா

      ரா.ராகேஷ்
      கூடுவாஞ்சேரி

      Delete
  3. ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி! போற்றி!!

    ReplyDelete
    Replies
    1. குருவே சரணம்.தங்களின் வருகைக்கு நன்றி ஐயா

      ரா.ராகேஷ்
      கூடுவாஞ்சேரி

      Delete
  4. Very nice thanks again for your message update valuable

    ReplyDelete
    Replies
    1. குருவே சரணம்.தங்களின் வருகைக்கு நன்றி ஐயா

      ரா.ராகேஷ்
      கூடுவாஞ்சேரி

      Delete