"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 28, 2019

நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம்

அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

சென்ற ஆண்டு புரட்டாசி மாதம்  ஞாயிற்றுக்கிழமை அன்று நம் TUT குடும்பத்தின் உழவாரப்பணி பனப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி என்று அறிவித்ததும் நம் நல விரும்பிகள் "ரெட் அலெர்ட்" என்று கூறி நம்மை எச்சரித்தனர். நாம் அன்றைய தினம் காலை மழையின் தீவிரம் பார்த்து மேற்கொள்ளலாம் என்று நினைத்தோம். முருகன் அருளால் "ரெட் அலெர்ட்" ஆனது நமக்கு "கிரீன் அலெர்ட் " ஆக நமக்கு கொடுக்கப்பட்டது. அன்றைய தினம் அருமையான தரிசனமும் வாய்க்கப் பெற்றது. நேற்று மோட்ச தீப வழிபாடு பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். புது புது அன்பர்கள் கலந்து கொண்டு TUT குழுவில் புது புது அர்த்தங்களை சேர்த்துள்ளார்கள். வெகு விரைவில் மூன்று நிகழ்வுகளின் பதிவுகளை நம் தலத்தில் அளிக்க குருவருள் வேண்டுகின்றோம்.

நவராத்திரி விழா வருகின்ற ஞாயிற்றுக் கிழமை முதல் கொண்டாடப்பட உள்ளது. இன்றைய நாள் முருகனருள் பெற நாம் இங்கு சிந்திப்போம். எந்த ஊர் முருகன்? வேறு யார்? நம் வல்லக்கோட்டை முருகப் பெருமான் தான்.நம் குழுவில் உள்ள திரு ஆதி ஐயா அவர்களின் தொடர்பினால் நேற்று நமக்கு முருகனின் அருள் பிரசாதம் கிடைத்தது. நம் குழுவினரும் நம்பிமலை சென்ற போது அருமையான தரிசனத்தை திருச்செந்தூரில் பெற்றார்கள். இதற்கும் வல்லக்கோட்டை முருகன் குழுவினரே காரணம். நாம் இன்னும் நேரில் சென்று தரிசனம் பெறவில்லை. எப்போ அழைப்பாரோ என்று ஏக்கத்துடன் வல்லக்கோட்டை முருகன் தரிசனம் பெற உள்ளோம்.

வல்லகோட்டை என்ற இடம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. வல்லக் கோட்டை ஆலயம் சென்னை நகரின் புறப் பகுதியான தாம்பரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீபெரும்புதூரின்  தெற்குப் பகுதியில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழித் தடத்தில் உள்ளது. அருணகிரிநாதர் இயற்றியப் பாடல்களில் வல்லக் கோட்டையை கோட்டை நகர் , கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி , மற்றும் கோட்டை என்றெல்லாம் கூறி உள்ளார். அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி இருந்தாலும் அந்த ஆலயத்தை வல்லக்கோட்டை என்றே தற்போது அழைக்கின்றார்கள். அந்த ஆலயத்திற்கு அந்தப் பெயர் வந்ததற்கான பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் ஒரே ஒரு காரணம் மட்டும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வல்லக் கோட்டைக்கு அருகில் உள்ள திருப்பட்டியில் ஒரு முருகன் ஆலயம் வல்லம் என்ற பெயரில் இருந்தது. அதனால்தான் அந்தப் பெயரையும் சேர்த்தே பண்டையக் கால மக்கள் வல்லம் என்ற இருந்த இடத்தில் உள்ள கோட்டை என்பதை மருவி வல்லக்கோட்டை என அழைத்தார்கள். எது எப்படி இருந்த போதிலும் முருகனுக்கு ஆலயம் அமைத்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இருந்த அருணகிரிநாதரின் காலத்துக்கும் முன்பே அந்த ஆலயம் இருந்து இருக்க வேண்டும் என்பதின் காரணம் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் தான் இயற்றிய ஏழு பாடல்கள் மூலம் கூறி உள்ளார். (பாடல்கள் 707 முதல் 713 வரை, பாகம்-4 . அருணகிரிநாதரின் திருப்புகழ்: வெளியிட்டோர் சைவ சித்தாந்தக் கழகம்)

அந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் முக்கியமாக நிற்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ள வள்ளி மற்றும் தெய்வானை பல்லவ நாட்டுக் கலைவண்ணத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து உள்ளது. சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு பல்லவர்கள் பல இடங்களிலும் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். ஆராய்ச்சியில் கிடைத்த ஆவணங்கள் மூலம் கோட்டை நகரில் உள்ள வல்லம் ஆலயமும் அவற்றில் ஒன்று எனத் தெரிகின்றது. பல்லவர்களின் சிற்பக் கலை எப்படி இருந்தது என்றால் அவர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே பாறைகளைக் குடைந்து , அதில் இருந்த பாறைகளின் மீதே சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை செதுக்குவதற்கு கற்களையோ, ஜல்லிகளையோ அல்லது மற்ற எந்த விதமான உலோகங்களையோ அவர்கள் பயன்படுத்தவில்லை. அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் சிற்பங்களை எப்படி வடிவமைத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் வல்லக்கோட்டை ஆலயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு வலுவான காரணம்,அந்த குகை சிற்பங்களை செய்ய பயன்படுத்தியதாக கூற அப்படிப்பட்டப் எந்தப் பொருட்களுமே ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரைக் கிடைக்கவில்லை. பழுதடைந்து இருந்த ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு விட்டதினால் அங்கு பக்தர்களும் பெருமளவில் வருகின்றார்கள் என்பதில் இருந்தே அந்த ஆலயம் எந்த அளவு மகிமைப் பெற்று இருந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும் .

 'தனி நபர்களின் நன்கொடையினால் மட்டும் அந்த ஆலயத்தை புதுப்பிக்க முடியாது. அதற்கு பெரும் அளவு நன்கொடைகள் வேண்டும்' என்பதினால் கிருபானந்தவாரியார், மயிலை ரத்னகிரி முருகன் அடிமை ஸ்வாமிகள் மற்றும் சுவாமி ராமதாஸ் போன்றவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு அதைப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் செய்தார்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் பாடி உள்ளார் என்பதினால் அந்த ஆலயம் நிச்சயமாக எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அவர் அந்த ஆலயம் உள்ள இடத்துக்கு சென்றபோது அந்த ஆலயத்தின் தல விருத்ஷமான பாட்டரி என்ற மரத்தின் அடியில்தான் அவர் முருகனின் அருளைப் பெற்றார். அப்போது ஆலயம் போன்று தோற்றம் தரும் எதுவுமே அங்கு இல்லை.


இலஞ்சி  ராஜ்யத்தின் மன்னனான பகீரதன் என்பவனே அந்த ஆலயத்தை நிர்மாணித்து உள்ளார். ஆனால் அந்த மன்னன் ஆண்ட காலம் என்பது தெரியவில்லை. அவர்தான் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனா என்பதும் தெரியவில்லை. இலஞ்சி என்பது மிகச் சிறிய ராஜ்ஜியம். அப்படி என்றால் அத்தனை தொலைவில் இருந்து அவர் ஏன் இங்கு வந்து பல்லவர்கள் ஆண்ட பூமியில் ஆலயத்தை நிர்மாணித்து இருக்க வேண்டும்? அதற்கு ஸ்தல புராணத்தில் விடை உள்ளது. பகீரதன் மிகவும் கர்வம் பிடித்தவன். ரிஷி முனிவர்களை மதித்தது இல்லை. ஒருமுறை நாரதர் அவனிடம் வந்தபோது அவரை உட்காரச் சொல்லாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டானாம். அதனால் நாரத முனிவர் வருத்தம் அடைந்தார். அப்போது எதிர் திசையில் இருந்து கோரன் எனும் அசுரன் பெரும் படையுடன் வந்து கொண்டு இருந்தான். நாரதரைக் கண்ட அவன் எந்த விதமான கர்வமும் இன்றி அவர் அருகில் சென்று அவரை வணங்கினான். ஆகவே அவன் மூலமே பகீரதனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என நாரதர் எண்ணினார்.

கோரனிடம் நாரதர் அந்த பெரும் படையுடன் அவன் எங்கு செல்கிறான் எனக் கேட்க அவனும் தான் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய உள்ளதினால் அதற்கு முன் நூறு மன்னர்களை வெல்ல வேண்டி உள்ளது என்றும் அதற்காக அவன் படையுடன் செல்வதாகக் கூற, அதைக் கேட்ட நாரதர் அவனை இலஞ்சி நாட்டு மன்னன் மீது படையெடுத்து அவனை வென்றப் பின் பின் மற்ற நூறு மன்னர்களையும் வென்று அஸ்வமேத யாகத்தை நடத்துமாறுக் கூற அவனும் நாரதரின் அறிவுரையை ஏற்று பகீரதன் மீது படை எடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள பகீரதனும் நாட்டை விட்டு தப்பிச் சென்று என்ன செய்வது எனப் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். ஒருநாள் வழியில் அவன் நாரத முனியைக் கண்டான். ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த அவமரியாதைக்கு மன்னிப்புக் கோரி அவரை தனக்கு உதவுமாறு வேண்டினான். அப்போது அவனது கர்வமும், ஆணவமும் முற்றிலும் அழிந்து போய் இருந்தது. ஆகவே அவன் மீது கருணைக் கொண்ட நாரதரும் அவனிடம் துர்வாச முனிவரை சந்தித்து அவரிடம் அதற்கு வழி கேட்குமாறுக் கூறி அனுப்பினார்.

அவனும் தயங்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று துர்வாச முனிவரிடம் தான் இழந்த வீடுகளையும் நாட்டையும் திரும்பிப் பெற தனக்கு உதவுமாறுக் கூற அவரோ அவன் இழந்து விட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் எனில் அப்படியே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட திசை வழியே சென்று கொண்டு இருந்தால் ஒரு இடத்தில் முருகன் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரு பாதிரி  மரத்தின் கீழ் வாசம் செய்வதைக் காண முடியும் என்றும், அங்கு சென்று வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் விடிவு காலம் பிறக்கும் என்றார். பகீரதனும் அவர் கூறியபடியே அங்கும் இங்கும் சுற்றியப் பின் கோட்டை நகரை அடைந்தார். துர்வாச முனிவர் கூறிய அனைத்து அடையாளங்களும் அங்கு இருந்தன. ஆகவே அவன் முனிவர் கூறியபடியே அங்கு தவம் இருந்து முருகனின் அருளினால் தான் இழந்த அனைத்தையுமே சில காலங்களில் திரும்பப் பெற்றான். அதனால் மனம் மகிழ்ந்து அவன் அந்த இடத்தில் முருகனுக்கு ஆலயம் ஒன்றை அமைத்தான்.





அந்தக் கட்டத்தில்தான் திருபோரூரில் இருந்து திருத்தணிக்கு சென்று கொண்டு இருந்த அருணகிரிநாதர் முருகனின் இருப்பிடமான பாதிரி  மரம் இருந்த இடத்தை அடைந்தார். அதன் அருகில் இருந்தக் குளத்தின் அருகில் இருந்த இன்னொரு மரத்தின் அடியில் சென்று உறங்கியவர் 'என்னை மறந்து விட்டாயா அருணகிரி?' என்றக் குரல் கேட்டு எழுந்தார். அந்தக் குரல் மூன்று முறை ஒலித்தது. எழுந்தவர் குரல் கொடுத்தவரைத் தேடினார். அருகில் யாருமே தென்படவில்லை. அப்போது அவர் பாதிரி  மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த முருகனைக் கண்டு ஆனந்த கூத்தாடி அவர் மீது ஏழு பாடல்களைப் திருப்புகழ் என்ற பெயரில் பாடினார். வல்லக் கோட்டை ஆலயத்தை கோட ஆண்டவர் ஆலயம் என்று அழைத்தார்கள். அந்த ஆலயத்தில் உள்ள முருகனின் சிலைக்கு ஈடாக தமிழ் நாட்டில் வேறு எங்குமே ஒரு சிலை கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்த  ஆலயம் புகழ் பெற்று விளங்குகிறது.




முன்னர் அந்த ஆலயத்திற்கு  மக்கள் செல்ல வாகன வசதிகள் இல்லாத நிலையில் இருந்ததினால் இன்று உள்ளதைப் போல  அப்போது பிரபலம் அடையவில்லை. ஆனால்  இப்போதோ அந்த ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்ல முடிகின்றது. அங்குள்ள இரண்டு மீட்டர் உயரமுள்ள முருகனின் சிலையைக் கண்டு மக்கள் பரவசம் அடைகிறார்கள்.







ஞாயிற்றுக் கிழமைகளில் மகாபிஷேகம் நடைபெறுகின்றது. சென்னையில் இருந்தும் அதை சுற்றி உள்ளப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இங்கு வருகிறார்கள். அப்போது  அன்னதானமும் நடை பெறுகின்றது. தமிழ் புத்தாண்டு, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் விசேஷ பூஜை நடைபெறுகின்றது. 1997 ஆம் ஆண்டு முதல் சில பக்தர்கள் ஒன்றிணைந்து அந்த ஆலயத்தை சுத்தம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு பயனுள்ள முறையில் ஆலய வளாகத்தை மாற்ற முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர். அந்த முயற்சியின் முதல் கட்டமே ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சி. முன்பெல்லாம் அந்த ஆலயத்துக்கு வருகை தரும் மக்கள் ஆலய தரிசனம் செய்த பின் தமக்கும் தமது குழந்தைகளுக்கும் உணவு அருந்த நல்ல உணவகம் இருக்குமா என்று கவலைப்படுவது உண்டு. அந்தக் குறையைக் களையவே பூஜை முடிந்ததும் அன்னதானம் நடைபெறும் இடத்தில் சென்று உணவு அருந்தி விட்டுப் போக வேண்டும் என அங்கு வருகை தருபவர்கள் அனைவரையும் ஆலய நிர்வாகிகள் அழைப்பார்கள். ஆகவே தங்களை ஒரு விருந்தாளி போலவே நினைத்து உணவு தருவதாக மக்கள் நினைக்கின்றார்கள்.











7 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய திருமேனி முருகனுக்கு எதிரே இரட்டை மயில் காண கண் கோடி வேண்டும்.













கோடை ஆண்டவர் தரிசனம் பெற்றீர்களா? இங்கு கிருத்திகை தோறும் கிடைக்கும் மலர் அலங்கார முருகன் தரிசனம் மிக மிக பிரசித்தம். வெகு விரைவில் நேரில் கண்டு இன்புற வேண்டுகின்றோம்.

இதோ.. வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடைபெற உள்ள நவராத்திரி விழா அழைப்பிதழ் இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.













இன்னும் வல்லக்கோட்டை முருகன் புகழ் தொடரும். 


அழகான பரிசாக கிடைத்த முருகப்பெருமானின் பாதம் தொட்டு பதிவை முழுமை செய்கின்றோம். முருகனருள் முன்னிற்க மீண்டும் சந்திப்போம்.

 மீள்பதிவாக:-


Friday, September 27, 2019

நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ்

அன்பர்களே...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இதோ நாம் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அனைவருக்கும் TUT குழுமத்தின் சார்பாக நவராத்திரி நல்வாழ்த்துக்கள் இப்பொழுது தெரிவித்துக் கொள்கின்றோம். . இன்றைய பதிவில் நவராத்திரி உருவான கதையும், நவராத்திரி  அழைப்பிதழும் இணைக்கின்றோம். சென்ற ஆண்டு முதல் நாள் முதல் பத்து நாள் தரிசனங்களை தனிப் பதிவுகளாக தொகுத்தோம். இந்த ஆண்டு நவராத்திரி தரிசனம்  எப்படி இருக்கும்? நம் தொண்டு எங்கு செய்ய இருக்கின்றோம் அனைத்தும் குருவின் அருளினால் தான் கிடைக்கும்.சரி..வாருங்கள் 

நவராத்திரி உருவான கதை

ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார்.அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

“போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம்.மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. தினமும் நவராத்திரி தரிசனத்தில் கீழ்க்கண்ட போற்றிகளை போற்றுங்கள்.

துர்க்கா_தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி_ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

ஸ்ரீசரஸ்வதி_தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம









மேலும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர், வேலி அம்மன் ஆலயம் நவராத்திரி அழைப்பிதழ் இனிவரும் பதிவுகளில் தொடரும். அதனுடன் சதுரகிரி மலை யாத்திரை அனுபவமும்

- நவராத்திரி பதிவுகள் தொடரும்.

முந்தைய பதிவுகளுக்கு:-

மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

 மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html


ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

முன்னோர்களின் ஆசி பெற மறைமதி வழிபாடு - 28.09.2019

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மறைமதி வழிபாடு என்றவுடன் என்னமோ என்று குழம்ப வேண்டாம். அமாவாசை வழிபாடு தான் அது. நம் முன்னோர்கள் இதனை சிறப்பாக கொண்டாடி உள்ளார்கள்.அதுவும் குறிப்பாக
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை . தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.


நம்மைப்  பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது.அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும், மோட்ச தீப வழிபாடு ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இனிமேல் நாம் அன்னதானம் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டோம். மாற்றாக அன்னம்பாலிப்பு, நாராயண சேவை என்று பயன்படுத்துவோம்.நம் உடலை எடுத்துக் கொண்டால் தலைப்பகுதி சிவம், வயிற்றுப்பகுதி விஷ்ணு, அடிப்பகுதி பிரம்மன் என்று பார்த்தால், வயிற்றுப்பகுதி நாராயண சேவையே ஆகும்.

பொதுவாக அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்காக விரதம் இருக்கலாம். முன்னோர்களுக்காக திதி,தர்ப்பணம் செய்யலாம், இவற்றையும் தாண்டி ஏதேனும் ஒரு புண்ணிய காரியங்களில் ஈடுபடலாம். நம் வீட்டின் அருகே உள்ள மரம்,செடி கொடிகளுக்கு நீர் ஊற்றலாம், சூரிய வழிபாடு செய்யலாம், கோயிலுக்கு சென்று நம்மால் முடிந்த கைங்கர்யத்தில் ஈடுபடலாம். குறைந்தது 1 நபருக்கு அன்னம்பாலிப்பு செய்யலாம். நம் தளம் சார்பில் மாதந்தோறும் அமாவாசை அன்று குறைந்தது சுமார் 15 நபர்களுக்கு அன்னம்பாலிப்பு செய்து வருகின்றோம். இந்த அன்னம்பாலிப்பு செய்யும் போதே, ஆலய தரிசனமும் நடைபெற்று விடும். கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயம், மாமரத்து விநாயகர் ஆலயம், வள்ளலார் கோயில், நந்தீஸ்வரர் கோயில் என ஆலய தரிசனம் இணைவது நமக்கு இன்னும் சிறப்பாக இருந்து வருகின்றது.

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. 

முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும்.இப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.

அடுத்து நம் தளம் சார்பில் நடைபெற்று வரும் மோட்ச தீப வழிபாடு ஆகும். இதுவும் சென்று ஆண்டு ஆடி மாதம் முதல் சித்தர்களின் அருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மகாளய பட்ச சேவை நம் தளம் மூலம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மோட்ச தீபம் பற்றி அறிய கீழே உள்ள இணைப்பு படத்தை பார்க்கவும்.






மஹாளய பக்ஷ காலம் 
ஆரம்பம் ~14.09.2019
நிறைவு ~ 28.09.2019
மஹாளய அமாவாசை 28.09.2019
இன்று முதல் மஹாளய அமாவாசை வரை நம் தளம் சார்பில் கூடுவாஞ்சேரி & திருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய உள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் நம்முடன் இணையலாம். 
முதல் நாள் : 14.09.2019









நன்றி 


2 ம் நாள் - 15.09.2019



 பைரவர்களுக்கு 20 பாக்கெட் பிஸ்கட் மருதேரி பிருகு குடிலில் TUT தளம் சார்பில் கொடுத்தோம் 

3ம் நாள் – 16.09.2019 - திரிதியை
கூடுவாஞ்சேரியில் உள்ள அன்பர்களுக்கு 4இட்லி கொண்ட உணவுப் பொட்டலம் கொடுத்தோம்







அனைவருக்கும் நன்றி


4ம் நாள் – 17.09.2019 - சதுர்த்தி
கூடுவாஞ்சேரியில் கோமாத்தாகளுக்கு 5 டஜன் வாழைப்பழங்கள் கொடுத்தோம்.













அனைவருக்கும் நன்றி


5ம் நாள் – 18.09.2019 - பஞ்சமி










குருநாதர் பிருகு மகரிஷி வாக்கின்படி, கடந்த மே மாதம் முதல் மோர் மற்றும் நீர் தானம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் நம் தளம் சார்பில் குருவருளால் செய்து வருகின்றோம்.மகாளய பட்ச TUT சேவையாக நேற்று நீர் தானத்திற்கு வழங்கினோம்.


6ம் நாள் – 18.09.2019 - பஞ்சமி 
கூடுவாஞ்சேரியில் கோமாத்தாகளுக்கு 20 கட்டு அகத்திக்கீரை கொடுத்தோம். நேற்றைய மழை சூழலில் கோமாதாக்களை எங்கு பார்ப்பது என நினைத்தோம். எங்கள் வீட்டை நோக்கி ஒரு கோமாதா வந்து அகத்திக்கீரை பெற்றார்கள்..இணைப்புப் படங்கள் பார்த்தால் உங்களுக்கு புரியும்.











அனைவருக்கும் நன்றி


7ம் நாள் – 19.09.2019 - சஷ்டி
கூடுவாஞ்சேரியில் TUT அன்பர் பத்மகுமாரின் உதவியால் சுமார் 15 அன்பர்களுக்கும் உணவு வழங்கினோம்
அனைவருக்கும் நன்றி








8ம் நாள் – 21.09.2019 - அஷ்டமி
உத்திரமேரூர் ஶ்ரீ சிவார்ப்பணம் கோசாலைக்கு 25 கி மாட்டுத் தீவனம் கொடுத்தோம். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று திருமலைவையாவூர், உத்திரமேரூர் பெருமாள், திருப்புகழ் பாடல் பெற்ற உத்திரமேரூர் முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம். விரைவில் நம் தளத்தில் தரிசனப் பதிவுகள் தர குருவருள் வேண்டுகிறோம். 












அனைவருக்கும் நன்றி


9ம் நாள் – 22.09.2019
ஆரணியில் 10 அன்பர்களுக்கு நம் தளம் சார்பில் மகாளய பட்ச அன்னதானம் செய்தோம்.




அனைவருக்கும் நன்றி


10ம் நாள் – 23.09.2019 - தசமி 
திருஅண்ணாமலையில் தயவு ஆசிரம்ம் மூலம் சாதுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

11 ம் நாள் – 24.09.2019 - ஏகாதசி
கூடுவாஞ்சேரியில் உள்ள அன்பர்களுக்கு அன்னதானம் செய்தோம்






12 ம் நாள் – 25.09.2019 - துவாதசி
திருஅண்ணாமலை தயவு ஆசிரமத்தில் கோமாதாக்களுக்கு தீவனம் வழங்கினோம்





13ம் நாள் – 26.09.2019 - திரயோதசி 

இன்று முதியோர் இல்லத்திற்கு பிஸ்கட் பாக்கெட் கொடுக்க எண்ணினோம். அவர்கள் கோதுமை மாவு, சீனி, தேயிலைத் தூள் கேட்டார்கள். இன்றைய மகாளய TUT சேவை இனிதே நடைபெற்றது








14ம் நாள் –  27.09.2019 - சதுர்த்தசி 

இன்று கூடுவாஞ்சேரியில் 10 அன்பர்களுக்கு உணவு வழங்கினோம்.






15ம் நாள் – 28.09.2019 - மகாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 

காலை திருஅண்ணமலையிலும், மதியம் ராமேஸ்வரத்தில் மாலை சதுரகிரியில் அன்னபாலிப்பு நம் தளம் சார்பில் செய்ய உள்ளோம். நம்முடன் இணைந்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நாளை  நடைபெற உள்ள அமாவாசை பூசை உள்ள ஆலயங்களை கீழே தருகின்றோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்துகொண்டு குருவருளும் திருவருளும் பெற வேண்டுகின்றோம்.



மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html


 ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html
 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html