"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 3, 2019

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்

 அனைவருக்கும் வணக்கம்.

பாடல் பெற்ற தலங்கள் என்ற தொடர்பதிவில் அனைவரையும் இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி. இதற்கு முந்தைய பதிவில் திருநெடுங்களம் பற்றி பார்த்தோம்.இதோ மீண்டும் திருச்சி திருவெறும்பூர் திருத்தலம் பற்றி காண இருக்கின்றோம்.

திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.







திருநெடுங்களம் தரிசனம் முடித்து திருச்சி நோக்கி திரும்பி வரும் வழியில் மலை மேல் கோயில் உள்ளதே என்று கண்டு, அங்கே சென்றோம். குன்றின் மேல் நாம் குமரனை தான் தரிசித்து உள்ளோம். மலை தரிசனம் வேறு, குன்று தரிசனம் வேறு; குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்: மலை இருக்கும் இடமெல்லாம் மகேஸ்வரன் இருக்கும் இடம். அந்த வகையில் குன்றில் மகேஸ்வரன் தரிசனம்.

இக்கோயிலின் தலபுராணம் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகின்றது

தாரகாசுரன் என்ற அரக்கனின் காரணமாக தேவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். அவர்கள் நாரதரிடம் சென்று தாரகாசுரன் கொடுமைகளில் இருந்து மீள வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள இத்தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு அவரிடம் முறையிடும்படி ஆலோசனை கூறினார். தேவர்களும் அதன்படி இங்கு வந்து அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவம் எடுத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அச்சமயம் லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருக்க எறும்பு உருவில் இருந்த தேவர்கள் அதன் மீதேறி இறைவனை வழிபட மிகவும் சிரமப்பட்டனர். இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தன் லிங்க உருவை ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். இதன் காரணமாக இத்தலம் எறும்பியூர் என்றும் இறைவன் எறும்பீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.






                                                         கோயிலின் நுழைவாயில்





எறும்புகளுக்கும் அருள் ஈந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால், இத்தலம் எறும்பியூர் எனப்பட்டது.








இத்தலத்தில் ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. கல்லில் வெட்டப்பட்டுள்ள சுமார் 125 படிகளின் மீதேறி ஆலயத்தை அடையலாம். கருவறை முற்றும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை நுழை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை உள்ளே மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். மூலலிங்கம் மண்புற்றாக உள்ளதால் நீர் படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தும், மேற்புறம் சொரசொரப்பாகவும் காணப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தன விநாயகர், அழகான தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் சங்கர நாராயணர் உருவம், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நவக்கிரக சந்நிதியில் சூரியன் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது. பைரவர் உள்ளார். இறைவி நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. உட்பிரகாரத்தில் சோமச்கந்தர், முருகன், கஜலக்ஷ்மி, காசி விஸ்வநாதர், லக்ஷ்மி, பைரவர் ஆகியோரின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. பிரம்மா, இந்திரன், அக்னிதேவன், முருகர், அகத்திய முனிவர், நைமிச முனிவர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.




இக்கோவிலின் தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக கோவில் எதிரில் உள்ள பிரம தீர்த்தமும் விளங்குகிறது.பிரம தீர்த்த மேலே உள்ள படங்களில் இணைத்துள்ளோம்.













சுமார் 125 படிகளில் மேலே ஏறி, கோயிலை அடைந்து விட்டோம். என்ன ஒரு ரம்மியமான காட்சி. எப்படி நம் மூதாதையர்கள் இது போன்ற இடங்களில் கோயிலை கட்டி வைத்து வாழ்ந்துள்ளார்கள் என்பது பிரமிப்பாய் இருந்தது. எப்படி கற்கள்,மணல் போன்ற பொருட்களை கொண்டு சென்றிருப்பார்கள்..நினைக்கும் போதே மலைக்க தோன்றுகின்றது.

அந்த இறைவன் வாழும் இடம், ஆன்மா லயப்படும் இடம் என்பதை நாம் உணர்ந்தோம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள்.








இதோ கோயிலினுள் உள்ளே செல்ல இருக்கின்றோம். 



தரிசித்து விட்டு, ஒரு சுற்று சுற்றினோம். கோயிலில் உள்ள ஒரு மணம் நம்மை தழுவியது. நம் புறம் மட்டுமல்ல, அகமும் ஆனந்தம் அடைந்தது.















திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் இரண்டு பதிகங்கள் பாடியருளியுள்ளார். கீழே உள்ள இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மற்றொரு பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போக
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்
திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி
அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை
எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.













பின்பு அம்மனின் அருள் பெற்றோம், சௌந்தரநாயகி, நறுங்குழல் நாயகி, மதுவனேஸ்வரி என்றெல்லாம் அழைக்கப்படும் தாயின் அருளில் திளைத்தோம் என்றே சொல்ல வேண்டும். இந்த மலை உச்சியில் எப்படி மரங்கள் வளர்கின்றன? எல்லாம் அவன் செயல் அன்றோ? அவன் நினைத்தால் பாறையிலும் மரம் வளரும். என்ன தவம் செய்தார்களோ..இங்கே பிறப்பெடுத்து இருக்கின்றார்கள் என்று நாம் நினைத்தோம். நீங்களே பாருங்கள்.  தன் வேர் பரப்பி, தன் இருப்பை உறுதி செய்யும் அழகிலே இது தெரிகின்றது.













இது போன்ற பண்டைய கால ஆலயங்களில் , சுவரின் மேலே நந்தியின் அழகை கண்டு உள்ளீர்களா? சும்மா ஏனோ தானோ என்று ஆலயமே சென்றால் நம் கண்களுக்கு இவை தெரியாது. நன்கு மனதை செம்மைப்படுத்தி, அகத்தையும்,புறத்தையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றி செல்லுங்கள், அவன் அருள் கிடைக்கும்.இது போன்ற நிலைகளும் தெளிவு பெறும். முதலில் ஆலயங்களுக்கு செல்லும் போது பேச்சை குறையுங்கள். பேச்சை குறைத்தாலே பாதி வேலை முடிந்து விடும். பின்னர் அவனே நம்மை ஆட்டுவிப்பான். அட..ஆடு..







கீழே இறங்கி வரும் போது ஆடுகளைக் கண்டோம். ஒன்றும் வாங்காது சென்று விட்டோம். அடுத்த முறை ஆலயத்திற்கு என செல்லும் போது  உணவு பொருட்களை குறைந்த பட்சம் வாழைப்பழம் போன்ற கனிகளைக் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கின்றோம்.
  • முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம்.
  • மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளது எனவே நேரடியாக அபிசேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது.
  • வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் காணலாம்.
  • இத்தலம், மும்மூர்த்திகளில் சிவன் தவிர்த்த இருவரான திருமால் மற்றும் பிரம்மா வழிபட்ட சிறப்புடைய தலம்.
  • இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர்.
  • இது ஒரு பாடல் பெற்ற தலம். சிறப்பு மிக்க சிவனடியாரான திருநாவுக்கரசர், இப்பெருமானின் சிறப்புக்களை ஐந்தாம் திருமுறையில் பாடியருளியுள்ளார்.
  • இக்கோயிலில் சூரியானரின் திருவுரு நவக்கிரக சந்நிதியில் தமது இரு மனைவியரோடும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
  • திருச்சி மலைக் கோட்டையில் திரிசிரன் வழிபட்டதைப் போன்று, அவனது சகோதரனான கரன் இங்கு எறும்பு உருக்கொண்டு வழிபட்டதாகக் கூறுவதுமுண்டு.

கீழே இறங்கி வந்து ,சாஷ்டாங்கமாக வணங்கி, அங்கிருந்து விடை பெற்றோம். இந்த  தலம் வரலாற்றுச் சிறப்பும் பெற்றது.


- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html


  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.htm

Friday, August 2, 2019

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் !

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இன்றோ திருவாடிப்பூரம்- எமக்காக
வன்றோ இங்காண்டாளவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்தவான்போகந்தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

ஆம். இன்று ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்த நாள். இந்நாளில் நம் மனதை திறப்போம். ஆண்டாள் நம்மை கொஞ்சம் ஆளட்டும்.




இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது, பகவான் விஷ்ணுவும் ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதாரமெடுத்து பூமிக்கு வந்தார். இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம, கிருஷ்ணரை கணவராக அடைந்தனர். ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது, அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை வடிவில்) சயனம் கொண்டிருந்த பெருமாளை, கணவனாக அடைய வேண்டும் என, மனதிற்குள் உறுதி பூண்டாள் ஆண்டாள். மகளின் இந்த விசித்திரமான ஆசையை அறிந்த பெரியாழ்வார், மானிடப் பெண் ஒருத்தி, கோவிலில் சிலையாக இருக்கும் கடவுளை எவ்வாறு கணவனாக அடைய முடியும்... என, நினைத்து வேதனைப்பட்டார். ஆனால், ஆண்டாள் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவள் மனதில், பெருமாள் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்ததால், கண்ணன் சிலையாக இருந்தால் என்ன, அவன் தான் தன் கணவன் என்பதில் உறுதியாக இருந்தாள்.



பெரியாழ்வார், தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்துச் செல்வார். அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து, அந்த மாலை, பெருமாளுக்கு பொருத்தமாக இருக்குமா என, தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாள் ஆண்டாள். ஒருசமயம், அவள் அவ்வாறு அழகு பார்த்த போது, அவளது கூந்தல் முடி ஒன்று அதில் ஒட்டிக்கொள்ள, குட்டு உடைந்து போனது. பெரியாழ்வார் அவளை கண்டித்து, வேறு ஒரு மாலை கட்டி எடுத்துச் சென்றார். ஆனால், பெருமாளோ, பக்தை அணிந்து தரும் மாலை தான் வேண்டும்... எனச் சொல்லி, ஆண்டாளின் காதலை ஏற்றுக் கொண்டார். கடவுள் மேல் அவள் கொண்ட ஆத்மார்த்தமான பக்தியும், காதலும், சிலையாக இருந்த தெய்வத்தையும், மனம் உருக வைத்து, அவளை ஏற்றுக் கொள்ள வைத்தது. தான் நினைத்த திருமாலையே கணவனாக அடைந்து, எந்த மானிட பெண்ணும் செய்யாத சாதனையைச் செய்தாள் ஆண்டாள். அந்த தெய்வமும், அவள் வாழும் காலத்திலேயே அவளுக்கு அனுக்கிரகம் செய்தது. தன் மனதையே யாக குண்டலமாக்கி, தன்னுடைய பக்தியையும், காதலையும் நெருப்பாக்கி, தன் ஆன்மாவையே ஹவிசாக இட்டு, திருப்பாவை என்னும் மந்திரத்தால் அவனைத் துதித்து, தான் நினைத்ததை சாதித்தாள் ஆண்டாள். இத்தகைய வைராக்கிய உணர்வு கொண்ட இந்த சாதனைப் பெண்மணி, ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும், அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு, ஆண்டாளே வாழ்ந்து காட்டியுள்ளாள்!



 பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து


 கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
 சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
 நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
 வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

 பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
 வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்
 ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
 வையம் சுமப்பது வம்பு


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும் தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ புகழ் பெற்றது

ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாக திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டு வருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலாயினும் வைணவர்களின் இல்லவிழாவாயினும் வடமொழி மறைகளுக்கு நிகராக தவறாமல் ஓதப்படுகின்றது.



மாதனாங் குப்பம்   என்னுமிடத்தில் குரு ஆணைப்படி ஆண்டாள் சிலை பூமியில் கண்டெடுத்து தமிழகத்தில் இரண்டாவது ஆண்டாளுக்கு தனிக்கோயிலாக  உருவாக்கி சமாதி அடைந்த ஸ்ரீமத் சிங்கபாண் யோகீந்திர சுவாமிகள்  இவர் 17.02.1927, அன்று அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் கோயில் உருவாக்கினார்.

ஶ்ரீ  ஆண்டாளுக்கு  இரண்டாவது தனிக்கோயிலாக உள்ளதால் சிறிய வில்லிபுத்தூர்  என்றும் இந்த இடத்தை அழைக்கின்றனர்.

சென்னை ரெட்டேரி செந்தில் நகர் அருகிலுள்ள  மாதனாங் குப்பம்,பஸ் ரூட்  எண் :62,செங்குன்றம்/ பூந்தமல்லி சாலையில் உள்ள  கள்ளிக்குப்பம் டீ கடை பேருந்து நிறுத்தம் ,இறங்கி இங்கிருந்து,எண்:43, மினி பஸ் மூலம் வள்ளலார் நகர் 6வது  நகர் அருகே சாமியார் மடம் என்று கேட்கவும். 


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

விரைவில் தனிப்பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html



பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html






  

Thursday, August 1, 2019

கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் ஆடிப்பூரம் பற்றி தொட்டுக் காட்ட விரும்புகின்றோம். அன்னையின் பாதம் தொட்டு பதிவைத் தொடர்வோம்.

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.

இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள்  உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,  குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை  உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள்  திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த  வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக  எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு  நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த  தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில்  வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம்.  இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம்  ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும்  பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா  நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும்  உகந்த நாள்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான்  முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய்  இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில்  அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக  வழங்கப்படுகின்றன.

காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில்  வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி  அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.

சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர்  இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன்  சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை  உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில்  நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு  அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில்  ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.


அந்த வகையில் பார்க்கும் போது நாம் வழிபடும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஆடித் திருவிழா வெகு சிறப்பாக நாளை கொண்டாடப்பட உள்ளது.



மேலதிக விபரங்களுக்கு மேலே இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும். திருவாடிப்பூர திருவிளக்கு பூஜையும், ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 108 பால்குட பெருவிழா மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த கைங்கர்யத்தில் நாம் நம் தளம் சார்பில் தயிர்,எலுமிச்சை, இளநீர் வாங்க சிறு தொகை உபயம் அளித்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுகின்றோம்.


இன்று காலை நடைபெற ஆயில்ய ஆராதனையின் சில தரிசனங்களை கீழே இணைத்துள்ளோம்.







மீண்டும் மீண்டும் தரிசனம் பெற்றோம். விரைவில் தனிப்பதிவில் சந்திக்கின்றோம்.

இந்தப்பதிவை படிக்கும் அனைவருக்கும் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைத்திட எல்லாம்வல்ல பரம்பொருளை வேண்டுவதுடன், இந்நன்னாளில் அபிராமி அந்தாதியில் உள்ள ஒரு பாடலைத் தருகின்றோம்.அனைவரும் தினசரி பூசையில் இணைக்கவும்.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

 அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html
ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html


குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html
  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.htm

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்

 வாழ்வாங்கு வாழ

இன்று முதல் ஒரு புதிய முயற்சியாய் - வாழ்வாங்கு வாழ என்று ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்க உள்ளோம்.இந்த பதிவு கேள்வி பதில் வடிவில் இருக்கும். யாருக்கு தான் கேள்விகள் இல்லை.எத்தனையோ ஆயிரமாயிரம் கேள்விகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த கேள்வி பதில் பதிவிற்கு விடை தருபவர் திரு. ராம் மனோகர் அவர்கள். அவருடைய தளத்தில் இருந்து அவரின் அனுமதியோடு இங்கே சுவாரசியமான கேள்வி பதில்களை பகிர்கின்றோம்.வழக்கம் போல் தள வாசகர்கள் தங்களின் கருத்துக்கள் மூலம் வழி நடத்தும் படி கேட்டுக் கொள்கின்றோம்.ஏதேனும் சந்தேகம் - ஆன்மிகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தமாக இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.

வாழ்வாங்கு வாழ  என்ன செய்ய வேண்டும்?உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உயிர்  கலங்காதிருக்க வேண்டும். மன வளம் பெற்று இருக்க வேண்டும்.இங்கேயே ஒரு கேள்வி ஆரம்பமாகிவிட்டது.உயிர்  என்றால் என்ன? மனம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா ? அலல்து வேறு வேறா? அப்பப்பா ! எக்கச்சக்க ஓட்டம் நடைபெறுகின்றது.இது போன்ற நடைமுறை சிக்கலான கேள்விகளுக்கு தான் இங்கே நாம் விடை காண இருக்கின்றோம்.
வாழ்வாங்கு வாழ நாம் முதலில் நாம்  வாழ்த்திப் பழகுவோம்.

     ஒருவரை மற்றவர் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற பண்புநலம் முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்! நமது சங்க கால இலக்கியங்கள் இதனை நன்கு விளக்கியுள்ளன!
வாழ்த்துவதற்கு வயது பேதம் தமிழரிடத்தில் இருந்தது கிடையாது! பெரியவர்களைச்  சிறியவர்கள் சந்திக்கும்போது பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்துவதும் பதிலுக்கு சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதும் பழங்காலத் தமிழர்தம் மரபு!
மனநிறைவாகவும் உளமாறவும் வாழ்த்துதல் நிகழ்வதால் இருசாராருக்கும் அறிவியல் ரீதியான நன்மைகள் நிகழுகின்றன! இவ்வாறு வாழ்த்தும்போது சிறியோரால் வாழ்த்து பெறும் பெரியவர்களின் வயது நீடித்து வந்துள்ள விந்தையையும் பதிலுக்கு பெரியோர்தம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெறும் சிறியோருக்கு அவர்தம் அறிவும் அன்பும் நிறைக்கப்படுவதை உலகோர் ஒப்புக்கொள்வர்.
அது மட்டுமன்றி தமிழர்கள் இயற்கையையையும் இந்த பிரபஞ்ச வெளியையும் வாழ்த்துகின்ற தன்மையை வெளிப்படுத்தி அதன் வாயிலாக இயற்கையிடமிருந்தும் இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் ஏராளமான நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். இன்றுவரை தமிழகம் வந்தாரை வாழவைத்து அச்சமின்றி வாழும் சூழலுடன் (இத்தனைக்கும் தன்னுடைய வளங்கள் அனைத்தையும் மற்ற இனத்தவரிடம் இழந்துவிட்டு) வாழ வைத்திருப்பதே இதற்கு சாட்சியுமாகும்.

வாழ்த்துகின்ற எண்ணங்களுக்குள்ள மகத்தான ஆற்றல் அப்படி! வாழ்த்துதலின் சிறப்பியல்புகளைப் பற்றி நமது தமிழரிஞர்கள் எத்தனையோ முறை எடுத்துரைத்தும் வாழ்த்துதல் பற்றிய விழிப்புணர்வும் அதனை நமது வாழ்வின் ஒரு அங்கமாகப் புதுப்பித்துக் கொள்ளும் மன நிலையும் இதுவரை நமக்குள் ஏற்படவே இல்லை!
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வாழ்த்துவோம். வாழ்வாங்கு வாழ்வோம் !!


கேள்வி - எதையாவது எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போடுகிறார்களே ஏன் ?





இராம் மனோகர் - முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி காரியங்களைத் துவங்குவது மரபு. அந்த அடிப்படையில் பிள்ளையார் சுழி போடுவது வழக்கமாக இருக்கிறது. பழைய காலத்து ஏடுகள், கலவெட்டுகளிலெல்லாம் கூட பிள்ளையார் சுழி காணப்படுவதால், இது கர்ண பரம்பரையான வழக்கமாகவே கருதப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்து கூறியிருக்கிறார்கள். நாத்திக வாதம் பேசுவபவர்கள் கூட ''எழுது கோலின் நிலையை ஆராய்வதற்காக வட்டமும், கோடும் போட்டுப் பார்த்து  விட்டு எழுதத் துவங்கவதே பிற்காலத்தில் பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது'' என்று சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பிள்ளையார் பிரணவ சொருபம். பிரணவமாகிய ஓம் ஐந்தெழுத்துகள் சேர்ந்தது.



 முதல் உரு நட்சத்திர வடிவம். அதாவது வட்டப் புள்ளி.
 இரண்டாவது உரு நேர் கோடு.
 மூன்றாவது வட்டம்.
 நான்காவது பிறை மதி.
 ஐந்தாவது பிந்து.
இவற்றில் வட்டப் புள்ளியும் நேர் கோடும் இணைந்தது பிள்ளையார் சுழி. இந்த  சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகி விடுகிறது என்பது ஐதீகம். பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் அதி தேவதைகளாக ஐந்து பேரை சிவஞான போதம் அறிவிக்கிறது. அகாரத்திற்கு பிரம்மன் என்றும், உகாரத்திற்கு விஷ்ணு என்றும், மகாரத்திற்கு ருத்திரன் என்றும், பிந்துவிற்கு மகேசன் என்றும், நாதத்திற்கு சதாசிவன் என்றும் சிவஞான போதம் கூறுகிறது. எழுதத் துவங்குவது என்பது ஒரு சிருஷ்டி. அது தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் இந்த ஐந்து தேவதைகளையும் வணங்கும் விதமாகவே பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆரம்பத்தில் பிரணவ  வடிவமே வழக்கமாக இருந்துள்ளது. பிரணவத்தை விரைவாக எழுதும் பொழுது உ போலத் தோன்றும். காலப் போக்கில் அதுவே பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது.

என்ன பிள்ளையார் சுழி பற்றித் தெரிந்து கொண்டோம் அல்லவா? 

கேள்வி - குருவை அடைவதற்கு நமக்கு தகுதி வேண்டும் என்றுதான் சொல்கிறீர்கள். அது என்ன தகுதி என்று சொன்னால் தானே எங்களுக்கும் தெரியும் ?

இராம் மனோகர் - பொதுவான கோட்பாடு என்னவென்றால், யோக முயற்சியில் ஈடுபடும் சாதகர்களுக்கு உடல், மனம், உயிர் இவற்றின் இயக்கம் சீராகவும் சமனாகவும் இருக்க வேண்டும். முதலில் மனமானது சீராகும் பொழுது ஒவ்வொன்றாகச் சீராகி வரும். அப்படி மனதைச் சுத்திகரிப்பதற்கான முயற்சியை திரிகரணச் சுத்தி என்பார்கள். அதாவது

''மனஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேக மஹாத்மனாம் |
மனஸ்யன்யத் வசஸ்யன்யத் கர்மண்யன்யத் துராத்மனாம் ||'' என்கிறது நீதி சாஸத்திரம்.

மனம், வாக்கு, செயல் இவைகளில் முரண்படாமல், தூய்மையைக் கடைபிடிப்பவர் மகாத்மா. ஒன்றுக்கொன்று முரண்படுபவர் துராத்மா எனப்படுகிறது. அதைத்தான் வள்ளல் பெருமான் ''உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்'' என்பார். மனம் ஒன்று நினைக்க, வாய் ஒன்று பேச, செயல் ஒன்று நடக்க என்று ஒன்றுக்கொன்று முரண்படும் பொழுது மனதில் கள்ளத்தனம் மிகுந்து விடும். கள்ளத்தனம் என்றால் பொய். உண்மைதான் இறைவன். எனவே உண்மையாக இருந்தால்தான் மனத் தூய்மை ஏற்படும். எனவேதான் வள்ளுவர் ''புறம்துய்மை நீரான் அமையும் அகம்தூய்மை வாய்மையால் காணப் படும்'' என்றார். கள்ளத்தனம் மிகுந்தவர் மனதில் அமைதி என்பது அறவே இருக்காது. அமைதியற்ற மனமானது சலனமுற்ற நிலையில் தன் வலிமையை இழப்பதோடு, நமக்கு வசப்படாது. இதனால் உடல் மற்றும் உயிர் சக்திகளுக்கும் இழப்பு ஏற்படும்.
அகத்தியர் பெருமான் சொல்லும் பொழுது,

''மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே!!!!'' என்பார்.



முதல் வரியில் மந்திரம் செபிக்க வேண்டாம் என்றார் சரி. அது என்ன கடைசி வரியில் மந்திரம் செம்மையாமே எனறு சொன்னார் ? நாம் யோக முயற்சிகளில் மந்திரங்களை செபிப்பது எதற்காக ? நமது ஆதாரச் சக்கரங்களாகிய தாமரைகளின் இதழ்களில் உள்ள இதழ்களின் அட்சரங்களைத் தூண்டி விட்டு, அவைகளில் அதிர்வை ஏற்படுத்தி, சீராக இயங்கச் செய்து, பிரபஞ்ச சக்திகளை ஈர்த்து திரிகரணங்களையும் வலிமைப்படுத்தி அதன் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகத்தான். மந்திரங்கள் என்பது ஒரு வகையான யுக்தி. மந்திரங்கள் சித்தியடைய வேண்டும் என்றால் யந்திர ரகசியங்கள், தந்திர வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் பஞ்சபூதங்களோடு மந்திரங்களை இணைத்து செயல்பட வைக்கக் கூடிய உபாயங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே மந்திரம் சித்தியாகி மனம் செம்மையாகும். மனதைத் ஸதிரப்படுத்துவதற்குத்தான் யோக முயற்சிகளில் மந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் ஒரு மனிதனானவன் தனது சுய முயற்சியால், நன்னடத்தை, ஒழுக்கமான வாழ்க்கை, மன அமைதி இவற்றைப் பெற்று விடுகிறன் என்றால், அவனுக்கு இத்தகைய யோக முயற்சிகள் ஒன்றும் தேவையில்லை என்கிறார்.
மனம் செம்மையடைய என்ன என்ன செய்ய வேண்டும் ? மனதில் நல்லதையே நினைக்க வேண்டும். குறிப்பாக ''நான்'' என்கிற அகந்தை அறவே இருக்கக் கூடாது. தன்னை, தான் என்கிற எண்ணத்தை விட்டு விடுவதே யோக முயற்சிக்கு வித்து என்பார் ஔவையார். அது போலவே கடும் சொற்களை ஒருவன் பேசுகிறான் என்றால், அதற்குக் காரணம் அவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்பதினாலேயாகும். அன்பு இல்லாத உள்ளத்தினால் அறம் பாழாகும். வாழ்வே விஷமாகும். வன் சொல் வாயில் மட்டுமல்ல அகத்திலும் இருக்கக் கூடாது. நீரில்லாத மரம் வாடி விடுவதைப் போ, அன்பு இல்லாதவன் வாழ்வும் வறண்டு போகும். அன்பு நம் ஒவ்வொரு செயலிலும் நிரம்பி நிற்க வேண்டும். அன்பைப் பெருக்கி, அதை மனதிலும், சொல்லிலும், செயலிலும் பாய்ச்சுவதே திரிகரண சுத்தியே தவிர வேறொன்றுமில்லை.

யோக முயற்சியைப் பொருத்த வரை இது தவிர பஞ்ச சுத்திகள் என்று உண்டு. அவை ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, மந்திர சுத்தி, திரவிய சுத்தி, தேவ சுத்தி என்பனவாம். ஆத்ம சுத்தி என்றால் சாதகன் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வது. பூத சுத்தி, ப்ராணாயாமம், நியாஸம் இவையெல்லாம் இதில் அடங்கும். தான் தவம் செய்யும் அல்லது வழிபாடு செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது ஸ்தான சுத்தியாகும். மந்திர சுத்தி என்றால் மூல மந்திரத்தை மற்ற அட்சரங்களோடு சேர்த்து ஒரு முறை ஆரோகணமாகவும், ஒரு முறை அவரோகணமாகவும் கூறுவது. திரவிய சுத்தி என்பது வழிபாட்டிற்குரிய திரவியங்களை நீர் அல்லது கோமேயம் கொண்டு சுத்தம் செய்வது. தேவ சுத்தி என்பது வழிபடும் தேவதையை அல்லது தியானிக்கும் இஷ்ட தெய்வத்தை பிராணப் பிரதிஷ்டை செய்வது.

சுத்தி என்பதே சித்து என்ற ஆன்மப் பயிற்சியால் கிடைப்பதுதான். எனவே இதற்கு மனம், உடல், ஜீவாத்மா தூய்மையாக இருக்க வேண்டும். அத்தகைய தூய்மை ஒழுக்கத்தினால் மட்டுமே அமையும். மெய், வாய், கண், மைக்கு, செவி ஆகிய கர்ம இந்திரியங்கள் மூலம் நல்லதையே நுகர வேண்டும். இது இந்திரிய ஒழுக்கம் எனப்படும். நான் என்ற அகந்தையற்று இருப்பது, கோபம், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய உணர்வுகள் அற்று இருப்பது, மனதை இடைவிடாது புருவ மத்தியில் நிறுத்துவது இதெல்லாம் கரண ஒழுக்கம் எனப்படும். சாதி மத பேதம், ஆண், பெண் பாகுபாடு மற்றும் உயர்ந்தவர், தாழந்தவர் என்ற வேறுபாடுகளற்று இருப்பது ஜீவ ஒழுக்கம். அனைத்து உயிர்களும் சமமே. அனைத்தும் பசுகள். இறைவன் ஒருவனே பதி என்கிற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பது ஆன்ம ஒழுக்கம்.

ஆன்ம ஒழுக்கம்தான் குருவை அடையத் தேவையான தகுதி. அத்தகைய ஒழுக்கங்களை கடைபிடித்தால்தான் திரிகரண சுத்தி ஏற்பட்டு மனமது செம்மையாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எப்படிப்பட்ட யோக முயற்சிகளும் தேவையில்லை. தக்க சமயத்தில் தேவியானாவள் தானே உச்சிக்குப் போய் சிவனைக் கலந்து நிற்பாள். அது இயலாத போதுதான் யோக முயற்சிகள் தேவைப்படுகின்றன.



இதுபோல் இந்த தொடர் பதிவைத் தொடர்வோம்.

- மீண்டும் அடுத்த கேள்வியில் சந்திப்போம்