அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஒவ்வொரு மாத அமாவாசை அன்று குருவருளால் மோட்ச தீப வழிபாடு செய்து வந்தோம். கடந்த 4 மாதங்களாக இந்த வழிபாடு லோக ஷேம தீப வழிபாடாக நடைபெற்று வருகின்றது. இம்மாத அமாவாசை தீப வழிபாட்டோடு ஆயில்ய நட்சத்திரமும் சேர்ந்தது . இதனையொட்டி, கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.08.2021) அன்று மாலை நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு வழிபாடும், லோக ஷேம தீப வழிபாடும் நடைபெற்றது. மேலும் ஆடி மாத குருநாதரின் அருள்நிலைகளை பல கோயில்களில் இருந்து இந்தப் பதிவின் மூலம் பெற இருக்கின்றோம்.
முதலிலே குருநாதர் தரிசனம் அனைவரும் பெற்றுக் கொள்வோம்.
இதனை உள்வாங்கிக் கொள்ளுங்கள். ஆம். ஓம் அகத்தீசாய நம என்று குருவின் நாமம் சொல்வதற்கு நாம் புண்ணியம் செய்தால் மட்டுமே சொல்ல முடியும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோருக்கு நன்றி கூறி, வணங்கி கொள்ளுங்கள். இப்பிறப்பில் இவர்களின் பிள்ளைகளாய் பிறந்ததினால் தான் நமக்கு நம் குருநாதர் கிடைத்துள்ளார். இல்லையேல் வேறு மாதிரி நம் வாழ்க்கை இருந்திருக்கும் அல்லவா?
அடுத்து சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் இருந்து தரிசனம் பெற இருக்கின்றோம்.
அடுத்து பனப்பாக்கத்தில் இருந்து தரிசனம் பெற உள்ளோம்.
பிரபஞ்ச சத்குரு ஓம் ஸ்ரீ அகத்தியர் மா மகரிஷி ஆடி அமாவாசை & ஆயில்ய நட்சத்திரம் குரு பூஜை தரிசனம் பெற இருக்கின்றோம்.
TWIN TOWER TEMPLE KL ECO CITY
அடுத்து பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லத்தில் இருந்து குருநாதர் தரிசனம் பெற இருக்கின்றோம்.
அடுத்து நம் தளம் சார்பில் திருஅண்ணாமலை, திருவள்ளூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அன்னசேவையில் நாம் பொருளுதவி செய்து இணைந்தோம்.அடுத்து சதுரகிரியில் குடிநீர் தானம் செய்யும் பொருட்டு குருவருளால் பணிக்கப் பெற்றோம். மேலும் காந்திகிராம் சௌபாக்கியா அமைப்பில் உள்ள 150 குழந்தைகளுக்கு வடை, பாயாசத்தோடு மதிய உணவு வழங்கினோம். அன்று பசு மாட்டிற்கு வாழைப்பழங்கள் கொடுத்தோம்.
இவ்வாறு ஆடி மாத இறை வழிபாடும், இறைப்பணியும் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. கருணை உள்ளதோடு நிதி உதவி அளித்துவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின் சார்பாக நன்றி கூறி பதிவை நிறைவு செய்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
ஆடி அமாவாசை - ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்க வேண்டிய பக்திக் கதை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_90.html
விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே! - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post_22.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு அறிவிப்பு - 20.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/20072020.html
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_84.html





















நன்றி ஐயா
ReplyDeleteWith guru blessings only ayya.
DeleteThanks to all