"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, October 3, 2019

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். சித்தர்களை நாம் குருவாகவும் சிந்தித்து வருகின்றோம். இந்த சூழலில் இங்கு நாம் இந்தப் பதிவைத் தான் இன்று தர இருக்கின்றோம் என்று எதுவும் தீர்மானம் செய்வது இல்லை. அனைத்தும் அவன் தாள் வணங்கி என்று தான் செயல்பட்டு வருகின்றோம். இந்த ஆண்டு மகாளய பட்ச சேவை நாம் தினமும் செய்வோம் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து 14 ஆம் நாள் இன்று வரை செய்து வருகின்றோம். நாளை மஹாளய பட்ச சேவையாக காலை திருஅண்ணாமலையில், மதியம் ராமேஸ்வரத்திலும், மாலை சதுரகிரியில் அன்னசேவை செய்ய உள்ளோம். இதுவெல்லாம் நாம் தான் செய்கின்றோம் என்று துளியும் எண்ணவில்லை, அனைத்தும் குருவருளால் தான் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் இந்த  மாதம் ஜீவ அமிர்தம் இதழ் பெற்றோம். அப்போது ஜீவ அமிர்த இதழில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இருந்தார்கள். மீண்டும் சிவ சித்தர்கள் அறக்கட்டளை நமக்கு அனுப்பிய பிரசாதத்திலும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இருந்தார்கள். அப்போது தான் புரிந்தது சுவாமிகள் நம்மை TUT பதிவில் இன்று அருள் கொடுக்க எண்ணியுள்ளார்கள் என்று. ஆம்..சுவாமிகளின் குருபூசை தகவலும் இந்தப் பதிவில் தர உள்ளோம்.

தற்போது தான் சித்தர்களின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் என்றொரு தலைப்பில் மாயாண்டி சுவாமிகள் தரிசனம் பெற்றோம். சுவாமிகளைப் பற்றி படிக்க படிக்க நமக்கு இன்னும் இன்னும் பரவசம் உண்டாகின்றது. இந்த பதிவு ஒரு மீள்பதிவு தான். சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை  திருவிழா அழைப்பிதழ் பகிரவே இந்த பதிவை மீண்டும் தொடர்கின்றோம்.

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

 கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்துகொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார்.  அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.

அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .

மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார்.

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .

அதென்ன  சூட்டுக்கோல்? இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.

எப்படி செல்வது?
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும்.  இங்கு தான்  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றத்துக்கு அருகிலே காகபுசுண்டர் மலை என்று ஒரு மலை தன் அருளை மதுரை முழுதும் வெளிப்படுத்தி வருகின்றது.இம்மலை புசுண்டர் மலை என்றும் திருக்கூடல்மலை என்றும் வழங்கப்பட்டு வருகின்றது. 300 ஆதி உயரம் கொண்ட இந்த மலையில் தான்  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இருக்கின்றார் என்பது சிறப்பு. அங்கேயே சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளும் அருள் தந்து கொண்டு வருகின்றார்.

சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் செல்: 94422 72220, 98421 24843
மின்னஞ்சல்: soottukkole@gmail.com  
இணையதளம்: www.soottukkole.org   
முகநூல்: Soottukkole
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

 ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

Wednesday, October 2, 2019

சித்தர்களின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்

அனைவருக்கும் வணக்கம்.

மலை யாத்திரை...நமக்கு மிகவும் பிடித்த ஒன்று. குறைவிலா அருளை வழங்கும் சித்தர் பெருமக்கள் குன்றுகளில் தான் இருக்கின்றார்கள். மலை என்றதும் முதலில் திருஅண்ணாமலை தான் நினைவிற்கு வரும். எத்தனை எத்தனை மகான்கள், ரிஷிகள்... பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது. அடுத்து சித்தர்களின் அருளில் சதுரகிரியை கூறலாம். காலாங்கி,சட்டைமுனி,ராமதேவர்,கோரக்கர் என 18 சித்தர்களும் ஆன்மிக அரசாங்கம் நடத்தும் இடமே சதுரகிரி ஆகும். மருதமலை என்றால் பாம்பாட்டி சித்தரின் அருளில் சித்தர்களின் சாம்ராஜ்ஜியமாக உள்ளது. இது போல் வெள்ளியங்கிரி,கொல்லிமலை பட்டியல் நீளுகின்றது. தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் ஒரு மலை உள்ளதாக தெரிகின்றது. தேனி மாவட்டத்தில் மிருகண்ட மகரிஷி மலை,சுருளி மலை என்று கூறலாம். இது போன்ற மலை அமைப்பு,சித்தர்களின் இருப்பு நம் தமிழ் நாட்டை தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. இங்குள்ள சித்தர்கள் சிவனின் மறு அம்சம் தானே..அதனால் தான் வேறெங்கும் இல்லாத இந்த நிலையை உணர்த்த "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று கூறுவதாக உணர்கின்றோம். இதனை மேலும் வேறொரு பதிவில் ஆராய்வோம்.

இப்படியான ஆன்மிக யாத்திரையில் மதுரையில் உள்ள மலை என்றால் டக்கென்று "திருப்பரங்குன்றம்" என்று சொல்வோம். திருப்பரங்குன்றத்துக்கு அருகிலே காகபுசுண்டர் மலை என்று ஒரு மலை தன் அருளை மதுரை முழுதும் வெளிப்படுத்தி வருகின்றது.இம்மலை புசுண்டர் மலை என்றும் திருக்கூடல்மலை என்றும் வழங்கப்பட்டு வருகின்றது. 300 ஆதி உயரம் கொண்ட இந்த மலையில் தான்  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இருக்கின்றார் என்பது சிறப்பு. அங்கேயே சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளும் அருள் தந்து கொண்டு வருகின்றார்.

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்துகொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார்.  அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.

அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .

மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார்.

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .

அதென்ன  சூட்டுக்கோல்? இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.

எப்படி செல்வது?
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும்.  இங்கு தான்  கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

முந்தைய பதிவுகளுக்கு:-

 TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-3.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html
 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

நவராத்திரி 75

 அனைவருக்கும் வணக்கம்.

நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இன்றைய பதிவில்  நவராத்திரி பற்றி அறிந்து கொள்ள 75 செய்திகளை இங்கே தருகின்றோம்.மேலும் நவராத்திரி தரிசனத்தையும் இங்கே தொடர்கின்றோம். நம் அப்பனுக்கு ஒரே ராத்திரி அந்த சிவ ராத்திரி, நம் அம்மாவிற்கு நவராத்திரி..சக்தியின் ஆற்றல் ஒரே நாளில் கிடைப்பது அரிதே..அதனால் தான் நவ ராத்திரி. சரி..வாருங்கள்...தரிசனத்திற்கு .

தமிழ் முறைப்படி இரண்டாம் ஆண்டு கொலு வைக்கப்பட்டது. தங்கள் அனைவரையும எங்கள் இல்லத்திற்கு அன்புடன் அழைக்கிறோம் என்று அழைக்கின்றார் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் ஐயா அவர்கள்.

நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-

1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.

3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.

4. நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார்.இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.

5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யாபூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவிவழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

10. ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி,
மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது.இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது

20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.

21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர்தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ_பூஜையும் இரவில் அம்பிகைபூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது.அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது கூடாது.

27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.

31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.

32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.

33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.

41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.

42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலா நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.

43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.

44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.

45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.

46. நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.

49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.

54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள்  அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

64. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள்...
ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

67. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படுகிறார்.

68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன்  உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள்.இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்..

இனி நவராத்திரி முதல் நாள் தரிசனம் ஆரம்பம்...

வாரம் தோறும் புதன் கிழமை அன்று நம் அன்பர்களுக்காக பெரம்பலூர் அகத்திய அடியார் அகத்தியர் லோபாமுத்ரா அபிஷேகம் ஆராதனை செய்து நமக்கு தரிசனக் காட்சிகளை அனுப்பி வைப்பார்கள். நாமும் ஏதோ ஏனோ தானோ என்று குழுவில் மட்டும் பதிவிடுவோம். சென்ற வாரம் எம் பெற்றோர் நேரிடையாக பெரம்பலூர் சென்று அந்த பூசையின் மகத்துவத்தை உணர்ந்து நமக்கு தெரிவித்தார்கள். மிக மிக சிரத்தையோடு அணு அணுவாக ரசித்து இந்த பூசை நடைபெற்று வருவதாக சொன்னதும் தான் நமக்கும் உறைத்தது. அங்கிருந்து தான் ஸ்ரீ லோபாமுத்ரா அன்னையின் முதல் நாள் தரிசனம். நமக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? 

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

என்று வேண்டுவதைத் தவிர வேறொன்றும் யாம் அறிந்திலோம் தாயே !

அடுத்து ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு கந்தசாமி ஐயா வீட்டில் தமிழ் வேத முறைப்படி கொலு இனிதே ஆரம்பம் செய்துள்ளார்கள். கண்ணுக்கு இனிமையாய் இருக்கின்றது. நேரில் சென்று வர உத்தேசித்துள்ளோம்.

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்  கோயிலில்  மாலை சிவனை அம்பாள் பூஜிக்கின்ற அலங்கார காட்சி பற்றி பதிவு செய்து இருந்தோம். நம்மால் நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாத சூழ்நிலை. இதோ கோயில் குருக்களிடம் இருந்து வந்த அருள் நிலையை அப்படியே வழங்குகின்றோம்.

என்ன அன்பர்களே..தித்திக்கும் சுவையோடு நம் தளத்திலும் நவராத்திரி பதிவுகள் ஆரம்பித்து விட்டது. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

 TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-3.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html
 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html
நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

'ஏய் உனக்கென்ன குறைச்சல், கையும் காலும் நல்லாத்தானே இருக்கு'' என்ற வசை காதில் கேட்காத நாள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் தாங்க முடியாத அளவு தொல்லையாகவே இருக்கிறது. என்றாலும், பொறுமையாகவே இருந்துவிடுவேன். ஏன் இவர்கள் வேலைக்கு போவதில்லை ? யோசித்துப் பார்த்தால், அது அவர்கள் வினையின் பலன் என்றே கூறலாம். வேலை செய்ய வாய்ப்பு இருந்தும், உடலில் தெம்பு இருந்தும் மான, அவமானங்களைக் கருத்தில் கொள்ளாது பிச்சை எடுப்பவர்களைக் கண்டால் நான் இவ்வாறே நினைத்துக் கொள்வேன். உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு தவறாமல் என்னால் முடிந்த உதவிகயைச் செய்வேன். மற்றவர்களுக்கு முடிந்தால் செய்வேன்.

இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் என் குரு நாதர் சொல்வார், உலகில் எந்த காரியத்தைச் செய்தாலும் அது இரண்டு விளைவுகளை உண்டு பண்ணும். அது இயற்கையின் நீதி. ஆனால், எதிர் விளைவே ஏற்படுத்தாத ஒரே காரியம் தருமம் மட்டுமே. தருபவருக்கும், பெறுபவருக்கும் பாவம் தீரும். அதாவது ''நீ செய்த பாவத்துக்கு பிச்சையெடுப்பாய்'' என்று சொல்லக் கேட்கிறோம் அல்லவா ? அதுதான், பிச்சை எடுப்பதால் அவர் பாவம் குறைகிறது. தருபவருக்கு தருமம் செய்வதால் பாவம் குறைந்து விடுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் நம் பாவம் தீர பிச்சை எடுப்பவர் உதவுகிறார். அதற்கு நாம் அவருக்குக் கடமைப்படுகிறோம். சிலர் தத்துவமாக நாம் பிச்சையிடுவதால் அவர்களை சோம்பேறியாக மாற்றுகிறோம் என்பார்கள். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் கூட சில சூழ்நிலைகளில் பிச்சை எடுக்க நேரிடும். நான் ஒரு முறை அப்படி மாட்டிக் கொண்டு பிறரிடம் உதவி கேட்டு(பிச்சையெடுத்து) பயன் அடைந்திருக்கிறேன். ஒருவரிடம் கையேந்தி கடன் வாங்கிவிட்டு கொடுக்காமல் இருப்பது கூட பிச்சைதான். நம்மில் பலர் இந்தத் தவறைச் செய்கிறோம். எல்லா வகையிலும் தருமம் உயர்வானது என்றாலும், பசிக்கு உணவிடுவது மிகப் பெரிய தருமமாகும்.

நாம் கோவிலில் பிரசாதம் என்று பெற்றுக் கொள்வது கூட ஒரு தரும காரியமே. தன் பாவம் தீர ஒருவர் தெய்வத்தின் முன்னிலையில் நமக்கு அதைத் தருகிறார். அது அவருக்கும், பெற்றுக் கொள்ளும் நமக்கும் பாவத்தைக் குறைக்கும். ஆனால் நமக்கு வீட்டில் உணவு இருக்கும் போது நிறைய ஏழைகளின் வரிசையில் நின்று அவர்கள் உணவை பங்கிட்டுக் கொள்வது முறையாகாது. அன்னதானத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்றால், கலியுகத்தில் மனிதனின் பாவத்தை போக்கும் சிறப்பு அன்னதானத்திற்கு உண்டு(பசித்தவர்களுக்கு உணவிடுதல்).
கிருதயுகத்திலே உயிர் எலும்பைப் பற்றிக் கொண்டிருக்கும்.
திரேதாயுகத்திலே உயிர் நரம்பைப் பற்றிக் கொண்டிருக்கும்.
துவாபரயுகத்திலே உயிர் உதிரத்தைப் பற்றிக் கொண்டிருக்கும்.
கலியுகத்திலே உயிர் அன்னத்தைப் பற்றிக் கொண்டிருக்கும்.
என்பது சான்றோர் வாக்கு.

அந்த அடிப்படையில் அன்னதானம் செய்வது நம்மைக் கலியுகத்தின் பாவக் குழியில் விழாமல் காக்கும் தரும காரியமாகும். நாம் செய்த தருமமானது நம்மை தவறான வழியில் போகவிடாமல் தடுத்து, பாவத்தைச் செய்யவிடாமல் தடுத்துக் காத்தருளும்.

''தானமும் தவமும் தான் செய்வாராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே.'' என்பது ஔவையின் அமுத வாக்கு. ''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்று மணிமேகலை கூறுகிறது. உணவு இல்லையேல் உயிர் வாழாது. உலகிலுள்ள பல நோயைப் பலகாலம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பசி எனும் நோய் மிகவும் கொடூரமானது. பசி அரசனுக்கும் உண்டு, ஆண்டிக்கும் உண்டு.
''மானம் குலம் கல்வி வண்மை பொருளுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனில்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் !'' என்று தமிழ் மூதாட்டி அருமையாகப் பசியின் கடுமையை விவரிக்கிறார்.

''அற்றார் அழி பசிதீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.''
ஒருவன் பெரிய தனவந்தனாக இருக்கிறான் அவனைப் பார்த்து ''கொடுத்து வைத்தவன் சுகமாய் வாழ்கிறான்'' என்கிறோம் அல்லவா ? அது இதுதான் முற்பிறவியில் வறியவர்களுக்கு பொன்னும், பொருளும் மேலாக அன்னமும் கொடுத்து வைத்ததினால் இப்பிறவியில் கோடீஸ்வரனாக வாழ்கிறான்.

''மண்ணார் சட்டி கரத்தேந்தி
மறநாய் கவ்வும் காலினராய்
அண்ணாந் தேங்கி இருப்பவரை
அறிந்தோம் சிலரை அம்மம்மா !
பண்ணார் மொழியார் பாலடிசில்
பைம் பொன்கலத்தில் இனிதுஊட்ட
உண்ணாதிருந்த பொழுது ஒருவருக்கு
உதவா மாந்தர் இவர்தாமே.''
இந்தப் பாடலைப் பலமுறை படியுங்கள். பசிக்கு வந்த வறியவர்க்கு உதவாதவன் மறுபிறப்பில், பசி நோய் வாட்ட வீடுதோறும் சென்று பிச்சை எடுத்து அலைவான் என்று உணர்க. இந்தப் பாடல் என்ன சொல்கிறதென்றால், உடைந்த மண் ஓட்டைக் கையில் ஏந்திக் கொண்டு, புண் உள்ள காலை மேலும் நாய்கள் சுற்றி சுற்றி வந்து கடித்தவாறு பின் தொடர, அம்மா !அம்மா! என்று கூவி ஒருவன் பிச்சை எடுக்கிறானே அவன் யார் தெரியுமா ? மாடி வீட்டில் ஏர்கண்டிஷன் அறையில் பட்டு மெத்தையிட்ட ஆசனத்தில் அமர்ந்து, அன்பும், அழகும் உள்ள மனைவி தங்கக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டும் போது, வெளியே நிற்கும் பிச்சைக்காரனைப் பார்த்து காவலாளியை அழைத்து அந்தப் பிச்சைக்காரனை அடித்து விரட்டு என்று சொன்னானே அவன்தான் இவன்.
ஒரு ஞானிக்கு தினையளவு உணவு தந்தாலும், மலையளவு புண்ணியம் கிட்டும். ஆனால், ஞானி என்பதை எவ்வாறு கண்டு கொள்வது ? வந்தவர்க்கெல்லாம் ஒரு கவளம் உணவு வழங்கினால், ஒரு நாளைக்கு ஒரு ஞானியாவது வருவார்.

அன்னதானம் செய்த சிறுதொண்டநாயனாரின் இல்லம் தேடி சிவபெருமானே உணவு உண்ணப் போனார்.அன்னதானம் செய்து வறியவராய்ப் போன இளையான்குடி மாறன் நாயனாரைத் தேடி நடுஇரவில் பரமசிவமே பசி என்று போய் அவரை ஆட்கொண்டருளினார்.

ஈயாது இரும்புப் பெட்டியில் வைத்தது நமக்கு உதவாது. வயலில் இட்ட நெல் ஒன்றுக்கு நூறாய் விளைவதைப் போல ஏழைகளுக்கு இட்டது ஆயிரம் மடங்காய் பெருகி வந்து உதவும்.
ஒருவருக்கு வேட்டி கொடுத்தால் முழம் அளந்து பார்த்து, நீளங்காணாது என்பான். பணமாக ஆயிரம் கொடுத்தால், மேலும் வழிச் செலவுக்குத் தாருங்கள் என்பான். ஆனால் இலை விரித்து, இலை நிறைய அன்னமிட்டு உதவினால் வயுறு நிறைய, மனங்குளிர போதும் போதும் என்று சொல்லி வாழ்த்துவான். அதனால் அவன் ஊன் குளிர்கிறது, உள்ளம் குளிர்கிறது, உயிர் குளிர்கிறது எனவே உயிருக்கு உயிரான சிவமும் குளிர்கிறது. ஆகவே அன்னதானம் எவ்வளவு சிறந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை.
அன்னதானத்தைப் பற்றி “நீங்கள்அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள்.

உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.
கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே.
ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள்.
உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான்.
அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது”
- என்றார் பகவான்

பசியோடிருக்கும் ஒருவனுக்கு நிறைய , அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் -போதும் என்று சோல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்குப் மீண்டும் பசிக்கவே செய்யும்.
பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.
அதனால்தான் ஔவையார்

“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. “ - என்றார்.

நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.
வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது.
அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம்.
ஆதலால் நண்பர்களே, அன்னதானம் செயவதை நம் வாழ்வின் கடமையாக ஏற்போம். நம்மால் முடிந்த அளவுக்குப் பசிப்பிணியாற்றுவோம்.

எல்லாம் சரிதான் நம்ம கதையே கந்தலாகிக் கிடக்கிறது. இதில் தானம் செய்ய முடியுமா ? என்று கேட்டால், ஒன்று சொல்கிறேன். உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும்.

நன்றி : திரு. ராம் மனோகர்

TUT குழுமம் வாயிலாக நடைபெற்று வரும் அன்னதான படங்கள் இந்த பதிவில் இணைக்கப் பட்டுள்ளது.

முந்தைய பதிவிற்கு :