"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, November 14, 2025

சித்தன் அருள் - 997 - அகத்தியர் பெருமான் அருளிய மூலிகை தீப வழிபாடு

                                                               இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                 இறைவா..அனைத்தும் நீயே..

                                                                     சர்வம் சிவார்ப்பணம்...



இன்னும் ஒரு சூட்சுமமான விஷயத்தை உரைக்கின்றேன். கெட்ட வினைகளால் இன்னும் கெடுதல் நிகழ்ச்சிகள் வரும். ஒன்றை உரைக்கின்றேன். நல் முறையாக அனுதினமும், மாலை வேளையில் இல்லத்தில் ஒரு தீபமேற்றி, அதில் நல் மூலிகைகள் இட்டு, ஒரு சிறு கற்கண்டம், ஏலக்காயும் இட்டு, நல் முறையாய் வேண்டிக்கொண்டு, "அகத்தியன்" என்று சொல்லிவிடுங்கள். அப்பனே, யான் இருக்கின்றேன். யான் இருக்கும்பொழுது, எதையும் நம்பாதீர்கள். அப்பனே, இதையும் யான் சொல்லுகின்றேன். யான்தான் அகத்தியன் என்றெல்லாம் வருவார்கள். அப்பனே நம்பிவிட்டால், நீங்கள்தான் அதற்கு பொறுப்பு என்று சொல்வேன். [தீபம் ஏற்றுவதை பற்றி தெளிவாக உரைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நாடியில் கேட்ட பொழுது "கிராம்பு, ஏலக்காய், கற்கண்டும், ஏதேனும் ஒரு வாசனாதி பொருள் (பச்சை கற்பூரம் ஆகலாம்) - இவை அனைத்தையும் பொடித்து சேர்த்து, தினமும் விளக்கேற்றி, நம் குருநாதருக்கு என வேண்டிக்கொண்டு, அதன் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்" என சொல்கிறார்].

அகத்தியன் என்று ஒருவன் இருக்கின்றான், இப்பொழுது தேடி வந்தீர்களே, எவ்வாறு தேடி வந்தீர்கள், நீங்களா வந்தீர்கள், இல்லை யானே அழைத்தேன். யானே அழைத்த பொழுது, நல்லது செய்யாமல் விட்டுவிடுவேனா நான். அதனால் பக்தன் என்று நிறைய பேர் வருவார்கள். இனியும் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லுவேன். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை எடுத்து வாருங்கள். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை விட்டுவிட்டு, நாடி சென்றால், நீயும் மனிதன், அவனும் மனிதன். இதை சிந்தித்துக்கொள் என் மக்களே! இப்பொழுது கூட சொல்லிவிடுங்கள் "அகத்தியன் இருக்கின்றான்" என. பின்பு, உங்கள் வேலையை பார்க்கத் தொடங்குங்கள்.

சாமியார் வேடம் போட்டு உட்கார்ந்து கொண்டால் எல்லாம் வரும் என்றுணர்ந்து, தானே சாமியார், என கூறுவான். அவன்தன் பலவித சுகங்களை அனுபவிப்பான். இவனைவிட கீழான மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. ஆனால் யாரையும் நம்பாதீர்கள், நம்பாதீர்கள் என்றுதான் யான் சொல்வேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமைகள் இருக்கின்றது. இனிய அறிவை யான் கொடுத்துவிடுவேன். ஆயினும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான வினைகளில் மாட்டிக் கொண்டிருக்கின்றீகள், என்பது எந்தனுக்குத் தெரியும். அவை, சிறிது சிறிதாக விலகும் என்பேன்.

அப்பனே, நல் முறையாக எதனை செய்தால், என்றெல்லாம் தோன்றும். எதுவும் வேண்டாம். அகத்தியனை நினைத்துக் கொள்ளுங்கள். அப்பனே, பின் மகன்களுக்கு எதை செய்யவேண்டும் என்று எமக்குத்தெரியும். அதை யான் செய்கின்றேன். அதை விட்டுவிட்டு, அது வேண்டும், இது வேண்டும் என கேட்டுக் கொள்ளாதீர்கள்.  அன்பு மட்டும்தான் இந்த மாய உலகில் சிறந்தது. ஆகவே அன்பை செலுத்துங்கள், போதுமானது.

வரும் வழியிலேயே ஆசீர்வாதங்களை கொடுத்துவிட்டேன். அன்பு மகன்கள், இப்பொழுதும் யான் இங்கே இருக்கின்றேன். அனைவருக்கும், எனது ஆசிகள். மீண்டும் வந்து வாக்குகள் உரைக்கின்றேன். அப்பனே எம்மை தேடி இங்கு வந்தீர்களே! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சுபிட்சம் நடக்கப்போகின்றது. இதுவரை ஈசன் நடத்தும் நாடகத்தில் கட்டங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றது. அதையும் யான் பார்த்துக் கொள்கின்றேன். அன்பு மகன்களே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் செல்லுங்கள்.

மீண்டும் ஒருமுறை உரைக்கின்றேன். அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் இருக்கின்றது. நீங்களே பக்திமான்களாகலாம். அதை விட்டுவிட்டு, எதை எதையோ சென்று அடைந்தால், மீண்டும் தோல்விகள்தான் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், என் மக்களே. அனைவருக்கும் ஆசீர்வாதங்களை கொடுத்து அனுப்புகின்றேன், இப்பொழுது.

பொதிகை வாக்கு நிறைவு பெற்றது.













ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!



அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 997 - அகத்தியரின் அருள்வாக்குகள்: அன்பும் பக்தியும் - https://tut-temples.blogspot.com/2025/11/997.html

சித்தன் அருள் - 998 - அகத்தியர் நாடி வெளிப்படுத்திய ஈசனின் இரவுப் பயணம்: நீங்கள் அறியாத ஆன்மிக ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/11/998.html

சித்தர்கள் வெளிப்படுத்திய 5 அதிர்ச்சியூட்டும் ஆன்மீக ரகசியங்கள்: உங்கள் விதியை மாற்றும் வழிகள் - https://tut-temples.blogspot.com/2025/11/5_13.html


அகத்தியர் அருளிய 5 உண்மைகள்: உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஞான இரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/11/5_12.html

அகத்தியர் பெருமான் அருளிய நவகிரக தீபம்: இது பரிகாரம் அல்ல, ஒரு மாபெரும் தேர்வு! நீங்கள் அறியாத 5 வியப்பூட்டும் உண்மைகள் - https://tut-temples.blogspot.com/2025/11/5.html

சித்தன் அருள் - 1980 - அன்புடன் அகத்தியர் - குரு சாபம்/குழந்தை பேறு தடை விலக! - https://tut-temples.blogspot.com/2025/11/1980.html


சித்தன் அருள் - 1989 -அன்புடன் அகத்தியர் - போகர் சித்தர் வாக்கு - காவேரி நீராடல்! - https://tut-temples.blogspot.com/2025/11/1989.html

 சித்தன் அருள் - 1089 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/11/1089_9.html

சித்தன் அருள் - 1089 - அகத்தியர் வெளிப்படுத்திய சூட்சுமம்: உங்கள் வாழ்வில் அற்புத மாற்றங்களை உருவாக்கும் எளிய ஆன்மீக ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/11/1089.html


அகத்தியர் அருளிய பஞ்சமி வழிபாடு: உங்கள் தடைகளைத் தகர்க்கும் எளிய வழி! - https://tut-temples.blogspot.com/2025/11/blog-post_8.html


நாளை (09/11/2025 - ஞாயிறு) பஞ்சமி திதி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - https://tut-temples.blogspot.com/2025/11/09112025.html


மதுரை சிவபுராண கூட்டுப்பிரார்த்தனையில் சித்தர் பெருமக்கள் அருளிய வாக்கு சுருக்கம்! - https://tut-temples.blogspot.com/2025/11/blog-post.html


சித்தன் அருள் - 1333 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/11/1333.html

No comments:

Post a Comment